Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

அது நடந்து விட்டது. மிகப் பெரிய வெற்றி சிம்பாப்வேக்கு.

எனக்கு இன்று புள்ளிகள் கிட்டவில்லை. அமெரிக்காவின் தயவில் 2 கிட்டும் 😃

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சாய்தேஜா, 18 வயதில் அணிக்குள் வந்தார். இள வயதில், ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த துடுப்பாட்டக்காரன்.

இன்று சிறப்பான ஆட்டம். 79 ஓட்டங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

எனக்கு இன்று புள்ளிகள் கிட்டவில்லை. அமெரிக்காவின் தயவில் 2 கிட்டும் 😃

நிலாமதியுடன் கூட்டுச் சேர்ந்தபடியால் இன்று எனக்கும் புள்ளிகள் கிடைக்கும் போல தான் கிடக்கிறது. இன்று அவவின் நாள். 😁

அமெரிக்கா 196 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்று கரி நாள்!!😢

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

சகோதரி நிலாமதியின் மைண்ட் வொய்ஸ் .......!

goundamani-adrasakka.gif

அவுஸ் = 69/4=10.3 --

சுவி அண்ணா இந்தளவு மகிழ்ச்சி இல்லை . எதோ குருட்டு லக் என்பார்கள் . எல்லாம் டக் டிக் டோஸ் ...விளையாட்டுத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வெற்றி உறுதியாகிக் கொண்டு இருக்கிறது

சாட்லிதான் இதுவரை அதிக விக்கட்டுகள் பெற்றிருக்கிறார். கடந்த இரு போட்டிகளில் நாலு நாலு விக்கட்டுடன், இதுவரை ஒன்று இப்போது, மொத்தம் 9 விக்கட்

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

அடைக்கு வைச்ச 3 முட்டை இன்று பொரிக்கவில்லை, அது கூழ்முட்டையாப் போச்சே!😂

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிலாமதி said:

எல்லாம் டக் டிக் டோஸ் ...விளையாட்டுத்தான்

அப்படியும் எனக்கு மேலே போக போகிறீர்கள்.

கடைசியாய் வாறது சும்மா லேசுபட்ட விடயம் அல்ல என இப்போ புரிந்திருக்கும்😂

2 minutes ago, ஏராளன் said:

அடைக்கு வைச்ச 3 முட்டை இன்று பொரிக்கவில்லை, அது கூழ்முட்டையாப் போச்சே!😂

எனக்கு 1 பொரிக்கும் போல கிடக்கு. ஆனால் நிலை அதே தான் 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

கடைசியாய் வாறது சும்மா லேசுபட்ட விடயம் அல்ல என இப்போ புரிந்திருக்கும்😂

🤣................

'படிக்கல்ல படிக்கல்ல என்று ஒன்பது மார்க் எடுத்திட்டியே.......................' என்ற கதையாகப் போகுது என் கதை................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அப்படியும் எனக்கு மேலே போக போகிறீர்கள்.

கடைசியாய் வாறது சும்மா லேசுபட்ட விடயம் அல்ல என இப்போ புரிந்திருக்கும்😂

எனக்கு 1 பொரிக்கும் போல கிடக்கு. ஆனால் நிலை அதே தான் 😂

முன்னுக்கு பதிலை பதிந்ததால் முன்னணியில் இருந்தேன்!

அண்ணை, போறபோக்கில் உங்களுக்கு தோள் கொடுப்பேன் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

USA நெதர்லாந்தை வென்று விட்டது .......!

  • கருத்துக்கள உறவுகள்

RESULT

21st Match, Group A (N), Chennai, February 13, 2026, ICC Men's T20 World Cup

United States of America FlagUnited States of America

196/6

Netherlands FlagNetherlands

(15.5/20 ov, T:197) 103

U.S.A. won by 93 runs

  • கருத்துக்கள உறவுகள்

28 minutes ago, ரசோதரன் said:

🤣................

'படிக்கல்ல படிக்கல்ல என்று ஒன்பது மார்க் எடுத்திட்டியே.......................' என்ற கதையாகப் போகுது என் கதை................🤣.

உங்கள் அவையடக்கம் பிடிக்கும். குயிலப் பிடிச்சு கூட்டுக்க வைத்தாலும்......

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

எனக்கு இன்று கரி நாள்!!😢

ந‌ண்பா என்ன‌ இது

இதுக்கு போய் க‌ரி நாள் க‌க்கா நாள் என்று புல‌ம்ப‌ல்

என‌க்கு அமெரிக்கா கை கொடுத்த‌ தால் இர‌ண்டு புள்ளி............

க‌ன்டா அணியில் ந‌ல்ல‌ ஒரு வீர‌ர் இருக்கிறார் அவ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை

க‌ன‌டா வ‌டிவாய் வெல்ல‌ வேண்டி மைச்சை க‌ட‌சி 4ஓவ‌ரில் சுத‌ப்பி போட்டின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்

சாட்லி வான் சால்விக் - இன்றும் 3 விக்கட். மொத்தமாக 11 விக்கட் இந்த உலகக்கோப்பையில்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

முன்னுக்கு பதிலை பதிந்ததால் முன்னணியில் இருந்தேன்!

அண்ணை, போறபோக்கில் உங்களுக்கு தோள் கொடுப்பேன் என நினைக்கிறேன்.

அதுக்கு பல terms and conditions இருக்கு, அப்பிளிகேசன போடுங்கோ பாப்பம்😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அதுக்கு பல terms and conditions இருக்கு, அப்பிளிகேசன போடுங்கோ பாப்பம்😂

அண்ணை, அதெல்லாம் ஏற்கனவே பதிஞ்சிட்டனே! இனி மாற்ற சட்டத்தில் இடமில்லை!🤪

  • கருத்துக்கள உறவுகள்

இன்டையான் விளையாட்டில் அவுஸ்ரேலியாவை சிம்பாவே வென்ற‌து தான் பெரிதாக‌ பேச‌ப் ப‌டும்..................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அவுசுக்கு சிம்பாவே வாழ்க்கையில் மறக்க முடியாத பயத்தைக் காட்டி ஹவுசுக்கு அனுப்பியிருக்கு . ......!

அருமையான பீல்டிங் ........!

போன தடவை வெற்றிக்கிண்ணத்தை காலின்கீழ் போட்டு காலாட்டியதற்கு கிடைத்த பரிசு

1 hour ago, செம்பாட்டான் said:

சாட்லி வான் சால்விக் - இன்றும் 3 விக்கட். மொத்தமாக 11 விக்கட் இந்த உலகக்கோப்பையில்

வயசு ..வயசு என்று பார்க்கின்ற காப்பீருக்கு இது ஒரு செருப்படி

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத 64 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், தடிவனஷே மருமனியின் 35 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் பேர்ளின் 35 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்ததால் நிலைகுலைந்தனர். மற் றென்ஷோ 65 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிளென் மக்ஸ்வெல் 31 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும் நிலைகொள்ள முயன்றும் விக்கெட்டுகள் சரிந்ததால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து அதிர்ச்சியான தோல்வியைத் தழுவியது. பிளெஸிங்க் முஸர்பனி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

முடிவு: ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் கிடையாது!

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, ஹர்ஷ் தாக்கரின் 50 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், நவ்னீட் தலிவாலின் 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜுனைட் சித்திக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, அர்யன்ஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 74 (53 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷொஹைப் கானின் புயல்வேக 51 (29 பந்துகள்) ஓட்டங்களோடும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: ஐக்கிய அமீரகம் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். கனடா அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா அணி, சைடெஜா முக்கமல்லாவின் அதிரடியான 79 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷுபம் ரஞ்சனேயின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 48 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஹர்மீட் சிங் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.

முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5144.jpeg

இன்று முதல்வர் நாற்காலியை @alvayan அலங்கரிக்கின்றார் 😆

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று நெதர்லாந்து (அமெரிக்கா) ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கு.

உங்கடையாக்களல்லே அப்படித்தான் கதைப்பியள்

1 minute ago, கிருபன் said:

பிரியன்சார் ...நாம ஜெயிச்சிட்டோம்...கனவிலைகூட கடவுள்வந்து சொல்லவில்லை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

உங்கடையாக்களல்லே அப்படித்தான் கதைப்பியள்

பிரியன்சார் ...நாம ஜெயிச்சிட்டோம்...கனவிலைகூட கடவுள்வந்து சொல்லவில்லை..

சரி.. சரி.. சில்லறையை உண்டியலில் போட்டுவிட்டுப் போங்கோ 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனி 14 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான்

IRE எதிர் OMA

அனைவரும் அயர்லாந்து அணி வெல்வதாகக் கணித்துள்ளனர்!

இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் முட்டைகள் பரிமாறப்படுமா? cooking_1f373.gif

backhand-index-pointing-down_1f447.png

23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து

SCOT எதிர் ENG

ஒரே ஒருவர் மாத்திரம் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்து

  • சுவி

இப்போட்டியில் @suvy ஐயாவுக்கு புள்ளிகள் கிடைக்க குருபார்வை உள்ளதா? glowing-star_1f31f.gif

backhand-index-pointing-down_1f447.png

24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா

NZ எதிர் SA

07 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும்  16 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நியூஸிலாந்து

  • வசீ

  • புலவர்

  • வீரப் பையன்26

  • கிருபன்

  • கோஷான் சே

  • நியாயம்

  • நந்தன்

தென்னாபிரிக்கா

  • செம்பாட்டான்

  • ஏராளன்

  • சுவைப்பிரியன்

  • அல்வாயன்

  • ஈழப்பிரியன்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • சுவி

  • அஹஸ்தியன்

  • கந்தப்பு

  • எப்போதும் தமிழன்

  • ரசோதரன்

  • பிரபா

  • நிலாமதி

இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? bison_1f9ac.webp

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

பிரியன்சார் ...நாம ஜெயிச்சிட்டோம்...கனவிலைகூட கடவுள்வந்து சொல்லவில்லை..

முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள்.

40 minutes ago, கிருபன் said:

நியூஸிலாந்து

  • வசீ

  • புலவர்

  • வீரப் பையன்26

  • கிருபன்

  • கோஷான் சே

  • நியாயம்

  • நந்தன்

பின்வாங்கு கோஸ்டியோடு சேர வேண்டாமென @வீரப் பையன்26 க்கு சொல்ல சொல்ல கேட்காமல் சேர்ந்த பலனை நாளை அனுபவிப்பார்.

@ரசோதரன் கெட்டிக்காரன் மெதுவா விலகிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

அந்த வீட்டை விடமுடியாது

சொன்னமாரி செய்திட்டியல் என்ன?

நாளைக்கு சவுத் ஆபிரிக்கா உங்களை பதிய விட்டு கிளப்பும் எண்டு ஜக்கம்மா சொல்றா😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.