Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5168.jpeg

முதல்வர் @alvayan நாற்காலியைப் பலப்படுத்தி உட்கார்ந்திருக்கின்றார்.

சுமைதாங்கியாக @suvy ஐயா அமைந்துள்ளார்!

அட..அவுசு தோற்றாலும் நான்..தான் இப்ப முதல்வராம் ...நன்றி கிருபன் ஜீ

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

தமன்னா, சாரா அர்ஜூன் போகிறார்கள் என்பதால் அல்ல, வேலுமணி, பிரேமலதா போகிறார்கள் என்பதால்தான் பார்த்தேன்😂

உங்களின் பிளட் குரூப் A+ போல தெரியுதே.....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, சொஹைப் கானின் அதிரடியான 68 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் நிதானமான 40 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் வேகமான 53 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் ஆட்டமிழக்காத மின்னல் வேகத்தில் எடுத்த 40 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், டர்விஷ் ரசூலியின் விரைவான 33 (23 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 162 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 53 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், டொம் பன்டனின் விரைவான 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, பென் மனென்டியின் புயல்வேக 60 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிரான்ட் ஸ்டூவர்ட்டின் வேகமான 45 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் விரைவான 43 (34 பந்துகள்) ஓட்டங்களோடும் போராடியபோதும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தமையால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 178 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணி, ட்ரெவிஸ் ஹெட்டின் மின்னல்வேக 56 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மிற்செல் மாஷின் புயல்வேக 54 (27 பந்துகள்) ஓட்டங்களுடனும் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் சிறிலங்கா அணியின் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களையே பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காமல் மரண அடியுடன் எடுத்த 100 (52 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் புயல்வேக 51 (38 பந்துகள்) ஓட்டங்களுடனும் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5168.jpeg

முதல்வர் @alvayan நாற்காலியைப் பலப்படுத்தி உட்கார்ந்திருக்கின்றார்.

சுமைதாங்கியாக @suvy ஐயா அமைந்துள்ளார்!

நான் வாதாவூரனுக்கு பயந்து நாயை அவிழ்த்து விட, சுவி அண்ணாஃ நாய்க்கு பிஸ்கெட்டை போட்டுட்டு, வீட்டுக்குள்ள பூந்திட்டார்😂

2 minutes ago, ரசோதரன் said:

உங்களின் பிளட் குரூப் A+ போல தெரியுதே.....................🤣.

அதே 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை செவ்வாய் 17 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து

CAN எதிர் NZ

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் கனடா எல்லோருக்கும் முட்டைகள் பரிமாற வாய்ப்புள்ளதா? cooking_1f373.webp

backhand-index-pointing-down_1f447.png

32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

IRE எதிர் ZIM

10 பேர் அயர்லாந்து அணி வெல்வதாகவும்  13 பேர் ஸிம்பாப்வே அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

அயர்லாந்து

  • வசீ

  • புலவர்

  • நியூ பலன்ஸ்

  • சுவி

  • கோஷான் சே

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • ரசோதரன்

  • பிரபா

  • நந்தன்

ஸிம்பாப்வே

  • செம்பாட்டான்

  • ஏராளன்

  • சுவைப்பிரியன்

  • அல்வாயன்

  • ஈழப்பிரியன்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • வீரப் பையன்26

  • கிருபன்

  • அஹஸ்தியன்

  • கந்தப்பு

  • நிலாமதி

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? leopard_1f406.webp

backhand-index-pointing-down_1f447.png

33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம்

SCOT எதிர் NEP

17 பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும்  ஆறு பேர் மாத்திரம் நேபாளம் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நேபாளம்

  • சுவைப்பிரியன்

  • அல்வாயன்

  • கறுப்பி

  • கிருபன்

  • கோஷான் சே

  • கந்தப்பு

இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்? owl_1f989.png

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ஸிம்பாப்வே நாளை வெல்வதன் மூலம் அடுத்த எட்டுக்குப் போய்விடும். அவுஸ்ரேலியா வீட்டை போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, சொஹைப் கானின் அதிரடியான 68 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் நிதானமான 40 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் வேகமான 53 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் ஆட்டமிழக்காத மின்னல் வேகத்தில் எடுத்த 40 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், டர்விஷ் ரசூலியின் விரைவான 33 (23 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 162 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 53 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், டொம் பன்டனின் விரைவான 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, பென் மனென்டியின் புயல்வேக 60 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிரான்ட் ஸ்டூவர்ட்டின் வேகமான 45 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் விரைவான 43 (34 பந்துகள்) ஓட்டங்களோடும் போராடியபோதும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தமையால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 178 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணி, ட்ரெவிஸ் ஹெட்டின் மின்னல்வேக 56 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மிற்செல் மாஷின் புயல்வேக 54 (27 பந்துகள்) ஓட்டங்களுடனும் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் சிறிலங்கா அணியின் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களையே பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காமல் மரண அடியுடன் எடுத்த 100 (52 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் புயல்வேக 51 (38 பந்துகள்) ஓட்டங்களுடனும் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5168.jpeg

முதல்வர் @alvayan நாற்காலியைப் பலப்படுத்தி உட்கார்ந்திருக்கின்றார்.

சுமைதாங்கியாக @suvy ஐயா அமைந்துள்ளார்!

அப்பாடா இப்பதான் நிம்மதியாய் இருக்கு . .....அங்கன இங்கன அலையத் தேவையில்லை . .......! 😂

w2kQSO.gif

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரசோதரன் said:

🤣............

கேள்விகள் அவுட் ஆஃப் சிலபஸ் ஆக வந்த நேரங்களில், எனக்கு முடிவுகள் நல்லாவே வந்திருக்கின்றன. சிலபஸ்ஸுக்குள்ள கேள்விகள் வந்த போது மற்றவர்கள் பிய்ச்சு உதறியிருக்கின்றார்கள்......................

இன்றைக்கு இலங்கை விளையாடியது அவுட் ஆஃப் சிலபஸ் தானே................🤣.

நானும்தான் அவுட் ஒப் சிலபசாக தெரிவு செய்யிறனான் ஆனால் அப்போது மட்டும் வழமை போல நிகழ்கிறதே!

இன்று நடக்கவுள்ள விளையாட்டில் அயர்லாந்தினை சிம்பாவேக்கு எதிராக தெரிவு செய்துள்ளேன் என்பது தெரிகிறது முடிவு தெரிந்த ஒன்றுதான்.🤣

இந்த முறை என்னுடன் நீங்களும் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள்.🤣

24 minutes ago, செம்பாட்டான் said:

ஸிம்பாப்வே நாளை வெல்வதன் மூலம் அடுத்த எட்டுக்குப் போய்விடும். அவுஸ்ரேலியா வீட்டை போய்விடும்.

அயர்லாந்தினை ரசோதரன் தெரிவு செய்துள்ளார்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

இன்று 250 கிலோமீற்றர் மழைக்குள் பயணம் செய்யவேண்டியிருந்ததால் ஒரு மட்ச்சும் பார்க்கவில்லை! திரும்பவும் 250 கிலோமீற்றர் ஓடி, வந்த கையுடன் முதல்வேலையாகப் புள்ளிகளைத்தான் கணக்கிட்டேன்.☺️ ஆவலுடன் காத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் 🤩

அதுதானே!😜

சுவாரசியமான போட்டியை ஒருங்கிணைத்து நடாத்துவதற்கு உங்கள் நேரத்திற்கும், சக்திக்கும் நன்றி ஜி.

நான் ஆரம்பத்தில் எனது நிலையை மேலே ஆரம்பித்து கீழே தேடினேன். இப்போது கீழே தொடங்கி மேலே பார்க்க ஆரம்பித்துள்ளேன்.

அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் தர வரிசையில் மேல்நிலை அணிகளை கீழ்நிலை அணிகள் வெற்றியடைவது நல்லதொரு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

அயர்லாந்தினை ரசோதரன் தெரிவு செய்துள்ளார்.🤣

பயத்தக் காட்டுறியல். ஆனால் பயப்பட மாட்டம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, vasee said:

இலங்கை பந்து வீச்சாளர்கள் சூழ்நிலையினை (Condition) சாதகமாக்கி சிறப்பாக பந்து வீசினார்கள், ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களும் சிறப்பாக எடுத்து சென்றார்கள், அவுஸ்ரேலியா 1-6 ஓவர்களில் சிறப்பாக செயற்பட்டார்கள் 7-14 இல் 5 விக்கெட்டினை கொடுத்திருந்தார்கள் ஆனாலும் 1-6 ஓவர்கள் போலவே இலங்கை அணியினை விட அதிக ஓட்டங்களில் இருந்தார்கள் 15 ஓவர்களுக்கு பின்னர் போட்டியினை இலகுவாக முடிக்க கூடியதாக இருப்பதற்கு காரணம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிசங்க முக்கிய காரணம்.

இலங்கை அணி சுப்பர் 8 போவதற்கு தமது ஆடுகள சாதகம் ஒரு பங்களிப்பாக இருக்கும் ஆனால் அதன் பின்னர் இந்தியாவில் போட்டிகள் நடக்கின்றது.

இலங்கை அணி சுப்பர் 8 உடன் வீடு திரும்பும் எனவே கருதுகிறேன்.

உண்மை தான் இந்திய‌ மைதான‌ங்க‌ளில் இல‌ங்கை வீர‌ர்க‌ள் சுத‌ப்புவின‌ம்

இப்ப‌ இந்திய‌ர்க‌ளுக்கு பெரிய‌ ச‌ந்தோஷ‌மாய் இருக்கு அவுஸ் தான் பின‌லில் த‌ங்க‌ளுக்கு தொல்லை த‌ருவாங்கள் அவையை ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளி ஏற்றியாச்சு என்னு................

நாளை சிம்பாவே அய‌ர்லாந் விளையாட்டு இன்று இல‌ங்கை அவுஸ் விளையாடின‌ மைதான‌த்தில் தான் விளையாடுகின‌ம்

அய‌ர்லாந் ஓமானுக்கு எதிரா 235 ர‌ன்ஸ் அன்று அடிச்ச‌வை அது தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் பெரிய‌ ஸ்கோர்...................

  • கருத்துக்கள உறவுகள்

பதும் நிசங்கவின் பிடி. மாக்ஸ்வெல்லை அனுப்பி வைத்தார்.

Screenshot-20260216-103229-Chrome.jpg

அந்தப் பிடியை இங்கே காணலாம்

icc
No image preview

A catch beyond belief by Nissanka | T20WC 2026 | ICC Men'...

Sri Lanka's Pathum Nissanka goes airborne to pull off a spectacular catch of Australia's Glenn Maxwell at the ICC Men's T20 World Cup 2026.
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

அயர்லாந்தினை ரசோதரன் தெரிவு செய்துள்ளார்.🤣

🤣................

முன்னர் ஏதோ ஒரு வருட உதைபந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு ஆக்டோபஸ் (தமிழ்: கோவலன்) தெரிவுகள் செய்ததை செய்திகளில் பார்த்திருக்கின்றேன்............ பெரிய வித்தியாசம் இல்லை................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

உண்மை தான் இந்திய‌ மைதான‌ங்க‌ளில் இல‌ங்கை வீர‌ர்க‌ள் சுத‌ப்புவின‌ம்

இப்ப‌ இந்திய‌ர்க‌ளுக்கு பெரிய‌ ச‌ந்தோஷ‌மாய் இருக்கு அவுஸ் தான் பின‌லில் த‌ங்க‌ளுக்கு தொல்லை த‌ருவாங்கள் அவையை ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளி ஏற்றியாச்சு என்னு................

நாளை சிம்பாவே அய‌ர்லாந் விளையாட்டு இன்று இல‌ங்கை அவுஸ் விளையாடின‌ மைதான‌த்தில் தான் விளையாடுகின‌ம்

அய‌ர்லாந் ஓமானுக்கு எதிரா 235 ர‌ன்ஸ் அன்று அடிச்ச‌வை அது தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் பெரிய‌ ஸ்கோர்...................

நீங்கள் சொல்வது போலத்தான் இருகிறது, ஆனால் காணொளி பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் போகிறேன் கீழே கீழே.....

  • கருத்துக்கள உறவுகள்

631545168_10163490657004424_517445823419

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, வீரப் பையன்26 said:

உண்மை தான் இந்திய‌ மைதான‌ங்க‌ளில் இல‌ங்கை வீர‌ர்க‌ள் சுத‌ப்புவின‌ம்

இப்ப‌ இந்திய‌ர்க‌ளுக்கு பெரிய‌ ச‌ந்தோஷ‌மாய் இருக்கு அவுஸ் தான் பின‌லில் த‌ங்க‌ளுக்கு தொல்லை த‌ருவாங்கள் அவையை ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளி ஏற்றியாச்சு என்னு................

நாளை சிம்பாவே அய‌ர்லாந் விளையாட்டு இன்று இல‌ங்கை அவுஸ் விளையாடின‌ மைதான‌த்தில் தான் விளையாடுகின‌ம்

அய‌ர்லாந் ஓமானுக்கு எதிரா 235 ர‌ன்ஸ் அன்று அடிச்ச‌வை அது தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் பெரிய‌ ஸ்கோர்...................

அவுஸ்ரேலிய அணி ஒரு மோசமான அணியாக உள்ள நிலையில், அவுஸ்ரேலியாவினை வென்றதனை வைத்து அதனை ஒரு Anchoring bias ஆக வைத்து இலங்கை அணி தொடர்பில் பெரியளவிலான எதிர்பார்ப்பு கொள்ளகூடாது, அது பின்னர் இலங்கை இரசிகர்களின் ஏமாற்றத்தில் முடியும், அவுஸ்ரேலிய அணி இந்தியணிக்கோ வேறு எந்த அணிக்கோ சவாலாக இருக்காது, இந்த அவுஸ்ரேலிய அணி வீடு திரும்புவது சகல விதத்திலும் நல்லது.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் வாதாவூரனுக்கு பயந்து நாயை அவிழ்த்து விட, சுவி அண்ணாஃ நாய்க்கு பிஸ்கெட்டை போட்டுட்டு, வீட்டுக்குள்ள பூந்திட்டார்

வீட்டைக் காப்பாற்ற 2-3 நாய் வளர்க்க வேண்டும் போல.

முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

அவுஸ்ரேலிய அணி ஒரு மோசமான அணியாக உள்ள நிலையில், அவுஸ்ரேலியாவினை வென்றதனை வைத்து அதனை ஒரு Anchoring bias ஆக வைத்து இலங்கை அணி தொடர்பில் பெரியளவிலான எதிர்பார்ப்பு கொள்ளகூடாது, அது பின்னர் இலங்கை இரசிகர்களின் ஏமாற்றத்தில் முடியும், அவுஸ்ரேலிய அணி இந்தியணிக்கோ வேறு எந்த அணிக்கோ சவாலாக இருக்காது, இந்த அவுஸ்ரேலிய அணி வீடு திரும்புவது சகல விதத்திலும் நல்லது.

சூப்ப‌ர் 8போட்டிக‌ள் சில‌ இல‌ங்கை மைதான‌ங்க‌ளில் ந‌ட‌க்குது..................நீங்க‌ள் முத‌ல் ப‌திவில் சொன்ன‌து போல் சூப்ப‌ர்8ரில் இல‌ங்கை அணி தான் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும்...............விளையாடும் அந்த‌ அன்று நாண‌ய‌ம் வெல்வ‌து வெற்றி தோல்விய‌ தீர்மானிக்கும்........................

  • கருத்துக்கள உறவுகள்

பின் வாங்கில் இருந்த @ரசோதரன் சொல்வளி கேட்டு வாங்கு மாறி இருந்ததால் கூடுதல் புள்ளிகளை எடுத்து முன்னேறுகிறார்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது இதைத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

பின் வாங்கில் இருந்த @ரசோதரன் சொல்வளி கேட்டு வாங்கு மாறி இருந்ததால் கூடுதல் புள்ளிகளை எடுத்து முன்னேறுகிறார்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது இதைத் தான்.

என்ன நடக்குது அண்ணா இங்கே.............. நாளைக்கு ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் வென்றால், நான் மெகா மில்லியன், பவர்பால், இப்படி எல்லா லாட்டரி டிக்கெட்டுகளையும் எடுத்துப் பார்க்கலாம் போல...................

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

வீட்டைக் காப்பாற்ற 2-3 நாய் வளர்க்க வேண்டும் போல.

முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்

பிஸ்கெட் செலவு எகிறுமே😂

43 minutes ago, வீரப் பையன்26 said:

சூப்ப‌ர் 8போட்டிக‌ள் சில‌ இல‌ங்கை மைதான‌ங்க‌ளில் ந‌ட‌க்குது..................நீங்க‌ள் முத‌ல் ப‌திவில் சொன்ன‌து போல் சூப்ப‌ர்8ரில் இல‌ங்கை அணி தான் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும்...............விளையாடும் அந்த‌ அன்று நாண‌ய‌ம் வெல்வ‌து வெற்றி தோல்விய‌ தீர்மானிக்கும்........................

இலங்கையின் அத்தனை சூப்பர் 8 இம் இலங்கையிலாம்.

29 minutes ago, ரசோதரன் said:

என்ன நடக்குது அண்ணா இங்கே.............. நாளைக்கு ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் வென்றால், நான் மெகா மில்லியன், பவர்பால், இப்படி எல்லா லாட்டரி டிக்கெட்டுகளையும் எடுத்துப் பார்க்கலாம் போல...................

யாழ்கள போட்டியில்…

முதல் முறைகாக…

திரைக்கு வந்து சிலமாதங்களே ஆன…

“நாங்களும் வெல்லும்வோம் கிரிகெட் கணிப்பில்”

திரைப்படம்…

காணத் தவறாதீர்கள்!

வாழ்வில் முதல் முறையாக இன்று எனக்கு 3/3.

ஈரோமில்லியன் எத்தனையோ மில்லியனாம். ஒரு டிகெட்ட எடுதுள்ளேன்.

விழுந்தால் பிரைவேட் ஜெட்டில் போய் பைனல் பார்க்கலாம்😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

வாழ்வில் முதல் முறையாக இன்று எனக்கு 3/3.

ஈரோமில்லியன் எத்தனையோ மில்லியனாம். ஒரு டிகெட்ட எடுதுள்ளேன்.

விழுந்தால் பிரைவேட் ஜெட்டில் போய் பைனல் பார்க்கலாம்😂

எங்களையும் கூட்டிக் கிட்டு போங்கண்ணே. நாய்க்கு பிஸ்கட்ட நாங்கள் வாங்கிப் போடுறம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

நான் போகிறேன் கீழே கீழே.....

நீங்கள் ஐபிஎல் களப்போட்டியில் அப்படியே அசையாமல் முதலாவது இடத்திலேயே நின்ற கணக்கையும், இந்தக் கணக்கையும் கூட்டிப் பார்த்தால் உலகத்தில் ஒரு சமநிலை இருக்கிற மாதிரியே தெரிகின்றது.....................🤣.

8 minutes ago, goshan_che said:

யாழ்கள போட்டியில்…

முதல் முறைகாக…

திரைக்கு வந்து சிலமாதங்களே ஆன…

“நாங்களும் வெல்லும்வோம் கிரிகெட் கணிப்பில்”

திரைப்படம்…

காணத் தவறாதீர்கள்!

🤣.............

ரஜனி, கமல் எல்லாம் இருக்க 'கரகாட்டக்காரன்' வந்து ஊரெல்லாம் ஓடினது போல.............. படம் முடிய வாழைப்பழக் காமெடி போல காமெடி மட்டும் தான் நினைவில் நிற்கும்.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

இலங்கையின் அத்தனை சூப்பர் 8 இம் இலங்கையிலாம்.

அது எப்போவோ முடிவு சேய்யப் பட்ட விடயம். போட்டிகள் தொடங்க முதலே, இலங்கை குழு இரண்டில் Y4 என்ற இடத்தில் இருக்கும் படி பிரிக்கப் பட்டது. எல்லா Y4 இன் போட்டிகள் இலங்கையில். அதே போல், குழு 1ல், இந்தியாவும் X1 என்ற இடத்தில். எல்லா X1 போட்டிகளும் இந்தியாவில்.

ஒரே வேறுபாடு: பாகிஸ்தானுடனான போட்டிகள்

ஒரு அரை இறுதியும் இலங்கையில் நடை பெறும்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, செம்பாட்டான் said:

எங்களையும் கூட்டிக் கிட்டு போங்கண்ணே. நாய்க்கு பிஸ்கட்ட நாங்கள் வாங்கிப் போடுறம்.

உங்களுக்கில்லாமலா செம்பா.

வாங்கிறதுதான் வாங்கிறியள் கோல்ட் பிஸ்கெட்டா வாங்குங்கோ😂

23 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் ஐபிஎல் களப்போட்டியில் அப்படியே அசையாமல் முதலாவது இடத்திலேயே நின்ற கணக்கையும், இந்தக் கணக்கையும் கூட்டிப் பார்த்தால் உலகத்தில் ஒரு சமநிலை இருக்கிற மாதிரியே தெரிகின்றது.....................🤣.

🤣.............

ரஜனி, கமல் எல்லாம் இருக்க 'கரகாட்டக்காரன்' வந்து ஊரெல்லாம் ஓடினது போல.............. படம் முடிய வாழைப்பழக் காமெடி போல காமெடி மட்டும் தான் நினைவில் நிற்கும்.................🤣.

இதில சொப்பன சுந்தரி யாருங்கோ😂

10 minutes ago, செம்பாட்டான் said:

அது எப்போவோ முடிவு சேய்யப் பட்ட விடயம். போட்டிகள் தொடங்க முதலே, இலங்கை குழு இரண்டில் Y4 என்ற இடத்தில் இருக்கும் படி பிரிக்கப் பட்டது. எல்லா Y4 இன் போட்டிகள் இலங்கையில். அதே போல், குழு 1ல், இந்தியாவும் X1 என்ற இடத்தில். எல்லா X1 போட்டிகளும் இந்தியாவில்.

ஒரே வேறுபாடு: பாகிஸ்தானுடனான போட்டிகள்

ஓமாம்👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.