Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

உலக அரசியலில் ரஷ்யாவும் அமெரிக்காவும் நிறுத்தி நிதானித்து அமைதியாக செயற்படுகின்றார்கள். இடையில் இருப்பவர்கள் தான் பொங்கி எழுகின்றார்கள்.

எதிரியாக இருந்தாலும் சீன வளர்ச்சி விடயத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு.....

அமெரிக்க ஆகாயத்தில் பலூன் பறக்க விட்டு அழகு பார்த்தவன் சீனன். அவனுக்கு அமெரிக்க நடவடிக்கைகளை கண்காணிக்க தனி செய்மதி தேவையில்லை.😂

வெளியுறவுக்கொள்கை என்பது தனிப்பட ஒரு அதிபரால் தீர்மானிக்கப்படுவதில்லைதான், ஆனால் அவர்களது ஆளுமை நிச்சயமாக இருக்கும், ரோசவெல்ட் போல புதிய அமெரிக்காவினை கட்டமைத்து வரலாற்றில் இடம்பெறவேண்டும் என ட்ரம்ப் விரும்புகிறார் என கூறிய விடயத்தினில் இப்போதும் மாற்றமில்லை.

இப்போதுள்ள உலக ஒழுங்கு பல்துருவ உலக ஒழுஙிற்கான ஆரம்பம் என கூறுகிறார்கள், இன்னொரு தரப்பு புதிய பனிப்போர்கால உலக ஒழுங்கு என கூறுகிறார்கள்.

ஆனால் அமெரிக்கா கையிலெடுத்திருக்கும் மொன்ரோ கோட்பாடு அமெரிக்காவினை முன்னிலைப்படுத்திய கோட்பாடு, இதன் மூலம் தற்போது அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் தெரிகிறது, ஆனால் இந்த தடாலடி முயற்சி; உக்கிரேன் இரஸ்சிய கேர்ஸ்க் ஆக்கிரமிப்பு போன்றது என நினைக்கிறேன், இது அமெரிக்காவிற்கு உடனடி நலனை கொடுக்கும், ஆனால் அடிப்படை ரீதியான தோல்விக்கான ஆரம்பமாக உருவெடுக்கும் என நினைக்கிறேன்.

  • Replies 59
  • Views 2.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்களுக்கும், எனக்கும் இன்று ஒரே விடயம் பற்றியே கவலை என்பதும், அத்துடன் நாங்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே இதை மறந்து விட்டு, எங்களின் அடுத்த வேலையை பார்க்க போ

  • குமாரசாமி
    குமாரசாமி

    வெனிசுலா எந்த விதத்திலும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லாத நாடு. இருந்தும் அந்த நாடு மீது அமெரிக்கா ஆக்கிரமித்தது கண்டிக்க வேண்டிய செயல். கேவலம்.....அமெரிக்கர்கள் வீட்டுக்கு 5 வாகனங்கள் வைத்திருப்ப

  • புலவர்
    புலவர்

    உக்ரைனை நீ வச்சுக்கோ!தாய்வானை அவன்வச்சிருக்கட்டும்!!வெனிசுலாவை நான்வச்சிருக்கிறன். பட் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேக்கரி டீல் ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா முன்னர் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் அல்லது அக்கிரமிப்புப் போர்களில் முவைத்த பொய்யான காரணங்களைப் போல் அல்லாமல் வெனிசுவேலா மீது தாம் மூன்று மணிநேர நடவடிக்கையினை நடத்தி மடூரோவைக் கைது செய்ததன் உண்மையான நோக்கம் வெனிசுவேலாவில் இருக்கும் எண்ணை வளத்தைத் தாம் கைய்யகப் படுத்தத்தான் என்று ட்ரம்ப் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். எண்ணெய்க் கிணறுகளை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அவற்றை மீளக் கட்டியெழுப்பி, முன்னர் அங்கு இயங்கிய அமெரிக்க எண்ணெய்க் கம்பெணிகள் கடந்த இரு வெனிசுவேலா நிர்வாகங்களினால் மூடப்பட்டபோது ஏற்பட்ட இழப்புகளுக்கான நட்டவீட்டை வளங்கப்போவதாகவும், பின்னர் எண்ணெயினை அகழ்ந்தெடுத்து, சுத்திகரித்து , ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் பணத்தை இக்கம்பெணிகள் எடுக்கும் என்றும், வெனிசுவேலா நாட்டினை அபிவிருத்தி செய்யவும் இந்நிதி பயன்படும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

ஆக, மடூரோ தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டதோ அல்லது அமெரிக்காவினுள் போதைவஸ்த்தை கொண்டு வருவதைத் தடுக்க ஆவண செய்யாமலிருப்பதோ அவர் கைதுசெய்யப்பட்டு இழுத்துவரப்படுவதற்குக் காரணமில்லை.

ட்ரம்ப்பிற்கும் புட்டினுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், ட்ரம்ப் வெனிசுவெலாவின் எண்ணெய் வளத்தை பலாத்காரமாகத் திருடப்போகிறார், புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்து வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

தைவான் தென்சீன கடலில் சீன பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மிக முக்கிய அமைவிடம் அதனை அமெரிக்கா இலகுவாக கைவிடுமா?

டிரம்ப் அமெரிக்காவும், நாம் அறிந்த டிரம்ப் அல்லாத அமேரிக்காவும் ஒன்றல்ல. பழைய சூத்திரங்கள் (formula) டிரம்ப் அமெரிக்காவுக்கு பொருந்தாது என்பது என் கருத்து.

டிரம்ப் அமெரிக்காவுக்கு அமெரிக்காவின் பொருளாதார நலன் ஒரு பொருட்டல்ல. தேர்தலில் தோற்கும் அளவுக்கு பொருளாதாரம் அடி வாங்காதவரை.

கிரீன்லாந்தை எடுத்து கொள்ளுங்கள். அமெரிக்கா அதை கைப்பற்ற வேண்டிய அவசியமே இல்லை. யாருக்கும் சொல்லாமல் - டென்மார்க்கை திரைமறைவில் நெருக்கினாலே தேவையான சகல வளமும் சலுகை விலையில் கிடைக்கும்.

ஆனால் இப்படி டென்மார்க்கை, ஈயுவை அவமானப்படுத்தும் விதமாக பொதுவெளியில் அமேரிக்கா நடந்து கொள்வது - கிரீன்லாந்தை எடுப்பது என்பதை விட, ஏனைய நேட்டோ/ஈயூ நாடுகளை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கம் என்பதை காட்டுகிறது.

இதேதான் ஜப்பானுக்கும்.

ஏலவே கவனித்திருப்பீர்கள் - பெண்டகன் அண்மையில் வெளியிட்ட பல விபரங்கள் தாங்கள் செய்த அத்தனை war-gaming இலும் சீனாவிடம் அமெரிக்கா தோற்பதாக வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.

பொதுவாக இது உண்மை எனிலும் இதை எந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சும் வெளிவிடாது. ஆனால் இந்த பெண்டகன் செய்கிறது.

இது தைவானை கைவிடும் முடிவுக்கு அமெரிக்க மக்களை, உள்ளூர் ஆடியன்ஸை தயார் படுத்தும் முயற்சி என நான் காண்கிறேன்.

இதே ஒத்த அணுகுமுறைதான் ஜப்பான்- வடகொரியா, தென்சீன கடலில் சீனா-பிலிப்பைன்ஸ் விடயத்திலும் நடக்கும்.

மத்திய கிழக்கு தவிர உலகில் வேறெந்த பகுதியிலும், ஐரோப்பாவிலும் கூட, அமெரிக்கா வெறும் அறிக்கையோடு நிறுத்தி கொள்ளும் ஒரு நிலை விரைந்து ஏற்படும் என நான் எண்ணுகிறேன்.

அதேபோல் சம்பந்தமில்லாமல், தனது அயலில் சிவனே எண்டு இருந்த வெனிசுவேலா, கொலம்பியா, கியூபாவோடு இல்லாத விடயங்களை கூறி அமெரிக்கா பிரசனைப்பட்டு - அதில் அதன் நேரம், வலு செலவழியும்.

நேரடியாக வெல்லப்பட முடியாத ஒரு சக்தியை, எப்படி அதன் சக்திகளை ஒவ்வொன்றாக அகற்றி நீண்டகால நோக்கில் தோறகடிக்க முடியும் என்பதை காட்டும் ஒரு வேலைதிட்டத்தின் நடுப்பகுதியில் நாம் நிற்கிறோம்.

இதை முழுமையாக செய்து முடிக்க டிரம்ப் 3 ம் முறை ஜனாதிபதி ஆவது தேவைப்படும் என நினைக்கிறேன்.

Vance ஐ திடீரென டிரம்ப் ஓரம்கட்டுவதும் இதனால் என்றே எண்ணுகிறேன்.

அமேரிக்காவில் ஒரு ஆள்-அரசு இருப்பதாக பலர் சொல்கிறார்கள். இதை கணிசமாக கட்டுப்படுத்துவது யூதர்கள். ஆகவேதான் அமெரிக்காவின் இஸ்ரேல், மத்திய கிழக்கு கொள்கை வழமைபோல் இருக்கும் அல்லது மேலும் இஸ்ரேல்லுக்கு சாதமாகும்.

அங்கேயும் அமெரிக்காவின் வகிபாகத்தை குறைத்தால் - அது இஸ்ரேலை பாதிக்கும் - அப்போ ஆள் அரசு விழித்து, டிரம்பை அகற்ற பார்த்தால் - மொத்த திட்டமும் கெட்டு விடும்.

எனவேதான் மத்திய கிழக்கு மட்டும் வழமை போல் தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

திட்டத்தின் இலக்கு -

அமெரிக்காவை இப்போ இருப்பது போல ஒரு ஒற்றை உலக வல்லரசாக அல்லாமல், அமெரிக்க கண்டத்தில் மட்டும் ஆளுமை உல்ல பிராந்திய வல்லரசாக சுருக்குவது.

உலகை 3 ஆட்புலங்களாக spheres of influence ஆக்குவது.

அவையாவன

  1. அமெரிக்காவின் ஆள்புலம் - வட தென் அமெரிக்கா, மேற்கு பசுபிக், மத்திய கிழக்கு

  2. ரஸ்யா ஆட்புலம் - ஐரோப்பா, மத்திய ஆசியா

  3. சீனா -இந்து சமுதிரம் சார் பகுதிகள், கிழக்கு பசுபிக்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

டிரம்ப் அமெரிக்காவும், நாம் அறிந்த டிரம்ப் அல்லாத அமேரிக்காவும் ஒன்றல்ல. பழைய சூத்திரங்கள் (formula) டிரம்ப் அமெரிக்காவுக்கு பொருந்தாது என்பது என் கருத்து.

டிரம்ப் அமெரிக்காவுக்கு அமெரிக்காவின் பொருளாதார நலன் ஒரு பொருட்டல்ல. தேர்தலில் தோற்கும் அளவுக்கு பொருளாதாரம் அடி வாங்காதவரை.

கிரீன்லாந்தை எடுத்து கொள்ளுங்கள். அமெரிக்கா அதை கைப்பற்ற வேண்டிய அவசியமே இல்லை. யாருக்கும் சொல்லாமல் - டென்மார்க்கை திரைமறைவில் நெருக்கினாலே தேவையான சகல வளமும் சலுகை விலையில் கிடைக்கும்.

ஆனால் இப்படி டென்மார்க்கை, ஈயுவை அவமானப்படுத்தும் விதமாக பொதுவெளியில் அமேரிக்கா நடந்து கொள்வது - கிரீன்லாந்தை எடுப்பது என்பதை விட, ஏனைய நேட்டோ/ஈயூ நாடுகளை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கம் என்பதை காட்டுகிறது.

இதேதான் ஜப்பானுக்கும்.

ஏலவே கவனித்திருப்பீர்கள் - பெண்டகன் அண்மையில் வெளியிட்ட பல விபரங்கள் தாங்கள் செய்த அத்தனை war-gaming இலும் சீனாவிடம் அமெரிக்கா தோற்பதாக வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.

பொதுவாக இது உண்மை எனிலும் இதை எந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சும் வெளிவிடாது. ஆனால் இந்த பெண்டகன் செய்கிறது.

இது தைவானை கைவிடும் முடிவுக்கு அமெரிக்க மக்களை, உள்ளூர் ஆடியன்ஸை தயார் படுத்தும் முயற்சி என நான் காண்கிறேன்.

இதே ஒத்த அணுகுமுறைதான் ஜப்பான்- வடகொரியா, தென்சீன கடலில் சீனா-பிலிப்பைன்ஸ் விடயத்திலும் நடக்கும்.

மத்திய கிழக்கு தவிர உலகில் வேறெந்த பகுதியிலும், ஐரோப்பாவிலும் கூட, அமெரிக்கா வெறும் அறிக்கையோடு நிறுத்தி கொள்ளும் ஒரு நிலை விரைந்து ஏற்படும் என நான் எண்ணுகிறேன்.

அதேபோல் சம்பந்தமில்லாமல், தனது அயலில் சிவனே எண்டு இருந்த வெனிசுவேலா, கொலம்பியா, கியூபாவோடு இல்லாத விடயங்களை கூறி அமெரிக்கா பிரசனைப்பட்டு - அதில் அதன் நேரம், வலு செலவழியும்.

நேரடியாக வெல்லப்பட முடியாத ஒரு சக்தியை, எப்படி அதன் சக்திகளை ஒவ்வொன்றாக அகற்றி நீண்டகால நோக்கில் தோறகடிக்க முடியும் என்பதை காட்டும் ஒரு வேலைதிட்டத்தின் நடுப்பகுதியில் நாம் நிற்கிறோம்.

இதை முழுமையாக செய்து முடிக்க டிரம்ப் 3 ம் முறை ஜனாதிபதி ஆவது தேவைப்படும் என நினைக்கிறேன்.

Vance ஐ திடீரென டிரம்ப் ஓரம்கட்டுவதும் இதனால் என்றே எண்ணுகிறேன்.

அமேரிக்காவில் ஒரு ஆள்-அரசு இருப்பதாக பலர் சொல்கிறார்கள். இதை கணிசமாக கட்டுப்படுத்துவது யூதர்கள். ஆகவேதான் அமெரிக்காவின் இஸ்ரேல், மத்திய கிழக்கு கொள்கை வழமைபோல் இருக்கும் அல்லது மேலும் இஸ்ரேல்லுக்கு சாதமாகும்.

அங்கேயும் அமெரிக்காவின் வகிபாகத்தை குறைத்தால் - அது இஸ்ரேலை பாதிக்கும் - அப்போ ஆள் அரசு விழித்து, டிரம்பை அகற்ற பார்த்தால் - மொத்த திட்டமும் கெட்டு விடும்.

எனவேதான் மத்திய கிழக்கு மட்டும் வழமை போல் தொடர்கிறது.

34 minutes ago, goshan_che said:

திட்டத்தின் இலக்கு -

அமெரிக்காவை இப்போ இருப்பது போல ஒரு ஒற்றை உலக வல்லரசாக அல்லாமல், அமெரிக்க கண்டத்தில் மட்டும் ஆளுமை உல்ல பிராந்திய வல்லரசாக சுருக்குவது.

உலகை 3 ஆட்புலங்களாக spheres of influence ஆக்குவது.

அவையாவன

  1. அமெரிக்காவின் ஆள்புலம் - வட தென் அமெரிக்கா, மேற்கு பசுபிக், மத்திய கிழக்கு

  2. ரஸ்யா ஆட்புலம் - ஐரோப்பா, மத்திய ஆசியா

  3. சீனா -இந்து சமுதிரம் சார் பகுதிகள், கிழக்கு பசுபிக்.

நீங்கள் கூறுவது விளங்குகிறது.

உலக பிரச்சனைகளின் ஆணிவேர் பொருளாதாரம் என கருதுகிறேன், இந்த வெனிசுலா பிரச்சினை மற்றும் புதிய உலக ஒழுங்கின் போக்கு கோவிட் கால பாதிப்பு நீட்சியாக இருக்குமோ என கருதுகிறேன்.

கோவிட் காலத்தில் இருந்ததனை போல வழங்கல் சங்கிலியில் மிக பெரிய இடையுறு தற்போதுதான் உள்ளது, தற்பொதய முயற்சிகள் ஒரு தன்னிறைவு பிராந்திய பொருளாதாரத்தினை மையமாக மாற்றம் ஏற்படுவது போல உணருகிறேன்.

அமெரிக்க பொருளாதார நெருக்கடி; அமெரிக்க பாதுகாப்பு செலவீடுகளை மட்டுப்படுத்துகிறது, இது சேத கட்டுப்பாடு நடவடிக்கையாக இருக்குமா?

முன்னரை போல அமெரிக்க பாதுகாப்பிற்கு அமெரிக்காவினால் செலவிடமுடியாது என கருதுகிறேன்.

இது ஒரு தவிர்க்கமுடியாத கால மாற்றம், அதற்கு சில கடந்த கால கொள்கைகளும் காரணமாகிறது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் புவிசார் அரசியல் நிகழ்வுகளின் தாக்கம்

உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் ஒரு வெற்றிடத்தில் இயங்குவதில்லை. அவை அரசியல் முடிவுகள், வர்த்தகக் கொள்கைகள், மோதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஆழமாக பாதிக்கப்படுகின்றன. திடீர் கொள்கை மாற்றங்கள் மூலப்பொருட்களை சீர்குலைக்கும் போது, போக்குவரத்து வழிகள் பிராந்திய உறுதியற்ற தன்மை காரணமாக சாத்தியமற்றதாக மாறும்போது அல்லது முக்கியமான மூலப்பொருட்கள் தேசிய நலன்களால் கட்டுப்படுத்தப்படும்போது வணிகங்கள் போராடுவதை நான் கண்டிருக்கிறேன். புவிசார் அரசியல் நிகழ்வுகள் விநியோகச் சங்கிலி செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை எந்த நிறுவனமும் புறக்கணிக்க முடியாது என்பதே உண்மை. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறுவதற்கு எதிர்வினை நடவடிக்கைகளை விட அதிகமாக தேவைப்படுகிறது - இதற்கு மூலோபாய திட்டமிடல், மாற்று ஆதாரங்கள் மற்றும் உலகளாவிய அபாயங்களைப் பற்றிய புரிதல் தேவை. புவிசார் அரசியல் நிகழ்வுகள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை வடிவமைக்கும் முக்கிய வழிகளையும், இடையூறுகளைக் குறைக்க வணிகங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் கூர்ந்து கவனிப்போம்.

வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கட்டணங்கள் விநியோக வலையமைப்புகளை மறுவடிவமைக்கக்கூடும்

அரசாங்கங்கள் வரிகள் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, விநியோகச் சங்கிலிகள்  விரைவாக சரிசெய்யப்பட வேண்டும். மூலப்பொருட்கள் அல்லது முடிக்கப்பட்ட பொருட்களின் மீதான திடீர் வரி உயர்வுகள் காரணமாக ஒரே இரவில் தங்கள் மூலப்பொருட்கள் வாங்கும் உத்திகளை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிறுவனங்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். செலவுகள் எதிர்பாராத விதமாக அதிகரிக்கும் போது, வணிகங்கள் கடினமான முடிவை எதிர்கொள்கின்றன: கூடுதல் செலவுகளை உள்வாங்குதல், அவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் அல்லது வரி இல்லாத பகுதிகளில் புதிய சப்ளையர்களைக் கண்டறிதல்.

சில நிறுவனங்கள் சப்ளையர் தளங்களை பல்வகைப்படுத்துவதன் மூலம் இந்த அபாயங்களைக் குறைக்கின்றன, முக்கியமான பொருட்களுக்கு அவர்கள் ஒரு நாட்டை அதிகமாகச் சார்ந்திருக்கவில்லை என்பதை உறுதி செய்கின்றன. மற்றவை கட்டுப்பாடுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வர்த்தகத்திற்கு உகந்த பகுதிகளில் செயல்பாடுகளை நிறுவுகின்றன. வர்த்தகக் கொள்கைகள் எதிர்பாராத விதமாக மாறும்போது அதன் ஆதார உத்தியில் மிகவும் இறுக்கமாக இருக்கும் விநியோகச் சங்கிலி எப்போதும் போராடும்.

அரசியல் ஸ்திரமின்மை மற்றும் மோதல்கள் தளவாடங்களை சீர்குலைக்கின்றன

போர்கள், போராட்டங்கள் மற்றும் இராஜதந்திர பதட்டங்கள் விநியோகச் சங்கிலிகளில் உடனடி இடையூறுகளை உருவாக்குகின்றன. முக்கிய கப்பல் பாதைகளில் ஏற்படும் மோதல்கள் காரணமாக வணிகங்கள் பெரும் இடையூறுகளை சந்திப்பதை நான் கண்டிருக்கிறேன், இதனால் அவை மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு பிரதான உதாரணம் செங்கடல் நெருக்கடி, அங்கு வணிகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் நிறுவனங்கள் ஏற்றுமதிகளை மறுவழியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, இதனால் விநியோக காலக்கெடுவில் நாட்கள் அல்லது வாரங்கள் கூட சேர்க்கப்படுகின்றன.

அவசரகாலத் திட்டங்களை வைத்திருப்பது அவசியம். மாற்றுத் தளவாடத் திட்டங்கள் இல்லாமல் ஒற்றை வர்த்தக வழியை மட்டுமே நம்பியிருக்கும் வணிகங்கள்தான் நிலையற்ற தன்மை ஏற்படும்போது முதலில் பாதிக்கப்படும். முதன்மை போக்குவரத்து வழிகள் இனி சாத்தியமில்லாதபோது, பல தளவாட வழங்குநர்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதும், பிராந்திய கிடங்குகளைப் பராமரிப்பதும் மிகவும் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும்.

பொருளாதாரத் தடைகள் சந்தை அணுகலையும் சப்ளையர் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகின்றன

தடைகள் ஒரே இரவில் முழு விநியோகச் சங்கிலிகளையும் துண்டிக்கக்கூடும். சர்வதேச தடைகள் காரணமாக நீண்ட கால சப்ளையர்களுடன் வணிகம் செய்ய முடியாமல் திணறிய நிறுவனங்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். எண்ணெய், குறைக்கடத்திகள் அல்லது முக்கிய மூலப்பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் எதுவாக இருந்தாலும், இந்த இடையூறுகளுக்குத் தயாராக இல்லாத வணிகங்கள் பெரும்பாலும் உற்பத்தி நிறுத்தங்களை எதிர்கொள்கின்றன.

உலகளவில் செயல்படும் நிறுவனங்கள், புவிசார் அரசியல் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதன் மூலம் சாத்தியமான தடைகளுக்கு முன்னால் இருக்க வேண்டும். தடைசெய்யப்படாத பிராந்தியங்களில் மாற்று சப்ளையர்களுடன் உறவுகளைப் பேணுபவர்கள், தடைகள் வர்த்தகத்தைப் பாதிக்கும்போது அவற்றைச் சரிசெய்ய எளிதாக நேரத்தைக் கொண்டுள்ளனர். தடைகளின் சாத்தியக்கூறுகளைப் புறக்கணிப்பது ஒரு விலையுயர்ந்த தவறு, இது வணிகங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளை புதிதாக மீண்டும் கட்டியெழுப்பத் துடிக்க வைக்கும்.

வள தேசியவாதம் முக்கியமான பொருட்களை அணுகுவதை கட்டுப்படுத்துகிறது

இயற்கை வளங்கள் நிறைந்த நாடுகள் சில சமயங்களில் பொருளாதார ஆதாயத்தைப் பெறுவதற்காக ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துகின்றன. நாடுகள் அரிய மண் தாதுக்கள், லித்தியம் மற்றும் எரிசக்தி வளங்களுக்கு வரம்புகளை விதிப்பதை நான் கண்டிருக்கிறேன், இதனால் அவற்றை நம்பியுள்ள தொழில்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது இந்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது, ஏனெனில் நாடுகள் முக்கியமான கனிமங்களின் மூலோபாய முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றன.

இந்தப் பொருட்களைச் சார்ந்திருக்கும் வணிகங்கள், பற்றாக்குறை ஒரு நெருக்கடியாக மாறுவதற்கு முன்பு, நீண்டகால விநியோக ஒப்பந்தங்களைப் பெற்று, மாற்று ஆதாரங்களை ஆராய வேண்டும். சில நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் முதலீடு செய்கின்றன அல்லது அரசியல் ரீதியாக நிலையான பிராந்தியங்களில் கூட்டாண்மைகளை உருவாக்குகின்றன, இதனால் ஒற்றை சப்ளையர் நாட்டைச் சார்ந்திருப்பதைக் குறைக்கின்றன. தயாராக இல்லாத நிறுவனங்கள் பெரும்பாலும் வளக் கொள்கைகளை மாற்ற வேண்டியிருக்கும்.

தொழில்நுட்பப் போட்டிகள் விநியோகச் சங்கிலி சார்புகளை மறுவடிவமைக்கின்றன.

தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலிகள் ஒரு தனித்துவமான சவாலை எதிர்கொள்கின்றன: அறிவுசார் சொத்து, குறைக்கடத்தி உற்பத்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்கள் மீதான புவிசார் அரசியல் போட்டி. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தொழில்நுட்பத் தடைகள் நிறுவனங்கள் தங்கள் சப்ளையர்கள் மற்றும் கூட்டாளர்களை மறுபரிசீலனை செய்ய நிர்பந்தித்ததை நான் கண்டிருக்கிறேன். உலகளாவிய சக்திகளிடையே குறைக்கடத்தி தன்னிறைவுக்கான தொடர்ச்சியான உந்துதல் தொழில்நுட்ப போட்டிகள் விநியோகச் சங்கிலிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு.

குறிப்பிட்ட தொழில்நுட்ப சப்ளையர்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள், புவிசார் அரசியல் மாற்றங்களின் அபாயங்களை மதிப்பிட வேண்டும். ஏற்றுமதி தடைகள் அல்லது கட்டுப்பாடுகளால் ஏற்படும் விநியோகச் சங்கிலி இடையூறுகளைத் தவிர்க்க பல வணிகங்கள் பிராந்திய உற்பத்தி வசதிகளில் முதலீடு செய்கின்றன. இந்தப் போக்குகளைப் புறக்கணிப்பவர்கள், கொள்கைகள் மாறும்போது முக்கியமான விநியோகச் சங்கிலிகளிலிருந்து தங்களை வெளியேற்றிக் கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

சுற்றுச்சூழல் கொள்கைகள் விநியோகச் சங்கிலி சரிசெய்தல்களை இயக்குகின்றன

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடுமையாக்குகின்றன, இதனால் வணிகங்கள் தங்கள் விநியோகச் சங்கிலி உத்திகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. புதிய கார்பன் உமிழ்வு கொள்கைகளுக்கு இணங்க, தங்கள் தளவாடங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை மாற்றியமைக்க வேண்டிய நிறுவனங்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். இந்த விதிமுறைகள் போக்குவரத்து மற்றும் தாக்க ஆதாரங்கள், பேக்கேஜிங் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை பாதிக்கின்றன.

தொலைநோக்குப் பார்வை கொண்ட வணிகங்கள், விதிமுறைகள் தங்கள் கையை வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தக் காத்திருப்பதற்குப் பதிலாக, நிலையான விநியோகச் சங்கிலிகளில் இப்போது முதலீடு செய்கின்றன. தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும், போக்குவரத்தில் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங்கிற்கு மாறும் நிறுவனங்கள், எதிர்கால ஒழுங்குமுறை மாற்றங்களுக்கு முன்னதாகவே தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றன. இந்த மாற்றங்களைத் தாமதப்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிக செலவுகளையும் பின்னர் விநியோகச் சங்கிலி இடையூறுகளையும் எதிர்கொள்கின்றனர்.

உலகளாவிய சுகாதார நெருக்கடிகள் விநியோகச் சங்கிலி பாதிப்புகளை வெளிப்படுத்துகின்றன

சுகாதார நெருக்கடிகள் பாரம்பரிய புவிசார் அரசியல் நிகழ்வுகளாக இல்லாவிட்டாலும் , அவற்றுக்கான அரசாங்க நடவடிக்கைகள் பெரிய விநியோகச் சங்கிலி தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. எல்லை மூடல்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பது பெரும்பாலும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். சுகாதார அவசரநிலைகளின் போது அரசாங்கங்கள் திடீரென மருந்துகள், மருத்துவப் பொருட்கள் அல்லது அத்தியாவசிய மூலப்பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும்போது வணிகங்கள் போராடுவதை நான் கண்டிருக்கிறேன்.

இந்த இடையூறுகளைச் சிறப்பாகச் சமாளிக்கும் நிறுவனங்கள், பன்முகப்படுத்தப்பட்ட சப்ளையர் நெட்வொர்க்குகளைப் பராமரித்து, நிகழ்நேர விநியோகச் சங்கிலி கண்காணிப்பில் முதலீடு செய்கின்றன. முக்கியமான பொருட்களின் மூலோபாய இருப்புக்களை வைத்திருப்பது மற்றும் மாற்று உற்பத்தி ஆதாரங்களை அணுகுவதை உறுதி செய்வது, உலகளாவிய நெருக்கடிகளின் போது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

புவிசார் அரசியல் நிகழ்வுகள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை எவ்வாறு பாதிக்கின்றன?

  • வர்த்தகக் கொள்கைகள்: கட்டணங்களும் கட்டுப்பாடுகளும் செலவுகளை அதிகரிக்கின்றன.

  • அரசியல் உறுதியற்ற தன்மை: மோதல்கள் போக்குவரத்து மற்றும் உற்பத்தியை சீர்குலைக்கின்றன.

  • தடைகள்: சந்தைகள் மற்றும் சப்ளையர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்.

  • வளக் கட்டுப்பாடு: ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பற்றாக்குறையை உருவாக்குகின்றன.

  • தொழில்நுட்பப் போட்டிகள்: விநியோகச் சங்கிலி சார்புகளை மாற்றுதல்.

  • சுற்றுச்சூழல் விதிமுறைகள்: மூலப்பொருட்கள் கொள்முதல் மற்றும் உற்பத்தியில் கட்டாய மாற்றங்களை ஏற்படுத்துதல்.

  • சுகாதார நெருக்கடிகள்: பற்றாக்குறை மற்றும் விநியோகச் சங்கிலி தாமதங்களை ஏற்படுத்துகின்றன.

முடிவில்

புவிசார் அரசியல் அபாயங்கள் நீங்கவில்லை, அவற்றைப் புறக்கணிக்கும் வணிகங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. வர்த்தக மோதல்கள், பிராந்திய மோதல்கள், தடைகள் மற்றும் வளக் கட்டுப்பாடுகள் ஆகியவை உலகளாவிய தளவாடங்களை மறுவடிவமைக்கும். உலகளாவிய முன்னேற்றங்களைக் கண்காணிக்கும், சப்ளையர்களைப் பன்முகப்படுத்தும், மாற்று தளவாட வழிகளைப் பாதுகாக்கும் மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்களுக்கு முன்னால் இருக்கும் நிறுவனங்கள் எப்போதும் வலுவான நிலையில் இருக்கும். புவிசார் அரசியல் அபாயங்களை ஒரு பின்னோக்கிச் சிந்திப்பவர்கள், நெருக்கடிகளுக்கு முன்னால் இருப்பதற்குப் பதிலாக தொடர்ந்து எதிர்வினையாற்றுவதைக் காண்பார்கள். நன்கு தயாரிக்கப்பட்ட விநியோகச் சங்கிலி என்பது எதிர்பாராதவற்றுக்குத் திட்டமிடும் ஒன்றாகும் - ஏனெனில் இன்றைய உலகப் பொருளாதாரத்தில், நிச்சயமற்ற தன்மை மட்டுமே உறுதியானது.

 

"நன்கு தயாரிக்கப்பட்ட விநியோகச் சங்கிலி என்பது எதிர்பாராதவற்றுக்குத் திட்டமிடும் ஒன்றாகும் - ஏனெனில் இன்றைய உலகப் பொருளாதாரத்தில், நிச்சயமற்ற தன்மை மட்டுமே உறுதியானது. Quora இல் என்னுடன் இணைவதன் மூலம் புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நுண்ணறிவுகளுக்கு முன்னால் இருங்கள்."

https://bengordonpalmbeach.com/2025/03/the-impact-of-geopolitical-events-on-global-supply-chains/#:~:text=Global%20supply%20chains%20don't,an%20understanding%20of%20global%20risks.

மேலே கூறிய எனது கருத்துடன் நேரடியாக இந்த கட்டுரை சம்பந்தப்படவில்லை ஆனாலும் இதில் கூறப்பட்ட விடயங்கள் தற்போதய பிரச்சினைகள ஓரளவு பிரதிபலிப்பது போல உணருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-12.jpg?resize=750%2C375&ssl=

வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 32 கியூபர்கள்!

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்காக வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தனது குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஹவானா குறிப்பிட்டுள்ளது.

கியூப அரசாங்க அறிக்கை சில விவரங்களை மட்டுமே அளித்தது.

ஆனால் இறந்தவர்கள் அனைவரும் கியூப ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அது கூறியது.

மதுரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து கியூபா அவருக்கு ஓரளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. 

63 வயதான மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சனிக்கிழமை வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மதுரோ நியூயோர்க் தடுப்பு மையத்தில் திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காத்துள்ளனர்.

https://athavannews.com/2026/1458356

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

நீங்கள் கூறுவது விளங்குகிறது.

உலக பிரச்சனைகளின் ஆணிவேர் பொருளாதாரம் என கருதுகிறேன், இந்த வெனிசுலா பிரச்சினை மற்றும் புதிய உலக ஒழுங்கின் போக்கு கோவிட் கால பாதிப்பு நீட்சியாக இருக்குமோ என கருதுகிறேன்.

கோவிட் காலத்தில் இருந்ததனை போல வழங்கல் சங்கிலியில் மிக பெரிய இடையுறு தற்போதுதான் உள்ளது, தற்பொதய முயற்சிகள் ஒரு தன்னிறைவு பிராந்திய பொருளாதாரத்தினை மையமாக மாற்றம் ஏற்படுவது போல உணருகிறேன்.

அமெரிக்க பொருளாதார நெருக்கடி; அமெரிக்க பாதுகாப்பு செலவீடுகளை மட்டுப்படுத்துகிறது, இது சேத கட்டுப்பாடு நடவடிக்கையாக இருக்குமா?

முன்னரை போல அமெரிக்க பாதுகாப்பிற்கு அமெரிக்காவினால் செலவிடமுடியாது என கருதுகிறேன்.

இது ஒரு தவிர்க்கமுடியாத கால மாற்றம், அதற்கு சில கடந்த கால கொள்கைகளும் காரணமாகிறது என கருதுகிறேன்.

நான் மேலே கூறியவை யாவும் எடுகோள்களே.

செய்திக்கு அப்பால் சென்று, என்ன நடக்கிறது என்பதை உய்துணர முயலும் முயற்சி மட்டுமே.

இப்படித்தான் நடக்கிறது என்றால்…

இந்த சங்கியிலின் ஓரங்கமாகவே நான் டிரம்பின் முதலாவது தேர்தல், பிரெக்சிற், கொவிட் உருவாக்கம், டிரம்பின் 2ம் தேர்வு ஆகியவற்றை காண்கிறேன்.

பிகு

இவை 100% சதிகோட்பாட்டு என புறம்தள்ள தக்க கருத்துக்கள் என்பதை முழுதாக ஏற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

608423318_1551588966365325_3170084520305

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெனிசுலாவில் அரங்கேறி வரும் அமெரிக்காவின் அதே "கடத்தல்" தந்திரம், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் ஒரு மண்ணில் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. அந்த வரலாற்றுப் பாடத்தின் பெயர்: 'Mogadishu War' (1993).

1993-ல் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில் தலையிட்ட அமெரிக்கா, அங்கிருந்த முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டது. இதற்காக உலகின் மிகச்சிறந்த படைப்பிரிவாகக் கருதப்படும் Delta Force மற்றும் Rangers களமிறக்கப்பட்டனர். 

நவீன ஆயுதங்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் என ஒரு சினிமா பாணியில் அந்தத் தாக்குதல் தொடங்கியது.

அமெரிக்காவின் கர்வத்தை உடைக்கும் விதமாக, சோமாலிய வீரர்கள் எளிய ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவின் பெருமைமிகு இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தினர். 

வானில் பறந்த அந்த இரும்புப் பறவைகள் மண்ணில் சரிந்தபோது, அமெரிக்காவின் திட்டமும் சுக்குநூறானது.

ஒரு சில மணிநேரங்களில் முடியும் என்று நினைத்த அந்த நடவடிக்கை, 15 மணிநேரக் கொடூரப் போராக மாறியது.

அடி என்றால் அப்படி ஒரு அடி…கனவிலும் கூட அப்படி ஒரு அடிவிழும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்… அந்த எதிர்த்தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 73-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மிக முக்கியமாக, உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மொக்டிஷோ நகரின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டன.

உலகமே தொலைக்காட்சியில் பார்த்த அந்த காட்சிகள், அமெரிக்காவின் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரியானது. 

ஒரு வல்லரசின் அராஜகம், வீரமும் விசுவாசமும் நிறைந்த ஒரு எளிய தேசத்தின் முன்னால் எப்படிப் பாழாகிப் போகும் என்பதற்கு இதுவே சாட்சி.

இந்த வரலாற்று அவமானத்திற்குப் பிறகு, சோமாலியா பக்கம் எட்டிப் பார்க்கவே அமெரிக்கா நீண்ட காலம் அஞ்சியது. 

இன்று வெனிசுலாவில் நடக்கும் அதிகார ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் அதே போன்ற ஒரு 'வெற்றி' கிடைக்கும் என அமெரிக்கா கணக்குப் போடலாம். 

ஆனால், வரலாறு எப்போதும் ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது: "மண்ணின் மைந்தர்களின் வீரம், எந்த நவீன ஆயுதத்தையும் விட வலிமையானது."

(குறிப்பு: இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் புகழ்பெற்ற 'Black Hawk Down' திரைப்படம் எடுக்கப்பட்டது)

  • email

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.