Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஒரு எடுகோளுக்கு, ஐலண்ட் இஸ்லாமியராகவே இருக்கட்டும் (எவருக்கும் அவரது இன அடையாளம் தெரியாது என்பதே உண்மை). இப்படி ஒரு இனவாதக் கருத்து? அதற்கு பல விருப்பக் குறிகள் வேற!

இது போன்ற கருத்துக்களை உங்களைப் போன்றோரே வெளியிடும் போது தான், "குதிரைக்கு கடவுள் கொம்பு கொடுக்காதது அதன் குணம் அறிந்து தான்!" என்ற சொலவடை பொருத்தமாகத் தெரிகிறது😂!

கோடாரி காம்பு மரத்திலிருந்து வருவது, ஒரு மரம் இன்னொரு மரத்தினை வெட்ட பயன்படுத்தப்படுகிறது என்பதனை குறிப்பதாலேயே அவ்வாறான சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது, ஆதாவது துரோகம் என்பதான பொருளில்.

  • Replies 144
  • Views 6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இதுவும் நீங்கள் நம்பக்கூடியதுதான். ஆனால், புலிகளுக்கெதிரான உங்களது நிலைப்பாட்டில் இருந்து சற்று வெளியே வந்து, (அதாவது 2009 இற்கு முன்னர் நீங்கள் இருந்த நிலைப்பாடு) இதனைச் சிந்தித்தீர்கள் என்றால், புலி

  • ஒரு எடுகோளுக்கு, ஐலண்ட் இஸ்லாமியராகவே இருக்கட்டும் (எவருக்கும் அவரது இன அடையாளம் தெரியாது என்பதே உண்மை). இப்படி ஒரு இனவாதக் கருத்து? அதற்கு பல விருப்பக் குறிகள் வேற! இது போன்ற கருத்துக்களை உங்களைப்

  • நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ

  • கருத்துக்கள உறவுகள்

மிக தெளிவாக நடந்ததை பேசியுள்ளார்.

இதுதான் உண்மை என்பதை யாரும் மறுத்தால் அவர்களுக்கு மேல்வீடு பிழை என்றுதான் கருதலாம்.

ஆனால் இதை இப்படி தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் தலைவர் என சம்பந்தன் பாராளுமன்றில் பேசியிருக்க தேவையில்லை.

எமது அழுக்குத்துணியை பொதுவில் கழுவ அல்ல அவர் தெரிவுசெய்யப்பட்டார். அது எம் போன்ற கருத்தாளரின் வேலை.

அவர் புலிகளும் தவறிழைத்தனர் ஆனால் அதனால் மட்டும் தமிழரிகளின் நியாயமான போராட்டம் பயங்கரவாதம் என்றாகாது என இதை சொல்லி இருக்க வேண்டும்.

சம்பந்தன், சுமந்திரன் இருவரும் வக்கீல்கள் ஆனால் தம் brief என்ன என்பதில் இருவருக்கும் சிந்தனை தெளிவு இல்லை:

நாம் மேலும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

சம்பந்தரோ, வேறு எந்த கூட்டமைப்பு அரசியல்வாதியுமோ, அவர்களின் தவறுகளை மறுதலித்து அவர்களுக்கு வெள்ளை அடிக்கும் அளவுக்கு புலி ஆதரவாளர் அல்ல.

அவர்களை ஒரு காலத்தில் புலிகள் வேட்டையாடினார்கள்.

புலிகளும் இவர்களும் ஒரே நேர்கோட்டில் வந்தது பல வேறுபாடுகளை, குறிப்பாக கொள்கை வேறுபாடுகளை புறம்தள்ளியே.

என்னால் கூட புலிகளின் பல செயல்களை ஆதரிக்க, நியாயப்படுத்த முடியாது.

எனவே இப்படியான அரசியல்வாதிகளிடம் விசுகு அண்ணாவிடம் இருக்கும் புலி பக்தியை எதிர்பார்க்க முடியாது.

சுரேஸ் போன்ற கள்ளர்கள் அமசடக்கியாய் இருப்பார்கள்.

சம், சும் உளறிகொட்டுவார்கள்.

கஜன்ஸ் விசுகு அண்ணா ரேஞ்சுக்கு இறங்கி பக்தியை காட்டி வாக்கை அள்ளுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, vasee said:

கோடாரி காம்பு மரத்திலிருந்து வருவது, ஒரு மரம் இன்னொரு மரத்தினை வெட்ட பயன்படுத்தப்படுகிறது என்பதனை குறிப்பதாலேயே அவ்வாறான சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது, ஆதாவது துரோகம் என்பதான பொருளில்.

🤣 தென்கச்சி கோ சுவாமிநாதன் மாதிரி "இன்று ஒரு தகவலா? அல்லது, "இந்த எளிமையான விளக்கம் இல்லாமையால் நான் அவர்களைக் கண்டித்து விட்டேன்" என்கிறீர்களா😂?

"ஐலண்ட் இஸ்லாமியர்" என்றும் திட்டுகிறார்கள். இதன் அர்த்தம் அவர் தமிழினம் அல்லாத வேற்றினம் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். பிறகெப்படி இஸ்லாமியரும் தமிழரும் ஒரே மரத்தில் இருந்து வருவதாம்?

அடிப்படையான விடயம் என்னவென்றால், நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாமல் மூலைக்குள் மாட்டுப் படும் போது, இது போன்ற வசவுகள் தான் ஒரே வழி!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

அப்படியான அர்த்தத்தில் ரஞ்சித் கூறியிருந்தால் அது நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டும், அவ்வாறானால் அதனை நீங்கள் சரியாக கையாண்டுள்ளதாகவே கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

2009 போர் அழிவின் பின்னர் உருவான மிக சிறிய கால இடைவெளிகொண்ட (2009 - 2012) வாய்ப்பான காலகட்டத்தினை தவறவிட்ட நிகழ்வு எதனால் நிகழ்ந்தது?

வரலாற்றில் இவ்வாறான குறுகிய காலகட்ட அரசியல் சூழ்நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தம்து உரிமைகளை வென்றேடுத்த வரலாறு பல உள்ளது.

அந்த குறுகிய காலகட்ட நிலையில் இலங்கை அரசின் மேல் அழுத்தம் செய்ய ஏதுவான (Leverage) நினை இருந்தது, புலிகளுக்கு பின்னரான காலகட்டத்தில் இருந்த ஒரு வாய்ப்பு அது, அதனை சரியாக எமது தமிழ் ஆரசியல்வாதிகள் சரியாக பயன்படுத்த தவறியது மட்டுமல்லாமல் அரசிற்கு சர்வதேச அளவில் இருந்த நெருக்கடியில் இருந்து மீள உதவியதன் மூலம் தமக்கிருந்த வாய்ப்பை தெரிந்தோ தெரியாமலோ இழப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமாக இருந்தார்கள்.

சிங்கள அரசினை தாம் நம்புவதாக கூறி ஏமாந்தார்கள்.

இதில் புலம்பெயர் தரப்பும் தமது பங்கிற்கு நீதி முக்கியம் அரசியல் அதிகாரம் அப்புறம் எனும் போக்கிலே தவறான பாதையில் சென்ற நிலை காணப்பட்டது.

இனிமேல் அப்படி ஒரு வாய்ப்பு (2009 - 2012 இல் இருந்த்தனை போல) வராது என்றே கருதுகிறேன்.

தற்போதும் புலம் பெயர் அமைப்புக்கள் தமிழ் மக்களின் அதிகார பரவலாக்கலுக்கு ஏதுவான சூழலை உருவாக்கக்கூடிய வாய்ப்புக்களை தவறாக பயன்படுத்துகின்றன, அதே நேரம் இலங்கையிலுள்ள ஊழல் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதனை நீர்த்து போக செய்கிறார்கள், இன்னொரு தரப்பு பேட்டிகளில் நன்றாக பேசினாலும் நடைமுறையில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக கட்சிகளை பிரித்து பலவீனமாக்குகிறார்கள், தற்போது இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை, மாறாக தீமைகளையே செய்கிறார்கள்.

இது கொஞ்சம் ஓவர் 😂.

அப்படி ஒரு வாய்ப்பான ஏது நிலையும் இருக்கவில்லை.

மாறாக இப்போ இருப்பதை போன்ற உத்திகள், பலம் ஏதுமற்ற ஒரு கையறுநிலையில் தமிழினத்தை நிறுத்திவிட்டுத்தான் 2009 ஆயுத மெளனிப்பு நடந்தது.

இப்படி தோசையை பிரட்டி போட்டு, வரலாற்றை மாற்றி எழுதி எம்மை நாமே பேய்க்காட்டுவதால் மேலும் அழிவே மிஞ்சும்.

தவிரவும் கூட்டமைப்போ வேறு எவருமோ இலங்கையை நம்புகிறோம் என சொல்லவில்லை.

ஜெனிவாவில் தமிழர் தரப்பு ஒட்டு மொத்தமாக வெளியக விசாரணை கோரிய போது, நாடுகள் உள்ளக விசாரணைக்கு இலங்கைக்கு காலம் கொடுத்தன.

அதை கூட்டமைப்பு ஏற்காமல் விட்டிருக்கலாம். அப்படி செய்தால் கஜன் போல் யாரும் சீண்டாத நாறல் மீன் போல் ஆகி இருக்கும் அவர்கள் நிலையும்.

புலிகள் இந்தியா, சர்வதேச சமூகத்தை பகைத்தது போல் நாமும் நடக்ககூடாது என கூட்டமைப்பு பதுங்கி நடக்க…

ஆனால் அதிலும் சிங்கள இராஜதந்திரமே ஈற்றில் வென்றது.

செலென்ஸ்கியை போல் ஒரு இராஜதந்திரி நமக்கு வாய்க்கவில்லை.

அப்படி ஒருவர் 1948 க்கு பின் இருக்கவும் இல்லை. ஒருவேளை முழுச்சுதந்திரம் கொடுத்திருப்பின் பாலா அண்ணை இப்படி வந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் கூட்டாட்சி பற்றி கூறவில்லை, காணி, காவல், நிதி, நீதி போன்ற அதிக அதிகாரங்கள் கொண்ட 13+ போன்ற தீர்வு சம்பந்தமாகவே, நீங்கள் கூறுவது 2009 பின்னர் கூட்டாட்சி போன்ற தீர்வுகள் சாத்தியமில்லை.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

நான் கூட்டாட்சி பற்றி கூறவில்லை, காணி, காவல், நிதி, நீதி போன்ற அதிக அதிகாரங்கள் கொண்ட 13+ போன்ற தீர்வு சம்பந்தமாகவே, நீங்கள் கூறுவது 2009 பின்னர் கூட்டாட்சி போன்ற தீர்வுகள் சாத்தியமில்லை.

2009-2012 இல் இப்போதைக்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை தரும் 13 ஐ முழுமையாக அமல் படுத்த கோரலாம் என கூறியோரை புலம்பெயர் புஸ்வாணங்கள் துரோகி என கூறி திரத்தி அடித்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கூட யாழில் ஒரு திரி ஓடியது.

இப்போதும் 1987 இல் நாம் ஒரு அரிய சந்தர்பத்தை இழந்தோம் என எத்தனை ஆட்களை யாழில் ஒத்து கொள்ள வைப்பீர்கள்.

நானும், ஜஸ்டீன் அண்ணா, ஐலன்டும்தான் கை உயர்த்துவோம்😂. ரசோ அண்ணாவும் சேரக்கூடும்.

1990களில் இல் TNL ஒரு விவாவத்தில் SL Gunasekara குமார் பொன்னரிடம் சொன்னார்:

வரலாற்றில் எப்போதும் நீங்கள் முடியாததை கேட்டு, முடியுமானதையும் இழக்கும் கூட்டம் என.

விகிதாசார பிரதிநிதிதுவம் கேட்க வேண்டிய போது, 50:50 உரிமை கேட்டீர்கள், மாவட்ட சபை கோர வேண்டிய போது, மாகாண சபை கோரினீர்கள், மாகாண சபை கிடைத்த போது தனி நாடே தீர்வென்றீர்கள்.

இப்படி முட்டாள்தனமாக இருந்தால் உங்களுக்கு எதுவும் கிடையாது என.

கடைசியில் அந்த இனவாதி கூற்றே நிஜமானது.

இப்போ நாமே அனுரவுக்கு காவடி எடுக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அந்த நிலையில் முன்னர் நானும் இருந்துள்ளேன்,

நான் நினைக்கிறேன் புலம் பெயர் தமிழர்கள் நிலமையினை சரியாக உள்வாங்கவில்லை, இதே சமகாலத்தில் ஆச்சே விடுதலை போராட்டத்துடன் ஒப்பிடும் போது சில பல வேறுபாடுகள் இரு தரப்பிற்கும் வெவ்வேறு சாதக பாதகங்களை கொண்டுள்ளது ஆனால் அவர்கள் ஒற்றுமையாக அனைத்து விடயங்களை கடந்து போனார்கள்.

எமக்கும் எதிர்காலத்தில் அப்படி ஒரு சாதகமான நிலை வரும் போது சாத்தியமான விடயங்கள் பற்றிய புரிதல் ஏற்பட்டிருந்தால் அனைவரும் ஒரே திசையில் பயணிக்க இலகுவாக இருக்கும்.

இந்த உரையாடல்கள் அதற்கான வாய்ப்பினை நிச்சயமாக உருவாக்கும் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

இந்த உரையாடல்கள் அதற்கான வாய்ப்பினை நிச்சயமாக உருவாக்கும் என நம்புகிறேன்.

உங்கள் அசாத்திய தைரியத்துக்கு வாழ்த்து😂.

யாழ்களத்திலேயே அர்ஜூன், ஜூட், துல்பென், ஜீவன் என இப்படி வாய்ப்பை உருவாக்க முனைந்து, பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட வைக்கப்பட்டோர் பலர் 😂.

அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்காத, நவீனன் சும்மா சங்ககாராவை அவதாரில் வைத்தமைக்காக கூட்டமாக கூடி கொத்தி கலைக்கப்பட்டார்.

இப்போ ஐலண்டுக்கு சுன்னத் டெஸ்ட் நடக்கிறது 😂.

உண்மையில் இங்கே நாதம், நியாயம், கொழும்பான் தாம் முஸ்லிம்கள் என சொல்லி எழுதும் நிலை இருக்க வேண்டும்?

ஆனால் தாதாக்களுக்கு பயந்து அவர்களும் தமிழர் என்பது போல் எழுதுகிறார்கள்.

நிலமை இப்படி இருக்கும் போது, ஒற்றுமையாவது, ஒரே திசையாவது, ஹைகோர்ட்டாவது என்பதுதான் என் மதிப்பீடு😂.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இப்படிப்பட்டவர் ஒரு அரசியல் ஞானியாக இருந்திருக்க வேண்டும். 2009 முள்ளிவாய்கால் அழிவோடு விடாப்பிடியாக சர்வதேசங்களோடு இணைந்து அல்லது அவர்களை வற்புறுத்தி தமிழர்களுக்குரிய உரிமைகளை அரசியல்,பேச்சுவார்த்தை ரீதியாக போராடி பெற்றிருக்க வேண்டும். புலிகளுக்கு பின்னர் கிடைத்த மாபெரும் அரசியல் பாக்கியம் அந்த நேரம். அதை செய்யாமல்.......

சிங்கள கொடியை தூக்கி ஆட்டினதுதான் மிச்சம்.😡

அவரை விட பெரிய அரசியல் ஞானியான நீங்கள் 2025 இல் “அனுரவை அனுசரித்து போவதை தவிர வேறு வழியில்லை” என்ற முடிவுக்கும்….

2022 இல் “ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தன் பிராந்திய பாதுகாப்பு கருதி நடந்து கொண்டது சரிதான்” என்ற முடிவுக்கு வரவில்லையா?

நீங்கள் காலம் தாழ்த்தி வந்த இடத்துக்கு சம்பந்தர் 2009 மேயிலேயே வந்திருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்காத, நவீனன் சும்மா சங்ககாராவை அவதாரில் வைத்தமைக்காக கூட்டமாக கூடி கொத்தி கலைக்கப்பட்டார்.

இவர் கட்டுரை ஒன்ற சமீபத்தில் யாழ்களத்தில் கண்டேன் ஏன் இவர் இப்போது எழுதுவது இல்லை என்று நினைத்தேன் இப்போது விளங்கியது 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, island said:

என்ன சொல்கின்றீர்கள்? சம்பந்தர் அரசியல் சூட்சும்ம் நினைந்தவர், அரசியல் ஞானி என்றெல்லாம் புகழ்ந்து தறள்ளியுள்ளீர்கள். 2002 ல் புலிகள் அப்படிச் சொல்லவில்லை. அவர்கள் கூறியது, “இவையள் தனித்து எதுவும் செய்ய முடியாது. அதற்கான தகுதி புலிகளுக்கு மட்டுமே உள்ளது. தாங்கள் சொல்லுறத கேட்டு பாராளுமன்றதமில சொல்லுறத்துக்கு மட்டும் தான் இவயள நாங்கள் வைச்சிருக்கிறம்.” இவ்வாறு பகீரங்கமாக பத்திரிகையாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதாவது நீங்கள் கூறிய அரசியல் ஞானியை புலிகள் தாங்கள் சொன்னதை அப்படியே சொல்லும் பியோனாக தான் வைத்திருந்துள்ளார்கள். சுப்பர் பவர் இருந்த புலிகளாலேயே எதையும் சாதிக்க முடியாத போது ஒரு பியோனால் அதை செய்திருக்க முடிந்திருக்கும் என்று நினைக்கின்றீர்களா?

நான் சம்பந்தனை புகழவில்லை. மாறாக 2009 அழிவிற்கு பின்னர் சகல தகுதியுமுடையவராக ஈழத்தமிழர் தரப்பில் சம்பந்தன் மட்டுமே இருந்தார்.இனக்கலவரங்கள் தொடக்கம் சகல அழிவு அனுபவங்களை பெற்ற முதுபெரும் அரசியல்வாதியாக சம்பந்தன் இருந்தார். வெளிநாட்டு ராஜதந்திரிகள் கூட சம்பந்தனை மட்டுமே தமிழ் தரப்பு அரசியல் தலைமைப்பீடமாக கருதி சந்திப்புக்களை/பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

உண்மையில் கோட்டையை தவறவிட்டவர் சம்பந்தன் மட்டுமே.

10 hours ago, island said:

இறுதிப் போரை தடுத்து நிறுத்தி மக்களை காக்கும. செயலை செய்யக்கூடய வல்லமை புலிகளுக்கு மட்டுமே இருந்தது. அதை அவர்கள் உரிய நேரத்தில் செய்யவில்லை. 2009 ஜனவரிக்கு பிறகு சம்பந்தர் என்ன பாலசிங்கம் உயிரோடு இருந்திருந்தாலும் அது முடிந்து இருக்காது என்பது இயல்பான பொது அறிவு உடையவர்கள். அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் நவரத்தினம் என்ன புசத்தினாலும் வன்னி மைந்தன் என்ன புசத்தினலும் பொது அறிவு உள்ள மக்கள் இந்த புசத்தலை நம்பப் போவதில்லை. பொது அறிவு இல்லாதவர்களையே அவர்களால் ஏமாற்ற முடியும். புலிகளல் முடியாததை சம்பந்தர் தலைகீழாக நடந்தாலும் முடிந்திருக்காது.

ஆயுத போராட்டத்தை கைவிட்டு இணக்க அரசியல் செய்த கும்பல்களாலும் இன்றுவரை எதுவுமே செய்யமுடியவில்லை என்பதை கவனத்தில் எடுப்பீர்களாக.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நான் சம்பந்தனை புகழவில்லை. மாறாக 2009 அழிவிற்கு பின்னர் சகல தகுதியுமுடையவராக ஈழத்தமிழர் தரப்பில் சம்பந்தன் மட்டுமே இருந்தார்.இனக்கலவரங்கள் தொடக்கம் சகல அழிவு அனுபவங்களை பெற்ற முதுபெரும் அரசியல்வாதியாக சம்பந்தன் இருந்தார். வெளிநாட்டு ராஜதந்திரிகள் கூட சம்பந்தனை மட்டுமே தமிழ் தரப்பு அரசியல் தலைமைப்பீடமாக கருதி சந்திப்புக்களை/பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

உண்மையில் கோட்டையை தவறவிட்டவர் சம்பந்தன் மட்டுமே.

ஆயுத போராட்டத்தை கைவிட்டு இணக்க அரசியல் செய்த கும்பல்களாலும் இன்றுவரை எதுவுமே செய்யமுடியவில்லை என்பதை கவனத்தில் எடுப்பீர்களாக.

2009 ஆரம்பத்தில் இருந்தே இணைத்தலைமை நாடுகள் உட்பட உலக நாடுகள் எல்லாமே பலதடவைகள் கேட்டது, புலிகள் ஆயுதங்களை கையளித்து உடனடியாக பேச்சுவார்ததைக்கு திரும்புவது மட்டுமே பாரிய மக்கள் அழிவை தடுக்கும் வழி என்பதையே. அது சரியா பிழையா என்பதற்கப்பால் இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் இதையே தொடர்ந்து வலியுறுத்தின அதை மேற் கொள்ள புலிகள் தயாராக இல்லாதபோது உங்கள் சம்பந்தர் என்ன எவர் என்னதான் சூட்சுமத்தை கையாண்டாலும் யுத்தம் நிறுத்தப்பட்டிருக்காது என்பதை புரிந்து கொள்ள அது ஒன்றும் சிக்கலான விடயம் அல்ல.

சம்பந்தரின் தரகு இல்லாமலேயே புலிகளால் இதை நேரடியாகச் செய்திருக்க முடியும். நாம் ஆயுதங்களை நிரந்தரமாக கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்ப தயார் என ஒரு பகீரங்க அறிக்கையை புலிகள் விட்டிருந்தாலேயே போதும் யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் சாதாரண மக்கள் எல்லாம் இராப்பகலாக தமது உறவுகளை காப்பாற்ற ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்தாலும், அந்த ஆர்பாட்டங்களை ஒழுங்கு செய்த புலிகளின பிரதிநிதிகள் அந்த ஆர்பாட்டங்களை மக்களின் ஆர்பாட்டங்களாக காட்டாமல் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் என்ற தோற்றபாட்டையே சர்வதேசத்திற்கு காண்பித்திருந்ததையும் இங்கு நினைவிற் கொள்க. இத்தனை தவறுகளும் சேர்த்தே மக்களை அழித்திருக்க நீங்களோ முழுப்பழியையும் சம்பந்தர் என்ற தனி நபர் மீது போட்டு பொறுப்பானவர்களை காப்பாற்ற முயற்சி செய்கின்றீர்கள்.

ஆயுதங்களை ஒப்படைக்க கேட்பதும் ஆயுத போரை கைவிடுமாறு கேட்டதும் நியாயமற்ற கோரிக்கை இனத்தின் தன்மானப்பிரச்சனை என்றும், அப்படி செய்ய முடியாது என்று நீங்கள் கூறுவீர்களானால், கடைசியில் மே மாதம் அதை தானே செய்தீர்கள். அதை ஜனவரியில் செய்திருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

லாம் லாம் லாம் .....

ஆனால் உண்மை என்னவென்று கடைசிவரை நின்றவன் சொல்லணும். அவர்கள் எவரும் அவ்வாறு இதுவரை சொன்னதில்லை. இனியும் இல்லை. ஏனெனில் சிங்களம் தன்னை மாற்றிக் கொள்ளாது. மாற்றவும் போவதில்லை. ஒன்றாக சாகலாம் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கப்படலாம். நேற்றைய ஊர்வலம் சொல்லும் செய்தியும் அது தான். டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

உண்மையில் கோட்டையை தவறவிட்டவர் சம்பந்தன் மட்டுமே

இன்னும் 11 மாதம் இருந்தாலும் இதை இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக நான் முன்மொழிகிறேன்.

2009 மேயில் சம்பந்தரிடமோ அல்லது வேறு எந்த ஈழ தமிழரிடமோ..,

கோட்டையும் இருக்க வில்லை…

ஒரு.. கொ….கொத்தளமும் இருக்கவில்லை.

நாம் பலமாக இருந்தது 1983-2009 வரை மட்டுமே.

பங்கு வர்தகத்தில் exit strategy என்பார்கள்.

பங்குகளிம் விலை கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் வாங்கிய விலைக்கு கீழேயும் போய் விடும்.

நல்ல exit strategy இருப்பவர்கள், பங்குகள் விலை கட்டம் கட்டமாக கூடும் போது, கட்டம் கட்டமக குறித்தளவு பங்குகளை விற்று நல்ல இலாபத்தை நிரந்தரமாக்கி கொள்வார்கள்.

மிகவும் பேராசை உள்ளோர், அல்லது அதீத தன்னம்பிக்கை உள்ளோர் - பங்குகள் எப்போதும் விலை கூடிக்கொண்டே இருக்கும் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்பவைத்து - கடைசி வரை எந்த பங்கையிம் விற்காமல், சின்ன இலாபத்தை கூட நிரந்தரமாக்காமல் - கம்பெனி திவாலாகும் போது போட்ட முதலீடு அனைத்தையும் இழப்பார்கள்.

ஒரு இனமாக நாம் வாங்கிய பங்குகள் 1983 - 2005 டிசம்பர் வரை ஏறுமுகமாகின.

இந்த காலகட்டத்தில் கொஞ்சம் இலாபத்தை நிரந்தரமாக்கி கொண்டு, மேலும் முன்னேற சில exit points வந்து போயின.

ஆனால் - எமது exit strategy யோ பங்கு விலை கூடி கொண்டே போகும், அது சாத்தியமில்லாத உச்ச புள்ளியை (தமிழ் ஈழம்) அடையும் மட்டும் நாம் ஒரு பங்கைதானும் விற்பதில்லை என்பதாக இருந்தது.

ஆனால் நாம் நினைத்த உச்ச புள்ளியை பங்கு விலை அடைய முன்பே, நாம் பங்குகளை வாங்கிய கம்பெனி (போராட்டம்) திவாலாகி விட்டது.

இப்படி திவாலாகி விட்ட கம்பெனியில் அதிக பங்குகளை வைத்திருந்த்த ஒரு ஐந்து சதம் பெறுமதியில்லாத portfolio வைத்தான் மே 2009 இல் சம்பந்தர் பொறுப்பெடுத்தார்.

பிகு

அப்படி ஒரு நாசமாய் போன portfolio வை உலக தமிழரை இணத்து மீட்க சம்பந்தர் வினைதிறனாக செயல்படவில்லை, கதிரை அரசியல் செய்யார் என்றால் - அது நியாயம்.

Portfolio வையே 2000-2009 வரை சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாக்கி வைக்கப்பட்டிருந்த சம்பந்தர்தான் போட்டடித்தார் என்பது நகைப்புக்கிடமானதும், உண்மைக்கு புறம்பானதும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

The great explanation. சிக்கலான விடயங்களை மற்றயவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் கூறும் திறமையில் உங்களுக்கு நிகர் நீங்களே என்று கூறுமளவுக்கு பொருத்தமான உதாரணங்களுடன் தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி . இதைக் கூட புரியவில்லை என்று கூறுபவர்கள் நடிகர் திலகங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இன்னும் 11 மாதம் இருந்தாலும் இதை இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக நான் முன்மொழிகிறேன்.

2009 மேயில் சம்பந்தரிடமோ அல்லது வேறு எந்த ஈழ தமிழரிடமோ..,

கோட்டையும் இருக்க வில்லை…

ஒரு.. கொ….கொத்தளமும் இருக்கவில்லை.

நாம் பலமாக இருந்தது 1983-2009 வரை மட்டுமே.

பங்கு வர்தகத்தில் exit strategy என்பார்கள்.

பங்குகளிம் விலை கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் வாங்கிய விலைக்கு கீழேயும் போய் விடும்.

நல்ல exit strategy இருப்பவர்கள், பங்குகள் விலை கட்டம் கட்டமாக கூடும் போது, கட்டம் கட்டமக குறித்தளவு பங்குகளை விற்று நல்ல இலாபத்தை நிரந்தரமாக்கி கொள்வார்கள்.

மிகவும் பேராசை உள்ளோர், அல்லது அதீத தன்னம்பிக்கை உள்ளோர் - பங்குகள் எப்போதும் விலை கூடிக்கொண்டே இருக்கும் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்பவைத்து - கடைசி வரை எந்த பங்கையிம் விற்காமல், சின்ன இலாபத்தை கூட நிரந்தரமாக்காமல் - கம்பெனி திவாலாகும் போது போட்ட முதலீடு அனைத்தையும் இழப்பார்கள்.

ஒரு இனமாக நாம் வாங்கிய பங்குகள் 1983 - 2005 டிசம்பர் வரை ஏறுமுகமாகின.

இந்த காலகட்டத்தில் கொஞ்சம் இலாபத்தை நிரந்தரமாக்கி கொண்டு, மேலும் முன்னேற சில exit points வந்து போயின.

ஆனால் - எமது exit strategy யோ பங்கு விலை கூடி கொண்டே போகும், அது சாத்தியமில்லாத உச்ச புள்ளியை (தமிழ் ஈழம்) அடையும் மட்டும் நாம் ஒரு பங்கைதானும் விற்பதில்லை என்பதாக இருந்தது.

ஆனால் நாம் நினைத்த உச்ச புள்ளியை பங்கு விலை அடைய முன்பே, நாம் பங்குகளை வாங்கிய கம்பெனி (போராட்டம்) திவாலாகி விட்டது.

இப்படி திவாலாகி விட்ட கம்பெனியில் அதிக பங்குகளை வைத்திருந்த்த ஒரு ஐந்து சதம் பெறுமதியில்லாத portfolio வைத்தான் மே 2009 இல் சம்பந்தர் பொறுப்பெடுத்தார்.

பிகு

அப்படி ஒரு நாசமாய் போன portfolio வை உலக தமிழரை இணத்து மீட்க சம்பந்தர் வினைதிறனாக செயல்படவில்லை, கதிரை அரசியல் செய்யார் என்றால் - அது நியாயம்.

Portfolio வையே 2000-2009 வரை சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாக்கி வைக்கப்பட்டிருந்த சம்பந்தர்தான் போட்டடித்தார் என்பது நகைப்புக்கிடமானதும், உண்மைக்கு புறம்பானதும்.

சுப்பர் சகோ

சொல்ல வார்த்தைகள் இல்லை

போராட்டத்தை வியாபாரத்துடன் ஒப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அந்த சிறிய லாபத்தை தந்தவுடன் நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குட்டை மறைத்து விட்டீர்கள். ஆகா ஓகோ....

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

சுப்பர் சகோ

சொல்ல வார்த்தைகள் இல்லை

போராட்டத்தை வியாபாரத்துடன் ஒப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அந்த சிறிய லாபத்தை தந்தவுடன் நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குட்டை மறைத்து விட்டீர்கள். ஆகா ஓகோ....

  1. ஓமண்ணை நான் பங்கு வியாபாரத்துடன் போராட்டத்தை வெறும் ஒப்பீடு மட்டுமே செய்தேன்.

    அது ஒன்றும் உலக மகா குற்றம் இல்லை. குறிப்பாக போராட்டத்தையே வியாபாரம் ஆக்கி வயிறு வளர்த்தவர்களே வெள்ளையிம் சொள்ளையிமா வலம் வரும்போது.

  2. சிறிய இலாபம் வரும் போது அதற்குரிய பங்கை விற்றே ஆக வேண்டும். ஆனால் ஒரே நிறுவனத்தில் (போராட்ட முறையில்) முதலிடாமல் வெளியே எடுத்த காசை வேறு நிறுவனங்களில் (போராட்ட முறைகளில்) நாம் முதலிட்டு இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:
  1. ஓமண்ணை நான் பங்கு வியாபாரத்துடன் போராட்டத்தை வெறும் ஒப்பீடு மட்டுமே செய்தேன்.

    அது ஒன்றும் உலக மகா குற்றம் இல்லை. குறிப்பாக போராட்டத்தையே வியாபாரம் ஆக்கி வயிறு வளர்த்தவர்களே வெள்ளையிம் சொள்ளையிமா வலம் வரும்போது.

  2. சிறிய இலாபம் வரும் போது அதற்குரிய பங்கை விற்றே ஆக வேண்டும். ஆனால் ஒரே நிறுவனத்தில் (போராட்ட முறையில்) முதலிடாமல் வெளியே எடுத்த காசை வேறு நிறுவனங்களில் (போராட்ட முறைகளில்) நாம் முதலிட்டு இருக்க வேண்டும்.

நான் போராட்டம் பற்றி பேசினால் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்வது ஒன்றும் புதிதல்லவே.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

நான் போராட்டம் பற்றி பேசினால் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்வது ஒன்றும் புதிதல்லவே.

எல்லாம் முடிந்துவிட்ட பிறகு அதாவது மே மாதம் 12 திகதி கூட பெரும் தொகைப் பணம் தேசியத்தை நேசித்த மக்களை தவறாக வழிநடத்தி உசுப்பேற்றி அவர்கள் பெயரில் வங்கியில் பெறப்பட்டு அந்த மில்லியன் கணக்கான ஈரோ பணம் முதலிடப்பட்டதும் வியாபாரத்தில் தானே. மக்கள் அழிவில் வியாபாரம் செய்தவர்கள் எல்லாம் போராட்டத்தை உபயோகித்து தான் செய்தார்கள். அவர்களை பற்றி பேசினால் அதில் எங்கிருந்து தனிநபர் தாக்குதல் வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விசுகு said:

நான் போராட்டம் பற்றி பேசினால் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்வது ஒன்றும் புதிதல்லவே.

இதில் எங்கே உங்கள் மீதான தனிமனித தாக்குதல் அண்ணை?

போரட்டத்தினை பயன்படுத்தி வயிறு வளர்த்தோர் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2026 at 04:02, vasee said:

அப்படியான அர்த்தத்தில் ரஞ்சித் கூறியிருந்தால் அது நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டும், அவ்வாறானால் அதனை நீங்கள் சரியாக கையாண்டுள்ளதாகவே கருதுகிறேன்.

தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற கருத்துக்கள் அர்த்தமற்றுப் போய் பல தசாப்த்தங்கள் ஆகிவிட்டன. சிங்கள பேரினவாதிகளின் சூழ்ச்சிகளுக்குட்பட்டு விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை பேரினவாதத்தோடு சேர்ந்து அழிக்கத் துணைபோன காலத்திலேயே இந்த "ஒருமரம், இருகிளை" எனும் சப்பைக்கட்டல்கள் அழிந்துபோயின. தனி அடையாளம், தனிப் பிராந்தியம், தனியலகு, தனிக் கலாசாரம் என்று இஸ்லாமியர்கள் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். 90 களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான படுகொலைகளில் முஸ்லீம்களின் பங்களிப்பிற்கு அப்பால், போரின் பின்னரான காலத்தில் வாழைச்சேனையில் ஹிஸ்புள்ளா தலைமையில் இடம்பெற்றுவரும் தமிழ் நில அபகரிப்பு, மன்னாரில் இடம்பெற்ற பதிருதீன் தலைமையிலான நில அபகரிப்பு, கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் என்பன சொல்லும் செய்தி முஸ்லீமும் தனியான ஒரு இனம், அது தனது நிலப்பரப்பை தமிழர்களை வ‌ஞ்சித்தாவது பெற்றுக்கொள்ளும் என்பதுதான். இன்று இலங்கையில் இருப்பது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று மூன்று இனங்கள் மட்டுமே. அப்படியில்லாமல் முஸ்லீம்களும் தமிழர்கள்தான் என்று இங்கு யாராவது இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களை நீங்களே பேய்க்காட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.

என்னைக் கண்டிப்பதாக ஆளாளுக்கு போட்டிபோட்டு வருபவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் யார் என்னைக் கண்டிப்பதற்கு? நான் சரியென்று நினைப்பதை நான் எழுதுவதற்கு உங்களின் அனுமதியோ அல்லது அனுசரணையோ எனக்குத் தேவையில்லை.

இத்திரியில் இன்னொருவருக்கு எழுதிய கருத்தில் தானாகப் புகுந்து, எனது கருத்தை கேலியாக விமர்சித்ததற்காகவே அந்த நபருக்கு நான் ப‌தில் எழுதினேன். இத்தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசியத்தை (புலிகளை மட்டுமல்ல, தந்தை செல்வாவிலிருந்து, தமிழரசுக் கட்சியிலிருந்த அனைவரையும் "யாழ்ப்பாணிகள்" என்று விளித்து) கடுமையாக விமர்சித்துவரும் வேற்றினத்தைச் சேர்ந்த ஒருவருக்கான எனது பதிலே அது. யாழ் இணையம் தமிழர்களின் விடயங்களை அலசுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. எமது இனத்துடன் சம்பந்தப்படாத, ஆனால் எமதினத்தின் இருப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற இன்னொரு இனத்திலிருந்து ஒருவர் எனது கருத்திற்கு கேலியாக பதில் எழுதும்போது வருகின்ற இயல்பான கோபமே எனது பதிலில் இருப்பது, ஆனால் அதிலிருப்பது உண்மையான தகவல்களே என்பது உங்களுக்குத் தெரியும், ஆனாலும் நீங்கள் போடும் கனவான் வேட‌ங்களை அது பாதிக்கும் என்பதால் என்னை வைகிறீர்கள். நீங்கள் என்னைக் கண்டித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நான் எழுதுவதை மாற்றப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதில் எங்கே உங்கள் மீதான தனிமனித தாக்குதல் அண்ணை?

போரட்டத்தினை பயன்படுத்தி வயிறு வளர்த்தோர் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்.

இங்கே எது பற்றி பேசுகிறோம்???????

2 hours ago, island said:

எல்லாம் முடிந்துவிட்ட பிறகு அதாவது மே மாதம் 12 திகதி கூட பெரும் தொகைப் பணம் தேசியத்தை நேசித்த மக்களை தவறாக வழிநடத்தி உசுப்பேற்றி அவர்கள் பெயரில் வங்கியில் பெறப்பட்டு அந்த மில்லியன் கணக்கான ஈரோ பணம் முதலிடப்பட்டதும் வியாபாரத்தில் தானே. மக்கள் அழிவில் வியாபாரம் செய்தவர்கள் எல்லாம் போராட்டத்தை உபயோகித்து தான் செய்தார்கள். அவர்களை பற்றி பேசினால் அதில் எங்கிருந்து தனிநபர் தாக்குதல் வருகிறது?

உங்களுக்கு அது வர வேண்டியதில்லை. ஏனெனில் கிழிஞ்சு போன கசற் மட்டுமே உங்களிடம் உள்ளது. இதில் பொது அறிவு பற்றி வகுப்பெடுத்தல் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற கருத்துக்கள் அர்த்தமற்றுப் போய் பல தசாப்த்தங்கள் ஆகிவிட்டன. சிங்கள பேரினவாதிகளின் சூழ்ச்சிகளுக்குட்பட்டு விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை பேரினவாதத்தோடு சேர்ந்து அழிக்கத் துணைபோன காலத்திலேயே இந்த "ஒருமரம், இருகிளை" எனும் சப்பைக்கட்டல்கள் அழிந்துபோயின. தனி அடையாளம், தனிப் பிராந்தியம், தனியலகு, தனிக் கலாசாரம் என்று இஸ்லாமியர்கள் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். 90 களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான படுகொலைகளில் முஸ்லீம்களின் பங்களிப்பிற்கு அப்பால், போரின் பின்னரான காலத்தில் வாழைச்சேனையில் ஹிஸ்புள்ளா தலைமையில் இடம்பெற்றுவரும் தமிழ் நில அபகரிப்பு, மன்னாரில் இடம்பெற்ற பதிருதீன் தலைமையிலான நில அபகரிப்பு, கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் என்பன சொல்லும் செய்தி முஸ்லீமும் தனியான ஒரு இனம், அது தனது நிலப்பரப்பை தமிழர்களை வ‌ஞ்சித்தாவது பெற்றுக்கொள்ளும் என்பதுதான். இன்று இலங்கையில் இருப்பது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று மூன்று இனங்கள் மட்டுமே. அப்படியில்லாமல் முஸ்லீம்களும் தமிழர்கள்தான் என்று இங்கு யாராவது இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களை நீங்களே பேய்க்காட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.

என்னைக் கண்டிப்பதாக ஆளாளுக்கு போட்டிபோட்டு வருபவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் யார் என்னைக் கண்டிப்பதற்கு? நான் சரியென்று நினைப்பதை நான் எழுதுவதற்கு உங்களின் அனுமதியோ அல்லது அனுசரணையோ எனக்குத் தேவையில்லை.

இத்திரியில் இன்னொருவருக்கு எழுதிய கருத்தில் தானாகப் புகுந்து, எனது கருத்தை கேலியாக விமர்சித்ததற்காகவே அந்த நபருக்கு நான் ப‌தில் எழுதினேன். இத்தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசியத்தை (புலிகளை மட்டுமல்ல, தந்தை செல்வாவிலிருந்து, தமிழரசுக் கட்சியிலிருந்த அனைவரையும் "யாழ்ப்பாணிகள்" என்று விளித்து) கடுமையாக விமர்சித்துவரும் வேற்றினத்தைச் சேர்ந்த ஒருவருக்கான எனது பதிலே அது. யாழ் இணையம் தமிழர்களின் விடயங்களை அலசுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. எமது இனத்துடன் சம்பந்தப்படாத, ஆனால் எமதினத்தின் இருப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற இன்னொரு இனத்திலிருந்து ஒருவர் எனது கருத்திற்கு கேலியாக பதில் எழுதும்போது வருகின்ற இயல்பான கோபமே எனது பதிலில் இருப்பது, ஆனால் அதிலிருப்பது உண்மையான தகவல்களே என்பது உங்களுக்குத் தெரியும், ஆனாலும் நீங்கள் போடும் கனவான் வேட‌ங்களை அது பாதிக்கும் என்பதால் என்னை வைகிறீர்கள். நீங்கள் என்னைக் கண்டித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நான் எழுதுவதை மாற்றப்போவதில்லை.

ஒருவர் எழுதும் எழுத்தை வைத்து அவரை இனத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் இன்றி, அல்லது வேண்டுமென்றே யாரோ ஒரு அனாமதேயம் பரப்பிய வதந்தியை வைத்து என்னை வேற்று இனம் என்று கதைகட்டி வசைபாடுபவர்களால் எழுதப்படும் ஒருதலைப்பட்ச வரலாறுகள் எவ்வாறான பல வதந்திகளை வைத்து கதை கட்டி இருப்பார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள உங்களது இந்த பதிவு சாட்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே எது பற்றி பேசுகிறோம்???????

சம்பந்தனை அன்றி வேறு எந்த தனிமனிதரையும் பற்றி அல்ல.

போரட்டத்தில் 2009 க்கு பின் தீர்வை அடைய ஒரு அரிய சந்தர்ப்பம் வாய்த்தாதாக இங்கே ஒரு உருட்டு, உருட்டப்பட்டது…

அதை இல்லை என நான் மறுத்து ஒரு வியாபார உதாரணத்தை சொன்னேன்.

அதை ஏதோ பஞ்சமாபாதகம் போல நீங்கள் எழுதினீர்கள்.

அப்படி இல்லை, போராட்டத்தில் வயிறு வளர்தோரே வெட்கம் இல்லாமல் உலாவும் உலகில் இப்படி ஒரு ஒப்பீட்டை செய்வது ஒண்டும் மோசமான செயல் இல்லை என எழுதினேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.