Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நான்/நாம் அப்படியல்ல. எமக்கு என நாம் எம் இனம் என தனிப்பாதையுடன் பயணிக்கின்றோம்

அதுதான் புலிகள் விடயத்தில் இந்தியா நடந்து கொண்டது சரி என எழுதிய போதே உங்கள் தற்போதைய பாதை என்ன என்பதை காட்டி விட்டீர்களே.

அனுர மீதும் கொள்ளை பாசம் இருப்பதை உணர முடிகிறது…

ஆனால் குணா கமல் போல் அதை வார்த்தையில் எழுத முடியாமல் தவிக்கிறீர்கள் என்பதும் புரிகிறது.

5 hours ago, குமாரசாமி said:

அவ்வளவே....பதில் கருத்து எதிர்பார்க்கவில்லை. நன்றி

கேட்டும் கொடார்…சிறியர்

கேட்டதும் கொடுப்பார்…மனிதர்

கேட்காமலே கொடுப்பார்…பெரியர்

வேண்டாம், வேண்டாம் என கதற, கதற கொடுப்பார்…...

Edited by goshan_che

  • Replies 119
  • Views 5.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    இவர்கள் எவரையும் நம்பி தூய்மை, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதம் என்று நாங்களும் சொல்லலாமா............. 'புலி' படத்துக்கு கறுப்பாக வாங்கிய 15 கோடி ரூபாய்களுக்கு வந்த வழக்கில், விஜய் தரப்பு என்

  • ஏராளன்
    ஏராளன்

    செய்தியில் மாற்றிவிட்டேன் அண்ணை.

  • “நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

ஒரு படத்துக்கு இவ்வளவு கோடிகள் வாங்குகின்றேன், அதை எல்லாம் அப்படியே விட்டு விட்டு தமிழ் மக்களை காப்பாற்ற அரசியலுக்கு வந்து இருக்கின்றேன் என்று சொல்லி விட்டு, சொத்து மதிப்பாக 400 அல்லது 500 கோடிகள் கூட காட்டாமல் இருக்க முடியாது தானே.

ஆனால் இவை எல்லாமுமே அவர் அரசியலுக்கு வர முன்பே உழைத்து வரியும் கட்டிய வருமானம்.

ஆகவே இது வருமான வரித்துறைக்கு தெரிந்தே வைத்திருக்கும் சொத்து.

ஒரு தனி நபராக இதை பொதுவெளியில் போட வேண்டிய தேவை இதுவரை இல்லை. இப்போ உள்ளது எனவே வெளியிடுகிறார்.

ஆகவே…

விஜை இதை வேறு வழியில்லாமல் வெளியிடவில்லை.

ஏற்கனவே வரி கட்டி சேர்த்த சொத்தை - இப்போ அனைவருக்கும் தெரியபடுத்துகிறார்.

இதில் அரசியலுக்கு வர முன்பே பானவிடயத்தில் ஒரு தூய்மை, சட்டத்துக்கு கட்டுபட்டு நடந்த விதம் என்பன தெரிகிறன.

விஜைக்கு சம்பளம் கொடுக்கும் ரெட்ஜயண்டின் 21 வயது ஓனரின் பாட்டனும், தகப்பனும்…

சோத்துக்கு வழியில்லை என கணக்கு காட்டுவதும் இதுவும் ஒன்றல்ல:

5 hours ago, ரசோதரன் said:

அம்மாவுக்கு கடன்/முன் பணம் கொடுத்தேன் , அப்பாவுக்கு கடன்/முன் பணம் கொடுத்தேன், சங்கீதாவுக்கு கொடுத்தேன், பிள்ளைகளுக்கு கொடுத்தேன்................... இந்தளவு விளக்கமாக இதுவரை பொதுவெளியியில் பேசிக் கொண்டிருந்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே......................

😂

ஆனால் உலக ஜனநாயகத்தின் தலைமகன் தம்பர் இன்னும் வருமான வரி கணக்கைன்காட்டவில்லைனென நினைக்கிறேன்.

குடும்ப சொத்து விபரமும் அப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

பதில் 1: நீ இப்படி போய் திமுக கூட்டத்தில் கேட்பியா

பதில்2: குடுப்பேன், குடுப்பேன் (எப்படி என்பதுதான் கேள்வி)

கேள்வி கேட்டவரை சீமான் கண் முன்பே நாதக குண்டர்கள் அடக்கி வெளியேற்றுகிறார்கள். பொலிஸ் வந்து அழைத்து போகிறது.

large.IMG_0103.jpeg.c52ce1ee448216b34941

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

அதுதான் புலிகள் விடயத்தில் இந்தியா நடந்து கொண்டது சரி என எழுதிய போதே உங்கள் தற்போதைய பாதை என்ன என்பதை காட்டி விட்டீர்களே.

நான் அப்படி எங்கும் எழுதவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்கவும்.

4 hours ago, goshan_che said:

அனுர மீதும் கொள்ளை பாசம் இருப்பதை உணர முடிகிறது…

ஆனால் குணா கமல் போல் அதை வார்த்தையில் எழுத முடியாமல் தவிக்கிறீர்கள் என்பதும் புரிகிறது.

அந்த அனுர பாசத்தை எப்படி உணர்கின்றீர்கள்?

யார் குணா கமல்? ஓ கமலகாசன் நடித்த குணா திரைப்படத்தை சொல்ல வருகின்றீர்களா? அது நல்லபடமாச்சே?

கண்மணி அன்போட காதலன் பாடலும் அருமையோ அருமை😎

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_0103.jpeg.c52ce1ee448216b34941

அருமை ஐயா. அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.

குண்டர்களை ஏவி விட்டு கழுத்தை பிடிக்கவைத்த பின், அவரை கேள்வி கேட்க விடுங்கள் என சீமான் சொன்னது…

கட்டுமரத்தின் உண்ணாவிரத டிராமாவின் தரத்துக்கு நிகரானது…

இதை விளங்கி கொள்ளாதவர் போல் சிலர் இங்கே யாழில் நடிப்பது…

கட்டுமரம், சீமான் இருவரையும் தூக்கி சாப்பிடும் ஆஸ்கார் நடிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இவரிடம் மட்டும் அதிகாரம் போனால், கருணாநிதி குடும்பம், லாலு பிரசாத், ஜெ சசி எல்லாரையும் சேர்த்தாலும் வெல்ல முடியாத ஊழல் சாதனைதை நிகழ்த்துவார்.

அதே தான் உறுதியாக நடைபெறும் அந்த ஊழல் மோசடி அழுகிய வாசனை இலங்கைக்கும் வீசும்.

நாம் தழிழர் பாசறையில் இருந்து வந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் சீமான் வீட்டு மாத வாடகை 3 இலட்சம் / ஒரு மில்லியன் இலங்கை ரூபா / 3200 டொலர் என்று குற்றம் சாட்டுகின்றார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத சீமான் வேலைக்கு செல்லாத மனைவி. முன்பு நமது உறவு வீரபையன் தெரித்திருந்தார் சீமான் மனைவி செல்வந்தர் ஆனால் பல சொத்துக்கள் இப்போது செல்வம் வந்து தான் வாங்கபட்டுள்ளன என்பதை காண முடிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

நான் அப்படி எங்கும் எழுதவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்கவும்.

ஒரு மாததுக்குள் நான் இதை எழுதி அதை @ரஞ்சித் . உண்மை என சாட்சியும் கூறினார்.

நீங்கள் எழுதியது உக்ரேன் போர் பற்றிய ஒரு திரியில்.

இப்போ யாழில் முன்பை போல் விடயங்களை search பண்ண முடிவதில்லை.

இதே பலருக்கு வசதியாய் போய் விட்டது.

54 minutes ago, குமாரசாமி said:

அந்த அனுர பாசத்தை எப்படி உணர்கின்றீர்கள்?

அது ஒரு விதைவையின் இரண்டாம் காதல் போல மிக சன்னமாக ஆனால் நிச்சயமாக வெளித்தெரியும்😂. அடுத்த முறை இதை நீங்கள் வெளிக்காட்டும் போது கட்டாயம் ஒரு @ போட்டு விடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

ஒரு மாததுக்குள் நான் இதை எழுதி அதை @ரஞ்சித் . உண்மை என சாட்சியும் கூறினார்.

நீங்கள் எழுதியது உக்ரேன் போர் பற்றிய ஒரு திரியில்.

ஓ...உக்ரேன் திரியிலா? அது பிராந்திய அரசியல் ஆதிக்கம் பற்றி வரும் போது ஒரு ஒப்பீட்டுக்காக எழுதப்பட்டதே தவிர இந்தியா செய்தது சரி எனும் தொனியில் எழுதவில்லை.

பிராந்திய அரசியல் ஆதிக்கம் ஒவ்வொரு நாடுகளுக்கும் வெவ்வேறு கோணங்களில் இருக்கும். எல்லா நாட்டு ஆதிக்கங்களையும்/ஆக்கிரமிப்புகளையும் ஒரே தராசில் வைத்து பார்க்க முடியாது. இதையும் அந்த உக்ரேன் திரிகளில் எழுதியிருந்தேன். அண்ணாக்கள் வாசிக்கல போல

3 hours ago, goshan_che said:

அது ஒரு விதைவையின் இரண்டாம் காதல் போல மிக சன்னமாக ஆனால் நிச்சயமாக வெளித்தெரியும்😂. அடுத்த முறை இதை நீங்கள் வெளிக்காட்டும் போது கட்டாயம் ஒரு @ போட்டு விடுகிறேன்.

ஈழத்தமிழருக்கென இன்றிருக்கும் ஒரு தமிழ் அரசியல் தலைவர் பெயரை சொல்லுங்கள்.அதன் பின்னர் அனுர பற்றி விவாதிக்கலாம்.

இலங்கையின் வட பகுதியில் அனுரவை தேர்ந்தெடுத்தது வாக்களித்தது அந்த பகுதி மக்களே ஒழிய நீங்களோ நானோ அல்ல. புலம்பெயர் மக்களும் அல்ல. அல்லது வாக்குக்கு பணம் செலுத்தி வந்தவரும் அல்ல அனுர. எல்லாம் பல இன்னல்களையும் அனுபவித்தவர்களும் தமிழ் அரசியல்வாதிகளின் உண்மை முகம் தெரிந்தவர்களாலும் தேர்தெடுக்கப்பட்டவர் தான் அனுர.அனுரவிற்கும் ஒரு அவகாசம் கொடுக்கலாம் என்று சொன்னேனே தவிர அனுரவிற்கு ஆதரவு என நான் எங்கும் எழுதியதில்லை.

உங்கள் அடுத்த உருட்ட சந்திக்கும் வரை.....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இதில் அரசியலுக்கு வர முன்பே பானவிடயத்தில் ஒரு தூய்மை, சட்டத்துக்கு கட்டுபட்டு நடந்த விதம் என்பன தெரிகிறன.

விஜைக்கு சம்பளம் கொடுக்கும் ரெட்ஜயண்டின் 21 வயது ஓனரின் பாட்டனும், தகப்பனும்…

சோத்துக்கு வழியில்லை என கணக்கு காட்டுவதும் இதுவும் ஒன்றல்ல:

😂

இவர்கள் எவரையும் நம்பி தூய்மை, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதம் என்று நாங்களும் சொல்லலாமா.............

'புலி' படத்துக்கு கறுப்பாக வாங்கிய 15 கோடி ரூபாய்களுக்கு வந்த வழக்கில், விஜய் தரப்பு என்ன பிரதிவாதத்தை வைத்தார்கள்.................... அது தூய்மையா அல்லது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதமா................

அந்த 15 கோடி தனியே நடந்த ஒரு ஒற்றைத் தவறு அல்ல............ ஒவ்வொரு படத்துக்கும் இவர்கள் இப்படியே செய்கின்றார்கள்............... வாங்கிய சொத்துகளின் பத்திரப் பதிவுகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அங்கேயும் சீமான் போன்றே இவர்கள் எல்லோரும் நடந்து கொண்டிருப்பார்கள்.............. இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்கும் ஒரு விடயம் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கின்றாரா, விஜய்.................. தூய்மை, நேர்மை என்றால் அங்கிருந்தும் ஆரம்பிக்கலாம் தானே...............

லெஜண்ட் சரவணன் இந்த தேர்தலில் நின்றால், அவர் தன் சொத்துகளை காட்டியே ஆகவேண்டும். அவருக்கு வேறு வழியே கிடையாது. இதையே தான் விஜய்யும் செய்கின்றார். தொழில்முறை அரசியல்வாதிகளுக்கு பினாமிகள் ஆரம்ப நாட்களில் இருந்தே இருக்கின்றார்கள். சாமியார்கள், பெரிய சாமிகள் கூட அரசியல்வாதிகளின் பினாமிகளாக இருக்கின்றார்கள். ஆனால் விஜய்க்கும், லெஜண்ட் சரவணனுக்கும் இதுவரை பினாமிகள் இல்லை. ஆனால் இவர்கள் அரசியலில் சம்பாதிக்கும் போது இவர்களும் பினாமிகளை உருவாக்கிக் கொள்வார்கள்.

'அவர்கள் காசாக கொடுத்தால், நாங்கள் மாஸாக கொடுப்போம்.................' என்று விஜய் நிற்கும் தொகுதிகளில் தவெகவினர் பெண்களுக்கு மூக்குத்தி கொடுக்கப் போகின்றார்கள். கூவம் ஆற்றின் நடுவில் தான் விஜய்யும் குளித்துக் கொண்டு நிற்கின்றார்.

விஜய் போன்று புதிதாக அரசியலுக்கும் வருபவர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான விடயம் என்னவென்றால் ஊழலை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே, ஆனால் அவர்களுக்கு நன்கு தெரிந்த, மிகவும் பரிச்சயமான அவர்களின் துறைகளில் இருக்கும் ஊழல், அநீதிகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். கமல் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

சுருக்கமாகச் சொன்னால், விஜய் ஒரு மாற்றுச் சக்தியே கிடையாது. இவரும் அவர்களில் ஒருவரே. அதைவிட இவர் அறிமுகப்படுத்தும் 'வொர்த்தே இல்லை.................' போன்ற முன்னுதாரணங்கள் இவரது ரசிகர்களை சீரழிக்கவே போகின்றது.

ஸ்டாலின் காட்டியிருக்கும் சொத்து மதிப்பு.................. 2001ம் ஆண்டில் இவரது நண்பர் ரமேஷும், அவரது குடும்பமும் தற்கொலை செய்து கொண்டார்கள்............... அரசியல்வாதிகளின் ஈவிரக்கம் அற்ற பினாமி உலகம்........... ஜெயலலிதாவுக்கும், சங்கராச்சாரியாருக்கும் கூட இதுவே தான் தகராறு என்று அன்று பேசப்பட்டது............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சுருக்கமாகச் சொன்னால், விஜய் ஒரு மாற்றுச் சக்தியே கிடையாது. இவரும் அவர்களில் ஒருவரே. அதைவிட இவர் அறிமுகப்படுத்தும் 'வொர்த்தே இல்லை.................' போன்ற முன்னுதாரணங்கள் இவரது ரசிகர்களை சீரழிக்கவே போகின்றது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள், ஒரு மனிதரின் குணாம்சம் மிக இலகுவாக வெளியான இடம் இது, நானும் நம்பவில்லை விஜய் ஒரு மாற்று சக்தி என, ஆனால் பிரபல அரசியலால் விஜய்க்கு என தனியான ஒரு வாக்காளர் கூட்டம் உள்ளதாகவே நினைக்கிறேன், அவர்களை ஒரு பொதுப்புரிந்துணர்வு அற்ற கூட்டமாகவே வைத்திருக்க முயற்சிக்கிறார்கள், அது த . வெ . க மட்டுமல்ல அனைத்து தமிழ் நாட்டு கட்சிக்களும் தமக்கென அவ்வாறானவர்களை கொண்டுள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் மாறாதவரை அவர்களுக்கு மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சரியான தலைமை வராது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

2 hours ago, vasee said:

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள், ஒரு மனிதரின் குணாம்சம் மிக இலகுவாக வெளியான இடம் இது, நானும் நம்பவில்லை விஜய் ஒரு மாற்று சக்தி என, ஆனால் பிரபல அரசியலால் விஜய்க்கு என தனியான ஒரு வாக்காளர் கூட்டம் உள்ளதாகவே நினைக்கிறேன், அவர்களை ஒரு பொதுப்புரிந்துணர்வு அற்ற கூட்டமாகவே வைத்திருக்க முயற்சிக்கிறார்கள், அது த . வெ . க மட்டுமல்ல அனைத்து தமிழ் நாட்டு கட்சிக்களும் தமக்கென அவ்வாறானவர்களை கொண்டுள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் மாறாதவரை அவர்களுக்கு மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சரியான தலைமை வராது.

மாற்று கருத்து எண்டு பெரிசா இல்லை.

விஜை மட்டும் இல்லை….புலம்பெயர் தேசத்தில் எம்மவர் எத்தனை பேருக்கு கை சுத்தம்? குறிப்பாக வரி விடயத்தில்? அரிதிலும் அரிது.

இதை சில விடயங்களில் சொல்லப்போய்…பிழைக்க தெரியாதவர், வியாபார நுணுக்கம் தெரியாதவர் போன்ற பட்டமளிப்புகளை நான் அடைந்ததும் உண்டு.

நிற்க,

நான் சொல்ல வருவது அதை அல்ல. வரி ஏய்ப்பும் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதுதான்.

ஆனால் அரசியல்வாதி மட்டும் அல்ல, இந்தியாவில் வரி கட்டும் ஆட்களில் பெரும்பான்மை வரி ஏய்ப்பாளர் என நினைக்கிறேன்.

விஜையை நான் நல்ல கண்ணு என சொல்லவில்லை.

ஆனால் ஸ்டாலின், சீமான் போல் அப்பட்டமாக ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவரில்லை விஜை -அல்லது இன்னமும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஓ...உக்ரேன் திரியிலா? அது பிராந்திய அரசியல் ஆதிக்கம் பற்றி வரும் போது ஒரு ஒப்பீட்டுக்காக எழுதப்பட்டதே தவிர இந்தியா செய்தது சரி எனும் தொனியில் எழுதவில்லை.

பிராந்திய அரசியல் ஆதிக்கம் ஒவ்வொரு நாடுகளுக்கும் வெவ்வேறு கோணங்களில் இருக்கும். எல்லா நாட்டு ஆதிக்கங்களையும்/ஆக்கிரமிப்புகளையும் ஒரே தராசில் வைத்து பார்க்க முடியாது. இதையும் அந்த உக்ரேன் திரிகளில் எழுதியிருந்தேன். அண்ணாக்கள் வாசிக்கல போல

நீங்கள் அந்த தொனியில் அல்ல, அப்பட்டமாக அப்படியே எழுதினீர்கள்.

நான் அண்ணை நீங்களா இப்படி எழுதுவது என அதை உறுதிபடுத்த கேட்டேன். ஆம் என அந்த நிலைப்பாட்டை மேலும் நியாயப்படுத்தினீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அனுரவிற்கும் ஒரு அவகாசம் கொடுக்கலாம் என்று சொன்னேனே தவிர அனுரவிற்கு ஆதரவு என நான் எங்கும் எழுதியதில்லை.

இதைத்தான் சொன்னேன்.

அனுர யார், அவர் track record என்ன, அவர் இப்போதும் செய்வது என்ன என்பதை அறியதவர் அல்ல நீங்கள்.

ஆனாலும் அவருக்கு ஒரு அவகாசம் கொடுக்கலாம் என ஒரு மாயமானை துரத்துகிறீர்கள்.

ஏன்?

இதற்கும் இந்தியா பற்றிய நிலைப்பாட்டு மாற்றத்துக்கும் என்ன காரணம் என புரியவில்லை.

தோல்வி விரக்தியாக இருக்கலாம்.

ஆனால் மாறிவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

தமிழ்நாட்டு வாக்காளர்கள் மாறாதவரை அவர்களுக்கு மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சரியான தலைமை வராது.

நான் இவர்களிடம் காணும் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஒரு ஒன்றுபட்ட எழுச்சியை நான் இவர்களிடம் எப்போதும் கண்டதேயில்லை. எந்த வேளையிலும் இவர்கள் நாடும் நலன்கள் ஒன்றானவை இல்லை.

சமூக நலன்கள் என்ற பெயரில் இவர்கள் சாதியத்தை முன்னெடுக்கின்றார்கள். அதன் வழியே பிரிகின்றார்கள். இது தான் மிகப்பெரிய கேடு. முழுத் தமிழ்நாட்டையும் ஒரு சமூகமாக பார்க்கும் பார்வை மிகப் பெரும்பான்மையான மக்களிடம் கிடையாது.

ஆன்மீகம் என்ற பெயரில் தீண்டாமையையும், வெறுப்பையும் வளர்க்கின்றார்கள். இப்படியான ஆன்மீக வழி மக்களின் அரசியலையும் இதுவே எப்போதும் தீர்மானிக்கின்றது. பின்னர் எங்கிருந்து வரும் எழுச்சியும், மாற்றமும்......................

இரண்டு தேசியங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒன்று இந்திய தேசியம் மற்றது தமிழ்த் தேசியம். இரண்டுமே தமிழ்நாட்டில் குறுந் தேசியங்களாகவே முடங்கிக் கிடக்கின்றன. காங்கிரஸின் இந்திய தேசியம் தமிழ்நாட்டில் மட்டும் என்றில்லை, முழு இந்தியாவிலுமே தேய்ந்துவிட்டது. சீமான் போன்றவர்களின் தமிழ்த் தேசியம் சில குறிப்பிட்ட பிரிவினரின் குரலாகவும், அத்துடன் வேகத்துடன் வரும் இளைஞர்களின் இடமாகவும் இருக்கின்றது. வேகத்துடன் வரும் இளைஞர்கள் அதே வேகத்தில் ஏமாற்றத்துடன் வெளியேறியும் விடுகின்றார்கள். இணையத்தை தவிர்த்துப் பார்த்தால், சீமானால் ஒரு எழுச்சியையும், மாற்றத்தையும் நிஜத்தில் கொண்டு வர முடியாதுள்ளது.

மக்கள் லஞ்சத்தையும், ஊழலையும் அன்றாட வாழ்வில் மிகச் சாதாரணமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஒருவர் இறந்தால் அவரின் சடலத்தை வெளியில் எடுப்பதற்கு கூட லஞ்சம் வாங்கும், கொடுக்கும் வழக்கத்தை என்னவென்று சொல்வது..................... லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கப் போகின்றேன் என்னும் கோஷம் தான் தமிழ்நாட்டில் உள்ளதிலேயே மிகப் பெரிய வெற்றுக் கோஷம். இந்த வெற்றுக் கோஷத்தால் எதுவுமே மாறவில்லை, மாறவும் போவதில்லை.

இதயசுத்தியுடன், கைகளும் சுத்தமானவரான ஒரு மனிதர் அங்கு பெரும் தலைவராக நீண்ட காலமாக வரவேயில்லை. அப்படி ஒருவர் வருவதற்கு, அவர் அங்கு நிலைத்திருக்கும் சாதிய, சமய, தேசிய சக்திகளை தாண்ட வேண்டும், அதன் பின்னர் சினிமாக் கவர்ச்சியுடன் வருபவர்களை ஓரங்கட்ட வேண்டும், அதன் பின்னரே அவரால் ஒரு எழுச்சியை கொண்டு வர முடியும், அது கூட அவர் தன் வாழ்வு முழுவதையும் தமிழ்நாட்டுக்காக தியாகம் செய்தால் மட்டுமே முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

இதைத்தான் சொன்னேன்.

அனுர யார், அவர் track record என்ன, அவர் இப்போதும் செய்வது என்ன என்பதை அறியதவர் அல்ல நீங்கள்.

ஆனாலும் அவருக்கு ஒரு அவகாசம் கொடுக்கலாம் என ஒரு மாயமானை துரத்துகிறீர்கள்.

ஏன்?

இதற்கும் இந்தியா பற்றிய நிலைப்பாட்டு மாற்றத்துக்கும் என்ன காரணம் என புரியவில்லை.

தோல்வி விரக்தியாக இருக்கலாம்.

ஆனால் மாறிவிட்டீர்கள்.

இதெல்லாம் வழமை போல் உங்கள் கருத்து வெற்றிக்காக நீங்களாகவே எழுதும் கற்பனை கருத்துக்கள். வாழ்த்துக்கள் 🎉

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் வழமை போல் உங்கள் கருத்து வெற்றிக்காக நீங்களாகவே எழுதும் கற்பனை கருத்துக்கள். வாழ்த்துக்கள் 🎉

உண்மை கசக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

நான் இவர்களிடம் காணும் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஒரு ஒன்றுபட்ட எழுச்சியை நான் இவர்களிடம் எப்போதும் கண்டதேயில்லை. எந்த வேளையிலும் இவர்கள் நாடும் நலன்கள் ஒன்றானவை இல்லை.

சமூக நலன்கள் என்ற பெயரில் இவர்கள் சாதியத்தை முன்னெடுக்கின்றார்கள். அதன் வழியே பிரிகின்றார்கள். இது தான் மிகப்பெரிய கேடு. முழுத் தமிழ்நாட்டையும் ஒரு சமூகமாக பார்க்கும் பார்வை மிகப் பெரும்பான்மையான மக்களிடம் கிடையாது.

ஆன்மீகம் என்ற பெயரில் தீண்டாமையையும், வெறுப்பையும் வளர்க்கின்றார்கள். இப்படியான ஆன்மீக வழி மக்களின் அரசியலையும் இதுவே எப்போதும் தீர்மானிக்கின்றது. பின்னர் எங்கிருந்து வரும் எழுச்சியும், மாற்றமும்......................

இரண்டு தேசியங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒன்று இந்திய தேசியம் மற்றது தமிழ்த் தேசியம். இரண்டுமே தமிழ்நாட்டில் குறுந் தேசியங்களாகவே முடங்கிக் கிடக்கின்றன. காங்கிரஸின் இந்திய தேசியம் தமிழ்நாட்டில் மட்டும் என்றில்லை, முழு இந்தியாவிலுமே தேய்ந்துவிட்டது. சீமான் போன்றவர்களின் தமிழ்த் தேசியம் சில குறிப்பிட்ட பிரிவினரின் குரலாகவும், அத்துடன் வேகத்துடன் வரும் இளைஞர்களின் இடமாகவும் இருக்கின்றது. வேகத்துடன் வரும் இளைஞர்கள் அதே வேகத்தில் ஏமாற்றத்துடன் வெளியேறியும் விடுகின்றார்கள். இணையத்தை தவிர்த்துப் பார்த்தால், சீமானால் ஒரு எழுச்சியையும், மாற்றத்தையும் நிஜத்தில் கொண்டு வர முடியாதுள்ளது.

மக்கள் லஞ்சத்தையும், ஊழலையும் அன்றாட வாழ்வில் மிகச் சாதாரணமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஒருவர் இறந்தால் அவரின் சடலத்தை வெளியில் எடுப்பதற்கு கூட லஞ்சம் வாங்கும், கொடுக்கும் வழக்கத்தை என்னவென்று சொல்வது..................... லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கப் போகின்றேன் என்னும் கோஷம் தான் தமிழ்நாட்டில் உள்ளதிலேயே மிகப் பெரிய வெற்றுக் கோஷம். இந்த வெற்றுக் கோஷத்தால் எதுவுமே மாறவில்லை, மாறவும் போவதில்லை.

இதயசுத்தியுடன், கைகளும் சுத்தமானவரான ஒரு மனிதர் அங்கு பெரும் தலைவராக நீண்ட காலமாக வரவேயில்லை. அப்படி ஒருவர் வருவதற்கு, அவர் அங்கு நிலைத்திருக்கும் சாதிய, சமய, தேசிய சக்திகளை தாண்ட வேண்டும், அதன் பின்னர் சினிமாக் கவர்ச்சியுடன் வருபவர்களை ஓரங்கட்ட வேண்டும், அதன் பின்னரே அவரால் ஒரு எழுச்சியை கொண்டு வர முடியும், அது கூட அவர் தன் வாழ்வு முழுவதையும் தமிழ்நாட்டுக்காக தியாகம் செய்தால் மட்டுமே முடியும்.

ஆபிராஹாமிய மதங்களின் மீட்ப்பர், அல்லது இந்து மதத்தின் கல்கி பகவான் வரும் வரை இப்படி ஒரு தலைவர் வருவது சாத்தியமில்லை😂.

மீண்டும் சொல்கிறேன்.

அனைவரும் ஊழல் விடயத்தில் ஒன்றேதான் என்ற நிலைப்பாடு - உண்மையானதல்ல. அது ஊழலில் ஊறி பெருத்த திமுக போன்ற கட்சிகளை, கிடைத்த சின்ன வாய்ப்பிலேயே ஊழல் பண்ணும் சீமான் போன்றவகளை, விஜை போன்றவர்களுடன் சமப்படுத்தி காப்பாற்றும் முயற்சி.

ஊழல் விடயத்தில்…

உள்ளதில் நல்ல கள்ளன் எவன் என்பதுதான் அங்கே கேள்வி, தவிர 100% கைசுத்தமானவர் யார் என்பதல்ல.

ஏன் என்றால் அங்கு அரசியல்வாதி மட்டும் அல்ல, வாக்காளரே ஊழல்வாதிகள்தான்😂.

கிட்னியை திருடி விற்பவர்கள் மத்தியில் வரி கட்டாதவந்தான் உத்தமன்😂.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:

'புலி' படத்துக்கு கறுப்பாக வாங்கிய 15 கோடி ரூபாய்களுக்கு வந்த வழக்கில், விஜய் தரப்பு என்ன பிரதிவாதத்தை வைத்தார்கள்.................... அது தூய்மையா அல்லது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதமா................

19 hours ago, ரசோதரன் said:

விஜய் போன்று புதிதாக அரசியலுக்கும் வருபவர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான விடயம் என்னவென்றால் ஊழலை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே, ஆனால் அவர்களுக்கு நன்கு தெரிந்த, மிகவும் பரிச்சயமான அவர்களின் துறைகளில் இருக்கும் ஊழல், அநீதிகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். கமல் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

ரசோதரன், நீங்கள் குறிப்பிடுவதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் யோக்கியன் என்பவன் எங்கே இருக்கிறான் என்பதே தெரியவில்லையே.

தமிழ்நாட்டு அரசியலில் ஊழல், லஞ்சம், லாவண்யம் இவை மூன்றும் புதிய கண்டுபிடிப்புகள் இல்லை. தொண்டு தொட்டு வரும் பழைய பாரம்பரியம் போல்த்தான் இவை மூன்றும் என் பார்வையில் தெரிகின்றன. இவை திராவிடக் கட்சிகளுக்கு மட்டும் சொந்தம் என்று சொல்லிவிட முடியாது. பின்னால் வருபவர்களும் தொடரலாம்.

1954-ல் வெளியான மலைக்கள்ளன் படத்திலேயே கவிஞர் தஞ்சை என். ராமையாதாஸ் எழுதிய பாடல் ஒன்றின் வரிகள் இப்படி இருக்கின்றன,

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்

சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி

பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே…” அந்தக் காலம் காங்கிரஸ் ஆட்சி. அப்படியானால், அன்றும் ஏதோ நடந்திருக்கின்றது.

அறிஞர் அண்ணா மிகக் குறுகிய காலமே ஆட்சி செய்தார். அவர் நீண்ட நாள் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அரசியலில் சிலருக்கு நல்ல பெயர் கிடைப்பதற்கு, அவர்கள் தவறு செய்ய நேரம் கிடைக்காமல் போவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எம்.ஜி.ஆர் கூட நீண்ட காலம் முழுமையாக அதிகாரத்தில் இருந்திருந்தால், அவருடைய பெயரும் விமர்சனங்களில் சிக்கியிருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனாலும் எம்.ஜி.ஆர், தானே ஒருமுறை கறுப்புப் பணம் வாங்கியதை வெளிப்படையாக மேடையில்  ஒப்புக் கொண்டவர். ஒரு தடவை, “இந்திரா அரசு, டெல்லியில் இருந்து படையை அனுப்பினால் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்என முழங்க, அடுத்தநாள் அவரது இராமவரம் தோட்டத்துக்கு வருமானவரி அதிகாரிகளை இந்திராகாந்தி அனுப்பிவைத்தார். அடங்கிப் போனார்.

திமுக குறித்து பேசும்போது, அது ஒரு குடும்ப அரசியலாக மாறிவிட்டது என்பது பலரின் கருத்து. கருணாநிதி, முத்து, அழகிரி என்று தனது முதல் இரண்டு வாரிசுகளை வைத்து முயற்சித்தார். இறுதியில் ஸ்டாலின் தான் சரியாக வந்தார். இப்போது வாரிசு பாதையில் உதயநிதிஇன்பநிதி.. என்று மக்கள் ஏற்கனவே கணக்குப் போடத் தொடங்கி விட்டார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகார வெற்றிடமும், பணமும், பாரம்பரிய அமைப்பு என்ற பெயரும்  சேர்ந்து ஸ்ராலினின் கையில் ஆட்சியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. இந்தத் தேர்தல் ஸ்ராலினுக்கு புதிய களம். அவருக்கு முன்னால் நிற்பது இன்னுமொரு தளபதி. கோசான்ஜி குறிப்பிடுவதுபோல், “ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலேஎன்ற நிலைதான்

இப்போது உள்ள கேள்வி என்னவென்றால்,“ஊழலை முழுக்க ஒழிக்க முடியுமா?” நேர்மையாகச் சொல்வதாக இருந்தால், “முடியாது”. ஆனால், “குடும்ப ஆட்சியை ஒழிக்க முடியுமா?”  என்று கேட்டால், பதில்,”முடியும்”. இந்த இடத்தில்தான் விஜய் போன்ற புதிய வரவுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அவர் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. ஆகவே ஊழல் பட்டியலில் இப்போதைக்கு அவர் பெயர் இல்லை. குறைந்தது குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவாவது அவர் பயன்படலாம்.

இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு இருப்பது கண்கூடு. அந்த ஆதரவு ஒரு குடும்பத்தில் இரண்டு முதல் மூன்று  வாக்குகளை அவருக்கு கொண்டு வந்து சேர்க்கலாம். திமுக, அதிமுக இரண்டு  பெரிய கட்சிகளும் விஜய்யின் வருகையால், (வெளியே சொல்லாவிட்டாலும்) ஆட்டம் காண்கின்றன என்பது உண்மை. விஜயை பொதுவெளியில் வரவிடாமல் செய்ய திமுக எடுக்கும் சில தகிடு தத்தங்கள் புஸ் வானமாகிப் போயிருக்கின்றன. திமுக இதையே தொடர்ந்தால் விஜய்க்கு அனுதாப வாக்குகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. நேற்றுக் கூட, மத்திய அமைச்சர் ஒருவர் தேர்தலுக்குப் பிறகு விஜயையுடன் பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

விஜயைப் பார்க்கும் போது, அவரது காய் நகர்த்தல்கள் சரியாகவே  எனக்குத் தெரிகிறது. நிச்சயமாக இன்னும் பல தடைகளைத் தாண்டி அவர் ஓட வேண்டி இருக்கும். ஆனாலும் கூட, நிழலியின் மதிப்பீட்டில் இப்பொழுதும் நான் உடன்படவில்லை.

கோயில் கட்டுவதும் அரசியலில் குதிப்பதும் பணம் புகழ் சம்பாதிப்பதற்கே. நல்லகண்ணு மாதிரி ஓரிருவர் விதிவிலக்கக இருக்கலாம்.

அரசியல்வாதிகள் சம்பளத்துக்கு வேலை செய்யும் நிலை வர வேண்டும். மக்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை ஊழலின் எல்லை அதிகமாகிக் கொண்டே போகும். ஐரோப்பிய நாடுகள் போல் அரசியல்வாதி ஒருவர் செய்யும் சிறிய ஊழலைக் கூட பல ஆண்டுகள் ஆனாலும் அவர் முன்னாள் ஜனாதிபதியானாலும் துரத்திச் சென்று தண்டனை வழங்கும் சட்டத்துறையை இயக்கும் மக்கள் உருவாக வேண்டும். விஜயின் ஆதரவாளர்கள் அவரது இரசிகர்களாக உள்ளவரை விஜயும் ஊழல் கலாச்சாரத்துக்குள்தான் செல்வார்.

ஒருவரின் சொத்து விபரங்களை அவரே வெளியிடமுன் அரசாங்கத்துக்கு அவரின் சொத்து விபரங்களின் பெரும் பகுதி தெரிந்திருக்க வேண்டும். கார் வாங்கினால் வரி செலுத்தும்போதும் வீடு காணி வாங்கினால் அரசாங்க எழுத்துப் பதிவு மூலமாகவும் விஜய் எவ்வளவு வீடு காணிகள் வாகனங்கள் வைத்துள்ளார் என்பது தெரிந்திருக்க வேண்டும். அவற்றை அரசாங்கம் வெளியிடாது என்ற தைரியம்தான் எல்லா அரசியல்வாதிகளையும் பொய்யான சொத்து விபரங்களை வெளியிடத் தூண்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

4 hours ago, Kavi arunasalam said:

ரசோதரன், நீங்கள் குறிப்பிடுவதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் யோக்கியன் என்பவன் எங்கே இருக்கிறான் என்பதே தெரியவில்லையே.

விஜயைப் பார்க்கும் போது, அவரது காய் நகர்த்தல்கள் சரியாகவே  எனக்குத் தெரிகிறது. நிச்சயமாக இன்னும் பல தடைகளைத் தாண்டி அவர் ஓட வேண்டி இருக்கும். ஆனாலும் கூட, நிழலியின் மதிப்பீட்டில் இப்பொழுதும் நான் உடன்படவில்லை.

4 hours ago, இணையவன் said:

கோயில் கட்டுவதும் அரசியலில் குதிப்பதும் பணம் புகழ் சம்பாதிப்பதற்கே. நல்லகண்ணு மாதிரி ஓரிருவர் விதிவிலக்கக இருக்கலாம்.

திமுகவினரே உள்ளவர்களில் மிகப் பெரும் கொள்ளையர்கள் என்பதே என் அபிப்பிராயம். இதை நான் மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன். திமுகவின் குடும்ப ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்.

ஆனால் மாற்றீடாக முன்னிறுத்தப்படுபவர்கள் சமூகத்தை ஒரு சிறு அளவேனும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இருப்பதை விட இன்னும் கீழ் நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு நிகழ்வாக புதிய வரவு அமையக் கூடாது.

விஜய்க்கு முன்னேயே கமல் இன்றைய திமுகவை எதிர்க்க வந்தார். ஒழுங்காக வரி கட்டவில்லை என்னும் குற்றம் கூட அவரிடம் காணமுடியாது. தனிப்பட்ட ரீதியில் தனக்கு திருமண பந்தத்தில், இந்த குடும்ப அமைப்பில் நம்பிக்கை கிடையாது என்றும் சொன்னார். ஆனால் அவர் அதை ஒரு சர்ச்சையாகவோ அல்லது விளம்பரமாகவோ ஆக்கவில்லை. அது ஒரு பேசுபொருளாகவே ஆகவில்லை. ஓரளவுக்கு மக்களிடையே பயணிக்க முற்பட்டார். ஆனால் அவருக்கு சுயநினைவு இருக்கும் வரை அறிவுஜீவி என்னும் முகமூடியை அவர் கழட்டப் போவதில்லை. அவர் ஒரு துறையில் மிகவும் சிறந்தவர், வல்லுனர் என்பதை ஏற்றுக் கொள்ளும் நேரத்தில், அவர் எந்த வகையிலும் ஒரு அறிவுஜீவி கிடையாது என்பதும் உறுதி. அர்னாப் வழி நடத்திய கமல் - ஸ்மிருதி இரானி இடையேயான விவாதத்தை பார்த்தீர்கள் என்றால் நான் சொல்வது புரியும். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொண்ட அவரால் மக்களுடன் இறங்கி வரவே முடியவில்லை. தமிழ்நாட்டின் பிரச்சனைகளைக் கூட அவர் புரிந்து கொள்ளவில்லை. நான் கதையாக எழுதிய என் தந்தையின் இறப்புச் சான்றிதழ் பற்றிய நிகழ்வு கமலின் அரைகுறை புரிதலுக்கு, அதனால் வரும் ஆபத்துக்கு நல்லதொரு உதாரணம்.

கமலின் அரசியல் முயற்சி பற்றி இன்னும் பலதை எழுதலாம். ஆதலால், நான் ஆரம்பத்தில் இருந்தே கமல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், இன்னும் சில அழியாப் படங்களை அவரால் கொடுக்க முடியும், கமலின் அரசியல் ஒரு ஆக்கபூர்வமான அரசியலே அல்ல என்று எழுதியிருக்கின்றேன்.

கமலை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ரஜனிக்கும் அதிகம் தான். அஜித்துக்கும் அதிகமே. தமிழ்நாட்டு ரசிகர்களின் பின்புலங்களை ஆராய்ந்தால், கமல் - ரஜனி - விஜய் - அஜித் ரசிகர்களின் இடையே ஒரு தெளிவான கோடு இருப்பது தெரியும். ரஜனியினதும் விஜய்யினதும் பெரும்பாலான ரசிகர்கள் ஒரு வகையினராகவும், கமலினதும் அஜித்தினதும் பெரும்பாலான ரசிகர்கள் இன்னொரு வகையினராகவும் இருக்கின்றார்கள்.

தங்கள் குரல்கள் கேட்கப்படவில்லை, தாங்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றோம் என்னும் ஒரு சாரார் எங்கும், என்றும் இருக்கின்றார்கள். அமெரிக்காவில் இருக்கின்றார்கள் - அதிபர் ட்ரம்ப் பின்னால் சென்றார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள் - அர்ச்சுனாவின் பின் சென்றார்கள். வட இந்தியாவில் இருக்கின்றார்கள் - பாஜகவின் பின் செல்கின்றார்கள். இனவாதம், மதவாதம், ஒரு தற்காலிக கவர்ச்சி என்று ஒன்றைப் பற்றிக் கொள்ளுகின்றார்கள். அதை ஒரு புரட்சி என்று நினைத்தும் கொள்ளுகின்றார்கள்.

விஜய்யின் பெரும்பாலான ரசிகர்களும் இந்த வகையினரே. இவர்கள் பொதுவான இளைஞர்கள் கிடையாது, இவர்களின் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமே. 'சங்கீதா போகட்டும்.............. நானே மனைவியாக வருகின்றேன்.....................' என்று பொதுவெளியில் முழக்கம் இடுபவர்கள். இதற்கு விஜய் அவருடைய ரசிகர்களுக்கு சொல்லிய பதில் என்ன.................... திமுகவின் குடும்ப ஆட்சியை ஒழிக்க இவர்களையா தமிழக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேடையில் விஜய் தோன்றி மறைவதும், ஒரு பொருள் விற்பனைக்கான சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லும் ஒரு நடிகரின் தொலைக்காட்சி விளம்பரத்துக்கும் ஒரு வித்தியாசமும் இதுவரை தெரியவில்லை. இதில் என்ன தமிழ்நாட்டு நலன் சார்ந்த அரசியல் இருக்கின்றது?

விஜய் இதுவரை எங்கு மக்களுடன் மக்களாக போய் இருந்திருக்கின்றார்? எந்த பிரச்சனையில் முன் நின்று போராடியிருக்கின்றார்? எவருடன் உரையாடியிருக்கின்றார்?

கூட்டம் அடங்காமல் போய் விடும் என்று சொல்லுவார்கள். அது அடங்கவே கூடாது என்பது போலவே தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றீர்கள். அடங்காத இந்தக் கூட்டத்துடன் அவரது ரசிகர்களைத் தவிர வேறு எவரும் இணையப் போவதில்லை.

விஜய் திருச்சி கிழக்கில் ஏன் நிற்கின்றார்? கிறிஸ்தவர் என்பதால் தானே............... தாரளமாக அங்கே அவர் நிற்கட்டும். திராவிடக் கட்சிகளும் இதையே தானே செய்கின்றன. இதில் இவர் என்ன மாற்று?

விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் எனக்கு தப்பும் தவறும் ஆகவே தெரிகின்றது. இவரால் ஒரு மாற்று அரசியலை கொடுக்க முடியும் என்றோ, இவர் பின்னால் போகும் இளைஞர்களை இவர் சரியான பாதையில் வழிநடத்துவார் என்றோ, இவரால் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்றோ நான் நினைப்பதற்கு எந்த விதமான செயல்களும் விஜய்யாலோ அல்லது தவெக கட்சியினராலோ இதுவரை நடக்கவில்லை. மாறாக, விஜய்க்கு பின் த்ரிஷா என்னும் இன்னொரு வாரிசு அரசியல் தான் என் கண்களுக்குத் தெரிகின்றது.

விஜய்யின் மாற்று அரசியல் தோற்று விட்டால், விஜய் காணாமல் போய் விடுவார். விஜய்க்கு வெறுமனே அதிகாரமும், விளம்பரமும் இல்லாமல் அடுத்த ஐந்து வருடங்கள் அரசியலில் இருந்து, அவரது கட்சியை வளர்க்கும் பக்குவம் கிடையாது. அவரது ரசிகர்களுக்கும் கிடையாது. அதன் பின் திமுகவை அசைப்பதற்கு திமுக சரி பாதியாக உடைவது மட்டுமே இப்போதைக்கு உள்ள ஒரு தெரிவாக இருக்கப் போகின்றது.

நல்ல அரசியல்வாதிகளும், சில இயக்கங்களும் இன்னும் இருக்கின்றன. நல்லகண்ணு ஐயா போய்விட்டார். ஆனால் அவரின் இடத்தை சு . வெங்கடேசன் பல வருடங்களாகவே நிரப்பிக் கொண்டிருக்கின்றார். சைக்கிளில் தான் மதுரை எங்கும் போய் வருகின்றார். மக்களுக்காக, மண்ணுக்காக வாழ்கின்றார்.

தொல். திருமாவும், விடுதலைச் சிறுத்தைகளும் பட்டியலின மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அரசியல் பணம், புகழ் தேடும் அரசியல் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.