Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் நாளொன்றுக்கு சராசரி 138 வர்த்தகக் கப்பல்கள் பயணித்திருந்தன. ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல், இதுவரை ஒரு நாளைக்கு 5 கப்பல்களுக்கு குறைவான போக்குவரத்தே நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் குறைந்தது 16 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன என பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.

நாங்கள் எல்லோரும் ஒயில் விலையில் மினகெட்டு கொண்டு நிக்கிறம்.

ஆனால் உரத்துக்கு பெரிய தட்டுப்பாடு வரும் போல இருக்கு.

அதுவும் வட அரைக்கோளத்தில் பயிரிடும் காலம் வருகிறது. சில வாரங்கள்தான் இடைவெளி.

தவறினால் உணவுக்கு தட்டுப்பாடு வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாங்கள் எல்லோரும் ஒயில் விலையில் மினகெட்டு கொண்டு நிக்கிறம்.

ஆனால் உரத்துக்கு பெரிய தட்டுப்பாடு வரும் போல இருக்கு.

அதுவும் வட அரைக்கோளத்தில் பயிரிடும் காலம் வருகிறது. சில வாரங்கள்தான் இடைவெளி.

தவறினால் உணவுக்கு தட்டுப்பாடு வரலாம்.

ஒரு நோபல் தானே சும்மா பேச்சுக்காவது கையில் திணிச்சுப்போட்டு போயிருக்கலாம்

இப்ப பாருங்கோ பயல் ஒவ்வொருவரையும் திருவோடு எந்த வைக்காமல் ஓயமாட்டான். அமெரிக்கன் பாடம் படிக்கனும் என்றால் நாமளும் சேர்ந்து காய்வது காலத்தின் கட்டாயம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இவர்கள் எவ்வளவுதான் புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வளர்ந்தாலும் போர் நிலையில் இன்னும் எதிரிகளை அல்லது மாற்றுக்கருத்துடையோரை குறைத்து மதிப்பிடுகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.

ஈரான் முக்கியஸ்தர்கள் ஈராக்கின் தலைவர் சதாம் ஹுசையின் அகற்றப்படும் போதே தம்மை சுதாகரித்திருப்பார்கள். அதே போல் கடாபி கொலை என பார்க்கும் போது ஈரான் தினசரி தம்மை பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.அதனால் தான் இன்றும் பலத்துடன் இருக்கிறார்களோ என நினைக்கத்தோன்றுகின்றது.

அமெரிக்க கொள்கையாளர்கள் ஈராக்,லிபியா,சிரியாவில் இலகுவாக வெற்றி பெற்றது போல் ஈரானிலும் அதன் தலைவரை போட்டுத்தள்ளியவுடன் வெற்றிவாகை சூடலாம் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்கள் என்பதையே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றது.

டொனால்ட் ரம்ப் ஆட்சியில் மட்டுமல்ல வேறு யார் ஆட்சிக்காலத்திலும் ஈரான் மீதான போர் ஒன்றிற்கு இன்றோ நாளையோ என ஒரு திட்டத்தை அமெரிக்க கொள்கையாளர்கள் வகுத்து வைத்திருப்பார்கள் என நம்பலாம்.மற்றும் படி டொனால்ட் ரம்ப் அவர்களினால் தான் ஈரான் போர் வந்தது என யாரும் கோபப்பட்டால்...... அமெரிக்காவின் ஏனைய தலைவர்களினால் தமக்கு பிடிக்காத நாடுகள் மீதான அத்து மீறல்களையும் போர் அழிவுகளையும் திரும்பி பார்த்தால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்.சில போர்கள் தங்கள் தனிப்பட்ட விடய மூடி மறைப்பிற்காகவே தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

ஈரானுக்கு பின் பலமாக ஒரு பெரும் சக்தியாக சீனா இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

பிபி ட்ரம்பை மாட்டிவிட்டுட்டார் என கூறுகிறார்கள், கடந்த கால அமெரிக்க அதிபர்களது மேசையிலும் ஈரானிற்கெதிரான தாக்குதல் கோப்பு காணப்படுமாம், ஆனால் அவர்கள் மாட்டுப்படவில்லை, ட்ரம்ப் மாட்டுப்பட்டுவிட்டார் என கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

651246481_1514175470708107_6475319639898

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2026 at 01:30, goshan_che said:

அமெரிக்கா வரை போகும் மிசைலோ, கிட்ட போய் அடிக்கும் கப்பல், நீர்மூழ்கி ஈரானிடம் இல்லை.

இல்லை. தான். ஈரான். அமைச்சர். சொல்லியுள்ளார். அமெரிக்காவை. பிச்சை. எடுக்க. வைப்போம். என்று. ஈரான். செய்யும். என்று. நம்புகிறேன். ஈரான். அமைச்சரவை. ரொம்ப. படித்தவர்கள். கொண்டது. இங்கே. ஜேர்மனியில். கூட. பல. மருத்துவர்கள். ஈரான்கார ர்கள். மற்றும். அவர்களை. ஏமாற்றி. ஒப்பத்தம். எழுத. முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

இல்லை. தான். ஈரான். அமைச்சர். சொல்லியுள்ளார். அமெரிக்காவை. பிச்சை. எடுக்க. வைப்போம். என்று. ஈரான். செய்யும். என்று. நம்புகிறேன். ஈரான். அமைச்சரவை. ரொம்ப. படித்தவர்கள். கொண்டது. இங்கே. ஜேர்மனியில். கூட. பல. மருத்துவர்கள். ஈரான்கார ர்கள். மற்றும். அவர்களை. ஏமாற்றி. ஒப்பத்தம். எழுத. முடியாது.

அமெரிக்காவை பிச்சை எல்லாம் எடுக்க வைக்க ரொம்ப கஸ்டபட வேண்டி இருக்கும்😂.

ஈரான்

  1. ஹோர்மூஸ் நீரிணையின் அமைவிடம்

  2. அமெரிக்கா படைகளை நிலத்தில் இறக்க தயங்குகிறது

  3. ஆதரவு நாடுகள் இல்லை

என்பதை வைத்து அழகாக திட்டமிட்டு விளையாடுகிறது.

ஆனால் இதற்கும் ஒரு எல்லை உண்டு.

அமெரிக்காவின் வான் பரப்பு முழுவதும் ஈரான் வசம்.

காஸாவை போல் ஈரானின் சில பகுதிகளை ஆக்க அமெரிக்காவால் முடியும்.

அமெரிக்கா பிச்சை எடுக்கும் நிலை வர முதல் ஈரானுக்கு இப்படி செய்வார்கள் என எதிர் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அமெரிக்கா தரைப்படையினை அனுப்புவதுதான் அடுத்த திட்டமாக இருக்கும், ஏனெனில் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அமெரிக்க திட்டத்தில் எந்த வித சாதகமான சூழ் நிலை மாற்றமும் ஏற்பட்வில்லை, ஒரு ஆட்சி மாற்றத்தினை நிகழ்த்துவதற்கு ஒரு தரை வழி தாக்குதல் அவசியமாகிறது.

ஆனால் அது அமெரிக்கா விரும்பும் முடிவு எட்ட உதவுமா என்றால் அதுவும் சந்தேகமே.

6 hours ago, goshan_che said:

காஸாவை போல் ஈரானின் சில பகுதிகளை ஆக்க அமெரிக்காவால் முடியும்.

உண்மை!

ஒரு தடவை நெல்சன் மண்டேலா கூறியிருந்தார், உலகத்திலேயே சொல்லமுடியாதவளவு அட்டூழியங்கள் செய்த நாடென்றால் அது அமெரிக்காதான் என.

ஈரான் அமெரிக்கா செய்வதற்கு பதிலுக்கு பதிலாக செய்வதால் பொறுமையாக உள்ளது என கூறமுடியாது, உலக எரிபொருளில் ஏற்படுத்தும் சிறிய தடங்கலும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும், அது உள்ளூர் அமெரிக்கர்களின் வாழ்விலும் பிரதிபலிக்கும், தற்போதய உலகில் யார் எரிபொருளில் கட்டுப்பாட்டினை பேணுகிறார்களோ அவர்களே உலகை கட்டுப்படுத்த முடியும், காசா போல ஒரு சூழ் நிலையினை உருவாக்க முயன்றால் அமெரிக்க பெற்றோடொலருக்கான முடிவுரையாக இருக்கலாம் என கருதுகிறேன்.

மத்திய கிழக்கு நாடுகள் தமது பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் இந்த போரிற்கு பின்னரான காலத்தில் மீழ் பரிசீலனை செய்யவேண்டும் என கருத்துக்கள் வெளியாகும் நிலையில் அவ்வாறான ஒரு சிக்கலை தானாகவே உருவாக்க விரும்பாது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, vasee said:

அமெரிக்கா தரைப்படையினை அனுப்புவதுதான் அடுத்த திட்டமாக இருக்கும், ஏனெனில் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அமெரிக்க திட்டத்தில் எந்த வித சாதகமான சூழ் நிலை மாற்றமும் ஏற்பட்வில்லை, ஒரு ஆட்சி மாற்றத்தினை நிகழ்த்துவதற்கு ஒரு தரை வழி தாக்குதல் அவசியமாகிறது.

ஆனால் அது அமெரிக்கா விரும்பும் முடிவு எட்ட உதவுமா என்றால் அதுவும் சந்தேகமே.

உண்மை!

ஒரு தடவை நெல்சன் மண்டேலா கூறியிருந்தார், உலகத்திலேயே சொல்லமுடியாதவளவு அட்டூழியங்கள் செய்த நாடென்றால் அது அமெரிக்காதான் என.

ஈரான் அமெரிக்கா செய்வதற்கு பதிலுக்கு பதிலாக செய்வதால் பொறுமையாக உள்ளது என கூறமுடியாது, உலக எரிபொருளில் ஏற்படுத்தும் சிறிய தடங்கலும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும், அது உள்ளூர் அமெரிக்கர்களின் வாழ்விலும் பிரதிபலிக்கும், தற்போதய உலகில் யார் எரிபொருளில் கட்டுப்பாட்டினை பேணுகிறார்களோ அவர்களே உலகை கட்டுப்படுத்த முடியும், காசா போல ஒரு சூழ் நிலையினை உருவாக்க முயன்றால் அமெரிக்க பெற்றோடொலருக்கான முடிவுரையாக இருக்கலாம் என கருதுகிறேன்.

மத்திய கிழக்கு நாடுகள் தமது பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் இந்த போரிற்கு பின்னரான காலத்தில் மீழ் பரிசீலனை செய்யவேண்டும் என கருத்துக்கள் வெளியாகும் நிலையில் அவ்வாறான ஒரு சிக்கலை தானாகவே உருவாக்க விரும்பாது என கருதுகிறேன்.

அது கந்தையா அண்ணை சொன்ன பிச்சை எடுக்க வைப்போம் என்ற நிலை வந்தால் என்னாகும் என்பதற்கான பதில்.

ஹோர்மூஸ்சை திறக்க வைக்க, அமெரிக்கா கார்க் தீவை முடக்கினாலே (ஈரானின் எண்ணை ஏற்றுமதியில் 90%) போதும்.

இது சீனாவை பலமாக தாக்கும்.

ஆனால் சீனா உடனே போர்கப்பலை அனுப்பாது.

சீனா தலையிட்டு, உனக்கு பாதி, எனக்கு பாதி என ஒரு ஒப்பந்தம் போட்டு நீரிணை மீள திறக்கப்ப்டலாம்.

ஆனால் இதை ஏன அமெரிக்கா கையில் எடுக்கவில்லை என்பதுதான் தெரியவில்லை.

ஆட்சி விழும், முழுவதுமாக நாமே எடுக்கலாம் என்ற ஐடியாவா? அல்லது புட்டின் ஆடர் படி எஅடக்கிறாதா? தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இரஸ்சிய எரிபொருள் தடை விலக்கல், ஈரான் எரிபொருள் அனுமதி எரிபொருள் விலையினை குறைப்பதற்காக, எரிபொருள் விலை அதிகரிப்பால் உள்ளூரில் ட்ரம்பிற்கு நெருக்கடி ஏற்படலாம் என்பதால் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

இரஸ்சிய எரிபொருள் தடை விலக்கல், ஈரான் எரிபொருள் அனுமதி எரிபொருள் விலையினை குறைப்பதற்காக, எரிபொருள் விலை அதிகரிப்பால் உள்ளூரில் ட்ரம்பிற்கு நெருக்கடி ஏற்படலாம் என்பதால் இருக்கும்.

இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, vasee said:

பிபி ட்ரம்பை மாட்டிவிட்டுட்டார் என கூறுகிறார்கள், கடந்த கால அமெரிக்க அதிபர்களது மேசையிலும் ஈரானிற்கெதிரான தாக்குதல் கோப்பு காணப்படுமாம், ஆனால் அவர்கள் மாட்டுப்படவில்லை, ட்ரம்ப் மாட்டுப்பட்டுவிட்டார் என கூறுகிறார்கள்.

சும்மா எடுத்ததிற்கெல்லாம் டொனால்ட் ரம்ப் அவர்களை திட்டுவது வீண் வேலை என நினைக்கின்றேன். ஏனெனில் அமெரிக்க வரலாற்றில் ஒவ்வொரு ஜனாதிபதிகள் காலத்திலும் ஏதாவது ஒரு வெளிநாடு மீது ஏதாவது அச்சுறுத்தல்களை கொடுத்துக் கொண்டிருப்பதுதான் அவர்கள் வரலாறு.

கடந்த 40 வருடங்களுக்குள் அமெரிக்க ஜெனாதிபதிகளான ரொனால் றேகனை திட்டவில்லையா? சீனியர் , யூனியர் புஷ்களை திட்டவில்லையா? வெள்ளைமாளிகை காமுகன் பில் கிளின்டனை திட்டவில்லையா? சும்மா நோபல் பரிசு புகழ் ,கறுப்பின மக்களின் வாரிசு ஒபாமவை திட்டவில்லையா? டொனால்ட் ரம்ப் அவர்களை வாயார திட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டு நாலுவருசம் கழிச்சு திருப்பியும் வெள்ளைமாளிகைக்கு கூப்பிட்டு வைச்சு திட்டுவது வேடிக்கை மேல் வேடிக்கை கண்டியளோ. அதுக்கிடையிலை இன்னும் ஒருத்தர் வந்தாரே அதுதான் உக்ரேன் பைட் மன்னன் பைடன். அவரை ஞாபகமிருக்கா?

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவெனில்.....😎

அமெரிக்கா விதம் விதமாக வித்தியாசமாக போர் செய்யும். அது அவர்கள் ஆயுத கலாச்சாரம்.🌟

இடையில் இருப்பவர்கள் குத்தி முறியாமல் சிவனே என்று இருப்பதுதான் புதிசாலித்தனம்.ஐ மீன் நான் உட்பட....😂

  • கருத்துக்கள உறவுகள்

US warship believed to be carrying additional Marines to Middle East tracked off Singapore.

A US Navy warship believed to be carrying Marines and sailors to the Middle East is nearing the Malacca Strait off Singapore as it makes its way to the region, maritime tracking data showed Tuesday.

The amphibious assault ship USS Tripoli was approaching Singapore, at the southwestern edge of the South China Sea, Tuesday morning, according to AIS tracking data seen by CNN.

US Navy ships often move with AIS transponders turned off. Revealing their positions while transiting areas with heavy maritime traffic, like the waters around Singapore, enables safer operations.

The Wall Street Journal reported that the additional Marines would be ferried by the Tripoli to the Middle East. Those Marines are coming from the Okinawa-based 31st Marine Expeditionary Unit (MEU), a rapid-response force of 2,200 personnel, after the Pentagon ordered the unit to deploy, according to three officials familiar with the plans.

US Central Command has said that roughly 50,000 US troops are already in the Middle East as part of the war with Iran.

CNN has asked the US Navy’s 7th Fleet and 5th Fleet for comment.

Officials told CNN the unit was being sent to the Middle East, without revealing exactly where it would be deployed or what it would be used for.

An MEU consists of four elements: command, ground combat, air combat and logistics combat. MEUs typically have been used for missions like evacuations and amphibious operations that require ship-to-shore movements, like raids and assaults. They also have ground and aviation combat components, and some units are trained for special operations.

Marinetraffic.com showed a track for an “unspecified US warship” departing Okinawa on March 11, through the South China Sea and nearing Singapore Tuesday morning at a speed of about 22 mph.

Based in Sasebo, Japan, the Tripoli, almost 850 feet long and displacing 45,000 tons, is essentially a small aircraft carrier and carries F-35 stealth fighters and MV-22 Osprey transports as well as landing craft to move troops ashore.

It is the lead ship in an amphibious ready group, which would normally include the amphibious transport docks USS New Orleans and USS San Diego. CNN could not confirm the presence of those smaller ships with the Tripoli in maritime tracking sites Tuesday.

f_avif

https://edition.cnn.com/2026/03/17/middleeast/uss-tripoli-marines-middle-east-iran-intl

5 hours ago, vasee said:

அமெரிக்கா தரைப்படையினை அனுப்புவதுதான் அடுத்த திட்டமாக இருக்கும், ஏனெனில் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அமெரிக்க திட்டத்தில் எந்த வித சாதகமான சூழ் நிலை மாற்றமும் ஏற்பட்வில்லை, ஒரு ஆட்சி மாற்றத்தினை நிகழ்த்துவதற்கு ஒரு தரை வழி தாக்குதல் அவசியமாகிறது.

அலுவல் நடந்து கொண்டிருக்கிறது போல.

ஜப்பான் அல்லது தென்கொரியாவில் இருந்து விசேட பயிற்சி பெற்ற Marines வீரர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் கார்க் தீவினை அமெரிக்கா கைப்பற்றலாம் என்றும், ஈரானின் கரையோரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா அழிக்கலாம் என்றும், யுரேனியத்தினை கைப்பற்ற அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவு இறக்கப்படாலாம் என்றும் கூறுகிறார்கள்.

இவற்றுள் ஏதோவொன்றோ அல்லது அனைத்துமோ நடக்க சந்தர்ப்பம் இருக்கிறது. போர் எதிர்பார்க்கப்பட்டதுபோல விரைவில் முடிவடையாது இழுபட்டுச் செல்வது ட்ரம்ப்பின் அரசு மீது கடுமையான அழுத்தத்தினைச் செலுத்துகிறது. ஈரானின் அரச, இராணுவ தலைமைகள் தொடர்ச்சியாக ஆழிக்கப்பட்டு வந்தாலும்கூட மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நிலைகள், இஸ்ரேல், ஏனைய வளைகுடா நாடுகள் மீதான் தாக்குதல்களை ஈரான் தொடர்ச்சியாகவே நடத்திவருகிறது. ஈரானின் தாக்குதல் வீரியம் குறைந்துவிட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும் ஈரானின் தாக்குதல்கள் இன்றும் தொடர்கிறது.

ஆகவே நான் மேற்கூறிய திட்டங்களில் ஒன்றினையோ அல்லது அனைத்தையுமோ மிக விரைவில் ஆரம்பிக்கவேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கிறது. கார்க் தீவும் ஈரானிற்குச் சொந்தமான வர்த்தக கட்டமைப்புக்கள் கொண்டிருக்கும் இன்னொரு கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரமும் இலக்குவைக்கப்பட்டால் ஈரான் யுத்த நிறுத்தப் பேச்சுக்களுக்கு இணங்குவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது என்று மத்திய கிழக்கின் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார் (ஆதார‌ம் : சி என் என்)

15 hours ago, goshan_che said:

அமெரிக்காவின் வான் பரப்பு முழுவதும் ஈரான் வசம்.

நீங்கள் காமெடி கீமடி ஒன்றும் பண்ணவில்லயே? என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது நன்றாகவே புரிந்தது. என்றாலும், சும்மா, பவுடிக்கிச் சுட்டிக் காட்டலாம் என்று!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.