Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுவால் வரும் கேடு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுவால் வரும் கேடு

மது ஓர் உணவு அல்ல. போதைப் பொருள். பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கும் பொருள். மிகக் கொடிய விஷம். மதுவினால் குடிகள் பல கெட்டன என்பதை நாம் அறிவோம். அகால மரணம், கொலை, திருடு, விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன. ஞாபகசக்தியும் சிந்தனை ஆற்றலும் சிதைந்து போகும். புத்தி, நிதானம் குலைந்து மன ஒழுங்கையும் அடக்கத்தையும் சீரழித்து விடுவது மதுபானம்.

பெருங்குடியர்களும் யோகாசனப் பழக்கத்தினால் கொடுமை நிறைந்த இப்பழக்கத்தை விட்டொழித்திருப்பது அனுபவ உண்மையாகும்.

மதுவால் இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் இவற்றிற்குப் பெரும் கேடு உண்டாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். பஞ்சமாதபாதங்களில் மது குடிப்பதும் ஒன்று. மதுவால் வரும் கேடு பற்றி நமது தமிழ் நூல்கள் பலவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதுடன் அப்பழக்கத்தைக் கைவிடுவதே மேலானது என்பதையும் சிறப்பாக வலியுறுத்தியுள்ளன.

டீ சாரீர வலிவைக் குறைக்கின்றது. டீ, குடி இரத்தத்தைக் கெடுத்து நரம்புகளைத் தளரச் செய்து சாரீரத்தின் ஆரோக்கியத்தையும் வலிவையும் நாளுக்கு நாள் குறைத்து விடுகிறது. குடிப்பழக்கம் உடையவன் திடீர் மரணம் அடைவான். மதுபானப் பேய் ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அது அவனது இளமை இன்பத்தினையும் கெடுக்கும். அன்பாகிய அழகிய பூச்செண்டுக்கு வேர்ப்புழு. அறமாகிய பூஞ்சோலையை அழிக்கும் வனவிலங்கு. அறிவாகிய பூஞ்சோலையை அழிக்கும் பேய்க்காற்று. அமைதியான குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். வறுமை, பிணியை உண்டுபண்ணும்.

இந்த கொடுமையை உணர்ந்து மனுதர்மசாஸ்திரத்தில், மருந்துக்காவது மதுபானம் அருந்தியவன் அப்பாபத்தைப் போக்க கந்தை வஸ்திரத்தைத் தரித்து, சடை முடியுடன் ஓராண்டு நெய்யை அல்லது பிண்ணாக்கை சாப்பிட்டு இருக்க வேண்டும் என, கடுந்தண்டனையைக் கூறியுள்ளது. மதுவைக் கண்டிப்பாக விலக்க வேண்டும் என பைபிளிலும் கூறப்பட்டுள்ளது. :icon_mrgreen:

மது - கள் குடியாமை பற்றித் திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.

கள் குடி பற்றித் திருமந்திரம்

உள்உண்மை ஓரார் உணரார் பசுபாசம்

வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்

தென் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்

கள் உண்ணும் மாந்தர் கருத்தறியாரே.

இத்தனை கொடுமை நிறைந்த பழக்கத்தை சிறைத் தண்டனையாலோ, அபராதம் விதிப்பதாலோ நிறுத்திவிட முடியாது. மனக் கட்டுப்பாட்டினால்தான் இதை ஒழிக்க முடியும். பெருங்குடியர்களும் யோகாசனப்

பழக்கத்தினால் விட்டொழித்திருப்பது அனுபவ உண்மையாகும்.

மொடேண் தமிழிலிருந்து...

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

குடியை கெடுக்கும் குடியை தொடாதே என சும்மாவா சொல்லியுள்ளார்கள்.அது சரி சிவப்பு வைன் குடித்தால் இருதயத்துக்கு நல்லது என்று சொல்கிறார்கள்.அது பற்றி...................................

அப்ப இனும குமாரசாமி தாத்தா ... கள்ளுக்கொட்டில் பக்கம் போகமாட்டாரா? :icon_mrgreen::icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
குடியை கெடுக்கும் குடியை தொடாதே என சும்மாவா சொல்லியுள்ளார்கள்.அது சரி சிவப்பு வைன் குடித்தால் இருதயத்துக்கு நல்லது என்று சொல்கிறார்கள்.அது பற்றி...................................
உதை கேள்விப்பட்டாப்பிறகுதான் போத்தில்போத்திலாய் வைச்சு சாத்துறன் ஆனால் இஞ்சை கதை வேறை மாதிரிப்போகுது :icon_mrgreen:
அப்ப இனும குமாரசாமி தாத்தா ... கள்ளுக்கொட்டில் பக்கம் போகமாட்டாரா? :icon_mrgreen::icon_mrgreen:
அந்த சொர்க்கத்தை விட்டுட்டு நான் வேறையெங்கை போறது :lol:

கு.சா தாத்தா மது என்றா என்ன நேக்கு சொல்லி தாங்கோ :unsure: ஆனா பாருங்கோ தாத்தா போற திகதி என்று ஒன்று எழுதி இருக்கு :unsure: அதை எந்த வெள்ளை பூண்டாலும் தடுக்க ஏலாது தாத்தா :unsure: (இந்த டயலக்கை எங்கையோ கேட்ட மாதிரி இருக்குமே வேற எங்கே இரண்டு போத்தல் அடித்து விட்டு மொழி படத்தில பிரகாஷ்ராஜ் சொன்னது தான் :unsure: )

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பனியும் போதைப் பொருளா? நான் நிறைய அருந்தியுள்ளேன். :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

"உதை கேள்விப்பட்டாப்பிறகுதான் போத்தில்போத்திலாய் வைச்சு சாத்துறன் ஆனால் இஞ்சை கதை வேறை மாதிரிப்போகுது "

கொஞ்சமாக குடித்து சாப்பிட்டால் நல்லதென்றும் சொல்கிறார்கள்.நீங்கள் போத்தல் போத்தலாய் சாத்த போத்த்ல் உங்களை சாத்திவிட்டிடும் கு.மா.அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி ம***லை கண்டபடி உளறாதையப்பு :unsure:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பல நாட்களுக்கு முன்னர் எழுதியது. குடிப்பழக்கம் என்பது தனி மனித சுதந்திரமா என்று சர்ச்சை நடக்கும் வேளையில் மறுபதிவு செய்யலாம் என்று தோன்றியதால் செய்கிறேன். இதனால் நான் குடிப்பழக்கத்தை ஆதரிக்கிறேன் என்பது இல்லை. சிலருக்கு டிவி ட்ராமா, சினிமா மோகம் மாதிரியே இதுவும் தனி மனிதனைச் சார்ந்தது என்பது என் எண்ணம். இனி ஒரிஜினல் பதிவு

---

மிகவும் பிரபலமான "slogan" இது இந்தியாவில். ஆனால் உண்மையா இது? என்ற கேள்வி எனக்கு ரொம்ப நாளாக உண்டு. குடிகாரன் எனப்படுபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். Lite, medium, மொடாக்குடிகாரன் இல்லை addict.

வெளிநாடுகளில் லைட் வகையறாக்களைப் பற்றி கவலைப்படுவது கூட இல்லை. social drinking என்று சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இங்கே ரஷ்யாவில் வாரத்தில் குறைந்தது மூன்று நான்கு வேலை நாட்களில், வேலைக்குப்பின் இரண்டு மூன்று பியர்கள் என்பது கிட்டத்தட்ட கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. வாரயிறுதியிலோ ஒருமுறையாவது hard alcohol என்பது வழக்கம். குறிப்பாய் 'வோட்கா'. இங்கே ஜோக் கூட உண்டு. தாகமெடுத்தால் பியர் குடிப்பது மினரல் வாட்டர் குடிப்பதை விட மலிவு என்று.

மீடியம் ஆல்கஹாலிக்ஸ் எனப்படுபவர்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்தால் மட்டுமே addicts ஆகின்றனர். அதுவும் கூட addiction என்பதன் விளக்கம்: "A chronic brain disorder characterized by the loss of control of drug-taking behavior, despite adverse health, social, or legal consequences to continued drug use."

இவ்விளக்கத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று. சமூதாயம் மற்றும் சட்டம். இந்த duties-ஐ ஒருவன் மறந்து குடி உள்பட எவ்வகை போதைப்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அது addiction-ஆக கருதப்படும். அதற்கு மருத்துவசிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. ஆனால் இந்தியாவில் குடிப்போரை (குடிகாரர்கள் என்பது கொஞ்சம் derogatory-ஆக ஒலிப்பதால்) பெரும்பாலும் இகழ்வது வழக்கமாய் உள்ளது. சோமபானத்தை அருந்தி மகிழ்ந்த தேவர்களை வணங்கும் நாம் ஏன் குடிப்பழக்கத்தை (இதிலும் பழக்கம் என்பது habit என்றில்லாமல் addiction என்றே தொனிப்பதாய் தெரிகிறது) இப்படி நம் சமூகம் வெறுக்கிறது என்பது புரியவில்லை.

மது, அதிலுள்ள alcohol மற்றும் சிகரெட்டில் உள்ள சில வஸ்துக்கள், போதைப்பொருட்கள் மட்டுமல்லாமல் பல மருந்தாய்ப் பயன்படும் பொருட்களும் இந்த dependence-ஐ (மருத்துவத்துறையில் இதுவே preferred term. addiction என்பது மருத்துவத்துறைக்கு வெளியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது) விளைவிக்கின்றன. சிகரெட்டின் தீமைகளை திண்ணமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது போல் மதுவிற்கு இல்லை. சொல்லப்போனால், குறைந்த அளவில் ஆல்கஹால் (ஆலகால விஷம் இது தான் என்று வைத்துக்கொண்டால், நீலகண்டன் நிரந்தரமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார் :icon_idea: ) உடலுக்கு நன்மையே விளைவிக்கின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் சில ஆராய்ச்சிகளில் பியர் குடிப்பதன் மூலம் புதிய synapses உண்டாவதாகக் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு பியர் குடிப்பதன் மூலம் அறிவு வளர்ச்சி என்று மேம்போக்காக சொன்னாலும், புதிய சினாப்ஸகளின் வேலை மது dependence-ஐ உண்டாக்குவதற்காகத்தான் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. மேலதிக விவரம் தெரியவில்லை.

'அளவிற்கு அதிகமானால்' என்பதாகவே ஆல்கஹாலினால் விளையும் தீமைகளும். alcoholic liver disease மற்றும் மிகவும் கடைசி நிலையில் liver cirrhosis-உம் உண்டாகும். இதில் ALD வெளிப்படுவதற்கு குறைந்த பட்சமாக ஐந்து வருடங்களோ அதிகபட்சமாக பத்து வருடங்களாகவோ தினமும் 30 கிராம் வெறும் ஆல்கஹால் units அருந்தியிருக்கவேண்டும். பலவருடங்களாக தினமும் குடிப்பது அதுவும் 5 வருடங்களாக என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம். இந்த மருத்துவ சான்று ஒன்றினால், சரி இனிமே குடிப்போம் என்று நினைப்பவர்களுக்கு. ஆல்கஹால் அட்டிக்ஷன் என்பது மிகவும் கொடியது. அட்டிக்ஷன் என்றில்லாமல் இப்போதைய பேஷனான binge-இன் மூலமும் பாதிப்புகள் உருவாகலாம். நேரிடையாக பாதிக்கப்படும் கல்லீரலைத் தவிர பான்கிரியாஸ் போன்ற மிச்ச இடங்களிலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனால், நீங்கள் மிதமாவோ லைட்டாவோ குடிப்பவர்களானால், அப்படியே இருப்பது உத்தமம். குறிப்பாக, இரத்தக்கொதிப்பு நோயுடையோர் அடியோடு நிறுத்துவதுதான் நல்லது.

சரி, மருத்துவப்படி dependence state-ஐ தவிர மிதமாய்க் குடிப்போர்க்கு பயப்படுவதற்கு பெரும்பாலும் ஒன்றுமில்லை. இப்படியிருக்கையில், சமூகத்தில் ஏன் இத்தனை இகழ்வு என்பது விந்தை. அடுத்த மனிதரையோ சமூகத்தையோ தொல்லைப்படுத்தாதவரை ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? இது தனிமனித அல்லது நண்பர்களுடான harmless பொழுதுபோக்கு என்று கருதாமல் சமுகம் ஏன் சர்ச்சைப்பட வேண்டும் என்ற கேள்வி வருகிறதல்லவா?

மேற்கத்திய சமூகம் குடியைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் போதைப்பொருட்களை பொறுப்பதில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் அமெரிக்க பழங்குடியினரிடத்தும் தெற்கமெரிக்க பழங்குடியினரிடத்தும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே போ.பொ விளங்குகின்றன. இன்னும் ஒரு சில சமூகங்களிடையே, shamans எனப்படும் நம்மூர் கடவுளிடம் பேசும் பூஜாரிகள் போன்றோர் தம்முடைய சடங்குகளில் peyote எனப்படும் போதை வஸ்துவை பயன்படுத்தியே கடவுளைக் காண்கின்றனர். கலாச்சார வித்தியாசம் என்பதைத் தவிர வேறொரு காரணமும் இருப்பதாய் தெரியவில்லை. கலாச்சாரங்கள் மாறும் நேரத்தில், மற்றவரை எவ்வகையிலும் தொல்லைப்படுத்தாத வித்தியாசம் என்று சொல்லுவதால், அது தனி மனித உரிமை ஆகிவிடுகிறதல்லவா.

http://valaippadhivu.blogspot.com/2005/10/blog-post_08.html

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

 

மதுவால் வரும் கேடு

மது ஓர் உணவு அல்ல. போதைப் பொருள். பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கும் பொருள். மிகக் கொடிய விஷம். மதுவினால் குடிகள் பல கெட்டன என்பதை நாம் அறிவோம். அகால மரணம், கொலை, திருடு, விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன. ஞாபகசக்தியும் சிந்தனை ஆற்றலும் சிதைந்து போகும். புத்தி, நிதானம் குலைந்து மன ஒழுங்கையும் அடக்கத்தையும் சீரழித்து விடுவது மதுபானம்.

பெருங்குடியர்களும் யோகாசனப் பழக்கத்தினால் கொடுமை நிறைந்த இப்பழக்கத்தை விட்டொழித்திருப்பது அனுபவ உண்மையாகும்.

மதுவால் இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் இவற்றிற்குப் பெரும் கேடு உண்டாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். பஞ்சமாதபாதங்களில் மது குடிப்பதும் ஒன்று. மதுவால் வரும் கேடு பற்றி நமது தமிழ் நூல்கள் பலவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதுடன் அப்பழக்கத்தைக் கைவிடுவதே மேலானது என்பதையும் சிறப்பாக வலியுறுத்தியுள்ளன.

டீ சாரீர வலிவைக் குறைக்கின்றது. டீ, குடி இரத்தத்தைக் கெடுத்து நரம்புகளைத் தளரச் செய்து சாரீரத்தின் ஆரோக்கியத்தையும் வலிவையும் நாளுக்கு நாள் குறைத்து விடுகிறது. குடிப்பழக்கம் உடையவன் திடீர் மரணம் அடைவான். மதுபானப் பேய் ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அது அவனது இளமை இன்பத்தினையும் கெடுக்கும். அன்பாகிய அழகிய பூச்செண்டுக்கு வேர்ப்புழு. அறமாகிய பூஞ்சோலையை அழிக்கும் வனவிலங்கு. அறிவாகிய பூஞ்சோலையை அழிக்கும் பேய்க்காற்று. அமைதியான குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். வறுமை, பிணியை உண்டுபண்ணும்.

இந்த கொடுமையை உணர்ந்து மனுதர்மசாஸ்திரத்தில், மருந்துக்காவது மதுபானம் அருந்தியவன் அப்பாபத்தைப் போக்க கந்தை வஸ்திரத்தைத் தரித்து, சடை முடியுடன் ஓராண்டு நெய்யை அல்லது பிண்ணாக்கை சாப்பிட்டு இருக்க வேண்டும் என, கடுந்தண்டனையைக் கூறியுள்ளது. மதுவைக் கண்டிப்பாக விலக்க வேண்டும் என பைபிளிலும் கூறப்பட்டுள்ளது. sad.gif

மது - கள் குடியாமை பற்றித் திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.

கள் குடி பற்றித் திருமந்திரம்

உள்உண்மை ஓரார் உணரார் பசுபாசம்

வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்

தென் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்

கள் உண்ணும் மாந்தர் கருத்தறியாரே.

இத்தனை கொடுமை நிறைந்த பழக்கத்தை சிறைத் தண்டனையாலோ, அபராதம் விதிப்பதாலோ நிறுத்திவிட முடியாது. மனக் கட்டுப்பாட்டினால்தான் இதை ஒழிக்க முடியும். பெருங்குடியர்களும் யோகாசனப் பழக்கத்தினால் விட்டொழித்திருப்பது அனுபவ உண்மையாகும்.

மொடேண் தமிழிலிருந்து...

 

 

அன்பர் கு.சா. இணைத்த தனிநபர் நலன் பேண உதவும் நல்ல பதிவு, இன்றுதான் வாசித்தேன்.

நன்றி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.