Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்ரிஷா

Featured Replies

  • தொடங்கியவர்

அந்தப் பொறுப்பிலிருந்தும் பதவியிலிருந்தும் ராஜினிமா செய்து நிறைய நாட்களாகி விட்டது. என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நன்றி

இப்ப பூஜா தானே சயந்தன் அல்லது மாறியாச்சா?

  • Replies 534
  • Views 45.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கடவுளே திரிஷாவால் காரில் பாட்டு போட்டு கொண்டு போக கூட முடியலையா?

இரசிகன் ரொம்ப தான் கவலைப்படுறார் :wink:

  • தொடங்கியவர்

FILM56.JPGrenuga-ravi3-425.jpg

நேற்று தாஸ் படம் பார்த்தேன். அதில் வரும் புது ஹீரோயின் ரேணுகா மேனன் என்று நினைக்கிறன் ..... அவருடைய முகசாயல் சில சமயங்களில் த்ரிஷா போலிருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நேற்று தாஸ் படம் பார்த்தேன். அதில் வரும் புது ஹீரோயின் ரேணுகா மேனன் என்று நினைக்கிறன் ..... அவருடைய முகசாயல் சில சமயங்களில் த்ரிஷா போலிருக்கின்றது.
ம்ம் அப்ப திரிஷாவை விட ரேணுகா லுக்கா இருக்காவா.. :wink: :lol:
  • தொடங்கியவர்

அப்படி எல்லாம் எனக்கு பார்க்க தெரியலை கவிதன், தாஸ் படத்தில் பாவாடை தாவணியில் அழகாக இருக்கார் போல பட்டது அவ்வளவு தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி எல்லாம் எனக்கு பார்க்க தெரியலை கவிதன், தாஸ் படத்தில் பாவாடை தாவணியில் அழகாக இருக்கார் போல பட்டது அவ்வளவு தான்

ம்ம் அது தான் அழகா இருக்காவா என்று தான் கேட்டன்.... :wink: நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் அது தான் அழகா இருக்காவா என்று தான் கேட்டன்.... :wink: நன்றி

சும்மா பீல்பண்ணுறதை சொன்னால் கூட.. கடிக்கிறாங்கப்பா... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா பீல்பண்ணுறதை சொன்னால் கூட.. கடிக்கிறாங்கப்பா... :lol:

என்ன சொல்லுறியள் விஷ்ணு.. :lol:

மதன் படத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்லுறியள் விஷ்ணு..

இல்ல..........அப்படிசொல்ல.. மதன்அண்ணாவை கடிச்ச மாதிரி இருந்தது.. அது தான் சொன்னன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கொஞ்சம் தெளிவில்லாமல் கதைக்கிறனோ கவிதன்அண்ணா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்ல..........அப்படிசொல்ல.. மதன்அண்ணாவை கடிச்ச மாதிரி இருந்தது.. அது தான் சொன்னன்.

_________________

ப்ரியமுடன் விஷ்னு

மாட்டி விடுறியள் என்ன,.. :lol:

நான் கொஞ்சம் தெளிவில்லாமல் கதைக்கிறனோ கவிதன்அண்ணா??

இல்லையே.. :lol:

நேற்று தாஸ் படம் பார்த்தேன். அதில் வரும் புது ஹீரோயின் ரேணுகா மேனன் என்று நினைக்கிறன் ..... அவருடைய முகசாயல் சில சமயங்களில் த்ரிஷா போலிருக்கின்றது.

மதனுக்காக இதோ ரேணுகா மேனன் படம்..

கூட பரத் இருககிறார் :P .(படம்:பெப்ரவரி 14)

தாஸ் படத்திற்கு முதல் வெளிவந்த படம்

இது.

barathrenuka27hq.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நல்லா தான் இருக்கா.. நன்றி மதன் சார்பில் :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Á¾ý «ñ½¡ º¡÷À¢ø ¿¡Ûõ ¸ñÎ ¸Æ¢ò§¾ý.... À¼òÐìÌ ¿ýÈ¢ :wink:

திறப்பு விழா புகழ் த்ரிஷா...?

"தேவுடா... தேவுடா... ஏழுமலை தேவுடா...' என்று விசிலடித்தபடி சந்தோஷம் பொங்க எதிரே வந்து அமர்ந்தார் மிஸ்டர் க்ளீன்.

""அரே! மிஸ்டர் க்ளீன் தேவுடா! சத்யராஜ் நடிக்கும் "தேவுடா...' படத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறதே படித்தீரா...?''

""படிச்சேன்... படிச்சேன்... ''என்று தலையாட்டியவர், "வேல் வேல்' படத்தின் பூஜைக்கு வந்திருந்தார் சத்யராஜ். அவர்கிட்ட இதப்பத்திக் கேட்டேன்... "தேவுடா' படம் போலிச் சாமியார்களை தோலுரித்துக் காட்டும் படமே தவிர, தலைவர்களையோ, மதங்களையோ கிண்டல் செய்யும் படமில்லைன்னு சத்தியம் பண்ணாத குறையாகச் சொன்னார்...

அப்போது அருகில் நின்ற டைரக்டர் ஷிவ்ராஜை காண்பித்து "இதப் பாருங்க... பார்ட்டி விபூதி, குங்குமம், சந்தனம்னு கலக்கலா பொட்டு வச்சிருக்குது... தயாரிப்பாளரோ முருகன் கோயிலுக்குப் போகாம தினமும் ஆபீசுக்கு வர்றதில்லை. இப்படி இருக்கும்போது நான் எப்படி... அப்படிக் கேலி பண்ண முடியும்...? தேவுடா, யாரையும் கோபிக்க வைக்காத ஜாலியான படம்'னு சொன்னார்...''

""அப்படியா...!'' என்று கேட்டுவிட்டு க்ளீன் நெற்றியைப் பார்த்தோம். அவரும் குங்குமம், சந்தனம் வைத்திருந்தார்.

""நீரும் கோவிலுக்குத்தான் போயிட்டு வர்றீரா?'' என்றோம்.

அசட்டுச் சிரிப்பு சிரித்தார். ""நண்பருடைய கல்யாணத்துக்கு போயிட்டு நேரே உம்மை பார்க்க வந்தேன்... அதான் சந்தோஷமாய்ப் பாடினேன்... சென்னையில மழை பெய்ய ஆரம்பிச்சிட்டுது'' என்று சொல்லியவர் தனது கைப் பையில் குடை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார்.

""குடைக்குள் மழை'' பற்றி தகவல் சொல்லப் போகிறீரா'' என்று கேட்டுவிட!

""பழசைக் கிளர்றது க்ளீனுக்கு பிடிக்காத விஷயம்'' என செல்லக் கோபம் காட்டினார்.

""ஆட்டோகிராஃப்' படத்துக்கு டைரக்ஷனுக்காக மத்திய அரசு விருது கொடுக்கும்னு எதிர்பார்த்தேன்னு சேரன் சொல்லியிருந்தாரே...?''

""அது அவரது ஆதங்கமுங்க...! அதிலென்ன தப்பு இருக்கு...? "பிதாமகன்' படத்துக்கு விருது கிடைச்சப்பகூட பாலா இதைத்தான் சொன்னாரு. இதில ஒண்ணும் ஆச்சர்யம் இல்லையே? டைரக்ஷனுக்காக கிடைக்கும்னு எதிர்பார்க்கிறதில தப்பில்லையே...?''

""அது சரி... கோபிகாவுக்கு "ஆட்டோகிராஃப்' படம் வெளியானபோது இருந்த மவுசு இப்ப குறைந்துவிட்டது என்று கேள்விப்பட்டேனே...'' என்று இழுத்தோம்.

""அதெல்லாம் சும்மா அம்மணிக்கு மவுசு கூடிக்கிட்டுத்தான் இருக்கு... அவருக்கு கைவசம் நெறைய ஆஃபர்! கால்ஷீட் பிரச்சனையில்லாம "டேட்ஸ்' கொடுத்துக்கிட்டுத் தான் இருக்காங்க. "கனா கண்டேன்' ரிலீசுக்குப் பிறகு "பொன்னியின் செல்வன்', "தொட்டி ஜெயா' படங்கள்லாம் வரப்போகுது. கேரளாவிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கு. இந்த நிலையில் முப்பது நாற்பதுன்னு போட்டி போட்டுக்கிட்டு சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் தயாரா இருக்காங்க. அப்புறம் எப்படி மவுசு குறைஞ்சதுன்னு சொல்ல முடியும்...?''

""பிரியசகி' படத்தை டைரக்ட் செய்த அதியமான், தனக்குப் பழக்கமுள்ள மும்பை ஃபைனான்சியரை அழைச்சிட்டு வந்து தமிழ் இண்டஸ்ட்ரிக்கு உதவி செய்தாராமே? இதனால அவருக்கு நல்ல கமிஷன் கிடைக்குதாமே? டைரக்டர்கள்கூட இப்படி சைடு இன்கம் பார்க்க முடியுமா..?''

""அதியமான் திறமையான படைப்பாளி. சினிமாவுக்கு ஆரம்பத்துல செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த பலர் நிதி உதவி செஞ்சாங்க. அப்போ இண்டஸ்ட்ரி ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொல்வாங்க. எண்பதுக்குப் பிறகு மத்தவங்களும், ஃபைனான்ஸ் செய்ய வந்தாங்க. மார்க்கெட் நிலவரம் தெரியாம எல்லோருக்கும் உதவி செஞ்சு சிக்கிக்கிட்டாங்க.

சிலபேர் சாமர்த்தியமா இருந்து தானும் பிழைச்சு, மத்தவங்களையும் பிழைக்க வைச்சிக்கிட்டு இருக்காங்க. இப்போ என்.ஆர்.ஐ. பார்ட்டிகளே ஃபைனான்ஸ் செய்ய வரும் போது மும்பைக்காரங்க வந்தா என்ன? எப்படியோ, தமிழ் சினிமா செழிக்க உரம் போடறவங்க வரட்டுமே? அத யார் செஞ்சா என்ன? இதக் கூட கமிஷன் கிமிஷன்னு சொல்லி அசிங்கப்படுத்துறாங்களே?'' என்றார்.

பிறகு, ""டபுள் ஸ்ட்ராங்கா டீ போட்டுக் கொண்டாங்க! அப்பத்தான் மீதிக் கதை'' என்றார் க்ளீன்.

""சினிமாவில் கோடி கோடியாக கொட்டிப் படமெடுத்த தயாரிப்பாளர் வி.ஏ. துரை, இப்போது புறநகரில் ஒரு சிறு ஹோட்டலை சொந்தமாகத் துவங்கி, தானே பரிமாறி கஸ்டமரை உபசரித்து அசத்துகிறாராமே''

""ஆமாம். எம்.ஜி.ஆர். நகரில் ஹோட்டல் வைத்திருக்கிறார். அவர் நல்ல உழைப்பாளி. முதலில் உதவி இயக்குனராக இருந்து, தயாரிப்பு நிர்வாகியாக உயர்ந்து பட அதிபரானவர். ""என்னம்மா கண்ணு', "லூட்டி', "விவரமான ஆளு', "லவ்லி', "பிதாமகன்' படங்களைச் சொந்தமாக தயாரித்ததோடு, ரஜினியின் "பாபா' படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர்.அவரது எளிமை அனைவரையும் வியக்க வைக்கிறது.'' என்றார் க்ளீன்.

""நல்லது. அடுத்த சப்ஜெக்டுக்கு வாங்க. நகைக்கடை, துணிக்கடை, மளிகைக் கடை என எந்தக் கடையைத் திறந்து வைக்க அழைத்தாலும் தலையை ஆட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறார் த்ரிஷா' என்று என் நண்பர் சொன்னாரே... இது உண்மையா மிஸ்டர் க்ளீன்?''.

க்ளீன், "ஹா... ஹா...' என்று சிரித்தார். ""த்ரிஷா ஃபேன்டா விளம்பர படத்தில் நடித்தபோது அவர்கிட்டேயே இதைக் கேட்டேன்... அவருக்கு நிறைய இன்விடேஷன் வருது... எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டு நடிக்க முடியவில்லை... செலக்டீவாக ஒண்ணு ரெண்டு பண்றாங்க... அதே மாதிரி திறப்பு விழாவுக்கெல்லாம் ஒத்துக் கொள்ள நேரமில்லைன்னு சொன்னாங்க. த்ரிஷா மாடலாக இருந்தபோது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு விளம்பர படம் மிஸ் ஆனபோது அந்த புரொட்யூசரை கோபித்துக் கொண்டதோடு, தானே அதைக் கேட்டு நடித்துக் கொடுத்தவர்.

இப்போது பிஸியானபோது அந்த விளம்பரப் பட தயாரிப்பாளர் பலமுறை அணுகி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் எனக் கேட்டும், நேரமில்லாமல் நடிக்கவில்லை என்று என்னிடம் வருத்தமாகக் கூறினார். நிலமை இப்படி இருக்க அப்படி ஒரு தகவல் என்றதும் நமக்கு சிரிப்புத்தான் வருகிறது...'' என்றார்.

""நட்பு நடிகையின் சகோதரி குடும்பத்தில் பிரச்னை வந்துவிட்டதால் அவர் ரொம்ப மனம் உடைந்துவிட்டாராமே!''

""அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். பிறகு விசாரித்த போது அப்படியெல்லாம் இல்லை. இப்பவே வீட்டுக்கு வாங்க நானும், என் கணவருமா சேர்ந்து பேட்டி தருகிறோம்' என்றார் நட்பு நடிகையின் அக்கா!'' என்று சொல்லியவாறு கிளம்பினார் மிஸ்டர் க்ளீன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி ரசிகை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதனுக்காக இதோ ரேணுகா மேனன் படம்..

கூட பரத் இருககிறார் .(படம்:பெப்ரவரி 14)

தாஸ் படத்திற்கு முதல் வெளிவந்த படம்

இது.

ஏன் மதன் அண்ணா ரேணுகா மேனன் ரசிகனா? அப்ப கல்யாணி....சே த்ரிசா க்கு என்ன நடந்தது? :twisted: :wink:

  • தொடங்கியவர்

அப்படி ஏதுமில்லை, தாஸ் படம் பார்த்தேன் அதில் வரும் ரேணுகா மேனன் சில சமயங்களில் திரிஷா போலிருக்கார் என்று எழுதினேன் அதை வச்சு பில்டப் பண்றாங்க

அப்படி ஏதுமில்லை, தாஸ் படம் பார்த்தேன் அதில் வரும் ரேணுகா மேனன் சில சமயங்களில் திரிஷா போலிருக்கார் என்று எழுதினேன் அதை வச்சு பில்டப் பண்றாங்க

²ý ¦º¡øÄ ÁðÊÂø ±ôÀ×õ ¿¢¨ÉôÒ þÕó¾

ரேணுகா மேனன் ÁðÎõ þø¨Ä ¿õÁ( Í ¾É¢ì¨¸)

திரிஷா Á¡¾¢Ã¢ ¾¡ý :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி ஏதுமில்லை, தாஸ் படம் பார்த்தேன் அதில் வரும் ரேணுகா மேனன் சில சமயங்களில் திரிஷா போலிருக்கார் என்று எழுதினேன் அதை வச்சு பில்டப் பண்றாங்க

அது தானே பார்த்தன் :wink: :wink: :wink:

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

ரஜினிக்கு ஜோடி: த்ரிஷா தீவிர ஆசை

Thrisha71-450.jpg

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடியாக நடிக்க ஆசையாக உள்ளதாகவும், 'சிவாஜி' படம் மூலம் அந்த ஆசை நிறைவேறினால் பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார் த்ரிஷா.

ஏவி.எம். தயாரிப்பில் உருவாகவுள்ள ரஜினியின் சிவாஜி படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி கோலிவுட்டிலும், ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஐஸ்வர்யா ராயை ஜோடியாக்க முயற்சி நடக்கிறது. அது சரிப்படாவிட்டால் நடிகை மல்லிகா ஷெராவத், த்ரிஷா அல்லது நயனதாரா நடிக்கலாம் என்று பேசப்படுகிறது.

rajiniy-350.jpg

ரஜினிக்கான ஜோடி பட்டியலில் தனது பெயரும் இருப்பதால் த்ரிஷா ரொம்பவே மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

இந் நிலையில் படத்தைத் தயாரிக்கப் போகும் ஏவி.எம். நிறுவனத்திற்கு திடீரென செய்தியாளர்களை வரவழைத்தார் த்ரிஷா. இதனால், அவர்தான் அடுத்த ஹீரோயின் என்று நினைத்த செய்தியாளர்கள் அங்கு படையெடுத்தனர்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய த்ரிஷா,

சிவாஜி படத்தில் ரஜினி சாருக்கு ஜோடியாக நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதில் என் பெயரும் உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

இருப்பினும் இதுவரை நான்தான் ஹீரோயின் என்பது உறுதி செய்யப்படவில்லை. அந்த வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப சந்தோஷம். யாருக்குத்தான் ரஜினியுடன் ஜோடி சேர கசக்கும்? எனது நீண்ட நாள் ஆசையும் அதுதான். ஒரே ஒரு படத்திலாவது ரஜினியுடன் நடித்து விட வேண்டும் என்று லட்சியத்துடன் உள்ளேன்.

சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை உடனே ஏற்றுக் கொள்வேன். இருப்பினும் இதுவரை யாரும் இதுதொடர்பாக என்னை அணுகவில்லை என்பதுதான் உண்மை.

விஜய்யுடன் நான் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள். இதனால் விஜய்த்ரிஷா ஜோடி வெற்றி ஜோடி என்ற பெயரைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் எங்களது ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

நான் தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூற முடியாது. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தமிழில் 3 படங்களில் புக் ஆகியுள்ளேன். தமிழுக்குத்தான் முதலிடம், முக்கியத்துவம் எல்லாம்.

Thrisha105-450.jpg

தமிழைப் போலவே தெலுங்கிலும் நான் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் இரு மொழிகளிலும் எனக்கு நிறையப் படங்கள் வந்துள்ளன என்றார் த்ரிஷா.

அது சரி, எப்போதுமே ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்களே, தமிழ் மீது அப்படி என்ன பாரபட்சம் என்று ஒரு நிருபர் கேட்டபோது, அய்யோ அப்படியெல்லாம் இல்லை. தாய் மொழியை யாராவது புறக்கணிப்பார்களா? வேகமாக பேசும்போது ஆங்கிலம் இடையில் புகுந்து விடுகிறது.

என்னை அறியாமல் பேசி விடுகிறேன். இப்போது அதை சரி செய்து வருகிறேன். கூடுமானவரை தமிழிலேயே பேச முயற்சிக்கிறேன் என்றார் த்ரிஷா.

தட்ஸ் தமிழ்

ஐயோ...ரேணுகா மேனனை த்ரிசா போல என்டு சொல்லி ரேணுகா மேனனை பிடிக்காமல் பண்ணிடாதீங்க.. :lol:

திரிஷாவுக்கு அண்ணன் ஆவாரா சரத்குமார்?

இளம் தலைமுறை நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கை முடிவில் இருக்கும் திரிஷாவின் புதிய படம் ஒன்றில் அவருக்கு அண்ணாக நடிக்க வர்றீகளா என்று கேட்டு சரத்குமார், பிரபு, அர்ஜூன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஆகியோரைக் கேட்டு அவர்களிடம் திட்டு வாங்கித் திரும்பியுள்ளாராம் அப்படத்தின் இயக்குநர்.

தமிழில் பேசுவதையே அறவே தவிர்க்கும் தமிழ்ப் பெண்ணான திரிஷா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இங்கே கொடுப்பதை விட பல மடங்கு அதிகம் டப்பு கிடைப்பதால் தெலுங்குப் படங்களுக்கே முதலிடம் கொடுத்து நடித்துப் பணத்தைக் குவித்து வருகிறார் திரிஷா.

அங்கு திரிஷா நடித்த அத்தனை படங்களும் சில்வர் ஜூப்ளியைத் தாண்டியதால், திரிஷாவைப் புக் பண்ண நடிகர்களிடையே தள்ளு முள்ளே நடக்கிறது. சமீபத்தில் திரிஷா நடித்து பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு படம் (பிரபு தேவா இயக்கியது) தமிழில் ரீமேக் ஆக உள்ளது (ஆனால் இங்கே பிரபு தேவா இயக்கவில்லை).

இதிலும் திரிஷாவே நடிக்கவுள்ளார். இப்படத்தில் திரிஷாவின் அண்ணன் கேரக்டரில் பிரபல நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாம் என படத்தின் இயக்குநர் நினைத்துள்ளார். உடனே முத்த தலைமுறை நடிகர்களின் பட்டியலைத் தயார் செய்துள்ளார். அதில் சரத்குமார், பிரபு, அர்ஜூன் ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

முதலில் சரத்குமாரை அணுகி கேட்டுள்ளார். காக்கி படத்திற்காக அடித்த மொட்டைத் தலையுடன் இருந்த சரத்குமார், இயக்குநர் கூறியதைக் கேட்டதும் எதுவும் பேசாமல் தலையில் கையை வைத்துத் தடவிக் கொண்டே அவரை ஒரு பார்வை பார்த்தாராம். பிறகு ஏன் இயக்குநர் அங்கே இருக்கப் போகிறார்? ஜூட் விட்ட அவர் நேராக பிரபுவிடம் போயுள்ளார்.

பிரபுவோ, இதெல்லாம் தேவையில்லாத குசும்பு, கிளம்புங்க என்று கூறி அனுப்பி விட்டாராம். சரி, அடுத்து அர்ஜூனைப் பார்க்கலாம் என்று நினைத்து அவரிடம் போயுள்ளார் இயக்குநர். அர்ஜூனோ, எனக்கு வயசாகி விட்டதாக யார் கூறியது? நான் நடிச்ச படங்களை படங்களை முதலில் சரியாகப் பாருங்கள், அப்புறமாக என்னிடம் வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டார்.

சோர்ந்து போகாத இயக்கநர் நேராக மம்முட்டியை அணுகியுள்ளார். மம்முட்டியோ கடுப்பாகிப் போய் தாறுமாறாக பேச, ஓடியே விட்டாராம் இயக்குநர். இப்படியாக திரிஷாவுக்கு அண்ணன் கிடைக்காமல் தடுமாறிப் போயிருக்கிறார் இயக்குநர்.

விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் அண்ணன் கேரக்டருக்கு அப்புறமாக ஆளைப் பார்த்துக்கலாம் முதலில் படப்பிடிப்பை ஆரம்பிங்கப்பா என்று தயாரிப்பாளர் தரப்பு இயக்குநருக்கு டோஸ் கொடுத்துள்ளதாம்.

இதனால் திரிஷாவின் பார்ட்டை மட்டும் முதலில் எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர். இன்னும் சத்யராஜே உம்மா, உம்ம்மா என்று டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். அதற்குள் அவர்களை அண்ணனாகவும், அப்பாவாகவும் நினைக்க அந்த இயக்குநருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?

அவரை விடுங்க, திரிஷா இப்போது தெலுங்கில் 75 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். அதைக்ö காடுக்க தெலுங்கு வாலாக்கள் தயாராக இருப்பதால் துட்டை வாங்கிக் கொண்டு தூள் கிளப்புகிறார் திரிஷா. தமிழில் விரைவில் 3 படங்களில் நடிக்கவுள்ளார் திரிஷா. இந்தப் படங்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பினால், தமிழிலும் 75தான் என்று கூறுகிறதாம் திரிஷா தரப்பு.

ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே!

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சம்திங் சம்திங்.. தங்கச்சி த்ரிஷா..

Thrisha103-450.jpg

ஒரு வழியாக த்ரிஷாவுக்கு 'அண்ணன்' கிடைத்து விட்டார்.

ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் புதிய படம் தான் 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' (என்ன பேருப்பா இது?). இந்தப் படத்தில் த்ரிஷாவின் அண்ணன் கேரக்டரில் நடிக்க பெரிய நடிகர் ஒருவரைத் தேடி வந்தார்கள்.

முதலில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை அணுகினார்கள். நானே இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் அண்ணனா என்று கடுப்பான அவர் தயாரிப்பாளர் தரப்பை கேவலமாகத் திட்டி விரட்டி விட்டார்.

இதையடுத்து பிரபுவைப் போய்ப் பார்த்தார்கள். நானும் ஒரு ஹீரோதான் என்று பிரபுவும் முறைத்தாராம். (சந்திரமுகியின் வெற்றியால் அதைத் தயாரித்த பிரபுவின் கையில் இப்போது பல பல கோடிகள் புரண்டு கொண்டிருப்பதை நினைவில் கொள்க).

parthiban1-375.jpg

இதைத் தொடர்ந்து 'அந்த காலம் டூ இந்த காலம் ஆக்ஷன் கிங்கு' அர்ஜூனிடம் ஓடினார்கள். த்ரிஷாவுடன் ஜோடி போட ஏதாவது வாய்ப்பு வராதா என்று நானே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன், இந்த நேரத்தில் அவருக்கு அண்ணாக நடிக்க கேட்குறீ"களா என்று அர்ஜூனும் சீறினாராம்.

இதனால், சரி இங்கே வேண்டாம், மலையாள நடிகர்ளை அணுகுவோம் என்று கேரளாவுக்குப் போய் மம்மு காவைப் (அதாங்க, மம்மூட்டி) போய்ப் பார்த்துள்ளார்கள்.

நான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், மற்ற கேரக்டருக்கு இங்கே வராதீங்க என்று அடிக்குரலில் மலையாளத்தில் பேசி விரட்டி விட்டு விட்டுவிட்டாராம் மம்மூட்டி.

அங்கே இங்கே முட்டி எங்கேயும் சரிப்பட்டு வராததால் என்ன செய்யலாம் என்று ஹோட்டலில் ரூம் போட்டு ரொம்ப நேரம் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்த படக் குழுவினரைத் தேடி வந்து மாட்டிக் கொண்டாராம் பார்த்திபன்.

படத்தின் கதை குறித்து அகஸ்மாத்தாக கேள்விப்பட்டுள்ளார் பார்த்திபன். பட வாய்ப்புக்களே இல்லாமல், ஷýட்டிங் ஏதும் போகாமல் சும்மா இருப்பதற்குப் பதில் இந்தக் கேரக்டரில் நடிக்கலாமே என்ற யோசனையில், நானே நடிக்கிறேன் என்று படத்தின் இயக்குனருக்கு போன் போட்டுள்ளார் பார்த்திபன்.

ஆஹா, அண்ணனே நம்மைத் தேடி வருகிறாரே என்று மகிழ்ந்து போன இயக்குனர், த்ரிஷாவின் சம்மதத்தைப் பெற ஓடினார்.

ஆனால், பார்த்திபன் என்றவுடன் முதலில் யோசித்துள்ளார் த்ரிஷா. ஆனால், அண்ணனைத் தேடி பல வீடுகளில் ஏறி இறங்கி வாங்கிய திட்டுக்களை த்ரிஷாவிடம் எடுத்துச் சொன்ன தயாரிப்புத் தரப்பு பார்த்தியை ஏற்கச் சொல்லி கேட்டுக் கொண்டார்களாம்.

சரி, அண்ணன் கேரக்டர்தானே என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்ட த்ரிஷா, ஓ.கே. சொல்லி விட்டார்.

trisha17-400.jpg

அதனால் இப்போது த்ரிஷாவின் அண்ணனாக நடித்து வருகிறார் பார்த்திபன்.

(அண்ணன் கேரக்டருக்கு பேசாமல் 'தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி' டி.ராஜேந்தரைக் கேட்டிருக்கலாமே. மிஸ் பண்ணிட்டீங்களேப்பா...)

கூட நடிக்கும் ஹீரோயின்களைக் 'கவர' பகீரதப் பிரயத்தனம் செய்பவர் பார்த்திபன் என்பது கோலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்த செய்தி. அதனால் அண்ணன் கேரக்டரே என்றாலும் கூட பார்த்திபனின் நடிப்பை மட்டுமல்லாமல் அவரது நடவடிக்கைகளையும் கூட இருந்தே உன்னிப்பாக கவனிக்கப் போகிறாராம் த்ரிஷாவின் அம்மா.

'சம்திங் சம்திங்'

தட்ஸ் தமிழ்

ஆகா என்னடா திரிசா பற்றி கன நாளா ஒண்டும் காணலை எண்டு பாத்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.