Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானிய தகவல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

1.jpg

பெற்றோல் 90p ஆக இருந்த போது அதில் வரி, உற்பத்தி செலவு என்பன எத்தனை வீதம் என்பதை இந்த படம் காட்டுகின்றது. பிரித்தானியாவில் மற்றய ஐரோப்பிய நாடுகளை விட வரி அதிகமாக இருப்பதாகவும் அதனாலேயே பெற்றோல் விலை அதிகம் என்றும் கூறப்படுகின்றது. அந்த வரியை குறைக்குமாறு கேட்டே பாவனையாளர் குழு ஒன்றினால் நேற்றய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் அது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை,

படங்கள் நன்றி - பிபிசி

  • Replies 232
  • Views 25.9k
  • Created
  • Last Reply

பிரிட்டிஷ் அரசோ, பிரிட்டன் வாழ் கிறித்தவர்களோ இராக் போருக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: பிரிட்டனின் கிறித்துவ மதபீடம்

இராக் மீது தொடுக்கப்பட்ட போருக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க பிரிட்டிஷ் அரசு மறுத்தால், கிறித்தவ மக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து கிறித்தவ மத பீடத்தின் ஆயர் குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இராக் மீது படையெடுத்தது மிகப் பெரிய தவறு என்றும் இரு மதங்களும் உண்மக்கான சமரத்திற்கான சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியிட்டோரில் ஒருவரான ஆக்ஸ்போர்ட் நகர ஆயர் அதி வணக்கத்திற்குரிய ஹாரிஸ் அவர்கள் எமது பிபிசிக்குத் தகவல் தரும்போது இராக்கில் நிலையான ஜனநாயகம் நிறுவப்பட்ட பிறகு கசப்பான நினைவுகளை குணப்படுத்தும் புனிதப் பணியை கிறித்த தேவாலயம் ஏற்கும் என்றும் குறிப்பிட்டார்.

- BBC tamil

இன, நிற, மத அடிப்படையில் பிரிட்டன் பிளவுபடுகிறது என அதிகாரி எச்சரிக்கை

சமுதாயத்தை ஒருங்கிணைப்பதில் பள்ளிகளுக்கு முக்கிய இடமுண்டு

இன, நிற, மத பேதங்களின் அடிப்படையில் பிரிட்டன் மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது என்று பிரிட்டிஷ் இன-உறவுகளுக்கான கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ட்ரெவர் பிலிப்ஸ் கூறியுள்ளார்.

சமுதாயத்தை ஒருங்கிணைப்பதில் அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைவிட பிரிட்டன் சிறப்பாக செயல்பட்டாலும், ஒரு மெத்தனமான மனநிலை, பிரித்துவைப்பதை வளர அனுமதிப்பதாக பிபிசிக்கு அளித்த செவ்வியொன்றில் இன சமத்துவத்துக்கான ஆணையத்தின் தலைவரான பிலிப்ஸ் கூறினார்.

_40017188_teacher203.jpg

வெள்ளையின மாணவர்கள் மற்றும் பிற இன மாணவர்களை ஒருங்கிணைப்பதில் பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் தோல்வியடைவதால், கல்வி வசதி வாய்ப்புகள் சற்று குறைவான இருக்கும் பகுதிகளில் வரிய நிலையில் உள்ள குழந்தைகள் வளர நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

இம்மாதிரி சமுதாயம் பிரித்து வைக்கப்படுவது அதிகரித்துவருவது, தீவிரவாதிகளுக்கு ஒரு வளமான ஆளெடுக்கும் வாய்ப்பை உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

¿ýÈ¢: À£À£º¢ ¾Á¢ú

  • 3 weeks later...

பிரித்தானியாவில்.. பெருமைக்காக மட்டுமே சிலர்

பற்பல மேடையேற்றங்களை நடாத்துகின்றார்கள்..

தமிழை பிள்ளை ஆங்கிலத்தில் எழுதி வைத்து

தப்புத்தப்பாய் படிக்க.. என்ன கொடுமை..

எங்கள் கலைகள் காப்பாற்றப்படுகிறதாம்...தமிழ

உண்மைதான்.....

இங்கிருக்கும் பிள்ளைகள் உறுப்படியாக தமிழை கற்க இங்குள்ள(London & Europe) பெரியவர்கள் ஆவண செய்ய வேண்டும்....

நான் ஒரு பிள்ளையை சந்தித்தேன்..

நன்றாக தமிழில் பாடுகிறது, ஆனால் பேசினால் பதில் பேச தடுமாறுகிறது.

என்ன கொடுமை இது?

தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது

கேட்டால் நாங்கள் ''டமில்'' என்று சொல்லுதுகள்

வளர்ந்தவர்களே டமில் பேச மாட்டார்கள் .ஏன் பிள்ளைகளை நோவான்,ஒரு அம்மா சொன்னாங்க எனக்கு மாமி என்று கூப்பிட யாரும் வேண்டாம் மருமகன் வெள்ளையா இருக்கவேணூம் . என்னையும் புருஷனையும் தனியா இருக்கவிட்டால் போதும். என்று அப்போ பிள்ளை சொன்னது எனக்கு தமிழ் வேணாம் மம்மி என்று ம்ம் ஊரில் குறுக்கு கட்டுடன் திரிந்த அம்மா முகத்தில் புன்சிரிப்பு காலத்தின் கோலம் தான்

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ம்ம்ம்ம்..... மசிரைத்தான் எங்கடை லண்டன் டமிழ்ஸ்ஸ்ஸ் திருந்திச்சினம்!! திஸ் இஸ் ரூ லேற் மை சண்!! நீங்கள் நாலு பேர் இப்படிக் கத்துவதால் ... உங்களுக்குத்தான் வாயுளையப் போகுது!! உந்த லண்டன் ஓல்ட் டமிழ்ஸ்ஸிற்கு இதெல்லாம் கேட்காது!! அவர்கள் இருப்பது வேறு லோகத்தில்!! பொடியளுக்கு பெயருகள் கூட சன், புன், துன், யுங் .... என்டு சைனிஸ்ஸுகளுக்கு போட்டியாக வந்து விட்டார்களாம்!!

உந்த அரங்கேற்றமெல்லாம் பிரஸ்டீச் பிரட்சனையாம்!! விட்டால் மதிப்புப் போய்விடுமாம்!! பொடி ஆடுதோ, பாடுதோ பிரட்சனையில்லை!! எவ்வளவு காசு செலவளிக்கினம் என்பதுதானாம் பிரட்சனை!! பரதநாட்டியம் என்று போனாலாம் பொடி லெவ்/ரைட் அடிக்குதாம்!!! கறுமமப்பா!!

அதுகள் நிற்க! உந்த லண்டன் பூசாரிமார் தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஐரோப்பா தழுவிய தமிழ் சோதனை எண்டு வைக்கினமாம்!! பரீட்சை முடிபோ அன்றி அதற்கான சேட்டிபிக்கறுகளோ அனுப்புவதில்லையாம்!! லண்டனிலை தமிழ் படிக்கிற ஒண்று இரண்டாவது உதெல்லாம் கிடைத்தால் உற்சாகப்பட்டு மற்றவர்கலையும் என்கரேச் பண்ணுவார்களென்று பயப்படுகிறார்கள் போல????????????

ஆண்டாவா!! ஈழ்பதீஸ்வரத்தானே!!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

பிரிட்டனில் தீபாவளியன்று வங்கி விடுமுறை அளிக்க இந்துக்கள் கோரிக்கை

பிரிட்டனில் தீபாவளியன்று வங்கி விடுமுறை அளிக்கவேண்டும் என லண்டன் வாழ் இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிறுக்கிழமை இரவு லண்டனில் டிராபல்கர் சதுக்கத்தில் கூடியிருந்து ஆயிரக்கணக்கான இந்துக்கள், அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். "தற்போது எங்களுக்கான நேரம் வந்துள்ளது. எனவே தீபாவளியன்று வங்கி விடுமுறை தினமாக அறிவிக்குமாறு அரசிடம் கோரிக்கையை முன்வைக்கிறோம்' என்று லண்டன் வாழ் இந்தியர் அனில் பனோட் தெரிவித்தார்

www.dinamani.com

:evil: :evil: :P :P

  • தொடங்கியவர்

பிரிட்டனில் தீபாவளியன்று வங்கி விடுமுறை அளிக்க இந்துக்கள் கோரிக்கை

தினமணி செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது பிரித்தானியாவில் குறிப்பிட்ட சில நாட்களே பொது மற்றும் வங்கி விடுமுறை தினங்களாக (bank and public holidays) இருக்கின்றன. இந்நிலையில் இந்துக்களுக்கு என்று ஒரு தினத்தை வங்கி விடுமுறையாக அறிவிப்பது பல சிக்கல்களுக்கு வழிவகுக்க கூடியது, பல இன மத கலாச்சார மக்கள் வாழும் பிரித்தானியாவில் இது ஒவ்வொரு பிரிவினரும் தமக்கென ஒரு விடுமுறையை கேட்கும் நிலைக்கு தள்ளிவிடலாம்.

தற்போதை விடுமுறை தினங்கள் ....

New Year's Day

Good Friday

Easter Monday

Early May Bank Holiday

Spring Bank Holiday

Summer Bank Holiday

Christmas Day

Boxing Day

எனக்கு தெரிந்து இலங்கை, இந்தியா தவிர மலேசியா, சிங்கப்பூரில் தீபாவளி தினம் பொது விடுமுறை தினமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடத்தில் ஒழுங் கீனமாகவும் முரட்டு தன மாகவும் நடக்கும் குழந் தைகளை ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கலாம் என்று இங்கிலாந்தில் புதிய சட்டம் கொண்டு வரப்

பட்டுள்ளது.வெளிநாடுகளில்பள்

தீபாவளிக்கு குடுத்தால் ரமதான், சீனர்களின் புதுவருடம் என்று வேறு பலரின் கோரிக்கைகளுக்கு பாரபச்சம் காட்டாமல் இருக்க இணங்க வேண்டும்.

பிரிட்டன் மாறிக் கொண்டிருக்கின்றது. அதன் குடிவரவுக் கொள்கைகள் இறுக்கமாகி வருகின்றன என்ற கருத்து பிரிட்டனின் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து வெளியாகின்றது.

லண்டன் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னரே இந்த மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது.

குடியேற்றவாசிகள் குறித்த சர்ச்சை கடந்த சில வருடங்களாகவே காணப்பட்ட போதிலும், ஜூலை குண்டுவெடிப்புக்கள் இதனை தீவிரப்படுத்தியுள்ளன.

பிளயர் அரசாங்கம் இது குறித்து அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.

அதேவேளை, பிரிட்டிஷ் மக்கள் மத்தியிலும் குடியேற்ற வாசிகள் குறித்த வெறுப்புணர்வும் அச்சவுணர்வும் அதிகரித்துள்ளன.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு பிரிட்டிஷ் மக்களின் உணர்வுகள் இறுக்கமடைந்துள்ளன என்கிறார் ஊடகவியலாளர் ஒருவர்.

பிரிட்டனின் ஊடகங்களுக்கும் இதில் பெரும் பங்குள்ளது. அவை குடியேற்றவாசிகள் குறித்த விடயத்தைக் கையாளும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது அவர் கருத்து.

அந்த நாட்கள் முடிவடைந்து விட்டன என்கிறார் பங்களாதேஷிற்கான பிரிட்டினின் பிரதி உயர்ஸ்தானிகர் ஸ்டீபன் பிரிட்ஜெஸ்.

ஜூலை இதனை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார். முன்னரும் நாம் பயங்கரவாதத்தை சந்தித்தோம் எனினும், நாம் தற்போது சந்திப்பது வித்தியாசமான தீமை என்கிறார் அவர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தென்னாசிய பத்திரிகையாளர்களுக்காக அந்த நாட்டிற்கான பிரிட்டிஷ் தூதரகமும், சர்வதேச குடிப்பெயர்வு ஸ்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது;

குடிவரவும், குடிப்பெயர்வும் மிக முக்கியமான விடயங்களாக மாறி வருகின்றன. சமீபத்தைய பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் அடைக்கலம் கோருபவர்கள் குறித்த சர்ச்சை முக்கிய இடத்தைப்பிடித்திருந்தன.

பிரிட்டனுக்கு இது குறித்த பொறுப்புணர்வு உள்ளது. பிரிட்டன் இதனை மதிக்க வேண்டும்.

பிரிட்டனின் மோர்காம் வளைகுடாவில் (More Combe Bay) மூழ்கி இறந்துபோன 19 சீன குடியேற்றவாசிகள் குறித்து அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பிரிட்டனின் உணர்வுகளை இது புண்படுத்தியதாகவும் கடும் சீற்றத்தை உண்டுபண்ணியது.

பிரிட்டன் காலம் காலமாக காப்பாற்றி வந்த ஜனநாயக மரபுகளை இது போன்ற சம்பவங்கள் பாதித்துள்ளன.

பிரிட்டனின் மிகவும் ஆபத்தான மோர்காம் வளைகுடாவில் மீன்பிடிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதனால் தங்கள் உயிரை பலிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட 19 சீன சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்தே அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் இதுபோன்ற சம்பவங்களை அலட்சியப்படுத்த முடியாது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அது உள்ளது.

வெளிப்படையான குடிவரவு செயற்பாடுகளை பிரிட்டன் எதிர்பார்க்கின்றது, விரும்புகின்றது.

மக்கள் தம்மிடமுள்ள அனைத்தையும் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி ஆபத்தான சட்டவிரோத பயணங்களை மேற்கொள்ளும் நிலையை நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறான சட்டவிரோத பயணங்கள் மிகவும் இரகசியமான பின்னணிகளை கொண்டிருக்கின்றன.

சீனாவின் பிரபலமான பாம்புத் தலையர்கள் எனப்படும் குழுவின் செயற்பாடுகளை (Snake Head's) பிரிட்ஜெஸ் விபரிக்கின்றார்.

ஐரோப்பாவிற்கு சீனாவிலிருந்து ஆட்களை கடத்துவதில் அல்லது சட்டவிரோதமாக கொண்டு சேர்ப்பதில் இக்குழுவினரே பிரதானமானவர்களாக உள்ளனர்.

பிரிட்டனின் டோவர் துறைமுகத்தில் வாகனமொன்றில் தக்காளி மூடைகளுக்கு மத்தியில் 58 சீன சட்டவிரோத குடியேற்றவாசிகளின் உடல்கள் சில வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

பிரிட்டனை அதிரவைத்த இந்த சம்பவம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் மேற்கொள்ளும் பயணங்கள் எவ்வளவு தூரம் ஆபத்தானவையாக உள்ளன என்பதை சர்வதேச சமூகத்திற்கு புரிய வைப்பதாக அமைந்திருந்தது.

இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது 58 சீனர்களும் பலியாவதற்கு காரணம் என பாம்புத் தலைவர்கள் எனப்படும் ஆட் கடத்தல் கும்பல் என்பது தெரியவந்தது.

இதுபோன்று பிரிட்டனின் மோர்காம்வளை குடாவில் 20 சீனர்கள் அடித்துச் செல்லப்படுவதற்கு பின்னாலும் இந்தக் கும்பல் உள்ளது தெரியவந்துள்ளது.

நாங்கள் இது குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்போம். அவ்வாறு தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் போது உங்களுக்கு தெரிவிப்போம்.

எனினும், குடியகல்வு முடிவிற்கு வந்துவிடாது.

ஜூலை தற்கொலை குண்டுதாரிகளுக்கு நாங்கள் விசா வழங்கவில்லை.

அவர்கள் பிரிட்டனின் இரண்டு, மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள், பிரிட்டனிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்தவர்கள்.

லண்டன் குண்டுவெடிப்பிற்கு பின்னர் வெளியாகும் பல கடும்போக்கான கருத்துக்கள்.

பிரிட்டிஷ் சமூகத்திலிருந்தே உருவாகின்றன.

பயங்கரவாதத்தை தூண்டுபவர்கள் ஊக்குவிப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள்.

நேர்மையான சட்டபூர்வமான குடியேற்றவாசிகளுக்கு பிரிட்டனின் கதவு என்றும் திறந்திருக்கும்.

பிரிட்டனுக்கான விசாவை மறுப்பதை விட, வழங்குவது சுலபமான விடயம். வழங்குவது சுலபம் மறுத்தால் இதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டியிருக்கும். மேலும், விசா மறுக்கப்பட்டதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்யலாம்.

குடிப்பெயர்வை சுலபமாக்குவதற்காக பிரிட்டன் பல புதிய திட்டங்களை காலத்திற்கு காலம் அறிமுகப்படுத்துகின்றது.

வெளிநாட்டு தங்குமிட வேலைவாய்ப்பு விசா முறையை (ஙிணிணூடுடிணஞ் ஏணிடூடிஞீச்தூ –டிஞ்ணூச்ணœ ஙடிண்ச்) நீடிப்பது குறித்தும் பிரிட்டன் சிந்தித்து வருகின்றது.

லண்டன் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு பிரிட்டனுக்கு மாணவர் விசாவில் செல்பவர்கள் குறித்தும் கவனம் திரும்பியுள்ளது.

மாணவர் விசா பெற்று லண்டனுக்குள் நுழைபவர்களில் எவ்வளவு பேர் தமது கல்வியை தொடர்கின்றனர் என்பது குறித்தும் கவனம் திரும்பியுள்ளது. இதனை, கண்காணிப்பதற்கான திட்டமொன்றை பிரிட்டனின் உள்துறை அமைச்சு தயாரித்துள்ளது.

மாணவர்கள் பிரிட்டனுக்கு கல்வி கற்பதற்காக செல்வதை விரும்புகின்றோம். நாங்கள் அவர்கள் நியாயமான வழிகளில் செல்வதை விரும்புகின்றோம்.

மாணவர்கள் என வரும்போது விசா பெறுவதற்கு மொழி ஆளுமை, அங்கு தங்கியிருந்து கற்பதற்கான பண வசதிகள் போன்றவை அவசியம். விசா வழங்குவதற்கு முன்னர் நடைபெறும் நேர்முகப் பரீட்சையில் இவை குறித்தே அதிகம் கவனம் செலுத்தப்படும்.

நாங்கள் வித்தியாசமான உலகில் வாழ்கின்றோம். சுதந்திரமான குடிப்பெயர்வு அரசியல் தஞ்சம் என்பவற்றில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நீங்கள் அதனை மாற்ற முயன்றால், நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும்.

http://www.thinakural.com/New%20web%20site...4/Article-1.htm

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பிரிட்டிஷ் அமைச்சர் பிளன்கெட் ராஜினாமா

20051102151143_40975388_blunkett3203_pa.jpg

பிரிட்டனின் மூத்த கேபினட் அமைச்சர் டேவிட் பிளன்கெட் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர்களுக்கான நடத்தை விதிகளை மீறி தனியார் துறையில் வேலைக்கமர்ந்தது தொடர்பாக அவர் ராஜினாமா செய்துள்ளார்.

தான் தவறு செய்துவிட்டதாகவும் தன்னால் அரசில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்றும் தெரிவித்த பிளன்கெட், தன்னால் ஏற்பட்ட சர்சையில் இருந்து அரசை பாதுகாக்கவே தான் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறினார்.

பிரதமர் டானி பிளேயரின் முக்கியக் கூட்டாளியான பிளன்கெட், சென்ற ஆண்டு ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த பிறகு அவர் மேற்கொண்ட சில வர்த்தக ரீதியான நடவடிக்கைகள் கடும் கண்டனத்தை பெற்றுத்தந்துள்ளன.

அமைச்சரவையில் இரண்டாவது முறையாக சேர்க்கப்பட்ட பிறகு 5 மாதத்திலேயே ராஜினாமா செய்து பிளன்கெட் வெளியேறியுள்ள சூழ்நிலை பிரதமர் டோனி பிளேயரின் முடிவெடுக்கும் திறன் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக பி.பி.சி.யின் அரசியல் விவகார நிருபர் கூறுகிறார்

BBC தமிழ்

  • தொடங்கியவர்

வழக்கம் போல இந்த வருடமும் லண்டனில் வான வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டது, குறிப்பாக இன்று பல இடங்களில் வான வேடிக்கைகள் நடக்கிறது. வானவேடிக்கைகள் நடக்கும் இடத்தை இந்த இணைப்பில் காணலாம். இன்று இரவு 11 மணிக்கு பின்பும் வான வேடிக்கைகளை நடத்த அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thisislondon.co.uk/Articles/207...6130?source=TiL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்கம் போல இந்த வருடமும் லண்டனில் வான வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டது, குறிப்பாக இன்று பல இடங்களில் வான வேடிக்கைகள் நடக்கிறது. வானவேடிக்கைகள் நடக்கும் இடத்தை இந்த இணைப்பில் காணலாம். இன்று இரவு 11 மணிக்கு பின்பும் வான வேடிக்கைகளை நடத்த அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thisislondon.co.uk/Articles/20786130?source=TiL

நீங்க போய் பாத்து வந்து படம் போடுங்க நாங்க பாக்க

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்கள் குடிவரவு திணைக்களத்திற்கு கையெழுத்து இடுவதற்காக செல்லும் பொழுது கைதுசெய்யபட்ட இரண்டு நாட்களுக்குள் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள் அதனை விட ஒரு சிலர் வீட்டில் இருக்கும் பொழுது சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் அண்மையில் நான் லண்டனில் நிற்கும்பொழுது இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றது தற்போது எமது நாட்டில் இடம்பெறும் சம்பவங்களை ஆதாரமாக கொடுத்து இப்படி திருப்பியனுப்புவதை (தற்காலிகமாக)நிறுத்தமுடியாதா?

அது போலத்தான் பல உண்மைகள்.

பலர் இப்போது சொல்ல விரும்புவதில்லை.

இப்போதைய நிலை அப்படி...................

இன்னுமொரு முக்கிய விடயம்

இந்த நாடுகளில் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட 98% வீதமானவர்கள்

உண்மையில் பாதிக்கப்பட்டவர்களே இல்லை.

மத்திய கிழக்கு மற்றும் வேறு நாடுகளில் இருந்தும் வந்தவர்களுக்கே

முறையான சான்றிதழ்கள் ஆதாரங்கள் கொடுக்க முடிகிறது.

உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உடுத்த உடையோடு ஓடியவர்களே................

அவர்களிடம் ஏதய்யா ஆதாரம்?

செஞ்சிலுவைச் சங்கம் சான்றிதழ் கொடுத்தவர்கள் கூட

இவர்கள் நிரபாராதிகள் என்று காவல் துறையால் விடுவிக்கப் பட்டவர்களே!

உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளே

இல்லை மண்ணோடா.........?

  • தொடங்கியவர்

பிரித்தானியாவில் குடிவரவு குடியகல்வு உள்ளிட்ட பல விடயங்களை கவனிக்கும் Home Office இலங்கையை பாதுகாப்பான நாடுகள் என கூறி White list இல் வகைப்படுத்தியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்வோருக்கான பிரயாண எச்சரிக்கையை Home Office விடுத்த போதிலும் அதில் இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரதேசங்களே பாதுகாப்பற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இங்கு தஞ்சம் கோரி கோரிக்கை நிராகரிகப்பட்டோர் இலங்கைக்கு திரும்ப சென்று வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்றய இடங்களில் வாழ முடியும் என கூறி கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பபடுகின்றார்கள். பிரித்தானிய அரசு இலங்கையில் தற்போது பாதுகாப்பற்ற நிலை உண்டு என்ற கொள்கை முடிவு எதையும் எடுக்காதவரை திருப்பி அனுப்புவதை நிறுத்துவது கடினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவில் ஏன் இப்படியான செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை.

http://www.tamilnaatham.com/photos/20060127/GERMANY/

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் ஏன் இப்படியான செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை.http://www.tamilnaatham.com/photos/20060127/GERMANY/

ஹலோ சேர்,, அதை நாங்கள் தான் உங்களைப்பார்த்துக்கேட்கனும

ஹலோ சேர்,, அதை நாங்கள் தான் உங்களைப்பார்த்துக்கேட்கனும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ulaganathan Krishnaraj

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சம்பந்தமாக களம் இடம்கொடுப்பின் விரிவாக கருத்தாடலாம்.

எனது நண்பனின் பெயர் ஊமைபாலன். சின்னராசா. அப்படியானால் அவரையும் U.S Raja என அழைக்கலாமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.