Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு

Featured Replies

நானும் அத்துமீறுவதைத்தான் எதிர்க்கின்றேன்.

சினிமாக்காரர்கள் தங்களுடைய மேடையில் ஒரு சிலையை வைத்து படத் தொடக்க விழாவை நடத்திய விடயத்தில் மதஅமைப்புக்கள் அத்துமீறி நுழைவது கண்டிக்கத்தக்கது.

ஆகவே அனைவரும் செருப்போடு அமர்ந்திருந்த ஒரு மேடையில், குஸ்பு மீது மட்டும் குறி வைத்து வழக்குப் போடப்பட்டதன் காரணம், அவர் ஒரு இஸ்லாமியர் என்பதுதான்.

இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் மதவெறி பிடித்த இந்து முன்னணி ஒரு இஸ்லாமியப் பெண் மீது வழக்கப் போட்டிருக்கும் காரணத்தை புரிந்து கொள்வது கடினம் இல்லை.

சினிமாகாரர்கள் மதசம்பிரதாயங்களை மீறும் போது மதநம்பிக்கை உள்ளவர்கள் கேள்வி கேட்க கூடாது என்று சொல்வது மிகச்சிறந்த ஜனநாயக பண்பு. கருத்துச் சுதந்திரத்தை போற்றும் உங்கள் பகுத்தறிவு பண்பு வாழ்க!

மேலும் மதசம்பிரதாயத்தை மீறியதாக குஷ்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதே ஒழிய, அந்த நடிகையின் மேல் எந்த வன்முறையும் மேற்கொள்ளப்படவில்லை. குஷ்பு செய்தது இறைநிந்தனையா இல்லையா என இனி நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். மக்களாட்சியில் ஒரு பொதுநல வழக்கு தொடர எல்லோருக்கும் உரிமையுண்டு. நீதிமன்றத்தாலே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கை, மதவெறி கொண்டது என்று நீங்கள் விமர்சிப்பது அத்துமீறல் மட்டும் அல்ல, சட்டவிரோதமும் ஆகும்.

கமரா கோணத்தில் குஸ்பு மிக அருகில் இருப்பது போன்று வந்துள்ளது. ஆனால் அப்படி அல்ல.

மற்றவர்களும் செருப்போடு இருந்தார்கள் என்றுதான் தமிழ்நாட்டு ஊடகங்கள் தகவல் தருகின்றன. அவர்களும் அதை மறுக்கவில்லை.

இப்படி சொல்லியே நீங்கள் சமாளிப்பது இது 1008 வது தடவை :(

குஸ்பு கால் மீது கால் போட்டுக் கொண்டிருந்தபடியால், அவருடைய செருப்பு நன்றாகத் தெரிகிறது.

:icon_mrgreen:மற்றவர்களின் செருப்பு புடைவுக்குள் மறைந்திருக்கிறது :icon_idea: . ஆனால் மற்றைய படங்களில் சிலருடைய செருப்பு தெரிகிறது.

ம்! பெண்கள் சேலைக்குள்ளே என்ன இருக்கிறது என்று XRAY செய்யும் கலையை எந்த பகுத்தறிவு பாசறையில் பயின்றீர்கள் :(

Edited by vettri-vel

  • Replies 52
  • Views 12.2k
  • Created
  • Last Reply

vt4.jpg

vt5.jpg

vt6.jpg

vt7.jpg

குஷ்புக்கு பார்த்திபன் உதவிக்கரம்

குஷ்பு கடவுள் சிலைகளிடம் மரியாதையின்றி நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினால் அவரை மட்டுமல்ல, அன்று மேடையில் இருந்த எங்கள் அனைவரையும் குற்றம் சாட்ட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த வல்லமை தாராயோ படத் தொடக்க விழாவின்போது செருப்புக் காலுடன், கால் மேல் கால் போட்டவாறு, முப்பெரும் தேவியர் சிலைகள் முன்பு அமர்ந்திருந்த குஷ்புவால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் குருமூர்த்தி என்பவர் கும்பகோணம் நீதிமன்றத்தில், குஷ்பு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார். முப்பெரும் தேவியரை அவமதித்து விட்டார் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தவிர நேற்று ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி நகர தலைவர் கண்ணன் சிவா என்பவரும் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் குஷ்புவுக்கு பார்த்திபன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வல்லமை தாராயோ பட விழாவில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், சுந்தரராமன், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, சாம் பிரியா, டாக்டர் கமலா செல்வராஜ் உட்பட பலர் செருப்பு அணிந்து தான் இருந்தனர்.

ஆனால் பத்திரிக்கைககளில் குஷ்பு பற்றி வந்த செய்தி படித்து அதிர்ச்சியடைந்தேன். ஒரு போட்டோவால் இவ்வளவு சர்ச்சையா. கடைசி நேரத்தில் தான் குஷ்புவை நான் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தேன். அவரும் முழு விருப்பத்துடன் விழாவிற்கு வர சம்மதித்தார்.

அன்று நடந்தது ஒரு படபூஜை விழா. அதில் கலந்து கொள்ள அழைக்கும் போது குஷ்புவை ஒரு நடிகை என்ற முறையிலேயே பார்த்தேன். அவர் முஸ்லிமா அல்லது கிறிஸ்தவரா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை.

அந்த நிகழ்ச்சி நடந்த அன்று மேடையில் போடப்பட்டிருந்தது ஒரு செட்தான். உண்மையான கோவில் கிடையாது. விழா மேடைக்கு சிறப்பு விருந்தினர்கள் வருவதற்கு முன்பே பட பூஜை முடிந்து விட்டது.

பூஜை நடக்கும் வரை மேடையில் இருந்த எவரும் செருப்பு அணியவில்லை. பூஜை முடிந்த பினனர் தான் எல்லோரும் செருப்பு அணிந்து கொண்டார்கள். என்னை பொறுத்தவரை இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக நினைக்கவில்லை.

மொத்த விழாவும் ஒரு நல்ல நோக்கத்துடன் தான் நடத்தப்பட்டது. அது யாருடைய மத உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.

எனினும் அன்று குஷ்பு மரியாதையின்றி நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினால் அந்த மேடையில் அவரை மட்டுமல்ல. மேடையில் இருந்த அனைவரையும் அந்த குற்றச்சாட்டு சேரும் என்றார் பார்த்திபன்.

http://thatstamil.oneindia.in/movies/heroe...to-kushboo.html

மதத்துக்காய் வெட்டுவது கொல்வது காயப்படுத்துவது வேறு..

மத உரிமைக்காக வழக்குத்தொடர்வது வேறு..

Edited by vikadakavi

மேடை அமைப்பு:

vt12.jpg

சிலை அமைந்திருக்கும் இடமும், கதிரை போடப்பட்டிருக்கும் இடமும்:

vt9.jpg

குஷ்பு சாதாரணமாக அமர்ந்திருக்கும் காட்சி:

vt11.jpg

குஷ்பு கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் காட்சி:

vt10.jpg

கமரா கோணம் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது.

Edited by இளைஞன்

பார்த்திபன் சொன்னது புரியவில்லையா? :)

விழா மேடையில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். சேலை அணிந்திருந்தால், அது செருப்பை மறைக்கத்தான் செய்யும். இதைத்தான் நான் சொன்னேன்

இதற்கு பதில் கருத்து எழுதிய வெற்றிவேல் வக்கிர சிந்தனையோடு கருத்து எழுதியிருக்கிறார். இதை நான் வெற்றிவேலிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

இப்பொழுது பார்த்திபனின் பேட்டி அனைவரும் செருப்பு அணிந்திருந்ததை உறுதிப்படுத்தி விட்டது. நான் எதையும் சும்மா சொல்லி சமாளிக்கவில்லை.

அது ஒரு சினிமா தொடக்க விழா. தொடக்க விழாவிற்கு சில பூசைகளை செய்வார்களே தவிர, அங்கே ஒரு கோயில் மாதிரி யாரும் நடந்து கொள்வதில்லை. ஒரு சம்பிராதயத்திற்காக சிலையையோ படத்தையோ வைத்து பூசை செய்து விட்டு பின்பு அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

இங்கே சிலர் கடவுள், கோயில், மதம் என்று சொல்வது அதிகப்படியானது. சினிமாத் தொடக்க விழா பூசைகளை கவனித்திருந்தீhகள் என்றால் உங்களுக்குப் புரியும்.

மதநம்பிக்கை உள்ள பலர் குஸ்புவின் செய்கையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

இதை ஒரு பாரதூரமான ஒரு விடயமாக மதவெறி உள்ள ஒருவரால்தான் நோக்க முடியும்.

கிறிஸ்தவராகிய சந்திரசேகர் செருப்புடன் இருக்கின்ற படத்தை யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றால் அவர் மீதும் வழக்குப் போட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தவராக இருந்து இந்து மதத்தின் குறைபாடுகளை விமர்சிப்பதற்கும் பிறமதத்தை விமர்சிப்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

யாழில் எழுவான் ஒரு விதி செய்தார்.. இந்துக்கள் இந்துமதத்தை நிந்திக்கலாம்.. ஆனால் இந்து இஸ்லாத்தை நிந்திப்பது மதத்துவேசம்.. என்றாகும் என்று. அதே விதியைத்தான் அங்கும் செய்திருக்கிறார்கள் போல. இந்துக்கள் செருப்பணிந்து நிந்திக்கலாம்.. ஆனால் இஸ்லாமியர் இந்துக்கடவுளின் முன் செருப்பணிந்து நிந்திப்பது மதத்துவேசம் என்று..! ஆக அடிப்படையில் இந்து முன்னணி = யாழ் களம் என்று எடுத்துக்கலாம் தானே..!(கொள்கை அளவில்).

எழுவான் வகுத்த கொள்கைப்படி.. இந்துமுன்னணியின் செயல்.. சட்ட அங்கீகாரத்துக்கும் உட்பட்டிருக்கோ என்னோ..! :rolleyes::)

Edited by nedukkalapoovan

அட இங்கையுமா :):D

அட அட எல்லா இடமும் தான்... :wub::D

குஷ்புவுக்கு ஒரு நேரம் கோயில் கட்டுவாங்கள். பிறகு காலநீட்டினா கைய நீட்டினா எண்டு வழக்கு போடுவாங்கள். நேரத்துக்கு நேரம் இப்பிடி ஏதாவது செய்துகொண்டு இருப்பீனம். இது எல்லாம் இந்தியாவில் சகஜம். இதுக்கெல்லாம் போய் யாராவது விவாதம் செய்வாங்களா? :rolleyes:

குஷ்பு நல்ல வடிவான கலரில சாரி கட்டி அதற்கு மட்ச் அப்பா வடிவான ஒரு பிளவுசும் போட்டு இருக்கிறா என?

என்ன மாப்ஸ் அப்பா வடிவத்தில எல்லாம் blouseஇருக்கா..சொல்லவேயில்ல:-)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் பக்திப் பரவசமாக இருந்தவர்கள், இப்போது குஷ்புவை பாடாய் படுத்துகிறார்களே.. :)

அப்படி பலரும் செருப்பு அணிந்து இந்து முறைப்படி பூசை நடக்கும் இடத்திற்கு வருகை தந்தது உண்மை என்றால் அது நிறுத்தப்படவேண்டும். வழக்கு போடுவது தப்பில்லை, ஆனால் அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட சினிமாத்துறையினருடன் பேசி, பூசை விதிகளை விளக்கி கடைபிடிக்க செய்யலாம். அதை மீறியும் மதநிந்தனை செய்தே தீர்வது என்று ஒற்றைக்காலில் எவரும் நின்றால் அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவது நியாயமாக இருக்கும்.

மேலதிக படங்களை இணைத்து பிரச்சினையின் தன்மையை தெளிவுபடுத்த முயன்ற இளைஞனுக்கு நன்றி

Edited by vettri-vel

குஷ்புவுக்கு ஒரு நேரம் கோயில் கட்டுவாங்கள். பிறகு காலநீட்டினா கைய நீட்டினா எண்டு வழக்கு போடுவாங்கள். நேரத்துக்கு நேரம் இப்பிடி ஏதாவது செய்துகொண்டு இருப்பீனம். இது எல்லாம் இந்தியாவில் சகஜம். இதுக்கெல்லாம் போய் யாராவது விவாதம் செய்வாங்களா? :)

எவரோ 4 கிறுக்கர்கள் சேர்ந்து ஒரு நடிகைக்கு கோவில் கட்டினால் (அந்த சிலை அகற்றப்பட்டும் விட்டது), அதற்காக 6 கோடி தமிழர்களையும் குற்றம் சாட்டி விடுவீர்களா? இப்படியே மற்றவர்களை கிள்ளு கீரையாக பரிகாசம் செய்தே கெட்டு குட்டிச்சுவரானவர்களுக்கு நாம் தான் நல்ல உதாரணம்.

நமது சமுதாயத்தை பிடித்திருந்த Superiority Complex என்னும் நோய், போன தலைமுறையுடன் போய் விட்டது என்று தான் நினைத்திருந்தேன்

Edited by vettri-vel

இதற்கு பதில் கருத்து எழுதிய வெற்றிவேல் வக்கிர சிந்தனையோடு கருத்து எழுதியிருக்கிறார். இதை நான் வெற்றிவேலிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

அது சும்மா நகைச்சுவையாக எழுதியது! உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில் கருத்து எழுதிய வெற்றிவேல் வக்கிர சிந்தனையோடு கருத்து எழுதியிருக்கிறார். இதை நான் வெற்றிவேலிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

வெற்றிவேல் எழுதின பதிலை நீங்கள் வக்கிரமாகப் பார்க்கின்றீர்கள் என்று சொல்லுங்கள். அவர்களின் சேலை மறைத்துக் கொண்டிருக்கின்றபோது, எப்படி பாதணி அணிந்தார்கள் என்று கேட்டதை வக்கிரமான சிந்தனையாக தாங்கள் நோக்கிவிட்டு, எதிர்பார்க்கவில்லை, அது இது என்று மற்றவர்களைக் குற்றம் சாட்டுகின்றீர்கள்.

குஷ்புவுக்கு ஒரு நேரம் கோயில் கட்டுவாங்கள். பிறகு காலநீட்டினா கைய நீட்டினா எண்டு வழக்கு போடுவாங்கள். நேரத்துக்கு நேரம் இப்பிடி ஏதாவது செய்துகொண்டு இருப்பீனம். இது எல்லாம் இந்தியாவில் சகஜம். இதுக்கெல்லாம் போய் யாராவது விவாதம் செய்வாங்களா?

இந்த நேரத்தில் நடுநிலமைச் செம்மல் எழுவானைத் தான் கூப்பிடவேண்டும். குஸ்புவை முஸ்லீம் என்று எழுதியதற்காக மதவாதமாக்கிய அவர், ஒரு பத்தினி குஸ்புக்கு பூப்போட்டவர்களை இந்து மதமாகக் காட்ட முனைவது குறித்து அவரின் நடுநிலமையைக் கேட்க வேண்டும்.

குறைந்தபட்சம், ஒரு முஸ்லீம் பெண் இந்துக்களுக்கு கடவுளாக எப்படி ஆவார். கோவில் என்று சொல்லி இந்துக்களின் மனதைக் கொச்சைப்படுத்தப்படுகின்றத

எவரோ 4 கிறுக்கர்கள் சேர்ந்து ஒரு நடிகைக்கு கோவில் கட்டினால் (அந்த சிலை அகற்றப்பட்டும் விட்டது), அதற்காக 6 கோடி தமிழர்களையும் குற்றம் சாட்டி விடுவீர்களா? இப்படியே மற்றவர்களை கிள்ளு கீரையாக பரிகாசம் செய்தே கெட்டு குட்டிச்சுவரானவர்களுக்கு நாம் தான் நல்ல உதாரணம்.

நமது சமுதாயத்தை பிடித்திருந்த Superiority Complex என்னும் நோய், போன தலைமுறையுடன் போய் விட்டது என்று தான் நினைத்திருந்தேன்

எண்ட ஐயோ... :D எனக்கு சுப்பீரியரிட்டி கொம்பிளக்ஸ் நோயா? :D ஆ.. அப்பிடி எண்டால் என்ன? :D

யாராவது உளவியல் படிக்கிற ஆக்கள், புசுக்குட்டி இல்லாட்டி சினேகிதி, இன்னுமொருவன் யாராவது பிளீஸ் வந்து இந்த நோயில இருந்து நான் தப்புவதற்கு பரிகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ. பிளீஸ், பிளீஸ் பிளீஸ் உங்கட காலில விழாத குறையாக கேக்குறன். :):rolleyes::wub:

சுப்பீரியரிட்டி கொம்பிளக்ஸ் நோய் வந்தால் எனக்கு என்னென்ன பாதிப்பு வரும் எண்டும் ஒருக்கால் சொல்லுங்கோ. நான் நாய் மாதிரி குறைக்கவேண்டி எல்லாம் வருமோ? :(

எண்ட ஐயோ... :D எனக்கு சுப்பீரியரிட்டி கொம்பிளக்ஸ் நோயா? :D ஆ.. அப்பிடி எண்டால் என்ன? :D

யாராவது உளவியல் படிக்கிற ஆக்கள், புசுக்குட்டி இல்லாட்டி சினேகிதி, இன்னுமொருவன் யாராவது பிளீஸ் வந்து இந்த நோயில இருந்து நான் தப்புவதற்கு பரிகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ. பிளீஸ், பிளீஸ் பிளீஸ் உங்கட காலில விழாத குறையாக கேக்குறன். :):rolleyes::wub:

சுப்பீரியரிட்டி கொம்பிளக்ஸ் நோய் வந்தால் எனக்கு என்னென்ன பாதிப்பு வரும் எண்டும் ஒருக்கால் சொல்லுங்கோ. நான் நாய் மாதிரி குறைக்கவேண்டி எல்லாம் வருமோ? :(

நகைச்சுவைக்கு நன்றி. உங்கள் நகைச்சுவை உணர்வு எப்போதும் பிடிக்கும்.

இவ்விடயம் சில வேலையில்லாதவர்களால் மலிவு விளம்பரம் தேட ஜோடிக்கப்பட்ட வழக்கு. மேடையில் சுவாமிகள் சிலைகளை வைத்து அதற்கு முன் இருக்கைகளை வைத்தது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த தவறு. குஷ்புவிற்கு பதிலாக அந்த இருக்கையில் வேறு ஒரு பிரபலமில்லாத பெண்ணிருந்திருந்தால் இந்த விடயம் என்னவாகியிருக்கும்?? ஏன் குஷ்புவிற்கு அருகிலிருப்பவரும் காலணியுடன் தானே இருக்கின்றார். அவர் மேல் ஏன் நடவடிக்கையில்லை. பல கதாநாயகர்கள் பிரபலமான கோவில் மண்டபங்களில் பாடல் காட்சியில் நடிக்கும் போது காலணியுடனாடியுள்ள பல பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் யாராவது கேட்டார்களா??

அதைவிட இப்போதெல்லாம் நம்மவர்களே வரவேற்பறையில் சாமி சிலைகள வடிவிற்காக வைப்பது வாடிக்கையாகிவிட்டது. அப்போது சாமி சிலையருகே வைத்து மாமிச உணவு உண்பதும் நடைபெறுகின்றது. இதையெல்லாம் என்னவென்று சொல்வது??

மதம் என்ற ஒன்றை வைத்து மதம் பிடிக்கும் கருத்துக்களை எழுதி மலிவு விளம்பரம் தேட நீங்களும் முனைய வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன், நீங்கள் இணைத்த படங்களை பார்த பின்னர் இந்த விடயம் பற்றிய தெளிவு கிடைச்சுது. நன்றி.

வசம்பு, நான் சொல்ல வந்ததை நீங்கள் முழுவதுமாக சொல்லி எனது நேரத்தை மிச்சப்படுத்தியதற்கு நன்றி.

ஜம்மு பேபிக்கு பதிலா ஒரு பஞ்:

சாமி சிலையை மலசல கூடத்தில் வைத்தவனை விட்டுட்டு, காட்டினவனிலை குற்றம் பிடிக்கிறாங்க...

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி பலரும் செருப்பு அணிந்து இந்து முறைப்படி பூசை நடக்கும் இடத்திற்கு வருகை தந்தது உண்மை என்றால் அது நிறுத்தப்படவேண்டும். வழக்கு போடுவது தப்பில்லை, ஆனால் அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட சினிமாத்துறையினருடன் பேசி, பூசை விதிகளை விளக்கி கடைபிடிக்க செய்யலாம். அதை மீறியும் மதநிந்தனை செய்தே தீர்வது என்று ஒற்றைக்காலில் எவரும் நின்றால் அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவது நியாயமாக இருக்கும்.

இதேதான் எனது கருத்தும்.

சாதாரண ஒருவன் கோவிலுக்குள் செருப்போட நுழைந்தால் அதை மதநிந்தனையாக எடுக்கமாட்டார்கள். ஆனால் அது மத நிந்தனைதான். அந்தச் சாதாரணமானவனின் செயல் ஒரு மெசேஜ் ஆக போகாது மக்களிடம். குஸ்பு போன்ற ஒரு நடிகை.. இவ்வாறு நடந்து கொள்வது ஒரு மெசேஜ் ஆகக் கூட போய்ச் சேரலாம். அந்த வகையில் தான் இவ்வழக்கின் credibility எழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கோ உங்களுக்கோ இதர மக்களுக்கோ மேடையில் அமர்ந்திருக்கும் மற்றையவர்களை விட குஸ்புவை தான் அதிகம் தெரிந்திருக்கிறது.ஆக குஸ்பு இப்படிச் செய்திட்டாங்க என்பது தான் மக்களிடம் செய்தியாகப் போய்ச் சேரும். அந்த வகையில் குஸ்புவின் செயலைக் கண்டிப்பது என்பது பார்த்தீபன் கூறியது போல மேடையில் குஸ்புவைப் போல அமர்ந்திருந்த அனைவரையும் கண்டிக்கிறது. இதுவேதான் இந்து முன்னணியின் நோக்கமாகவும் இருக்கக் கூடும்.

மதத்தை மதித்துத்தானே பூஜை செய்தீர்கள். அப்போ மத நிந்தனைக்கு வாய்ப்பளித்திருக்கக் கூடாது. அதில் குஸ்பு உட்பட அனைவரும் அடங்குகின்றனர். குஸ்புவின் செயலைக் கண்டிப்பதானது அவர் ஒரு முஸ்லீம் என்ற வகைக்குள் அடங்கி இருப்பதிலும் அவர் ஒரு பிரபல்யமானவர் என்ற வகைக்குள் தான் முதன்மை பெறுகிறது..! இது குஸ்பு உட்பட எதிர்காலத்தில் சினிமாவுக்கு பூஜை போடுறவர்களுக்கு பூஜை இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல ஒரு பாடப் படிப்பினையாக அமைந்திருக்கும் என்பது உண்மை. இதையே இந்து முன்னணி எதிர்பார்த்தும் இருக்கும்.

மதங்களை உங்கள் தனிப்பட்ட கருத்தியல் நிலையில், மனநிலையில் மதிக்கலாம் விடலாம். அது உங்கள் தனிமனித சுதந்திரம். ஆனால் மற்றவர்களுக்குள் மத நம்பிக்கையின் பிரகாரம் எழும் மதச் சுதந்திரத்தில் கைவைக்க எந்தத் தனிநபருக்கும் உரிமை கிடையாது..! குஸ்புவின் செயல் அடுத்தவர்களின் பார்வையில் மத நிந்தனை என்று தெரியின் அதைக் கண்டிப்பதில் தவறில்லை. குஸ்பு கூட இது மத நிந்தனை என்றால் அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாக கூறி இருக்கிறார். இதை வரவேற்கலாம். ஆனால் குஸ்பு செருப்பணிந்திருக்கும் இவ்விவகாரத்தை மத எதிர்ப்புப் பிரச்சாரிகள்.. இந்துமதத்தை இழிவுபடுத்தும் நோக்கில் கையாளின் அதற்கு அனுமதிக்க முடியாது.

எனவே மதச் சுதந்திரத்தில் கைவைக்கும் எவருக்கும்... (இது யாழுக்கும் பொருந்தும். யாழ் இந்து மதம் சார்பில் இதை தொடர்சியாக மீறி வருகிறது.. மத விமர்சனம் என்ற போர்வையில் மத நிந்திப்புக் கருத்துக்களை அனுமதிப்பதன் மூலம்..) ஒரு நல்ல பாடமாக அமையட்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயம் சில வேலையில்லாதவர்களால் மலிவு விளம்பரம் தேட ஜோடிக்கப்பட்ட வழக்கு. மேடையில் சுவாமிகள் சிலைகளை வைத்து அதற்கு முன் இருக்கைகளை வைத்தது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த தவறு. குஷ்புவிற்கு பதிலாக அந்த இருக்கையில் வேறு ஒரு பிரபலமில்லாத பெண்ணிருந்திருந்தால் இந்த விடயம் என்னவாகியிருக்கும்?? ஏன் குஷ்புவிற்கு அருகிலிருப்பவரும் காலணியுடன் தானே இருக்கின்றார். அவர் மேல் ஏன் நடவடிக்கையில்லை. பல கதாநாயகர்கள் பிரபலமான கோவில் மண்டபங்களில் பாடல் காட்சியில் நடிக்கும் போது காலணியுடனாடியுள்ள பல பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் யாராவது கேட்டார்களா??

அதைவிட இப்போதெல்லாம் நம்மவர்களே வரவேற்பறையில் சாமி சிலைகள வடிவிற்காக வைப்பது வாடிக்கையாகிவிட்டது. அப்போது சாமி சிலையருகே வைத்து மாமிச உணவு உண்பதும் நடைபெறுகின்றது. இதையெல்லாம் என்னவென்று சொல்வது??

மதம் என்ற ஒன்றை வைத்து மதம் பிடிக்கும் கருத்துக்களை எழுதி மலிவு விளம்பரம் தேட நீங்களும் முனைய வேண்டாம்.

இன்று குஸ்புவை வைத்து குறித்த செயலை தட்டிக் கேட்ட படியாத்தான் பார்தீபனுக்குக் கூட குறித்த விடயம் கண்ணுக்குப் புலப்பட்டிருக்கிறது. குஸ்பு தேவையற்ற பலதுக்கு விளம்பரப் பொருளாகி இருக்கும் போது தேவையான இதற்கு அவரை விளம்பரப் பொருளாக்கியதில் தவறேதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன். இந்த வழக்கின் வெற்றி என்பது உங்கள் கருத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

மக்கள் தாம் மதிக்கும் மதத்துக்கு எதிரா தங்களை அறியாமலே மத நிந்திப்புக்களைச் செய்கின்றனர். இதை முதலில் சுட்டிக்காட்டனும் என்பது கூட இந்த வழக்கின் அல்லது இந்த நிகழ்வை முதன்மைப்படுத்துவதன் நோக்கமாக இருக்கக் கூடும். மதத்தின் தூய்மையைப் பேணும் ஒரு நல்லெண்ண நல்லொழுக்க நடவடிக்கையாகக் கூட இது இருக்க முடியும்.

இதில் மதவெறி என்பது கிடையாது. இந்து மதம் என்பது சமூக நீதி ஒழுக்கம் என்பதைப் போதிக்கும் மெய்யியல் விடயங்களையும் கொண்டுள்ளது.அந்த வகையில் மதத்தை பின்பற்றும் அல்லது பின்பற்றாத எவராகினும் மத ரீதியான நல்ல கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காமல் கண்மூடித்தனமாக செய்யும் விடயங்கள் தொடர்பில் ஒரு விழிப்புணர்வை எதிர்பார்த்து இதை இந்து முன்னணி முதன்மைப் படுத்தி இருக்கும் என்பதே எனது பார்வையாக உள்ளது.

குறிப்பாக்க வரவேற்பறைகளில் சாமி சிலைக்கு முன்னாள் செருப்பை வைப்பது மாமிசம் உண்பது என்பவை கூட நல்ல அம்சங்கள் அல்ல. வரவேற்பறையில் உணவருந்துவதோ செருப்பை அங்கு கொண்டு செல்வதோ கூடாது. அது சுகாதாரத்துக்கு மட்டுமன்றி அடுத்தவர்களுக்கு இடைஞ்சலானது. அப்படி இருக்க.. அதைத் தடுக்க அங்கு கடவுளுக்கு மரியாதை செய் என்பதை முதன்மைப் படித்தி ஒரு நல்ல ஒழுக்கத்தை முன்னிறுத்த முனைவதும் அதை வரவேற்பதும் மறைமுகமாக மக்களிடம் நல்லொழுக்கங்களை நன் நடத்தைகளைப் போதிப்பதற்கு சமனாகிறதே தவிர இதில் மதவெறி கிடையாது. :)

Edited by nedukkalapoovan

ஒரு விதத்தில் இந்து முன்னணி போன்ற மதவெறி அமைப்புக்கள் சினிமா படப் பூசையில் அத்துமீறி தலையிட்டதை ஒரு சாதகமான அம்சமாக நான் பார்க்கிறேன்.

தமிழ் சினிமாவுலகம் மூடநம்பிக்கைக்குள் மூழ்கிப் போய்கிடக்கிறது. நாள், நேரம் பார்த்து பூசை செய்து படப்பிடிப்புத் தொடங்கி பூசனிக்காய் உடைத்து படத்தை முடிப்பார்கள். 99.99வீதமான படங்களில் இப்படித்தான் நடக்கும்.

ஆனால் கதையும், திரைக்கதையும், இயக்கமும் ஒழுங்காக இல்லாத படங்களை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். பூசை சார்ந்த மூடநம்பிக்கைக்கும் படத்தின் வெற்றிக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை.

நாள், நேரம், பூசை, கடவுள், பூசனிக்காய் என்று படங்களை எடுத்தாலும், பொதுவாக வெளிவருகின்ற படங்களில் பெரும்பாலனவை தோல்வியுற்றுவிடுகின்றன.

ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவுமே இன்றி, நாள் பார்க்காது, நேரம் பார்க்காது, பூசை நடத்தாது, கடவுளை வழிபடாது, பூசனிக்காய் உடைக்காது எடுத்த "அமைதிப்படை" வெள்ளவிவிழா கண்டது.

குஸ்புவின் விவகாரத்திற்கு பிறகாவது சினிமாக்காரர்கள் திருந்த வேண்டும்.

அவர்கள் செருப்பைக் களற்ற வேண்டாம். தொடக்க விழாவில் நடைபெறும் மூடநம்பிக்கைகளை விலக்க வேண்டும். அவர்கள் மேடையில் செருப்போடு ஏறட்டும். மூடநம்பிக்கையின் மொத்த உருவமாக உள்ள கடவுள் சிலைகளை மேடையில் இருந்து இறக்க வேண்டும்.

பிறப்பாலும் வாழ்க்கையாலும் நானும் ஒரு இந்து தான். நான் இந்து மதத்தவனாக இருப்பதில் எனக்கும் பெருமை தான். ஆனால் இப்படியான சிறுமைத்தனமான செயல்களால் நான் சார்ந்த இந்துமதம் கேவலப்படுத்தப் படுகின்றதே தவிர பெருமைப்படுத்தப்படவில்லை என்பதே வேதனையான விடயம்.

மதம் திட்டமிட்டு கேவலப்படுத்தப்பட்டால் கேவலப்படுத்தியவரை எதிர்க்க நானும் தயார். அதற்காக எய்தவனை விட்டுவிட்டு அம்பில் நடவடிக்கை எடுப்பது முட்டாள்த் தனம்.

முன்பு ஜெயலலிதா ஆட்சியின் போது கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவின் போது மகாமக குளத்தைச் சுற்றி ஜெயலலிதா வின் 60 அடிக் கட்டவுட்டுக்கள் பல வைக்கப்பட்டு அவரது காலடியில் சாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இவ்விடயத்தை எந்தவொரு இந்து அமைப்பாவது தட்டிக் கேட்டதா?? கேட்கவில்லை. காரணம்; கேட்டிருந்தால் கேட்டவர் கஞ்சா வழக்கில் உள்ளே போயிருப்பார்.

ஒவ்வொருவரும் முதலில் எம் மதத்தை நாம் மதிக்க கற்றுக் கொள்வோம். மதத்தை கௌரவப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அதனைச் சிறுமைப்படுத்தும் செய்கைகளைச் செய்யாமலிருப்பதே அம்மதத்திற்கு நாம் செய்யும் கௌரவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை சின்னமோளக்காரியளுக்கு சாராயமும் ஆட்டிறைச்சியும் குடுத்து கோயில்மண்டபத்திலை பாம்பாட்டம் ஆட வைக்கேக்கை எங்கடை மைனர்மாருக்கு எங்கை போச்சு அறிவு? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.