Jump to content

தொலைபேசி தொல்லைபேசியான கதை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தொலைபேசி தொல்லைபேசியான கதை

டெலிபோன் மணி இடைவிடாமல் அடிச்சுக்கொண்டே இருக்கின்றது. நல்ல நித்திரையிலிருந்த என்னை எழுப்பி விட்டது. டெலிபோனை எடுப்போமா எண்டு யோசிச்சிககொண்டு நேரத்தை பார்க்கிறேன். நேரம் காலை 3.00 மணி. ஒருவேளை அம்மாதான் கொழும்பிலிருந்து அடிக்கிறாவா எண்டு நினைச்சுக் கொண்டு ஓடிப்போய் போனை எடுக்கிறேன்.

அம்மாதான் போனில்.

அம்மாவின் குரல் கேட்டதும் காலையில் பறவையினங்கள் ஒலி கேட்டால் எப்படி சந்தோசப்படுமோ அது மாதிரிதான் அம்மாவின் குரலைக்கேட்டதும் எனக்கும் சந்தோசம். கதைச்சு முடிந்தபின் மனசில ஒரு கவலை. அம்மாவின் மடியில் படுத்து ஒருமுறை பிரிஞ்சிருக்கிற துக்கத்தை நினைச்சு ஒருக்கா கண்ணீர் விட்டு அழனும் போலிருந்தது. அந்த நினைப்போடு அப்படியே தூங்கி விட்டேன்.

அதற்குள் திருப்பியும் டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரையை குழப்பிட்டுது. டெலிபோன் இப்படியா எண்ட நித்திரையை குழப்பவேணும் . கொஞ்சம் கோபமாகவே அலோ சொல்கிறேன்.

மறுமுனையில் இந்தியாவில் இருக்கிற என்னுடைய மாமா .

புதுசா ஒரு handphone வாங்கினேன்.வேலை செய்யுதா என்டு ஒருக்கா பார்க்கவேணும் என்றார்.

ஓ......அதுக்கென்ன மாமா .நீங்கள போனை வையுங்க ஒரு நிமிசத்தில் அடிக்கிறேன். நம்பரைத்தாங்கோ என்று நம்பரை வாங்கிக்கொண்டேன்.

என்ன செய்யிறது மாமாவாச்சே மாமாவுக்கு மகன் வேற இருக்கிறார். அடிக்காமல் இருக்கமுடியுமா . அவரோடும் கதைத்துவிட்டு திருப்பியும் சுருண்டு நித்திரையாகிட்டேன்.

திருப்பியும் மறுபடி டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரைய குழப்பிட்டுது.

அட கடவுளே இது என்ன திருப்பி எரிச்சலோடு நித்திரை மயக்கத்தில் அலொ என்கிறேன்.

மறுமுனையில் ஓர் உரத்த ஒலியில்

ஹாலோ கறுப்பி இருக்கிறாவா?

முன்பின் கேட்டிராத கரகரப்பான குரல் கேட்டவுடன் கொஞ்சம் பயந்துட்டேன்.

நீங்க யாருணு திருப்பி கேக்கிறேன்.

நான் தான் சாத்திரி என்கிறார்.

என்ன விசயம் என்று கேட்கத்தொடங்கியவுடனே எனக்கு ஏதும் வரண்தான் கொண்டு வந்திருக்கிறார் என்ற சந்தோசத்தில் கட்டிலில் ஏறி துள்ளிக் குதிக்கனும் போலிருந்தது.

ஆனால் அதற்குள் அவரே கறுப்பியின்ட போன் நம்பர் கிடைச்சிது . அதுதான் ஊருக்கு எடுத்த டெலிபோன் காட்டில் கொஞ்சம் கதைக்கலாம எண்டு சொல்லிச்சிது அதுதான் எடுத்தனான் எண்டு ஓர் இழுவல் கதை. அத்தோடு இணைப்பும் அறுந்து போச்சுது.

ஆ.........இது என்ன வம்பாப் போச்சே.. எண்ட சந்தோசமும் கூடவே போச்சுதே.

சாத்திரியின் நம்பரை டயரியின் பக்கங்களை தேடி எடுத்து புரட்டி போன் பண்ணுகிறேன்.

ஹலோ என்கிறேன்.

மறுமுனையில் அதே கரகரத்த குரல் ஹலோ என்றவுடன் மெளனம்.

வீட்டில் ஒரு அம்மணியின் குரல் மட்டும் மெதுவாய் கேட்கிறது.

இப்ப எதுக்காக உந்த விடியக்காலத்துல லண்டனுக்கு போன் போட்டு கதைச்சிக்கொண்டு நிற்கிறியள். தெரிங்சவங்களோட போனில கதைக்கிறதுக்கே நேரமில்லை எண்டு சந்நதம் ஆடுறிங்கள். அதுக்குள்ள உந்த கறுப்பிக்கோ காப்பிலிக்கோ போனை போட்டுக்கொண்டு..............

ஆஆஆஆஆஆஆஆஆ.......இதுக்கும் மேலே கேட்டா எண்ட காதை வெடிச்சுடும் போனை அப்படியே சத்தமில்லாம வைச்சுட்டேன்.

அப்போதான் தெரிஞ்சது அங்கே மதுரை மீனாட்சி ஆட்சி நடக்குது எண்டு. அவர் வெளியில புலி. வீட்டில பூனை எண்டு.

இப்படியெல்லாம் தொல்லைபேசியின் தொல்லை அதிகம்

Posted

ஆகா இப்பிடியெல்லாம் திட்டமிட்டு பழிவாங்க சிலபேர் கிழம்பியிருக்கிறாங்கள் எண்டு இப்பதான் விழங்கிது. என்ரை சாதகப்படி இந்த மாதம்் சனிபார்வை என்மேலை விழும் எண்டு இருந்தது அது இதுதான் போலை கறுப்பின்ரை பார்வை விழுந்திருக்கு :):lol::lol:

Posted

கறுப்பி அக்காவிற்கு ஒரு போனால இவ்வளவு தொல்லையா :) ..........என்றாலும் சாத்திரி அங்கிளை பற்றி நல்லா சொல்லி இருகிறியள் கறுப்பி அக்கா :lol: ..........நல்லா இருக்கு கதை ரசித்தேன் வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

ஆஹா............. தொலைபேசி தொல்லையாச்சுதோ இல்லையோ சாத்ரி தாத்தா வீட்டை மதுரை ஆட்சி என்று கண்டுபிடிச்ச நண்பிக்கு வாழ்த்துக்கள். ஹீஹீ

Posted

கறுப்பி, சாட்திரியில் ஆத்திரம் இருந்தால் கூப்பிட்டு நாலடி அடிச்சிருக்கலாம்.அதுக்காக இப்படியா பழிவாங்கவேண்டும்.உங்கடை கோலாலே சாத்திரியின் மனைவி என்னமா துடிச்சுபோயிட்டா பாருங்க? :):lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடடா இதுல என்ன வேதனை என்றால் கறுப்ஸ் சொல்ல வந்ததை ஒருத்தரும் சரியா விளங்கிக்கொள்ளவில்லை என்பது தான் :D சரி சரி சாத்திரி இனியாவது கறுப்பியின் குறிப்பை தூசு தட்டி கையில எடுங்கோ :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கறுப்பி அக்கா... சூப்பர்...சாத்திரி அண்ணாட நிலமை இப்படி இருக்கும் என்ரு நான் நினைச்சு பார்க்கலை. :D

Posted

கறுப்பி அக்கா... சூப்பர்...சாத்திரி அண்ணாட நிலமை இப்படி இருக்கும் என்ரு நான் நினைச்சு பார்க்கலை

டாங்சுங்கோ,என்னமா புரிஞ்சிகிறீங்க போங்க அட அட

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நல்லாக இருகிறது இந்த லோக்கல் கோல்சே பெரிய தொல்லை என்ட மனிசி சொல்லி இருக்கா சனி,ஞாயிறில இரண்டு ரிங் அடித்தவுடனே ஆன்சரிங்மேசினிற்கு செட் பண்ணிவிடுங்கோ என்று. :lol:

Posted

கதை நல்லாக இருகிறது இந்த லோக்கல் கோல்சே பெரிய தொல்லை என்ட மனிசி சொல்லி இருக்கா சனி,ஞாயிறில இரண்டு ரிங் அடித்தவுடனே ஆன்சரிங்மேசினிற்கு செட் பண்ணிவிடுங்கோ என்று.

சாமாத்தியமான முயற்சி.இதையே தொடரலாம் போலுள்ளது.

கறுப்பியின் சிறு கதை நன்றாக உள்ளது.இன்னுமொரு அத்தியாயம் கூட எழுதலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாமாத்தியமான முயற்சி.இதையே தொடரலாம் போலுள்ளது.

கறுப்பியின் சிறு கதை நன்றாக உள்ளது.இன்னுமொரு அத்தியாயம் கூட எழுதலாம். :lol:

நீங்க வாசிக்க தயார் எண்டால் நான் எழுதுறேன்.

Posted

நீங்க வாசிக்க தயார் எண்டால் நான் எழுதுறேன்.

வாசிச்சா போச்சு.

  • 2 months later...
Posted

இந்த கதையின் நடையை பார்க்கும் போது முன்பு எனக்கு பரிச்சியமான எழுத்து போலை இருக்கு

சில வேளையில் முற்பிறப்பு ஞாபகமோ தெரியலை...அது இருக்கட்டும்

ஆனால் இவர் கவிதையில் தூள் கிளப்பிறமாதிரி உரை நடை வடிவம் அந்தளவுக்கு இல்லை என்று சொல்லலாம்

இவர் இதிலும் பார்க்க நன்றாக எழுத கூடியவர் என்று மனம் எனக்கு படுகிறது. அதே நேரத்தில் அப்படி ஏன் எழுதமால் விட்டார் என்ற கேள்வியும் எழுகிறது

உண்மையாய் ஆரம்ப முயற்சியாக இருந்தால பாராட்டலாம் ...

உங்கள் கவிதை திறமை மாதிரி எதிர்காலத்தில் உரைநடை வடிவத்திலும் திறமையை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்க கதையை வாசித்து வாசித்துதான் கொஞ்சமாவது எழுதுறேன் சின்னக்குட்டி .கவிதை மாதிரி கதையும் எழுத முயற்சிக்கிறேன் . உங்கள் பதிவுக்கு நன்றி :D.என்ன செய்யிறது பதிவையும் கேட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம். சின்னக்குட்டி சொல்வது போல எழுத்தில் தொய்வு இருப்பதாகத் தோன்றினாலும், அசத்தும் படைப்பு. தொடர்ந்து படையுங்கள் கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம். சின்னக்குட்டி சொல்வது போல எழுத்தில் தொய்வு இருப்பதாகத் தோன்றினாலும், அசத்தும் படைப்பு. தொடர்ந்து படையுங்கள் கறுப்பி

நன்றி நன்றி தூயவன் .

Posted

இந்த கதையின் நடையை பார்க்கும் போது முன்பு எனக்கு பரிச்சியமான எழுத்து போலை இருக்கு

சில வேளையில் முற்பிறப்பு ஞாபகமோ தெரியலை...அது இருக்கட்டும்

ஆனால் இவர் கவிதையில் தூள் கிளப்பிறமாதிரி உரை நடை வடிவம் அந்தளவுக்கு இல்லை என்று சொல்லலாம்

இவர் இதிலும் பார்க்க நன்றாக எழுத கூடியவர் என்று மனம் எனக்கு படுகிறது. அதே நேரத்தில் அப்படி ஏன் எழுதமால் விட்டார் என்ற கேள்வியும் எழுகிறது

உண்மையாய் ஆரம்ப முயற்சியாக இருந்தால பாராட்டலாம் ...

உங்கள் கவிதை திறமை மாதிரி எதிர்காலத்தில் உரைநடை வடிவத்திலும் திறமையை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்

அட பாவி சின்னக்குட்டி இவ்வவு நாளும் என்ன கோமாவோ.இவ்வளவு பவரான சாமான் என்னவெண்டு சொன்னால் நானும் பாவிச்சு பாப்பன் தானே

Posted

அட பாவி சின்னக்குட்டி இவ்வவு நாளும் என்ன கோமாவோ.இவ்வளவு பவரான சாமான் என்னவெண்டு சொன்னால் நானும் பாவிச்சு பாப்பன் தானே

சாத்திரி ..என்னப்பா சொல்றீர் ... என்னத்தை எங்கை எப்படி எவ்விடத்திலை பாவிக்கப்போறீர் .....

பாவிக்கிறதை பற்றி ஏதோ சொல்லிறியள் ஒரு இழவும் விளங்கல்லை...

Posted

//உங்க கதையை வாசித்து வாசித்துதான் கொஞ்சமாவது எழுதுறேன் சின்னக்குட்டி ..//

அட்ரா..அட்ரா, அடி சக்கையண்டாணாம் அம்மன் கோயில் புக்கை எண்டாணாம் :D

ஏன் லண்டனில் பூகம்பம் வந்தது என்று இப்ப தானே விளங்குது :D

Posted

தொலைபேசி தொல்லைபேசியான கதை

அதற்குள் திருப்பியும் டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரையை குழப்பிட்டுது. டெலிபோன் இப்படியா எண்ட நித்திரையை குழப்பவேணும் . கொஞ்சம் கோபமாகவே அலோ சொல்கிறேன்.

மறுமுனையில் இந்தியாவில் இருக்கிற என்னுடைய மாமா .

புதுசா ஒரு handphone வாங்கினேன்.வேலை செய்யுதா என்டு ஒருக்கா பார்க்கவேணும் என்றார்.

ஓ......அதுக்கென்ன மாமா .நீங்கள போனை வையுங்க ஒரு நிமிசத்தில் அடிக்கிறேன். நம்பரைத்தாங்கோ என்று நம்பரை வாங்கிக்கொண்டேன்.

இப்படியெல்லாம் தொல்லைபேசியின் தொல்லை அதிகம்

கறுப்பிக்கு வந்தமாதிரி டிசம்பர் மாதம் விடியப்பறம் 2.40இற்கு ஒரு தொல்லையிலபோனபேசி வந்திச்சு. வேலைக்கு 4.10இற்கு எழும்பும் வவுனியனுக்கும் பிள்ளைகளுக்கும் நித்திரை குழம்பப்போகுதெண்டு அடிச்சவிழுந்து ஓடிப்போய் தொல்லையில போன பேசியை எடுத்தா மறுமுனையில இருந்து கதைச்ச சொந்தம் ''நாங்கள் புதுசா ஒரு handphone வாங்கியிருக்கிறோம் அதுதான் வேலைசெய்யுதோண்டு அடிச்சனானங்கள்" என பதில் சொல்லிச்சுது.

உங்களுக்கு தொல்லைபேசி வேலைசெய்யுதோண்டு பாக்க நாங்கள்தானா கிடைச்சோம் ? கேக்க வேணும்போலைதானிருந்திச்சு. என்னேயிறது பிறகு பொல்லாதவள் என்று சொல்லீடுவினமெண்டு கதைச்சு முடிச்சு வைச்சாச்சு.

இப்ப இரவு 9மணிக்குப்பிறகு தொல்லைபேசியை கழட்டிவிடவேண்டிய நிலையாப்போச்சு.

அவசரத்துக்கு உதவுற தொலைபேசியை தொல்லையிலபேசியாக்கின எங்கடை இலங்கை இந்திய உறவுகளின் தொல்லைமட்டுமில்லை. அகில உலகம் முழுவதிலிருந்தும் அநாமதேய தொல்லைபேசிகளும் கூடிப்போச்சு.

ஆகா இப்பிடியெல்லாம் திட்டமிட்டு பழிவாங்க சிலபேர் கிழம்பியிருக்கிறாங்கள் எண்டு இப்பதான் விழங்கிது. என்ரை சாதகப்படி இந்த மாதம்் சனிபார்வை என்மேலை விழும் எண்டு இருந்தது அது இதுதான் போலை கறுப்பின்ரை பார்வை விழுந்திருக்கு :huh::huh::huh:

கறுப்பியைப்பற்றி சின்னக்குட்டித்தாத்:தா கதையெழுதி கை ஓய முதல் சாத்திரி கறுப்பு விழுந்திட்டுதெண்டு உப்பிடி எழுதிறது சரியில்லை. :wub:

"கறுப்புத்தான் கறுப்பிக்குப் பிடிச்ச கலரு"

அதுசரி சாத்திரி உங்களுக்கே சனி பார்வை விழுந்தா எங்களுக்கு சனிதோசம் மாற சொன்ன சாத்திரிமெல்லாம் பொய்யோ ? :wub:

கிபீராமி அம்மனிட்டைச் சொல்லிதான் இனி சனிதோசம் மாத்த வேணும். :wub:

Posted

ஆஹா............. தொலைபேசி தொல்லையாச்சுதோ இல்லையோ சாத்ரி தாத்தா வீட்டை மதுரை ஆட்சி என்று கண்டுபிடிச்ச நண்பிக்கு வாழ்த்துக்கள். ஹீஹீ

மதுரையெண்டு நினைச்சு சாத்திரியின்ரை வீட்டை ஒருவரும் எரிச்சிடாதையுங்கோ.

Posted

//கறுப்பியைப்பற்றி சின்னக்குட்டித்தாத்:தா கதையெழுதி கை ஓய முதல் சாத்திரி கறுப்பு விழுந்திட்டுதெண்டு உப்பிடி எழுதிறது சரியில்லை.//

:huh::huh::wub:

//சின்னக்குட்டித்தாத்:தா //

???????????

:huh::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
:huh: கறுப்பிய வைச்சு ஒருத்தரும் காமடி கீமடி பண்ணலையே
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி! கதை நன்றாக உள்ளது. சாத்திரியிடம் லைட்டான சீன்டலும் சுகமாகத்தான் இருக்கு. தொடருங்கள். வாழ்த்துகள்!!! :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.