Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் விரைவில் ஆயுதம் ஏந்துவார்கள் - தி.மகேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 06-12-2007 23:35 மணி தமிழீழம் [மயூரன்]

தமிழ் மக்கள் விரைவில் ஆயுதம் ஏந்துவார்கள் - தி.மகேஸ்வரன்

தமிழ் மக்கள் விரைவில் ஆயுதம் ஏந்துவார்கள் என ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் காணமல் போதல்கள், ஆட்கடத்தல்கள், கப்பம் அறிவிடுதல்கள் போன்றவற்றுக்கு சிறீலங்காப் படைகளே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இச் செயல்களைக் கட்டுப்படுத்தாது போனால் தமிழ் மக்கள் வெகுவிரைவில் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா அரசாங்கம் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்துவிட்டது எனத் தெரிவித்தபோதும் பலர் வெலிக்கடை, பூசா மற்றும் காவல்துறை நிலையங்களிலும் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சிறீலங்கா அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்
:D மண்ணெண்ணைக்கு மண்டையில பிழை! தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தத் துவங்கி 30 வருஷமாச்சு ! உதுக்கு இன்னும் அது தெரியாது. பாவம் எப்படித்தான் அரசியல் நடத்துதோ தெரியாது ! உதையும் நம்பி எங்கட சனம் வாக்குப் போட்டுக் கொண்டு.... சனத்துக்கும் வேற வேலயில்ல ...!

வணக்கம் நண்பரே

இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ளுவீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், மகேஸ்வரனைப் பற்றிக் கதைப்பதற்கு என்ன அருங்கதை இருக்கின்றது? கேவலம்! ஈபிடிபி என்ற நாசகாரக் கும்பல் மகேஸ்வரனை எதிர்கொள்ள முடியாமல் தூற்றுவதற்குப் பாவித்த மண்ணெண்ணை என்ற வார்த்தையைப் பாவித்து அந்த ஆளைத் தூசிக்கின்ற அளவு போய்விட்டீர்களே??

ஒரு எதிரி சொன்னதை நீங்களும் பாவிக்கின்றபோது உங்களின் நிலமை அசிங்கமாகப் போகின்றது. சிங்கள அரசின் பேச்சாளர் ஜெயராஜ் பெனார்ண்டோப் பிள்ளை மகிந்தவோடு மகேஸ்வரன் நிற்கின்றார் சொன்னால், அதை எதிரியை நம்பித் தூசிக்கின்ற அளவு அடிப்படையறிவில்லாத கருத்தாளர்கள் சிலரை இங்கே காணமுடிகின்றது.

தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு எதிரிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், ஆதரவு தெரிவிக்கின்றவர்களையும் விட்டுவைக்காத அறிவிலிகள்.

கொழும்பில் எம்மக்கள் கொல்லப்படும் போது, சரியோ பிழையோ நின்று இப்போதும் பிரமாண்டமாகக் குரல் கொடுப்பதும், வெளிப்படுத்துவதும் மகேஸ்வரனும், மனோ கணேசனும் மட்டும் தான்.

முதலில் எதிரிகளின் சதிக்குப் பலியாகமல் கருத்தெழுதிப்பழகுங்கள். அது தான் உங்களிடம் வேண்டுவது.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு மண்ணெண்னையின் திருவிளையாடல்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.மகேஸ்வரனின் திருவிளையாடல்களை புரியாது இருப்பது சுகம் வரும் ஆள் தப்பாது போல் உள்ளது. மகேஸ்வரன் தன்னுடைய வியாபாரத்தை ஸ்திரப்படுத்தும் ஆயுதம் தான் அவரது அரசியல்.அவர் தன்னை ஸ்திரப்படுத்த என்னவும் செய்வார்? கோல் எடுப்பார்,கோலை சுழற்றவும் செய்வார்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபிக்காரனின் கேலிப்படுத்தும் வார்த்தையைப் பாவித்துக் கொண்டு, பாடம் படிப்பிக்காதீர்கள்.

மகேஸ்வரனின் வியாபாரத்திற்கு புலிகளையோ, தமிழ்மக்களையோ நம்பித் தான் செய்ய வேண்டும் என்றா இருக்கின்றது என உங்களிடம் அறிய விரும்புகின்றேன். அதனால் தான் ஏதோ தமிழ்மக்களை ஆதரிப்பது போலத் தானே உங்களின் வாதம் போகின்றது?

அப்படி வியாபாரம் செய்வதாக நீங்கள் கருதும்பட்சத்தில் அவை எப்படி தமிழ்மக்களின் மேல் தங்கியிருக்கின்றது என்பது பற்றி விளங்கப்படுத்துங்களேன்.

2. மகேஸ்வரன் டக்ளஸ் மாதிரி எதிரியை ஆதரிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும். அப்படி ஆக்குவதற்குத் தாங்கள் விரும்புகின்றீர்களா?? மகிந்தவை எதிர்த்து மரணத்தைத் தழுவுவதை விட, ஆதரித்து அவனது பாதுகாப்பில் ஆனந்தசங்கரியாரைப் போலவோ, டக்ளஸ் போலவோ அல்லது என்னும் அதை விட வசதியாகவோ வழியிருக்கின்றது.

இப்போது நீங்கள் சொல்லுவதை விட அதிக லாபத்தை அதனூடகச் சம்பாதிக்கலாம். என்ன சொல்லுகின்றீர்கள்???

தமிழீழத்தை ஆதரிக்கின்றோம் என்ற போர்வைப் போர்த்துக் கொண்டு, தமிழீழப் போராட்டத்திற்கு எதிரிகளை உருவாக்குகின்ற செய்கைகள் தான் இவை. உங்களுக்கென்ன நல்லமாதிரி வெளிநாடு வந்துவிட்டீர்கள். என்னவும் கதைக்கலாம் தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D மண்ணெண்ணைக்கு மண்டையில பிழை! தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தத் துவங்கி 30 வருஷமாச்சு ! உதுக்கு இன்னும் அது தெரியாது. பாவம் எப்படித்தான் அரசியல் நடத்துதோ தெரியாது ! உதையும் நம்பி எங்கட சனம் வாக்குப் போட்டுக் கொண்டு.... சனத்துக்கும் வேற வேலயில்ல ...!

:D:lol::) அவரின் கருத்தப் படி இவ்வளவு நாளும் பட்டாசு தான் ஏந்தியிருக்கார்கள் போலவுள்ளது.

தூயவன்

அரசியலில் பலவிதம் உண்டு. நாம் தான் அதை எடை போட வேண்டும்...........:):D:(:(.

தூயவன்

ஆனால் சிறிது காலத்துக்கு முன்னர் மகேஸ்வரனுக்கு சொந்தமான கப்பலில் விமானத்தின் உதிரிபாகங்கள் இருந்தன என்ற செய்தி வந்தது. அதன் பின்னர் அந்த கப்பலின் கப்டன் பழைய விமான உதிரிப்பாகங்களை சேகரிப்பவர் என்று ஏதோ சொல்லி அப்படியே கதையை நிறுத்திவிட்டார்கள்.

சாதாரண தமிழராய் இருந்தால் இந்த கதை எப்படி போயிருக்கும்? அவர் நிலை என்னவாகியிருக்கும்?

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரனின் கப்பலில் இருந்து வந்தது எனச் சொல்லப்பட்ட விமானம் தொடர்பான செய்தி உண்மையா என உங்களால் எப்படிச் சொல்ல முடிகின்றது?

2. அந்த விமான உதிரிப்பாகங்கள் யாருக்குத் தேவைப்படும். இலங்கையரசுக்கு அப்படிக் கொண்டு வரவேண்டிய தேவையில்லையே. ஏனென்றால் மோட்டார் செல் விடயத்தின் பின் அது அவதானமாகவே ஆயுதம் தொடர்பாக நடந்து கொள்கின்றது.

3. தமிழ் கூட்டமைப்பில் உள்ளவர்கள் முன்பு எப்படி நடந்து கொண்டார்கள் என இப்போதும் நாங்கள் கதைத்துக் கொண்டிருந்ததைப் போன்றதே மகேஸ்வரன் தொடர்பாக நீங்கள் கதைப்பதும்.

மகேஸ்வரன் தன் வியாபாரத்திற்காக இவ்வளவு செய்தான் என்ற வாதம் உண்மையாக இருக்கட்டும். தமிழீழப் போராட்டத்தை கேவலப்படுத்தவோ, அல்லது அது குறித்து எதிர்மறையான பிரச்சாரங்களிலோ, அல்லது வேறு ஏதும் நடவடிக்கைகளிலோ அவர் ஈடுபடுகின்றாரோ?? இல்லையே! இன்றும் கூட முக்கியகட்சி ஒன்றில் இருந்து கொண்டு கட்சிக்கு பணியாமல் அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார் தானே.

யாழ்ப்பாணத்தில் தமிழ் கூட்டமைப்பில் இணையுங்கள். அல்லது யாழ்பாணத்தில் நிற்காதீர்கள் என்று புலிகள் சொன்னார்கள். உண்மை தான். ஏன் என்றால் தமிழீழப் போராட்டத்திற்கான தமிழ்மக்களின் ஆதரவைக் காட்ட வேண்டிய தேவையை அன்றைக்குச் செய்ய வேண்டியிருந்தது.

அதன்படி தமிழ் கூட்டமைப்புக்கு ஆமோக ஆதரவை அத்தேர்தல் பெற்றுக் கொடுத்தது. மகேஸ்வரனும் அதற்கு இடம் கொடுத்து யாழ்பாணத்தில் போட்டியிடமாட்டேன் என வாக்குறுதியும் கொடுத்தார். செய்தும் காட்டினார். அதன் மூலம் உலகிற்கு தமிழீழப் போராட்டத்திற்கு வடக்குக்கிழக்கு மக்களின் ஆதரவைக் காட்டுவதற்குத் துணை நின்றார்.

அதன் பின்னர் கொழும்பில் அவர் நின்று வெற்றியும் பெற்றார்.

இதற்கு அப்பால் ஈபிடிபி, அரச ஊடகங்களின் அறிக்கைகளைப் படித்து விட்டு, மகேஸ்வரன் துரோகி, அவன் இவன் என்று கத்திக் கொண்டிருப்பது என்பது, மேலே சொன்னது போன்று, தமிழீழத்தின் பெயரால் எதிரிகளை உருவாக்கும் வேலையாகும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் புலத்தில் புலிகளைச் சாட்டி விசா எடுப்பதைப் போன்ற துரோகத்தனத்தைக் கூட மகேஸ்வரன் செய்யவில்லை.

தூயவன் நீங்க சொன்னது எல்லாம் நியாயமானது என்றுதான் நினைக்கின்றேன்..மகேஸ்வரனை பொறுத்தவரை அவரது குடும்பம் மனைவி சகோதரங்கள் கூட விருப்பம் இல்லாமல் தான் அரசியலில் ஈடுபடுகின்றார். மரண அச்சுறுத்தல் வீட்டு வாசலில் காத்திருக்கின்றது என்றே உறவினர்கள் எல்லாம் பயப்படுகின்றார்கள். விடாப்ப்பிடியா ஆடுமட்டும் ஆடுவோம் என்றுதான் அரசியலில் ஈடுபடுகின்றார்.

தமிழ் மக்களை பொறுத்த வரையில் அவரது நிலைப்பாடு எந்த விதத்திலும் விடுதலை போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கவில்லை என்றே நினைகிறார்கள்..

சிங்களத்தில் சரளமாக பேசக்கூடிய மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் டக்ளஸ் , ஜே.வி.பி போன்றவர்களுக்கு சிங்களத்தில் பதில் சொல்வதால் டக்ளஸ் என்ன சொல்கிறார் என்று தெரியாமல் முழிச்சுகொண்டு இருக்க சிங்கள பிரதிநிதிகள் டக்லஸ்சை பார்த்து ஏளனமாக சிரிப்பார்களாம்.

மகேஸ்வரனை தூற்றுவது நமது தலையில் நாமே மண்ணைவாரி இறைப்பதற்கு சமன்!

1) கொழும்பில் கைதுசெய்யப்பட்ட, காணமற்போன, அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பெரும்பாலானவர்கள் உடனடியாக தொடர்பு கொள்வது மனோகணேசன் அல்லது மகேஸ்வரன். அவர்கள் வழங்கும் ஆலோசனைப்படி அல்லது சிறு உதவிகள் மூலம்தான் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வருவதும் இவர்கள்தான். இந்த வகையில் இன்று பிரச்சனைகளின் போது கொழும்புவாழ் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்களே!

2) மகேஸ்வரனுக்கு நெருக்கமான ஒருவர் போலிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், மகேஸ்வரனால் அவரை விடுவிக்க முடியாது உள்ளது! ஆனால் சில வரப்பிரசாதங்களை கைது செய்யப்பட்வரின் குடும்பத்தினருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் காணமல் போதல்கள், ஆட்கடத்தல்கள், கப்பம் அறிவிடுதல்கள் போன்றவற்றுக்கு சிறீலங்காப் படைகளே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இச் செயல்களைக் கட்டுப்படுத்தாது போனால் தமிழ் மக்கள் வெகுவிரைவில் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்று அவர் குறிப்பிட்டது, அவரது தொகுதியான கொழும்பிலே இடம்பெறும் ஆட்கடத்தல் கப்பம் அறவிடுதல் போன்றவற்றையே ஆகும். செய்தித் தொகுப்பிலோ அல்லது அவரின் வார்த்தை பிரயோகத்தில் தவறு நிகழ்ந்திருக்கலாம். வட கிழக்கில் வாழும் தமிழ் மட்டும் பேசத்தெரிந்த கீழ்தட்டு மக்கள் அனைவரும் புலிகள் என்ற தீர்மாணத்திற்கு சிறிலங்கா எப்போதோ வந்துவிட்டது. தற்போது கொழும்பில் சொந்த மாடிமனைகளில் வசிக்கும், சன் தொலைக்காட்சியின் நாடகங்கள் மற்றும் சினிமா மட்டும் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரருடன் ஆங்கிலத்தில் இனப்பிரச்சனையை தவிர்த்து, பொதுவான அரசியல் பேசுகின்ற மேற்தட்டு மக்கள் மட்டுமே அப்பாவித் தமிழர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். மகேஸ்வரன் கூறுவது போல இவர்கள் ஆயுதம் தூக்குவது என்பது வெறும் பகற்கனவே.

3) தனிப்பட்ட வாழ்விலும் சரி அரசியலிலும் சரி வருமானத்தை பெருக்குவது இன்றியமையாத தேவையாக இருக்கிறது. பணம் இல்லாமல் ஏனையவருக்கு உதவ முடியாதது மட்டுமின்றி மற்றையவருக்கு பாரமாகவே இருக்க வேண்டி ஏற்படும். அப்படிப் பார்த்தால் மனோகனேசன் கூட அரசியலுக்கு முன் கடிகார தொழிலகம், வாகனங்கள் வாடகைக்கு விடுவது போன்றவற்றுடன் ஆரம்பித்து பின்னர் சிறிய அடியாட்கள் கூட்டத்தை கொண்ட ஒரு கட்டைப் பஞ்சாயத்து தாதாவாகவே விளங்கினார். இன்று அவர் செய்யும் சேவை, மற்றும் தனித்து நின்று செயற்படும் துணிவு என்பன போற்றத்தக்கது.

ஒரு சுவரொட்டிக்கோ, அல்லது காணாற்போனோரின் உறவினர்கள் கூட்டத்திற்கான மண்டப வாடகையையோ அவரேதான் பொறுப்பேற்கிறார். இவர்கள் வியாபாரம் செய்வதாக குற்றம் சாட்டுவோர் இதற்கான செலவுகளுக்கு வழிவகைகளை சொல்லட்டும்!

அனைத்து தமிழ் மக்களும் ஆயதங்களைக் கையில் எடுக்கும் காலம் வெகுவிரைவில் மலரும் என மகேஸ்வரன் எம்.பி.

[06-12-2007 6.00pm]

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினால் கப்பம் பெறல், ஆள்கடத்தல் மற்றும் கொலைகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் தெரிவித்தார். இந்த நிலையைத் தடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிடின், அனைத்து தமிழ் மக்களும் ஆயதங்களைக் கையில் எடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என மகேஸ்வரன் எம்.பி. மேலும் கூறினார்.

அண்மையில் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், பூசா, வெலிகடை மற்றும் கொழும்பைச் சூழவுள்ள பொலிஸ் நிலையங்களில் தொடர்ந்தும் ஏராளமானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என மகேஸ்வரன் எம்.பி. அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

ரி.மகேஸ்வரன் எம்.பி.யின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, மகேஸ்வரன் எம்.பி.யின் ஆதங்கமே இவ்வாறு கூச்சலாக வெளிப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன், மகேஸ்வரன் எம்.பி.யின் கப்பல் ஓடாததே அவரது ஆதங்கம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இது தமிழ் மக்கள் மீதுள்ள ஆதங்கம் அல்லவெனவும், இது வர்த்தக ரீதியிலான உணர்வு எனவும் அமைச்சர் அபேகுணவர்தன இதன்போது குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் எம்.பி. யாரைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார் என்பதை எண்ணிப்பார்க்க முடியாதிருப்பதாகவும், தமிழ் மக்களையா? கைது செய்யப்பட்டவர்களையா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சியையா? அல்லது வர்த்தக சமூகத்தையா? ஏன்பது குறித்து குழப்பமாக உள்ளதான அமைச்சர் கூறியுள்ளார்.

கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறியக் கூடாது எனவும் மகேஸ்வரன் எம்.பி.யை நோக்கி அமைச்சர் அபேகுணவர்தன தெரிவித்தார்.

LankaDissent

அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன பறவாயில்லை போலிருக்கிறது!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், உங்களின் மகேஷ்வரன் மீதான அபிமானம் என்பது உங்களின் விருப்பமும் உரிமையும். நீங்கள் தாக்கப்பட்டிருந்தால் மன்னியுங்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி,

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மகிந்தவின் கட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன ? டக்கிளஷ் இருப்பது மகிந்தவின் கட்சியில், மகேஷ்வரன் இருப்பது ஐக்கிய தேசியக் கட்சியில்.

புலிகள் மகேஷ்வரனை வடக்கு கிழக்கில் தேர்தலில் நிக்க வேண்டாம் என்று கூறியதும் கொழும்பில் தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏன்?

ஏன் மகேஷ்வரனால் தமிழர் கூட்டமைப்பில் இணைந்து தமிழருக்கு சேவையாற்ற முடியாது ?

மகேஷ்வரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலும் மகிந்தவின் கட்சியிலும் உள்ள மரியாதை என்ன ?

நான் மகெஷ்வரனை விமர்சித்தது அவர் மண்ணெண்ணெய் வியாபாரம் செய்வதினால் அல்ல. மாறாக தமிழர் இனிமேல்தான் ஆயுதம் தூக்க வேண்டும் என்று சொன்னதினால்.

நீங்கள் சோனது போல் நான் தினமுரசைப் பார்த்துவிட்டு அவரை மண்ணெண்ணெய் என்று கூறுவதாக நீங்கள் நினைத்தால் , அதே தினமுரசில் சங்கரியை அழுங்குச் சங்கரி என்று கூறுவதால் சங்கரி ஒன்றும் தமிழ் ஆதரவாளர் ஆகி விட முடியுமா ?

டக்கிள்சால் விமர்சிக்கப்படுவதால் மட்டுமே ஒருவர் தமிழீழ ஆதரவாளர் ஆகி விட முடியாது !

கொழும்பில் அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறுகிறீர்கள். நல்லது, அவர் தான் அங்கம் வகிக்கும் கட்சியின் பேரினவாதப் போக்குக்கு எதிராக குரலெழுப்பிய ஒரு சந்தர்ப்பம் கூறுங்கள்.

என்ன சொல்ல வருகிறீர்கள் தூயவன் ? தற்செயலாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இவர் தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு வருவாரா ? அப்போது இவர் இன்னொரு டக்கிளசாக இருப்பார்.

தூயவன், அடிப்படையைப் புரிந்து கொள்ளுங்கள். சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்த எல்லாத் தமிழ் அரசியல்வாதிகள் பற்றியும் கேள்விப்பட்டு இருக்கிறோம். தமிழீழத்திற்குச் சார்பாக பேசியும் போரிட்டும் வந்த ஒரு அரசியல் வாதியைக் காட்டுங்கள். நான் சொன்னதை முற்றாக வாபச் வாங்குகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

மகேஷ்வரன் புராணம் உங்களுடன் இருக்கட்டும்.அதற்காக அகதி, புலிகளைக் காட்டி வெளிநாடு வந்தவர் என்னும் கதை வேண்டாம். நாங்கள் எங்களின் கல்வித்தகமையினாலும், தொழில் அநுபவத்தினாலும் வெளிநாடு வந்தவர்கள். புலிகளைக் காட்டி வரவேண்டிய அவசியமில்லை. இன்றும் போராட்டத்திற்கு எம்மாலான உதவிகளைச் செய்து வருபவர்கள். ஈழம் அடைய வேண்டும் என்பதற்காக புலிகளுடன் இணைந்த எனது தம்பியை ஆனையிறவுச் சமரில் இழந்தவன் நான். நான் புலிகளைக் காட்டி இங்கு வரவேண்டிய அவசியமில்லை.

வெளிநாடு வந்தவர் எல்லாம் துரோகியுமில்லை, உள்நாட்டில் இருப்பவர் எல்லாம் புலிகளுக்காக உயிர் கொடுப்பவருமில்லை. நாம் வெளிநாட்டில் இருப்பதுதான் உங்கள் பிரச்சனை என்றால் தலைப்பை மாத்துங்கள். நாம் வேறு தலைப்பில் வாதாடலாம்.

எமது அடிப்படை அறிவுபற்றிக் கதைப்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ?

நாங்கள் இங்கு கதைப்பது உமதும் எனதும் அடிப்படை அறிவைப்பற்றியல்ல என்று நினைக்கிறேன். வாதம் தலைப்புடன் இருப்பது நல்லது. தனிநபர் தாக்குதலாக அமைய வேண்டாம் என்று நினைக்கிறேன்.

ரகுநாதநின் வாதமும் பொறுழும் சரியாதே..

மகேஷ்வரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலும் மகிந்தவின் கட்சியிலும் உள்ள மரியாதை என்ன ?

என்ன சொல்ல வருகிறீர்கள் தூயவன் ? தற்செயலாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இவர் தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு வருவாரா ? அப்போது இவர் இன்னொரு டக்கிளசாக இருப்பார்.

இதுதான் நூறு வீதம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரிய வியாபார காந்தங்களே இலங்கைய விட்டு இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடுகிறார்கள்.மண்ணெண்னை மகேஸ்வரனால் மட்டும் அதுவும் ஒரு வடபகுதி தமிழர் பல கோடி ருபா வியாபாரத்தை அதுவும் கொழும்பில் தொடர்கிறார் என்றால் நிச்சயமாக ஏதோ நாடகம் நடக்கிறது.

மகேஸ்வரன் தூக்கத்தில் புலம்புகிறார். இன்னமும் விழிக்கவில்லை. அதனால்தான் "விரைவில் ஆயுதம் ஏந்துவார்கள்" என்று கூறியுள்ளார். ஆயுதப் போராட்டம் கூர்ப்படைந்து நிற்கும் இக் காலத்தில் இவ்வாறான கருத்தைத் தெரிவித்தது ஒரு அரசியல் போலித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன், களத்தில் வந்து ஏதாவது எழுதினால், அதற்கு நல்ல எதிர்க்கருத்து எழுத முடியாவிட்டால் இரண்டு கடைசி அஸ்திரங்களை விடுவார்கள் சிலர்: ஒன்று- புலத்தில் சொகுசாக இருந்து கொண்டு கருத்தெழுதுகிறோம் என்பது இரண்டு: பங்களிப்பில்லாமல் கருத்துச் சொல்கிறோம் என எள்ளுவது. புலத்தமிழரின் பங்களிப்புப் பற்றி தமிழர் தலைமை தெளிவாக இருக்கையில், யாரோ சொல்வதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். தமிழர்களைப் புலத்தமிழர் தாயகத் தமிழர் என்று பிரிக்கவே இப்படித் ததே போர்வை போர்த்திக் கொண்டு சிலர் இங்கே திரிகிறார்கள். பங்களிப்பு? நீங்கள் சொல்லி விட்டீர்கள். ஆனால் பங்களிப்பைச் சொல்லிச் சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ளும் நிலையிலா எமது போராட்டம் இருக்கிறது? இது புரியாமல் தாங்கள் தான் பங்களிப்புச் சான்றிதழ் கொடுப்போர் மாதிரி எழுதுவோரும் வலம் வருகிறார்கள் இங்கே. வேடிக்கை என்னவென்றால் கூடவே மற்றவர்களை இவர்கள் அறிவிலிகள் என அழைப்பது தான்!

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், உங்களின் மகேஷ்வரன் மீதான அபிமானம் என்பது உங்களின் விருப்பமும் உரிமையும். நீங்கள் தாக்கப்பட்டிருந்தால் மன்னியுங்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி,

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மகிந்தவின் கட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன ? டக்கிளஷ் இருப்பது மகிந்தவின் கட்சியில், மகேஷ்வரன் இருப்பது ஐக்கிய தேசியக் கட்சியில்.

1வது மகேஸ்வரனின் மேல் எனக்கு தனிப்பட்ட அபிமானத்தால் தான் அவரை ஆதரித்துக் கதைக்கின்றேன் என்ற மாதிரி திசை திருப்பப்படுவதை வன்மையாக மறுக்க வேண்டியுள்ளது.

மேலே நான் சொன்னது போன்று சொல்லிலும் செயலிலும் தமிழீழப் பற்றாளராக இருக்கின்ற ஒருவரை அவமதிக்கின்ற சொல்லில் ஏன் வசைபாடுகின்றீர்கள் என்பது தான் என் கேள்வி.

மகேஸ்வரன் தான் சார்ந்திருக்கின்ற கட்சிக்காக டக்ளஸ் போ நடந்து கொள்ளுவார் என்பதை எப்படித் தீர்மானித்தீர்கள்?? நீங்கள் என்ன தீர்க்கதரிசியா? ஐக்கியதேசியக் கட்சியில் இருந்தபோதும் அவசரகாலத்திற்கு எதிராகத் தான் அவர் சென்ற வாரம் வாக்களித்துமுள்ளார். அவ்வாறு தான் மேலக மக்கள் முன்ணனியும், அதன் தலைவரான திரு.மனோ கணேசனும் ஐக்கியதேசியக் கட்சி சார்ந்த ஒரு அரசியலைத் தான் செய்து கொண்டுமிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக அவரும் டக்ளஸ் போல நடந்து கொள்வார் என்று வசை பாடுவீர்களா?

புலிகள் மகேஷ்வரனை வடக்கு கிழக்கில் தேர்தலில் நிக்க வேண்டாம் என்று கூறியதும் கொழும்பில் தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏன்?

ஏன் மகேஷ்வரனால் தமிழர் கூட்டமைப்பில் இணைந்து தமிழருக்கு சேவையாற்ற முடியாது ?

மகேஷ்வரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலும் மகிந்தவின் கட்சியிலும் உள்ள மரியாதை என்ன ?

மகேஸ்வரன் கொழும்பில் நிற்கக்கூடாது என்ற விதி ஒன்றுமில்லையே? அவர் அங்கு நிற்பதில் என்ன தவறைக் கண்டீர்கள். இந்த நேரத்தில் என்னுமொன்றைச் சொல்ல வேண்டும். கொழும்பில் வழமையாகத் தேர்தலில் செல்லச்சாமி, இராதாகிருஸ்ணன், மனோ கணேசன் போன்றவர்கள் தான் போட்டி போடுவார்கள். அதிலே பெரும்பாலும் ஒருவர் தான் தெரிவாவார். 2பேர்(நிகழ்ந்ததே இல்லை எனலாம்) தெரிவானால் கூட அதில் மனோ கணேசனைத் தவிர, மற்றவர் 2 பேரும் அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தான் நடந்து கொள்பவர்கள். தற்போதும் நடந்து கொள்கின்றார்கள்.

இதில் 4ம் சக்தியாக மகேஸ்வரன் உருவெடுப்பதில் என்ன தவறு. அவர் செல்லச்சாமி, இராதக்கிருஸ்ணனைத் தவிர எவ்விதத்தில் குறைந்து போய்விட்டார்.

மகேஸ்வரன் தமிழ்கூட்டமைப்பில் சேராமைக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ்கூட்டமைப்புக்கு எதிராக நடக்கக் கூடாது என்பதற்காக ஒதுங்கியமை பாராட்டத்தக்கது.

நான் மகெஷ்வரனை விமர்சித்தது அவர் மண்ணெண்ணெய் வியாபாரம் செய்வதினால் அல்ல. மாறாக தமிழர் இனிமேல்தான் ஆயுதம் தூக்க வேண்டும் என்று சொன்னதினால்.

நீங்கள் சோனது போல் நான் தினமுரசைப் பார்த்துவிட்டு அவரை மண்ணெண்ணெய் என்று கூறுவதாக நீங்கள் நினைத்தால் , அதே தினமுரசில் சங்கரியை அழுங்குச் சங்கரி என்று கூறுவதால் சங்கரி ஒன்றும் தமிழ் ஆதரவாளர் ஆகி விட முடியுமா ?

டக்கிள்சால் விமர்சிக்கப்படுவதால் மட்டுமே ஒருவர் தமிழீழ ஆதரவாளர் ஆகி விட முடியாது !

மகேஸ்வரன் சொன்னது பற்றி வார்த்தைப் பிரயோகம் அர்த்தம் மாறுப்பட்டது குறித்த சாணக்கியனின் பதில் போதுமானது. மகேஸ்வரனையோ அல்லது பிறரையோ விமர்சனம் செய்வதைப் பற்றிப் பிரச்சனையில்லை. ஆனால் நான் உங்களிடம் கேட்டது, ஏன் துரோகிகள் அவமானப்படுத்தப் பாவித்த வார்த்தைப் பாவிக்கின்றீர்கள் என்று.

கொழும்பில் அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறுகிறீர்கள். நல்லது, அவர் தான் அங்கம் வகிக்கும் கட்சியின் பேரினவாதப் போக்குக்கு எதிராக குரலெழுப்பிய ஒரு சந்தர்ப்பம் கூறுங்கள்.

என்ன சொல்ல வருகிறீர்கள் தூயவன் ? தற்செயலாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இவர் தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு வருவாரா ? அப்போது இவர் இன்னொரு டக்கிளசாக இருப்பார்.

தூயவன், அடிப்படையைப் புரிந்து கொள்ளுங்கள். சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்த எல்லாத் தமிழ் அரசியல்வாதிகள் பற்றியும் கேள்விப்பட்டு இருக்கிறோம். தமிழீழத்திற்குச் சார்பாக பேசியும் போரிட்டும் வந்த ஒரு அரசியல் வாதியைக் காட்டுங்கள். நான் சொன்னதை முற்றாக வாபச் வாங்குகிறேன்.

ரணில் வந்தப்புறம் தான் மகேஸ்வரன் கட்சியில் இணைந்தும் கொண்டார். கடந்த 15 வருடங்களில் ரணிலின் ஆட்சியின்போது, சமாதானகாலத்தில் தான், ரணில் ஆட்சியில் நிர்வாகம் செலுத்தியிருக்கின்றார். இதை விடப் ஆட்சியில் நேரடியாகத் தன் பேரினவாதக் குள்ளநரித்தனத்தை அவர் வெளிப்படையாகச் செய்யவில்லை. ரணில் எதிர்காலத்தில் யுத்தத்தைப் பொறுப்பெடுத்தால் செய்துகொள்வார் என்பது அவரின் சமாதானகால குள்ளநரித்தனம் வெளிப்படுத்திய ஒன்று. ஆனால் ஐக்கியதேசியக்கட்சியில் மகேஸ்வரன் இணைந்தபின்னர் எவ்வித யுத்தநடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டதில்லை. எனவே யுத்தநடவடிக்கையில் ஈடுபடாதவரைக்கும் மகேஸ்வரன் எதிராக்க குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்பது என்ன அர்த்ததில் என்பது எனக்குப் புரியவில்லை.

தற்செயலாக பதவிக்கு வந்தால், டக்ளஸ் மாதிரி இருப்பாரா என்று நீங்கள் கேட்பது எல்லாம், உங்களைப் போன்ற தீர்க்கதரிசியால் தான் பதில் பெறமுடியும். என்னால் அல்ல. ஆனால் இப்படி திட்டித் திட்டியே எதிரான போக்கு வரவைத்து வெற்றியடைந்து விடுவீர்கள் என்பதை மட்டும் நான் நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டெந்துவார்கள்........ என்பதை ஆயுதமெந்துவார்கள் என்று மாறி கூறிவிட்டார் கோபபடாதீர்கள்.

( ஒரு வேளை ......... கொழும்பில் குண்டுகள் மட்டுமே இதுவரையில் வெடித்திருக்கின்றது. ஆயுத சண்டை என்றால்....கொழும்புத் துறைமுக தாக்குதல் மட்டும்தான்........ அவ்வாறன தாக்கதல்களைத்தான் சொன்னாரோ புரியவில்லையே)

அல்லல ஆயுதமெந்திய தமிழரை வைத்து காமெடி கிமெடி பண்ணுறாரோ????????????

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

மகேஷ்வரன் புராணம் உங்களுடன் இருக்கட்டும்.அதற்காக அகதி, புலிகளைக் காட்டி வெளிநாடு வந்தவர் என்னும் கதை வேண்டாம். நாங்கள் எங்களின் கல்வித்தகமையினாலும், தொழில் அநுபவத்தினாலும் வெளிநாடு வந்தவர்கள். புலிகளைக் காட்டி வரவேண்டிய அவசியமில்லை. இன்றும் போராட்டத்திற்கு எம்மாலான உதவிகளைச் செய்து வருபவர்கள். ஈழம் அடைய வேண்டும் என்பதற்காக புலிகளுடன் இணைந்த எனது தம்பியை ஆனையிறவுச் சமரில் இழந்தவன் நான். நான் புலிகளைக் காட்டி இங்கு வரவேண்டிய அவசியமில்லை.

போராட்டத்திற்காக நீங்கள் செய்து வருகின்ற உதவியையும், தம்பியை தாயகமண்ணிற்கு உவர்ந்தளிர்த்தற்கும் தலை கூர்ந்து வணங்குகின்றேன்.

ஆனால் அதற்காக வமம்புக்கிழுத்துப் பகையை உருவாக்கலாம் என்ற உரிமையிருக்கின்றதா? நான் புலத்தமிழர்களைப் பற்றிச் சொன்னது என்னவென்றால் சிலர் புலத்தில் புலிகளால் பிரச்சனை என்று சொல்லித் தான் அகதி கேட்கின்றார்கள். இல்லையென்கின்றீர்களா? அது எப்படிப் புலிகளைப் பாதிக்கின்றது என்றால், இண்டைக்கு உலகம் தடை செய்வதற்கு அதுவும் ஒரு மறைமுகக் காரணமாக மாறுகின்றது. ஆதைத் தான் சொன்னேன். அந்தளவு தப்பைக் கூட மகேஸ்வரன் செய்யவில்லை என்பது தான் நான் சொல்லவந்தது.

மேலும் பொதுவாகத் தான் சாடியிருந்தேன். மேலே எழுதிய வசனமாகிய ...

ஒரு எதிரி சொன்னதை நீங்களும் பாவிக்கின்றபோது உங்களின் நிலமை அசிங்கமாகப் போகின்றது. சிங்கள அரசின் பேச்சாளர் ஜெயராஜ் பெனார்ண்டோப் பிள்ளை மகிந்தவோடு மகேஸ்வரன் நிற்கின்றார் சொன்னால், அதை எதிரியை நம்பித் தூசிக்கின்ற அளவு அடிப்படையறிவில்லாத கருத்தாளர்கள் சிலரை இங்கே காணமுடிகின்றது.

என்பது கூட உங்களைச் சாடுவதற்காக அல்ல. பிறிதொருப்பில் வந்ததைப் பற்றிய ஒரு கருத்தைச் சொன்னேன்

ஆனால் சாதராணமாக இப்படிச் சொன்னதற்கே, உங்களுக்கு ரோசமும், கோபமும் பொத்திக் கொண்டு வருதென்றால் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவு தேடவேண்டிய நிலையில், அவர்களை இழந்து, சிறுமைப்படுத்தும் உங்களது வசனங்கள் அவர்களை எவ்வளவு தூரம் வலிக்கச் செய்யும்.

எமது அடிப்படை அறிவுபற்றிக் கதைப்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ?

நாங்கள் இங்கு கதைப்பது உமதும் எனதும் அடிப்படை அறிவைப்பற்றியல்ல என்று நினைக்கிறேன். வாதம் தலைப்புடன் இருப்பது நல்லது. தனிநபர் தாக்குதலாக அமைய வேண்டாம் என்று நினைக்கிறேன்

:D:D:D:D உங்களுக்கே இப்படிச் சொன்னவுடன் வருகின்ற கோபம் மற்றவர்களுக்கும் வரும் என்பதைப் புரியாத வரை முதல் சொன்ன வசனம் எவ்விதத்திலும் தப்பில்லை. உங்களுடைய அடிப்படை அறிவுபற்றி எவ்விதத்திலும் நான் அறியேன். வார்த்தைப் பிரயோகங்்களையும் வைத்துத் தான் அறிந்து கொள்ளமுடியும். அறிந்து கொண்டுமுள்ளேன்.

நன்றி.

இந்த பெரிய வியாபார காந்தங்களே இலங்கைய விட்டு இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடுகிறார்கள்.மண்ணெண்னை மகேஸ்வரனால் மட்டும் அதுவும் ஒரு வடபகுதி தமிழர் பல கோடி ருபா வியாபாரத்தை அதுவும் கொழும்பில் தொடர்கிறார் என்றால் நிச்சயமாக ஏதோ நாடகம் நடக்கிறது.

கொழும்பில் மகேஸ்வரன் மட்டுமல்ல, மனோ கணேசன், தமிழ் கூட்டமைப்பினர், 3 லட்சம் தமிழ்மக்கள், உங்களின் உறவினர்கள் போன்றோர்கள் இன்னமும் வசிக்கின்றார்கள் என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன், களத்தில் வந்து ஏதாவது எழுதினால், அதற்கு நல்ல எதிர்க்கருத்து எழுத முடியாவிட்டால் இரண்டு கடைசி அஸ்திரங்களை விடுவார்கள் சிலர்: ஒன்று- புலத்தில் சொகுசாக இருந்து கொண்டு கருத்தெழுதுகிறோம் என்பது இரண்டு: பங்களிப்பில்லாமல் கருத்துச் சொல்கிறோம் என எள்ளுவது. புலத்தமிழரின் பங்களிப்புப் பற்றி தமிழர் தலைமை தெளிவாக இருக்கையில், யாரோ சொல்வதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். தமிழர்களைப் புலத்தமிழர் தாயகத் தமிழர் என்று பிரிக்கவே இப்படித் ததே போர்வை போர்த்திக் கொண்டு சிலர் இங்கே திரிகிறார்கள். பங்களிப்பு? நீங்கள் சொல்லி விட்டீர்கள். ஆனால் பங்களிப்பைச் சொல்லிச் சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ளும் நிலையிலா எமது போராட்டம் இருக்கிறது? இது புரியாமல் தாங்கள் தான் பங்களிப்புச் சான்றிதழ் கொடுப்போர் மாதிரி எழுதுவோரும் வலம் வருகிறார்கள் இங்கே. வேடிக்கை என்னவென்றால் கூடவே மற்றவர்களை இவர்கள் அறிவிலிகள் என அழைப்பது தான்!

வணக்கம் ஜஸ்ரின்

ஜேசுநாதரைப் பற்றி நான் சொன்னதை வைத்துக் கொண்டு, உங்களின் குள்ளநரித்தனமான சீண்டலோடு இங்கு கருத்தெழுதியிருக்கின்றீர்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.