Jump to content

படைபாளி..


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

புத்தனிற்கு ஒரு ஆசை யாழ்கள உறவுகள் நிறைவேற்றுவார்கள் என்று ஒரு நம்பிக்கை அதாவது படைபாளி என்று ஓர் கட்டுரை அல்லது தொடர்கதை ஆரம்பிக்க உள்ளேன் உங்களது ஆதரவை நாடி நிற்கிறேன்.

அன்று வெள்ளிகிழமை வார இறுதி சஞ்சிகைகளிற்காக படைப்புகளை படைத்து கொண்டிருந்தான் சிவா இயற்கை தனது இயற்கையான குணங்களை வெளிபடுத்தியது திடிரேன மனிதர்கள் போல மணம் மாறியது வெயில் அடித்தது திடிரேன மழை கொட்டியது அத்துடன் பனிசாரலும் தூவின சிட்னியில் சிவா ஒரு சிறந்த எழுத்தாளன்,இலக்கியவாதி பலராலும் போற்றபடும் ஓர் படைபாளி சொந்த பெயரிலும் எழுதுவார் புனைபெயரிலும் எழுதுவார் பாடசாலையில் படிக்கும் போதே அவனிற்கு கதை,கட்டுரைகள் எழுதுவது என்றால் அவனுக்கு ரொம்பவே பிடித்த விடயம் அதிலும் புராண கதைகள்,ஆத்மீக கதைகள் என்றால் சொல்லவே வேண்டாம் கற்பனை வளம் அதிகம் நிறைந்தவன் இந்திய படைப்புகள் அவனை ரொம்பவே பாதித்திருந்தது.அவனது ஆசிரியர்கள் ஏதாவது சந்தேகம் இருந்தால் இவனிடம் தான் கேட்டு தீர்த்து கொள்வார்கள் அவ்வளதிற்கு அவனொரு சுழியன் இலக்கியத்திலும் புராணத்திலும் ஏன் தற்கால சினிமாவிலும் இதனால் அவனிற்கு அவனை அறியாமலே ஒரு தலைகணம் உண்டு.

அப்பா "கோல் வோ யூ" என்று மகள் தொலைபேசியை நீட்டினாள் மறுமுனையில் நான் கண்ணண் கதைகிறேன் என்று கேட்க மறுமுனையில் கண்ணண் கதைகிறேன் தெரிகிறதோ என்று கேட்க எந்த கண்ணண் என்று இழுத்தான் சிவா?உடனே கண்ணணும் மச்சான் மதவடி ஒழுங்கை கண்ணண் கதைகிறேன் என்றவுடன் தான் சிவாவிற்கு புரிந்தது தன்னுடன் ஒன்றாக படித்த கண்ணண் என்று என்னடப்பா சிவா உன்ட பெயர் இங்கு சிட்னியில் தெரியாத ஆட்களே இல்லை போல் கிடக்குது அவ்வளவு பிரபல்யமா இருகிறாய் நான் நேற்று தான் கனடாவில் இருந்து வந்தனான் உன்னொருக்கா சந்திக்க வேண்டும் எப்ப உனக்கு வசதி என்று சொல்ல எஅலுமோ என்றான் நாளை காலை 8 மணிக்கு வாடாப்பா என்று சிவாவிற்கு அன்பு கட்டளை இட்டான்.

தொடரும்....

அன்பர்களே எனது மெகாசீரியலை நேரம் கிடைக்கும் போது அவ்வபோது தருகிறேன்..எதிர்பாருங்கள் இது கொஞ்சம் ஓவரா தான் இருக்குது என்று எனகே புரிகிறது பட் என்ன செய்ய இது யாழ்களம் ஆச்சே.அவன் நினைகிறான் புத்தன் கிறுகிறான் :lol:

Posted

புத்தா.....

தொடர்கதையை அங்குலம் அங்குலமாக நகர்த்திற திறமையை எங்கே இருந்து பெற்றாயப்பா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன் உங்க கதை தொடக்கமே நல்லா இருக்கு. கதையெல்லாம் முந்தி எழுதியிருக்கிறிங்களா.

வாழ்த்துகள். தொடருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி ஆதிவாசி என்ட அப்பர் அங்குலம் அங்குலமாக தான் பக்கத்து வீட்டு வளவை பிடித்தவர் அது தான் நானும் தொடர்கதையை அப்படி எழுதுகிறேன். :)

நன்றி சின்னகுட்டி வாழ்த்திற்கு. :unsure:

புத்தன் உங்க கதை தொடக்கமே நல்லா இருக்கு. கதையெல்லாம் முந்தி எழுதியிருக்கிறிங்களா.

வாழ்த்துகள். தொடருங்கோ

உந்த நக்கல் தானே வேண்டாம் என்கிறது மண் தோன்றி கல் தோன்றா காலதிற்கு முதலே தொடர் கதை எழுதிய மூத்தகுடிமகன் நான் நன்றி கறுப்பி <_<

Posted

அட அட புத்து மாமாவும் தொடர்கதை எழுத போறியளா எழுதுங்கோ எழுதுங்கோ நான் ஆவலாக வாசிக்க காத்திருகிறேன் :) ....என்ன மெகா சீரியலோ அப்ப அழுகை சீன் எல்லாம் வருமோ நேக்கு உந்த அழுகை சீன் எல்லாம் பிடிகாது :unsure: பாருங்கோ ம்ம் படைப்பாளி தொடரை சுவைக்க நானும் ஆவலுடன் காத்திருகிறேன்!! <_<

அப்ப நான் வரட்டா!!

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீண்ட நாட்களிற்கு பின் சந்தித்த நண்பர்கள் இருவரும் கட்டியணைத்து சுகம் விசாரித்து கொண்டனர் சிவா உன்னுடைய படைப்புகள் புலத்தில் பிரபலயமாக இருக்க என்ன காரணம் என்று கேட்டான் சுரேஷ்.புலத்தை பொறுத்தமட்டில் படைப்புகள் எல்லாம் நடுதர மற்றும் மேல்தட்டு வர்க்கதிற்கு ஏற்ற மாதிரி இருந்தா போதும்.அதிலும் இங்கு தமிழில் வாசிக்க கூடிய அதிகமானோர் ஊரில் அந்த பழைய அந்த சாக்கடையில் ஊரிய மட்டைகள் அவர்களிற்கு ஏற்ற மாதிரி இரண்டு ஆத்மீக கதைகளையும்,புராண கதைகள்,கம்பன் கதைகள்,யேசு காவியங்கள்,குடும்ப சண்டைகள் விபாரத்துகள் ஏன் மனித சாமிகள் அவற்றை மையமாக வைத்து படைப்புகளை படைத்தால் அது எப்படியாவது எடுபட்டு விடும் அப்படியும் நீ பிரபல்யமாக முடியாதுவிடில் தமிழ் தேசியதிற்கு எதிரான கருத்தை கூறி பிரபலயம் பெற்று விடலாம் இப்படியாக பிரப்லயம் பெற்று விட்டால் புலத்தில் வாழும் எமது சமுகதில் பிரபல்யம் அடைந்துள்ளது.இலக்கியவாதிகள் சங்கம் என்று ஒரு சங்கம் அமைத்து அதற்கு தலைவர் என்ற பட்டமும் பெற்று விடலாம்.இன்று எவனும் கதை எழுத வேண்டுமெனில் ஒரு புளோக்கை திறந்து கதை என்று கிறுக்கி தள்ளுறார்கள் சிலர் எழுத்து பிழை இலக்கண பிழை விட்டு எழுதுறார்கள் சில சின்ன பெடியன்கள் எதை எழுதுவது என்று தெரியாமல் சும்மா கிறுக்கி தள்ளுறார்கள் அந்த படைப்புகளையும் நல்ல படைப்புகள் என்று அவர்களை தூக்கி பிடிக்க ஒரு கோஷ்டி இருக்கிறது எனக்கு உந்த நேற்று பெய்ந்த மழைக்கு இன்று முளைத்த காலாண்களை தூக்கி பிடிக்க சரிவராது.

இலக்கிய,இலக்கண சுவையுடன் கதை எழுதுவது தான் முக்கியம் கருத்துகள் அவ்வளவு முக்கியமில்லை கருத்துகளை யார் கண்டு கொள்ள போறார்கள் என்று தம் ஆதங்களை கொட்டி தீர்த்தான் சிவா.

இவ்வளவை அமைதியாக கேட்ட சுரேஷ் சரி மச்சான் உன் ஆதங்கள் புரிகிறது ஆனாலும் தேசியத்திற்கு எதிராக கருத்து கூறி புகழ் தேடுவது என்பது அவ்வளவு நல்லது இல்லை தானே என்றவனை பார்த்தா சிவா உனக்கு தெரியும் நானும் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தியவன் தான் என்று (ஆயுதம் ஏந்துவது வேறு அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாம தூக்கிபோட்டு நானும் ஆயுதம் தூக்கினேன் என்று புலம்பும் கோஷ்டியில் இவனும் ஒருவன் அவன் புலத்தில் பிரபல படைப்பாளியாம்--முணுமுணுத்தான் சுரேஷ் தன்னுள்)

கதைத்து கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை மணிகூட்டை பார்த்த சிவா சிறு கதை எழுத்தாளர் சங்கம் நாளைக்கு ஒரு பட்டிமன்றம் வைக்கிறார்கள் எங்களுடைய கலாச்சார மண்டபத்தில் நான் உன்னை வந்து கூட்டி கொண்டு போகின்றேன் என்று விடைபெற்றான் சிவா.

தொடரும்...

Posted

சுரேஷ் முணுமுணுத்ததை பார்த்தால் அடுத்தநாள் பட்டிமன்றத்துக்கு வருவாரோ தெரியலையே. புத்துமாமா நல்லா எழுதுறியள் தொடருங்கள்.

Posted

புத்தா.....

தொடர்கதையை அங்குலம் அங்குலமாக நகர்த்திற திறமையை எங்கே இருந்து பெற்றாயப்பா?

புத்தன் அங்குலம் அங்குலமா நகர்த்திற மாதிரி தெரியேல்லை கிலோ மீற்றறர் கணக்கிலை நகர்த்திறமாதிரி தெரியிது .சரி புத்தன் கதையிலையாவது படிச்ச பள்ளிக்கூடத்தின்ரை மானத்தை காப்பாத்தி போடப்பு :D:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தனிற்கு ஒரு ஆசை யாழ்கள உறவுகள் நிறைவேற்றுவார்கள் என்று ஒரு நம்பிக்கை அதாவது படைபாளி என்று ஓர் கட்டுரை அல்லது தொடர்கதை ஆரம்பிக்க உள்ளேன் உங்களது ஆதரவை நாடி நிற்கிறேன்.

புத்தருக்கு என் ஆசீர்வாதம் என்றும் உண்டு.

Posted

சில சின்ன பெடியன்கள் எதை எழுதுவது என்று தெரியாமல் சும்மா கிறுக்கி தள்ளுறார்கள் அந்த படைப்புகளையும் நல்ல படைப்புகள் என்று அவர்களை தூக்கி பிடிக்க ஒரு கோஷ்டி இருக்கிறது எனக்கு உந்த நேற்று பெய்ந்த மழைக்கு இன்று முளைத்த காலாண்களை தூக்கி பிடிக்க சரிவராது
.

மாமோய் கதை சூப்பரா இருக்கு எப்ப முடிக்கிறதா பிளான் :wub: ம்ம் சரியா தான் சொல்லி இருக்கிறீர்கள் இந்த வரிகளை சிட்னியில கொஞ்ச அறிவாளிகள் இருக்கீனம் அல்லோ (மேதாவிகள் என்று தாங்களே தங்களை நினைத்து சில பேர் :D ) அவை மாவீரதின நிகழ்வுகளிற்கு கூட வர யோசித்தவை ஏனென்றா சின்ன பெடியன்களிற்கு முக்கியத்துவம் வழங்கபடுதாம் நிகழ்வுகளிள என்று :D .......எத்தனையோ மாவீரர்கள் தாய் நாட்டிற்காக உயிரை தியாயகம் செய்ய எங்களிற்காக இவை இங்கே இருந்து கொண்டு செய்யிற அட்டகாசம் தாங்கமுடியவில்லை :) ....இவை வந்தா தான் என்ன வராட்டி தான் என்ன என்னவோ ஆலவட்டம் வைத்து கூப்பிட்ட மாதிரி அல்லவா நினைப்பு..... :D (அக்சுவலா புத்து மாமாவிற்கு தாங்ஸ் இந்த வரியை கண்டவுடன் தான் நேக்கு அந்த ஞாபகம் வந்தது அட அட செய்யிறதை தான் செய்றீங்க ஜம்மு பேபிக்கு நியூஸ் வாராதை மாதிரி செய்யுங்கோவேன் நியூஸ் வந்தா கட்டாயம் எழுதுவன்.... :lol: )

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.