Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். தீவக கடற்பரப்பில் கடும் சமர் வெடிப்பு - டோறா மூழ்கடிப்பு

Featured Replies

இன்று நண்பகலுக்கு சற்று முன்னாதாக நெடுந்தீவிற்கு தெற்காக உள்ள கடற்பரப்பில் கடற்புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே கடுமையான சமர் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் ஒன்று கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

16 படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் படகுஅணிக்கு எதிராக கடற்படையினர் தாக்குதலை நடத்திவருவதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த சமர் குறித்த விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Sea Tigers destroy SLN Dvora attack craft in the seas off Delft island

[TamilNet, Wednesday, 26 December 2007, 08:07 GMT]

A Sri Lanka Navy Dvora Fast Attack Craft (FAC) was destroyed by the Sea Tigers, the Liberation Tigers naval wing Wednesday at 12:45 p.m. in the seas off Delft (Neduntheevu) island in Jaffna, initial reports from Jaffna said. A sea battle erupted in the south of Delft Wednesday and the Sri Lanka Navy had suffered casualties in the stiff fighting, according to the military sources in Jaffna. The LTTE is yet to release details of the sea battle.

Meanwhile, the Sri Lankan military officials in Colombo confirmed that the Sri Lanka Navy was enaged in a sea battle with a Sea Tiger flotilla of attack crafts in the seas south of Neduntheevu. According to the Sri Lankan military, there were 16 Sea Tiger vessels in the Tiger flotilla.

Delft is the farthest and biggest of the inhabited islands off the Jaffna peninsula and the nearest of the inhabited islands of Jaffna from Rameasvaram.

TamilNet

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடற்பரப்பில் கடற்சமர்

வீரகேசரி இணையம்

மன்னாருக்கு வடக்கேயுள்ள கடற்பரப்பில் கடற்படையினருக்கும் கடற் புலிகளுக்குமிடையில் மோதலொன்று இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று பகல் 12.30 மணியளவில் ஆரம்பமான மோதல் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக

  • தொடங்கியவர்

தமிழ்நெட்டின் பிந்திய செய்திப்படி மேலும் இரு டோறாப் படகுகள் சேதமடைந்த நிலையில் காங்கேசன்துறைக்கு பின்நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்கள் பகல் 2.30 தாண்டியும் தொடர்ந்து கொண்டிருப்பதாக தமிழ்நெட்டில் மேலும் தெரிவிக்கப்பட்:டுள்ளது.

Edited by மின்னல்

யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் ஒரு டோறாப்பீரங்கிப்படகை கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்துள்ளனர். இரண்டு டோறாக்கள் சேதமாகியுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

கடற்பரப்பில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படலாம். முன்னைய விடுதலைப்புலிகளின் அறிக்கையும், ஐ . நா வைத் துணைக்கழைத்த இலங்கையரசின் அறிக்கையும் இதற்குக் கட்டியம் கூறுகின்றன.

20071226_01.jpg

Navy foils LTTE bid to smuggle warlike materials: 06 LTTE boats destroyed - Delft [updated]

Six LTTE attack boats were destroyed including two suicide craft during a heavy sea battle erupted this morning (December 26), in seas south off Delft, Naval sources say.

According to latest information, Navy fast attack craft triumphed destroying six LTTE boats, while unconfirmed sources reveal at least 40 terrorists were killed during the hours long sea confrontation.

Naval task units including fast attack craft engaged decisive strikes at an LTTE boat cluster consisting 16 boats, Naval sources said.

Elite Naval sea units detected a suspicious boat cluster in seas south west off Delft, today at around 7.30a.m. Clashes erupted and turned into a fierce sea battle when Naval task units took initiative to cut off the suspicious boat movement, at 11.30a.m, defence sources say. According to Naval sources, LTTE elements were engaged in a clandestine sea movement smuggling warlike material towards the non-liberated Nachchikudha coast when detected by the Naval patrol units.

Naval fast attack craft responded effectively towards the LTTE cluster with heavy gunfire and evasive battle manoeuvres, forcing terrorist boats to flee further southwards. According to information received, SLAF MI-24 gunships also engaged aerial strikes at the fleeing LTTE boats.

Meanwhile, defence sources said LTTE communication has gone silent since the break-off of fighting in the waters off Delft. Further information said, a dockyard built naval craft was damaged when two suicide LTTE boats exploded in the Naval retaliatory attacks. The damaged boat is now been towed towards the Kankesanthurai harbour, by Naval sea units security sources said.

http://www.defence.lk/new.asp?fname=20071226_07

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனின் தரவின் படி கொழும்பு டொக்ஜாட்டில் கட்டப்பட்ட கடற்படையின் ஒரு கட்டுமரம் இரண்டு கரும்புலிப் படகுகள் வெடித்து சிறிது சேதம். அதில் இருந்த கடற்படையினர் சுப்பர் மானிடம் பயிற்சி பெற்றதால் வானத்துக்கும் கடலுக்கும் தாவி மற்றைய படகுகளுக்கு வந்து சேர்ந்து புலிகள் மீது உடனடியாகவே பயங்கரத் தாக்குதலை நடத்தி வீரத்தீரத்தை வெளிப்படுத்தினர்..!

ஆனால் மறுபக்கத்தில் புலிகளின் 16 படகுகள் மீது கடற்படையின் அதிவிசேட 12 படகுகள் அடங்கிய அணியும் விமானப்படையின் எம் ஐ மற்றும் கிபீரும் நடத்திய அச்சொட்டான தாக்குதலில் 6 படகுகள் நாசம். 40 புலிகள் பலி.

அதுமட்டுமன்றி கடலில் நடந்த சண்டையை அடுத்து தரையில் இருந்த புலிகள் அனைவரும் கடலுக்குள் பாய்ந்துவிட்டதால் அவர்களின் அனைத்துத் தொலைத்தொடர்புகளும் ஸ்தம்பிதம். இது கடற்படையின் வீரதீரச் செயலுக்கு கிடைத்த பெரும் வெற்றி..!

புலிகளின் மிகுதி 10 படகுகளும் மாயம்..! அவற்றை புத்தபெருமான் தனது ஞானத்தால் அழித்தொழித்துவிட்டார்..! :lol:

--------------

சாணக்கியன் தந்த பாதுகாப்பமைச்சின் செய்தி அப்படிச் சொல்ல.. சிறீலங்கா இராணுவம் இப்படிச் சொல்கிறது..

JAFFNA: A FIERCE GUN battle between sailors and LTTE ensued after the Navy observed and pursued a fleet of LTTE boats in the seas south of DELFT islands today (26) morning.

The flotilla of about sixteen LTTE sea craft including a few suicide boats was sailing towards VEDITHALATHIVU when the Navy interrupted them around 8.00 a.m. using twelve Fast Attack Craft (FAC).

Terrorists aboard the boats having no option left for them to continue their passage fired at the Naval craft which sunk six terrorist boats along with terrorists on board.

In the skirmish, two LTTE suicide craft hit one COLOMBO Dockyard-made Navy FAC causing damages to it.

Meanwhile, Kfir jets and MI 24 craft in reinforcement shelled the LTTE fleet and destroyed five more of them.

At least forty Tiger cadres were reported killed in the sea battle that lasted nearly for five hours.

Arrangements are made to recover the damaged Naval craft.

It is believed that the Tigers were transporting weapons to VEDITHALATHIVU un-cleared areas in those boats.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கடும் சாணக்கியமான செய்திகளாயிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி ஒரு படி மேல போய்.. ஏதோ நேவி சிப் கிப் மோசமான சேதம் எண்டுது..!

'Tamil Tigers hit' in naval clash

The Sri Lankan military says it has destroyed several Tamil Tiger boats and killed as many as 40 rebels in clashes off the north-west coast of the island.

It said attack boats, helicopters and jets were used against the rebel vessels, which it said were involved in "arms smuggling".

The pro-rebel site TamilNet said a Sri Lankan naval vessel was sunk in Wednesday's sea battle.

The navy admitted that a ship had been "badly damaged" by two suicide boats.

It did not say whether any Sri Lankan troops were killed or wounded in the clashes. The report on TamilNet said the Sri Lankan Navy had "suffered casualties".

'Fierce battle'

The defence ministry released a statement saying a "suspicious boat cluster" had been spotted in the seas south-west of the island of Delft, 60km (37 miles) west of Jaffna, on Wednesday morning.

"Clashes erupted and turned into a fierce sea battle," it said.

"Six [Tamil Tiger] attack boats were destroyed including two suicide craft during a heavy sea battle... at least 40 terrorists were killed during the hours-long sea confrontation."

The military has reported killing hundreds of Tigers in recent fighting, including a number of battles that have taken place at sea.

Violence that erupted when a peace drive collapsed last year is reported to have killed more than 5,000 people.

Analysts say both sides often exaggerate enemy losses and underestimate their own, and that it is rarely possible to verify their figures.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7160353.stm

Edited by nedukkalapoovan

சாணக்கியனின் தரவின் படி கொழும்பு டொக்ஜாட்டில் கட்டப்பட்ட கடற்படையின் ஒரு கட்டுமரம் இரண்டு கரும்புலிப் படகுகள் வெடித்து சிறிது சேதம். அதில் இருந்த கடற்படையினர் சுப்பர் மானிடம் பயிற்சி பெற்றதால் வானத்துக்கும் கடலுக்கும் தாவி மற்றைய படகுகளுக்கு வந்து சேர்ந்து புலிகள் மீது உடனடியாகவே பயங்கரத் தாக்குதலை நடத்தி வீரத்தீரத்தை வெளிப்படுத்தினர்..!

:D:lol::D

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறாப் பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3 மணிநேரம் இடம்பெற்ற இம்மோதலில் மேலும் இரு டோறாப் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

(மேலதிக இணைப்பு) சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோரா பீரங்கிப்படகு படகு கடற்புலிகளால் நிர்மூலம்

[Wednesday December 26 2007 10:37:38 AM GMT] [saravanan]

சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோரா பீரங்கிப்படகு படகு கடற்புலிகளால் நெடுந்தீவிவு கடற் பகுதியில் மதியம் 12.15 மிணயளவில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இரண்டு டோரா படகுகள் சேதமாகியுள்ளன.

யாழ் தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் சிறிலங்கா கடற்படையின் டோறா அணி மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர்.

கடற்புலிகளின் இத் தாக்குதலில் ஒரு டோறாப்பீரங்கிப்படகு மூழ்கடிக்கப்பட்டது. மேலும் இரண்டு டோறாக்கள் கடும் சேதங்களுக்குள்ளாகின.

இராணுவ பேச்சாளர்

மன்னாருக்கு வடக்கேயுள்ள கடற்பரப்பில் கடற்படையினருக்கும் கடற் புலிகளுக்குமிடையில் மோதலொன்று இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று பகல் 12.30 மணியளவில் ஆரம்பமான மோதல் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் சமீபத்திய செய்திக் குறிப்பின் படி.. கடற்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. 2 கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 11 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தொடர்கிறதாம்..!

According to latest reports, slain body of a naval officer was recovered by naval units during search operations conducted. Two naval personnel were also rescued during the salvage operations, sources reveal.

Meanwhile, eleven other naval personnel were reported missing following the confrontation, Naval sources said.

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகம்.

Edited by nedukkalapoovan

காணாமல் போவோர் அவர்களை இறந்தவராகத்தான் கருதப்படவேண்டும். சம்பளத்தை தொடர்ந்து கொடுக்கக் கூடாதென்றால் காணாமல்போனோர் பட்டியலில் சேர்த்துவிட்டால் அவர்கள் இறக்கவில்லை என்ற கருத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். இவர்களும் தேடிக்கொண்டிருப்பார்கள்.

காணாமல் போவோர் அவர்களை இறந்தவராகத்தான் கருதப்படவேண்டும். சம்பளத்தை தொடர்ந்து கொடுக்கக் கூடாதென்றால் காணாமல்போனோர் பட்டியலில் சேர்த்துவிட்டால் அவர்கள் இறக்கவில்லை என்ற கருத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். இவர்களும் தேடிக்கொண்டிருப்பார்கள்.

காணாமல் போனோர் படையிலை இருந்து தப்பி ஓடியவர்களாகத்தான் கணிக்க படுவர்... அவர்களுக்கான சம்பளம், குடும்பத்துக்கான சலுகைகள், இளப்பீடுகள் எல்லாம் கட்.

என்ன நினைச்சியள் அப்புகாமியை பற்றி...??

காணாமல் போனோர் படையிலை இருந்து தப்பி ஓடியவர்களாகத்தான் கணிக்க படுவர்... அவர்களுக்கான சம்பளம், குடும்பத்துக்கான சலுகைகள், இளப்பீடுகள் எல்லாம் கட்.

என்ன நினைச்சியள் அப்புகாமியை பற்றி...??

அப்புகாமி, வெதமாத்தையா, புஞ்சிநோனா எல்லோருமே இப்படித்தான் ஏமாற்றப்படுகிறார்கள். கடற்படையினர் எங்கேயெனக்கேட்டால், அவர்கள் புலிகளால் கைது செய்யப்பட்டிருப்பார்கள், அல்லது அப்படியே துள்ளிக்குதித்து நீந்தி கேரளா கரையை அடைந்திருப்பார்கள் என்று சொல்லிவிடுவார்கள். :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

(2 ஆம் மேலதிக இணைப்பு) நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்சமர் டோறா மூழ்கடிப்பு - 4 கடற்கரும்புலிகள் வீரச்சாவு. 10 கடற்படையினரை காணவில்லை

[Wednesday December 26 2007 10:37:38 AM GMT] [saravanan]

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறாப் பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3 மணிநேரம் இடம்பெற்ற இம்மோதலில் மேலும் இரு டோறாப் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளின் அணி வழமையான சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இன்று புதன்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு சிறிலங்கா கடற்படையினரின் டோறா அணி அப்பகுதிக்கு வந்தது.

ஆறு டோறாப் படகுகளைக் கொண்ட அந்த அணி மீது கடற்புலிகள் தீவிர தாக்குதலை தொடுத்தனர்.

இம் மோதலின்போது பிற்பகல் 12:45 மணிக்கு டோறாப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படைக்கு ஆதரவாக வான்படையின் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் உள்ளிட்ட வானூர்திகள் பின்பலமாக தாக்குதலை நடத்தின.

இருப்பினும் கடற்புலிகளின் தொடர் தாக்குதலில் பிற்பகல் 1:00 மணிக்கு இரண்டாவது டோறாப் படகு கடும் சேதங்களுக்குள்ளாகியது. மீளப் பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு அது சேதமாகியுள்ளது. அதனைக் கட்டியிழுத்துச் செல்ல சிறிலங்கா கடற்படையினர் முயற்சிக்க, கடற்புலிகளின் தாக்குதல் தொடர்ந்தது.

பிற்பகல் 1:30 மணிக்கு அடுத்த டோறாப்படகு, கடற்புலிகளின் தாக்குதலில் சேதமாகியது.

இரு டோறாப் படகுகளையும் ஏனைய டோறாப் படகுகள் கட்டியிழுத்துக்கொண்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு தப்பியோடின.

இத்தாக்குதலில் 4 கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை தாய் மண்ணின் விடுதலைக்காக ஈய்ந்து வீரவரலாறாகினர்.

அம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

தமிழோசை

இலங்கை நெடுந்தீவில் கடற்படையினர் கடற்புலிகள் இடையில் கடும் சண்டை

இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கடுஞ்சமர் ஒன்றில், இலங்கை கடற்படையின் அதிவேகப்படகு ஒன்று சேதமடைந்ததாகப் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கடற்புலிகளின் இரண்டு தற்கொலைப் படகுகள் தமது படகின்மீது மோதியபோதே இந்தச் சேதம் ஏற்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

சேதமடைந்த அந்தப் படகு கடற்படைத் தளத்திற்குக் கட்டி இழுத்துச் செல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

அதேவேளை தமது கடற்படை அதிகாரி ஒருவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், 10 கடற்படையினரை காணவில்லை என்றும் இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சுமார், 5 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கடற்சமரின்போது விடுதலைப் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிக்கப்பட்டு, 40 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கின்றது.

இந்த மோதலில் விமானப்படையினரின் தாக்குதல் உலங்கு வானூர்திகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

ஆயுத தளபாடங்களைக் கடத்திச் சென்ற 16 படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் அணியொன்றின் மீது, 12 படகுகளைக் கொண்ட கடற்படையணியொன்று தாக்குதல் நடத்திய வேளையிலேயே இரு தரப்பினருக்கும் கடும் சண்டைகள் மூண்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனுக்காக...

சிறீலங்கா பாதுகாப்பமைச்சு.. மென்று விழுங்கி ஒரு விடயத்தை ஒருமாதிரி ஒப்புக் கொண்டிருக்கிறது. P 413 என்ற இலக்கமுடைய டோரா வீரதீரச் செயல்களைச் செய்தபின் களைத்துப் போய் கடலில் மூழ்க்கி தன்னைத்தானே தியாகம் செய்து கொண்டுள்ளதாம். அதுவும் கட்டி இழுத்துப் போறவழியில தியாகம் செய்தும் வீரதீரம் செய்த கடற்படையினர் 11 பேரையும் காணேல்லையாம். அவை கப்பலை இழுத்துப் போற வழியில.. துள்ளிக்குதிச்சு புலிகளுக்கு உதவிய சுறாமீன்களோட சண்டை பிடிக்கினமாம்..! அதால அவையைத் தேடி கரைக்குக் கொண்டு வாற பணி தொடருதாம்..!

P 413 sinks after destroying two suicide boats; salvage operations are in progress

Sri Lanka navy sources today (December 27) stated that the Ceylon Dockyard built Fast Attack Craft (FAC) P413 sank whilst being towed to Kankasanthurai Harbour. The craft was seriously damaged during the sea battle erupted in the South of Delft sea yesterday (December 26). Navy's diving and selvedge unit is now being engaged in a selvedge attempt, sources added.

P413 crew commanded by Lieutenant Commander Lalith Ekanayake yesterday demonstrated the sheer determination and gallantry possessed by the sea warriors of Navy's Fourth Fast Attack Craft Flotilla by destroying two explosive laden suicide craft of LTTE. Having detected the terrorist's sea move P413 along with other FACs valiantly engaged the terrorist boats despite being heavily out numbered by the enemy. Lieutenant Commander Ekanayke made the ultimate sacrifice for the motherland while eleven of his men have gone missing in action.

According to the final reports of the battle, P 413 had engaged the enemy from the front and destroyed several LTTE attack craft during the battle. Meanwhile, two suicide boats had sped towards P 413 making the crew to engage with both suicide boats simultaneously. The reports said that none of the suicide boats could reach the craft as P 413 crew had destroyed them successfully. However, the two explosions had made the craft to lose its engine power, compelling the crew to confront with outnumbered enemy but with no ability make evasive maneuvers. The crew had successfully defended the craft till assistance arrived during the battle, reports further said.

Navy said the craft has sunk due to the serious damages that it had received on its hull. However, it is not impossible to selvedge the craft, the sources added.

Search operation is underway. - கட்டி இழுத்து காங்கேசந்துறைக்குக் கொண்டு போனது.. அங்கிணை தாண்டதுக்கு ஏன் சேர்ச் ஒப்பரேசன். உங்க பகுதியில நீங்களே ஆறுதலா நீச்சலடிச்சு தேட வேண்டியதுதானே..!

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் போன்றோர் தமது குப்பயைக் கொட்டுவதற்கு ஏற்ற களங்கள் சிங்களக் களங்களே! தமது தமிழின எதிர்ப்பைக் காட்டவும் சிங்களவனுக்கு வால் பிடிக்கவும் தேவையென்றால் அதைச் சிங்களக் களங்களில் போய்ச் செய்யட்டும். இங்கு வேண்டாம். இது அவரது காழ்ப்புணர்ச்சியக் கொட்டுவதற்கு ஏற்ற களம் இல்லை என்பதை அவர் நினைவில் வைத்திருத்தல் அவசியம்.

சிங்களவனின் பிரச்சாரத்தை இங்கே முன்னெடுக்கும் இந்தக் கூட்டம் பற்றி நாம் அவதானமாய் இருத்தல் அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கதிரவன் உங்களுக்கு இணைப்பை தராமல் லிங்கை தர எண்ணுகிறீர்கள்???????

கதிரவன் இணைப்பிற்கு நன்றி. புரியவேண்டியவாகள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

கதிரவன் இணைப்பிற்கு நன்றி. புரியவேண்டியவாகள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி.

ஜானா

விளங்கவில்லை ஜானா. செய்தியை நேரடியாக இணிப்பதில் என்ன ஆதங்கம் உங்களுக்கு???

ஆழ்கடலில் வைத்து ஆயுதங்களை இறக்கும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே நெடுந்தீவு கடற்சமரில் ஈடுபட்டிருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

நூணவிலான் அக் கட்டுரையை கீழே இணைத்துள்ளேன். அது நீண்டதாக இருப்பதனாலோ என்னவோ அதன் லிங்கி மாத்திரம் இணைத்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

ஆக்கம்: நிலவன்

வெள்ளி, 28 டிசம்பர் 2007 20:12

நீண்ட காலத்தின் பின்னர் கடலில் மற்றொரு சமர் இடம்பெற்றிருக்கின்றது. யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் 26.12.2007 அன்று மதியம் 12.45 மணியளவில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடற்சமர் இடம்பெற்றுள்ளது. இந்தக் கடற்சமரின் போது சிறீலங்காக் கடற்படையினரின் டோறா தாக்குதல் பீரங்கிப் படகு ஒன்று (னழஉமலயசன டிரடைவ யவவயஉம உசயகவ ) கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.மேலும் இரு டோறா பீரங்கிப் படகுகள் கடற்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி தேசமாக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவுப் பிரதேசத்தை நோக்கி விடுதலைப் புலிகளின் 17 சிறிய ரகப் படகுகள் அடங்கிய அணி ஒன்று செல்வதை அவதானித்த சிறிலங்கா கடற்படையினர், அந்த அணி மீது தாக்குதல் நடாத்த முற்பட்டபோதே, கடற் சமர் வெடித்ததாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளார்கள்.

சிறீலங்காக கடற்படையினரின் 6 டோறா பீரங்கிப் படகுகள் கொண்ட அணியினரும், நான்கு எம்.ஐ.24 உலங்கு வானுர்திகளும் இந்த சமரில் பங்குபற்றியதாக சிறிலங்கா படையினர் அறிவித்துள்ளார்கள். சிறிலங்கா கடற்படையினருக்கு ஆதரவாக மன்னாரிருந்தும், தீவகத்திலிருந்தும் சிறீலங்காப் படையினரால் எறிகணைச் சூட்டாதரவும் வழங்கப்பட்டன.

நடுக்கடல் ஒன்றில் இருந்து இறக்கப்பட்ட ஆயுதங்களை விடுதலைப் புலிகள், அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல் தீவுப் பிரதேசத்திற்கு கடத்த முற்பட்ட போதே அவர்கள் புலிகளின் படகுகள் மீது தாக்குதல் நடாத்தியதாக சிறிலங்கா தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மோதலில் சிறிலங்கா கடற்படையினர் தரப்பில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டதாகத் சிறிலங்கா படையினர் அறிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தரப்பில் நான்கு கரும் புலிகள் வீரமரணம் அடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பத்தி எழுதப்படும் வரைக்கும்இ இந்தக் கடற் சமர் பற்றி மேற்கூறப்பட்ட விடயங்கள் மட்டும்தான் வெளியாகியுள்ளன.

கடற் புலிகளின் பலம்:

இந்த கடற் சமர் பற்றி வெளியாகியுள்ள விடயங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது, சில உண்மைகளை எங்களால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. முதலாவது, சிறிலங்காக் கடற்படை மீது, விடுதலைப் புலிகள் வலிந்து தாக்குதலை நடாத்தவில்லை. ஏதோ காரியமாகப் பயணித்துக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையினரே வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வாங்கிக் கட்டியிருக்கின்றார்கள். தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் சிறிய ரகப் படகுகளே ஈடுபட்டிருந்தன என்று சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளார்கள். புலிகள் தமது இந்தச் சிறியரகப் படகுகளில் பீரங்கிகள் போன்ற கனரக ஆயுதங்களைப் பொருத்தியிருக்கச் சந்தரப்பம் இல்லை. இயந்திரத் துப்பாக்கிகள், அல்லது சிறிய ரக எறிகணைச் செலுத்திகள் மட்டுமே இந்தப் படகுகளில் இருப்பதற்கான சாத்தியதான்; உள்ளன. ஆனால் சிறிலங்காப் படையினர் தரப்பில் ஆறு நவீன டோராப் பீரங்கிப் படகுகள் தாக்குதலில் பங்கு பற்றியிருக்கின்றன. இந்தப் படகுகளில் பொலிகன் ரக பீரங்கிகள் உட்பட பல்வேறு பீரங்கிகளும், 50 முதல் 90 கலிபர் துப்பாக்கிகளும், குறி தவறாமல் தாக்கக் கூடிய எறிகணைகளும; பொருத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் சிறிலங்கா வான்படையின் மூன்று எம்.ஐ. 24 ரக உலங்கு வானூர்திகளும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றன.

கடற் சமர் என்பது தரையில் இடம்பெறும் சமரைப் போன்ற ஒரு இலகுவான காரியம் கிடையாது. தரையில் நடைபெறும் சண்டைகளைப் போன்று, தரையில் விழுந்து படுத்தோ, அல்லது மறைவெடுத்தோ கடலில் தாக்குதல் நடாத்த முடியாது. மறைந்திருந்து கெரில்லாப் பாணியிலான தாக்குதல் என்கின்ற பேச்சுக்கே கடலில் இடம் இல்லை. எதிரியின் கலன்கள் எங்கெங்கு நிற்கின்றன. எத்தனை நிற்கின்றன, அதன் அளவு என்ன என்பனவறை எல்லாமே ராடர்கள் தெளிவாகக் காண்பித்து விடும். கடற் சண்டை என்பது நேருக்கு நேரான சண்டைகள்தான்.

அதுவும் குறிப்பாக, வானில் இருந்து தாக்குதல் நடைபெறும் பொழுது, அந்தத் தாக்குதலில் இருந்து தப்புவதென்பது மிக மிக கடினம். அதுவும், எம்.ஐ.24 ரக உலங்கு வானூர்தி என்பது, ஒரு பறக்கும் யுத்தத் தாங்கி. இப்படியான எதிரியின் நான்கு பறக்கும் யுத்தத் தாங்கிகள். மற்றும் ஆறு யுத்தக் கலங்கள் போன்றனவற்றிற்கு நடுவில் இருந்து தப்பித்துச் செல்வதென்பது இலகுவான காரியம் இல்லை.

ஆனால் விடுதலைப் புலிகளின் அந்தச் சிறிய படகுகளைக் கொண்ட அணி, இவை அனைத்தையும் சமாளித்துக் கொண்டது மாத்திரமல்ல, எதிரிக்குப் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சண்டையில் சிறிலங்காப் தரப்பில் கலந்துகொண்ட ஆறு டோரப் படகுகளில் மூன்றை, அதாவது அரைவாசிக் கலன்களை தாக்கியழித்துள்ளன. விடுதலைப் புலிகளின் படகு அணிகள் தன்னைத் தற்காத்துக்கொண்டு. எதிரிக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டு, பத்திரமாக தளம் திரும்பியுள்ளன. சிறிலங்கா படைத்துறையையும், உலகத்தையும் ஆச்சரியப்பட வைக்கின்ற விடயங்கள் இவைதான்.கடற் புலிகளின் அதி உச்சத் திறமையையும், அவர்கள் பற்றிய அச்சத்தையும் உலகிற்கு ஏற்படுத்துகின்ற விடயமும் இதுதான்.

ஆயுதங்கள் கடத்தப்பட்டதா?

இந்த கடற் சமர் விடயத்தில் மற்றொரு விடயத்தையும் நாம் பார்க்க வேண்டும். அதாவது, விடுதலைப் புலிகளின் சிறிய படகுகளைக் கொண்ட அணி சிறிலங்கா கடற்கலங்களைக் குறிவைத்து நகர்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. சிறிலங்கா கடற்படைதான் புலிகளின் படகுகள் அணி மீது தாக்குதலைத் தொடுத்திருந்தன. அப்படியானால் விடுதலைப் புலிகளின் அணிகள் என்ன காரணத்திற்காக அந்தப் பிராந்தியத்தில் அணி வகுத்துச் சென்றன?

புலிகளின் படகுகள் ஆயுதங்களைக் கடத்தியதாக சிறிலங்கா கடற்படை கூறுகின்றது. சிறிய படகுகளில் ஆயுதங்களைக் கடத்தவேண்டிய அவசியம் தற்பொழுது புலிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் சிறிய படகுகளில் கடத்தப்படக்கூடிய அளவு ஆயுதங்கள் என்பது தற்போதைக்கு புலிகளுக்கு தேவையில்லை. ரோலர் போன்ற கொஞ்சம் பெரிய கலங்களில் கடத்தப்படவேண்டிய கனரக ஆயுதங்கள்தான் புலிகளுக்குத் தேவை. எனவே அந்த சிறிய ரக படகுகளில் ஆயுதங்கள் கடத்தப்பட்டடிருப்பதற்கான சந்தரப்பங்கள் குறைவு என்றே கூறலாம்.அப்படியானால் அந்த கலங்கள் எப்படியான பணிக்காக அணிவகுத்துச் சென்றன?

இதில் இரண்டு முக்கிய விடயங்களை நாம் கவனிக்கவேண்டும்.

முதலாவது, விடுதலைப் புலிகளின் அந்த அணியில் கரும்புலிப் படகுகளும் இருந்திருக்கின்றன. முக்கிய பணிகளுக்காகச் செல்லும் படகுகளில் அணிகளில்தான் கரும்புலிப் படகுகள் செல்வது வழக்கம். அதனால் அந்தப் படகுகள் அணி ஒரு முக்கியமாக பணிக்கான அணி என்பதில் சந்தேகம் இல்லை.

இரண்டாவது, புலிகளின் படகுகள் அணி சென்றுகொண்டிருந்த திசை.புலிகளின் படகுகள் விடத்தல் தீவில் உள்ள தமது தளங்களை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதுதான் மோதல்கள் வெடித்ததாகக் கூறப்படுகின்றது. அதாவது விடுதலைப் புலிகளின் படகுகள் அணி, தமது ஒரு முக்கிய பணியை முடித்துக்கொண்டு திரும்பும்போதுதான் மோதல் இடம்பெற்றுள்ளது.

புலிகளின் படகுகள் அணி மேற்கொண்ட அந்த முக்கிய பணி என்ன? சிறிலங்காப் படைத்துறைத் தலைமையை தற்பொழுது தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்துள்ள கேள்வியும் இதுவாகத்தான் இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணி ஒன்றை தென் இலங்கையில் தரை இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கலன்களாக அவை இருக்கலாமோ என்று படைத் தரப்புக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது.

புலிகளின் தாக்குதல் தளபதிகளை ஒரு பாரிய தாக்குதல் நடவடிக்கைக்கான ‘பைனல்’ பார்பதற்காக அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த படகுகள் அணியாகவும் அது இருக்கலாம் என்று மற்றொரு சந்தேகம் சிறிலங்காப் படைத் தரப்புக்கு இருக்கின்றது.

ஆனாலும், புலிகளின் அந்த கடற்கலன்கள் அணி ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வந்த கலன்களாக இருக்கலாம் என்றுதான் சிறிலங்காப் படைத்துறைத் தலைமை உறுதியாக நம்புகின்றது. சிறிலங்காப் படைத்துறைத் தலைமையின் இந்த நம்பிக்கையில் சில யதார்த்தங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

ஆனால் ஒரு சிறிய திருத்தம். புலிகளின் அந்தப் படகுத் தொகுதி ஆயுதங்களை ஏற்றி வந்தன என்று கூறுவதை விட, ஆயுதங்களை ஏற்றிச் சென்ற பாரிய றோலர் கலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய பணியை மேற்கொண்டுவிட்டுத் திரும்பிய கலன்களாகவும் அவை இருக்கலாம் என்று கொழும்பில் உள்ள ஒரு முக்கிய போரியல் ஆய்வாளர் கருத்துத் தெரிவித்தார்.

ஏனெனில், கடற் சமர் இடம்பெற்ற தினத்தில் இலங்கையின் தென்கிழக்கிலுள்ள அறுகம்பை கடலில் ஒரு கப்பலை சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றியிருந்தார்கள்.

இந்தோனேசிய மாலுமிகள் 12 பேருடன் சென்றுகொண்டிருந்த அந்த கப்பல் பற்றிய தகவலை இந்தியக் கடற்படையினரே வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்தே அந்தக் கப்பலைச் சுற்றிவழைத்து சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றினார்கள்.

அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, அதனைக் கைப்பற்றும் முயற்சியில் சிறிலங்காக் கடற்படை இறங்கியிருந்தது.

ஆனால்இ சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றிய பொழுது அந்தக் கப்பல் வெறுமையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசிய கப்பல் சிப்பந்திகளை கைதுசெய்த சிறிலங்கா கடற்படையினர் அவர்களைத் தடுத்துவைத்து விசாரணை செய்து வருகின்றார்கள். இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து ஒரு பெரும் தொகுதி ஆயுதங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு அந்தக் கப்பல் திரும்பிக் கொண்டிருக்கலாம் என்று சிறிலங்கா படைத்தரப்பு உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.

நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கப்பலில் இருந்து ஆயுதங்களை றோலர்கள் போன்ற சற்றுப் பெரிய படகுகளில் இறக்கும் பொழுது அதற்குப் பாதுகாப்பாக கடற்புலிகளின் ஏராளமான படகுகள் அணி வகுத்து நிற்கும். கரும்புலிப் படகுகளும் பாதுகாப்பாக நிற்கும். றோலர்களில் ஏற்றப்பட்ட புலிகளின் ஆயுதங்கள் தரையிலுள்ள தளங்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது, அதற்கு முன்னாகவும் பின்னாகவும் ஏராளமாக படகுகளும், கரும்புலிப்படகுகளும் அணிவகுத்துச் செல்வது வழக்கம்.

அப்படி அணிவகுத்துச் சென்ற ஒரு அணியுடன்தான் சிறிலங்கா கடற்படையினர் கடந்த புதன் கிழமை மோதியிருக்கலாம் என்றும், சில இராணுவ வல்லுனர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றார்கள். ஆக மொத்தத்தில் கடந்த 26.12.2007 அன்று கடலில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது சில விடயங்கள்; தெளிவாகத் தெரிகின்றன.

• விடுதலைப் புலிகளுக்கு ஒரு பெரும் தொகுதி ஆயுதம் வந்துள்ளது.

• அந்த ஆயுதத் தொகுதி பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு விட்டது.

• கடற் புலிகள் தற்காப்புத் தாக்குதலில் மாத்திரமே ஈடுபட்டு வருகின்றார்கள்.

• சிறிய வளத்துடன் எதிரிக்கு பாரியசேதத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு கடலில் புலிகள் மிக மிக வல்லமையாக இருக்கின்றார்கள்.

• விடுதலைப் புலிகளின் தரைத் தாக்குதல் அணிகள் போலவே கடற்புலிகளும் வீணான சண்டைகளில் ஈடுபடாமல் தங்களது பலத்தைத் தக்கவைத்தக்கொண்டு இருக்கின்றார்கள் - விரைவில் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் ஒரு பாரிய தாக்குதலுக்காக.

நன்றி முரசம்

மேலே டெய்லி மிரரில் வந்த கட்டுரையையும் வாசியுங்கள்.

Edited by Janarthanan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.