Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!

Featured Replies

பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களும் சரி.. பிற வரலாற்றாசிரியர்களும் சரி.. யதார்த்தப் புறநிலைகளை விட தங்கள் தங்கள் சொந்த நலனை நோக்கி தயாரித்த வரலாறுகள் தான் அதிகம். சிங்கள வரலாற்றாசிரியர்கள் செய்ததைப் போல.. பல நிகழ்ந்துள்ளன.

தமிழர்களின் வரலாறு என்பது பல விடயங்களில் மீளாய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டியுள்ள நிலையில்.. பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் சொன்னதன் அடிப்படையில்.. தாழ்வுச்சிக்கலை.. சமூகச் சிக்கலாக்கிக் காட்டுதல் சரியானதா என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டும்.

பிரிட்டிஷ்ஷார் காட்டிட்டினம் என்றதற்காக அதுவே உண்மையானது என்ற நிலை ஆபத்தானது.. அதுவும் ஒரு வகை தாழ்வுச் சிக்கலின் விளைவுதான் என்று குறிப்பிட்டுள்ளேனே தவிர... வேறதும் அங்கு திணிக்கப்படேல்ல..!

ஒரு விடயத்தை இலகுவாக மறைத்துவிடுகிறார்கள். 30 வருடத்துக்கும் மேலாக நடைமுறையில் உள்ள இலவசக் கல்வியைக் கூட பெறத் தயங்குகின்ற அல்லது கல்வியின் மகத்துவத்தை உணர மறுக்கின்ற தாழ்வுச்சிக்கல்.. ஒரு குழும மக்களிடம் இருக்கிறது எனும் நிலை இருப்பின் அது எதைக் காட்டுகிறது என்று கொள்வீர்கள். கல்வி மறுப்பையா.. கல்வியில் நாட்டமின்மையையா..??!

இலவசக் கல்வியைக் கூட பெறத்தயங்கிற கல்வி பற்றிய நாட்டமின்மை என்பதை இனங்காணத் தயங்கும் சிலர்.. சாதிய அடிப்படையில் கல்வி மறுப்பு என்பதை ஏன் சாதிக்க முனைகின்றனர். அவர்களின் தேவை வேறேதோ என்பதால் தானே இவ்வாறு செய்ய முற்படுகின்றனர். இவர்களின் சாதி வெறிக்கு சாதிய இருப்பை காட்டி பிழைப்பு நடத்திய வரலாற்றாசிரியர்களின் புனையப்பட்ட வரலாறுகளை திணிக்க முற்படுகின்றனர்.

இலவசக் கல்வியை பெறத் தூண்ட வேண்டிய நிலையில் கல்வி மறுப்பு என்ற கதையளப்பு என்பது இன்றைய 21ம் நூற்றாண்டுச் சூழலில் அவசியம் தானா..???!

முதலில் ஒரு மக்கள் குழுமத்தை பீடித்துள்ள தாழ்வுச்சிக்கலில் இருந்து அவர்களை வெளிக்கொணரும் போது கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு இலவசக் கல்விமுறையை திறம்படப் பாவிக்கும் நிலை தோற்றுவிக்கப்படலாம். அதை உணர்ந்து ஏன் இவர்கள் செயற்படுகிறார்கள் இல்லை.. குரல்கொடுக்கிறார்கள் இல்லை.

சாதி வெறியை காவ நினைக்கும் இவர்களையும் தாண்டி, காலமாற்றம்.. இன்று இலவசக் கல்வியை எல்லோரும் பெற வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கியுள்ளது. இது சமூகச் சிந்தனையில் அடிப்படையில் நல்ல மாற்றங்களைத் தந்துள்ளதோடு.. மக்கள் தாழ்வுச்சிக்கலில் இருந்து விடுபடவும் கொஞ்சம் கொஞ்சமாக வழிகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இன்றை உலகில் யாருக்கும் யாரும் கல்வி மறுக்கும் நிலை தாயகத்திலோ.. புலம்பெயர் தேசங்களிலோ இருப்பதாகத் தெரியவில்லை (சிறீலங்கா அரசின் வெட்டுப் புள்ளி பாகுபாட்டைத் தவிர).

மேற்குநாடுகள் வெறுமனவே வறுமைக் கோட்டை பொருளாதார நிலை என்ற நோக்கில் கவனிக்கவில்லை. அண்மையில் பிரித்தானிய அரச ஆய்வின் படி.. வறுமைக் கோட்டில் உள்ள சிறார்கள் கல்வியில் செலுத்தும் கவனம் குறைந்து வன்முறைகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர் என்ற நிலை இனங்காணப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அன்றும் எமது சமூகங்களிலும் பொருளாதாரக் காரணிகள் கல்வியில் ஆர்வமின்மையை வளர்த்திருக்கும். அவற்றையெல்லாம் சாதியக் கல்வி மறுப்பாகக் காட்டி சிலர் சாதிய வெறியைத் தூண்டி விடத் துடிக்கின்றனர் இன்றும்..!

பொருளாதாரக் காரணிகள் மற்றும் ஏலவே நான் சுட்டிக்காட்டிய தாழ்வுச் சிக்கல் பிரச்சனை நிறைந்த சிந்தனைப் போக்குகள் தான் சமூக ஏற்றத்தாழ்வுக்கு வித்திடுகின்றனவே தவிர.. வேறு காரணிகள் அங்கிருப்பதாகத் தெரியவில்லை.

எனவே மக்கள் அனைவருக்கும் மேற்குலக நாடுகள் வழங்குவது போல மக்களுக்கு தேவையான அடிப்படைப் பொருளாதாரத்தை வலுவாக்கக் கூடிய நடைமுறைகளை செய்து கொடுப்பதோடு.. ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய வகையில் ஆரோக்கியமான சமூகம் அல்லது இன மக்களுக்கு தேவையான அனைத்து அடிபடை வசதிகளையும் எல்லோருக்கும் சமனாக வழங்கும் போது.. சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பது பிறக்க காரணமாக உள்ள தாழ்வுச்சிக்கல் என்பதை அகற்ற முடியும்.. என்ற வகையிலேயே எனது கருத்துப் பகிர்வு அமைகிறது என்பதுடன்.. 22ம் நூற்றாண்டிலும் சாதிய புனைகதை வரலாறுகளை புனையப்பட்ட வரல்லாற்றுச் சான்றுகளோடு காவ வேண்டிய அவசியமில்லை என்பதையும் சொல்கிறது..!

இதை உணராதவர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டு... எனது கருத்துக்களுக்கு சாதியப்பூச்சிடும் செயலை நிறுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்கின்றேன்..!

விவாதத்தை எங்கு எப்படி நீங்கள் வளைத்து சுழித்தாலும் நீங்கள் எழுதிய கருத்தை காப்பாற்றாது

நான் அவதானித்திருக்கிறேன்.. ஊரில் தாழ்வுமனச் சிக்கலுக்குள் வாழும் குழும மக்களின் நடத்தை என்பது சற்று மாறுதலானதாக இருக்கும். பண்பாகக் கதைக்கமாட்டார்கள்..! ஏமாற்றும் குணம் அதிகம் இருக்கும். பொதுச் சுகாதாரம் குறைவா இருக்கும். உடை நடையில் கவனமின்மை. கல்வியில் நாட்டமின்மை. சினிமா மோகத்தில் கிடப்பார்கள். இது அவர்கள் தனிமைப்பட்டுப் போக மேலும் வகை செய்கிறது.

ஒரு குழுமம் என்று நீங்கள் விழிக்கும் சாதிப்பிரிவு என்பது தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்டதொன்றல்ல. அதுவல்ல பிரச்சனை. ஒரு குழுமத்தை தாழ்த்தி நிற்கும் காரணிகள் வேறு. அதில் ஒன்று உங்கள் மனோபாவம் உங்கள் கருத்து திணிப்பு.

பண்பாக கதைக்கமாட்டார்கள் என்பது ஒரு தனிமனித பிரச்சனையாக சுட்டிக்காட்டப்படலாம் தவிர ஒரு குழுமத்தின் மீது சுமத்த முடியாது. ஏமாற்று குணம் என்பதும் இவ்வாறானதே. சாதிய மனோநிலையில் எழுதப்பட்ட இந்த கருத்துக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் என எழுதியதாக தப்பிவிட நினைக்கும் உங்கள் கருத்து எப்படி சொன்னாலும் தாழ்ந்த சாதியாகட்டும் வறுமைப்பட்டவனாக்டும் அவன் ஏமாற்றுக்காரனோ அல்லது பண்பற்றவனோ இல்லை. இவ்வாறான ஒரு மனித அறிவுக்கு புறம்பான கருத்தை சாதித்தடிப்பால் மட்டுமே முன்வைக்க முடியும். கீழ் சாதிகளாகட்டம் வறுமைப்பட்டவர்களாகட்டும் நேர்மையாகவும் பண்பாகவும் மற்றவனை எமாற்றாமலும் வாழும் குணம் கொண்டவர்கள். கஸ்ரப்படுபவனுக்கே அடுத்தவர் கஸ்ரம் அதிகம் புரியும். உழைப்பை உறிஞ்சி வாழ்பவனும் சம்பிரதாயங்கள் சாதி மதம் வாயிலாக மக்களை ஒடுக்கி வாழ்பவனை விட ஒரு மோசமானவன் ஏமாற்றுக்காரன் மனித நாகரீகத்துக்கு புறம்பானவன் தாழ்ந்தசாதிக்காரனோ அல்லது வறுமைப்பட்டவனோ கிடையாது.

தனிமனித குணங்களை கீழ் சாதிகளுக்கு உரியது என்று நிறுவி அவர்களின் ஒட்டுமொத்த நடத்தை அதுவென நிறுவி அதற்கு காரணம் தாழ்வு மனப்பான்மை என்று அதை ஏற்படுத்த விழைவதே உங்கள் நோக்கம் என்பது தெளிவானது. மேல்சாதிகள் மிக நல்லவர்கள் பண்பானவர்கள் எமாற்றுகாரர் இல்லை நாகரீகம் உடையவர்கள் என்பது தான் உங்கள் கரு. அதை சொல்லியாகி விட்டது. பிறகென்ன இலவச்கல்வி அரசாங்க கல்வி அது இது என்று கருத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயத்தை தக்கவைக்க சுற்றி சுழண்டு திரிகின்றீர்கள்?

நீங்கள் குழும மக்கள் என்று குறிப்பிட்டது தாழ்ந்த சாதிகளை. அதையே வறுமைக்கோடு என்று மாற்ற முனைந்தீர்கள். நீங்கள் சுட்டிக்காட்டும் நடத்தை குணம் எல்லாம் தாழ்ந்தசாதிக்காரனுக்கோ அல்லது வறுமைப்பட்டவனுக்கு உரிய பொதுவான ஒன்று இல்லை. அவர்களுடைய பிரச்சனை தாழ்வுமனச்சிக்கல் என்ற ஒன்றால் அணுகப்படும் விடயம் இல்லை.

  • Replies 117
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

;.நெடுக்காலபோவன் குறிப்பிடும் "அடித்தட்டு மக்கள்" அல்லது "குழும மக்கள்" பற்றி அவரைப் போன்ற கருத்தை வெளிப்படுத்துகின்ற பலரை நான் சந்தித்திருக்கின்றேன்.

"அவர்களுக்கு பழக்க வழக்கம் தெரியாது, படிப்பறிவு இல்லை, படு குப்பையாக இருப்பார்கள்....." இப்படியெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் அந்தக் "குழும மக்களுக்கு" கல்வியை மறுத்து, பண்பாட்டை மறுத்து, சுகாதாரத்தை மறுத்து அடக்கி வைத்தது தன்னுடைய அப்பனும் பாட்டனும்தான் என்பதை சிந்திக்க மாட்டார்கள்.

நெடுக்காலபோவான்! ஒரு கேள்வி!

இந்தக் "குழும மக்கள்", "அடித்தட்டு மக்கள்" மாதிரியான சொற்கள் எல்லாம் உங்களுக்கு எங்கேயிருந்து வருகின்றன? இதற்கென்றே "ரும்" போட்டு யோசிப்பீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

ரூம் என்றது தமிழல்லவே சபேசன்.

நெடுங்காலபோவான் சொல்ல வந்ததன் அர்த்தம், தங்களைத் தவித், தாழ்த்தப்பட்டவர்கள், அடிமைப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் எனக் குறுகிய வட்டத்திற்குள் வைத்திருப்பவர்களால் முன்னுக்கு வரமுடியாது என்பதாகவே இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

அது ஒரு வகையில் உண்மை தான். மலையகத்தமிழர்கள் தமிழர்கள் தாங்கள் அடிமைகள் போல நினைத்தார்கள் முன்னுக்கு வரமுடியவில்லை. இவ்வாறே இலங்கையின் கீழ்நாட்டுச் சிங்களவர்களாக இருந்தவர்களுக்கு இப்போது தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற அழுத்தம் நீங்கியுள்ளது. அது வரைக்கும் தங்களால் முன்னுக்கு வரமுடியாது என்றே நினைத்தார்கள்.

அவ்வாறே முன்னுக்கு வந்த அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டினர், ஏன் ஜேர்மனியர் கூடத் தாங்கள் தான் நாட்டின் முதற்குடிகள் என்ற சிந்தனை எழுந்தமையால் தான் மற்றவர்களை அடக்குகின்ற, மற்றவர்களுக்கு அடங்காது இருக்கின்ற நிலையில் முன்னுக்கு வந்தார்கள்.

ஆனால் தங்களைத் தலித் என்று காட்டிக் கொண்டால் அரசாங்க சலுகை கிடைக்கும் என தாழ்த்திக் கொண்டிருந்தால் எப்போதும் சாதி ஒழியப் போவதில்லை. மதவிற்பனையாளர்கள் தான் பலனடையக் கூடும்.

இந்த நிலையை ஒழிக்க வேண்டும் என்ற நெடுங்காலபோவனின் கூற்றை வரவேற்கின்றேன். தாங்கள் அடிமைப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற எண்ணத்தில் வாழும் மக்கள், அப்படியான சிந்தனையோடு மற்றவர்களுக்குக் கை கட்டி நிற்கும், பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள்(எசமான், ஐயா, என்றழைப்பது) போன்ற பல விடயங்களை மாற்றி சமத்துவம் மிக்கவர்களாகத் தங்களை நினைக்க வேண்டும்.

சில மதவியாபாரிகளும், பெயர் சம்பாதிக்க விரும்புவர்களும், தொடர்ந்து சாதிகளைப் பேணி அனுகூலம் பெற முயலுவார்கள். அவர்களை இனம் கண்டு தவிர்த்தலும் நலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியான சிந்தனையோடு மற்றவர்களுக்குக் கை கட்டி நிற்கும், பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள்(எசமான், ஐயா, என்றழைப்பது) போன்ற பல விடயங்களை மாற்றி

இந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன். அவ்வாறு ஏற்படுத்தப் பட்ட பழக்க வழக்கங்களை களைந்து நடந்து கொள்ளும் போது யாராவது தம்மை உயர்சாதி என அடையாளப் படுத்தி தம்முன் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் எனச் சொன்னால்... செருப்பை கழட்டி அவர்களை நாலு சாத்துச் சாத்தும் துணிவு பெற்றவர்களாக அனைவரும் மாற வேண்டும்

இங்கு சாதியை இல்லாதொழிப்பதற்குச் சொல்லும் சகல ஆலோசனைகளும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்த்துத்தான் சொல்லப்படுகிறதே தவிர..

சாதியை ஒழித்து விடுவதற்கான எந்த வழிமுறையும் தம்மை உயர்சாதியினர் எனப் பிரகடனப் படுத்தியவர்களை நோக்கிச் சொல்லப் படவில்லை.

இது ஏன்.. :mellow:)

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் என்பவர் தான் அணிந்திருக்கும் சாதியக் கண்ணாடிக்கூடாகத்தான் எல்லாத்தையும் நோக்குவன் என்று இறுமாந்து இருப்பதால் அவருக்கு எல்லாமே சாதிய அடிப்படையில் தெரிகிறது. அது அவரின் தவறு.

உலகெங்கும்.. ஆபிரிக்க மக்கள்... எதனால் இருண்ட கண்ட மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சாதியாலா...???!

பெறப்படும் கல்வி மற்றும் சமூக அறிவுதான் ஒரு மனிதனை நாகரிக நடைமுறைக்குள் நிலைக்கச் செய்யும். அடுத்தது பொருளாதாரம்.

தாழ்வுச் சிக்கல் கொண்ட குழும மக்கள் அடுத்தவனைப் பார்த்து அங்கலாய்க்கின்றனரே தவிர அவர்கள் தாங்களாக அதில் இருந்து விடுபட நினைக்கிறார்கள் இல்லை. ஒரு மனிதன் பிறக்கும் போதே எல்லா வசதிகளோடும் பிறப்பதில்லை. சொந்த மற்றும் சமூகம் சார் முயற்சியால் வசதிகளைப் பெறுகின்றான். ஆனால் தாழ்வுச்சிக்கலில் உள்ள மக்கள் தம்மைத் தாமே இரண்டாம் நிலைக்குள் வைத்துக் கொண்டு.. நாகரிக அக்கறையின்றி.. பொதுச்சுகாதார அக்கறையின்றி.. கல்வியில் நாட்டமின்றி.. எப்படியும் வாழலாம் எம்மை யார் மதிக்கப் போகின்றனர் என்று வாழும் நிலையைக் களைய வேண்டும் என்பதுதான் எனது கருத்தின் பெறுதி.

அதற்கு அந்த மக்களுக்கு பலமான அடிப்படைப் பொருளாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு அவர்கள் எல்லோரும் கல்வி கற்கச் செய்யப்பட வேண்டும். இதன் மூலமே அவர்கள் தங்களையும் மனிதர்கள்.. இதர மனிதர்களுக்கு நிகர்த்தவர்களாக மனதளவில் பதித்துக் கொண்டு தாமே தமக்குள் போட்டுள்ள மன இறுக்கங்களை அகற்றிக் கொண்டு வெளியில் வருவர். அப்படி வராதவரை.. தாழ்வுச் சிக்கலுக்குள் உள்ள மக்களை அடுத்த நூற்றாண்டின் வளர்ச்சியில் துரிதமாகப் பங்களித்தபடி முன்னேறிக் கொண்டிருக்கும் சமூக மக்களுக்கு இணையாகக் கொண்டு வர முடியாத தேக்க நிலையே தோன்றும்.

அது.. இப்படியே சாதி தலித்தியம் என்று சொந்த இன மக்களையே கூறுபோட்டு மேடை போட்டுப் பேசி அரசியலும் தனிமனித விளம்பரமும் தேட வகை செய்யுமே தவிர மக்களின் தாழ்வுச்சிக்கலுக்கு விடை கிடைக்கச் செய்யப் போவதில்லை.

இருண்ட கண்டமான ஆபிரிக்கா இன்று ஒளி பெற்று வருகிறது என்றால் அதற்குக் காரணம்.. அவர்களின் கல்வி அறிவு பெறும் ஆற்றல் மேம்படுத்தப்பட்டதுதான். கல்வி அறிவு பெற ஆர்வமற்ற ஒரு குழும மக்கள்.. எப்படி நாகரிகத்தை அறிவர்.. எப்படிப் பொதுச் சுகாதார நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை அறிவர்.. எப்படி அடுத்தவர்களுடன் சமூகமாக வாழ்வது பற்றி அறிவர்.. இவற்றில் அவர்கள் பிந்தங்கி இருப்பதால் தான் அவர்கள் தம்மைத் தாமே தாழ்த்தி வாழ்ந்து பிந்தங்கிப் போகின்றனர்.

இந்த நிலையை இன்னொருவர் தடுப்பதால் தான் அடைகின்றனர் என்பது 21ம் நூற்றாண்டில் ஏற்புடைய வாதமல்ல..! :huh:

இந்த நிலையை தலித்தியம்.. சாதியம் என்று உச்சரிக்கும் சிலர் அந்த தாழ்வுச் சிக்கல் உள்ள மக்களை இப்படியான சமூகப் பிரிவுகளுக்குள் அடக்கி மேலும் மேலும் சமூகச் சிறையிடவே விரும்புகின்றனர். அதுதான் சபேசன்.. சுகன் போன்றவர்களின் நோக்கம். இவர்கள் எந்த ஒரு உலகியல் சமூக மாற்றத்தையும் உதாரணமாகக் கொள்ளாமல்.. வெறும் கற்பனைப் பார்பர்னியத்தைக் கற்றுக் கொண்டு மக்களை சாதிய அடிப்படையில் மேல் கீழ் என்று குறித்துக் காட்டி.. தாழ்வுச் சிக்கலை வளர்க்க உதவுகின்றனரே தவிர போக்க முனையவில்லை.

மக்களின் மனங்களில் உள்ள தாழ்வுச் சிக்கலுக்கான காரணங்கள் என்ன என்று ஆராய்கின்ற போது.. கல்வியில் நாட்டமின்மை முதன்மையாக இருக்கிறது. அதுமட்டுமன்றி.. பிற காரணிகளும் உள்ளன. இவற்றை இனங்கண்டு அந்த மக்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி.. அவர்களையும் வளர்ந்து வரும் நாகரிக மாற்றங்களூடு.. நவீன நூற்றாண்டுக்கு ஏற்ப தயார் செய்ய முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் வளர்ந்து வரும் ஏனைய மக்களுக்கு நிகராக அவர்களும் சமூகத்தில் தலை நிமிர்ந்து நிற்கத்துணிவர். அந்தத் துணிச்சல் இன்மைதான் அவர்களை சாதி தலித்து என்று உயர்த்தியும் தாழ்த்தியும் காட்டி சில சமூக விரோதிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க ஏதுவாக அமைகிறது..!

உதாரணத்துக்கு.. ஆபிரிக்க மக்களை அடையாளமாகக் கொண்டு.. சிந்தித்துப் பாருங்கள். அவர்களின் இன்றைய முன்னேற்றத்தை உற்று நோக்குங்கள்..!

தூயவன் இனங்காட்டிய.. மலைய மக்கள்.. பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் எல்லாம் எதனால் பிந்தங்கினர். இன்றும் சிலர் சிங்கள எஜமானர்களுக்கு பயந்து வாழ்வது ஏன்..??! சாதியாலா..???! இல்லவே இல்லை. கல்வி அறிவுபெற்ற மலைய இளைஞர்கள் பலர் விடுதலைப் புலிகளோடினைந்து தங்கள் சமூகத்தின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராட முன் வந்துள்ளதை இங்கு உதாரணமாக்கிக் காட்டலாம்.

ஆழ்ந்த சிந்தனையற்று.. மேலோட்டமாக கருத்துக்களை, சமூக விடயங்களை அணுகி விளம்பரம் தேடாமல்.. உண்மையான சமூக மாற்றத்துக்கு எங்கு எதில் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று இனங்காணுங்கள். அதுதான் பயன்மிக்க தாக இருக்கும். அதைவிடுத்து மக்களின் தாழ்வுச் சிக்கலை வளர்க்கக் கூடிய சாதி.. தலித்து.. மேட்டுக்குடி.. பார்பர்னன்.. பிராமணன் போன்ற பிற்போக்கான சிந்தனைகளை விட்டொழியுங்கள். அல்லது வளர்த்து கட்டிக்காத்து.. அதன் மூலம் சமூகப் புரட்சி செய்யப் போவதாக பண்டைய காலக் கனவு காண்பவர்கள் ஒன்றில் நீங்களா விழித்தெழுங்கள் அல்லது மனித சமூகத்தை விட்டு ஒதுங்கி ஓடுங்கள்..! :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காவடி, எனக்கும் அதே அபிப்பிராயம் தான். சாதி தொழில் சம்பந்தப் பட்டதென்றும், அதனால் தொழிலை மதித்தால் சாதிபேதம் இல்லை என்கிறார் ஒருவர். இதற்காக பறையடித்தல், மரம் ஏறுதல் போன்ற சமுதாயத்திற்கு மிகவும் "இன்றியமையாத" தொழில்களை முறைசார் கல்விக்குள் அடக்கிப் பட்டம் கொடுக்கும் ஐடியாவும் சிலரால் தரப்பட்டது. இன்னொருவர் ஒரு சமூகவியல் சிந்தனைப் போக்கில் வெள்ளாளர் வெளிநாடு சென்று விட, மற்றைய சாதியினர் ஊரில் நின்று தம் தொழிலை விட்டு விட்டு வெள்ளாளரின் வீதி விளக்குக்குக் கல்லெறிவதாகக் கவலை கொள்கிறார். இப்படிப் பட்ட சிந்தனை கொண்ட வெள்ளாளரின் வீதி விளக்கை மட்டும் உடைக்கும் அந்நபர்கள் மிக்க பொறுமை சாலிகளாகத் தான் எனக்குத் தெரிகிறார்கள்.தூயவன் சொன்ன அடங்கிப் போகாத குணத்தைத் தான் இவர்கள் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் பின்பற்றுகிறார்கள் என நினைக்கிறேன். இத்தனை சுத்து வழி,எவ்வளவு ஆராய்ச்சி! யாரும் இந்த சாதியம் மேல் சாதியினரின் தடிப்பினால் வந்ததென ஒப்புக் கொள்ளவேயில்லைப் பார்த்தீர்களா? என்ன விலை கொடுத்தும் சம்பிரதாயத்தைக் காப்பாற்றும் உன்னத மனிதர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நான் ஒரு கதை சொல்லுறன் - பொதுச்சுகாதாரம் அற்ற ஏமாற்றுகிற அதிகம் சினிமா பார்க்கின்ற படிப்பறிவற்ற அந்தக் குழும மக்கள் தமது தாழ்வுச்சிக்கலில் இருந்து வெளிப்பட்டு படித்து ஏமாற்றும் குணத்தை ?? கைவிட்டு பொதுச்சுகாதாரம் அடைய குளிப்பதற்காக ஒரு பொதுக்கிணற்றிற்கு செல்கிறார்.

அங்கு வரும் ஒரு படித்த பொதுச்சுகாதாரம் பேணும் அதிகம் சினிமா பார்க்காத ஏமாற்றாத குழும மக்கள் சிலர் சேர்ந்து குளிக்க வரும் குழுமத்தை சேர்ந்தவனைப் பார்த்து ´´டேய் எளிய ..... ..... படிப்பறிவில்லாத ...... ஏமாத்துற ..... நீ எல்லாம் இந்தக் கிணத்தில தண்ணியள்ளக் கூடாது. ஓடிப்போ.. ´´ எனத் துரத்தியடித்தால்...

இங்கு சாதியை எப்படி ஒழிப்பது ?

அவ்வாறு ஒழிப்பதற்கான ஆலோசனையை யாருக்கு வழங்குவது ? குளிக்க வந்த குழும மகனுக்கா ? அதை தடுத்தவர்க்கா ?

இத்தகைய சூழ்நிலையில் குளிக்க வந்தவன் செய்யக் கூடியது என்ன?

ப்ளீஸ் எனக்குந்த மனவியல் மன அவியல் உளவுசிக்கல் அறிவியல் அதெல்லாம் தெரியாது. நடைமுறைப் பதிலைத் தந்தாலே (வெட்டி நீட்டியடிக்காமல் ) மெத்தப் பெரிய உபகாரமாப் போகும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னே இந்த சாதி வெறி சம்பிரதாய வெறி பாப்பன வெறி இதுவள இல்லாம செய்ய ஒரு வழி தான் இருக்கு. மூலிகை அம்மன் செய்து குழையடிச்சு பால் அபிசேகம் செய்து அதுவள குடிச்சா வருத்தம் துன்பம்; எல்லாமே தீரும். அதிலும் பாளையத்தம்மனுக்கு உதுவள செய்தால் பலன் உடன கிடைக்கும்.

எல்லாற்ற பூனைக்குட்டியும் ஒண்டா வெளி வந்திருக்கு நல்ல தலைப்பு.

இந்தத் தலைப்பில் கீழ் சாதி மக்களின் தாழ்வுச் சிக்கல் பழக்க வழக்கங்கள் பற்றி எழுதியவர்கள் தான் இதே களத்தில் இந்து சமயத்தின் உயர்வு பற்றியும் எழுதிக் கிழிப்பவர்களாக இருப்பது தற்செயாலான விடயம் இல்லை.

கடைந்தெடுத்த சாதியத் திமிர் கொண்டு அலையும் இந்த இந்துக் கூட்டத்தைத் துலைக்காம சாதியம் ஒழியாது.சைவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் சுகன் போன்றவர்களுக்கும் இது ஒரு பாடம். நீங்கள் இந்து சமயம் சைவ சமயம் என்னும் சமயங்களைக் கட்டி அழுது கொண்டிருக்கும் வரை அதனைத் தூக்கிப்பிடிக்கும் இந்தக் கூட்டதுக்கு சாவு மணி அடிக்காம ஒண்டையும் அழிக்க ஏலாது.

இவர்களின் கருதுக்கள் கிட்லர் யூதர்களைப் பார்த்துக் கூறியவற்றை அச்சொட்டாகக் கொண்டிருக்கிறது.

The Jews were frequently referred to in "Mein Kampf" and Hitler had made plain his hated for them. References to the "filthy Jew" litter the book. In one section, Hitler wrote about how the Jews planned to "contaminate" the blood of pure Germans:

The Jewish youth lies in wait for hours on end.......spying on the unsuspicious German girl he plans to seduce..........He wants to contaminate her blood and remove her from the bosom of her own people. The Jew hates the white race and wants to lower its cultural level so that the Jews might dominate."

"Was there any form of filth or crime...without at least one Jew involved in it. If you cut even cautiously into such a sore, you find like a maggot in a rotting body, often dazzled by the sudden light - a Jew."

http://www.historylearningsite.co.uk/Jews_Nazi_Germany.htm

The Jews were frequently referred to in "Mein Kampf" and Hitler had made plain his hated for them. References to the "filthy Jew" litter the book. In one section, Hitler wrote about how the Jews planned to "contaminate" the blood of pure Germans:

The Jewish youth lies in wait for hours on end.......spying on the unsuspicious German girl he plans to seduce..........He wants to contaminate her blood and remove her from the bosom of her own people. The Jew hates the white race and wants to lower its cultural level so that the Jews might dominate."

"Was there any form of filth or crime...without at least one Jew involved in it. If you cut even cautiously into such a sore, you find like a maggot in a rotting body, often dazzled by the sudden light - a Jew."

யூதர்களை கிட்லர் அழுக்கானவர்கள் என்றார்.அவர்கள் எவ்வாறு தூய ஆரிய இனத்தைக் களங்கபடுத்துகிறார்கள் என்று எழுதினார்.யூத இளைஞர்கள் ரோட்டில நிண்டு தங்கட பெட்டயளை சைட் அடிச்சு அவங்கட அசுத்தமான இரத்தத்தை தங்கட பெட்டளையளுக்க கலந்து தங்கட இனத்தையே களங்கபடுத்துகிறார்கள் என்று எழுதினார்.யூதர்கள் வெள்ளை இனத்தை அதன் கலாச்சாரத்தை கீழே செல்ல வைக்கின்றனர்( இங்கே ஒருவர் எழுதிய கீழ் நிலை மக்கள் அழுக்கானவர்கள் என்னும் கருத்தை இங்கே ஒப்பு நோக்க வேண்டும்)

எங்கேயாவது அழுக்கான குற்றமான விடயங்கள் ஒரு யூதனுடன் தொடர்பு படாமல் நிகழ்ந்திருக்கிறதா?

ஒரு சடலதுக்குள் கிடந்து உளலும் புழுவைப் போல் , இந்த புரையோடிப் போன புண்ணிற்குள் இருந்து வெளித்தெரிபவன் ஒரு யூதனாகவே இருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி நான் ஒரு கதை சொல்லுறன் - பொதுச்சுகாதாரம் அற்ற ஏமாற்றுகிற அதிகம் சினிமா பார்க்கின்ற படிப்பறிவற்ற அந்தக் குழும மக்கள் தமது தாழ்வுச்சிக்கலில் இருந்து வெளிப்பட்டு படித்து ஏமாற்றும் குணத்தை ?? கைவிட்டு பொதுச்சுகாதாரம் அடைய குளிப்பதற்காக ஒரு பொதுக்கிணற்றிற்கு செல்கிறார்.

அங்கு வரும் ஒரு படித்த பொதுச்சுகாதாரம் பேணும் அதிகம் சினிமா பார்க்காத ஏமாற்றாத குழும மக்கள் சிலர் சேர்ந்து குளிக்க வரும் குழுமத்தை சேர்ந்தவனைப் பார்த்து "டேய் எளிய ..... ..... படிப்பறிவில்லாத ...... ஏமாத்துற ..... நீ எல்லாம் இந்தக் கிணத்தில தண்ணியள்ளக் கூடாது. ஓடிப்போ.." எனத் துரத்தியடித்தால்...

இங்கு சாதியை எப்படி ஒழிப்பது ?

அவ்வாறு ஒழிப்பதற்கான ஆலோசனையை யாருக்கு வழங்குவது ? குளிக்க வந்த குழும மகனுக்கா ? அதை தடுத்தவர்க்கா ?

இத்தகைய சூழ்நிலையில் குளிக்க வந்தவன் செய்யக் கூடியது என்ன?

ப்ளீஸ் எனக்குந்த மனவியல் மன அவியல் உளவுசிக்கல் அறிவியல் அதெல்லாம் தெரியாது. நடைமுறைப் பதிலைத் தந்தாலே (வெட்டி நீட்டியடிக்காமல் ) மெத்தப் பெரிய உபகாரமாப் போகும்)

கொஞ்சம் படிச்சவன் படிக்காதவனைப் பார்த்து திட்டுறது உலகத்தில சகஜம். அதையே நீங்கள் சாதியம் பூசி பாக்கிறியள்..!

ஒரு வெள்ளைக்காரன்.. "பாக்கி" என்று பேசினா.. அடங்கிப் போறியள். உடன டேய் இனவெறி பிடிச்ச வெள்ளைக்காரா.. உன்னை ஒழிக்கிறன் பார். பாம்பைக் கண்டால் விடு.. வெள்ளைக்காரனைக் கட்டால் அடி என்று புலம்பித் திரிய வரட்டாம்..! :mellow: உங்களுக்கு இடம் தந்திட்டினம் கணக்க. அதாலதான் இவ்வளவு வில்லங்கங்களும்..!

எல்லாரும் படிச்சிருந்திட்டா இந்தப் பிரச்சனை வராதில்ல..! ஒருவர் படிக்க மற்றவர் அவரை அண்டிப் பிழைக்க என்று ஒரு தாழ்வுசிக்கல் வந்தபடியால் தான் இந்த நிலை. அதைக் களைய படிப்பு முக்கியம் எல்லாருக்கும்.. எல்லோருக்கும் கட்டாயக் கல்வி என்றதைக் கட்டாயம் ஆக்கனும் முதலில.

அடுத்தது.. பொதுச் சுகாதாரம் எல்லாருக்கும் கட்டாயம். மேற்குல குப்பையை வெளில கொட்டினா.. எவ்வளவு பைன் தெரியும் தானே..??! இந்தியாவில குப்பம் என்று குப்பைக்குள்ளையே வாழுற கூட்டமும் இருக்குது..???! இதெல்லாம் எதனால யாராலா. சாதி ஒழிக்கிறம் என்று மேடையில பேசி ஆட்சிக்கு வந்தவையாலதான். அவை நினைச்சா.. இந்த மக்களை தராசில ஒரே தட்டில வைக்க கணக்க நேரம் எடுக்காது. அப்படி வைச்சா இந்தத் தாழ்வுச் சிக்கல் இல்லாமல் போயிடும்.. ஆனால் அப்படி வைச்சிட்டா.. அந்த மக்கள் சிந்திக்க வெளிக்கிட்டா.. வாக்குக்கு எங்க போறது..???!

முதலில இவையள.. உந்த கள்ள அரசியல்வாதியளையும் ஈ வெ ராமசாமி போன்ற துண்டு விசிறிகளையும் சமூகத்தை விட்டு விரட்டியடிக்கனும்..! சும்மா இந்து மதத்தை தூசிக்கினமாம்.. அரையும் குறையுமா அதைப் பற்றி அறிஞ்சு வைச்சுக் கொண்டு. ஆனால் தாங்கள் மக்களை பிரித்து வைச்சு அரசியல் நடத்தினமாம்..!

மேற்கில தரக்குறைவாப் பேசினா.. பொலிஸ் விசாரணை.. பைன்..! நம்ம நாட்டில.. அது.. தாழ்வுச் சிக்கலில மாட்டியுள்ளவைக்கு அனுமதிக்கப்படுகுது. எல்லாருக்கும் நன் நடத்தை முக்கியம். எவரா இருந்தாலும் நன் நடத்தையை விட்டு விலகிறவரை சட்டம் தண்டிக்கனும்..! வழி நடத்தனும்..!

அரசாங்கத்தை நடத்திறவையின்ர கையிலதான் இந்தப் பிரச்சனைக்கான தீர்வு இருக்குது. அந்த வகையில அமையப் போற ஈழத்தில தலித்தும் இல்ல சாதியும் இல்ல..! ஒன்றும் கிடையாது. தமிழன் மட்டும் இருப்பான். அவனுக்கான மதச் சுதந்திரங்கள் உலகில் ஏனைய இடங்களில் அனுமதிக்கப்பட்டது போல அனுமதிக்கப்பட்டிருக்கும். விரும்பிறவை விரும்பின மதத்தைப் பின்பற்றலாம். ஆனால் வன்முறையில இறங்க முடியாது.. மூடநம்பிக்கைகளை பரப்ப முடியாது. அரசு சரியான விளக்கங்களை மக்களுக்குத் தரும். இப்படித்தான் இருக்கும் ஈழம்.

அடுத்தது.. உங்கட கிணத்துப் பிரச்சனை 21ம் நூற்றாண்டுக்கு அவசியமில்லை. குழாயைப் போட்டு ஒரு மோட்டரையும் போட்டு.. வீட்டுக்கு வீடு தண்ணி கொடுத்திட்டால் போச்சுது. கிணத்தடிச் சண்டை போயிடும்.

புலம்பெயர்ந்த நாடுகளில எங்கையோ கிடக்கிற குட்டைல உள்ள தண்ணிதானே வருகுது வடிகட்டி. அதுக்கு அடிபட்டா பாவிக்கிறியள். காசு கொடுத்துப் பாவிக்கிறியள். அதையே எல்லாருக்கும் அப்பிளை பண்ணுறதால கம்மென்று நடக்கிறயலில்ல.

எல்லாத்துக்கும் ஆட்சியில உள்ளவை உருப்படியா இருந்தா.. எல்லாரும் கல்வியும் பெறுவினம்.. இப்படி தலித்து.. சாதி என்று வயிறு விளம்பரமும் வளர்க்க மாட்டினம்..! இந்து ஒழிக.. புத்தம் வாழ்க என்ற கோசங்களும் எழாது. எல்லாருக்கும் எல்லாம் என்று அமையுற படி சட்டங்கள் கட்டாயமாகேக்க.. மனித சமத்துவம் தானாப் பிறக்கும்..!

வெள்ளைக்காரன் போட்டான் சட்டம்.. இனத்துவேசமாப் பேசுறது குற்றம் என்று.. உடன எல்லாரும் வாயடைச்சிட்டு இருக்கிறியள். உந்த சாதி தலித்தியம் பேசுற வாயளை அடைக்க ஒரு காலம் ஈழத்தில நிச்சயம் வரும். அப்ப.. இந்து மதமும் இருக்கும்.. சைவமும் இருக்கும்.. ஆனால் சாதி தலித்து என்று சொல்லிப் பிழைக்கிற கூட்டம் இருக்காது..!

அதேபோல் கீழானவன் மேலானவன் என்ற சிந்தனையோட்டம் இல்லாத நிலைக்கு எல்லாரும் கொண்டு வரப்படுவினம். அப்படி வரேக்கையும் இந்து தர்மம் சிறப்புற ஒளிவீசிட்டே இருக்கும். காரணம்.. அது ஆன்மா என்று எல்லா உயிர்களையும் ஒரு நிலையில் வைக்கிறது..! :huh:

Edited by nedukkalapoovan

இந்தியப் பார்ப்பனரின் இந்துத்வா சமன் நாசியம் என்றால், ஈழத்து புலம் பெயர்ந்த வெள்ளாளரின் இந்துதுவா சமன் நாசியம் என்பது கன கச்சிதமாகப் பொருந்த் வருகிறது.

உந்த நாசிகளை யாழ்க் களம் இன்னும் நன்றாக வளர விடட்டும்.தமிழ்த் தேசிய ஒற்றுமை தழைத் தோங்கும்.

சாதிய சமய பிரிவினைகள் அற்ற தமிழ் அடையாளம் என்பது உருவாகும். :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் படிச்சவன் படிக்காதவனைப் பார்த்து திட்டுறது உலகத்தில சகஜம். அதையே நீங்கள் சாதியம் பூசி பாக்கிறியள்..!

ஸ்ப்பா.. எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே..

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ப்பா.. எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே..

கட்டும் கட்டும் உண்மைதானே. அண்மையில் டி என் ஏ யைக் கண்டுபிடித்தன் வற்சன் என்ற அமெரிக்க விஞ்ஞானி.. ஆபிரிக்கர்கள் மதிநுட்பத்திறன் குறைந்தவர்கள் என்று சொல்லி வாங்கிக் கட்டினாரே..???! இது எதனால்..???!

இக்களத்தில் கூட மோகன் சார் கூட சிலர் தங்களை எல்லாம் அறிஞ்சவைப் போலக் காட்டினம்.. மறைமுகமா "மேதாவிகள்" என்று திட்டினாரே..???! இதெல்லாம்.. சாதியடிப்படையிலா சார்..! :mellow:

அது மட்டுமா.. இங்கு தல என்ற உறுப்பினரை ஒரு விவாதத்தில்.. "நீர் போய் ஒழுங்க படிச்சிட்டு வாரும்" என்று திட்டினார் இன்னொருவர். அதன் பின்னர் (தல) என்ற தயா இப்ப விவாதங்களில் ஈடுபடுவது குறைஞ்சிச்சு..!

இதெல்லாம்.... எதனடிப்படையில்..???!

உங்களுக்கு கண்ணைக் கட்டத்தான் செய்யும். ஏனென்றால் உங்கள் கண்கள் சாதியம் என்ற கந்தையால ஏலவே இறுகக் கட்டி இருக்கிற படியால்..! :D:huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், சுத்தினது காணும் நேராகச் சொல்லுங்கோ. ஒரு குறைந்த சாதிக்கார நபர் உயர்சாதிக்காரருடைய கிணற்றில குளிக்கப் போய், உயர் சாதிக்காரர் மரியாதை குறைவாகத் திட்டினால் அடுத்து என்ன செய்வது? இங்கே கவனிக்க வேண்டியது, இருவருக்கும் சமனான கல்வித் தகுதி இருக்கிறது எனக் கொள்ளவும் (ஏன்? சாதி qualification போதும் என்று உயர் சாதிக்காரர் கொஞ்சம் குறைந்த வகுப்புத் தான் படித்தார் என்று கூட வைத்துக் கொள்ளலாம்!). அந்த ஊரில் மோட்டார் குழாய்த் தண்ணீர் வசதியெல்லாம் இல்லையாம். என்ன செய்யலாம் நெடுக்கர்?

(நவீன மனித வளர்ச்சிப் போக்கில் குளித்தல் அவசியம் தானா என்று ஆய்வு நடத்த ஆரம்பிக்க வேண்டாம். ஒரு நாலு வரியில சொல்ல முடியுமானால் சொல்லுங்கோ தயவு செய்து!)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், சுத்தினது காணும் நேராகச் சொல்லுங்கோ. ஒரு குறைந்த சாதிக்கார நபர் உயர்சாதிக்காரருடைய கிணற்றில குளிக்கப் போய், உயர் சாதிக்காரர் மரியாதை குறைவாகத் திட்டினால் அடுத்து என்ன செய்வது? இங்கே கவனிக்க வேண்டியது, இருவருக்கும் சமனான கல்வித் தகுதி இருக்கிறது எனக் கொள்ளவும் (ஏன்? சாதி qualification போதும் என்று உயர் சாதிக்காரர் கொஞ்சம் குறைந்த வகுப்புத் தான் படித்தார் என்று கூட வைத்துக் கொள்ளலாம்!). அந்த ஊரில் மோட்டார் குழாய்த் தண்ணீர் வசதியெல்லாம் இல்லையாம். என்ன செய்யலாம் நெடுக்கர்?

(நவீன மனித வளர்ச்சிப் போக்கில் குளித்தல் அவசியம் தானா என்று ஆய்வு நடத்த ஆரம்பிக்க வேண்டாம். ஒரு நாலு வரியில சொல்ல முடியுமானால் சொல்லுங்கோ தயவு செய்து!)

நீங்களேன் இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னால போய் சூழ்நிலையைச் செயற்கையா உருவாக்கி அதில சாதியத்தை தெளிக்க விரும்புறீங்க.. அதை விட்டுத்தள்ளிட்டு..

இன்றைய போர்க்களத்தைப் பாருங்க.. சிங்களத்தரப்பா இருக்கட்டும் தமிழர் தரப்பா இருக்கட்டும்.. இல்ல ஈராக்கா இருக்கட்டும்.. வீரர்கள் ஓரணியில நின்று தங்கள் தங்கள் படைகளுக்காகப் போரிடினம். ஏன் உங்களால அப்படிச் சிந்திக்க முடியல்ல.. அது குறித்து.. சிந்திச்சா.. உங்களின் ஆழ்மனதில் இருக்கும்.. ஏதோ தாழ்வுச் சிக்கல் வெளிப்படுறாப் போல அமையுதா இல்லையா.. சிந்திக்குக..! :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் ... நேரடிப் பதில்

எனது உரிமைகளை இன்னொருவன் தடுத்து நிறுத்த அல்லது தடையேற்படுத்த முயலும் போது அதற்கு சாதி அடையாளம் இடும் போது அவனுக்கு நான் கொடுக்க வேண்டிய பதில் என்ன ?

திரும்ப திரும்ப ஆலோசனைகளை தாழத்தப்பட்டவர்களுக்குத்தா

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், நீங்கள் செய்து கொண்டிருப்பது சொல்லாடல். கருத்தெதுவும் இல்லை என்பது உங்களுக்கே புரிகிற எளிமையான உண்மை. இங்கே சாதியம் பற்றிய கருத்தாடல் நடக்கிறது. எங்கள் சமூகத்தில் யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளா விட்டாலும் சாதியம் இருக்கிறது, அதன் விளைவுகள் இருக்கின்றன.அதைச் சிலர் எப்படி நிவர்த்திக்கலாம் என்கிற தொனியில் கருத்தாட ஆரம்பிக்கையில் உயர் சாதிக்காரர்கள் மீது சாதியத்தை ஊக்குவிப்பதான குற்றச் சாட்டு விழுந்தது. நான் அக்குற்றச் சாட்டு நிஜமானது என்கிறேன். நீங்கள் இது ஒரு குழுமத்தின் ஒட்டு மொத்த மனவியல் என்கிறீர்கள். இருக்கலாம், மனித நடத்தை எல்லாம் மனவியலால் விளக்கப் படக்கூடியது தான். ஆனால் எதற்கும் மூலம் தேடிப் போகும் நீங்கள் அந்த குழும மனவியல் எப்படி உருப் பெற்றது எப்படி தொடர்ந்து தக்க வைக்கப் படுகிறது என்று ஆராயாமல் இருப்பது உங்கள் "சொற்களுக்கு" பலம் சேர்க்க நீங்கள் செய்யும் தேடல் தவிர்ப்பு என நான் நினைக்கிறேன். அதற்காக ஒரு உதாரணத்தைக் கேட்டு உங்களிடமிருந்து செயல் பாட்டு ரீதியான பதில் வருகிறதா என அறிய ஒருவரின் கேள்வியைத் திருத்திக் கேட்டேன்.மற்ற படி பதில் உங்களிடமிருந்து எதிர்பார்த்த படி தான் வந்திருக்கிறது. செயல் பாட்டு வழியில் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு சொல்ல இயலா விட்டால் அவ்விடயம் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதியும் ஒரு பயனும் இல்லை. அவமானப் படுத்திய உயர் சாதிக்கார நபர் தண்டிக்கப் பட வேண்டுமென்று சொல்ல உங்களுக்கு இயலவில்லை-அது தான் இக்கேள்வி பதில் வெளிக்கொணர்ந்த பெறுமதியான உண்மை. இப்பதிலைத் தவிர்க்க நீங்கள் எடுத்த முயற்சி நகைப்புக்குரியது-ஆபிரிக்கா, விடுதலைப் போர் என்று எல்லா இடங்களிலும் ஒளிந்து வந்திருக்கிறீர்கள். தமிழ் தேசியப் போராட்டம் தமிழருக்கு மானம் தருகுதோ இல்லையோ, உங்கள் மாதிரி சமூகப் பிரச்சினைகளைப் பேசாப் பொருளாகத் தட்டிக் கழித்து , குழும ஆதாயம் தேட முயலும் ஆட்களுக்கு நல்லாப் பயன் படுகுது.ஆனாலும் அதிசயம் என்னவெண்டால் புயலின் மையத்தில நிற்கிற தமிழர் தலைமை சாதியம், சீதனக் கொடுமை அது இது எண்டு எல்லாப் பிரச்சினைகளையும் யுத்தத்தின் மத்தியிலும் எதிர்கொள்ளுது, தீர்வுகளும் கண்டிருக்குது.

நல்லிரவு வணக்கங்கள்!

தற்போது 'வெள்ளாளன்' எதற்கு தடையாக உள்ளான் என்று கூறமுடியுமா?

அவன் வீட்டு கிணற்றிலதான் முழுகணுமா? முழுக விரும்புபவன் தனக்கென ஒரு கிணறை அமைத்து முழுகுவதை வெள்ளாளன் வந்து தடுக்கவா போகிறான்?

அல்லது வெள்ளாளப் பெட்டையள் கேட்குதா? பெட்டை ஒத்துக் கொண்டால் தற்போது யார் துணிவாகத் தடுக்கப் போகிறார்கள்..

ஆக, தற்போதும் 'வெள்ளாளன்' 'வெள்ளாளன்' என்று சுட்டுவிரலை நீட்டுவது.. நெடுக்ஸ் கூறுவதைப்போல மனவியல் தாக்கம்தான்.

இன்று சகலரும் வசதிகளுடனும் வாய்ப்புகளுடனும் வாழ்கிறார்கள்.. இதில வெள்ளாளனை எதற்கு எதிர்பார்க்க வேண்டும்?!

இன்று மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் மனம் மாறி வருபவர்களையும் 'வராதே' என தடுக்கிறார்களஇ.. அது செய்கைகளாக இருந்தாலென்ன? கருத்துகளாக இருந்தாலென்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன் வீட்டு கிணற்றிலதான் முழுகணுமா? முழுக விரும்புபவன் தனக்கென ஒரு கிணறை அமைத்து முழுகுவதை வெள்ளாளன் வந்து தடுக்கவா போகிறான்?

உங்கள் பிரச்சினை உங்கள் வீட்டுக் கிணற்றில் இன்னொருவன் குளிக்கிறான் என்பதாலா? அல்லது கீழ் சாதியான் குளிக்கிறான் என்பதாலா?

நவீன மனித வளர்ச்சிப் போக்கில் குளித்தல் அவசியம் தானா என்று ஆய்வு நடத்த ஆரம்பிக்க வேண்டாம். ஒரு நாலு வரியில சொல்ல முடியுமானால் சொல்லுங்கோ தயவு செய்து!

என்ன யஸ்டின், நக்கலா....? அதுவும் நம்மட நெடுக்கை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கலாமோ?

நான் நினைக்கிறன் நெடுக்கரின்டை மூளை சிந்திக்க தொடங்க முன்னர் அவரின்டை கை எழுதத் தொடங்கீடுது போல!

இப்ப எல்லாம் நான் நெடுக்கரின்டை கருத்துகளை(?) வாசிக்கிற பஞ்சியில அவருக்கு எழுதப்பட்ட பதில்களில இருந்துதான் அதன் சாராம்சத்தை தெரிஞ்சு கொள்ளுறனான் என்றா பாருங்கோவன்!

:(

Edited by சாணக்கியன்

யப்பா யப்பா சாதி தேவையற்றது என வைத்துக்கொண்டே இவ்வளவு விடயங்கள் நடக்கிறதா? இதற்குள் புகவே கூடாது என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் எனது சிறிய ஒரு கருத்தையும் முன்வைக்கிறேன். தற்கால வாழ்க்கை முறைக்கு சாதிய அமைப்புத் தேவையற்ற ஒன்றுதான். ஆனாலும் என்ன பயன். மேடைகளில் அரங்குகளில் பொதுமக்களிடத்தில் சாதிய அமைப்பை எதிர்த்துப் பேசுகின்றவர்கள் தமக்கான ஒரு பிரச்சனை வரும்போது அந்தச் சாதிய அமைப்புக்குள் தன்னை இணைத்துக் கொண்டுவிடுகிறார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பவாதிகளை நான் பலதடவைகளில் சந்தித்திருக்கிறேன். சாதியை எதிர்த்துப் பேசுகின்ற ஒருவர், திருமணம் பேசுதல் பற்றிய விடயம் வரும்போது பேசிச் செய்யும் திருமணங்களினால்தான் குடும்பப் பின்னணிகளை அறிந்து பிள்ளைகளை நல்லமுறையில் வாழவைக்கலாம் என்ற கருத்தொன்றைச் சொன்னார். அதற்கு எனது எதிர்க் கேள்வி திருமணப் பேச்சு என்று வந்தபின் முதலில் கேட்கப்படும் கேள்வி அவங்கள் நம்மடை ஆக்களோ என்பதுதான். இதற்கப்புறம்தானே அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றீர்கள். என்றேன். இதை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் என்னவெனில் சாதிய அமைப்பென்பது பலமான அத்திவாரத்தில் கட்டப்பட்டுவிட்டது. உடனடியாக அதனை இடித்துத்தள்ள முடியாது. எதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் அதற்குள் புகுந்து விடுகிறான்.

கிணற்றில் தண்ணி அள்ள சாதிகள் பிரச்சனை என்ற காலம் இல்லை இக்காலம். நாட்டில் மக்கள் சாதியத்தை கடந்து ஒருமித்து உள்ளனர். முற்றாக இல்லாவிட்டாலும் சாதியம் மிக வலுவிழந்து விட்டது. பல்வேறு இடப்பெயர்வுகள் நடந்த போது கிணற்றுப்பிரச்சனை எல்லாம் எங்கோ கண்காணாத தூரத்தில் சென்றுவிட்டது. எமது சமூகம் பிளவுபட்டு கூறுபட்டு காலாகாலம் சிதைந்து கிடந்தது இன்று தமிழர் என்று ஒருமித்து பயணிக்கையில் நெடுக்காலபோவானின் அபத்தமான கருத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

நான் அவதானித்திருக்கிறேன்.. ஊரில் தாழ்வுமனச் சிக்கலுக்குள் வாழும் குழும மக்களின் நடத்தை என்பது சற்று மாறுதலானதாக இருக்கும். பண்பாகக் கதைக்கமாட்டார்கள்..! ஏமாற்றும் குணம் அதிகம் இருக்கும். பொதுச் சுகாதாரம் குறைவா இருக்கும். உடை நடையில் கவனமின்மை. கல்வியில் நாட்டமின்மை. சினிமா மோகத்தில் கிடப்பார்கள். இது அவர்கள் தனிமைப்பட்டுப் போக மேலும் வகை செய்கிறது.

இந்த கருத்து இங்கே கருத்தாடியவர்களுக்கு முன்வைக்கப்பட்ட கருத்து அல்ல என்பதும் ஊரில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்டுவதுமாக இருக்கின்றது.

தொழில் அடிப்படையிலாக ஈழத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த சாதியத்திற்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் மிக மோசமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறனதொரு பார்வையில் சிலர் இருப்பதால் தான் தலித்துக்கள் என்ற புதிய அலகை தொடக்கி மாநாடுகள் நடத்த முற்படுகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் மனுதர்மம் வாயிலாக மக்களை பிரித்து மக்களை தீண்டத்தகாதவர்கள் என்ற வரையறைக்குள் தள்ளிவிட்டது போல் புதிய ஒரு வரைவிலக்கணத்தை தொழில்சார் அடிப்படையை வைத்து சாதியமாக இருந்த ஈழத்து தாழ்ந்த சாதி மக்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட மேற்கண்ட கருத்தாகும்.

குழும மக்களின் நடத்தை என்று கூறப்பட்ட விடயங்கள் சாதியத்திற்கு அப்பாற்பட்ட தனிமனிதனின் குறைபாடுகள். உலகின் பொதுவான தனிமனித குறைபாடுகள். இவற்றை ஒரு தரப்பாக்குவதோ ஒரு குழுமம் என்று விழிப்பதோ மிகவும் மோசமானது.

மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு உட்படும் ஒருவன் ஒரு குழுமத்திற்கு அடயாளமாக முடியாது. அவ்வாறு அடயாளப்படுத்த முற்பட்டால் சாதியம் என்பதை எப்போதும் களைய முடியாது. பொதுவான பத்து மனிதனில் ஒருவன் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதோ அல்லது பண்பு மீறி கதைப்பதோ அல்லது சினிமாவில் மோகம் கொண்டிருப்பதோ இயல்பானது. சாதியத்திற்கு அப்பாற்பட்ட தனிமனித குணம். இது ஒரு குழுமத்தின் அடயாளம் என்பது எவ்வளவு அபத்தம்?

சாதியில் தாழ்ந்தவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை என்பது இயல்பான ஒன்றல்ல. அது திணிக்கப்ட்ட ஒன்று. அது இன்று நேற்று தோன்றியதல்ல. காலாகாலமாக திணிக்கப்பட்டுவரும் ஒன்று. காலனித்துவ காலத்தை எடுத்துப்பார்த்தால் மேல்சாதிக்குழந்தைகளும் கீழ் சாதிக்குழந்தைகளும் ஒன்றாக பள்ளியில் படிப்பதை உணவருந்துவதை ஈழத்திலும் சரி இந்தியாவிலும் சரி கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர். குழந்தைப்பருவத்திலேயே ஏற்றதாழ்வுகள் விசம்போல் திணிக்கப்பட்டது. ஒவ்வொரு நிகழ்விலும் சடங்கிலும் தள்ளிவைக்கப்பட்டார்கள். சிரட்டைகளில் தேனீர் கொடுத்தார்கள். கோயில் குளத்தில் நுழையவிடாமல் தடுத்தார்கள். அடிமைப்படுத்தினார்கள். கல்வி கற்பதை தடுத்தார்கள். ஒவ்வொரு தாழ்ந்தவனுக்கும் அவனது பிறப்பே நரகம் என்று எண்ணவைத்தார்கள். கடவுள் படைப்பு அப்படித்தான் என்று தாழ்ந்தவனின் தலையெழுத்தை உயர்நதவன் கோட்பாடுகளாலும் நடைமுறையாலும் எழுதினான். தாழ்வுமனப்பான்மையை வலிந்து திணித்துவிட்டு இப்போது தாழ்வு மனப்பான்மை அவனது குறைபாடு என்றால் என்ன நியாயம்?

மேலும்

காவடியின் கேள்வி:

அங்கு வரும் ஒரு படித்த பொதுச்சுகாதாரம் பேணும் அதிகம் சினிமா பார்க்காத ஏமாற்றாத குழும மக்கள் சிலர் சேர்ந்து குளிக்க வரும் குழுமத்தை சேர்ந்தவனைப் பார்த்து "டேய் எளிய ..... ..... படிப்பறிவில்லாத ...... ஏமாத்துற ..... நீ எல்லாம் இந்தக் கிணத்தில தண்ணியள்ளக் கூடாது. ஓடிப்போ.." எனத் துரத்தியடித்தால்..

இங்கு சாதியை எப்படி ஒழிப்பது ?

அவ்வாறு ஒழிப்பதற்கான ஆலோசனையை யாருக்கு வழங்குவது ? குளிக்க வந்த குழும மகனுக்கா ? அதை தடுத்தவர்க்கா ?

நெடுக்காலபோவானின் பதில்

ஒரு வெள்ளைக்காரன்.. "பாக்கி" என்று பேசினா.. அடங்கிப் போறியள். உடன டேய் இனவெறி பிடிச்ச வெள்ளைக்காரா.. உன்னை ஒழிக்கிறன் பார். பாம்பைக் கண்டால் விடு.. வெள்ளைக்காரனைக் கட்டால் அடி என்று புலம்பித் திரிய வரட்டாம்..! உங்களுக்கு இடம் தந்திட்டினம் கணக்க. அதாலதான் இவ்வளவு வில்லங்கங்களும்.

எதை எதனுடன் ஒப்பிட்டு கூறுவது என்ற ஒரு விவஸ்த்தை இல்லையா?

தண்ணி ஒரு மனிதனின் அன்றாட அடிப்படைத்தேவைகளில் ஒன்று. அதை நிராகரிப்பதும் ஒரு வெள்ளை பாக்கி என்பதும் ஒன்றா? இதில் அதிகம் விளக்கம் என்ன எழுத உள்ளது? இப்படித்தான் இருப்போம் அதை அனுசரித்து கீழ்சாதிகள் போய்த்தான் ஆகவேண்டும் என்று சொல்லப்படுகின்றதே !. இந்த மனநிலையில் சாதியம் இருந்தால் பாரிஸில் தலித்மாநாடு கூடி தாள்ந்த சாதிக்கு ஒரு கிணறுவெட்ட முற்படுவதை தவறு என்று யார் சொல்ல முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவதானித்திருக்கிறேன்.. ஊரில் தாழ்வுமனச் சிக்கலுக்குள் வாழும் குழும மக்களின் நடத்தை என்பது சற்று மாறுதலானதாக இருக்கும். பண்பாகக் கதைக்கமாட்டார்கள்..! ஏமாற்றும் குணம் அதிகம் இருக்கும். பொதுச் சுகாதாரம் குறைவா இருக்கும். உடை நடையில் கவனமின்மை. கல்வியில் நாட்டமின்மை. சினிமா மோகத்தில் கிடப்பார்கள். இது அவர்கள் தனிமைப்பட்டுப் போக மேலும் வகை செய்கிறது.

சுகன் என்பவரே.. முதலில் உங்கள் சாதியக் கண்ணாடியைக் கழற்றி வைச்சிட்டு இதைப் பாருங்கள். தாழ்வுச்சிக்கலில் உள்ள குழும மக்கள் என்று அக்குழும மக்களிடம் இனங்காணப்படும் இயல்புகளை வெளிப்படுத்தி.. இவற்றை இனங்கண்டு.. அவர்கள் இப்படியான பலவீன நிலையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று எழுதியுள்ளேன்.

இந்த நிலை சமூகத்தில் இல்லை.. என்று சொல்ல வருகிறீர்களா..???! எமது சமூகத்தில் மட்டுமல்ல.. மேற்குலக சமூகத்தில் கூட வெள்ளைக்காரன் சொன்னா பேசமாகக் கேட்டுக் கொண்டு வேலை செய்யும் நம்பவர்கள்.. கறுப்பன் சொல்லிட்டான் என்றால்.. அல்லது இன்னொரு ஏசியன் சொல்லிட்டான் என்றால் சண்டைக்கு நிற்பார்கள்.. காரணம் என்ன.. இதே தாழ்வுச் சிக்கல் தான்...!

எனக்குத் தெரியும் சுகன் என்பவருக்கும்.. தலித்தியம் சாதியம் பேசி விளம்பரம் தேடும் அர்ப்ப மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு. அவர்களின் வலைப்பூவில் இவரும் கவிதை எழுதி சைக்கிள் கப்பில விளம்பரம் தேடுறார். இல்ல.. இவருக்குள்ள உள்ள தாழ்வுச் சிக்கல் முற்றிய நிலையில்.. அவர்களிடம் வடிகால் தேடி ஓட முனைகிறார்...!

நான் இனங்காட்டிய பிரச்சனைக்கு நானே தீர்வும் எழுதிவிட்ட பின்.. சுகன் என்பவர்.. அதற்குள் சாதியத்தை திணிக்க நிற்பது எதைக் காட்டுகிறது...???! அவருக்கும் தாழ்வுச்சிக்கல் உள்ளது எனப்தைத்தான்..! :(

பரிசில கூடினது மகாநாடல்ல.. போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கூட்டமொன்று மேடைக்காக நிகழ்த்திய நிகழ்வு.. அதை இங்கே கொண்டு வராதீர்கள்..

ஒருவனின் வீட்டில் திருமணமாகாத பெண்கள் இருந்தால்.. உறவினர்களே அந்த வீட்டு கிணற்றில் குளிக்க முடியாது..

தற்போது கிணற்றில் குளிக்கக்கூடாது நீர் அள்ளக் கூடாது என்பதெல்லாம் வழக்கில் இல்லை. தற்போது என்ன பிரச்சினை உள்ளது என்பதைமட்டும் எழுதுங்கள்?!

திருமணம் ஒன்றில்தான் இன்று சாதி பார்க்கப்படுகிறது.. அதுவும் பேச்சுத் திருமணங்களில்.. பேச்சுத் திருமணங்களில் சாதி மட்டும் பார்க்கப்படுவதில்லை என்பதை நான் கூறவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.