Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளரும் பயிர்கள் வாடாதிருக்க ...

Featured Replies

பூனைக்குட்டி,

முதலில், ஒரு வியடம். எனது பதிவில் எவ்வித குளப்பமும் இன்றிப் பின்வரும் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது:

"தாயகத்தில் வன்முறையினை எதிர்கொள்ளும் எமது சிறார்களிற்கு எவ்வித பாதிப்புமே ஏற்படாது என்று நான் கூறவரவில்லை. ஆனால் அவர்களிற்கு பாதிப்புக்கள் என்று இருக்கக் கூடியன இங்குள்ளவர்களின் [இங்குள்ள தமிழரல்லாத நிபுணர்கள்] பார்வையில் பார்த்துப் புரிந்துகொள்ளப்படக் கூடியனவா? என்ற கேள்விக்குப் பல விடயங்கள் துருத்திக் கொண்டு இல்லை என்றே பதிலளிக்கின்றன."

எனவே "யுத்தத்தால் எந்த உளவியல் பாதிப்பும் எங்கட மக்களிட்ட இல்லையெண்டுற மாதிரியெல்லோ நீங்க எழுதியிருக்கீங்க" என்ற உங்களின் குற்றச் சாட்டு ஏற்புடையதல்ல.

மேலே நகருமுன் இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டியது எனக்கு அவசியமாகிறது. எமது விடுதலைப் போர் என்பது எமது போர்வெறியின் விழைவான தேர்வு அல்ல, மாறாக அது எமது இனத்தின் இருப்பிற்கான இறுதி தற்காப்பு மார்க்கம் என்பதனை உளப்பூர்வமாக நம்புபவர்களில் நானும் ஒருவன்.

இனி, உங்களது வாதங்களை இயன்ற வரை அணுகுகின்றேன்.

தாக்கங்களும் தீர்வுகளும் நாட்டுக்கு நாடு மட்டும் வித்தியாசப் படுறதில்லை அது மனிசரிற்கு மனிசர் வித்தியாசப்படும் என்று நீங்கள் கூறி உள்ளீர்கள். எனது வாதம் என்னவென்றால், மனிசரிற்கு மனிசரே வித்தியாசப் படுகின்ற தாக்கங்கள், இனங்கள் கலாச்சாரப் பின்னணிகள் என்ற வேறுபாடுகளோடு சேருகையில் மேலும் பலத்த பரிமாணத்தில் வேறுபடும் என்பதே.

ஒரு உதாரணம்: கனடாவில் ஒரு தமிழ் யுவதி (அவளும் ஒரு உயிரியல் பீட பல்கலைக்கழக தமிழ் மாணவி) . கலியாணத்திற்கு முன்னர் அவள் ஈடுபட்ட ஒரு உறவைப் பின்னர் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் அடிப்படையில் பிரச்சினைகள் உள்ளார்ந்த போராட்டமாகவும் சிக்கலாகவும் அவளிற்குள் எழுந்து அவளது அன்றாட செயற்பாடுகளை, குறிப்பாகக் கல்வியைப் பாதித்தபோது ஒரு பிரசித்தி பெற்ற உளவியல் நிபுணரின் சேவையினை அவள் கோரினாள் . மேசையில் மணிக்கூட்டைச் சரியாக 20 நிமிடம் கழித்து அலாரம் அடிக்க ஒளுங்கு செய்து விட்டு உளவியல் "நிபுணர்" அவளிடம் பேசத் தொடங்குகிறார் (அவர் ஒரு பெண் நிபுணர்).

அவள் தனது பிரச்சினை பற்றி விபரிக்க, நிபுணர் கூறுகின்றார், ஒரு Hymen மெம்பிரேன் சம்பந்தப் பட்ட மிகச் சிறிய விடயத்தை இவ்வாறு அலட்டிக்

கொள்ளலாமா நீங்கள் என்று.

இங்கு கற்பு கத்தரிக்காய் என்று நான் வக்காலத்து வாங்கவில்லை. எது பிற்போக்கு எது முற்போக்கு என்று கையில் குவளையோடு பொழுதுபோக்கிற்காக இங்கு நான் கதைக்கவுமில்லை. இவ்வுதாரணத்தை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், நகரில் பிரசித்தி பெற்ற ஒரு நிபுணரிற்கு இந்தப் பெண் தொடர்பான 20 நிமிடத்திற்குள் உள்ளடங்கும் சிகிச்சை இவ்வாறு ஆரம்பிக்கப் படலாம் என்று தோன்றியமை இங்கு கவனிக்கப்படவேண்டியது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே. மேற்படி கேள்வியானது என்ன நோக்கத்தில் உளவியல் நிபுணரால் முன்வைக்கப்பட்டது என்பதனைப் புரிந்து கொள்ள முடியும் என்றபோதிலும், இத்தகைய ஒரு சிறிய கேள்வியை ஞாபகப்படுத்துவதால் அப்பெண்ணின் பிரச்சினைகளிற்கு உதவலாம் என அந்த நிபுணர் நினைத்தமையானது, நோயாளியின் நோயின் தார்ப்பரியம்

பற்றிய நிபுணரின் புரிதல் பற்றியும் சில விடயங்களைப் பறைசாற்றுவது மறுக்கமுடியாதது.இது தொடர்பில் நான் அதிகம் அலட்டத் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

சைக்கோலஜிஸ்ற் இந்த வருந்தத்திற்கு அந்த மூடிப் போத்தலில் உள்ள மருந்து அந்த வருத்தத்திற்கு இந்த மூடிப் போத்தலில் உள்ள மருந்து என்றில்லாமல் ஆராய்ந்து தான் சிகிச்சை அளிப்பார்கள் என்கிறீர்கள். உங்களிற்கான எனது கேள்வி என்னவெனில், எதை வைத்து ஆராயப் போகிறார்கள்? எந்த ஸ்கோப்பினால் எந்த சமிக்ஞையை திட்டவட்டமாக அளவிடப்போகின்றார்கள? இந்த இரசாயனம் இன்ன அளவில் இருந்தால், திட்டவட்டமாக இந்த உளவியல் பாதிப்பு தான் என்று ஏதேனும் கையேடா உள்ளது?

அவர்கள் (அதாவது உளவியல் நிபுணர்கள்)இங்கு எதை வைத்து ஆராயப் போகின்றார்கள் என்றால், மனிதம் தொடர்பான தமது அனுபவம், தம்மையும் அறியாது தங்களது மனத்தில் ஆழ வேர் விட்டிருக்கும் தமது கலாச்சார மற்றும் தமது இதர பெறுமதிகள் முதலியனவற்றின் அடிப்படையிலமைந்த புரிதல்கள் என்பனவற்றை வைத்தும், மேலும் இந்த உளவியல் நிபுணர் இவ்வாறு புத்தகம் எழுதி உள்ளார் அந்த நிபுணர் அவ்வாறு எழுதி உள்ளார் என்ற அடிப்படையிலமைந்த கருதுகோள்களை வைத்தும் தான் அவர்களால் ஆராய முடியும். இந்நிலையில், அவர்களின் நோய் பற்றிய புரிதலிற்கு அடிப்படையாக இருக்கின்ற கருதுகோள்கள் எமது கலாச்சார, அமைவிட

புரிதல்கள் இன்றி முற்றிலும் மாறுபட்ட பிறிதொரு தளத்தில் உணரப்பட்டனவாக இருக்கையில், இக்கருதுகோள்கள் எங்களது நோய்களை எவ்வாறு குணப்படுத்தப் போகின்ற என்ற சந்தேகம் எழுவது நியாயமானதே.. அது போன்று தான், போஸ்ற் ற்ரமாற்றிக் டிஸ்ஓடர் சின்ற்றோம் என்ற Bias ஓடு எமது தாயகம் முதலிய ஒரு இடத்திற்கு சிகிச்சை அளிக்கச் செல்வோரால் அங்கு அனைத்தையும் ஆராய்து திருத்தி விட முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு உடன்பட மறுக்கின்றது.

உளவியல் என்பது விஞ்ஞானம் தானா என்று அதிகரித்த அளவில் ஏன் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்கின்றன? உளவியல் விஞ்ஞானமே அல்ல என்ற வாதத்தை உலகறிந்த உளவியல் நிபுணர்கள் உட்பட (உதாரணம் Jordan B. Peterson, Ph.D. , Department of Psychology, University of Toronto)பல புத்திஜீவிகளும் முன்வைப்பது எதனால்?

"இரத்தம் பாத்துப் பழகினவை நாளைக்குச் சர்வசாதாரணமாக ஒரு கொலையைச் செய்திட்டுப் போவினம்" என்று ஒரு உளவியல் மாணவராக உங்களை அடையாளப் படுத்தும் நீங்கள் கூறுவது, மேற்படி சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கின்றது. பள்ளிக் கூடத் தேர்விற்கு ஒரு வேளை மேற்படி புரிதல் அதிக பபெறுபேறைப் பெற்றுத் தரும், ஆனால் பள்ளிக்கப்பாலான நிஜ வாழ்வின் சிகிச்சை என்றால் அங்கு அது கேள்விக்குரியது.ஹோலகோஸ்றில் தப்பிய யூதர்கள் எல்லாம் எப்படி எவனை காஸ் சேம்பரிற்கு அனுப்பலாம், அல்லது வருத்திக் கொல்லலாம் என்றா திரிகிறார்கள்? (இரத்தம் பார்;த்துப் பழகியவர்கள் இலகுவில் கொலை செய்வர் என்ற உங்கது கண்மூடித்தனமான வாதத்தை உணர்த்துவதற்காக இப்படி ஒரு கண்மூடித்தனமான அன்ரி-டோற்)தங்களது அனுபவத்தை அவர்கள் ஒரு அக்கடேமிக் ரீதியில் அணுகுவதை நாம் காணவில்லையா?

ஒரு உளவியல் நிபுணர் எந்த வகையில் ஒரு நோயளியை அணுகுவது, ஆராய்வது, நோயின் வகையை அடையாளப் படுத்துவது, சிகிச்சை முறையைத் தீர்மானிப்பது, சிகிச்சையைத் தொடர்ந்த படி பெறுபேறுகளை அவதானிப்பது என்பன தொடர்பாக ஏறத்தாள பல மேற்கின் நாடுகளில் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட கையேடு தொடர்பில் கூட இன்று எக்கச் சக்கமான சர்ச்சைகளும் வாதப்பிரதி வாதங்களும் நடப்பதை எவரும் வாசிக்கலாம் தொடரலாம்.

உங்கள் பதிலைத் தொடர்ந்து எமது வாதத்தைத் தொடருவோம்.

சபேஸ்,

எனது பின்னூட்டம் புலப்பெயர்வு என்ற விடயத்தை உள்ளடக்கவில்லை. நான் தாயகத்தில் போரைச் சந்தித்து தாயகத்திலேயே வாழ்வோர் பற்றி மட்டும் தான் எழுதி உள்ளேன். புலப் பெயர்பு பல புதிய காரணிகளைச் சமன்பாட்டிற்குள்

இழுத்து வந்து விடுவதனால் அது தனித் தலைப்பிற்குரியது என்பது எனது அபிப்பிராயம்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல................

:D நீங்க வெண்டிட்டீங்க

ஈழத்தில எல்லாரும் உளநலத்தோட இருக்கினம்.......

யுத்தத்தால எந்த உளவியல் பாதிப்பும் ஒருத்தருக்கும் ஏற்படேல (ஆனந்தசங்கரி தாத்தாவையும் டக்ளஸ் மாமாவையும் தவிர) :lol:

இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல................

:D நீங்க வெண்டிட்டீங்க

ஈழத்தில எல்லாரும் உளநலத்தோட இருக்கினம்.......

யுத்தத்தால எந்த உளவியல் பாதிப்பும் ஒருத்தருக்கும் ஏற்படேல (ஆனந்தசங்கரி தாத்தாவையும் டக்ளஸ் மாமாவையும் தவிர) :lol:

இந்த விடயத்தை யாழ்களத்திற்குட்பட்ட விவாத வெற்றி தோல்வியாகப் பார்;க்கும் பார்வை கவலை தருகின்றது.

திருப்பத்திருப்ப தாயகத்தில் போரால் எவரிற்கும் உளவியல் பாதிப்பு ஏற்படவில்லை என்று நான் கூறியதாகக் கூறுகின்றீர்கள்.

இல்லை நான் அவ்வாறு கூறவில்லை என்று நீங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எனக்கு எழுதத்

தெரியவில்லை என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன்.

தமிழச்சி உங்களது கருத்தோடு நான் பெரும்பங்கு உடன்படுகின்றேன்.

எமது போராட்டம் தொடங்கிய நாட்கொண்டு பல்வேறு தரப்பட்ட பூச்சாண்டிகாட்டல்கள் பல்வேறு

முனைகளில் பல்வேறு நோக்கங்களில் இடம்பெற்று வந்துள்ளன. உதாரணமாக, "சாம்பல் மேட்டில்

தான் தமிழீழம் பூக்கும்", "போராளி வர்;க்கம் அழிந்து போய் பூயுவாக்கள் தான் தமிழீழத்தை

அனுபவிப்பர்", "போரின் வடு அழியா வடுக்களை ஏற்படுத்தி உள நலன்குன்றிய கூட்டத்தையே

தமிழீழ வாசிகள் ஆக்கும்" என்பன போன்றவற்றறைக் கூறலாம்.

என்னைப் பொறுத்தவரை எந்தக் கருத்தைக் கண்டும் நாம் ஆத்திரப்படுவதிலும் பார்;க்க அக்கருத்தை

அறிவு பூர்வமாக அணுகி ஆராய்வது அனைவரிற்கும் ஆரோக்கியமானது.

சினேகிதி, நான் இவ்வாறு கூறுவதால் உங்களின் பதிவை பூச்சாண்டிகாட்டல் என்று கூறுவதாய்த் தவறாக

எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களது நேர்மையான உள்ளார்ந்த பயம் அல்லது ஆதங்கம் தெளிவாக

உங்கள் பதிவில் தெரிகிறது. இருப்பினும் எனது அபிப்பிராயத்தில் உங்களின் சிந்தனை இங்குள்ள

உளவியல் போதனை என்ற விடயத்தால் பெரிதும் செல்வாக்குச் செலுத்தப்பட்டு தாயக யதார்த்தங்கள்

சில கவனத்திற்கொள்ளாது தவறவிடப்பட்டதாய் படுகிறது. அந்த அடிப்டையிலேயே எனது பின்னூட்டம்

அமைகிறது.

என்ன இப்பிடி கேட்டுடிங்கள்? எனது ஊர் பலாலி இராணுவ தளத்திற்கு அருகாமை அதனால் சிறுவயதிலிருந்தே வெடிச்சத்தம், தாக்குதல் வானூர்தி போன்றவற்கு இசைவாக்கம் அடைந்திருந்தேன். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ பதின்ம வயதில் தனியாக புலம் பெயர் நாட்டிற்கு வந்தேன். வந்த பாதை கடும் சிரமங்களுக்கு மத்தியிலானதாக இருந்தது. இலங்கையை விட்டு வெளிக்கிட்ட முதல் 2-3 மாதமும் வேகமாக ஓடும் ஆற்றில் ஒரு துரும்பு போன்றதான பயணமாக இருந்தது. அப்போது மனம் சிறிது சிறிதாக இறுக்கமாகி யது. அன்பா ஆதரவா கதைக்க ஆறுதல் சொல்லவென யாரும் இருக்கவில்லை. அதன் தாக்கமோ என்னவோ எனது பழக்க வழக்கங்களில் என்னையறியாமலே மாற்றங்கள் வந்திச்சு. உதாரணமாக முற்கோவம் (இப்ப கூட என்னால் மாற்ற முடியாமல் உள்ள ஒரு விடயம்), வெட்டொன்று துண்டு 2 என்பது பொல கதைப்பது (இது குடும்பத்தினருடன் கூட உள்ளதால் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி இருந்திச்சு), சிறிய விடயமானாலும் பிடிக்காவிடின் உதறி தள்ளிவிட்டு போவது, யாருடனும் கடமைக்காக பளகுவது உதவி/சேவை செய்வுது என அடுக்கி கொண்டே போகலாம்.

இதில முக்கியம் என்னவென்றால் இவ்வளவு காலமாகியும் மேற் கூறியவற்றில் இருந்து முழுமையாக என்னால் வெளியே வர முடியவில்லை. இப்ப கொஞ்ச காலமாக தான் எனது பிரச்சனையை உணர்றேன். ஆனாலும் முழுமையாக வெளியே வரமுடியவில்லை. ஒண்டுமே அறியாத 1.5 வயது மகன் செய்யும் குழப்படிக்கு (எதுக்காவது அடம் பிடிக்கும் போது) கோபப்படும் போது தான் எனது பிரச்சனையை முழுமையக உணர்கிறேன். நண்பர்கள் சிலர் பகிடியாக "உன்ரை கிறுக்கு குணம் அவனுக்கும் இருக்கும் தானே" எனக்கூறும் போது பகிடியாக இருந்தாலும் என்னனை அதிகமாக சிந்திக்க தூண்டும்.

எனிவே.... பதின்ம வயதில் ஒரு சிறிய காலப்பகுதியில் எனக்கு வந்த கடினங்கள் ஏமாற்றங்கள் ஆதரவின்மை சுமைகள் போன்றவற்றால் இறுகிய/வன்மையாகிய மனதை பதப்படுத்த முடியவில்லையாயின்.....

பிஞ்சு வயதிலேயே ஆதரவை இழந்து சுமைகளைச் சுமந்த அந்த சிறியவர்களை எப்படி பதப்படுத்துவது?

மன்னிக்கவும் சபேஸ். உங்களுக்கு இவ்வளவு பிஸாஸ் பக் இருந்து இருக்கும் எண்டு நான் நினைக்க இல்ல.

அப்ப வாழ்க்கையில நொந்தவர்கள், துன்பப்பட்டவர்கள் தான் யாழில அதிகமா இருக்கிறீனம் போல இருக்கிது.

நீங்கள் பலாலியோ? அப்ப எங்கட அப்பாட ஊருக்கு பக்கத்திலதான். ஒரே பள்ளிக்கூடத்தில படிச்சீங்களோவும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நான் எழுதிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். கலைஞன் "உங்களுக்கும் அந்த பிரச்சனையோ" எண்டு கேட்டதற்கு பதில் எழுத வெளிக்கிட்டுதான் சம்மந்தம் இல்லாத கருத்தை(?) இல்லை சரியான ஒழுங்கில் கிரமமாக எழுதாததால் வந்த வினை என்று நினைக்கிறேன்.

ஆம், புலம் பெயர்ந்தவர்களுக்கு இருக்கும் மன அதிர்ச்சி (trauma) புலத்தில் இருப்பவர்களை விட மிகவும் வித்தியாசமானது. இன்னுமொருவன் மற்றும் தமிழிச்சி கூறியது போல அங்கு இருப்பவர்கள் முக்கியமாக குழந்தைகள் அந்த இழப்புக்கள் துயரங்களுக்கு பழக்கப்பட்டு இருப்பார்கள். அதனால் இரத்தமோ சதைதுண்டுகளோ வெடியோசையோ அவர்களை மனஅதிர்வடைய வைக்காது. இருந்தாலும் அவர்களின் சொந்த குடும்தில் ஒரு இழப்பு வரும்போது நிச்சயமாக மாற்றங்களும் அதிர்சிகளும் இருக்கும் என்றே நினைக்கிறேன். அது அச்சிறுவர்களின் மனதை வெகுவாக பாதிக்கும். முக்கியமாக இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளாயின்.

சபேஸ், நீங்கள் கூறியதுபோல, இரு பெற்றோர்களையும் இழந்த பிள்ளைகளும் அப்படி இருப்பதாக நான் நினைக்கவில்லை. பெற்றோர்களை இழந்த ஆரம்பத்தில் அவர்கள் இவ்வாறான மனநிலையைக் கொண்டிருக்கலாம். ஆனால், அங்குள்ள வாழ்க்கைப்போராட்டத்தில், அது தானாக மறைந்து விடும். நிச்சயமாக, குழந்தைகளின் மனதில் பெற்றோரின் ஏக்கங்கள், கவலைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், வெளிநாடுகளில் நடப்பது போல், உளவியல் தாக்கங்களுக்கு அவர்கள் உள்ளாவது மிகவும் குறைவே. அதோடு, குழந்தைகள் காப்பகங்கள் பல அங்கு உள்ளன. பெற்றோரை இழந்த, உறவினர்கள் இல்லாதவர்கள் அல்லது உறவினரோடு இருக்க விரும்பாதவர்கள் எனப் பல தரப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதற்காக செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை என்பன அங்கு இருக்கின்றன. அப்படியின்றித் தனித்து வாழுபவர்களும் இவ்வாறான மன அழுத்தங்களுக்கு உள்ளாவது மிகவும் குறைவே. வெளிநாடுகளில் வாழும் நாம்தான், சிறிய பிரச்சனைகளையும் பூதாகரமாக்கி, எம்மை நாமே அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்கிறோம்.

இன்னுமொருவன், நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே. தாயகத்திலுள்ள சிறுவர்களுக்கு நாம் அளிக்கவேண்டியது கல்வியும், அறியாமையைப் போக்குவதுமே. அங்கு அறியாமைதான் மிகவும் ஓங்கியிருக்கிறது. நான் கல்வி என்று குறிப்பிட்டது, அவர்களது கல்விக்காகப் பொருளாதார உதவியைச் செய்வதில்லை. வெளிநாடுகளிலுள்ள சிறந்த கற்பித்தல் முறைகளை நாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, நாமும் அதனைச் செய்வதேயாகும். எனது அவதானிப்பின்படி, அங்குள்ள கல்வி முறை மிகவும் பின்தங்கியுள்ளது. ஆசிரியர்களின் கற்பித்தல் முறையும் மிகவும் தவறானது. அதனை நிவர்த்தி செய்வதற்கு ஆசிரியர்களுக்கு முதலில் கற்பித்தல் வேண்டும் என்பதே எனது எண்ணம். மற்றவர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து எனது கருத்துக்கள் தொடரும். :)

ஈழத்து யுத்த சூழலால் அங்கு வாழும் மக்களுக்கு உளவியல் தாக்கம் எதுவும் ஏற்படவில்லை, ஏற்படாது என்று சொல்வது ஏற்புடையதல்ல. அர்த்தமும் ஆதாரமுமற்றது. அப்படியொரு பிம்பத்தை நாம் வளர்க்க முற்படுவது எமது சமூகத்துக்குத்தான் ஆபத்தானது. யுத்தம் என்பது எமது இருப்புக்கான ஒன்று. அது எப்படித் தவிர்க்கமுடியாததோ, அதே போன்று யுத்தத்தால் ஏற்படும் விளைவுகளும் தவிர்க்கமுடியாதது தான். அப்படி எதுவுமே ஏற்படாது என்று மூடி மறைத்து ஒரு பிம்பத்தைக் கட்டியெழுப்புவதைக் காட்டிலும், அதை குறைப்பதற்கும், கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கும் முன்வருவதே விடுதலை அடையும்வரை போராட்டத்தை ஆரோக்கியமானதாகத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.

ஒரு நாட்டுக்குத் தேவையான பெரும்பாலான கட்டமைப்புகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கியுள்ளது. அந்த வகையில் போராளிகளுக்கான உளவியல் பலத்தை அளிப்பதில் எவ்வளவு அக்கறை காட்டுகிறதோ, அதேபோன்று போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெண்கள் போன்றோரின் உள நலத்திலும் அக்கறை செலுத்துகிறது. அக்கறை இருக்கிற அளவு அதற்கான வளங்கள் பற்றாக்குறையாகவே இருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே நிலைமை இப்படியிருக்க, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்களின் நிலைமைகளை யோசிக்கவேண்டும். ஏற்பட்டுள்ள உளவியல் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, உளவியல் பாதிப்புகள் ஏற்படாத ஒரு சூழலை அமைத்துக்கொடுப்பதும் அவசியமாகும். இதற்கு வெறுமனே புகலிடத்தில் உள்ளவர்களின் பொருளாதாரம் மட்டும் போதாது, அறிவுவளமும் தேவை. அதற்கும் அப்பால் "எமது மக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் ஆதரவாய்" என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிற செயற்பாடுகளும் தேவை. "உங்களோடு நாங்கள் இருக்கிறோம், உங்களுக்காய் நாங்கள் இருக்கிறோம்" என்கிற உளரீதியான ஆதரவும் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடுமே அவர்களை நம்பிக்கையுடனும், உளநலத்துடனும் வாழவைக்கும். இதைத்தான் சிநேகிதியின் கட்டுரையும் வெளிப்படுத்தி நிற்கிறது என்று நினைக்கிறேன்.

இன்னொரு பக்கத்தில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் மக்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் பற்றி வெளியுலகுக்கு கொண்டு செல்லவேண்டியதும் அவசியமாகிறது. குண்டுவீச்சுக்களால் ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கும் அப்பால் உளப் பாதிப்புகள் பற்றியும் அதன் நீண்டகாலத் தாக்கம் பற்றியும் வெளியுலகுக்கு வெளிப்படுத்தவேண்டும். இதற்கு தமிழீழத்தின் சமாதானச் செயலகமும் தன்னளவிலான பங்களிப்பை செய்துள்ளது. சமாதானச் செயலகத்தால் உருவாக்கப்பட்டுள்ள "It is a Kfir" என்கிற விபரணப்படம் இதற்கு ஒரு உதாரணம்.

உளவியல் பாதிப்பு என்றவுடன் "பைத்தியம்்" என்கிற நமது உருவகத்தை பொருத்திப் பார்க்காமல், அது தொடர்பான சரியான விழிப்புணர்வை நாம் பெற்றிருத்தல் நல்லது. நமது சமூகத்தின் மீது அவசியமற்ற போலியான புனித பிம்பத்தையும், போலியான வீர தீர விசித்திர பிம்பத்தையும் கட்டமைத்து உண்மைநிலையை மறைக்க அல்லது விளங்காதிருக்க முற்படுவது அபத்தமானதும் ஆரோக்கியமற்றதுமாகும்.

It is a Kfir என்ற விபரணப்படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்காக. (யாழ் இணையத்தின் ஒளித்தடம் பகுதியில் உள்ளது):

நேரடி இணைப்பு: IT IS A KFIR

Edited by இளைஞன்

போரால் எந்த உளவியல் பாதிப்பும் இல்லை என்பது எந்த ஆதாரமும் அற்றதுடன், நாளாந்தம் அதுவே வாழ்க்கையானதால் பாதிப்பு ஏற்பட்டாது என்பதும் அபத்தமானது.

கீழே யாழ்பல்கலை கழகத்தில் முன்னர் மருத்துவ பீட உள நலத்துறையில் பேராசிரியராக இருந்து கடந்த ஆண்டில் இருந்து அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் தயா சோமசுந்தரம் அவர்களது ஆய்வு கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே தருகிறேன். வாசியுங்கள்.

1 Addressing the psychosocial problems of women in a war ravaged society

http://www.lines-magazine.org/Art_Feb03/Daya.htm

2. http://books.google.com/books?id=oqUySpEkw...sJxAk#PPA205,M1

3. http://www.bmj.com/cgi/reprint/324/7348/1268.pdf

4. http://www.sciencedaily.com/releases/2007/...71003213559.htm

5. Scarred Minds: The Psychological Impact of War on Sri Lankan Tamils

http://www.amazon.com/Scarred-Minds-Psycho...n/dp/0761992677

6. Short- and Long-Term Effects on the Victims of Terror in Sri Lanka

http://www.haworthpress.com/store/ArticleA...64&ID=56908

7. Collective trauma in northern Sri Lanka: a qualitative psychosocial-ecological study

http://www.ijmhs.com/content/1/1/5/abstract

நன்றி குளக்காட்டான். தயா சோமசுந்தரத்தின் கட்டுரையை இணைக்க இருந்தேன். நீங்கள் மேலும் பல கட்டுரைகளுக்கான இணைப்பையும் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

பாதிப்புகளின் அளவு மாறுபடலாம், பாதிப்புகளின் வடிவம் மாறுபடலாம், அதற்கான தீர்வுகள் மாறுபடலாம். பாதிப்புகள் ஏற்படுகிறது, ஏற்படும் என்பதை உணர்வதும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நாம் எந்தவகையில் பங்காற்றலாம் என்பதை சிந்திப்பதும் அவசியம்.

தமிழ்ச் சிறுவர்கள் படும் இன்னல்கள் பற்றி தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் இடம்பெற்ற விபரணம்:

நேரடி இணைப்பு: தமிழ்ச் சிறுவர்கள்

Edited by இளைஞன்

இங்குள்ள உளவியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எப்படி ஈழத்தில் அப்படியே பயன்படுத்த முடியாது என சொல்கிறோமோ, அதே போன்றே இங்கிருந்து கொண்டு ஈழத்தில் உளவியல் சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் இல்லை அல்லது குறைவு என்று கள நிலவரம் பற்றிய எந்த அறிவும் அற்று வாதிடுவதும்.

மேலும் சில கட்டுரைகள்.

1. The tragedy of war

http://www.pubmedcentral.nih.gov/articlere...i?artid=1472256

2. The psychosocial effects of landmines in Jaffna.

http://lib.bioinfo.pl/pmid:12964706

இளைPஅன் சொன்னது போல் உளவியல் பிரச்சனை என்றால் "பைத்தியம்" மட்டும் என்ற கண்ணோட்டத்தை விடுத்து அதனால் பல பிரச்சனைகள் ஏற்பட முடியும் என்பதை உணர்வது அத்தியாவசியமானது.

மேலே நிலகண்ணிகளை பற்றிய கட்டுரையை பார்த்த போது தான் எனக்கு புலம்பெயர்ந்த ஆரம்ப நாட்களில் நான் நடந்து கொண்ட விதம் நினைவுக்கு வந்தது சில நேரங்களில் இப்போது கூட அப்படி நடப்பது உண்டு.

ஊரில் ஆள் நடமாட்டமற்ற, இராணுவம் ஆரம்பத்தில் கைப்பற்றிவைத்திருந்த பல இடங்களில் மிதி வெடி களை புத்தைத்தும், இன்னும் கூட பல பிரதேசங்கள் மிதி வெடி அகற்றப்படாமையால் பாவனை செய்ய முடியாதிருப்பதும், அனைவருக்கும் தெரியும். யாழ்ப்பாணத்தில் பல வீதிகளின் அருகில் உள்ள புல் நிலம், பற்றைகளில் மிதிவெடி எச்சரிக்கை பலகைகளை காணலாம். இதனால் வீதியை விட்டு வெளியே எங்கும் கால் வைக்க கூடாது என்பது மனதில் பதிந்து விட்டது.

இங்கு வந்த பின் நடந்து திரியும் சந்தர்பங்களில், மற்றும் பூங்காக்களில் உள்ள நடை பாதையை விட்டு அங்கால் போக கால் வைக்க மனதுக்குள் என்னை அறியாமலே பயம் வரும். இதை வாசிக்க யாருக்கும் சிரிப்பு வரலாம். ஆனால் இப்படியான சிறிய பாதிப்புக்களும் இருக்கலாம். சொல்ல முடியாத பெரிய பாதிப்புக்களும் வரலாம்.

3. Post-traumatic responses to aerial bombing

http://www.sciencedirect.com/science?_ob=A...c1b560f2f13e43d

4. Sri Lanka: War Over, Trauma Lingers for Sri Lankan Children [News]

http://acr.hrschool.org/mainfile.php/0156/250/

தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் இந்த முறை ஒளிபரப்பான "அவசிய அறிக்கை" உளவியல் போர் என்பதை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானக்குண்டுவீச்சுத் தாக்குதல்களால் ஏற்படுகிற உளவியல் தாக்கம் பற்றிக் குறிப்பிட்டு, அதிலிருந்து மீண்டெழுதலே இன்று அவசியமாகி நிற்கிறது என்பதும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உளவியல் தாக்கம் பற்றி விபரமாக அதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சிங்களப் பேரினவாதத்தின் உளவியல் போருக்கெதிராக நாம் செயலாற்றவேண்டியதன் அவசியம் உணர்த்தப்பட்்டிருக்கிறது.

நேரடி இணைப்பு: அவசிய அறிக்கை

யுத்தத்தினால் உளவியல் பாதிப்புகள் ஏற்படுவது உண்மைதான். ஆனால் வெளிநாடுகளில் உள்ள நாம் நினைக்குமளவிற்கு பாரதூரமானது அல்ல என்பதே எனது கருத்து. வெளிநாடுகளில் எமக்குள்ள சிறிய பிரச்சனைகளையும் நாம் உளவியல் பிரச்சனை எனக்கூறிப் பெரிதாக்கி விடுகிறோம். தாயகத்தில் அப்படி நடப்பதில்லை. அதனை அங்குள்ளவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். நானும் உளவியல்தான் படித்தேன். நாம் இங்கு படிக்கும் படிப்பு இங்குள்ள உளவியலுக்கு உதவுமே தவிர, அங்குள்ளவர்களுக்கு உதவாது. இங்குள்ள நிலைமை (சநயடவைல) வேறு. அங்குள்ள நிலைமை (சநயடவைல) வேறு. என்னைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் சநயடவைல (நடைமுறை வாழ்க்கை) இல்லை என்றே கூறுவேன். இங்கு உளவியலாளர்கள், பாதிக்கப்பட்டவரின் நிலையிலிருந்து பார்ப்பதில்லை. அவர்களது கண்ணோட்டத்திற்கேற்பவோ, சந்தர்ப்பத்திற்கேற்பவோதான் அவர்கள் பிரச்சனைகளை அணுகுகிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவரின் உண்மை நிலையை அறிந்து சிகிச்சை அளிப்பதில்லை. இன்னுமொருவன் அதற்குச் சிறந்த உதாரணம் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்.

தாயக நிலைமைகள் பற்றிய எனது கருத்துக்கள் எனது நேரடி அனுபவத்தின் மூலம் கிடைத்ததே. குளக்கட்டான், நீங்கள் கூறியது போன்ற பாதிப்புகள் தாயகத்திலிருந்து வந்த எல்லோருக்கும் இருந்தது. எனக்கும் வந்த புதிதில், விமானச்சத்தமோ, ஹெலிகொப்டர் சத்தமோ கேட்டால் ஒரு பயம் வந்து விட்டுப் போகும். ஆனால், விரைவில் அது இல்லாமல் போய்விட்டது. அதுபோன்றே, அங்குள்ளவர்களுக்கும் இருக்கிறது. யுத்தம் முடிந்ததும் காலப்போக்கில் அது மறைந்து விடும் என்றே கூறுகிறேன். ஒரு சிலர் குறிப்பிட்டது போன்று, நாம் சிகிச்சை அளிக்கவேண்டிய அளவிற்கோ அல்லது மாறாத வடுவாகவோ இருக்காது என்றே கூறுகிறேன். அப்படியே ஒரு சிலருக்கு இருந்தாலும், அதனை இலகுவில் மாற்றிவிட முடியும். இங்கு போன்று, அதனை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்க வேண்டி வராது.

உளவியல் பாதிப்புகளுக்கு வெளிநாடுகளில் மிகவும் அக்கறை செலுத்துகிறார்கள். முக்கியமாக சிறுவர்களின் உளவியலில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அந்த வகையில், நாம் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம், சர்வதேசத்தின் கவனத்தை இலகுவில் பெறமுடியும்.

  • 2 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.