Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொனறாகலவில் ஊர்காவல் படையினருக்கும் ஒத்துழைப்பு வழங்கிய 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Featured Replies

சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய 8 பேரும் துப்பாக்கிகளை வைத்திருந்த பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளவில் பேருந்து கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தை அடுத்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கிணங்க அப்பகுதியில் உள்ள 500 பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் ஊர்காவல் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது தாக்குதல் ஹலுவெல காட்டுப்பகுதியில் உள்ள தனமன்வில என்ற இடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 10:00 மணிக்கு இடம்பெற்றது.

இப்பகுதியில் ஆயுதம் தாங்கிய ஊர்காவல் படையினருடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே ஊர்காவல் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். மேலும் ஊர்காவல் படைத்தரப்பைச் சேர்ந்தவர் ஒருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். இவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் தாக்குதல் நடத்தியவர்கள் எடுத்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தனமல்வில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இரண்டாவது தாக்குதல் ஹம்பேகமுவ காட்டுப்பகுதியில் உள்ள உடவலாவ என்ற இடத்தில் நேற்று இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றது.

இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான குழு ஒன்று நடமாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து ஊர்காவல் படையினருடன் அங்கு சென்ற பொதுமக்கள் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊர்காவல் படையினரும் பதிலுக்கு திருப்பிச் சுட்டனர் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று காலை சிறப்பு காவல்துறைப் பிரிவு ஒன்று அப்பகுதிக்குச் சென்று தேடுதல் நடத்திய போதே அங்கிருந்து 6 சடலங்களை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு தாக்குதல்களையும் விடுதலைப் புலிகளே நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள பாதுகாப்பு அமைச்சு, அப்பகுதியில் தற்போது சிறப்புத் தேடுதல் நடவடிக்கை நடைபெற்றது வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி இப்பிரதேசத்தில் பஸ் வண்டியொன்றின் மீதும் விவசாயிகள் மீதும் மேற்கொண்ட தாக்குதல்களில் 27 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்

tamilwin.com

சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய 9 பேரும் துப்பாக்கிகளை வைத்திருந்த பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களுக்கு ஆயுதம் கொடுப்பதால் அவர்களை இலகுவான இலக்குகளாக மகிந்த ஆக்கியிருக்கிறது. ஆனால் போர் என்று வந்தபின், வித்தியாசம் பார்ப்பது கஷ்ட்டம் தான். மகிந்த சிந்தனைக்கு நல்ல பலாபலன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுமக்களுக்கு ஆயுதம் கொடுப்பதால் அவர்களை இலகுவான இலக்குகளாக மகிந்த ஆக்கியிருக்கிறது. ஆனால் போர் என்று வந்தபின், வித்தியாசம் பார்ப்பது கஷ்ட்டம் தான். மகிந்த சிந்தனைக்கு நல்ல பலாபலன்.

சும்மா இருங்க ரகுநாதன். எங்களுக்கு இன்னும் 490 துப்பாக்கி இலவசமா கிடைக்கிறது உங்களுக்கு விருப்பமில்லையா :mellow: . கொடுக்கற துப்பாக்கிகளை கொஞ்சம் அதிக ரவுண்ட் போடுறதா கொடுங்க மகிந்தா.

Troops confront LTTE in Buttala jungles

By Senaka de Silva and Wimal Dissanayake

A soldier suffered minor injuries yesterday when government troops confronted a group of suspected LTTE cadres who were involved in the Buttala bus attack, military sources said.

They said the clash took place inside the thick jungles of Buttala during a search operation to track down the attackers of Wednesday’s blast.The military suspected that at least 10 LTTE cadres who were involved in the Buttala bus attack confronted the troops during yesterday’s clearing operation......................................................

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=4193

ஏன் அந்த பகுதியில் விமான மூலம் குன்டு போட்டு அந்த புலிகளை அழிக்கலாமே?

ஓ! மன்னிக்கவும் அது சிங்களப்பகுதி

நிம்மதியான வாழ்வினை இழந்துகொண்டிருக்கும் சிங்களமக்கள்.

SRILANKA___Lanka_ti_679679s.jpg

நாமும் இவர்களைப்் போலத்தானே தினம் தினம் அழுது கொண்டிருக்கின்றோம். யார் கண்ணுக்குத் தெரிந்தது?

Edited by Aalavanthan

  • கருத்துக்கள உறவுகள்

SRILANKA___Lanka_ti_679679s.jpg

நாமும் இவர்களைப்் போலத்தானே தினம் தினம் அழுது கொண்டிருக்கின்றோம். யார் கண்ணுக்குத் தெரிந்தது?

இது சிங்கள அரசு திட்டமிட்டுச் செய்யும் தாக்குதல்கள்.

இதன் மூலம் உலகுக்கு புலிகளிடனான யுத்த நிறுத்தத்தை ரத்துச் செய்தது சரியே என்று காட்ட புலிகளைக் கொடிய பயங்கரவாதிகளாக்க முனைகிறது.

கொடிய பயங்கரவாதிகளுடன் எப்படிப் பேசுவது.. அவர்களை அழிக்க சர்வதேச உதவியைப் பெற இது மேலும் அரசுக்கு உதவும்.

அதுமட்டுமன்றி இழப்புக்களால் ஆத்திரமடையும் சிங்கள இளைஞர்களைப் படையில் அல்லது ஊர்காவல்படையில் சேர்க்க வாய்ப்புக் கிடைக்கிறது. இத்தாக்குதலின் பின் 500 பேருக்கு ஆயுதம் வழங்கி ஊர்காவல் படையில் சேர்த்தாச்சு. இதெல்லாம்... சும்மா நடக்குமா..??! :D:mellow::huh:

மொனராகலையில் தேடுதல் நடத்தியவர்கள் மீது தாக்குதல்-11 பேர் பலி.

குருநாகல் பிரதேசத்தில் 500 பேருக்கு ஆயுதங்களை வழங்கி ஊர்காவல் படையினராக மாற்றி காட்டினுள் மறைந்திருக்கும் ஆயுதக் குழுவினரை தேடுதல் நடத்தியவர்கள் மீது காட்டினுள் மறைந்திருந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மொனராகலை காட்டுக்குள் மறைந்திருக்கும் ஆயுத நபர்களை கண்டுபிடிப்பதற்கு ஊர்காவல் படையினருக்கு உதவிய 11 நபர்களே குறிப்பிட்ட ஆயுதக் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தனமல்வில பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குலுவெல்கல, ஹம்பேகமுவ ஆகிய பகுதிகளில் இரண்டு வெவ்வேறு பிரிவாக இவர்கள் நேற்றிரவு (வியாழக்கிழமை) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஊர்காவல் படை உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் மூன்று பேர் காயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதேசத்தில் 500 பேருக்கு ஆயுதங்களை வழங்கி ஊர்காவல் படையினராக மாற்றும் நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டிருந்தபோது, குறிப்பிட்ட பகுதியில் 11 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 பேர் ஊர்காவல் படையினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.pathivu.com/

எல்லாருக்கும் ஆயுதம் குடுங்கோ எல்லாரும் சண்டைக்கு போகட்டும் எல்லாரும் சாகட்டும். அதுசரி சாப்பாடுகேக்கிற சனங்களுக்கு ஏன் துவக்கு குடுப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

தனமல்விலவில் 10 பேர் படுகொலை காட்டுக்குள் மேலும் சடலங்கள்?

[19 - Jஅனுஅர்ய் - 2008] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

* கிளைமோர் தாக்குதலின் தொடர்ச்சியாக சம்பவங்கள்

மொனறாகல தனமல்வில பகுதி யில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இரு சம்பவங்களில் பத்துப் பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, அச்சம் காரணமாக அந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி வருவதுடன் காட்டுப் பகுதியில் மேலும் சடலங்களிருக்கலாமெனவும் கிராமவாசிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து மொனறாகல பகுதிக்கு மேலதிக படையினர் அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீவிர தேடுதல்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை காலை மொனறாகல ஒக்கம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பயணிகள் பஸ் மீதான கிளேமோர் தாக்குதலின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் குறித்து மேலும் தெரிய வருவதாவது;

ஒக்கம்பிட்டிய பகுதியில் பயணிகள் பஸ் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அதனையண்டிய காட்டுப் பகுதியிலிருந்தே செயற்படுவதாகத் தெரியவந்ததையடுத்து படையினரும், ஊர்காவல் படையினருமிணைந்து காட்டுப் பகுதியில் பாரிய தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக ஒக்கம்பிட்டியவை அண்டிய தனமல்வில ஹம்பேகமுவ கலவல்கல பகுதியில் நேற்று முன்தினம் தேடுதல்கள் நடைபெற்ற போது இந்தப் பகுதியில் இனந்தெரியாதவர்கள் சிலர் நடமாடுவதாக படையினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிராமவாசிகளின் உதவியுடன் இரவு பத்து மணியளவில் படையினரும் ஊர்காவல் படையினரும் கிராமவாசிகள் சிலருடன் காட்டுப் பகுதிக்குள் சென்ற போது அவர்கள் மீது திடீரென பலத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று கிராமவாசிகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து படையினரும் பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தவே, தாக்குதல் நடத்தியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தேடுதலை இடைநிறுத்திய படையினர் கொல்லப்பட்ட மூவரது சடலத்தை எடுத்துக் கொண்டு படுகாயமடைந்தவர்களுடன் கிராமத்திற்குத் திரும்பினர்.

படுகாயமடைந்த மூவரும் மொனறாகல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் இருவர் பின்னர் அம்பாந்தோட்டை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

இதேநேரம், நேற்றுக் காலை தனமல்வில ஹம்பேகமுவ காட்டுப்பகுதியில் படையினர் தேடுதலை நடத்திய போது மேலும் ஆறு சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனேயே இந்த ஆறு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை பின்னர் ஹம்பேகமுவ பகுதிக்கு படையினரால் எடுத்துச் செல்லப்பட்டது. கிராமத்திற்கு இந்தச் சடலங்கள் கொண்டு வரப்பட்டபோது அங்கு பெருமளவில் மக்கள் கூடவே பெரும் பதற்றமேற்பட்டது.

இந்தச் சடலங்களில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவரதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரதும் ஆசிரியர் ஒருவரது சடலமும் அடங்கும்.

காட்டுப் பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய படையினர் அங்குள்ள வாவியொன்றின் அருகிலிருந்து மேலுமொரு சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

எனினும், காட்டுப் பகுதியில் ஆங்காங்கே மிதிவெடிகள், பொறி வெடிகள் வைக்கப்பட்டிருப்பதால் தேடுதல்கள் மிகவும் தாமதமடைவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

கண்ணிவெடிகள், பொறி வெடிகளை அகற்றியவாறே தேடுதல்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தேடுதலுக்காக மேலதிக ஊர்காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதேநேரம், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கலாமென கிராமவாசிகள் தெரிவிக்கின்ற போதும் பொலிஸார் அதனை உறுதிப்படுத்தவில்லை.

தேடுதல் நடத்திய படையினர் இந்தப் பகுதிகளில், கைவிடப்பட்ட நிலையிலிருந்த 14 சைக்கிள்களையும் ஒரு மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக வனபரிபாலனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் யாருடையது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

தேடுதலின்போது கண்ணிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது. காடுகளுக்குள் மறைந்திருப்பவர்கள் தாக்குதல் நடத்தலாமென்பதால் தேடுதல்கள் மிக மெதுவாகவே நடைபெறுகிறது.

மக்கள் வெளியேற்றம்

சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து, அச்சம் காரணமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். அந்தப் பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டவர்களே வீடு வாசல்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்கின்றனர்.

மக்கள் வெளியேறுவதைத் தடுக்க படையினரும், பொலிஸாரும் முயல்கின்ற போதும் அச்சம் காரணமாக மக்கள் இடம்பெயர்கின்றனர்.

இதேநேரம் சம்பவம் பற்றி அறிந்து இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து சில கிலோமீற்றர் தூரத்திலுள்ள, பலாங்கொடை கல்வி வலயத்தைச் சேர்ந்த மெதபெத்த மகா வித்தியாலயத்திற்கு வந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவசர அவசரமாகக் கூட்டிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பாடசாலை மூடப்பட்டுள்ளது. இதனால் ஊவா மாகாணத்தின் எல்லையிலும் (சப்ரகமுவ மாகாணம்) பதற்றமேற்பட்டுள்ளது.

சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து மொனறாகல கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. வெளியிடங்களிலிருந்தும் அங்கு படையினர் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

thinakural.com

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

Five suspects arrested in Thanamalwila

Five Tamil suspects have been arrested by police in Thanamalwila after people got panicked by their presence in the area. According to initial inquiries, they have been identified as labourers who came to the area from Badulla to work as at chenas. They are still being interrogated by the Suriyawewa police.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=4316

A massive search operation in Tanamalwila

A massive search operation has now been launched at Tanamalwila, Hambegamuwa, Kiriebbanara and Udawala areas by the army, police and STF to destroy possible LTTE pockets, Senior DIG Jayantha Wicramaratne said. He said that the security authorities believe a team of 15-20 LTTE cadres are holed up in these areas.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=4317

  • கருத்துக்கள உறவுகள்

அதொன்றுமில்லை சூராவளி, இலங்கையில் சாப்பாட்டை விடவும் துவக்கு மலிவாக இருக்குது கண்டியளோ ?! இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டுக்கொண்டு கொடுக்கும் துவக்கையெல்லாம் என்ன செய்வது ? அதுதான் மகிந்த சனம் பாவம் பசியை மறக்க துவக்குடன் விளையாடட்டும் என்று நினைக்குது போல ?!!!!!!!!!

உன்மை தான் இலங்கைல துவக்குகள் தான் புளுத்துப்போய்க்கிடக்கு. அதைவிட பொளுத்துப்போனதா கிடக்கு கலாச்சாரக் கந்தல்கள். உந்த்துவக்கு எதுக்கு பயன்படுத்தப்படுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

2005ல் இந்த பகுதி க்களில் பயனம் செய்து சிங்கள விவசாயிகள்ளைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். கிழக்கு மாகாணத்துக்கும் மதிய, சப்ரகமுவ, தென் மாகாணங்களுக்கூம் இடைப்பட்ட இடையில் உள்ள இப்பிரதேசங்களில் விவ்வசாயமும் ஏஎனைய பொருளாதார நடவடிக்கைகளும் தற்காலிகமாகப் புலம் பெயரும் மலையக தமிழ் தொழிலாளர்களிலே பெரிதும் தங்கியுள்ளது. இதைவிட மொனறாகலயில் ரப்பர் கொக்கோ தோட்டங்களில் நிரந்தரமாக வசிக்கும் மலைய தமிழர்கள் உள்ளனர். இது தெற்கில் இருந்து வடக்கே மகாவலிப் பிரதேசங்களுக்கும் பொருந்தும் . இவர்களது புலப் பெயர்வு 1970பதுகளில் மிழகாய் கரும்பு பயிரிடுகையில் ஏற்பட்ட பாச்சல்லோடு பருவகாலப் புலப் பெயர்வாக ஆரம்பித்து. 1981ல் இப்பகுதிகளில் பல வெளிக்கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறேன். 1983 கலவரத்தின் பின் மலையக தொழிலாளர் வரத்துப் பாதிக்கப் பட்டதால் இப்பகுதி பொருளாதாரம் மிகுந்த நெர்ருக்கடிக்கு உள்ளானது. அதன் பின்னர் மலையக தமிழர் இல்லாமல் உற்பதி இல்லை என்கிற அளவுக்கு அவர்களது பங்களிப்பு உயர்ந்துள்ளது.

தற்போது இடம்பெறும்சம்பவங்களின் பின்னாணியில் ஏற்கனவே மலைய்யகத் தமிழர்மீதான பொலிஸ் தொல்லை அதிகரித்துள்ளது பாரதூரமான அரசியல் பொருளாதார விழைவுகளை ஏற்படுத்தும்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் பாக்கி 480 ஆ :(

இராணுவமே சமாளிக்கத் திணறும் புலிகளை வேட்டையாட நல்ல பயிற்சிகள் எதுவும் இன்றி அப்பாவி பொதுமக்களிடம் ஆயுதங்களை கொடுத்து அவர்களை பலிக்கடாவாக்கிய அரசாங்கத்தை கண்டிக்கின்றேன்!

இது சிறார் படைச்சேர்ப்பை விட மோசமான மனித உரிமை மீறலாகும்!

ஒரு இறைமையுள்ள அரசு என்ற வகையில் அரசாங்கம் மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது!

கொளரவ சமாதானம் பெற்றுத்தருவதாக கூறி, வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக தெற்கு சிங்கள இளைஞர்களை பலியிடும் அரசு இன்று தெற்குப்பகுதி மக்களின் வாழ்வை பாதுகாப்பின்றி சீரளித்தமைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்!

(மேற்படி அறிக்கைகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சமர்ப்பனம்! :( )

Edited by சாணக்கியன்

இராணுவமே சமாளிக்கத் திணறும் புலிகளை வேட்டையாட நல்ல பயிற்சிகள் எதுவும் இன்றி அப்பாவி பொதுமக்களிடம் ஆயுதங்களை கொடுத்து அவர்களை பலிக்கடாவாக்கிய அரசாங்கத்தை கண்டிக்கின்றேன்!

இது சிறார் படைச்சேர்ப்பை விட மோசமான மனித உரிமை மீறலாகும்!

ஒரு இறமையுள்ள அரசு என்ற வகையில் அரசாங்கம் மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது!

கொளரவ சமாதானம் பெற்றுத்தருவதாக கூறி, வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக தெற்கு சிங்கள இளைஞர்களை பலியிடும் அரசு இன்று தெற்குப்பகுதி மக்களின் வாழ்வை பாதுகாப்பின்றி சீரளித்தமைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்!

(மேற்படி அறிக்கைகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சமர்ப்பனம்! :( )

இந்த அறிக்கை JVP சார்பிலையாண்ணா..??

இந்த அறிக்கை JVP சார்பிலையாண்ணா..??

JVP இற்கு இது தேவைப்படாது,

போர்நிறுத்தத்தை கிழித்தெறிந்தது தேசத்தை நேசிக்கும் மக்களின் வெற்றி!

இலங்கை அன்னையின் மானத்தை காக்க மண்ணின் மைந்தர்கள் தயார்! (அது நாங்களில்லை)

இனியும் ஒரு தேசத்துரோக ஒப்பந்தம் வேண்டாம்!

பாசிச புலிகளை பூண்டோடு ஒழிப்போம்!

இப்படி நான் சொல்லவில்லை...வீதி வீதியா சிவப்பும் கறுப்பும் சுவரொட்டிகள் சொல்லுது!

ஐ.தே.க தான் மதில் மேல் பூணையாக பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருக்குது!

யார் குத்தினால் என்ன அரிசியானால் சரிதானே நமக்கு!

Edited by சாணக்கியன்

நீங்கள் முன்னால் அரசியல் வாதியா?

அல்லது அரசியல் நோக்கரா?

அல்லது அரசியல் அவதானி?

ஒருவேளை ராஜ தந்திர வட்டாரமக இருக்கும்..

அடங்கொய்யாலே.....இந்த நாலில ஒன்றாதான் நானிருப்பன் என்று முடிவா சொல்லுற உங்களை பாராட்டாம இருக்க முடியேல!

அது சரி என்னை வைச்சு காமடி கீமடி ஒன்ணும் பண்ணேலத்தானே?

அடங்கொய்யாலே.....இந்த நாலில ஒன்றாதான் நானிருப்பன் என்று முடிவா சொல்லுற உங்களை பாராட்டாம இருக்க முடியேல!

கைப்புள்ள அருவாவோட கெளம்பீட்டாருய்யா ... எத்தினை தல உருளப்போகுதோ தெரியல்லியே...!! :(:huh::o

தனமல் பிரதேசம் பிரேதங்கள் மீட்கும் பகுதியாகிவிட்டதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.