Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவிற்கு 24 மாத சிறைத் தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய கடவுச்சீட்டு மோசடி: கருணாவிற்கு 24 மாத சிறைத் தண்டனை

[ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 08:32 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]

பிரித்தானியாவிற்குள் இராஜதந்திரிகளுக்கான போலிக் கடவுச்சீட்டுடன் நுழைந்த சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கருணாவிற்கு 24 மாத சிறைத்தண்டனையை பிரித்தானிய நீதிமன்றம் வழங்கவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கருணா, உயிர் தப்பும் நோக்கத்துடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஒடியிருந்தார். அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு வழங்கி செய்திருந்தது.

எனினும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா, பிரித்தானியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பிரித்தானிய நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது கருணா தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதனால் அவருக்கு 24 மாத சிறைத் தண்டணையும், அபராதமும் பரிந்துரைக்கப்பட்டது.

பிரித்தானியாவின் ஒக்ஸ்பிறிட்ச் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் டெர்க் பிறைஸ் மற்றும் ஜெஃப் எட்வேட் ஆகிய நீதிபதிகளுக்கு முன்பாக கருணா நிறுத்தப்பட்ட போதே இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனிடையே இலங்கையில் கருணாவினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் பிரித்தானியாவின் சட்டத்துறை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய சட்டத்தின் பிரகாரம் உலகின் எந்தப் பகுதியில் சித்திரைவதைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவரைத் தண்டிக்க முடியும்.

தற்போது வழங்கப்படவுள்ள 24 மாத சிறைத்தண்டணையை கருணா பிரித்தானியாவில் கழிக்கும் போது, அவர் மீதான ஏனைய குற்றங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய காவல்துறையினருக்கு கருணா வழங்கிய வாக்குமூலங்கள், அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போதும், அதில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும் மேற்கொண்ட செயற்பாடுகளில் இருந்து அதற்கான ஆதராரங்கள் திரட்டப்படும் என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

puthinam.com

இனத் துரோகி கருணாவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது

வீரகேசரி இணையம் - பிரித்தானியா குடிவரவு சட்டத்தை மீறியமை தொடர்பாக கருணா மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை மேற்கு லண்டனினுள் இஸ்லேவோர்த் கிரவுன் நீதிம்ன்றத்தில் வழங்கவுள்ளது.

தனது அடையாளம் குறித்து மோசடி செய்தமை தொடர்பில் கருணா மீது வழக்கு தொடரப்பட்டது.கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வழக்கு விசரணைகளின் போது அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையால் இன்றைய தினம் இவ் வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

கருணா மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அவருக்கு இரு வருட சிறை தண்டனை விதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்கு 9 மாதகால சிறை தண்டனை

ராஜதந்திரிகள் பயன்படுத்தக் கூடிய கடவுச் சீட்டை போலியாக தயாரித்து- அதைப் பயன்படுத்தி ஐக்கிய ராஜ்ஜியத்துக்குள் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்ட கருணாவுக்கு பிரிட்டானிய நீதிமன்றம் ஒன்று 9 மாத கால சிறை தண்டனை வழங்கித் தீர்பளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு தளபதியாக இருந்த கேணல் கருணா, அந்த இயக்கத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு பிரிந்தார். அதன் பிறகு அவர் இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன், விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது.

கேணல் கருணா கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி லண்டனில் உள்ள அவரது வீட்டிலிருந்து குடிவரவு மற்றும் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

அவர் எப்படி ஐக்கிய ராஜ்ஜியத்துக்குள் நுழைந்தார் என்பது குறித்த விசாரணையின் போது, கருணா ராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச் சீட்டை பயன்படுத்தி லண்டன் வந்தது கண்டறியப்பட்டது. இந்த கடவுச் சீட்டை இலங்கை அரசு அதிகார பூர்வமாக வழங்கியதா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், கேணல் கருணா மீதான வழக்கை விசாரித்த லண்டன் ஐசல்வோர்த்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று, சட்டத்துக்கு புறம்பாக அவர் ஐக்கிய ராஜ்ஜியத்துக்குள் நுழைந்ததாக கூறப்பட்ட வழக்கில் இன்று தண்டனை வழங்கியுள்ளது.

அவர் ஏற்கனவே 32 நாட்கள் சிறையில் இருந்ததன் காரணமாக, அந்த நாட்கள் தண்டனைக் காலத்தில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றும் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, கருணா, சிறார்களை படையில் சேர்த்தது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை செய்தார் என்றும் அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்னெஸ்டி அமைப்பு உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

பிபிசி.தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் போராளிகளைவிட தீவிர வாதிகளாக செயல்படுகிறது அபத்தமாய் இருக்கு. பலருக்கு கிழக்கு மாகாணம்பற்றி ஒன்றும் தெரியாது. வெளிநாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் ஊடகங்களிலும் கிழக்கைச் சேர்ந்தவர்களை இணைத்தும் அணைத்துசம் செல்வதன் மூலம் கிழக்கு மக்களைக் கற்றுக்கொள்ளவேணும். ஆதலால் கிழக்குப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளமுன் கருத்துச் சொல்வதை தவிருங்கள். 2002க்கு முந்திய கருணா விடுதலை இயக்க தலைவர்களுள் ஒருவர். கருணா எதிரிகளின் பக்கம்போனபின்னரான விமர்சனங்களைக் கருணாவுக்கு எதிராக வையுங்கள். இதுவரை நன்கு அறியப்படாத கிழக்கு மாகாணம் பற்றிய கருத்துக்கள் எதற்க்கு? இத்தகைய போக்கு போராட்டத்தை பாதிக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக 9 மாதந்தானா.

ஆக 9 மாதந்தானா.

9 மாதங்கள் எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் பாதுகாப்பாக சுதந்திரமாக இருக்கலாம்.

Gotabhaya 'gave me passport'

2077Kruna_Jail_J.jpg

Karuna says Defence Secretary 'arranged everything' for him

Sri Lankan paramilitary leader Vinayagamoorthi Muralitharan, better known as Colonel Karuna, was sentenced for nine month imprisonment in London.

Mr. Justice McDowell made the ruling on Friday at the Isleworth Crown Court in West London after considering the fact that he has already served six weeks under custody.

Karuna sat behind a protective screen inside the courtroom and listened without expression as the judge handed down the sentence.

Gotabhaya 'arranged everything'

Sri Lanka's powerful Defence Secretary, Gotabhaya Rajapaksa, 'arranged everything' for him to come to UK using a diplomatic passport, Karuna has told British immigration authorities.

Karuna sat behind a protective screen inside the courtroom

Reading Karuna's statement at the open court, the prossecution said President's Rajapaksa's younger brother was known to him since he defected from the LTTE.

The prosecutor said he pleaded guilty to a criminal offence under British immigration law, but said it was the Sri Lankan government that arranged a diplomatic passport for him.

The passport was given to him only inside the plane bound to UK, according to the statement.

Although he was not a government official, he was protected by the Sri Lanka government, it added.

Government denies

The prosecutor added that the Sri Lankan government denied all allegations.

Ruling Sri Lanka Freedom Party, meanwhile has entered into an electoral pact with TMVP, formerly headed by Karuna.

Lawyer says Karuna is yet to apply for political asylum in UK

On Thursday, Foreign minister Rohitha Bogollagama denied any involvement of the government in providing a diplomatic passport and a third person note to facilitate Karuna's visa to enter the UK.

Colonel Karuna Amman was arrested by the UK authorities in November last year.

He pleaded guilty to a criminal offence under the ID cards act for possessing a false passport on 24 December when the case was taken at a magistrates court.

Karuna's legal representative, David Philips, told the BBC after the judgement that he might apply for political asylum after serving the prison sentence.

Political asylum

"He hasn't applied for asylum because until the sentencing takes palce for a criminal case, no immigration officer will even entertain an application," he said.

There were earleir reports that Karuna has applied for aylum as he was arrested in his office in a wealthy London suburb of Kensington.

Karuna says Sri Lankan govt. protected him though he was not an official

Mr. Philiops added that Karuna would want to stay in the UK as 'his wife and three children already live' in the country.

Human rights groups now want the British government to prosecute Colonel Karuna for human right abuses.

Kevin Laue, a representative from Redress Trust, which supports survivors of torture, told the BBC that the human rights organisations should now focus on presurising the authorities to bring charges against Karuna on rights violations in Sri Lanka.

Human Rights Watch has earlier called on British authorities to charge Karuna for war crimes.

Amnesty International (AI) says the judgement is helpful as it gives more time to investigate rights abuses.

"It will be tragedy if he is allowed to leave either voluntarily or otherwise after serving his sentenced without the police having thoroughly investigated whether there is evidence for him to be tried," AI said.

- BBC Santhesaya

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...arunajail.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

9 மாதத்துக்கு பிறகு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆக போறார் போல இருக்கு :lol:

கர்ணல் கருணாவுக்கு 9 மாதம் சிறைத் தண்டனை: பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

கருணா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும்,

தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட்

இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரான கர்ணல் கருணா, போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற பெயர்கொண்ட இவர் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பின் வாதத்தை எடுத்துரைத்த அரசு தரப்பு பாரிஸ்டர், கருணா, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரிட்டனுக்குள் கோகில ஹர்ஷ குணவர்த்தன என்ற பெயரில் ராஜிய பாஸ்போர்ட் ஒன்றுடன் நுழைந்தார். இந்த பாஸ்போர்ட்டில் அவருக்கு பிரிட்டனுக்கு வந்து போக ஆறுமாத பலமுறை விஜயம் செய்யும் விசா ஒன்று வழங்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு ஒருவருடைய பெயராக இருந்தாலும், அதில் இருந்த புகைப்படம் கருணாவுடையதாக இருந்தது என்றார்.

இந்த விசா, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வதற்காக கோரப்பட்டது என்றும் வழக்குரைஞர் கூறினார்.

பிரிட்டனுக்குள் வந்த கருணா கடந்த நவம்பர் இரண்டாம்தேதி பிரிட்டன் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டர் என்று கூறிய அரசு வழக்குரைஞர், குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த அவரை, டிசம்பர் 22ம்தேதி, லண்டன் பெருநகரப் போலிசார் அடையாள ஆவணங்கள் மோசடி சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.

போலிசார் கருணாவிடம் நடத்திய விசாரணையின்போது, கருணா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும், தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது என்றும் கூறியதாகவும், அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும்போது, கொழும்பு விமான நிலையத்தில், இலங்கையின் குடிவரவு மற்றும் சுங்க இலாகா வழிமுறைகளுக்கு உட்படாமல் தான் விமானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், விமானத்தில் ஏறும் முன்னர் தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் தரப்பட்டதாகவும் கருணா லண்டன் போலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக, அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஆனாலும், இந்த பாஸ்போர்ட்டில் தனது புகைப்படம் மட்டுமே இருந்ததை கருணா கண்டதாகவும், மற்ற விவரங்கள் பொருந்தவில்லை என்று அவருக்கு தெரிந்திருந்ததாக கருணா கூறியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

தனக்கு ராஜிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து கருணா போலிசாரிடம் குறிப்பிடுகையில் தான் அரசாங்க அதிகாரியல்ல என்றாலும், இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார்.

கருணா ஏற்கனவே இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறிய கருணா தரப்பு வழக்குரைஞர் டேவிட் பிலிப்ஸ், ஆனால் போலிசார் மற்ற விடயங்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் 11, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டபோது அவர் தன்னுடைய வீட்டில்தான் இருந்தார் என்றும் குறிப்பிட்ட பிலிப்ஸ், கருணா இதற்கு முன்னர் சிறைத்தண்டனை பெற்றிருக்கவில்லை, இவ்வாறு தடுத்துவைக்கப்படுவது அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும் என்றார்.

- BBC

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் எழுதிய ஆக்கத்தில் இருந்தவை கிழக்கு மாகாண மக்களுக்கு எதிரான கருத்துக்கள் அல்ல. மாறாக ஒரு சிலர் கருணாவுக்காக இன்னும் வக்காலத்து வாங்குவதைப் பற்றியது. அவர் செய்த செய்துவருகிற அநியாயங்களை சரியென்று வாதாடியது பற்றியது.

நீங்கள் கூறுவதுபோல நான் கிழக்கு மாகண மக்களை தாக்கி எழுதவில்லை. மாறாக அவர்கள் கருணாவால் படும் துன்பங்கள் பற்றித்தான் எழுதியிருந்தேன். அக்கருத்தைத் தூக்கியதற்காக நீங்கள் கூறும் காரணம் அபத்தமானது.

மேலும் கிழக்கு மாகணம் பற்றி எழுதுவதற்கு எனக்கு தகமை இருக்கு. நான் மட்டக்களப்பில் 4 வருட காலம் படித்தவன். அங்குள்ள மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவன். அவர்களின் மனநிலை தொடர்பாக நன்கு அறிந்து உள்ளவன். ஆகவே கிழக்குப் பற்றித் தெரியாது எழுத வேண்டாம் என்பதெல்லாம் சும்மா.

நான் எழுதும் கருத்துக்கள் போராட்டத்தைப் பாதிக்கும் என்று கூறும் நீங்கள் இன்றும் எமது தேசியத் தலமைக்கு எதிராகவும், கருணாவின் செயற்பாடுகளுக்கு ஆதரவாகவும் உலவி வரும் கருத்துக்கள் பற்றி என்ன செய்து இருக்கிறீர்கள் ? அக்கருத்துக்களை தவறு என்று சுட்டிக்காட்டி அவற்றை திருத்தி இருக்கிறீர்களா ? இப்படியான கருத்துக்களை இன்னும் வளரவிடுவதுதான் மூலம்தான் போராட்டம் பிந்தள்ளப்படும் என்பதை நினைவில் வைத்திருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் கடவுச்சீட்டு வழங்கினார், அவர் விசா குடுத்தார், அவர் பிளேனுக்குள் ஏத்திவிட்டார் எண்டதெல்லாம் பழைய கதை, அவனுக்கு 9 மாதம் தீந்திருக்கு, மனித உரிமை மீறல் விவகாரத்தை முன்னெடுத்து மடக்கவேண்டிது தற்போதய தேவை. தேவையான சாட்சியத்தோட இன்னும் மாட்ட ஏற்பாடு செய்யவேண்டயது உடனடியா துடங்கவேணும். இந்த சந்தப்பத்த விட்டா பிறகு ஒண்டும் அவியாது. 7 மாதம்தான் இருக்கு அதுக்குள்ள ஒண்டும் செய்யேலாமல்போனா பிறகு குனிஞ்சுகொண்டு திரியவேண்டியதுதான். உதுவளில அனுபவம் உள்ளவ கவனியுங்கோ........................

  • கருத்துக்கள உறவுகள்

கருணா 2002 இற்கு முதலிருந்த ஒரு போராட்டத் தளபதி என்பதை மறுக்கவில்லை. அவ்வறே இன்று அரசுடன் இணைந்து செயல்பட்டுவரும் டக்கிளசு, சித்தார்த்தன், ஆனந்த சங்கரி, சிறிதரன் போன்றோரும் ஏதோ ஒரு காலத்தில் தமிழரின் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியவர்கள் தான். அதற்காக அவர்கள் இன்று செய்துவரும் செயல்களை சரியென்று வாதாட முடியுமா ?

தனிப்பட்ட ஒருவரின் கருத்துக்கை விமர்சனம் செய்யும்போது அதை அவர் சார்ந்த சமூகத்தை விமர்சிப்பதாக நீங்கள் கருதியதுதான் அபத்தமானது.இதன்மூலம் நான் சொல்ல வந்ததையே நீங்கள் மற்றி விட்டீர்கள்.

நோக்கம், அந்த நோக்கத்தை அடைவதற்கான வழி, இந்தவகையில் அதன் செயற்பாடுகள் பிழையாக இருப்பின் அவை துரோகத்தனமே.

கருணாவிற்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை - அரசு, கோத்தபாய மீது கருணா குற்றச்சாட்டு

சிறீலங்கா படைகளுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு லண்டனிலுள்ள ஐல்ஸ்வோத் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இராச தந்திரிகளுக்குரிய பெயரில், பொய்யான கடவுச்சீட்டில் பிரித்தானிவிற்கு நுழைந்ததற்காக மட்டுமே தற்பொழுது இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், சிறீலங்கா அதிபரின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஸவுமே போலியான கடவுச்சீட்டை தயாரித்து தன்னை பிரித்தானியாவிற்கு அனுப்பி வைத்திருப்பதாக நீதிமன்றில் கருணா கூறியதாகத் தெரிகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) இது பற்றிக் கருத்துக் கூறிய சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லகம, தமது அரசு கருணாவிற்கான போலியான இராசரீக கடவுச்சீட்டை வழங்கவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்ததுடன். மூன்றாவது சக்தியொன்றின் பின்னணி இதில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

சிறீலங்கா படைகளுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக போரியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தொடர வேண்டுமென மனித உரிமை அமைப்புகளும், அனைத்துலக நிறுவனங்களும் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், அவ்வாறான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிய வரவில்லை.

கருணாவிற்கு அதிகூடிய தண்டனையாக 24 மாதங்கள் சிறைத்தண்டனையும், பண அபராதமும் விதிக்கப்படும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

"நன்கு அறியப்படாத கிழக்கு மாகாணம்" நன்றாக இருக்கிறது உங்கள் அரசியல் அறிவு. தெரியாத கிழக்கு மாகாணத்துக்காகவா ஆயிரமாயிரம் போராளிகள் தமது இன்னுயிரை ஈந்தார்கள் ? அறியப்படாத கிழக்கு மாகாணம் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை ? வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழரின் தாயகம் என்பதை எப்படி மறந்தீர்கள்?

போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது கூடத் தெரியாமல் நான் எழுதும் கருத்துக்களால் போராட்டம் பிந்தள்ளப்படும் என்று கவலைப் படுகிறீர்கள்!

ஐய்யா புலவரே, கருணா செய்த தவறு அனைத்து மக்களுக்கும் தெளிவாக விளக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியம் கருணா தொடர்பாக நடந்துகொண்ட விதம் சரியானதுதான் என்பது அனைத்து மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.வடக்கும் கிழக்கும் பிரிய வேண்டும் என்ற சிங்களப் பேரினவாதத்தின் தூண்டுதலால் வழிநடத்தப்படும் சில இணையத் தளங்கள் கூறும் தகவல்களை மக்கள் நம்பும் நிலை மாற்றப்படவேண்டும்.

இவற்றை விடுத்து அதை மூடி மறைக்க முற்படுவதன்மூலம் எதையும் சாதிக்க முடியாது.நீங்கள் கூறுவது போல போராட்டம் பின்னடைவதற்கு காரணமே பிரச்சனைகளைத் தீர்க்காமல் மூடிமறைத்து விடுவதுதான். இது அவர்களுக்குள் நீறு பூத்த நெருப்பாகவே இருந்துவிடும். இவ்விடயங்கள் தர்க்கிக்கப்பட்டு உண்மை வெளிக் கொணரப்படவேண்டும்.

இதை விடுத்து நான் எழுதும் கருத்தினால் போராட்டம் பின்னடையும் என்று கூறுவது "கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்த பூனை உலகம் இருண்டது" என்று எண்ணுவதைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை உருவாக்கியது கடவுள் அல்ல ரகுநாதன். பிரபாகரன் எனும் தமிழீழத் தமிழர் தலைவன். தலைவன் உருவாக்கியதன் நோக்கம் தமிழீழ இலட்சியப் பணத்தில் பயணிக்கத்தானே தவிர துரோகம் செய்யவில்லை..!

வடக்குக் கிழக்கு என்று பிரிச்சு பேசாதீங்க. அது அர்த்தமற்ற ஒரு பிரிவினை. தமிழீழத்தவன் என்பதுதான் உண்மை ஈழத்தமிழனின் குருதியில் ஓடும்..! அப்படிப்பட்ட எவரும் வடக்கு கிழக்கு என்று பிரிச்சுப் பேசமாட்டார்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: நெடுக்காலபோவான், நான் வடக்கு, கிழக்கு என்று பிரித்துப் பேசவில்லையே ? அது பிரிந்து விடக்கூடாது என்றுதானே கருத்து எழுதினேன். தவறான அபிப்பிராயங்கள் களையப் படவேண்டும் என்றுதானே எழுதினேன்? ஏன் யாரும் புரிந்து கொள்கிறீர்களில்லை ?

போரியல் குற்றத்துக்காக கருணாவுக்கு தண்டனை கிடைக்காமல் இருப்பதுதான் போராட்டதுக்கு நல்லது...

கருணா தான் செய்தவற்றை இலங்கை அரசின் மீது போட்டதை நீதி மண்று ஏற்குமானால் கருணா 9 மாதம் முடிய வெளியில் வருவது நிச்சயம்... வரும் போது அரசியல் தாஞ்சம் கோரவும் முடியும்...

கருணா மீதான குற்றம் என்பது இலங்கை அரசு சுற்றவாளி என்பதை சொல்லும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரியல் குற்றத்துக்காக கருணாவுக்கு தண்டனை கிடைக்காமல் இருப்பதுதான் போராட்டதுக்கு நல்லது...

கருணா தான் செய்தவற்றை இலங்கை அரசின் மீது போட்டதை நீதி மண்று ஏற்குமானால் கருணா 9 மாதம் முடிய வெளியில் வருவது நிச்சயம்... வரும் போது அரசியல் தாஞ்சம் கோரவும் முடியும்...

கருணா மீதான குற்றம் என்பது இலங்கை அரசு சுற்றவாளி என்பதை சொல்லும்...

மவுனம் சாதிக்கிறது நல்லா படேல்ல...........

ஆக 9 மாதந்தானா.

அதில பாதியை கணக்கு போடுங்கோ...

லண்டனில சிறைத்தண்டனை கொடுக்கும் போது இரவு ஒரு நாள்,

பகல் ஒருநாள் என்று தான் கணக்கு போடுவினம் என்று

கேள்விப்பட்டிருக்கிறன்.. :(

அப்ப கருணா 4 மாதங்களிலே வெளியே வந்திடும். :lol:

பிரித்தானியாவுக்கு தான் தப்பிச் செல்வதற்கு தேவையான போலியான கடவுச்சீட்டை சிறிலங்கா அரசும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சவும்தான் தனக்கு வழங்கியதாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த கருணா பிரித்தானியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(தயா @ Jan 26 2008, 12:37 PM)

போரியல் குற்றத்துக்காக கருணாவுக்கு தண்டனை கிடைக்காமல் இருப்பதுதான் போராட்டதுக்கு நல்லது...

கருணா தான் செய்தவற்றை இலங்கை அரசின் மீது போட்டதை நீதி மண்று ஏற்குமானால் கருணா 9 மாதம் முடிய வெளியில் வருவது நிச்சயம்... வரும் போது அரசியல் தாஞ்சம் கோரவும் முடியும்...

கருணா மீதான குற்றம் என்பது இலங்கை அரசு சுற்றவாளி என்பதை சொல்லும்...

கருணா பிரித்தானியாவில் புகலிடம் கோரி விண்ணப்பம்

[saturday January 26 2008 01:34:28 PM GMT] [pathma]

இராஜதந்திரிகள் பயன்படுத்தக் கூடிய கடவுச் சீட்டை போலியாக தயாரித்து அதைப் பயன்படுத்தி ஐக்கிய இராஜ்ஜியத்துக்குள் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்ட கருணாவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று 9 மாத கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளதாக நேற்று அறிவிக்கபட்டது.

இதேவேளை பிரித்தானியாவில் புகலிடம் கோரி கருணா விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் தரப்பு வக்கீல் டெவிட் பிலிப்ஸ் பி.பி.சி க்கு தெரிவித்துள்ளார்.

tamilwin.com

கருணா பிரித்தானியாவில் புகலிடம் கோரி விண்ணப்பம்

[saturday January 26 2008 01:34:28 PM GMT] [pathma]

இராஜதந்திரிகள் பயன்படுத்தக் கூடிய கடவுச் சீட்டை போலியாக தயாரித்து அதைப் பயன்படுத்தி ஐக்கிய இராஜ்ஜியத்துக்குள் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்ட கருணாவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று 9 மாத கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளதாக நேற்று அறிவிக்கபட்டது.

இதேவேளை பிரித்தானியாவில் புகலிடம் கோரி கருணா விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் தரப்பு வக்கீல் டெவிட் பிலிப்ஸ் பி.பி.சி க்கு தெரிவித்துள்ளார்.

tamilwin.com

பிறகு கோத்தபாயவுக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக வாக்குமூலம் கொடுத்து போட்டு இலங்கைக்கு போக முடியுமா..?? :lol::icon_mrgreen::icon_mrgreen:

என்னக்கு ஒரு உண்மை தெரியனும்

அரசங்கத்தால் பாதுகாப்பு கொடுக்க பட்ட ஒருவர் அரசியல் தஞ்சம்ம் கேக்கலாமா?

ஏன் எனில் நான் தச்சம் கேக்கும் போது வன்ம்னியில் போய் இருக்க ஏலாதோ என்று கேட்டார்கள் அதுக்கு நான் சொன்னேன் அங்கை போனா சண்டை பிடிக்கனும் எனக்கு சண்டை என்ரால் பயம் என்று அப்போ உங்களுக்கு அரசங்கம் பாதுகாப்பு தரும் தானே என்று கேட்டார்கள் நான் சொன்னேன் தமிழன் என்றால் அரசு துன்பம் படுத்தும் மாசம் மாசம் கைது செய்வது விசரனை என்று தடுத்து வைப்பது என்று அப்போது கேளிவி கேட்டவர் சொன்னார் உங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய பொருப்பு இலங்கை அரசுக்கு தான் இருக்கு என்றும் தாங்கள் இலங்கை அரசுடன் பேசி இலங்கையில் ஒரு முகாம் திறந்து அங்கு உங்களை பராமரிக்க போகிர்\ரோம் அப்போது நீங்கள் அங்கு பாதுகப்பாக இருகலாம் என்று

எனது கேள்வி இது தான் கருணாக்கு அரசு பாதுகப்பு கொடுத்து வைத்து இருந்த்து எண்டு அவன் வாயல சொல்லியும் அரசியல் தஞ்சம்ம் கொடுப்பார்களா?

எனது கேள்வி இது தான் கருணாக்கு அரசு பாதுகப்பு கொடுத்து வைத்து இருந்த்து எண்டு அவன் வாயல சொல்லியும் அரசியல் தஞ்சம்ம் கொடுப்பார்களா?

நீங்க சொல்லுகிற மாதிரி எண்டா நிச்சயமாக கொடுக்க மாட்டார்கள்...!

ஆனா தான் செய்த கொலைகளுக்கு எல்லாம் அரசாங்கம் தான் காரணம்... தன்னை காவலில் வைத்து கொண்டு தனது பெயரை பாவித்து அரசு தான் கொலைகளையும் கடத்தல்களையும் செய்தது, அறிக்கைகளையும் விட வைத்தது எண்ட ஒரு கதையை மனித உரிமை பிரச்சினைக்கு சொல்ல போகிறார்... அதன் முன்னோட்டமாக கடவுச்சீட்டு மோசடி செய்தது அரசும் அதன் இயக்குனர்களும் எண்ட கதையை முன்னமே சொல்லி விட்டார்... ( புலிகள் அமைப்பில் இருந்த போது மனித உரிமை மீறல் சம்பவங்கள் எதனிலும் ஈடு படவில்லை எண்று சொல்லுவார்)

அரசியல் தஞ்சம் கோருவதுக்காக அவர் இப்போ சொல்ல கூடிய ஒரே கதை என்ன எண்டால். அரசின் மனித உரிமை மீறிய செயல்களில் உடன்பாடு இல்லாத நான்... ஏமாற்றி கதைகள் சொல்லி நம்ப வைத்து ஐரோப்பிய சுற்று பயணம் வந்தேன்... பிரித்தானியாவிற்கு வந்தேன்... நான் திரும்பவும் இலங்கை போனால் அதே மனித உரிமை மீறல் செயல்களுக்கு உடந்த யாக்க படுவேன்... மறுக்கும் பட்சத்தில் கொல்லப்படுவேன்... ஆதாலால் எனக்கு தஞ்சம் தாருங்கள்....!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.