Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டை தொடருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி- 100 பேர் காயம்

Featured Replies

மரணம் 09 பேர் !

இராணுவ இறப்புகளிலும் நாங்கள் மகிழ கூடாதுதான். அவர்களும் பிழைக்கத்தெரியாத அப்பாவி கிராமத்து இளைஞர்களே....! இறப்புகள் எங்கள் மீது திணிக்கப்படும் போது பிழைக்க வேறுவழியில்லை!

இந்த இறப்புகள் பெரிய மாற்றம் எதனையும் கொண்டுவரப் போவதில்லை! இவை மேலும் நிலமையை மோசமடையச் செய்தாலும் ஆச்சரியமில்லை. போர்களத்திலும் இராணுவம் தோற்கடிக்கப்பட வேண்டும்! அப்போது தான் தலைக்கேறிய இனவாத பித்தம் குறையும்!

தென்பகுதியில் இராணுவ இலக்கற்ற தாக்குதல்களை புலிகள் அதிகரிக்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாகவே ஆள ஊடுருவும் அரச படையணியின் மடுத்தாக்குதல் திட்டமிடப்பட்டவை போல் உள்ளது.

தென்பகுதியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் விமானப்படையின் வன்னிமீதான கண்மூடித்தனமான விமானத்தாக்குதலுக்கு இலங்கை அரசுக்கு ஒரு 'தார்மீக' தகுதியை வழக்கிவிடக்கூடிய ஆபத்து நிறைந்தது.

  • Replies 91
  • Views 12.1k
  • Created
  • Last Reply

ஸ்கோர் போட் போடுறீங்களோ. இது எல்லாம் சரியில்லாத பழக்கம். இறப்பது என்னவோ அப்பாவிச் சனங்கள் தானே. சிங்களவன் விரும்பின போர் அவனையே அழிக்குது.. இதை உணர்ந்தாங்க என்றால் போதும். :D:mellow:

முள்ள முள்ளாலதான் அண்ணே எடுக்கனும், இதெல்லாம் சும்மா சாம்பிள்தான்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தெற்கில் தாக்கித்தான் அரசு வன்னியில் குண்டு மழை பொழிய வேண்டும் என்றில்லை. புலிகள் தெற்கில் தாக்கினால் என்ன தாக்காது விட்டாலென்ன வன்னிமீதான அரசின் அகோரத் தாக்குதல் நின்று விடப்போவதில்லை. வேண்டுமானால் தெற்கில் இருக்கும் தமிழரை இன்னும் வதைக்க அரசுக்கு இது உதவக் கூடும். அவ்வளவுதான்.

புலிகளின் தாக்குதல்களுக்கு பதிலதாக்குதல்கள்தான் அரசினால் நடத்தப்படுகிறது என்றால் இன்று தெற்கில் கொல்லப்பட்ட சிங்களவரின் எண்ணிக்கை அரசால் பலியிடப்பட்ட தமிழரின் எண்ணிக்கைக்குச் சமனாக இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

தென்பகுதியில் இராணுவ இலக்கற்ற தாக்குதல்களை புலிகள் அதிகரிக்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாகவே ஆள ஊடுருவும் அரச படையணியின் மடுத்தாக்குதல் திட்டமிடப்பட்டவை போல் உள்ளது.

தென்பகுதியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் விமானப்படையின் வன்னிமீதான கண்மூடித்தனமான விமானத்தாக்குதலுக்கு இலங்கை அரசுக்கு ஒரு 'தார்மீக' தகுதியை வழக்கிவிடக்கூடிய ஆபத்து நிறைந்தது.

நீங்க சொல்லுறதும் நியாயம்தான்....முந்தி நீங்க ஒரு தரம் சொன்னதுதான் இப்பவும் ஞாபகம் வருகுது....."எல்லோரும் ஒத்த குரலில சமாதானம் என்று ஒப்பாரி வையுங்கோ!" என்று......!

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தரிக்காத மக்களை அழிக்கின்ற சந்தர்ப்பங்களை உரிமை கோருவது என்பது எம் போராட்டத்தை மலினப்படுத்தி விடும். சிங்கள மக்களைக் கொல்லவா நாம் போராடுகின்றோம். நாம் இவ்வளவு காலம் காத்த பொறுமை என்பது எமக்கு சர்வதேசத்திடம் ஒரு அங்கிகாரத்தை வேண்டுவதற்கு.

தனிப்பட்டரீதியாக சந்தோசப்பட விரும்பினால் படுங்கள். ஆனால் பொது இடங்களில் வெட்டீட்டம், குத்தீட்டம், பின்னீட்டம் என்று பெருமை சொல்வது என்பது போராட்டத்தை மலினப்படுத்தும்.

மேலதிக படங்கள்: http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=5578

நேற்றில இருந்து தானப்பா உச்ச விழிப்பில இருக்க தொடங்கினவங்கள்... அதுக்குள்ள உச்ச உச்ச விழிப்புக்கு போகவேண்டிக்கிடக்கு.

பேசாம இந்தியாட்டை இலங்கையை இப்பவேகுடுத்திட்டா பிரச்சனை குறைவு....

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

ஆயுதம் தரிக்காத மக்களை அழிக்கின்ற சந்தர்ப்பங்களை உரிமை கோருவது என்பது எம் போராட்டத்தை மலினப்படுத்தி விடும். சிங்கள மக்களைக் கொல்லவா நாம் போராடுகின்றோம். நாம் இவ்வளவு காலம் காத்த பொறுமை என்பது எமக்கு சர்வதேசத்திடம் ஒரு அங்கிகாரத்தை வேண்டுவதற்கு.

தனிப்பட்டரீதியாக சந்தோசப்பட விரும்பினால் படுங்கள். ஆனால் பொது இடங்களில் வெட்டீட்டம், குத்தீட்டம், பின்னீட்டம் என்று பெருமை சொல்வது என்பது போராட்டத்தை மலினப்படுத்தும்.

மேலதிக படங்கள்: http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=5578

சரியான கருத்து தூயவன்.

எங்களது உரிமைப்போராட்டத்தில் கீழ்த்தரமான அரசியல்..சில்லறைத்தனமான சீண்டல்களை சிங்களதேசம் பெரிய சாணக்கியமாய் நுழைக்கலாம் என்று முயற்சிக்கிறது..

Political power grows out of the barrel of a gun

துப்பாக்கி முனையில் இருந்து தான் அரசியல் அதிகாரம் பிறக்குறது.

இதென்ன இலங்கைத்தீவில யுத்தம் நடக்குது எங்க எண்டாலும் குண்டு வெடிக்கும் தானே.

அதென்ன தமிழர் மட்டும் தான் அழவேணுமே. பிழை சிங்கள சகோதரங்களும் துண்டை காணோம் துணியை காணோம் எண்டு ஒட வேணும். அப்ப தான் துக்கத்தில சமமாக பங்கிட்ட மாதிரி இருக்கும்.

சிங்கள சகோதரங்கள் யுத்தம் வேண்டாம் எண்டு சொல்ல வேண்டும்.

அங்க இரானுவம் இருக்கட்டும் முதல் எங்க இருந்து இராணுவம் வந்ததோ அந்த இடத்துக்கு யுத்தத்தை கொண்டு போக வேணும். அப்ப தான் குண்டு வெடிப்பின் வலி ,அழுகை தெரியும்

என்னங்கோ சுதந்திர தினம் கொழும்பில களை கட்டீட்டிது போல இருக்கிது. வாழ்துகள்!

கடைசியாக கிடைத்த தகவலின் படி ஒரு சிறுவன் உட்பட பன்னிரெண்டு பேர் பலியானதாகத் தெரிகின்றது. நாளை நடக்கவிருந்த தேசத்தின் மகுடம் என்ற கண்காட்சியையும் வரும் 7ம் திகதிக்குப் பின் போடப்பட்டுள்ளது. அரசியல்வாதிக் தங்களின் உயிர்ப்பாதுகாப்பிற்காக கொழும்பில் பல பிரதான வீதிகளை மூடி சுதந்திர தினம் கொண்டாட ஆயத்தப்படுத்துகின்றனர். தமது அரசியல் ஆணவத்தையும் இராணுவ மேலாண்மையையும உலகுக் காட்ட இந் நிகழ்ச்சியை நடத்த்த விளைகின்றனர். ஆனால் அப்பாவிகளின் கதி. யார் காப்பது?? அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற உயிர்ப்பயத்தில் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும்....!

சும்மா சாம்பிளுக்கு விட்ட ரெயிலருக்கே முழுக்கக் கொண்டாடி களைச்சு போகாதேங்கோ இண்டைக்கு இரவைக்கு மிச்சத் திருவிழா இருக்கு மோட்டுச் சிங்களவருக்கு.

மாவீரர் தினத்தை குழப்பினவங்களை சும்மா விடக்கு கூடாது. ஒவ்வொரு சிங்கள வீட்டிலையும் அவலக் குரல் கேக்க வேணும் அப்பதான் தீர்வுக்கு உடன் படுவான்கள்.

பிளேனுகள் சுட்டு விழுத்த வேணும் படகுகளை தாக்க வேணும் எண்ட தேவையெல்லாம் இல்லை. சும்மா குறிவைக்கிறம் எண்டு தெரிஞ்சாலே காணும் சிங்களவன் வாலைச் சுறுட்டிக் கொள்ளுவான். அப்புறும் உப்பிடியும் 2...3 இடத்தில ஒரே அடிய வெடிக்க வைச்சால் ஓட்டமெடுக்க வெளிக்கிட்டுவங்கள்.

அப்பிடியே மிச்சக் கதையையும் படக் கெண்டு முடிக்கலாம்.

அடிவிழும் என்ற பயத்தில தான் மாட்டுக்கொட்டிலுகளுக்கு மேலும் பள்ளிக்கூடங்களுக்கு மேலும் வீசிட்டு ஓடிப் போய் வீராப்புக் காட்டிக் கொண்டு திரியிரான்கள். கொழும்பில் ஒரு வாரமா அடிக்கொரு பொலிசும் அங்குலத்துக்கொரு ஆமியும் நிக்குது. அப்பிடியிருந்தும் என்ன நடக்குது. சுருட்டுவான் மிக விரைவில் சுருட்டுவான். இப்போதே கேள்வி தப்பி ஓடறவனும் செத்தவன்ட பிணத்தை புதைச்ச இடத்தையும் சொல்லிட்டுத்தானாம் ஓடுரான்.

ஜானா

அதுசரி, இண்டைக்கு எத்தினை பேர் சிவராத்திரி இருக்கப் போறீங்கள்? ஏனென்டால், போற போக்கைப் பார்த்தால் நிமிசத்திற்கொன்று என்று நடக்கும் என்று எதிர்பார்ப்பது போலை இருக்கு. நாங்கள் எதிர்பார்க்கிற மாதிரி, அங்கை பெரிதாக ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறேன். என்ன இது மாதிரிச் சில்லறை விசயங்கள் இன்னும் 2, 3 நடக்கலாம். இழப்புகளைக் கொடுப்பதற்கு புலிகள் ஒன்றும் மோட்டுச் சிங்களவர்கள் அல்ல. நிதானமாகச் செய்வதுதான் புலிகளின் வழி.

  • கருத்துக்கள உறவுகள்

பிளேனுகள் சுட்டு விழுத்த வேணும் படகுகளை தாக்க வேணும் எண்ட தேவையெல்லாம் இல்லை. சும்மா குறிவைக்கிறம் எண்டு தெரிஞ்சாலே காணும் சிங்களவன் வாலைச் சுறுட்டிக் கொள்ளுவான். அப்புறும் உப்பிடியும் 2...3 இடத்தில ஒரே அடிய வெடிக்க வைச்சால் ஓட்டமெடுக்க வெளிக்கிட்டுவங்கள்.

அப்பிடியே மிச்சக் கதையையும் படக் கெண்டு முடிக்கலாம்.

குறுக்ஸுக்கு விசயம் விளங்கிட்டுது என்றபடியால் ஏதோ நடக்க தான் போகுது. :mellow::D:(

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு, 11பேர் பலி, 103 பேர் காயம்

2/3/2008 7:07:46 PM

- கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 103 பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பலியானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக

வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோட்டை ரயில் நிலையத்தின் 3 ஆவது மேடைக்கருகிலேயே இக்குண்டு வெடித்துள்ளது. கொழும்பிலிருந்து அப்பேபுஸ்ஸவுக்கு செல்லும் ரயில் தரித்து நின்ற பகுதியிலேயே குண்டு வெடித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியே குண்டினை வெடிக்க வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பு அம்பேபுஸ்ஸவுக்கான ரயில் 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்த வேளையிலேயே குண்டு வெடித்துள்ளது. குறித்த ரயிலில் பெருமளவு பயணிகள் இருந்துள்ளனர். இன்று சுதந்திரதினமென்பதால் வெளியூர்களுக்கு செல்ல பெருமளவு மக்கள் நேற்று குழுமிநின்ற சமயமே குண்டு வெடித்துள்ளமையினால் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.

குண்டினை வெடிக்க வைத்ததாக பொலிஸாரினால் சந்தேகிக்கப்படும் பெண் தற்கொலை குண்டுதாரியின் தலையும் கால் ஒன்றும் சம்பவ இடத்தில் காணப்பட்டது. இதனை குண்டு வெடித்த இடத்தில் நின்ற ஆண் ஒருவரின் சடலத்தின் கீழ்ப்பகுதி சிதைவடைந்த நிலையில் புகையிரத நிலையத்திற்குள் காணப்பட்டது.

திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தமையினால் கோட்டை புகையிரத நிலையத்தில் பெரும் அல்லோல கல்லோலம் ஏற்பட்டது. மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர்.

குண்டு வெடிப்பின்போது ஐவர் ஸ்தலத்திலேயே பலியாகினர். ஏனையோர் வைத்தியசாலையில் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

குண்டுவெடிப்பினையடுத்து கோட்டை ரயில் நிலையத்துக்கான சேவைகள் சில மணிநேரம் இடை நிறுத்தப்பட்டன. சம்பவத்தில் காயமடைந்த 100 பேரில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள் என பலதரப்பட்டவர்களும் அடங்குவர்.

குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து ரயில் நிலையத்திற்குள் எவரையும் படையினர் அனுமதிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு அருகில் செல்ல ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸார் உடன் அனுமதி வழங்கவில்லை.

பொலிஸாரும், படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பெரும் சோதனையும் இடம்பெற்றது.

ரயில் பெட்டிகள் சேதம்

குண்டுவெடிப்பையடுத்து புறப்படவிருந்த ரயில் பெட்டிகள் சிலவற்றின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்திருந்ததுடன் ரயிலுக்குள்ளும் இரத்தக் கரைகளும் காணப்பட்டன. இதேவேளை, வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலும் பெருமளவு இரத்தக்கரைகள் இருந்ததுடன் ரயில் நிலைய அலுவலக கட்டிடக் கண்ணாடிகளும் சேதமடைந்திருந்தன.

படையினர் குவிப்பு

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதையடுத்து ரயில் நிலையத்துக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் அத்துடன் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ரயில் நிலையம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்த படையினர் பொதுமக்கள் எவரையும் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்காத அதே நேரம் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அத்துடன், ரயில் நிலைய முன்னரங்கப் பகுதியிலும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ரயில் நிலைய அனைத்து சிற்றுண்டிச்சாலைகளும் மூடப்பட்டன.

சேவை இடைநிறுத்தம்

குண்டுவெடிப்பையடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் பெரும் பீதிக்குள்ளான அலுவலக ஊழியர்கள் உடனடியாக அலுவல்களை இடைநிறுத்திக்கொண்டனர். இதனையடுத்து சகல ரயில் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. அத்துட அனைத்து அனுமதிச் சீட்டு கரும பீடங்களும் மூடப்பட்டிருந்ததுடன் அலுவலகம் வெறுமையாக இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெடிச்சதுல குறுக்கருக்கும் சன்னம் கின்னம் பட்டுடிடுதோ? குழம்பிப்போய் இருக்கிறார் போலகிடக்கு?...

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரத நிலைய குண்டு தாக்குதலில் பலியானோர் தொகை 14 ஆக அதிகரிப்பு

2/4/2008 12:04:24 PM

வீரகேசரி இணையம் - கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் தொகை 14ஆக அதிகரித்துள்ளது. இத்தற்கொலை குண்டுத் தாக்கதலில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்கள் இருவரே சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமானார்கள் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் சம்பவத்தில் பலியாகியுள்ளனர் எனவும் அவர் கூறினார். அத்தோடு இத்தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 91 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், இவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சேவைகள் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் நிலையத் தாக்குதல்தாரியின் இலக்கு வேறாக இருந்திருக்கலாம் ரம்புக்வெல

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் இலக்கு வேறாக இருக்கலாம். ரயில் நிலையத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததால், ரயிலில் இருந்து இறங்கியதும் அவர் குண்டை வெடிக்க வைக்க முடிவு செய்திருக்கலாம்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.

சம்பவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கையில் அவர் இப்படிக் கூறினார்.

தற்கொலைக் குண்டுதாரியின் இலக்கு ரயில் நிலையம் அல்ல. அவரது இலக்கு வேறாகவே இருந்திருக்கவேண்டும்.

ரயில் நிலையத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை, ரயிலில் இறங்கிய அவர் திடீரென குண்டை வெடிக்க வைத்துள்ளார் எனக் கருதவேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

25 பேரின் நிலை கவலைக்கிடம்

இதேவேளை நேற்றிரவு வரை சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒன்பது பேரில் நால்வர் பாடசாலை மாணவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நிலையில் 103 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது என்று ஆஸ்பத்திரி வட்டராங்கள் தெரிவித்தன.

uthayan.com

  • கருத்துக்கள உறவுகள்

3xmixanrhepfjq55ii0voi45_front.jpg

A mother grieves the loss of her son, Rajaratnam Ratheeswaram (18), who was killed in the Fort railway station bomb attack on Sunday. Young Ratheeswaram was among seven baseball students of D.S. Senanayaka College Colombo who were killed in the attack. Their coach was also killed.

Pic by Dinuka Liyanawatte - dailymirror.

கொழும்பு புறக்கோட்டை தொடரூந்து நிலையக் குண்டு வெடிப்பில் டி எஸ் செனாநாயக்கா கல்லூரி பேஸ்போல் அணியில் இடம்பெற்ற தமிழ் மாணவனான Rajaratnam Ratheeswaran (18) என்பவரும் உயிரிழந்துள்ளார்.

குண்டு வெடிப்புக்கள் சிங்கள மக்களை மட்டுமன்றி சிங்களப் பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களையும் கொல்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளைப் பயன்படுத்தி சிங்கள அரசு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தவறாக அர்த்தப்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..!

நான் அறிந்திருக்கிறேன் மத்திய வங்கி குண்டு வெடிப்பில் தனது தந்தை இழந்த தமிழ் மாணவன் இன்று வரை தமிழர்களின் போராட்டத்தை எதிர்த்து வெறுத்து வருவதை.

போராடும் தரப்புக்கு மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவங்களால் அவப்பெயர் ஏற்படுவதையிட்டும் கவனத்தில் கொள்வது நல்லது..! இவை போராடும் தரப்பு மீது அவப்பெயரை உண்டு பண்ண செய்யப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது..?!

சிவிலியன் இலக்குகளை தாக்குவதைத் தவிர்த்து இராணுவ இலக்குகளை தாக்குவதே விடுதலைப்புலிகளின் முதன்மைக் கொள்கை. சமீபகால குண்டு வெடிப்புக்கள் பொதுமக்களை இழக்கு வைத்து நடத்தப்படுவதுடன் அனைத்து மக்களும் கூடும் இடங்களில் குண்டு வைப்பது என்பது.. இக்குண்டு வெடிப்புக்களின் பின்னால் உள்ளவர்கள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..!

அதுமட்டுமன்றி இடம்பெயர்ந்து சிங்கள தேசத்தில் வாழும் தமிழ் மக்கள்.. அல்லது சிங்கள தேசத்தில் வாழும் தமிழ் மக்கள், தமிழர்கள் என்ற வகையில் தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். சிங்களவர்கள் சிங்களப் படைகள் கூடும் இடங்களில் கூடுவதை தவிர்க்க முயல்வது நல்லம்..!

போரின் போது ஒவ்வொரு தனி மனிதனையும் பார்த்து இலக்கை தெரிவு செய்வது கடினம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்வதும் முக்கியம். இது தமிழ் மக்களை இலக்கு வைத்த தாக்குதலோ இல்லையோ சிங்கள அரசு.. தனக்குச் சாதகமான வழிமுறைகளில் எல்லாம் தமிழர் போராட்டத்தைப் பயங்கரவாதமாகக் காட்ட கங்கணம் கட்டி நிற்பதைக் கருத்திற் கொண்டு செயற்படுவது நல்லம்..! இவ்வாறான பிரச்சாரங்களை முறியடிக்கவும் தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் புத்திசாதிரியத்துடன் சிங்கள பேரினவாத அரசின் சதிகளை முறியடிக்கவும் போராடும் தரப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்.

உயிரிழந்த மாணவனுக்கு இரங்கல்கள். :huh::rolleyes:

Edited by nedukkalapoovan

ம்ம் இதை கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டும்

இப்படியான செய்திகள் சந்தோசத்தை ஒரு போதும் தர போவது இல்லை மனதில் வலி ஒன்று தானகவே குடியேறுகிறது.........

முள்ளை முள்ளால் தான் எடுக்கலாம்.

குண்டுகளுக்கும் பேரினவாதத்திற்கும் தமிழர் சிங்களவர் என்ற பேதம் தெரியாது. எனக்குள்ள சந்தேகம் அதுதான். குண்டுகள் வெடித்தால் புலிகள்தான் என கூச்சல் கிளம்பும். இவ்வளவு பாதுகாப்புக் கெடுபிடிகளுள்ளும் குண்டுகள் பிரதான இடங்களில் வெடிக்கப்படுவதென்றால் அந்த இடங்களில் செயற்படுபவது பேரினவாதத்தின் கையாக இருக்கலாம். சம்பவங்களால் கவனங்களைத் திசைதிருப்பி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது பேரினவாதிகளின் கலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.