Jump to content

Recommended Posts

Posted
1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும்.(எப்போதுமே உள்ளே என்ன நடக்கிறது என்று கணிப்பது கஷ்டம்தான்.)
 
 
2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.(ரோலர் கோஸ்டர் அப்படீனா என்ன?)
 
 
3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்(.நீல லென் மாட்டிக்கலாமா)
 
4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.(அது எப்படின்னு சொல்லீட்டிங்கன்னா சௌகரியமா இருக்கும்.)
 
5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.(மப்பு தலைக்கேறியிருக்கும்.)
 
6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும்.(கண்ணுக்கு பாதுகாப்பு வாயா?)
 
7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.(எல்லாத்துலேயும் no.1 நாங்க)
 
8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.(அப்போ ஏற்கனவே காதில் பாக்டீரியா இருக்கா?) 
 
9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்பது வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள்.(இது என்ன புது புரளி?) 
 
10.ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.அப்படினா (ஓயாம சிரிச்சுகிட்டே இருந்தா?) 
 
11.நமது மூக்கு நமது உடலில் ஒரு குளிர் சாதனப் பெட்டி போல் இயங்குகிறது.இது உடலுக்குள் செல்லும் குளிர் காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது.சூடானக்காற்றை குளிரச் செய்து அனுப்புகிறது.மேலும் காற்றில் உள்ள மாசுக்களை தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாகவும் மூக்கு செயல்படுகிறது.(மூக்கைப் பற்றி மூக்குமுட்டச் செயதி) 
 
12.நமது மூளையானது சக்தி வாய்ந்த கணினியை விட பல மடங்கு சக்தி வாயந்தது.மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.(ஆனா அந்த மூளையே உதவிக்கு கணினியைதானே தேடுது.)
 
13.மனிதன் இறக்கும் போது முதலில் அவனின் கேட்கும் திறனையே இழக்கிறான்.(எல்லாம் முடிந்த பிறகு பார்த்தா என்ன கேட்டா என்ன)
 
14.ஒரிகான் என்ற இடத்தில் 2400 வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காளான் ஒன்று உள்ளது.இது 3.4 சதுரமைல் இடத்தில் பரந்து காணப்படுகிறது.இதில் விசேசம் என்னவென்றால் அது இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.(காம்ப்ளான் தொழிற்சாலை பக்கத்தில் இருக்குதோ என்னவோ?)
 
15.மற்ற வகை நாய்களை விட, ஜெர்மன ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த நாய்களே மனிதனை அதிக அளவில் கடிக்கிறது.(இனிமேல் அந்த நாய்களை ஹிட்லர் ஷெப்பர்ட் என்று அழைக்கலாம்.)
 
16.ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.ஆனால் பெண்களின் சட்டைகளில் இடது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.(அப்படியா.ஆச்சர்யக்குறி )
 
17.நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது .நமது விழித்திரையானது சாதாரண நிலையவிட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.(பாக்க நல்லாவா இருக்கும்?)
 
18.தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டிருப்பதுதான்.(எனக்கு ரொம்ப உபயோகப்படும்)
 
19.உண்மையான டைட்டானிக் கப்பலைத் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? வெறும் ஏழு மில்லியன் டாலர் மட்டும்தான்.ஆனால் டைட்டானிக் படம் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? 200 மில்லியன் டாலர்.(கப்பல உடைக்கிறதுக்கு இவ்வளவு செலவாகியிருக்கும்.)
 
20.நாம் நமது கழுத்தை அசைக்கும் போது டிரிக் என ஏற்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது.(நல்ல வேளை ஹார்பன் டை ஆக்ஸைடு இல்ல.)
 
21.மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.(இது எனக்கு புதுசு.)
 
 
 
இன்னும் கோடி கோடி காணக்கான ஆச்சர்ய தகவல்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் துயில் கொள்கிறாள் இயற்கை அன்னை.
 
 
 
 
தகவல்கள்.
 
தினதந்தி தங்கமலர்.
நன்றி.
  • 2 weeks later...
  • Replies 510
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

Posted

தமிழ் மொழியின் தினசரி நாளேடுகள் :

 
59.gif
 
 
நமது தமிழ் மொழியில் வெளியான முதல் செய்தி பத்திரிக்கை சுதேசமித்ரன் என்ற பத்திரிகையாகும்.இது 1882 ஆம் ஆண்டு திரு.ஜி.சுப்ரமணிஅய்யரால் துவங்கபட்டது 1904ல் பாரதியார் அவ்ர்கள் இந்த பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார் நாவல்களில் சிறந்த நாவல் என்று கூறப்படும் திரு.ஜானகிராமன் அவர்களின் நாவலான மோகமுள் இந்த பத்திரிகையில்தான் தொடராக வெளிவந்தது 1962ல் திரு.ஜி.சுப்ரமணிஅய்யரின் மறைவுக்குபின் வழிநடத்த முடியாத காரணத்தால் 1970ல் இந்த பத்திரிகை மூடபட்டது

1.தினத்தந்தி-1942ல் திரு.சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் தொடங்கப்பட்டது. 

2.தினமணி-1934ல் திரு.t.sசொக்கலிங்கம் அவர்களுடன் தொடங்கப்பட்டது

new indian expressஆல் வழிநடத்தபடுகிறது

3.தினமலர்-1951ல் திரு.டி.வி.ராமசுப்பய்யரால் தொடங்கப்பட்டது

4.தினகரன்-கே. பி. கந்தசாமி அவ்ர்களால் தொடங்கபட்டு வழிநடத்த முடியாத காரணத்தால் 2005 முதல் திரு.கலாநிதி மாறன் அவர்களால் வழி நடத்தபடுகிறது

5.தினபூமி-1990 களின் பிற்பகுதியில் வெளியாகத் தொடங்கியது

6.தீக்கதிர்-மதுரையில் இருந்து வெளிவரும் செய்திதாள்

7.முரசொலி-1942ல் முன்னாள் முதல்வர் திரு.கலைஞர்.கருணாநிதி அவ்ர்களால் தொடங்கபட்டது

8.நமது எம்ஜிஆர்-முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கபட்டது

9.விடுதலை-தந்தை பெரியார் அவர்களால் தொடங்கபட்டது

10.தமிழ்சுடர்-திரு.உஸ்மான் பயாஸ் அவர்களால் தொடங்கபட்டது

11.தினசுடர்-1963ல் தொடங்கபட்டது கர்நாடகாவிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிக்கை

12.மாலைமலர்-1977 திரு.சி.பா.ஆதித்தனாரால் கோவையில் தொடங்கபட்டது ஒரு மாலை நாளிதழ்

13.மாலைமுரசு-

14.தமிழ்முரசு-2005 திரு.கலாநிதி மாறன் அவர்களால் தொடங்கபட்டது ஒரு மாலை நாளிதழ்

15.மாலைசுடர்-

16.தினகரன்-1932ல் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள் லேக்ஹவுஸ் நிறுவனம் வழி நடத்துகிறது

17.தினகுரல்-இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள் வீரகேசரி பத்திரிகையில் ஆசிரியர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் தொடங்கபட்டது

18.வீரகேசரி-1930ல் திரு.சுப்ரமணி செட்டியாரால் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

19.உதயன்-1985ல் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

20.விடிவெள்ளி-இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

21.காலைகதிர்-பிரித்தானியா(uk)விலிருந்து வெளியாகும் தமிழ் செய்திதாள்

22.மக்கள் ஓசை-1981 மலேசியாவில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

23.மலேசியநண்பன்-மலேசியாவில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

23.தமிழ்நேசன்-1924ல் தொடங்கபட்டது

24.ஈழமுரசு-பிரான்சில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

25.மக்கள்குரல்-1973 திரு.சண்முகவேல் அவ்ர்களால் தொடங்கபட்டது

26.தமிழ்முரசு-சிங்கபூரில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

 

  • 1 month later...
Posted

The famous umpire Billy Bowden was once a

cricketer himself. But before he could start his

career any sort of international career he fell to

a disease called Rheumatoid Arthritics which

affect the joints and ankles of the body. Due to this disease he had to give up his career as a

player

and took up umpiring Because of the disease it was too painful for him

to signal a batsman out with a straight finger

and this lead to his 'crooked finger' signal. After

this signal got popular he invented different

ways to signal

boundaries and other things and became the most popular umpire in World Cricket 

 

1797486_548479551936493_6041178521571512

 

Posted

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

 
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் .

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

  • Like 1
Posted

இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

 

twinbabies.jpg

 

ஒரிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டம் கேந்துபாதர் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான பபினாபத்ரா. கர்ப்பமான இவரை ஸ்கேன் மூலம் சோதனை செய்து பார்த்த டாக்டர்கள் அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இவருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை 1.3கிலோ எடையுடன் இருந்தது. சாதாரணமாக இரட்டைக் குழந்தை என்றால் ஒருமணி நேர இடைவெளியில் அடுத்த குழந்தை பிறந்துவிடும். ஆனால் பபினாவின் வயிற்றில் இருந்த மற்றொரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவில்லை. இதனால், அந்த குழந்தை பிறப்பதற்கு குறைந்தது ஒரு மாதமாகும் என்று அறிந்த டாக்டர்கள் அவரை மருத்துவமனையிலேயே தங்கவைத்து சிகிச்சையளித்தனர். முதல் குழந்தை பிறந்து 40 நாட்கள் கழித்து பபினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை 2கிலோ எடை இருந்ததாம்.

இது குறித்து பபினாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் மொகந்தி கூறியது:

இரட்டைக் குழந்தைகள் இருவகை உண்டு. மருத்துவ அறிவியலில் இதற்கு "யூனி ஓவுலர்", "பை ஓவுலர்" என்று பெயர். பை ஓவுலர் பிரிவைச் சேர்ந்த 2 குழந்தைகள் என்றால், ஒன்றிரண்டு நாட்கள் வித்தியாசத்தில் பிறக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் 40 நாட்கள் வித்தியாசம் என்பது மிகவும் அதிகம்தான். ஆனால் பை ஓவுலர் இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

  • 4 weeks later...
Posted

* ஐரோப்பாவில் 47 சதவீதம் பேருக்கு தங்கள் துணையின் மொபைல் எண் மனப்பாடமாகத் தெரியாது. ‘போன் புக்’ பார்த்தே டயல் செய்கிறார்கள்!

* பிறரை ஏமாற்றுவதற்காகவே, அறிவாற்றல் திறன் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டதாக மானுடவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!

* சஹாரா பாலைவனத்தின் தூசியை ஏறத்தாழ உலகின் ஒவ்வொரு படுக்கையின் கீழும் காண முடியும்!

* ஜீனியஸ் ஒருவரின் மூளைக்கும் சராசரி மனிதனின் மூளைக்கும் வடிவத்திலேயே வித்தியாசம் உள்ளது!

* அமெரிக்காவில் ஆண்டுதோறும் நான்கரை கோடி பேர் ஜிம் கட்டணத்துக்காக மட்டுமே 1900 கோடி டாலர் பணம் செலவழிக்கிறார்கள்.

* சனி கோளின் துணைக்கோளான டைட்டனில், பூமியில் இருப்பதை விட 100 மடங்கு அதிக இயற்கை எரிவாயு உள்ளது.

* கன்னாபின்னாவென சாப்பிடுகிறவர்களைக் கட்டுப்படுத்தும் ஊசி மருந்து ஒன்றை பரிசோதிக்கிறார்கள் லண்டன் ஹாமர்ஸ்மித் மருத்துவமனை விஞ்ஞானிகள்!

* சராசரி ஆப்ரிக்க யானையின் எடை 10 ஆயிரம் கிலோ. இந்திய யானையின் எடை சுமார் 5,400 கிலோதான்!

* ஒரு கிலோ டைனமைட்டை விட ஒரு கிலோ கொழுப்பில் அதிக ஆற்றல் உள்ளது!

* கூகுள் தேடுதளத்தில் ஒவ்வொரு நாளும் 100 கோடி படங்கள் பார்வையிடப்படுகின்றன. இதைப்போல 10 மடங்கு படங்கள் பார்வைக்குத் தயாராக உள்ளன!

* தென் கொரியாவில் உருவாகி வரும் சாங்டோ எனும் நவீன நகரத்தில் குப்பைத்தொட்டிகள் கிடையாது. மாறாக, அனைத்துக் குப்பைகளும் குழாய்கள் வழியே உறிஞ்சப்படும்!

* இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 2 ஆயிரம் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலோ 10 லட்சத்துக்கும் அதிகம்.

* ஒரு வால்நட்சத்திரத்தில் சுமார் 1013 கிலோ தண்ணீர் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மலேரியா நுளம்பால் தானே பரவுகின்றது.இங்கிலாந்தில் நுளம்பு இருக்குதா??????????

Posted

 

2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.(ரோலர் கோஸ்டர் அப்படீனா என்ன?)
 
தினதந்தி தங்கமலர்.
நன்றி.

 

 

maverick_airtime1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மலேரியா நுளம்பால் தானே பரவுகின்றது.இங்கிலாந்தில் நுளம்பு இருக்குதா??????????

 

நுளம்பு இல்லாத, நாடே... இல்லை. ரதி. :)

 

கோடை காலத்தில், ஒன்றிரண்டு இங்கு, நுளம்புகள் வரும்.

வீட்டுக்கு அருகில்... சிறிய குளம் ஒன்று உள்ளது. அதன் காரணமாக இருக்கலாம்.

மாலை 7மணிக்குப் பின்.... ஜன்னல் கதவுகளை சாத்தி விடுவோம்.

  • 1 month later...
Posted

உளவியல் சொல்லும் உண்மைகள் 

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

1380279_675517509148228_876516668_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது நல்ல தொரு பகுதி ஆனால் கூடியவரை சுருக்கமாகத் தாருங்கள்.  அதிகம் வாசிக்கப் போனால் அலுப்படிக்கிறது.

  • Like 1
  • 2 weeks later...
Posted

 

 

 

தர்மசங்கடம் என்றால் என்ன?
 
 
நீங்கள் ஒரு பதவியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. ஒருவர் உங்களுக்கு இலஞ்சம் தர வருகிறார். நீங்கள் யோசிக்கிறீர்கள். அந்தப் பணத்தை வாங்கினால் பையனின் படிப்புக்கு உதவும். வாங்குவதா வேண்டாமா என சங்கடப்படுவீர்கள்.
ஆனால் இது தர்மசங்கடமல்ல.
பையனின் படிப்புக்கு உதவுவது நல்லது (தர்மம்). ஆனால் இலஞ்சம் வாங்குவது தப்பு (அதர்மம்)....
 
ஒரு மாட்டைக் கொல்வதற்காக ஒருவன் அதை துரத்தி வருகிறான். மாடு உங்கள் வீட்டுக்குள் ஓடிவந்துவிட்டது. அதைத்தேடி வந்தவன் மாட்டைக் கண்டீர்களா என உங்களிடம் கேட்கிறான். உங்கள் நிலை சங்கடமாகி விட்டது. மாடு உள்ளே நிற்கிறது என உண்மையை சொன்னால் மாட்டின் உயிருக்கு ஆபத்து. காணவில்லை என்று சொன்னால் சத்தியம் தவறியதாகிவிடும்.
இதுதான் தர்மசங்கடம்.
இரண்டு நல்ல(தர்ம) செயல்களிலே எதைச் செய்வது என சங்கடப்பட்டால் அதுவே தர்மசங்கடம்.
 
- வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் சுவாமி பாகவத உரையில் சொன்ன கருத்து
  • Like 1
Posted
உங்க பிளட் குரூப் என்ன ?
 

bloodtype_chart.gif

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன.

இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல்டோனர்’ என்று பெயர்.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், Aகுரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன்இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனிஅவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச்  ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோஅல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன்கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்;இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி –விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக்காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும்.இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில்  இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organtransplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியைநான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது.தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும்நேரத்தைவிடக் குறைவுதான்.

ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்கவேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில்இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

நன்றி – தினகரன்

 

  • 4 weeks later...
Posted

திரைப்படம்

 
திரைப்படம் என்பது ஒரு கலையாகும் இது ஆய கலைகள் அனைத்தையும் கண்ணுக்கும் மனதிற்கும்  விருந்தழிக்கும் விதத்தில் நகரும் படமாக திரையில் தோற்றம் செய்யக்கூடிய ஒரு தொடர் படலமாகும்..

திரைப்படத்தினை நகரும் படம் எனக் கூறலாம் 

திரைப்படத்தின் நோக்கம் / நன்மைகள் 

  • பணம் சம்பாதிப்பு
  • கல்வி வளர்ச்சி
  • புகழ்/ விருது
  • பொழுதுபோக்கு
  • ஆற்றலை வெளிப்படுத்தல்
  • சமூக விழிப்பு
திரைப்படத்தின் பிரிவுகள் / வகைகள்
  • நகைச்சுவை
  • வீரச்செயல்
  • விஞ்ஞானம்
  • இசை
  • திகில்
  • காதல்
  • சண்டைகள்
  • குடும்பம்
  • காவல் துறை
  • துப்பறியும் துறை
  • வரலாறு
  • பாலியல்
  • விநோதமான
  • மாயா ஜாலம்
திரைப்படம் ஒன்றை தாயரிக்க தேவையானவைகள்
  1. முதலீடு
  2. திரைக்கதை
  3. திரையரங்கு
  4. கலை
  5. நடிகர்கள்
  6. தயாரிப்பாளர்
  7. இயக்குனர் 
  8. இசையமைப்பாளர்
  9. ஒளிப்பதிவாளர்
  10. கணினி.
  11. குறுந்தட்டு
  12. ஒப்பனையாளர்கள்
  13. ஊடகங்கள்
மேலும் திரைப்படம் வெற்றியடைய திரைப்பட  இரகசியர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். 

திரைப்படம் சம்பந்தமான சில சுவாரஸ்சியம்

  • தற்போது திரைப்படத்திற்கு நடிகர்கள் காலத்தை வீணாக்க வேண்டியதில்லை ஒரு சில முக்கிய அசைவுகளை மாத்திரத்தைக் கொண்டு திரைப்படத்தை உருவாக்கலாம் (உ-ம்) Motion Capture methodகோச்சடையான் இந்தியாவின் முதல் இயக்கமூட்டல் படம் (Animation film) இது கணினியின் உதவியினால் உருவாக்கப்படுவதாகும்.
  • முதன் முதலில் திரைப்படத்தை/இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே
  • திரைப்படக்கருவியானது ஒளிப்படக்காட்டி,அச்சுப்பொறி,புகைப்படக்கருவி, ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும்.
  • கணினியின் உதவியால் புகைப்படங்களை திரைப்படமாக்கலாம்.
 
திரைப்படத்துறை தொடர்பான கேள்விகள்
  1. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது ?              கீசகவதம்
  2. தமிழ்நாட்டின் முதல் பேசும் திரைப்படம் எது ?                            காளிதாஸ்
  3. ஐந்து தமிழக முதலமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை யார்?மனோரமா
  4. தமிழின் முதல் சினிமாஸ்கோப் வகை திரைப்படம் எது ?  ராஜராஜசோழன்
  5. தமிழில் வெளியான முதல் திரைப்பட இதழ் எது ?  சினிமா உலகம்
  6. பாரதியாரின் பாடல்கள் முதன்முதலாக இடம்பெற்ற தமிழ் திரைப்படத்தின் பெயர் ?மேனகா
  7. தமிழ்நாட்டில் எந்த ஆண்டு முதல் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன ? 1968
  8. தமிழ்நாடு திரைப்பட பிரிவு அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?  1968
  9. சிறந்த திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் எது ? மறுபக்கம்
  10. சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் ? எம்.ஜி.ஆர்
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%
கையால் இயக்கப்படும் திரைப்படக்கருவி

 

  • 2 weeks later...
Posted

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவேநாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.

மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.


 https://www.facebook.com/subha.b.murugan

Posted
தம்புரா பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை நீங்கள் இங்கே காணலாம் -
 
Posted

வீரர்கள் மலையேற்றத்தின் போது முன்பக்கம் வளைந்தவாறு ஏறுவதும் இறங்குகையில் பின் பக்கம் சாய்ந்தவாறு இறங்குவதும் ஏன்?

நாம் நேராக நிற்கையில் (நிமிர்ந்து) புவி ஈர்ப்பு மையம் நமது இரு கால்களுக்கிடையே அமைந்து சரியான சமநிலையில் நிற்க முடிகிறது. சமதளத் தரையின் மீது நடக்கத் தொடங்கும்போது, புவி ஈர்ப்பு மையமும் நடக்கும் திசை நோக்கி நகர்கிறது.

இருப்பினும் அதன் சமநிலையில் மாற்றம் ஏதும் உண்டாவதில்லை. ஆனால், மலையேறும்போது புவி ஈர்ப்பு மையம் முன்னோக்கி இடம்பெயர்வதுடன் அதன் சமநிலையிலும் ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இதனைச் சமன்செய்யும் பொருட்டு உடலை முன்னே சாய்த்து மலையின் மீது ஏறுகின்றனர்.

இதேபோன்று மலை மேலிருந்து கீழே இறங்கும்போது புவி ஈர்ப்பு மையமும் பின்பக்கம் இடம்பெயர்கிறது. சமநிலையிலும் வேறுபாடு நிகழ்கிறது. சரியான சமநிலைக்குக் கொணரும் பொருட்டு, பின்னோக்கிச் சாய்ந்தவாறு கீழிறங்கி வரவேண்டியுள்ளது.

***

தீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்படி?

தீயணைப்புப் படையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உடையே பயன்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதை நாம் அறிவோம். இதே ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) கொண்டுதான் தீயணைப்பு வீரர்களின் உடை தயாரிக்கப்படுகிறது.

இவ்வுடையின் மேல் சில்வர் பூச்சுக் கொடுக்கப்படுவதால் தகிக்கும் வெப்பம், ‘தீ’ எதிரொளிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. இப்படியாக பெரும் தீக்குள் எந்தவிதத் தடுப்புமில்லாமல் சென்று ஆபத்தில் உள்ளோரைக் காக்க முடிகிறது.

தீ சூழும்போது ஆக்சிஜன் குறைந்து இணி2 அதிகரிப்பதால் மூச்சு விட சிரமம் ஏற்படும். இதனால் இம்மாதிரி உடைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டரும் தயாரிக்கப்படுகிறது.

***

மழை பெய்யும் போது சில வேளைகளில் மழைத்துளிகளோடு, ஐஸ் கட்டிகளும் விழுகின்றதே, ஏன்?

ஆங்கிலத்தில் ‘ஹெயில் ஸ்டோன்ஸ்’ என இந்த ஆலங்கட்டி மழையை அழைப்பார்கள். மழைத்துளிகள் ஈர நைப்பான மேக அடுக்குகளில் மேல் நோக்கி உந்தப்படும்போது, இப்படி ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.மழைத்துளிகளாக உருவாகி கீழே விழும் நிலையில் கீழே விழாமல் தொடர்ந்து, இவற்றை மேல் நோக்கித் தள்ளப்படும்போது, இத்துளிகளைச் சுற்றி புதிய ஈரம் (நைப்பு) மூடிக்கொள்ள இது கெட்டியாகி விடுகிறது.

பெரிய ஆலங்கட்டியை இரண்டாகப் பிளந்து ஆராய்ந்தால் பல அடுக்குகளைக் காணலாம். ஆலங்கட்டிகள் உருண்டையாகத்தான் இருக்கும். பனித்துகள் (ஸ்ரோஃப்ளேக்ஸ்) எப்போதும் அறுகோணப் படிகங்களாகக் காணப்படும். மாரிகாலத்தில் பனிமழை பெய்யும். ஆனால் ஆலங்கட்டி மழை வருஷத்தில் எந்தப் பருவத்திலும் பெய்யலாம்.

ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் ஓசை பாலத்தைக் கடக்கும்போது மாறுபடுவது ஏன்?

ஒரு ரயில் அதன் பாதையில் செல்லும்போது மூன்று காரணங்களால் ஓசை உண்டாகிறது. முதலாவது தண்டவாளத்துக்கும் ரயிலின் சக்கரத்துக்கும் உள்ள உராய்வு.

இரண்டாவது இரண்டு தண்டவாளத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் சக்கரத்தினால் ஏற்படும் விளைவு.தண்டவாளத்தில் உள்ள ஸ்வீப்பர் கட்டைகள் ஜல்லிக் கற்களின் மீது நன்கு பதிக்கப்பட்டிருப்பதால் அதன் அதிர்வுகள் குறைகின்றன. அதன் ஓசையும் பூமியினுள் உறிஞ்சப்பட்டு விடுகின்றன.

ஆனால் பாலத்தின் மீது ரயில் செல்லும்போது இந்த ஸ்வீப்பர் கட்டைகளும் அதைத் தாங்குகிற தூண்களும் பூமியின் மீது பதிக்கப்படாததால் அதன் அதிர்வுகள் அதிகமாகி ஓசையும் அதிகரிக்கிறது.

உள்ளீடற்ற தன்மையாலும் அதிர்வு ஓசை தரையிலும் நீரிலும் எதிரொலிக் கப்படுவதாலும் ஓசை இன்னும் அதிகரிக்கிறது.


Read more: http://www.penmai.com/forums/general-discussions/48481-a-350.html#ixzz3BqU2hzcK

  • 3 weeks later...
Posted

ம்மில் பலருக்கும் கணக்கு என்றாலே கசப்புதான் எண்களைக் கண்டாலே சற்று பயம். ஆனால் எண்களை நாம் விட்டு விட முடியாது அவை நமது வாழ்க்கையில் நம்மோடு ஒன்றினைந்து விட்டன. எண்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை வரவு-செலவு பார்க்கவும், எண்ணிச் சொல்லவும் சிலப் பொருட்களைக் குறிப்பிடவும் எண்கள் தேவையாகத்தான் இருக்கின்றன வேறு சிலருக்கோ எண்களோடு விளையாடுவதில் அலாதி இன்பம் எண்கள் அவர்களின் இணை பிரியாத் தோழர்கள்.

மொழியிலும் எண்களுக்கென்று தனி இடம் உண்டு ஆங்கிலத்தில் எண்கள் இடம்பெறும் பல சொற்கள் புதுப்புது பொருளைத் தருகின்றன அவை எண்களின் உண்மையான பொருளைக் குறிக்காமல் வேறு சில விசித்திரமான பொருளைத் தருகின்றன. உதாரணமாக Eleventh hour என்றால் மணி பதினொன்று என்று அர்த்தமல்ல. ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய கடைசி நிமிடம் என்பதையே அது குறிக்கும். அந்த நேரத்தில் தோன்றும், அவசரம், பரபரப்பு, கவலை எல்லாமே இந்தத் தொடரில் தொனிக்கிறது. இவை மேலெழுந்தவாரியான பொருளுக்கு அப்பால் ஒரு விரிவான, அழகான, சில சமயங்களில் நறுக்குத் தெறித்தார்ப் போன்ற பொருளைத் தருகின்றன. அத்தகைய சில சொற்களைப் பார்ப்போம்:

 
First Footer: புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்குள் நுழையும் முதல் நபர்
 
First Lady: ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி
 
First String Player: மிகச் சிறந்த விளையாட்டு வீரர்
 
First Water: மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள களங்கமற்று ஒளிவிடும் வைரம் அல்லது முத்து
 
Oner: நிபுணர், அற்புத மனிதர் அல்லது அற்புதப் பொருள்
 
One horse Town: சிறிய பழைய கிராமம்
 
One Liner: ஒரு ஜோக், வேடிக்கையான குறிப்பு
 
Look after number one: பிறரைப் பற்றி கவலைப் படாமல் தன்னைப் பற்றி மட்டுமே அக்கறைக் கொள்ளுதல்
 
Second Banana: உதவும் நிலையிலுள்ள ஒருவர்
 
Play Second Fiddle: முக்கியத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்
 
Second Sight: உள்ளுணர்வு, தீர்க்கத்தரிசனம்
 
Second String: மாற்று ஆள்
 
Second Wind: நீண்ட களைப்புக்குப் பின் ஏற்படும் புத்துணர்ச்சி
 
Two Faced: ஏமாற்றுகிற, பொய்யான
 
Two Way Street: வேறு இருவருடைய உதவியை நாட வேண்டிய நிலை
 
Third Degree: குற்றவாளி அல்லது சாட்சியிடமிருந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க போலீஸ் மேற்கொள்ளும் கடின முறை, சித்திரவதை
 
Thirds-man: மத்தியஸ்தம் செய்பவர்
 
Third World: ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள முன்னேறாத ஏழை நாடுகள்
 
Three ring circus: ஏகப்பட்ட வேலைகளால் ஏற்படும் குழப்பமான நிலை அல்லது இடம்
 
Three Line Whip: சட்டசபை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போது எப்படி வாக்களிக்க வேண்டுமென்று எழுத்து மூலம் வழங்கும் உத்தரவு
 
Fourth Dimension: காலம்
 
Fourth Estate: பத்திரிக்கை
 
Four Eyes: கண்ணாடி அணிந்தவர்
 
Four Flusher: பிறரை ஏமாற்றுபவர்
 
Four Letter Word: ஆபாச வார்த்தை
 
Fifth Column: சொந்த நாட்டிலிருந்தபடியே எதிரி நாட்டுக்காக இரகசியமாக செயல்படும் குழு
 
High Five: வெர்றியைக் கொண்டாட, வாழ்த்தைத் தெரிவிக்க தலைக்கு மேல் கைகளை உயர்த்தி அடுத்தவரின் உள்ளங்கையில் தட்டுதல்
 
To Take Five: சில நிமிடங்கள் ஓய்வெடுத்தல்
 
Sixth Sense: ஐம்பொறிகளுக்கு அப்பால் சில விஷயங்களை உணர்ந்து கொள்ளும் திறன், உள்ளுணர்வு
 
At Sixes and Sevens: ஒரே குழப்ப மயம்
 
In Seventh Heaven: பெரு மகிழ்ச்சியில் இருத்தல்
 
Behind the Eight ball: மிகவும் ஆபத்தான, இக்கட்டான நிலையில் இருத்தல்
 
On Cloud nine: மிகவும் மகிழ்ச்சியோடு இருத்தல்
 
Nine day's Wonder: சில தினங்களுக்கு மட்டுமே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி
 
Dressed (up) to the nines: மிகச் சிறந்த உடைகளை அணிதல்
 
Ten to one Chance: அனேகமாக நடக்காது
 
Be ten a penny: மிக மலிவானது, சாதரணமானது
 
Ten Strike: பெரிய அதிர்ஷ்டம்
 
Eleventh hour: கடைசி நிமிடம்
 
Talk nineteen to the Dozen: நிறுத்தமால் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது
 
Thirty Something: சுமார் 30 வயதுடைய நன்கு படித்த நல்ல நிலையிலுள்ளவர்
 
Forty Winks: உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம்
 
Go Fifty Fifty: பதிக்குப் பாதி பகிர்ந்து கொள்ளுதல்
 
64 Thousand dollar question: மிக மிகக் கடினமான கேள்வி
 
Look like a million dollars: மிகக் கவர்ச்சியாக காட்சி அளித்தல்
 
Last ditch Effort: இறுதி முயற்சி
 
Last straw that breaks the camel's back: பொறுமையின் எல்லை
 
Last Word the: மிக மிகச் சிறந்தது அதி நவீனமானது

 

  • 4 weeks later...
Posted

நல்லபல விடயங்கள் பார்க்கக்கிடைத்தது நன்றிகள்.

  • Like 1
  • 4 weeks later...
Posted

உலகால் அறியபடாத ரகசியங்கள்

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது

* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.

* மலைகளில் பெரியது இமயமலை.

* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.

* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.

* மிக வெப்பமான கோள் வெள்ளி.

* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.

* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.

* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.

* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.

* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.

கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்!

இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான்.

கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன.

இச்சீண்டல்களை தொடர்ந்து பெண் கடல் குதிரையின் உடல் சிலிர்த்து விடுகின்றது.

ஆண் கடல் குதிரையின் வயிற்றுப் பகுதியில் இனப் பெருக்க பை என்கிற உறுப்பு காணப்படுகின்றது.

ஆணின் இவ்வுறுப்புக்குள் பெண் கடல் குதிரை மிகவும் நுட்பமான முறையில் முட்டைகளை உட்செலுத்தி விடுகின்றது.

ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரித்து விடுகின்றது.

ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சுரக்கின்ற ஒரு வகை திரவம்தான் குட்டிகளுக்கு உணவு.

மூன்று வாரங்களின் பின் குட்டிகளை வெளித் தள்ளி விடுகின்றது ஆண் கடல் குதிரை.

ஒரு பெரிய படையை போல குட்டிகள் வெளியில் வந்து விடுகின்றன. பிரசவ வேதனை மிகவும் கொடுமையானது தான்.

 

 

  • Like 1
  • 1 month later...
Posted

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!

இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.

ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.

பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.

மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.

ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும்.

மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

ஜூன் : ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.

ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம்.

 

  • Like 1
  • 2 weeks later...
Posted

உலகின் விசித்திரங்கள் நிறைந்த சாலைகள்

 
 
 
சமதள சாலைகள், மலைப்பாங்கான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள் போன்றவை நமக்கு பரிட்சயம். ஆனால், உலகின் சில சாலைகள் வித்தியாசமும், விசித்திரமும் நிறைந்ததாக இருக்கின்றன. வண்டியை எடுத்தோமா, போக வேண்டிய இடத்துக்கு நேரத்துக்கு போய் சேர்ந்தோமா என்றிருக்கும் நமக்கு இந்த சாலைகள் நிச்சயம் புதுமையாகவே தோன்றும்.

அதிலும், படத்தில் காணும் சில சாலைகள் புதுமையான அனுபவத்தையும், சில சாலைகள் த்ரில்லை தரும் விதத்திலும் இருக்கின்றன. அதுபோன்று, ஆயுளில் ஒருமுறையாவது இந்த சாலையில் செல்ல வேண்டும் என்று தோன்ற வைக்கும் சில சாலைகளின் படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சாலையின் குறுக்கே விமான ஓடுதளம்

05-1360049476-winstonchurchillavenue.jpg

ரயில் வரும்போது கேட் போடுவது போல ஸ்பெயினில் இருக்கும் இந்த சாலையின் குறுக்கே விமான ஓடுதளம் இருக்கிறது. எனவே, விமானங்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் 10 நிமிடங்கள் கேட் போட்டு விடுகின்றனர். விமானம் ஒன்று கடக்கும்போது சிக்னலில் காத்து கிடக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

ஆளை விழுங்கும் சாலை

05-1360049538-the-lena-highway.jpg

மழை நேரத்தில் சாலை ஓரத்தில் சேறு இருந்தாலே நாம் வண்டியை முன்கூட்டியே நிறுத்தி கடப்பது வழக்கம். ஆனால், ரஷ்யாவில் ஓடும் லேனா ஆற்றின் கிழக்கு கரை ஓரத்தை ஒட்டி செல்லும் இந்த நெடுஞ்சாலையில் மழை பெய்து விட்டால் அவ்வளவுதான். அந்த சாலையில் ஆளை விழுங்கும் அளவுக்கு சேறாக மாறிவிடும். . 800 மைல் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் ஒரு முறை சென்று வருவதே நரகத்துக்கு சென்று திரும்புவது போலத்தான். ஆனால், குளிர்காலத்தில் வெப்பநிலை -40 டிகிரியாக இருக்கும்போது இந்த சாலையில் மண் கெட்டியாகி பயன்பாட்டுக்கு சிறந்ததாக மாறிவிடும். மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். திடீரென வந்த மழையால் சேறாகி கிடக்கும் சாலையில் தத்தளிக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

பாகிஸ்தான்-சீனாவின் உறவுப் பாலம்

05-1360049577-karakoramhighway.jpg

தரைவழியாக இரு நாடுகளையும் இணைக்க ஒரு வழியை தேடின பாகிஸ்தானும், சீனாவும். அப்போது அவர்களுக்கு கிடைத்த வழிதான் காரகோரம் தொடர்ச்சி மலைகள். உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த சர்வதேச சாலை இதுதான். 15,500 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த சாலையில் ஆக்சிஜன் அளவு மிக குறைவு என்பதுடன்,  பனி சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகம்.

குகைச் சாலை

05-1360049620-guoliangtunnel.jpg

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கிய குகை வழிச்சாலையைத்தான் படத்தில் காண்கிறீர்கள். 1977ம் ஆண்டு மலையை குடைந்து அருகிலுள்ள முக்கிய நகரத்துடன் தங்கள் கிராமத்தை இணைக்கும் வகையில் இந்த குகை வழிச்சாலையை அமைத்தனர். இந்த சாலையை அமைக்கும்போது ஏராளமான கிராமவாசிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உலகின் ஆபத்தான சாலைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

கட்டிடத்திற்குள் செல்லும் சாலை

05-1360049651-gatetower.jpg

ஜப்பானிலுள்ள ஒசாகா நகரத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் சாலையைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். ஒசாகா நகர் வளர்ச்சி குழுமம் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிட்டபோது வழியில் இந்த பிரம்மாண்ட கட்டிடம் இருந்தது. கேட் டவர் இந்த கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளர் மறுத்துவிட்டார். எனவே, கட்டிடத்தின் உள் பகுதி வழியாக சாலையை அமைத்துவிட்டனர்.

கடலுக்குள் புகுந்த பாலம்

05-1360049681-chesapeakebaybridge.jpg

தரையில் அமைக்கப்பட்ட சாலைகளை இதுவரை பார்த்தீர்கள். இப்போது அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் இருக்கும் கடல்வழிப் பாலத்தைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா. 12 மைல் நீளத்திற்கு கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் இடையில் 2 மைல் நீளம் கடலுக்குள் சுரங்கம் அமைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் தெரியுமா?. கடலில் பாலம் கட்டுவதற்கு அமெரிக்க கடற்படை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பாலத்தை அமைத்தால் தங்களது கடற்படை கப்பல்கள் செல்ல இயலாது என முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து, 2 மைல் நீளத்திற்கு கடலுக்குள் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட்டது.

பாம்பன் பாலம்

05-1360049710-pambanbridge.jpg

சரி, வரிசையாக சொன்ன எல்லா சாலைகளும் அயல்நாடுகளில் இருப்பதால் செல்வது பெரும்பாலானோருக்கு சாத்தியம் இல்லைதான். நம்மூரில் இதுபோன்றே வித்தியாசமான பாலங்கள் மற்றும் த்ரில் நிறைந்த சாலைகள் இல்லையா என்று கேட்பது புரிகிறது. ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில் பாலமும், அதையொட்டி வாகனங்கள் செல்வதற்கான பிரம்மாண்ட பாலமும் நம்மூரின் ஒண்டர்தான். ஆம், பாக் நீரிணையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் 2.3 கிமீ நீளம் கொண்டது. மொத்தம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ரயில் பாலம் 1914ல் திறக்கப்பட்டது. உலகிலேயே அதிக துரு பிடிக்கும் இரண்டாமிடமான ராமேஸ்வரத்த்தில் 100 ஆண்டுகளை நெருங்கியும் இந்தரயில் பாலம் காலத்தை வென்று நிற்கிறது. இதற்கு அருகே அமைந்திருக்கும் தரைவழி இணைப்புப் பாலம் 1988ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கப்பட்டது.

மணாலி டூ லே

05-1360049768-manali-to-leh.jpg

உலகின் மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றுதான் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை. சவால் நிறைந்த பயண விரும்பிகளுக்கு ஏற்ற இந்த சாலை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மத்தியில் இருந்து அக்டோபர் மாதம் வரை குறிப்பிட்ட காலம் மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது இந்த சாலை.

கிரேட் ரான் கட்ச்

05-1360049812-great-rann-of-kutch.jpg

முடிவில்லா தொலைவுடன் வெள்ளை மணலில் பரந்து விரிந்து கிடக்கும் கிரேட் ரான் கட்ச் பாலைவனத்தில் பைக் ரைடிங் செல்லும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தோலாவிராவிற்கு செல்லும்சாலையை பிடித்தால் புதுமையான அதேசமயம் திரில்லான அனுபவத்துக்கு கியாரண்டி. குறிப்பிட்ட தூரம் சென்று 360 கோணத்தில் பார்த்தால் வெறும் வெள்ளை மணலே தெரியும். திக்கு தெரியா தேசத்தில் ஓர் பயணம் என்ற தலைப்பில் ஒரு அனுபவத் தொடரை எழுதலாம். டிசம்பர்-ஜனவரியில் செல்வது சிறந்தது.

செலா கணவாய்

05-1360050345-arunachal-sela-pass.jpg

அருணாச்சல பிரதேச மாநிலம், செலா கணவாய் சாலை உலகின் இரண்டாவது மிகப்பெரிய உயரமான சாலை. கடல் மட்டத்திலிருந்து 13,800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சாலை தவாங் பகுதியை நாட்டின் பிற பகுதியுடன் இணைக்கிறது.

வயநாடு-ஊட்டி

05-1360052116-wayanad-to-ooty.jpg

பச்சை கம்பளம் விரிக்கப்பட்ட பச்சை பசேலன இருக்கும் மலைகளுக்கு இடையில் பதுங்கி செல்லும்  வயநாடு-ஊட்டி சாலையில் டிரைவிங் செய்வது ஒரு த்ரில்லான அனுபவமாக இருக்கும். அக்டோபர் முதல் மே வரையிலான காலத்தில் செல்வது சிறந்தது.

http://siruva.blogspot.ca/2014/11/blog-post_39.html

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொதுவாக இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டபின் அதை திரும்பிப் பெற முடியாது. ஆயினும் கட்சியின் நன்மை கருதி விதிவிலக்கு வழங்கலாமா, அதற்கான தேவை என்ன என்பதை அறிய ஏனைய அங்கத்தவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் பெறமுடியும். இப்படியான தருணங்களில் விடயத்தை கையாள்வது எப்படி என்பதை யாப்புகளில் விபரமாக எதுவும் குறித்து வைப்பதுமில்லை. ஒருவர் தனது பதவியை அல்லது வேலையை இராஜினாமா செய்யும் போது   அதற்கு எவ்வளவு காலத்துக்கு முன்னர் முன் அறிவித்தல் வழங்கியிருக்க வேண்டும் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.  வேறொரு கோணத்தில் இருந்து இந்த இராஜினமா இழுபறியை அவதானித்தால்  மாவையின் தள்ளாத வயதும் இராஜினாமா கடிதம் வழங்கிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும் அவர் அரசியலில் இருந்து இளைப்பாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மாவை தொடர்ந்து தலைவர் இஸ்தானத்தில் இருந்துகொண்டு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன விதத்தில் ஆக்கபூர்வமாக சேவை செய்ய முடியும் என்பதை கட்சியின் மத்தியகுழு மீள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.  தேவையேற்படின் புதிய தலைவர் தெரிவொன்றை நடத்தி அதில் அவரையும் போட்டியிடும்படி கேட்கலாம்.
    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.