Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • Replies 516
  • Views 131.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஊரில் விவசாயம் செய்யும்/செய்ய விரும்பும் (பாலபத்ரஓணாண்டி)நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.....!  👍 பி.கு: தோட்டத்தில் நின்று சுவையான தேநீர் அருந்தும் போது ஒரு கணம் சுவியையும் நினைக்கவும்.....!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

  • தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் :  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ::::::::::: வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலு

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

46831374_772175329792767_302090472698098

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு ஒரு வயது வரையறை இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரை ஏறுவது ஏன்?

நமது செரிமானக் குழாயின் தொடக்கம், தொண்டை. தொண்டையில் உணவுப் பாதை, காற்றுப் பாதை என்று இரண்டு பாதைகள் உள்ளன. மூக்கு வழியாக வருகிறது காற்றுப் பாதை. வாய் வழியாக வருகிறது உணவுப் பாதை.தொண்டையின் மையப் பகுதியில் இந்த இரண்டு பாதைகளும் சேரும் இடத்தில் குரல்வளை (Larynx) உள்ளது. இது மூச்சுக் குழாயின் தொடக்கம். மூச்சுக் குழாய்க்குப் பின்புறம் உணவுக் குழாய் உள்ளது. குரல்வளையின் மேல் துவாரத்துக்கு ‘கிளாட்டிஸ்’ (Glottis) என்று பெயர். அதை மூடியிருக்கும் தசை ‘எபிகிளாட்டிஸ்’ (Epiglottis).

நாம் உணவை விழுங்கும்போது, எபிகிளாட்டிஸ் என்ற மூடி கிளாட்டிஸை மூடிக்கொள்ள, மூச்சுக் குழாயும் மூடிக்கொள்கிறது. இதனால் உணவுக் கவளம் உணவுக் குழாய்க்குள் போகிறது. சுவாசிக்கும்போது எபிகிளாட்டிஸ் திறந்துகொள்ள, கிளாட்டிஸ் வழியாக மூச்சுக் குழாய்க்குள்காற்று போகிறது. இப்படிச் சாதாரணமாகக் காற்றும், உணவும் ‘சண்டைபோடாமல்’ ஒவ்வொன்றும் ‘தனி வழி’களில் செல்கின்றன. இதனால் பிரச்சினை ஏற்படுவது இல்லை.சில காரணங்களால், குரல்வளை சரியாக மூடப்படவில்லை என்றால், உணவுக் குழாய்க்குள் செல்ல வேண்டிய உணவுக் கவளம் தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிடும். அப்போது மூச்சுக் குழாய் தடைபடும். நம்மால் மூச்சுவிட முடியாது.இப்படித் தடை உண்டாக்கிய பொருளை வெளியேற்ற, நம் உடலில் இயற்கையாக இருக்கிற மெக்கானிஸம், இருமல். இருமும்போது, நுரையீரலில் இருந்து கிளம்பும் அழுத்தம் நிறைந்த காற்றால் மூச்சுக்குழாய்க்குள் சென்ற உணவு பலமாக வெளியே உந்தி தள்ளப்படும். இதைத்தான் ‘புரையேறி விட்டது’ என்று சொல்கிறோம்.

என்ன காரணம் ?

அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, உணவு உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, வேகவேகமாகத் தண்ணீர் குடிப்பது, தண்ணீர் குடித்துக்கொண்டே உணவைச் சாப்பிடுவது, உணவுக் குழாய்ப் புற்றுநோய், தொண்டை நரம்பு வாதம் போன்ற காரணங்களால் புரையேறும்.குழந்தைகளின் உணவுக் குழாயும் சுவாசக் குழாயும் மிகவும் குறுகிய விட்டம் கொண்டதாக இருப்பதால் பட்டாணி, வேர்க்கடலை, சுண்டல் போன்ற சிறிய உணவுப் பொருள்கள் கூடச் சுவாசக் குழாயை மிக எளிதாக அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவற்றை உடனடியாக வெளியேற்றாவிட்டால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு உயிருக்கே ஆபத்து உண்டாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்ட நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கிக் குனியச் சொல்லுங்கள். அவரது இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள். புரையேறிய பொருள் வெளியில் வந்துவிடும்.

# இதில் அந்தப் பொருள் வெளியேறவில்லையா? அந்த நபரைக் குனியச் சொல்லுங்கள். அவரது பின்புறம் நீங்கள் நின்று கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும், மேல்புறமாகவும், வலுவாக அழுத்துங்கள். இப்படி முதுகில் தட்டுவதையும், வயிற்றில் அழுத்தம் கொடுப்பதையும் மாறி மாறிச் செய்யுங்கள். உணவுப் பொருள் வெளியேறிவிடும்.

# அப்படியும் உணவுப் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக அவரைமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு ‘பிராங்காஸ்கோப்’ கருவி மூலம் உணவுப்பொருளை மருத்துவர் வெளியே எடுத்துவிடுவார்.

https://sciencemgv.wordpress.com/2014/10/09/புரை-ஏறுவது-ஏன்/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழக முன்னோர்களின் திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. ஊற்றிய நீர் எங்கு சென்றது என்பது புரியாத புதிராக உள்ளது. இது போன்ற பல கலைகள் இன்று அழிந்து விட்டது வருத்தம் அளிக்கிறது.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு

 

 

30 minutes ago, nunavilan said:

தமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு

இந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறேன். கரிபியன் தீவுகளை விட அழகானது.
இங்குள்ள தமிழர்கள் பலருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் கற்க ஆவலாக உள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, இணையவன் said:

இந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறேன். கரிபியன் தீவுகளை விட அழகானது.
இங்குள்ள தமிழர்கள் பலருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் கற்க ஆவலாக உள்ளனர்.

என்ரை பூட்டப்பிள்ளையள் இன்னுமொரு 50 வருசத்தாலை சிறிலங்காவுக்கு போனால் உதே வசனத்தைத்தான் சொல்லுமெண்டு நினைக்கிறன். Sad

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ரை பூட்டப்பிள்ளையள் இன்னுமொரு 50 வருசத்தாலை சிறிலங்காவுக்கு போனால் உதே வசனத்தைத்தான் சொல்லுமெண்டு நினைக்கிறன். Sad

ஏன் பூட்டப்பிள்ளை வரை காத்திருப்பான்?
ஏற்கனவே இந்த நிலைமை வந்தாச்சு என்பதை வேதனையுடன் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

தமிழர்கள்திகம் வாழும் அதிசய தீவு

ஒரு காலத்தில் வெளிநாட்டவர் வந்து அழைத்துப் போனார்கள்.
இப்போது நாமாகவே இடம் பெயருகிறோம்.
இணைப்புக்கு நன்றி நுணா.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

இந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறேன். கரிபியன் தீவுகளை விட அழகானது.
இங்குள்ள தமிழர்கள் பலருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் கற்க ஆவலாக உள்ளனர்.

 

இது பிரான்ஸிற்கு சொந்தமான‌ ஒரு தீவுதானே இணையவன் ஆகவே இந்த குடிமக்களும் பிரான்ஸ் குடிமக்களாக நடத்தப்படுகின்றார்கள். இப்பொழுது சிங்களவர்கள் வள்ளங்களில் இங்குதான் சட்ட விரோதமாக செல்கின்றார்கள்.

இவர்கள் பொரும்பாலும் இந்தியாவின் பாண்டிச்சேரி  மாநிலத்தை செர்ந்தவர்கள். இது மொறிசியஸ் தீவுக்கு அண்மையில் உள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம் மண்ணில் நஞ்சை விதைத்த இரசாயன உரம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

1841 தை  மாதம் 7´ம் திகதி... யாழ்ப்பாணத்தில்,  உதயதாரகை   பத்திரிகை  தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப் பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: mountain, outdoor and nature

 

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன் 
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம் 
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை ( manas hussain )

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா

முதலில் பாடசாலை நாட்களில் படத்த ஞாபகம்.நீண்ட காலத்தின் பின் இப்போது படிக்கிறேன்.இணைப்புக்கு நன்றி.

எல்லாமே சரியோபிழையோ இந்த 40வது மட்டும் ஏனோ குடையுது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் பாடசாலை நாட்களில் படத்த ஞாபகம்.நீண்ட காலத்தின் பின் இப்போது படிக்கிறேன்.இணைப்புக்கு நன்றி.

எல்லாமே சரியோபிழையோ இந்த 40வது மட்டும் ஏனோ குடையுது.

ஆம்... ஈழப்பிரியன். அதை என்னாலும்   ஏற்றுக் கொள்ளவே முடியாமல் உள்ளது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மனித உடலைப் பற்றிய, பொது அறிவு.

No photo description available.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: flower and text

பேசும் முறைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

ஒரு யானை, தன்  வாழ்நாளில்  18 லட்சத்து 25 ஆயிரம் மரம் வளர காரணமாகின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

காப்பர் பாத்திர தண்ணீர் ஆபத்தானது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.