Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமது நபியின் காட்டூன்கள்!

Featured Replies

டென்மார்க் பத்திரிகையில் முகமது நபியின் காட்டூன்கள் வெளியானதும், அதைத் தொடர்ந்து அந்த பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராகவும், டென்மார்க் நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராகவும் உலககலாவிய ரீதியில் முஸ்லீம் உலகில் எழுந்த எதிர்ப்பும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். பின்னர் அது அந்த காட்டூனை வரைந்த ஒவியரின் தலைக்கு முஸ்லீம் மதத்தலைவர்களால் விலைகுறிக்கப்பட்டு, இன்று அந்த விலைக்காக தலையை கொய்ய வந்தவர்கள் பிடிபட்டது வரை வந்திருக்கிறது.

இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த காட்டூன்களையும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடியதில் கிடைத்தவையே இவை. அதில் அப்படி நான் எதிர்பார்த்தளவில் பாரதூமாக எதுவும் எனது சிற்றறிவுக்கு தென்படவில்லை! பல மரணங்களையும், மரண தண்டனை அறிவிப்புகளையும் ஏற்படுத்தும் அளவுக்கு உங்களுக்கு எதாவது தென்படுகின்றதா?

இதுவே எனக்கு பிறப்பினால் திணிக்கப்பட்ட இந்து மதக்கடவுளர்களான சிவனையோ அல்லது இராமனையோ இப்படி ஒருவர் வரைந்தால் நான் ஏன் கோபப்பட வேண்டும்? வரைந்தவரின் தலையெடுக்கும் அளவிற்கு எனக்கு ஏன் மதம் பிடிக்கவேண்டும்?

அன்பை போதிப்பதாக கூறிக்கொண்டு புறப்பட்ட அனைத்து மதங்களும் தோல்வியடைந்து, இன்று மானிடவர்க்கத்தின் எதிரியாக உருவெடுத்துள்ளனவா?

MuslimCartoonAnger12.gif

Muhammad standing on a cloud, greeting dead suicide bombers with "Stop Stop vi er løbet tør for Jomfruer!" ("Stop, stop, we have run out of virgins!"), an allusion to the promised reward to martyrs. Not sure how offensive this is to Muslims but Westerners are hard pressed to find this one offensive (and even consider it the funniest of the 12 cartoons).

MuslimCartoonAnger1.gif

Journalist Kåre Bluitgen, wearing a turban with the proverbial orange dropping into it, with the inscription "Publicity stunt". In his hand is a child's stick drawing of Muhammad. The proverb "an orange in the turban" is a Danish expression meaning "a stroke of luck": here, the added publicity for the book.

MuslimCartoonAnger2.gif

Muhammad with a bomb in his turban, with a lit fuse and the Islamic creed written on the bomb. This drawing is considered the most controversial of the twelve by Muslims and invokes the most emotions in Westerners.

MuslimCartoonAnger3.gif

Two angry Muslims charge forward with sabres and bombs, while Muhammad addresses them with: "Rolig, venner, når alt kommer til alt er det jo bare en tegning lavet af en vantro sønderjyde" (loosely, "Relax guys, it's just a drawing made by some infidel South Jutlander". South Jutland as reference would, for a Dane, connote the feeling of something like the middle of nowhere).

MuslimCartoonAnger4.gif

An abstract drawing of crescent moons and Stars of David, and a poem on oppression of women "Profet! Med kuk og knald i låget som holder kvinder under åget!". In English the poem could be read as: "Prophet, you crazy bloke! Keeping women under yoke"

MuslimCartoonAnger5.gif

A police line-up of seven people wearing turbans, with the witness saying: "Hm... jeg kan ikke lige genkende ham" ("Hm... I can't really recognise him"). Not all people in the line-up are immediately identifiable. They are: (1) A generic Hippie, (2) politician Pia Kjærsgaard, (3) possibly Jesus, (4) possibly Buddha, (5) possibly Muhammad, (6) possibly Moses, and (7) journalist Kåre Bluitgen, carrying a sign saying: "Kåres PR, ring og få et tilbud" ("Kåre's public relations, call and get an offer").

MuslimCartoonAnger6.gif

A nervous caricaturist, shakily drawing Muhammad while looking over his shoulder.

MuslimCartoonAnger7.gif

An Arab-looking boy in front of a blackboard, pointing to the Farsi chalkings, which translate into "The editorial team of Jyllands-Posten is a bunch of reactionary provocateurs". The boy is labelled "Mohammed, Valby school, 7.A", implying that this is a second-generation immigrant to Denmark rather than the founder of Islam. On his shirt is written "Fremtiden" (the future).

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

மிகுதி....

MuslimCartoonAnger8.gif

Drawing shows Muhammad prepared for battle, with a short sabre in one hand and a black bar censoring his eyes. He is flanked by two women in niqaabs, having only their wide open eyes visible.

MuslimCartoonAnger9.gif

The Islamic star and crescent partially symbolizing the face of Muhammad; his right eye is the star, the crescent surrounds his beard and face.

MuslimCartoonAnger10.gif

Muhammad standing in a gentle pose with a halo in the shape of a crescent moon. The middle part of the crescent is obscured, revealing only the edges which resemble horns.

MuslimCartoonAnger11.gif

Muhammad as a simple wanderer, in the desert, at sunset. There is a donkey in the background. We're not at all clear on the meaning of this one...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காட்டூன்களையும் அதுபற்றிய விமர்சனங்களையும் யாழ் இணையத்தில் போடுவது மிகவும் பாரதூரமான வி;;டயமாகும். வீணாகப் பகையை உலகமட்டத்தில் தேடிக்கொள்ளாதீர்கள். பெருமானார் முகம்மது நபி சல் அவர்களின் உருவத்தை எக்காரணங்கொண்டும் யாரும் எவ்விதத்திலும் வரையக்கூடாது அது உருவ வழிபாட்டுக்கு வழியமைத்துக் கொடுத்துவிடும் என்பது பெருமானார் இட்ட கட்டளை. ஆகவே அவரின் சொல்லுக்கு மதிப்பளித்து இந்த விடயத்தைத் தவிர்த்துக்கோள்ளுமாறு பணிவோடு வேண்டுகிறேன். நான் ஒரு இந்து

  • தொடங்கியவர்

இந்தக் காட்டூன்களையும் அதுபற்றிய விமர்சனங்களையும் யாழ் இணையத்தில் போடுவது மிகவும் பாரதூரமான விடயமாகும். வீணாகப் பகையை உலகமட்டத்தில் தேடிக்கொள்ளாதீர்கள். பெருமானார் முகம்மது நபி சல் அவர்களின் உருவத்தை எக்காரணங்கொண்டும் யாரும் எவ்விதத்திலும் வரையக்கூடாது அது உருவ வழிபாட்டுக்கு வழியமைத்துக் கொடுத்துவிடும் என்பது பெருமானார் இட்ட கட்டளை. ஆகவே அவரின் சொல்லுக்கு மதிப்பளித்து இந்த விடயத்தைத் தவிர்த்துக்கோள்ளுமாறு பணிவோடு வேண்டுகிறேன். நான் ஒரு இந்து

நன்றாகச் சொன்னீர்கள்!

நீங்கள் துணிந்து இந்தப்பகுதியில் கருத்தெழுதியதே பெரிய விடையம்!........ அதற்கு முதலில் நன்றிகள்!

அவ்வாறே நாங்கள் ஏன் புத்தபெருமானின் உருவ வழிபாட்டை மதித்து பெளத்த நாடான சிறிலங்கா முழுவதும் சிலைகள் வைப்பதை அனுசரித்து பகையைத் தவிர்த்து பாரதூரமான யுத்தத்தை தவிர்க்கலாமே!

மதத்தின் பெயரால் அடுத்தவரின் உரிமைகளான கருத்துச் சுதந்திரம், உயிர்வாழும் சுதந்திரம் போன்றவற்றை பறிப்பதை துணிந்து கண்டிப்போம்! அது குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான இந்துக்களின் வன்முறை என்றாலும் கண்டிப்போம்!

புதிய உலகமயமாக்கலின் கீழ் சிறிலங்கா அரசாங்கத்திற்கு பயந்து தமிழரின் அவலக்குரலை செவிமடுக்கத் தயங்கும் அரசாங்கங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா மதத்திலும் இந்த மாதிரியான தீவிர வெறியர்கள் உண்டு. உதாரணத்திற்கு சமீபத்தில் கலைஞர் அவர்களுக்கே இந்தமாதிரி விலை வைத்தார்கள் சில இராம பக்தர்கள்.

  • தொடங்கியவர்

Murder plot against Danish cartoonist

Early Tuesday morning, Danish police arrested three men with a Muslim background suspected of conspiring to kill Kurt Westergaard, a Danish cartoonist with Morgenavisen Jyllands-Posten.

Two of those arrested are Tunisian citizens, one a Danish citizen, according to the Danish Security and Intelligence Service, which has kept the group under surveillance for months.

The 40-year old Danish citizen is of Moroccan origin. Upon his arrest, he was charged with attempted violation of section 114 of the Danish anti-terrorism act. On Tuesday evening, after being interrogated, he was discharged.

Pursuant to the regulations of the Danish aliens’ act, the two Moroccan citizens are held in custody in preparation for expulsion from Denmark. On Thursday 14th Feb., the two Tunisian citizens will be brought before a judge for the latter to determine whether detention regulations have been observed. The Danish Ministry of Refugee, Immigration and Integration Affairs has sanctioned their expulsion from Denmark.

Mohammed with a bomb

Kurt Westergaard is one of the 12 cartoonists who on 30 September 2005 published cartoons of Muslim prophet Mohammed.

The cartoons and an explanatory article led, as is well known, to the so-called Mohammed crisis involving violent demonstrations, the boycott of Danish goods and the burning of Danish embassies.

Kurt Westergaard’s cartoon depicting the prophet wearing a bomb turban with a lit fuse attracted particular attention. What the cartoonist wanted to say with his cartoon was that many people exploit the prophet to legitimize terror. However, the cartoon was widely seen as a depiction of the prophet as a terrorist.

Editor-in-Chief deeply worried

Statement by Carsten Juste, Editor-in-Chief of Morgenavisen Jyllands-Posten, overall content responsibility under Danish media laws:

"Deeply worried and for several months, the management of Morgenavisen Jyllands-Posten have followed the discreet efforts by the Danish Security and Intelligence Service to protect Kurt Westergaard from concrete murder threats. The arrests have hopefully thwarted the murder plans. We sympathize with Kurt Westergaard and his family who are forced to live under unreasonable pressure. It is appalling that as a reward a man who to the best of his ability goes about his work and carries it out in accordance with Danish law, the Danish media ethics code and Danish media traditions was demonized and had his life threatened. We are grateful to the Danish authorities for protecting our colleague competently and professionally."

Cartoonist: I fear for my life

Statement by cartoonist Kurt Westergaard:

"Of course I fear for my life after the Danish Security and Intelligence Service informed me of the concrete plans of certain people to kill me. However, I have turned fear into anger and indignation. It has made me angry that a perfectly normal everyday activity which I used to do by the thousand was abused to set off such madness. I have attended to my work and I still do. I could not possibly know for how long I have to live under police protection; I think, however, that the impact of the insane response to my cartoon will last for the rest of my life. It is sad indeed, but it has become a fact of my life. "

JP

http://jp.dk/uknews/article1263133.ece

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்
20060203BritishMuslims-ps.jpg

இங்கே என்னால் எழுதப்பட்ட கருத்தை இணையவன் நீக்கியுள்ளார். அதற்குரிய சரியான விளக்கத்தை அவர் தருவாரா??? யாழ்க்களம் மதங்களை கேவலப்படுத்துகின்றதா??

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

திரு சாணக்கியனின் கருத்துக்கான பதில்:

நீங்கள் எழுதியது போல் பௌத்தம் உருவ வழிபாட்டை ஆதரிக்கவில்லை. அது இன்று உருமாறிப்போயிருக்கிறது. புத்தர் தன்னை வணங்குமாறு கூறவேயில்லை. ஆனால் நாம் புத்தரை வணங்குகிறோம். ஏனது வீட்டிலும் பூஜையறையில் நான் புத்தரை வைத்திருக்க கிறேன். இலங்கையில் சமாதானம் ஏற்பட்டு தமிழரின் தாயக உரிமைகள் நிலைநாட்டப்படுமாயின் சந்திகளிலென்ன நமது கோயில்களிலுங்கூட தமிழர்கள் புத்தரை வைத்து வழிபடுவார்கள். அதில் சந்தேகமேயில்லை. இனவெறிபிடித்த ஆக்கிரமிப்பு நோக்கங்கொண்ட புத்த குருமார்களால் தமது ஆதிக்கத்தின் குறியீடாகவே தற்போது புத்த சிலைகள் தமிழரின் பிரதேசங்களில் வைக்கப்படுகின்றன. அதனாலேயே அந்த முற்றும் துறந்த மகானின்மீது குரோதம் எமக்கு ஏற்படுகின்றது.

பெருமானார் முகம்மது நபியின் படமோ சிலையோ பாவனையிலிருந்திருந்தால் அதனையும் நான் எனது பூஜையறையில் வைத்துத்தானிருப்பேன். பல தமிழர்களும் அதைச்செய்திருப்பார்கள். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய உருவ வழிபாட்டைச் செய்வது ஹறாம் என்று தடுக்கப்பட்டுள்ளது. அது பாவமான காரியம்.

பெருமானார் முகம்மது நபியவர்கள் ஒரு மரத்தின் கீழிருந்து தனது போதனையை ஒரு தடவை செய்தார். புpறகு சில நாட்களில் மக்கள் அந்த மரத்தைச் சுற்றி வந்து வணங்கத் தொடங்கிவிட்டார்கள். உடனே நபி பெருமானார் அந்த மரத்தை அடியோடு பிடுங்கி அந்த இடத்தின் சுவடே இல்லாமல் ஆக்கினார். அந்த வகையில் அவர் விக்கிரக வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் தன்னைப் பின்பற்றுவோர் செய்யக் கூடாது என்று மிகக் கண்டிப்பாக உத்தரவு போட்டார். அதனால் தனது உருவத்தை வரைவது தண்டனைக்குரிய குற்றமென்று உத்தரவிட்டார். அதனாலேயே முஸ்லீம்கள் அவரிட்ட கட்டளையை மிகவம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கின்றனர். இதனை மதியாது நபி பெருமானின் படத்;தை அதுவும் காட்டூனில் அஷ்ட கோணலாக வரைவது இஸ்லாத்தை நிந்திக்கும் குற்றமாகும். ஒருவரின் மதத்தை, நம்பிக்கையை இழிவுபடுத்துவது பாரிய தவறாகும். உங்கள் மனநிலை எப்படியோ நானறியேன். ஆனால் நாகரீக உலகில் மற்றவர்களின் உணர்வகளுக்கு மதிப்பளிப்பது மிகவும் அவசியமானது. உலகின் ஆதரவைத் தேடும் நாம் எமது இனத்திலேயே இஸ்லாமிய சகோதரர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செய்து அவர்களின் மனவெறுப்பைச் சம்பாதிக்கலாமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

  • தொடங்கியவர்

வசம்பு அவர்களே,

சரி நான் கந்தசாமி என்ற பெயரை வைத்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?

இஸ்லாமிய மதத்தை இந்தக் அற்ப காட்டூன்கள் கேவலப்படுத்திவிடுமா? அல்லது அது தானாகவே கேவலப்படுகிறதா?

இந்துத்துவத்தை பற்றி அக்குவேறு ஆணிவேறாக ஆராயப்படுகிறது! இஸ்லாமியரைப்பற்றி கதைப்பது பாரதுரமானது. அங்கு நடக்கும் அநீதிகளை கண்டுகொள்ளாதீர்கள் என்றா சொல்லவருகீறீர்கள்?

எப்போதோ நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு மரணதண்டனை விதிக்க வந்தவர்கள் கடந்தவாரம் கைது செய்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

ஒழுக்கமில்லாத குலத்தில் பிறந்தாலும் ஒழுக்கமுள்ளவனாக விழங்கமுடியும். ஏனெனில் நான் மனத்தால் இந்துவல்ல!

களவிதிகளை மீறாதவகையில் மட்டுறுத்தினர் கைவைக்கத்தேவையில்லை! நீங்கள் உங்கள் கருத்தின் ஆழத்தை மட்டும் நம்பி கருத்தாடுங்கள்!

  • தொடங்கியவர்

திரு கரு அவர்களே,

உங்கள் கருத்திற்கு நன்றி!

நீங்கள் எழுதியது போல் பௌத்தம் உருவ வழிபாட்டை ஆதரிக்கவில்லை. அது இன்று உருமாறிப்போயிருக்கிறது. புத்தர் தன்னை வணங்குமாறு கூறவேயில்லை. ஆனால் நாம் புத்தரை வணங்குகிறோம். ஏனது வீட்டிலும் பூஜையறையில் நான் புத்தரை வைத்திருக்க கிறேன். இலங்கையில் சமாதானம் ஏற்பட்டு தமிழரின் தாயக உரிமைகள் நிலைநாட்டப்படுமாயின் சந்திகளிலென்ன நமது கோயில்களிலுங்கூட தமிழர்கள் புத்தரை வைத்து வழிபடுவார்கள். அதில் சந்தேகமேயில்லை. இனவெறிபிடித்த ஆக்கிரமிப்பு நோக்கங்கொண்ட புத்த குருமார்களால் தமது ஆதிக்கத்தின் குறியீடாகவே தற்போது புத்த சிலைகள் தமிழரின் பிரதேசங்களில் வைக்கப்படுகின்றன. அதனாலேயே அந்த முற்றும் துறந்த மகானின்மீது குரோதம் எமக்கு ஏற்படுகின்றது.

ஆக மொத்ததில் நீங்கள் குறிப்பிட்ட பெளத்த மதம் என்பது இலங்கையில் தற்போது நடைமுறையில் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் நான் பெளத்தமதம் அல்லது பெளத்தன் என்று சிந்திக்கத் தலைப்படும் போது நான் கண்ட சந்தித்த பெளத்தனை அடிப்படையாக வைத்துத்தான் சிந்திப்பேன் கருத்தெழுதுவேன். புத்தர் என்ன சொன்னார் என்பது இன்று யாருக்கும் தெரியாது. அதில் நம்மிருவருக்கும் உடன்பாடு உள்ளது!

பெருமானார் முகம்மது நபியின் படமோ சிலையோ பாவனையிலிருந்திருந்தால் அதனையும் நான் எனது பூஜையறையில் வைத்துத்தானிருப்பேன். பல தமிழர்களும் அதைச்செய்திருப்பார்கள். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய உருவ வழிபாட்டைச் செய்வது ஹறாம் என்று தடுக்கப்பட்டுள்ளது. அது பாவமான காரியம்.

பெருமானார் முகம்மது நபியவர்கள் ஒரு மரத்தின் கீழிருந்து தனது போதனையை ஒரு தடவை செய்தார். பிறகு சில நாட்களில் மக்கள் அந்த மரத்தைச் சுற்றி வந்து வணங்கத் தொடங்கிவிட்டார்கள். உடனே நபி பெருமானார் அந்த மரத்தை அடியோடு பிடுங்கி அந்த இடத்தின் சுவடே இல்லாமல் ஆக்கினார். அந்த வகையில் அவர் விக்கிரக வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் தன்னைப் பின்பற்றுவோர் செய்யக் கூடாது என்று மிகக் கண்டிப்பாக உத்தரவு போட்டார். அதனால் தனது உருவத்தை வரைவது தண்டனைக்குரிய குற்றமென்று உத்தரவிட்டார். அதனாலேயே முஸ்லீம்கள் அவரிட்ட கட்டளையை மிகவம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கின்றனர். இதனை மதியாது நபி பெருமானின் படத்;தை அதுவும் காட்டூனில் அஷ்ட கோணலாக வரைவது இஸ்லாத்தை நிந்திக்கும் குற்றமாகும். ஒருவரின் மதத்தை, நம்பிக்கையை இழிவுபடுத்துவது பாரிய தவறாகும். உங்கள் மனநிலை எப்படியோ நானறியேன். ஆனால் நாகரீக உலகில் மற்றவர்களின் உணர்வகளுக்கு மதிப்பளிப்பது மிகவும் அவசியமானது.

அதுவே ஏன் முஸ்லீம் என்றதும் பின்வாங்குகிறீர்கள்! நபிகளின் போதனையை ஏற்றவர் அதன்படி நடப்பது அவரது சுதந்திரம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதைப் போலவே அதனை ஏற்காதவர் அதில் தவறிருப்பதாக கூறுவதும் சரியானதே. அவரை நீ வரைக் கூடாது, வரைந்தால் உனக்கு மரணதண்டனை என்பது எத்துனை நாகரீகம்?

இலங்கை அரசுக்கு எதிராக கருத்துக்கூறினால் மரணதண்டனை என்ற மறைமுக சட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? (அப்படி ஒன்றும் இல்லை என்றால், நீங்கள் உங்கள் பெயரையும் முகவரியையும் இங்கே தரத்ததாயாரா?)

உலகின் ஆதரவைத் தேடும் நாம் எமது இனத்திலேயே இஸ்லாமிய சகோதரர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செய்து அவர்களின் மனவெறுப்பைச் சம்பாதிக்கலாமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

இஸ்லாமியர் எங்கள் சகோதரர்கள் என்ற கருத்தை என்னால் ஏற்ற முடியாது. எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன், எல்லா மதத்திற்கும் உள்ள சலுகைகள் தான் இச்லாத்துக்கும்.அதற்கு என்று விசேட சலுகைகள் கிடையாது. யேசுவை வைத்து மிகவும் கேவலமான படங்கள் எடுக்கலாம், ராமரையும் கிருஷ்னரையும் எப்படியும் விமர்சனம் செய்யலாம், புத்தரையும் தூற்றலாம் ஆனால் நபியை மட்டும் ஒன்றும் செய்யக்கூடாது. என்ன நியாயம் இது ?

இது வேறொன்றுமில்லை, மதத்தை மதமாகப் பார்க்காமல் அதை தமது தீவிரவாத உணர்வுகளுக்கான தோற்றுவாயாகப் பார்க்கும் குணத்தினால்த்தான் இந்த மத்தத்தை விமர்சிக்கப் பயப்பட வேண்டி இருக்கிறது. சகிப்புத்தனமை சிறிதும் இல்லாத ஒரு சமூகம் இன்று அந்த மதத்தைத் தலமை தாங்குவது வேதனை.

சாணக்கியன், இந்த விடயத்தில் நான் உங்கள் பக்கம். கருத்துச் சுதந்திரத்துக்குப் பயப்படுவதற்கு இது ஒன்றும் அரேபிய நாடு அல்ல. விமரிசனங்கள் பற்றிப் பயப்படுபவர்கள் மற்ற மதங்களுக்கு எதிரான விமர்சனங்களை மட்டும் எப்படி வாய் மூடி மவுனிகளாக ஏற்றுக் கொண்டார்கள் ? அதென்ன இந்த ஒரு மதத்திற்கு மட்டும் அப்படி ஒரு சலுகை?

இங்கு பிரச்சனை நபிகளின் படம் பற்றியதல்ல, அப்படங்களின் மூலம் இன்று இச்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரவாதம் வெளிக் கொணரப்பட்டு இருக்கிறது. மதத்தில் கூறப்படாவிட்டாலும், வன்முறையை மதத்துடன் வலியே வரிந்து கட்டிக் கொண்டு அலையும் ஒரு கூட்டத்தைப் பற்றியது. இதனால் நபிகள் விமர்சிக்கப்படுவதாக நினைப்பது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன், இச்லாமியர்கள் எமது சகோதரர்களாகப் பார்க்கப்பட்ட ஒரு காலமும் உண்டு. ஆனால் இன்று அப்படியில்லை.அவர்கள் தங்களை தமிழ் பேசும் மக்களாக அடையாளப்படுத்திக் கொள்வதை விடவும் இச்லாமியர்களாக அடையாளப் படுத்தப்படுவதையே விரும்புகிறார்கள். நாம் அவர்களை எம்முடன் சேர்ந்து போராட வேண்டும் என்று நினைப்பது அவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் விடயம். மேலும் இந்திய சுதந்திரத்தின்போது மும்மது அலி ஜின்னா தனிப் பாகிச்த்தான் கேட்டதுபோல, ஈழம் என்ற ஒரு நாடு உருவாகும் பட்சத்தில் தமிழ் பேசும் இச்லாமியர்கள் தமது தனித்துவத்தை நிலை நாட்டுவதற்கு தனி பிரதேசம் கேட்கவே வாய்ப்புகளுண்டு.

இன்று எந்தத் தமிழ்பேசும் இச்லாமியரும் தனித் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் மதத்தாலும், கலாச்சாரத்தாலும் வேறுபட்ட இன்னொரு மக்கள் கூட்டம்.

  • தொடங்கியவர்

வசம்பு அவர்களே,

எனது கேள்விக்கு பதிலைதாருங்கள்!

இந்த திரியை நிர்வாகம் நீக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து.

  • தொடங்கியவர்

சாணக்கியன், இச்லாமியர்கள் எமது சகோதரர்களாகப் பார்க்கப்பட்ட ஒரு காலமும் உண்டு. ஆனால் இன்று அப்படியில்லை.அவர்கள் தங்களை தமிழ் பேசும் மக்களாக அடையாளப்படுத்திக் கொள்வதை விடவும் இச்லாமியர்களாக அடையாளப் படுத்தப்படுவதையே விரும்புகிறார்கள். நாம் அவர்களை எம்முடன் சேர்ந்து போராட வேண்டும் என்று நினைப்பது அவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் விடயம். மேலும் இந்திய சுதந்திரத்தின்போது மும்மது அலி ஜின்னா தனிப் பாகிச்த்தான் கேட்டதுபோல, ஈழம் என்ற ஒரு நாடு உருவாகும் பட்சத்தில் தமிழ் பேசும் இச்லாமியர்கள் தமது தனித்துவத்தை நிலை நாட்டுவதற்கு தனி பிரதேசம் கேட்கவே வாய்ப்புகளுண்டு.

இன்று எந்தத் தமிழ்பேசும் இச்லாமியரும் தனித் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் மதத்தாலும், கலாச்சாரத்தாலும் வேறுபட்ட இன்னொரு மக்கள் கூட்டம்.

ரகுநாதன்,

உங்கள் கருத்துத்தான் எனக்கும் தற்போது ஏற்பட்டு வருகின்றது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் எனது நண்பர் ஒருவர் அங்கு எமது தமிழ் உறவுகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி பலவற்றை குறிப்பிட்டார். அவற்றை ஜீரணிக்க முடியாமல் இருந்தது. அது பற்றி நான் நன்கு விசாரித்த பின் ஆதாரங்களுடன் பின்னர் தருகிறேன்.

இது உலகநடப்பு என்ற பகுதியில் வெளிநாட்டில் ஒரு தீவிரமதவாத பிரச்சனை பற்றிய தலைப்பு. இங்கு பலர் முஸ்லீம்களை பற்றி கருத்தாடுவதை தவிர்ப்பது மற்றும் கண்டிப்பது உள்ளூர் அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டே என்பது வெளிப்படை!

இந்த திரியை நிர்வாகம் நீக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து.

அப்படியே ஏன் என்ற உங்கள் தனிப்பட்ட கருத்தையும் தாருங்கள்?

அத்துடன் இந்து மதம் குறித்த உங்கள் கருத்துக்களை நீங்களாகவே அகற்றி விடுங்கள்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன்,

நீங்கள் சொல்வது மெத்தச்சரி. கிழக்கு மாகாணத்தில் நடக்கும் புணர் நிர்மானப் பணிகளில் தமிழ்ச்சமூகம் எப்படி புறந்தள்ளப்பட்டிருக்கிறது என்பதை பத்திரிகைகளில் இப்போது தினமும் படிக்கிறோம். தற்போதைய புணர்வாழ்வு அமைச்சரான முச்லீம் காங்கிரசு எம்.பி .ரிசாத் பதியுதீன், என்னுடைய உயர்தர வகுப்பு சக மாணவர். அவரைத் தனிப்பட்ட ரீதியில் அறிந்திருக்கிறேன். அவரின் இன்றைய நடவடிக்கைகள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. சரி, இதைப்பற்றி வேறு ஒரு சமயம் பேசுவோம்.

சாணக்கியன், எல்லா மதத்திற்கும் உள்ள சலுகைகள் தான் இச்லாத்துக்கும்.அதற்கு என்று விசேட சலுகைகள் கிடையாது. யேசுவை வைத்து மிகவும் கேவலமான படங்கள் எடுக்கலாம், ராமரையும் கிருஷ்னரையும் எப்படியும் விமர்சனம் செய்யலாம், புத்தரையும் தூற்றலாம் ஆனால் நபியை மட்டும் ஒன்றும் செய்யக்கூடாது. என்ன நியாயம் இது ?

யேசுவைப்பற்றி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள்......

இந்து மத கடவுள்களை பற்றி இந்து மதத்தவர் விமர்சனம் செய்யலாம்.

அது போல முஸ்லிம்களின் மதத்தை பற்றி அந்த மதத்தை சேர்ந்தவர்

விமர்சனம் செய்யலாம். மற்றொருவருக்கு அந்த உரிமை இல்லை என்று நினைககிறேன். :lol::)

  • தொடங்கியவர்

குறுக்ஸ்,

காட்டூன் வரைகிறேன் என்று கூறிக்கொண்டு ஒரு நாள் தவறுதலாக இந்து மதத்தை பற்றியும் வரைந்து மாட்டிக் கொள்ளாதீர்கள்!

பிறகு ஆளாளுக்கு உங்கள் தலைக்கும் விலை வைத்துவிடுவார்கள்! :lol:

  • தொடங்கியவர்

யேசுவைப்பற்றி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள்......

இந்து மத கடவுள்களை பற்றி இந்து மதத்தவர் விமர்சனம் செய்யலாம்.

அது போல முஸ்லிம்களின் மதத்தை பற்றி அந்த மதத்தை சேர்ந்தவர்

விமர்சனம் செய்யலாம். மற்றொருவருக்கு அந்த உரிமை இல்லை என்று நினைககிறேன். :lol::)

என்ன வசி காமடி பண்ணுறீங்க,

அந்த மதமே மதத்தை பற்றி கேள்வி கேட்டா அவன் ஒரு இஸ்லாமியன் இல்லை என்று சொல்கிறது!

அந்த மதத்தை சேராதவனுக்கே இந்த நிலமை, அந்த மதத்தை சேர்ந்தவனுக்கு எதை வெட்டுவாங்களோ தெரியாது! :D

  • கருத்துக்கள உறவுகள்

வசி,

உங்கள் கருத்தை ஒத்துக்கொள்ள முடியவில்லை. எதைப்பற்றி யார் யார் விமர்சனம் செய்யலாம் என்று வரையறை இல்லை. அநியாயங்களையும், தவறுகளையும் யார் வேண்டுமானாலும் சுட்டிக் காட்டலாம். இங்கு பிரச்சனை என்னவென்றால், யார் விமர்சிப்பது என்பதல்ல, எவ்வளவு சகிப்புத்தன்மை உள்ளது என்பதைப் பற்றியது.

ஒரு மதத்தைப் பற்றி இன்னொரு மதத்தினர் விமர்சிக்க உரிமை இல்லை என்றால், இன்னொரு மதத்தைச் சேர்ந்தவரை கட்டாய மதமாற்றம் செய்வதும் தவறுதானே ? இப்படி எத்தனை மதங்கள் இந்து மதத்தின் சமாதியின்மேல் ஆசியாவில் கட்டப்பட்டன?

மேலும் யேசுநாதரைப் பற்றி படம் எடுக்கும் கிறீச்தவர்கள் ஒன்றும் நடைமுறை கிறீச்தவர்கள் அல்ல. பெயரில் மட்டுமே! அவ்வாறே இந்துமதம் பற்றிய விமர்சனங்கள் இந்துக்களால் மட்டுமன்றி, பல சமயத்தவராலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. புத்த மதத்தைப் பற்றி இன்றும் நாம் விமர்சிக்கிறோம். ஆனால் இச்லாம் பற்றி எழும் விமர்சனங்களெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.

இங்கு விமர்சிக்கப்படுவது அந்தந்த மதத்தின் கடவுள்கள் அல்ல, மாறாக இன்று அந்த மதங்களை பின்பற்றுபவர்களால் செய்யப்படும் தவறுகள் மட்டுமே. தமது தவறுகளை நியாயப்படுத்த அவர்கள் அந்த மதத்தைப் பாவிக்கிறார்கள். அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்த டென்மார்க் காட்டூன் விவகாரமும் தமிழ் முஸ்லீம்களும் எந்தவிதத்திலும் தொடர்பு படவில்லை. தீவிர முஸ்லீம் சட்டத்தை பின்பற்றும் நாடுகள் மற்றும் அமைப்புகள்தான் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளன. அதனை நான் மனதார கண்டிக்கிறேன்.

இதனையும் உள்ளுர் அரசியலையும் தயவு செய்து குழப்பிக் கொள்ள வேண்டாம்!

இங்கு விமர்சிக்கப்படுவது அந்தந்த மதத்தின் கடவுள்கள் அல்ல, மாறாக இன்று அந்த மதங்களை பின்பற்றுபவர்களால் செய்யப்படும் தவறுகள் மட்டுமே. தமது தவறுகளை நியாயப்படுத்த அவர்கள் அந்த மதத்தைப் பாவிக்கிறார்கள். அவ்வளவுதான்.

அற்புதமாக சொன்னீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சாணக்கியா

இந்து மதத்தைப் பற்றி என்ன எழுதவில்லை என்று இப்படி ஒப்பாரி வைக்கின்றீர்கள். இருக்கின்றது மட்டுமல்லாமல், இல்hதது பொல்லாததும் எழுதவில்லையா? வெறுமனே இந்து வெறியர்கள், பார்ப்பானிகள் என்று எழுதியே அர்த்தமில்லாத எத்தனையோ கட்டுரைகளை மார்வாடிகளிடம் காசு வாங்கித் தமிழனை அடகு வைத்த ராமசாமியின் சீடர்கள் படைக்கவில்லையா?

உங்களுக்கு சிலவேளைகள் அப்படியான கட்டுரைகளுக்கு எதிர்வினைகள் வருவது தான் பிரச்சனை போலும். ஏன் பதில்கள் வரக் கூடாது, நீங்கள் திட்டித் தீர்க்க விட்டால் போதும் என எதிர்பார்க்கின்றீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

பிராமணியம் என்பது ஒரு குலம். அதற்கும் சமயத்திற்கு சம்பந்தமில்லை. ராமசாமிப் பெரியாரும் ஒரு இந்துதான். இங்கு இந்துமதம் விமர்சிக்கப் படவில்லை. சமூகத்தில் பிராமணியத்தை சேர்ந்தவர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளைத்தான் விமர்சனம்ங்கள் சுட்டிக் காட்டின என்று நினைக்கிறேன். இதன்போது முழுப் பிராமணியச் சமூகமும் விமர்சிக்கபடுதல் தவறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிராமணியம் என்பது ஒரு குலம். அதற்கும் சமயத்திற்கு சம்பந்தமில்லை. ராமசாமிப் பெரியாரும் ஒரு இந்துதான். இங்கு இந்துமதம் விமர்சிக்கப் படவில்லை. சமூகத்தில் பிராமணியத்தை சேர்ந்தவர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளைத்தான் விமர்சனம்ங்கள் சுட்டிக் காட்டின என்று நினைக்கிறேன். இதன்போது முழுப் பிராமணியச் சமூகமும் விமர்சிக்கபடுதல் தவறுதான்.

ஓஓ.. நீங்கள் அப்படி வாறியளோ... இதுவும் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதம் பற்றித்தானே சொல்லுது.

உங்கிணை பண்டிதர் எண்டவர் உதை எழுதி அதை பெளத்த பேரினவாதத்தோட ஒப்பிட்டு போடேக்க கை கொட்டி ஆரவாரிச்ச நாங்கள் இப்ப இந்தத் திரியை அகற்றனும் என்றும் பரிந்துரைக்கிறம்..! :lol:

என்னைப் பொறுத்தவரை மக்களின் அவரவர் மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் எல்லாவிதமான செயற்பாடுகளையும் கண்டிக்கிறேன்..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.