Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்

Featured Replies

சேர்பியாவின் கொசோவா பிராந்தியம் இன்று ஞாயிற்றுக் கிழமை தனது சுதந்திர தின பிரகடனத்தை வெளியிட்டு தனிநாடாக மலரவுள்ளது.

கொசோவா இன்று தனது சுதந்திரதினப் பிரகடனத்தை வெளியிடும் என்று அந்த நாட்டு பிரதமர் ஹாசிம் தாசி நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

சர்வமதத் தலைவர்களுடன் நேற்றைய தினம் இடம் பெற்ற சந்திப்பையடுத்து இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை இன்றைய தினம் மேற்கொள்வதற்கான கொண்டாட்ட நிகழ்வுகள் அங்கே நேற்றைய தினம் மிகவும் ஆரவாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கொசோவாவின் பிரிஸ்டினா பகுதியில் சுதந்திரப் பிரகடனத்தை கொண்டாட மிகப் பிரமான்டமான விழாக்கள் நடைபெறவுள்ளன என தெரிவிக்கபடுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய கீதமிசைக்கபட்டு சுதந்திரப்பிரகடனம் இடம் பெறவுள்ளது.. அதற்காக ஒத்திகைகளும் நேற்றைய தினம் இடம் பெற்றன.

10 ஆயிரத்து 887 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட கொசோவாவில் 2.1 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

இவர்களில் 88 சதவீதமானோர் அல்பேனிய இஸ்லாமியர்கள். 6 சதவீத சேர்பியர்கள், 3 சதவீத பொஸ்னியர்கள், 2 சதவீதம் ரூமெனியர்கள், 1 சதவீதம் கோரனியர்களும் ஆவர்.

கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனத்தை முன்னிட்டு அங்குள்ள வீதிகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக குழுமி நின்று தமது மகிழ்ச்சியை பகிhந்து வருகின்றனர். வீதிகள் தோறும் கொசோவா தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்கள் வண்ணமயமாக அலங்கரிப்புகளால் மிளிர்கின்றன. இன்றைய தினம் இடம் பெறவுள்ள சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கென பல்கெரியாவில் இருந்து பட்டாசு தொன் கணக்கில் வந்திறகியுள்ளதாக அங்குள்ள சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க பிரித்தானியா உடட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவுடனேயே கொசோவா இன்றைய தினம் சுதந்திரப்பிரகடனத்தை வெளியிடவிருக்கிறது. எனினும் ரஷ்யாவின் முழுமையான ஆதரவுடன் சேர்பியா உட்பட மேலும் பல நாடுகள் கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்த்துள்ளன. இலங்கையும் கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. <_<

இதே வேளை சேர்பியாவில் இருந்து கொசோவோ சுதந்திரம் பெறுகின்றபோது கொசோவோவில் இருக்கின்ற சேர்பிய மக்கள் பாராட்சமாக நடத்தப்படமாட்டார்கள் என்று பிரதமர் ஹஸீம் தாசி உறுதி மொழி வழங்கியுள்ளார்.

நன்றி வீரகேசரி

வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொசோவாவின் சுதந்திர பிரகடனம் மிக்க மகிழ்ச்சி! நமக்கும் ஒரு நாள் நல்லது நடக்கும்!!!

கொசோவோ தனிநாடானது....

வாழ்த்துகள்

கொடும்பகை நடுங்க பிறந்தது நாடு

வாழ்த்துகள்! சொன்னோம் கொசோவா

கடும்பகை தனையே களப்பலி செய்து - நாம்

சுதந்திர ஈழம் செய்வோம்

Edited by vettri-vel

The parliament of the overwhelmingly ethnic Albanian province was expected to proclaim independence around 3:00 p.m. local time (1400 GMT), in the wake of a night of euphoric celebrations in the capital Pristina.

Diplomatic recognition by Washington and key European capitals would follow within 24 hours or so, even though Belgrade regards Kosovo as the cradle of Serb culture and religion and sees its independence as illegal

கொசோவாவின் சுதந்திர பிரகடனம் மிக்க மகிழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாக மலரும் கொசோவாவுக்கு வாழ்த்துகள். <_<<_<

கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.

தொடர்ந்து வாசிக்க

கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.

சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.

"சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20080218001.jpg

20080218002.jpg

20080218003.jpg

சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

20080218004.jpg

20080218005.jpg

20080218006.jpg

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.

கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

20080218007.jpg

20080218008.jpg

20080218009.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

படங்கள்: ஏபி, ஏ.எஃப்.பி., ரொய்ட்டர்ஸ்

http://www.puthinam.com/full.php?2aZSrme0d...d43bXW3b02YMv3e

தமிழீழ மக்கள் கொசாவா மக்களுக்க்கு வாழ்த்து தெரிவிப்பது போல ஏதாவது ஒன்றை செய்ய முடியுமா அதை கானொளி மூலமாகவோ படங்கள் மூலமாகவோ பொதுவான இனையம் ஒன்றில் வாழ்த்து ஒன்றினை போட செய்ய முடியுமா

மகிழ்சி வெள்ளத்தில் கொசோவோ மக்கள்.

கொசாவோ விடுதலை: இலங்கை பீதி!

திங்கள்கிழமை, பிப்ரவரி 18, 2008

கொழும்பு: செர்பியாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக தன்னை கொசாவோ அறிவித்துள்ளது மிகப் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என விடுதலைப் புலிகளை மனதில் வைத்து இலங்கை அச்சம் தெரிவித்துள்ளது.

கொசாவோ மற்றும் ஈழப் போராட்டத்துக்கும் இடையே பெருமளவில் வித்தியாசம் இல்லை.

கொசாவோ பிராந்தியத்தில் பெரும்மையினராக இருக்கும் அல்பேனிய வம்சாவளியினர் மீது செர்பியா அடக்குமுறையைக் கையாண்டது. சிறுபான்மையினரான ரஷ்ய வம்சாவளியினர் ராஜபோகமாக இருந்த நிலையில் அல்பேனியர்கள் மீது வன்முறையும், கொலை வெறியாட்டமும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் உதவியால், தற்போது கொசாவோ தனி நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.

இலங்கை எதிர்ப்பு:

இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த பிரிவினையை ஏற்க முடியாது என்றும் அது தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இந்த முடிவு வரலாறு காணாத பயங்கர விளைவுகளுக்கு வித்திடும்.

உலகின் அமைதியும், பாதுகாப்பும் பெரும் பாதிப்பை சந்திக்கும். கற்பனை செய்து பார்க்கக் கூடிய அளவுக்கு பின் விளைவுகள் இருக்கும்.

செர்பியக் குடியரசிலிருந்து கொசாவோ பிரிந்ததை இலங்கை ஏற்காது, அங்கீகரிக்காது.

தன்னிச்சையாக கொசாவோ எடுத்துள்ள இந்த முடிவு, செர்பியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு. இது வருத்தத்துக்குரியது.

சுமூகமான அரசியல் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். கொசாவோவுக்கு பெரிய எதிர்காலம் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் மற்றும் விடுதலைப் புலிகளை மனதில் கொண்டே கொசாவோ விடுதலைக்கு கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2008/02...imaginable.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விழா என் மண்ணில் எப்போது???

அதை நான் காண்பேனா???...........

  • தொடங்கியவர்

கொசோவோ பிரகடனம் உலக சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானதாகும்-இலங்கை

கொசோவோ தனிநாடாக பிரகடப்படுத்தப்பட்டமை உலக சமதானத்திற்கும் அதற்கான முன்னெடுப்புகளிற்கும் அச்சுறுத்தலாக அமையுமென இலங்கை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதிகாரம்.எல்லை நாடுகளுக்கிடையிலான உறவு தொடர்பான ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஐலங்கை வெளிவிவகார அமைசுவிடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேர்பிய குடியரசில் இருந்து கொசோவோ தனி நாடாக பிரிவதை இலங்கை ஆதரிக்காது. சேர்பியா பெரும்பான்மை மக்களின் விருப்பை பெறாத நிலையில் கொசோவோ தனி நாடாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஏற்றுக் கொள்ள முடியாதென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரகேசரி இணையம்

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹி & கோவுக்கு இப்போதே பயக்காச்சல் வந்திட்டுது போல கிடக்குது.

Edited by Janarthanan

இந்த விழா என் மண்ணில் எப்போது???

அதை நான் காண்பேனா???...........

நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்!

  • கருத்துக்கள உறவுகள்

கொசோவோவைத் தக்கவைக்கும் முயற்சியில் செர்பியா

தம்மில் இருந்து பிரிந்து சென்று சுதந்திர பிரகடனம் செய்துள்ள கொசோவோவின் கட்டுப்பாட்டை தம் வசம் வைத்துக்கொள்வதற்கான போராட்டத்தில், செர்பியா இறங்கியுள்ளது.

கொசோவாவின் சுதந்திர பிரகடனத்தை ரத்துச் செய்வதற்கான முயற்சியில் செர்பியாவின் நெருங்கிய கூட்டாளியான ரஷ்யா பெரும் முன்னணி முயற்சிகளை மேற்கொண்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையில், தற்போது செர்பிய அதிபர் போரிஸ் டடிக் அவர்கள், தமது தரப்பு வாதத்தை முன்வைக்கிறார்.

பெல்கிரேடில் செர்பியக் கொடிகளைத் தாங்கிய ஆயிரக்கணக்கானோர், அல்பேனிய எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியவாறு, கொசோவோவின் நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொசோவோவை முறையாக அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ள அதிபர் புஷ் அவர்கள், ஆனால், கொசோவோ மக்கள் தற்போது சுதந்திரமடைந்திருக்கிறார்க

youtube கணக்கு வைத்திருக்கும் கருத்துக்கள உறுப்பினர்கள் உங்களின் favorite இல் இணைக்கவும். அதேபோல் Rating குடுக்கவும். உங்கள் நண்பர்களுக்கும் இணைப்பை அனுப்பி பார்க்கச் சொல்லவும். முழுமையாகப் பார்க்காவிட்டாலும் ஒருமுறை திறந்து மூடச் சொல்லுங்கள். அப்போது தான் youtube ன் முகப்பை அடைந்து பலரது பார்வையில் படும். (நன்றி இளைஞன் )

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

கொசோவோவின் தனிநாட்டு பிரகடனத்தால் தமிழர் மகிழ்ச்சியும் உத்வேகமும் அடைந்துள்ளனர்

* ஈழவேந்தன் தெரிவிப்பு

கொசோவோவின் தனி நாட்டுப் பிரகடனத்தால் தமிழினம் மகிழ்வடைந்துள்ள அதேவேளை, தமது இலடச்சியத்தை அடைவதில் உத்வேகம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.க.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

தாக்குகின்ற சக்தியை விட தாங்குகின்ற சக்தியே மேலானது என்பது கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு நாட்டின் விடுதலை என்பது எல்லைப்பரப்பிலோ மக்கள் எண்ணிக்கையிலோ தங்கியிருக்கவில்லையென்பதைய

  • கருத்துக்கள உறவுகள்

கொசோவோவின் உதயம்

முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசான சேர்பியா விலிருந்து பிரிந்து ஒரு தனிநாடாக ஒரு தலைப்பட் சமாக சுதந்திரப் பிரகடனம் செய்திருக்கின்றது கொசோவோ.

அந்தப் பிரகடனம் வெளியான அடுத்த கணமே அதை அங்கீகரிக்க மறுக்கும் எதிர்ப்பு அறிக்கையை இலங்கை விழுந்தடித்து வெளி யிட்டு விட்டது.

கொசோவோ தனிநாடாவதை பல ஐரோப்பிய நாடுகள் வரவேற்கின்றன. கொசோவோவின் அத் தீர்மானத்துக்குப் பின்னணியில் நின்று, இத்திசை யில் அதனை வழிநடத்தியவையே ஐரோப்பிய நாடுகள்தாம் என்பது வெள்ளிடைமலை.

அத்தகைய பின்புல ஆதரவைத் தந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்கூட கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை அங்கீகரிக்கத் தயாராவ தற்குள் இலங்கையின் எதிர்ப்பு அறிக்கை அவசர அவசரமாக வெளியாகிவிட்டது.

இந்த விவகாரத்தில் "பேதி' குடித்த நிலையில் இலங்கை துடிப்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.

இலங்கை மட்டும் என்றல்ல. தேசிய இனங்களை அடக்கி, ஒடுக்கி, அவற்றின் சுயநிர்ணய உரிமையை மறுத்து மேலாதிக்கம் செய்கின்ற ஆட்சி முறைமை களைக் கொண்டுள்ள எல்லா நாடுகளுமே

பிரிவினைக்கு எதிராகத் தமது அதிகாரத்தின் அரூ பக் கரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் மேலாதிக் கப் போக்குத் தேசங்கள் அனைத்துமே

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை முழு அளவில் எதிர்க்கின்றன என்பதே உண்மை.

கொசோவோவில் அல்பேனிய இன மக்களின் இன விடுதலையை உறுதிசெய்யும் தனிநாட்டுப் பிரகடன நியாயம், தத்தமது நாடுகளிலும் பொருத்திப் பார்க் கப்பட்டு, அங்கங்கெல்லாம் அம்முறைமை நடைமுறைப் படுத்தப்பட முயற்சி எடுக்கப்படுமானால் தமது நிலை அதோ கதிதான் என்பது அந்த நாடுகளுக்கும் அவற்றின் ஆட்சியாளர்களுக்கும் நன்கு தெரியும்; புரியும்.

அதனால்தான் அவை விழுந்தடித்துக்கொண்டு இந் தத் தனிநாட்டுப் பிரகடனத்தை முழு மூச்சில் எதிர்க் கின்றன.

ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் முழு ஆதரவுடன் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக் கும் கொசோவோவை, அதை இவ்வளவு காலமும் தனது ஆளுகைக்குள் அடக்கி வைத்திருந்த சேர்பியாவினாலோ அல்லது சேர்பியாவின் ஞானத்தந்தையான ரஷ்யாவினாலோ அடக்க முடியாது என்பதுதான் மெய்மை நிலை. அத்தேசத்தின் விடியல் வரலாற்றின் பிரிக்கமுடியாத தேவைப்பாடு; தவிர்க்க முடியாத நிகழ்வு.

கொசோவோவின் ஒருதலைப்பட்சமான தனிநாட் டுப் பிரகடனம் ""சர்வதேச உறவுகளில் நம்பமுடியாத முன்மாதிரியாகிவிடும்'' என்று இலங்கை எச்சரிப் பதன் நோக்கமும் ஆழமும் கூடப் புரிந்துகொள்ளத் தக்கதே.

கொசோவோ ஆக 4 ஆயிரத்து 200 சதுர கிலோமீற் றர் நிலப்பரப்பையும் 21 லட்சம் மக்கள் தொகையை யும் கொண்ட பிரதேசம். அதுவே தனிநாடு ஆகக் கூடிய தகுதியை உடையது என்றால் சுமார் ஏழாயிரத்து ஐந் நூறு சதுர மைல் விஸ்தீரணத்தையும் சுமார் நாற்பது லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட ஈழத் தமிழர் தாயகம் அதே தனிநாட்டு அந்தஸ்தைக் கோருவதில் இருக்கக்கூடிய நியாயப்பாடுகள் கொழும்புக்குப் "பேதி' அளிப்பனவாக அமைகின்றன.

அது மாத்திரமல்ல. தமது தேசத்தின் இனத்தின் விடுதலைக்கான சுதந்திரப் போராட்டத்தை ஆயுத வழிக்குத் திருப்பமுன்னரே 1977 இலேயே தமது சுயநிர்ணய உரிமையின் விருப்பத்தை தனித் தமிழ் ஈழத்துக்கான இசைவாக, ஜனநாயகத் தேர்தல் வாக்களிப்புமூலம் தமிழர்கள் சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர்.

கடந்த பொதுத் தேர்தலில் கூட தமிழரின் அந்த விருப்பமும், எதிர்பார்ப்பும், ஆணையும் ஜனநாயக வாக் கெடுப்புமூலம் மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கப் பட்டதையும் சர்வதேசம் அறியும்.

தவிரவும், தனியான தாயகம், தனியான மொழி, தனி யான பண்பாடு, தனித்துவமான தேசமாகவும், தேசிய மாகவும் நீண்டகாலம் நிலைகொண்டிருந்த வரலாற் றுச் சரிதம் என தனிநாட்டுக்குரிய அனைத்துப் பண்பியல்புகளையும் உரிமைகளையும் கொண்டு அமைந் துள்ள தமிழர் தேசத்தை அடக்கி, ஒடுக்கி, நியாயமற்ற முறையில் தனது ஆளுகைக்குள்ளும் மேலாதிக் கத்துக்குள்ளும் நசுக்கி வைத்திருக்கும் இலங்கைக்கு, பிறிதொரு பூமியில் இதே பண்பியல்புகளுடன் அடக்கப்பட்டிருந்த ஒரு மக்கள் கூட்டம் தனித் தேசமாக எழுச்சியுற்று உருக்கொண்டு எழுவதைச் சகிக்க முடி யாது என்பது புரிந்து கொள்ளத்தக்கதே. அந்த முன் னுதாரணம் தனக்கும் பொருந்தும் என்பதால் பதற் றப்படுகின்றது இலங்கை.

அடக்குமுறை விலங்கு நீடித்து நிலைக்காது. என்றோ ஒருநாள் அது உடைந்து விழுவது நிச்சயம் என் பதையே கொசோவோ என்ற தனிநாட்டின் பிறப்பு எமக்கு உணர்த்துகின்றது.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் எனினும் தர்மம் ஒருநாள் வெல்லும்' என்ற தத்துவத்தின் நிகழ்வே கொசோவோவின் உதயம். அது இங்கும் கூடப் பொருந்தும் என்பதும் கவனிக்கத்தக்கது.

-உதயன்

" உலகத்துக்காக உனது பிரச்சனையை மாற்றாதே.

உனது பிரச்சனைக்காக உலகத்தை மாற்றிவிடு."

.. Don't change your struggle for the world.

LET your struggle change the world....

Edited by Tamilmagan

  • கருத்துக்கள உறவுகள்

கொசோவோவை முதன்முதல் அங்கீகரித்த சார்க் நாடாக ஆப்கன் சீனா, ரஷ்யாவின் நிலைப்பாட்டை நோக்கி சாயும் இந்தியா

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சமூகத்தின் (சார்க்) பிந்திய உறுப்பினரான ஆப்கானிஸ்தான் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை உடனடியாகவே அங்கீகரித்துள்ள நிலையில், தெற்காசிய பிராந்தியத்தின் பெரியநாடும் வல்லரசுமான இந்தியா இது தொடர்பாக தீவிரமாக பரிசீலனை செய்துவரும் அதேசமயம் ரஷ்யா, சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் அபிப்பிராயத்திற்கு சார்பான நிலைப்பாட்டையே மேற்கொள்ளும் சாத்தியமிருப்பதாக `இந்து' பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.

அரசாங்க மதமாக இஸ்லாத்தை கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் கொசோவோவை முதன் முதலாக அங்கீகரித்திருக்கும் தெற்காசிய நாடாகியுள்ளது. `மக்களின் தீர்மானத்திற்கு நாம் ஆதரவளிப்பதுடன் கொசோவோவின் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறோம் என்று ஆப்கான் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளரான சுல்தான் அகமட் பாகின் தெரிவித்திருப்பதாக ஏபி செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

நாங்கள் கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை கவனத்திற்கு எடுத்துள்ளோம். இந்தப் பிரகடனத்தில் சட்டரீதியான பல விடயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. முன்னேற்றமடைந்துவரும் நிலைமை குறித்தும் நாம் ஆராய்ந்து வருகிறோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகம் தெரிவித்ததாக `இந்து' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட ஆட்புல எல்லை; (கொசோவோவின் விடயத்தில் சர்ச்சைக்குரியது) உரிய முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கம் (கொசோவோவில் இடைக்கால நிர்வாகம்) மற்றும் குறிப்பிட்ட பகுதியில் ஆட்சி செய்யும் கட்டுப்பாடு (கொசோவோ விடயத்தில் அவ்வாறு இல்லை) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நாடொன்றுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவே இந்தியாவின் நிலைப்பாடாகும். அதாவது சகல நாடுகளினதும் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு சகல அரசாங்கங்களும் மதிப்பளிக்க வேண்டும். கொசோவோ விவகாரத்திற்கு சமாதானவழியில் தீர்வு காணப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் கலந்தாலோசனை, பேச்சுவார்த்தை மூலம் இதனை மேற்கொள்ளவேண்டும் என்று நாம் நம்புகின்றோம்ீ என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இலங்கை

இதேவேளை, கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனமானது சர்வதேச உறவுகளின் தன்மை, இறைமையுடைய நாடுகள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள உலக ஒழுங்கு முறைமை என்பன தொடர்பாக கற்பனை செய்து பார்க்க முடியாத முன்னுதாரணமான சம்பவமென்றும் சர்வதேச சமாதானம், பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தல் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

அதேசமயம் `கொசோவோ-இலங்கைக்கான பாடங்கள்' என்று தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரையில் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியான தயான் ஜயதிலக கருத்தொன்றை முன்வைத்துள்ளார். அதாவது இலங்கை தனது எந்தவொரு பகுதியிலிருந்தும் தனது ஆயுதப்படைகளை விலக்கிக்கொள்ளப் போவதில்லையெனவும் வெளியாரின் பிரசன்னத்திற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொசோவோவினை சேர்பியாவின் பகுதியென்று 1999 இல் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா.வின் 1244 தீர்மானம் அடையாளப்படுத்துகின்றது. ஆனால், கொசோவோவின் பிரிவினையை மேற்குலக நாடுகள் உடனடியாக அங்கீகரிப்பது ஐ.நா.வின் தீர்மானத்திற்கு முரண்பட்டதொன்று என்று தயான் ஜயதிலக கூறியுள்ளார்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொசோவோ நாட்டின் தனிநாட்டுபிரகடன விடயத்தில் இலங்கையை விட இந்தியாவுக்குத்தான் அதிக தலையிடி :huh:

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.