Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிற்கு 500 மில்லியன் டொலர் இராணுவ உதவியளிக்க ரஷ்யா முடிவு

Featured Replies

சிறிலங்கா அரசாங்கத்திற்கான படைத்துறை உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பின்னடித்து வருகையில் பெருமளவான உதவிகளை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளதாக ரஷ்ய தூதரகத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து வாசிக்க

கொடுத்ததெல்லாம் அடித்து முடிந்தது. இனி அடுத்த கோட்டா. 500 மில்லியன் டொலர் இராணுவ உதவி. இப்படி எவ்வளவு காலத்திற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யா முடிய எதோ ஒரு நாட்டிடம் விழுந்து கும்ம்பிட வேண்டியாது தான். மோட்டு சிங்களவன் விழுந்து கும்பிட்டாவது தங்களது கோவணம் போகாமல் பார்த்து கொள்கிறான். :unsure::lol:

ஆகா! உது தேறாத கேஸ்... 500 மில்லியனும் என்ன சும்மாவோ தரப்போறங்கள்? வட்டி குட்டி.. உப்பிடி போட்டி போட்டு வங்கி கடசீல அரியண்டம் தாங்கேலாமல் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைமைக்கு உங்களே சர்வதேசத்தை தூண்டுறாங்கள்...

கொசோவோ போலவே சம்பவங்கள் நடக்கின்றதே! இது தான் காலத்தின் குறியோ?

History repeats itself, but in a rapid pace nowadays :unsure:

Edited by vettri-vel

யார் என்னத்தை அள்ளிக் குடுத்தாலும் உந்த மோட்டுச் சிங்களவருக்கு பாவிக்கத் தெரியாது. இதை உருக்கி மண் வெட்டி செய்தா என்ன எண்டு மாதனமுத்தாக்கள் யோசிச்சு கொண்டிருக்கேக்கை நாங்கள் படார் எண்டு பறிச்சு அதலேயே அவங்களுக்கு அடி போட எல்லாத்தையும் போட்டுட்டு ஓடிவிடுவாங்கள்.

அதாவது இறுதி முடிவைப் பாத்தியள் எண்டா தமிழருடைய போர்ப் பொருளாதாரம் 500 மில்லியனால பலப்படுத்தப்படுது எண்டு யோசியுங்கோ.

அதுவும் மிக வேகமாக இப்ப பலப்படுத்தப்படுகுது. இந்து சமயத்தில உலகம் அழிஞ்சு அழிஞ்சு உருவாகிறது எண்டு சொன்ன மாதிரி கிஸ்ரறி வேகமாக றிப்பீட்டு பண்ணுது.

போற போக்கை பார்த்தா இந்த வருட மாவீரர் தினத்திற்கே முதலே பிரகடனம் செய்யப்படாது இருப்பது ஒரு உலக அதிசயமாகத்தான் இருக்கும்.

  • ஏற்கனவே தமிழ் மக்களின் விடுதலையை நேரடியாகவே எதிர்க்கின்ற ஒருசில நாடுகளை தவிரவும் மனித நேய மானிட விடுதலையை நேசிக்கின்ற நாடுகள் தமிழர்களை நிச்சயமாக அங்கீகரிப்பார்கள் என்பது வெளிப்படையானது....!

    எனவே தமிழ் மக்கள், தங்கள் நிலை தவறி கொசோவாவின் கற்பனையில் திளைத்து எதிர் பார்ப்புகளை மட்டுமே வளர்த்து கொள்ளாமல். தமிழீழ பிரகடனம் நோக்கி மிக விரைவாக பயனிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது... அதற்காக தமது தாயக பகுதிகளில் இருந்து சிங்கள படைகளை அனுப்ப வேண்டிய அவசர அவசியம் தோண்றி உள்ளது...

    .............
    .............
    .............
    அதற்கான வளிவகைகளை ஓவொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் தேட வேண்டும்... அத்தோடலின் பேறு, போர் வெற்றி என்பதாகவே காணப்படும்... எனவே அத்தகைய ஒரு போரியல் வெறியை பெறுவதற்காக தமிழர்கள் அனைவருமே களத்தில் அணிவக்குக்க வேண்டிய காலம் தோண்றி உள்ளது... ///

இப்படி காலம் கணித்து நிக்க இப்பவும் நாங்கள் கை வீசம்மா கைவீசு , கடைக்கு போகணும் கைவீசு....! ஆயுதம் வாங்கணும் கைவீசு...... எண்ட பாட்டோடை நிக்கிறம்...

நடை முறை அரசியலுக்கை எங்கட சிலர் வர நீண்ட காலம் ஆகும் எண்டு தெரியுது (ஒளி ஆண்டு கணக்கு) ... ஆனால் தமிழீழ போக்கு தேவையான வளியிலை சரியாகதான் நகருது,, நகரும்...

Edited by தயா

தமிழகத்தின் தெருக்களிலே குடுகுடுப்பைகாரர்கள் "நல்ல காலம் பொறக்குது" , "நல்ல காலம் பொறக்குது" என்று கூவிக்கொண்டு செல்வதை கேட்டிருக்கின்றேன். அதனால் நல்ல காலம் பிறக்கிறதோ இல்லையோ, அதை கேட்கும் போது மனதில் ஒரு உற்சாகம் பிறப்பது உண்மை. ஒருவகையில் ஒரு சிறு மனோதத்துவ சிகிச்சை!

அது போல் இங்கு யாழ்களத்திலும் ஒரு குறுகுறுப்பைக்காரன் "நாசமாப் போகப்போகுது" , "நாசமாப் போகப்போகுது" என்று அடிக்கடி கூவிக்கொண்டே இருக்கின்றார். பாமரனான குடுகுடுப்பைக்காரனுக்கு தெரிந்த மனோதத்துவம் கூட, தங்களை தாங்களே அதிமேதாவிகளாக நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டும் இந்த குறுகுறுப்பைக்காரர்களுக்கு புரிவதில்லை. :unsure:

எவர் என்ன சொல்லிக் கூவித்திரிந்தாலும் எம்மிடம் வெற்றியை அடையும் தலைமையும் இருக்கிறது, அதை நிச்சயம் அடையும் திறமையும் இருக்கிறது!!!

Edited by vettri-vel

அது போல் இங்கு யாழ்களத்திலும் ஒரு குறுகுறுப்பைக்காரன் "நாசமாப் போகப்போகுது" , "நாசமாப் போகப்போகுது" என்று அடிக்கடி கூவிக்கொண்டே இருக்கின்றார். பாமரனான குடுகுடுப்பைக்காரனுக்கு தெரிந்த மனோதத்துவம் கூட, தங்களை தாங்களே அதிமேதாவிகளாக நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டும் இந்த குறுகுறுப்பைக்காரர்களுக்கு புரிவதில்லை. :unsure:

அதை முன் எச்சரிக்கை எண்டு சமாதானம் சொல்லி கொள்ளுவினம்.... எதையுமே சாதகமாக சிந்தித்ததால்தான் போராட்டம் இந்தளவுக்கு வந்தது எண்டது தெரிஞ்சு கொள்ளவே கன காலம் பிடிக்கும்...

ஆனா உதை "காத்து வளம் பாத்து மூத்திரம் பெய்ய தெரியாததுகள்" எண்டு ஊரிலை உதைதான் சொல்லுறவை... :lol:

Edited by தயா

ஆனா உதை "காத்து வளம் பாத்து மூத்திரம் பெய்ய தெரியாததுகள்" எண்டு ஊரிலை உதைதான் சொல்லுறவை... :unsure:

:lol::D:D:D:D:D:D

கொசோவாவின் சுதந்திர பிரகண்டனத்தை எதிர்த்த இலங்கைக்கு செய்யும் கைமாறாக இந்த உதவியை ரஸ்ஸியா செய்வதாக எடுத்து கொள்ளலாமா

தமிழர் ஏதோகோயில்களை உடைச்சு இப்ப தாயகத்திலை இல்லாத கட்டுமானம் கட்டுகினமாமே அதை உடைக்க பங்கர் பஸ்ரர் குண்டு குடுக்க போறாங்களோ என்னவோ.

தமிழர்களுக்குள்ளை குழப்பவாதிகள் அதிகம் இல்லை எண்டாலும் இருக்கிற ஒண்டு இரண்டை சாமாளிக்கிறது கடினம் தான்.

Edited by அகிலன்

என்ன தயா இப்ப போருக்கு அவசியம். நாம குறுக்காலபோகாம ஆற அமர இருந்து எப்படி நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பிறது எப்படி இராசதந்திரீதீயில் எல்லாவற்றையும் அணுகிறது எப்படி புலம்பெயர் மக்களுக்கு யூரீயூப் மூலம் பிரச்சாராம் செய்து அவர்களை போராட்டத்தின்பால் திருப்பிறது என்று யோசித்து ஒரு பத்்து வருடம் கழித்து போரைத் தொடங்குவோம். எங்களுக்கு போருக்கான ஒரு அவசியமும் இல்லை. அங்கு தமிழீழ மக்கள் சமாதானக் காற்றைச் சுவாசித்துக்கொண்டிருக்கின

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா உதை "காத்து வளம் பாத்து மூத்திரம் பெய்ய தெரியாததுகள்" எண்டு ஊரிலை உதைதான் சொல்லுறவை

:unsure::lol::D

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

ரசியா பண உதவி வழங்குவது என்பது ஒரு பாதிப்பான விடயம் தான். அதைச் சமாளிக்க என்னும் நாங்கள் வளமடையவேண்டியதே உணர வேண்டுமே தவிர, சிங்கள அரசைக் கேலி பண்ணுவதாலோ, அல்லது வீராப்புக் கதைப்பதாலோ எம் போராட்டத்திற்கு ஒரு வெற்றி வாய்ப்பையும் தரமாட்டது.

ரசியா பண உதவி வழங்குவது என்பது ஒரு பாதிப்பான விடயம் தான். அதைச் சமாளிக்க என்னும் நாங்கள் வளமடையவேண்டியதே உணர வேண்டுமே தவிர, சிங்கள அரசைக் கேலி பண்ணுவதாலோ, அல்லது வீராப்புக் கதைப்பதாலோ எம் போராட்டத்திற்கு ஒரு வெற்றி வாய்ப்பையும் தரமாட்டது.

அப்பிடி கதைப்பதால் உங்கட வெற்றியில் பாதிப்பும் ஏற்படாது...!

வளத்தா குடுமி சிரைச்சா மொட்டை இல்லை...! அழகாக வெட்டி சீவியும் விடலாம்...!!

நாங்கள் விழுவதை மட்டும் அல்ல விழுவதையும் பாடுகிறோம் எண்டு புதுவையண்ணா பேட்டியிலை சொன்னது போலத்தான்...! நாங்கள் எங்களை பார்த்து நாங்களே பரிதாபபட்டு கொள்ளுபவர்கள் இல்லை...

இவர்கள் ஆணிவேர் அறாத ஆல மரங்கள்

மீண்டும் வேர் விடுவார்கள்

விழுதெறிவார்கள்.

புதிதாய் பிறக்கும் புலிகளுக்குள்ளே

புகுந்து கொள்வார்கள்...

இப்படி சொல்லிதான் விழுந்து போன மாவிரர்களை கூட விதைக்கும் தேசத்திலை இருந்து வந்தவர்கள் நாங்கள் ...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா

நம்பிக்கையூட்டல், போரட்டத்தின் உண்மையான வெற்றி பற்றிக் கதைப்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஆனால் ரசியா போன்ற நாடுகள் உதவி, பணம் கொடுப்பதால் ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு ஈடுகட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று ஆராய்வதை விட்டு விட்டு, அதில் மலசலகூடம் கட்டத்தான் பயன்படும்.. அது.. இது என்று கதைப்பதால் எமக்கு ஏதும் ஆகிவிடப் போகின்றதா?

இப்படிக் கதைப்பதால் என்ன குறைப் போகின்றது எனக் கேட்கின்றீர்கள். நான் பதிலுக்குக் கேட்கின்றேன். இப்படிக் கதைப்பதால் என்ன எமக்குக் கூடிவிடப் போகின்றது???

போரட்டத்தின் வெற்றியில் பாதிப்பு ஏற்படாது என்று சொல்வதை ஏற்கமுடியவில்லை. யாழ்ப்பாணம் கைவிட நேர்ந்தபோது ஏற்பட்ட முக்கிய பிரச்சனை ஆள்பற்றாக்குறை. ஆனால்அப்போது யாழ்ப்பாணத்தார்கள் இப்படித் தான் கதை;ததார்கள். 4 பேர் நின்று லட்சத்தில் வந்த ஆமியைச் சுழட்டியடிக்கலாம் என்று.

யாழ்பாண இடப்பெயர்வால் ஏற்பட்ட பாதிப்புக்கள், அதில் இருந்து தலைவர் மீண்டுவர எடுத்த பெருமுயற்சி வெற்றி எல்லாம் கால இழப்பினை மட்டுமல்லாமல் தலைவரின் 40 வயதில் இருந்து 53 வயது வரையான வயதை வீணடித்து விட்டன.

அன்று நாம் உண்மையாக, தெளிவாக எம் போரட்டத்திற்கு என்னென்ன தேவை என்று உணர்ந்திருந்தோமானால் இதை விட எங்கோ சென்றிருக்க முடியும்.

மேற்கு நாடுகள் அவ்வப்போது இலங்கைக்கான ஆயுத உதவிகளை நிறுத்துவதாக அறிக்கை விடுகின்றது. ஒரு சமயம் அமரிக்காவுக்கு பதிலாக தான் உதவிகளை செய்வதாக ரசியா அறிவித்தும் உள்ளது.

ரசியா 500 மில்லியன் கொடுத்தால் அமரிக்கா 600 மில்லியன் கொடுக்கலாம் என்ற நிலை உள்ளது. இதையே ஒரு எதிர்வினையாக தமிழர் தரப்புக்கு சார்பாக அமரிக்காவோ அல்லது மேற்கு நாடுகளோ நடந்து கொள்ள வாய்ப்பில்லை. இதற்கு காரணம் இலங்கை சார்பான ஜப்பான் மற்றும் இந்தியாவின் அமரிக்கவுடனான நட்புறவு. தமழர் தரப்பு நியாயத்தை அங்கிகரிப்பதால் மேற்கு நாடுகளுக்கு என்ன லாபம் என்ற கண்ணோட்டமும் அவசியம்.

கொசோவாவை அங்கிகரிப்பதையும் குர்திஸ் மக்களை நசுக்குவதையும் ஒரே நேரத்தில் செய்கின்றது வல்லாதிக்கம். கொசோவாவையும் தமிழீழத்தையும் சம்மந்தப்படுத்தி பார்ப்பதற்கு நிறைய தரவுகள் பூகோள ரீதியாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் உள்ளது. இருந்தும் கொசோவவை அமெரிக்கா அங்கிகரித்தது ரசியாவுக்கு எதிரான ஒரு செயலே தவிர கொசோவா மக்களின் உரிமைகளை மதித்து அல்ல. இவ்வாறான நிலையில் தமிழீழத்தை அங்கிகரிப்பதற்கு வல்லாதிக்க சக்திகளின் நலன் சார்ந்த காரணங்கள் தேவை. இவ்வாறான ஒரு கோணத்தில் இலங்கை அரசு கொடுத்து வைத்தது. இந்திய பாகிஸ்தான் மற்றும் மேற்கு நாடுகள் ரசியா சீனா என்ற போட்டி நிலை ஆயுத உதவிகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது. என்னும் அதிகரிக்கவும் வாய்புள்ளது.

சிங்கள அரசு இன அழிப்பை செய்கின்றது அதை நாம் மேற்கு நாடுகளுக்கு வெளிப்படுதுதலே சாதகமான ஒரு வழி.

இன மத வர்க்க பேதங்களை கடந்து நிலத்திலும் புலத்திலும் தமிழர் ஒன்றுபட வேண்டும். தற்போதைய சூழலில் இலங்கையில் தமிழர்கள் மலயக தமிழர்கள். தமிழ் பேசும் முஸ்லீம்கள், தென்னிலங்கையில் நீண்ட காலம் வாழும் தமிழர்கள். கிழக்கு மாகாண தமிழர்கள். இடது சாரியம் போன்ற கொள்கைகள் ஊடாக தேசியத்தில் முக்கியத்துவமற்றிருக்கும் தமிழர்கள் போன்ற பல்வேறு தரப்பினார் அவர்கள் கொள்கை பொருளாதாரம் வாழ்விடம் போன்ற அடிப்படை பிரச்சனைகளை கடந்து தமிழீழம் உருவாவதற்கு துணை நிற்க வேண்டும்.

இனத்தை எவ்வளவு தூரம் கூறுபோட முடியுமோ அவ்வளவு தூரம் கூறுபோடுகின்றார்கள். இதுவே நாளை தமிழீழம் என்ற அங்கிகாரத்தின் தருணத்தில் பெரும்பான்மை தமிழர்கள் அதை நிராகரிக்க வழிகோலும் என்பதை உணர்ந்து செயற்படுகின்றனர்.

சிலர் மோட்டு சிங்களவன் என்று விழிப்பார்கள். ஆனால் தமிழரிடமும் சரிவதேச நாடுகளிடமும் உள்ள முரண்பாடுகளை கையாழ்வதிலும் பயன்படுத்துவதிலும் சிங்களவரின் சாதுரியத்தில் இரண்டு வீதம் கூட தமிழரிடம் இல்லை என்பதே உண்மை.

கருத்தியல் ரீதியாகவும் ஒரு உதாரணத்தை எடுத்தால் உலகில் தற்கொலைத்தாக்குதல்களுக்கு வழிகாட்டிகள் புலிகள் என்ற ஒரு கருத்தை அணித்தரமாக்குவதில் சிங்களம் மிகக் கஸ்டப்பட்டு வெற்றி கண்டது. நாம் கரும்புலிகளின் வீரத்தை புகழ்ந்தோம் தவறில்லை ஆனால் கரும்புலியின் உருவாக்கத்தில் வீரம் தியாகம் என்பதற்கு அப்பால் அதன் தேவையின் அவசியத்தையும் அதில் சர்வதேசத்தின் பங்கையும் எடுத்துச்சொல்வதில் தோல்விகண்டோம்.

நாம் சில தவறான ஊகங்களை மக்களிடம் இயல்பாக உலாவ விடுகின்றோம். இதன் மூலம் இந்த பிரச்சனையை கையாழ்வதில் மக்களை வழிநடத்த தவறுகின்றோம். நாம் செய்யவேண்டியது ரசிய தூதரகத்தின் முன்னால் ஆர்பாட்டமே. அது சம்மந்தமான ஒரு திசையில் கருத்தை நாம் நகர்த்த தெரியாதவர்கள் என்பதே உண்மை.

ஒரே வழி தான் அடிமையாக இருப்பதே

இப்ப இருக்கிற மாதிரி நாங்கள் புலம் பெயர் நாட்டில

வெள்ளைக் காரனுக்கு அடிமையாக இருக்கிறம் ஆனால் பெருன்பான்மையான் சிங்களவனுக்கு அடிமையாக இருப்பதில் என்ன பிரச்சனை? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் செய்யவேண்டியது ரசிய தூதரகத்தின் முன்னால் ஆர்பாட்டமே.

ஆர்ப்பாட்டபமெல்லாம் பிரயோசனம் இல்லாத வேலை என்று ஒதுங்கி இருக்கும் கூட்டம் அதிகம்.. அப்படி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தினாலும், ஒரு சிலர்தான் பங்குபற்றுவார்கள். இப்படியான தமிழர்களின் செயற்பாட்டால்தான் எதிர் எதிர் முகாம்களில் உள்ள நாடுகளில் இருந்து சிங்கள அரசு தாராளமான இராணுவப் பொருளாதார உதவிகளைப் பெற்றுவருகின்றது..

முதலில் இந்தியாவின் இரகசிய இராணுவ உதவிகளை நிறுத்த இந்தியத் தூதரகங்களுக்கு முன்னர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும். ஆனால் நம்மவர்களால் முடியுமா?

ஆர்ப்பாட்டபமெல்லாம் பிரயோசனம் இல்லாத வேலை என்று ஒதுங்கி இருக்கும் கூட்டம் அதிகம்.. அப்படி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தினாலும், ஒரு சிலர்தான் பங்குபற்றுவார்கள். இப்படியான தமிழர்களின் செயற்பாட்டால்தான் எதிர் எதிர் முகாம்களில் உள்ள நாடுகளில் இருந்து சிங்கள அரசு தாராளமான இராணுவப் பொருளாதார உதவிகளைப் பெற்றுவருகின்றது..

ஆர்பாட்டதிலை பெரிசா கதை விடுகிற நீங்களே கலந்து கொள்வது இல்லை எண்டதுதானே உண்மை...

ஆர்ப்பாட்டம் எல்லாம் அந்த அந்த நாட்டு மக்கள் குறிப்பாக ஜரோப்பிய நாட்டில் அந்த நாட்டு மக்கள் செய்யனும் அதுக்கு கொஞமாவது பயபிடுவார்கள் நாங்கள் பன்னி ஒரு பலனும் கானப்போவது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்பாட்டதிலை பெரிசா கதை விடுகிற நீங்களே கலந்து கொள்வது இல்லை எண்டதுதானே உண்மை...

இஸ்ரேல்காரன் தயாரித்த AGPS தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன கருவி (surveillance camera & video security system) மூலம் எனது ஒவ்வொரு அடிகளையும் கண்காணிக்கும் உங்களுக்குத் தெரியாத விடயங்கள் ஏதாவது இருக்கா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயல் பிடிக்கின்ற நாயை மூஞ்சையில் தெரியுமாமே. இதற்குப் போய் இஸ்ரேல், புலனாய்வுத் தகவல்கள்... எல்லாம் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டம் எல்லாம் அந்த அந்த நாட்டு மக்கள் குறிப்பாக ஜரோப்பிய நாட்டில் அந்த நாட்டு மக்கள் செய்யனும் அதுக்கு கொஞமாவது பயபிடுவார்கள் நாங்கள் பன்னி ஒரு பலனும் கானப்போவது இல்லை

தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்துவதன் மூலம் உலக நாடுகள் தங்கள் இராணுவ, பொருளாதார உதவிகளை உடனடியாக நிறுத்தமுடியும் என்று சொல்லவரவில்லை. ஆனால் போராட்டத்தின் மீதான ஆதரவு புலம்பெயர் தமிழரிடையே எவ்வளவு உள்ளது என்பதைக் காட்டமுடியும். இதன்மூலம் அவ்வவ் நாடுகள் தமது நீண்டகால உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவரச் சந்தர்ப்பம் உள்ளது..

"ஒரு பலனும் காணப்போவதில்லை" என்று பலர் ஒதுங்கி இருப்பதால்தான் தமிழர் போராட்டத்திற்கு பெரிய ஆதரவு இல்லையென்ற தோற்றப்பாட்டை சிங்கள அரசின் கூலியைப் பெற்று வாழ்க்கை நடாத்தும் சிலர் இங்கு ஏற்படுத்த முனைகின்றனர். அதற்கு நாங்களும் உடந்தையாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Jayadevan however said that such a response was unacceptable as there did not seem to be a collective response by the government. 'This is a delegation on the request of the President arranged by the FM through the HC and paid for by the FM. We agreed to bring a 10 member delegation. There was the intention and goodwill on the part of the government. Work we do in the diaspora is quite heavy. If the JVP and JHU say we are going to defeat the LTTE it is all because of the work that we do there to stop the funding to the LTTE,' he said.

"I have informed the British Home Office about this visit and they were very happy. Also there is an acceptance by the international community for a level of engagement by the diaspora because they are the only ones that have a free voice to speak.

"The credibility of the pronunciations made by the Tamils in Sri Lanka is doubted because they are not independent - they are aligned to the government. The EPDP is a part of the government. The TMVP, all those groups are part of the government. But all of them can't express themselves freely and speak on behalf of the Tamil people. What they are all saying is that their hands are tied. So only the diaspora can express even what the Tamil parties within government have to say and only they can come out and say it," Jayadevan had said.

http://www.thesundayleader.lk/20080302/spotlight.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.