Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் உள்ளுராட்சி தேர்தல் - மக்கள் அக்கறை காட்டவில்லை

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி எஸ்.அருமைநாயகம் அறிவித்திருக்கும் அதேவேளையில், இன்று காலை இலங்கை நேரப்படி 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியிருக்கின்றது. மாலை 4.00 மணிவரையில் வாக்களிப்பு இடம்பெறும் எனவும், மாலை 4.30 க்கு தபால் மூலமான வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இன்று காலையில் கிடைத்த முதலாவது செய்தியின்படி பொதுமக்கள் வாக்களிப்பில் பெருளவு அக்கறையைக் காட்டவில்லை. வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் குறைந்தளவிலானோரே காலை 9.00 மணிவரையில் வாக்களிக்க வந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. வழமையாக காலையிலேயே வாக்களிப்பதில் அக்கறை காட்டும் வாக்காளர்கள் இன்று அந்த அக்கறையைக் காண்பிக்காததது, வாக்களிப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கப்போவதைத்தான் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒன்பது உள்ளுராட்சி மன்றங்களுக்கான இந்தத் தேர்தல் 291 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறுகின்றது. இடம்பெயர்ந்தவர்களுக்காகவென தனியாக ஆறு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் நேற்றிரவே அனுப்பிவைக்கப்பட்டன. தேர்தல் கடமைகளில் 1,400 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றா

அவசரப்பட வேண்டாம் சபேசன்.

மக்கள் வாக்களிக்காவிட்டாலும் வாக்குப்பதிவு 70 - 80 % கூட வரலாம்.

இது தொடர்பாக எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது.

ஒரு முறை நடந்த பொதுத் தேர்தலில் (ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை) ஊர்காவற்துறைக்கு தேர்தல் கடமைக்காகச் சென்றிருந்தேன். 2 மணி வரை ஒரு 15 பேர் கூட வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வரவில்லை. ஆனால் மூன்று மணியளவில் ஆயுதங்களுடன் வந்த ஈபிடிபிக் கும்பல் வாக்குப் புத்தகங்களைப் பறித்து எல்லாவற்pறிலும் தாங்களே வாக்குக்களைப் பதிந்து பெட்டிகளை நிரப்பினார்கள்.

அது போல இங்கும் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவாலும் வாக்களிக்க முடியாமல் போய்விட்டதே.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிகாத வாக்குகளை பிள்ளையான் குழு மளமளவென வாக்களித்து விட்டு வெளியுலகுக்கு அதிகப்படியான மக்கள் வாக்களித்துள்ளார்கள் என காட்டிவிடுவார்கள் இந்த துரோகிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உந்த வெற்றி பெறப்போற வேட்பாளர்கள் என்ன செய்யப் போகினம்? எல்லாரும் ஆளுக்கொரு ஏகே 47 ஓட திரியப் போகினமோ அல்லது அரசாங்கம் ஏதாவது அதிகாரங்களக் குடுத்து, றோட்டுப்போடுறத்தில கொண்ட்றைக்ரர் மாரிட்ட கொமிசனடிக்கப் போகினமா எண்டு தெரிய இல்ல. மொத்தத்தில துப்பாக்கிமுனையில அரசியல் அதிகாரப்பரவலாக்கல் பிறக்கப் போகுதுபோல. பொறுத்திருந்து பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் பிரச்சாரத்துடனும்.. இந்திய மற்றும் சில சர்வதேச சக்திகளின் சூழ்ச்சியுடனும் தென் தமிழீழ மக்களின் தமிழீழக் கனவுக்கு இடையூறு செய்யும் நோக்கோடு தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களை தங்கள் அரசியல் பலமாகக் கருதிக் கொண்டு சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட தேர்தலை மட்டக்களப்பு நகர மக்கள் துணிச்சலுடன் மறைமுக ஹர்த்தால் நடத்தி பகிஸ்கரித்திருப்பதை தேர்தல்களைக் கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான பவ்ரல் அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் அருட்சகோதரர் சில்வஸ்டர் சிறீதரன் பிபிசி தமிழ் சேவைக்கு வழங்கிய நேரடிச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மொத்த மட்டக்களப்பு மாவட்டமே இந்தத் தேர்தலில் பெரிதாக அக்கறை செலுத்தவில்லை என்றும் பவ்ரல் இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுவாக வாக்களிப்பு மந்த கதியில் இருந்துள்ளதுடன் வாக்குப் பதிவும் மந்தகதியில் அதிக சோதனைக் கெடுபிடிகள் மத்தியில் நிகழ்ந்துள்ளது. அதிலும் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக பவ்ரல் குற்றம்சாட்டியுள்ளது..!

ஆனால் அரச தேர்தல் அதிகாரி சுமார் 56% வாக்குகள் சுமுகமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

ஆயுதக் குழுக்களின் இராணுவத்தின் அரசின் கெடுபிடிகளுக்கும் மத்தியில் மட்டக்களப்பு மக்கள் தமிழீழ விடுதலைக் கனவோடு இத்தேர்தலை தம்மால் முடிந்த அளவுக்கு புறக்கணிக்க விளைந்துள்ளதை பவ்ரல் அதிகாரியின் கூற்று வெளிப்படுத்தி நிற்கிறது.

துணிச்சல் மிக்க தென் தமிழீழ மக்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்போமாக.

http://www.bbc.co.uk/tamil/2115.ram

Edited by nedukkalapoovan

துரோகங்களுக்குத் துணைபோகாதவர்கள். என்றும் வீரமுடையவர்கள். அவர்களின் செயற்பாட்டிற்கு தலை வணங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லணாதுயரை இந்த இனவாத அரசாலும், துணைபடையாலும் தென் தமிழீழ மக்கள் மறக்க தயாரில்லை.நூறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக மர நிழலின் வசிப்பதோடு, ஒரு நேர உணவுக்கே அல்லல் படும் போது தேர்தல் ஒரு கேடா.?

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பதில் தலைவராக இருந்தவர் இன்றோடு "தலைவர்" ஆகிவிட்டார்.. எத்தனை பேரின் தலையை வாரப் போகிறாரோ தெரியவில்லை. எல்லாம் மகிந்த ஆண்டவருக்கே வெளிச்சம்..

  • கருத்துக்கள உறவுகள்

துரோகங்களுக்குத் துணைபோகாதவர்கள். என்றும் வீரமுடையவர்கள். அவர்களின் செயற்பாட்டிற்கு தலை வணங்க வேண்டும்.

தலைவணங்குகின்றேன்

இன்றைய மட்டு நிலவரங்கலை அன்று 90களின் நடுப்பகுதியில் யாழை கைப்பற்றி விட்டி சிறிலங்கா அரசு நடாத்திய தேர்தல் நாடகத்தோடு ஒப்பிடலாம். அன்று டக்லஸ் எனும் கூலியை இந்தியாவிலிருந்து இறக்கி விட்டு உதே நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருந்தது .

யாழ் மண்ணில் உதிர்த்த எட்டப்பர்கலை விடவா மட்டுவில் தோன்றி விட்டார்கள். அமிர்தலிங்கம் தொடக்கம் ஆனந்தசங்கரி ஈறாக டக்லஸ், சித்தார்த்தன், வரதராஜப்பெருமாள், பத்மநாபா ....மாத்தையா .... இது போதாதற்கு உண்டியலான் கூட்டம் வேறு....

ஆனால் மட்டு மண்ணில் தோன்றிய துரோகிகள் தேவநாயகம்,தொடக்கம் ராசிக், புளொட் மோகன், கருணா வரை ஒருவரும் இன்றில்லை!!! உந்தப் பிள்ளையானின் ஆட்டமும் எவ்வளவு நாளைக்கு???? பார்ப்போம்!!!

நேற்றய தினம் தற்சமயமாக மட்டுவிலுள்ள ஓர் ஊரின் இணையத்தை பார்க்க முற்பட்டபோது,

http://www.arayampathy.com/

அவ்வூர் எம்மண்ணுக்கு செய்த தியாகம் தெரிந்தது. இது ஓர் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ... மட்டு மண்ணில் எல்லா ஊர்களிலும் இதே சேதியைத்தான் சொல்லும்!

எவ்விடர் வரினும் தலை குனியா அம்மக்களுக்காக தலை சாய்த்து வணங்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: துரோகிகள் தமது துரோகத்தனங்களுக்குக் கூறும் காரணங்கள் விசித்திரமானவை. கிழக்கில் கருணாவைப் போல் வடக்கில் எத்தனை ? தேசியத் தலைவரின் உறவினர் என்று கூறப்பட்ட மாத்தையா இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து தலைவரையே அழிக்கத் திட்டமிடவில்லையா ? அவருடன் ஒப்பிடும்போது கருணா செய்தது குறைவுதான். ஆனால் மாத்தையாவின் பிரிவால் இயக்கத்துக்கு ஏற்பட்ட இழப்பை விட கருணாவால் ஏற்பட்ட இழப்பு அதிகம்.

நாம் பிரதேச வாரியாக துரோகிகளை இனங்காணுவதை விடுத்து தனி நபர்களாக இனங்காணுவதே அனைவருக்கும் நல்லது. தமது துரோகத்தனத்தை மறைக்க அவர்கள் கூறும் காரணம் எப்படியிருந்தாலும் கூட.

ராணுவத்தினதும் , ஒட்டுக்குழுக்களினதும் அழுத்தங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் முகம் கொடுத்தும் தமது இலட்சியத்தில் உறுதியாய் நின்ற எமது தென் தமிழீழ சகோதரர்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இதற்கும் 1989 இல் இந்திய அமைதிப்படை காலத்தில் நடந்த மாகாணசபைத் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம் ? அன்று இந்தியா தான் விரும்பிய பொம்மைகளை ஆட்சிப் பீடத்திலேற்றியது, இன்று மகிந்த இந்தியாவின் அனுசரணையோடு தனக்குப் பிடித்த கொலைகாரனான பிள்ளையானை ஆட்சியில் அமரவைக்கப் பாடு படுகிறான். அவ்வளவுதான்.

இவை ரெண்டாலுமே தமிழருக்கு கிடைத்தது அவல வாழ்வும், அக்கிரமங்கள் நிறைந்த ஒரு கொலைகாரக் கும்பலின் ஆட்சியும்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.