Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு தேர்தல் - பிள்ளையான் குழு அமோக வெற்றி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு தேர்தலில் முஸ்லீம் பகுதிகளில் முஸ்லீம் காங்கிரசும்.. ஏனைய இடங்களில் பிள்ளையான் குழுவும் செய்ய வேண்டிய அனைத்து திருகுதாளங்களையும் அடாவடித்தனங்களையும் செய்து அமோக வெற்றி ஈட்டியுள்ளன.

மட்டக்களப்பு நகர சபையைக் கூட பிள்ளையான் அணியுடன் கூட்டுச் சேர்ந்து சிறீலங்காவில் அரசாளும் கட்சி கைப்பற்றியுள்ளது. அதில் பிள்ளையான் தரப்பு பெண்மணி நகர முதல்வராக தெரிவாகியுள்ளார்.

வாழ்க ஜனநாயகம். சர்வதேச ஜனநாய சக்திகள் எனி சிறீலங்காவை உலகின் முதன்னிலை ஜனநாயக நாடு என்று வர்ணிச்சு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கிறதுமில்லாம.. புலி ஒழிப்புக்கும் உதவத்தான் செய்வினம்..! :D:(:o

Edited by nedukkalapoovan

  • Replies 71
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கலபோவான்:

மட்டக்களப்பு தேர்தலில் முஸ்லீம் பகுதிகளில் முஸ்லீம் காங்கிரசும்.. ஏனைய இடங்களில் பிள்ளையான் குழுவும் செய்ய வேண்டிய அனைத்து திருகுதாளங்களையும் அடாவடித்தனங்களையும் செய்து அமோக வெற்றி ஈட்டியுள்ளன.

இனி கிழக்கில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பித்தலாட்டமெல்லாம் தமிழ்த்தரப்பிற்கு புதியவையுமல்ல, பாரதூரமானவையுமல்ல.

எதிர்வரும் காலங்கள் பதில் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ஆசனங்களையும் பெற்றால் உண்மை தெரிஞ்சிடும் என்று, ஒன்று இரண்டு ஆசனங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்த பெருந்தன்மையைப் பாராட்டுறன்.

சரி பார்ப்போம் ...கிழக்கு மக்களுக்கு என்ன செய்யபோயினம் என்று..! புலிகள் செய்யாதது என்னத்தை செய்யப்போயினும் என்று..! புலிகளுக்கு எதிராக பிரதேசவாதத்தை புகுத்தினவை அல்லோ ..!

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஜனநாயம் என்ற ஒன்று இருந்தால் தானே அதை நிலைநாட்டுவதற்கு.

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனகொரு கவலை இல்லை... :o (எங்க எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ :( )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டு தேர்தல் முடிவுகளை தவறானது என்று கூறி சிறீலங்காவின் பிரதான எதிர்க்கட்சி நிராகரித்து விட்டுள்ளது.

இத்தேர்த்தல் சிறீலங்கா மக்களையும் சர்வதேச சமூகத்தையும் முட்டாள் ஆக்க நடத்தப்பட்ட என்று வர்ணித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, சில குழுக்கள் வாக்காளர் அட்டைகளை பறித்தெடுத்த சம்பவங்களையும் சில இடங்களில் 1000 ரூபாவுக்கு அவற்றை வாக்கியதையும் நினைவுபடுத்தியுள்ளது..!

UNP rejects Batti poll results

The main opposition UNP today said it would reject the results of the local government election as it has been a false one held with an objective of fooling the people of the country and the international community. The party alleged that there have been incidents of grabbing poll cards and even purchasing them for Rs 1000 in some places.

- dailymirror.lk

  • கருத்துக்கள உறவுகள்

வாக்காளரை அழைத்துச் சென்றாராம் பொலிஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு

[ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 07:42.11 AM GMT +05:30 ]

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பின் போது, வாழைச்சேனை, கோரளைப்பற்று வாக்குச்சா வடி ஒன்றுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் வாக்காளர்களை சட்டவிரோதமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றார் என்று மட்டக்களப்பு தேர்தலுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஹேரத்திடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முறையிட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பாரிசோதகராகக் கடமையாற்றும் ஒருவரே கோறளைப் பற்றுப் பிரசே சபையின் 39 ஆம் இலக்க வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை ஏற்றிச் சென்றுள்ளார் என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை பொலிஸ் அதிகாரி ஒருவர் வாக்காளர்களை ஏற்றிச் செல்லல் தேர்தல் வன்முறைச் சம்பவம் என்று "பவ்ரல்' அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது எனக் கூறப்பட்டது.

tamilwin.com

மட்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பான பிள்ளையான் குழு கைப்பற்றியுள்ளது.

பிள்ளையான் குழு 9 உள்ளுராட்சி மன்றங்களில் தனித்துப் போட்டியிட்ட 8 மன்றங்களின் அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மட்டு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைபற்றியுள்ளது.

இதன்படி, 101 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் 61 ஆசனங்களை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு கைப்பற்றியுள்ளது.

எஞ்சிய 40 ஆசனங்களில் 16 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், சுயேட்சைக் குழுக்கள் 15 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபையில் ஈழவர் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் மொத்தமாக 73,005 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21,749 வாக்குகளையும் பெற்றுள்ளன.

சுயேட்சைக் குழுக்கள் 31,745 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13,301 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஈழவர் ஜனநாயகக் கட்சி 1,417 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.

பதிவு செய்யப்பட்ட சுமார் 270,000 வாக்குகளில் 161,000 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 21,000 ஆயிரம் வாக்குகள் வரை நிராகரிக்கப்பட்டுள்ளன.

சுமார் 4,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலின் பாதுகாப்பிற்காக 6,400 பொலிஸ் மற்றும் இராணுவம், விசேட அதிரடிப் படையினர் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதனால், அங்கு நியாயமான தேர்தல் நடத்தப்படமாட்டாது எனத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட கட்சிகள் சில இந்தத் தேர்தலை நிராகரித்திருந்தன.

வாழைச்சேனையில் பல வாக்கு மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவித்த தேர்தல் சிவில் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் சுனந்த தேசப்பிரிய ஏனைய வாக்குச் சாவடிகளில் வன்முறைகள் அற்ற வாக்குப் பதிவுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.

நன்றி : www.lankadissent.com/Tamil/

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

வாக்காளரை அழைத்துச் சென்றாராம் பொலிஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு

[ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 07:42.11 AM GMT +05:30 ]

இதேவேளை பொலிஸ் அதிகாரி ஒருவர் வாக்காளர்களை ஏற்றிச் செல்லல் தேர்தல் வன்முறைச் சம்பவம் என்று "பவ்ரல்' அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது எனக் கூறப்பட்டது.

tamilwin.com

கிழக்குமாகாணத்தைப் பற்றி அறிந்துகொள்ளாமல் கிழக்குமாகாணத்தைப் பற்றி யாழ்ப்பானத்தவர்கள் கருத்துச் சொல்லவதும் முடிவுகள் எடுப்பதும் கிழக்குமாகாண மக்களுக்கு உடன்பாடானதல்ல. குறிப்பாக கிழக்கு மாகாண இளைஞர்கள் அதனை நிராகரிக்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலையின் பெயரில் நடக்கும் அமைப்புகள் ஊடகங்கள் வானொலிகள் பல புலம் பெயர்ந்த கிழக்குமாகாணத்தவர்களின் பங்களிப்பில்லாமல் நடப்பதாக சிவராம்போன்ற விடுதலை ஆர்வலர்களே கவலைப் பட்டார்கள். இதனை அவரும் வன்னியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பார் என்றே நம்புகிறேன். விடுதலைப் பயணத்தில் நாம் வெளிநாடுகளில் தனிமைப் பட்டதற்க்கு வெளிநாட்டுகள் சிலதில் நடைபெறும் அதிகாரப் போட்டியும் திறமையானவர்களைக் கண்டு அஞ்சி ஒதுக்குவதும் அவர்களைப் பற்றி வன்னிக்கு விடுதலைக்கு எதிரானவர்கள் என பொய்த் தகவல் அனுப்பி மேலும் சிக்கல்களை ஏற்படுத்துவதுமே முக்கிய காரணங்கள். இது கனடாவில் இ தொடர்பாக வெற்றி பெறவில்லை. ஆனால் இலண்டனில் ஜெ தொடர்பாக வெற்றி பெற்று சிக்கலை இடியப்பச் சிக்கலாக்கியது.

கிழக்கு மாகானத் தமிழர்கள் போராட்டத்தை ஆதரிப்பதோடு பாராளுமன்றத்தில் தமிழ் வேட்பாளரை ஆதரிப்பவர்கள். பகிஸ்கரிப்பு அவர்கள் நிலைபாட்டில் சாத்தியமில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர் மூன்று இனத்தவரும் அப்படித்தான் செயல் படுகிறார்கள்.

தேர்தலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் புலம்பெயர்ந்த அமைப்புகள் ஊடகங்கள் வானொலிகளில் கிழக்கு மாகானத்தின் பங்களிப்பை அதிகரியுங்கள். எங்கள் வட்டங்களின் ஆதிக்கத்தைவிட நாட்டு விடுதலை முக்கியம் என்பதை உணர்ந்து இனியாவது பரந்து பட்டு செயல் பட முன்வரவேண்டும்.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

61 ஆசனங்களை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு கைப்பற்றியுள்ளது.

இந்த 61 பேரும் ஒரு நாளைக்கு பொட்டு வாங்கத் தானே போகினம். எட்டப்பர்கள்.. நீண்ட காலம் ஆட முடியாது..! அதுதான் கடந்த கால வரலாறு..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்குமாகாணத்தைப் பற்றி அறிந்துகொள்ளாமல் கிழக்குமாகாணத்தைப் பற்றி யாழ்ப்பானத்தவர்கள் கருத்துச் சொல்லவதும் முடிவுகள் எடுப்பதும் கிழக்குமாகாண மக்களுக்கு உடன்பாடானதல்ல. குறிப்பாக கிழக்கு மாகாண இளைஞர்கள் அதனை நிராகரிக்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலையின் பெயரில் நடக்கும் அமைப்புகள் ஊடகங்கள் வானொலிகள் பல புலம் பெயர்ந்த கிழக்குமாகாணத்தவர்களின் பங்களிப்பில்லாமல் நடப்பதாக சிவராம்போன்ற விடுதலை ஆர்வலர்களே கவலைப் பட்டார்கள். இதனை அவரும் வன்னியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பார் என்றே நம்புகிறேன். விடுதலைப் பயணத்தில் நாம் வெளிநாடுகளில் தனிமைப் பட்டதற்க்கு வெளிநாட்டுகள் சிலதில் நடைபெறும் அதிகாரப் போட்டியும் திறமையானவர்களைக் கண்டு அஞ்சி ஒதுக்குவதும் அவர்களைப் பற்றி வன்னிக்கு விடுதலைக்கு எதிரானவர்கள் என பொய்த் தகவல் அனுப்பி மேலும் சிக்கல்களை ஏற்படுத்துவதுமே முக்கிய காரணங்கள். இது கனடாவில் இ தொடர்பாக வெற்றி பெறவில்லை. ஆனால் இலண்டனில் ஜெ தொடர்பாக வெற்றி பெற்று சிக்கலை இடியப்பச் சிக்கலாக்கியது.

கிழக்கு மாகானத் தமிழர்கள் போராட்டத்தை ஆதரிப்பதோடு பாராளுமன்றத்தில் தமிழ் வேட்பாளரை ஆதரிப்பவர்கள். பகிஸ்கரிப்பு அவர்கள் நிலைபாட்டில் சாத்தியமில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர் மூன்று இனத்தவரும் அப்படித்தான் செயல் படுகிறார்கள்.

தேர்தலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் புலம்பெயர்ந்த அமைப்புகள் ஊடகங்கள் வானொலிகளில் கிழக்கு மாகானத்தின் பங்களிப்பை அதிகரியுங்கள். எங்கள் வட்டங்களின் ஆதிக்கத்தைவிட நாட்டு விடுதலை முக்கியம் என்பதை உணர்ந்து இனியாவது பரந்து பட்டு செயல் பட முன்வரவேண்டும்.

ஒரு காலத்தில் நெடுந்தீவு ஊர்வாதியாயிருந்து .. செங்கையாழியானின் "வாடைக்காற்று" நாவலை எதிர்த்து ஆர்ப்பாட்ட நடாத்திய பாவலர் (Poet) இப்போது அவறறையெல்லாம் கடந்து .. வடக்கு கிழக்கு ஒற்றுமை பற்றி எழுவதனையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பு: உண்டியலான் என்ற ஜெ பற்றி யாரும் பொய்த்தகவல் கொடுக்கவில்லை. தகவல் சரியாளது. தீர்வுதான் பிழைத்துவிட்டது.

MI7, நானும் என் அம்மாவும் அம்மம்மாவும் பிறந்த ஊரான உடுவிலில்கூட எனக்கு தமிழரதும் முஸ்லிம்களதும் பாரம்பரிய தாயகமான என் என்தாய் நாட்டின் பகுதிதான். என்தந்தையாரும் தாயாரின் தந்தையாரும் பிறந்த ஊர் நெடுந்தீவு. நெடுந்தீவும் என் தாய் நாட்டின் பகுதிதான். வாடைக்காற்றுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நான் ஆதரித்த இலங்கைக் கம்மயூனிஸ்ட் வாலிபர் அமைப்பு ஒன்று வர்க்க கலாச்சார அடிப்படையில் என் ஆதரவோடு முன்னெடுத்தது. இதெல்லாம் செங்கையாளியானுக்கும் எனக்குமிடையிலான பரஸ்பரம் மதிப்பை பாதிக்கவில்லை.

தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் வாசித்தீர்களா? மட்டக்களப்புத் தொடர்பான எனது ஆய்வறிக்கைகள் வாசித்தீர்களா? கருணாவின் பிளவின்போது சூரியன் எப்.எம் மற்றும் வீரகேசரியில் வெளிவந்த அறிக்கைகள் வாசித்தீர்களா? பலவிடயங்கள் இங்கு எழுத முடியாது. கிழக்கு மாகான அரிஞர்களிடமும் முஸ்லிம்களிடமுமாவது அல்லது விடுதலைப் போராளிகளிடமாவது என்னைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். தாயக பிரதேசங்களின் சமத்துவம் தாயக இனங்களின் ஒற்றுமை என் இரத்ததில் இருக்கு நண்பரே. .

நான் இங்கு எழுதிய எல்லா விடயங்களும் பல்வேறு விடுதலை தளங்களில் விவாதிக்கப் பட்டவைதான். ”தகவல் சரியாளது. தீர்வுதான் பிழைத்துவிட்டது.” என்கிற உங்கள் தனிப்பட்ட கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தகவல் பிழையானது. இறுதி தீர்ப்பு சரியானது. ஜெ சொந்த துன்பங்களுக்கும் மேலாக விடுதலையை உயர்த்திப் பிடித்திருக்கவேணும். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. தாய் நாட்டின் விடுதலைக்குக்கு ஆதரவு நிலைப்பாடு எடுப்பதற்க்கு எப்பவுமே காலம் கடந்துபோவதில்லை.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

திரு பொயற் அவர்கள் கூறுவது முற்றிலும் சரியானதே. லண்டனில் உள்ள பல அமைப்புகளிலும் கிழக்கு மாகாணத்தவர்களைப் பொறமொதுக்கும் செயல்களை நானும் அவதானித்திருக்கிறேன். இங்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தானும் கிழக்கு மாகாணத்தவரின் பங்களிப்பு தேசிய முனைப்புக்கொண்ட அமைப்புகளிலோ நிகழ்ச்சிகளிலோ காணப்படுவதில்லை. தமிழ்த் தேசியத்தின்மீது பற்றுள்ளவர்களையும் அவர்கள் வேண்டுமென்றே பிரதேச உணர்வோடு ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனாலும் பல கிழக்கு மாகாணத்தவர்கள் தங்களது பூமி தமிழீழத்தாயகம் என்ற உணர்வோடு தொடர்ந்து தம் பங்கை ஆற்றத் தவறுவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

MI7, நானும் என் அம்மாவும் அம்மம்மாவும் பிறந்த ஊரான உடுவிலில்கூட எனக்கு தமிழரதும் முஸ்லிம்களதும் பாரம்பரிய தாயகமான என் என்தாய் நாட்டின் பகுதிதான். என்தந்தையாரும் தாயாரின் தந்தையாரும் பிறந்த ஊர் நெடுந்தீவு. நெடுந்தீவும் என் தாய் நாட்டின் பகுதிதான். வாடைக்காற்றுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நான் ஆதரித்த இலங்கைக் கம்மயூனிஸ்ட் வாலிபர் அமைப்பு ஒன்று வர்க்க கலாச்சார அடிப்படையில் என் ஆதரவோடு முன்னெடுத்தது. இதெல்லாம் செங்கையாளியானுக்கும் எனக்குமிடையிலான பரஸ்பரம் மதிப்பை பாதிக்கவில்லை.

தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் வாசித்தீர்களா? மட்டக்களப்புத் தொடர்பான எனது ஆய்வறிக்கைகள் வாசித்தீர்களா? கருணாவின் பிளவின்போது சூரியன் எப்.எம் மற்றும் வீரகேசரியில் வெளிவந்த அறிக்கைகள் வாசித்தீர்களா? பலவிடயங்கள் இங்கு எழுத முடியாது. கிழக்கு மாகான அரிஞர்களிடமும் முஸ்லிம்களிடமுமாவது அல்லது விடுதலைப் போராளிகளிடமாவது என்னைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். தாயக பிரதேசங்களின் சமத்துவம் தாயக இனங்களின் ஒற்றுமை என் இரத்ததில் இருக்கு நண்பரே. .

நான் இங்கு எழுதிய எல்லா விடயங்களும் பல்வேறு விடுதலை தளங்களில் விவாதிக்கப் பட்டவைதான். ”தகவல் சரியாளது. தீர்வுதான் பிழைத்துவிட்டது.” என்கிற உங்கள் தனிப்பட்ட கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தகவல் பிழையானது. இறுதி தீர்ப்பு சரியானது. ஜெ சொந்த துன்பங்களுக்கும் மேலாக விடுதலையை உயர்த்திப் பிடித்திருக்கவேணும். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. தாய் நாட்டின் விடுதலைக்குக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பதற்க்கு எப்பவுமே காலம் கடந்துபோவதில்லை.

"வாடைக்காற்று" நெடுங்கதைக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு தலைமைதாங்கியமையை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி பாவலரே. அந்த எதிர்ப்புக்கு கம்யூனிச சாயமிருந்தது எனக்கு தெரியாது. தமிழனுக்கு நல்லது எதளனயும் இலங்கை கம்யுனிஸ்ட்டுகள் செய்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் ஊர்வாதம்தான் இங்கு துருத்திக்கொண்டு தெரிகிறது.

அப்படியில்லையெனின். உங்கள் எதிர்ப்பிற்கான காரணத்தை (அந்த வர்க்க கலாச்சர சங்கதியை) அறிந்து கொள்ளலாமா? இங்கு எழுதுவது சிரமமெனின் இதுபற்றிய தகவல்களை எங்கு பெற்றுக் கொள்ளலாம்? தனிமடலிலும் பதில்தரலாம்.

சல்மான் ருஸ்டி, தஸ்லிமா நஸ்ருடின் போன்ற இலக்கியவாதிகளுக்கு எதிர்ப்புக்காட்டிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நடவடிக்கைக்்கும் உங்களுடைய எதிர்ப்புக்கும் உள்ள வேறுபாடுகளை (அல்லது ஒற்றுமையை) அறிய ஆவல். அவ்வளவுதான்.

சிறிலங்கா முஸ்லீம்கள் வி்்டயத்தில், நீங்கள் எழுதி குவிப்பவர் என்பது தெரியும். சும்மா புகுந்து விளையாடி உங்கள் இருப்பை காட்டுவீர்கள் என்பதும் தெரியும்.

உண்டியாலானை பற்றி உங்களுடன் தர்க்கித்து உங்களை தாழ்த்த விருப்பமில்லை. விட்டுவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்காக கம்யூனிட்டுகள் ஒன்றும் செய்யவில்லையென்று சாதி வெறியர்கள் மட்டும்தான் சொல்ல முடியும். 1940 - 1970பதுகளில் மாட்டுவண்டிப் போட்டியில் தலித் வென்றபோது மாலையை மாட்டுக்கு அணிவித்த தேசிய வாதிகளை கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள்தான் மனிதர்களாக்கியது. அமரர் அன்ரன் பாலசிங்கமும் கவிஞர் புதுவையும் நானும் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளோடு நின்றோம். 1980பதுகளில் சாதி கடந்த தமிழ்த் தேசிய ஒருமைப் பாடு தோன்றியதற்கு கம்பூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு முக்கியமானது. தேசிய இனப் பிரச்சினையில் அவர்கள் வழி தவறியபோது அமரர் அன்ரன் பாலசிங்கத்தையும் புதுவையையும் என்னையும்போன்ற பலர் தேசிய விடுதலையை ஆதரித்து வெளியேறினோம்.

இன்னும் சாதி பிரதேச சமத்துவம் தாயக தமிழ் பேசும் இனங்களின் சமத்துவம் தொடர்பாக தொடர்ந்தும் நாம் நெடுந்தூரம் போகவேண்டும். யாழ்பாணத்தைவிட்டு விடுதலைப் புலிகள் வெளியேறிய பின் அங்கு அரங்கேறிய சாதி திமிர் பற்றி அறிய மாட்டீர்களா. புலம் பெயர்ந்த நாடுகளில்தான் நிலமை மோசமாக உள்ளது. திரு MI7 விவாதத்தை திசை திருப்புகிற உங்கள் உத்தியைக் கைவிட்டு விடுங்கள். எங்கள் தாய்நாட்டினதும் பிரதேசங்களதும் இனங்களதும் சாதிகளதும் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் வகையில் புலம்பெயர்ந்த அமைப்புகள் செயல்பட வேணும் என்றதற்க்காக என்மீது ஏன் பாய்கிறீர்கள். நான் சொன்னது தவறாயின் அதுபற்றிப் பேசுங்கள். திசை திருப்பாதீர்கள்.

நான் எப்பவும் சாதி பிரதேச வேறுபாடில்லாத தமிழ் இனத்தைக் கனவு காணுகிற கவிஞனாக வாழவே விரும்புகிறேன். நான் எப்பவும் சரி நிகராக தமிழரும் முஸ்லிம்களும் இணைந்து எங்கள் தாயக விடுதலையை வென்றெடுக்கவேணும் என்கிற கனவுகாணுகிற கும்பிட்டு வாழாத கவிஞனாக வாழவே விரும்புகிறேன். கருத்துக்கள்பற்றி பேசாமல் என்னைப் பற்றிபேசி ஏன் திசை திருப்புகிறீர்கள்.

Edited by poet

''மட்டக்களப்பு தேர்தலில் முஸ்லீம் பகுதிகளில் முஸ்லீம் காங்கிரசும்.. ஏனைய இடங்களில் பிள்ளையான் குழுவும் செய்ய வேண்டிய அனைத்து திருகுதாளங்களையும் அடாவடித்தனங்களையும் செய்து அமோக வெற்றி ஈட்டியுள்ளன.''

தமிழ் பகுதிகளில் பிள்ளையான் குழுவினர் செய்த அடாவடித்தனங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் காங்கிரஸ் திருகுதாளங்கள் செய்து வெற்றியீட்டியதாக எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதோ தெரியவில்லை.

அமீர் அலி, அதாவுல்லா என்ற அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கிற அமைச்சர்களின் அடாவடித்தனங்களுக்கு மத்தியிலே தான் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

அது மட்டுமன்றி பிள்ளையான் குழுவை மேடைகளிலே துணிந்து எதிர்த்த முஸ்லிம் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தான். அது மட்டுமன்றி சிங்கள் அரசின் தேர்தல் கேலிக் கூத்தை மும் மொழிகளிலும் வெளிக் கொணர்ந்த முஸ்லிம் கட்சியென்றால் அது முஸ்லிம் காங்கிரஸ் தான்.

எந்த அடிப்படையில் எந்தத் தகவல்களை வைத்து முஸ்லிம் காங்கிரஸ் திருகுதாளம் செய்ததாக கூறப்பட்டது என்று புரியவில்லை

தமிழ்மக்களிடையே குறிப்பாக யாழ் மாவட்டத்தில் சாதிப்பிரிவினைகள் கொடுமையாக நடைமுறையில் இருந்தது உண்மை. வீச்சுக்குறைந்தாலும் இன்றும் இருப்பது உண்மை. 70களில் அவற்றுக்கெதிராக கொம்யூனிஸ்டுகள் போராடியதும் உண்மை. ஆனால் கொம்யுனிஸ்டுகளின் போராட்டம் தமிழ்மக்களிடையே ஒற்றுமையை கொண்டுவரும் நோக்கம் கொண்டது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதிப்பிரிவினைகளை பாவித்து சில கொம்யுனிஸ்ட் அரசியலவாதிகள் தமது கெரழும்புத்தலைமையின் வழிகாட்டலில் அரசியல் நடாத்தினார்களே தவிர வேறெதுமில்லை. சாதிப்பிரிவினையின் நியாயமற்ற தன்மையை தமிழ் தேசியவாதிகள் உணர்ந்து கொண்டதன் பின்னரே சாதிப்பிரிவினைகள் குறைய ஆரம்பித்தது.

சாதியால் ஒடுக்கப்பட்டவர்களை மற்றவர்கள் மீது ஏவி விட்டு வேடிக்கை பார்க்கும் கைங்கரியத்தைத்தான் அன்றய கொம்யூனிஸ்டுகள் செய்தனர். வடமராட்சி கல்பொல்லை (இராச கிராமம்) பகுதியில் சாதிக்கலவரத்தில் கொல்லப்ட்ட ஒடுக்கப்பட்்டவர்களுக்கு (3 பேர்) சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச்சிலைகளை "சாதிக்கலவரத்தில் கொல்லப்பட்ட தியாகிகள்" எனக்குறிப்பிட்டு திறந்து வைத்தவர் திரு. நா.சண்முகதாசன் (சீன சார்பு கொம்யுனிஸ்ட் கட்சி தலைவர்). இதே போன்று சாதிக்கலவரத்தில் கொல்லப்பட்ட உயர்சாதிக்காரர் எனச் சொல்லப்படுகிறவரின் சிலையை நெல்லியடி சந்தியில் யாராவது திறந்து வைத்தால் எப்படியிருக்கும் .. தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கியிருக்க முடியுமா?

1995ல் யாழ்ப்பாணத்தை விட்டு விடுதலைப்புலிகள் வெளியேறிய போது சாதித்திமிர் மீள உருவானது பற்றி எனக்கு தெரியும். 19987ல் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையில் விடூலைப்புலிகள் வடமராட்சியை விட்டு வெளியேறியபோதும் இந்த திமிர் வெளிப்பட்டது. அதே போல் இந்திய இராணுவக்காலத்தில் ஈபிஆர் எல்எப் சாதியால் ஒடுக்கப்பட்டவர்களைக் கொண்டு மற்றவர்கள் மீது நடாத்திய கொடுமைளையும் நான் அறிவேன்.

சாதி, பிரதேச வாதங்களை நான் இம்மியளவும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் தலித் மாநாடு நடாத்தி இந்தப் பேதங்களை அகற்றலாம் என்றோ, விடுதலைப்புலிகளை அழித்தால் சாதி அழிந்து விடும் என்றோ உங்கள் கூட்டாளிகள் (இடதுசாரி) போல் முட்டாள்த்தனமாக எண்ணவில்லை.

இந்த விவாதத்தில் நான் "வாடைக்காற்று" க்கு எதிரான போராட்டம்பற்றி குறிப்பிட்டது. அது பற்றி அறிய விரும்பியதாலேயே தவிர தனிப்பட்ட முறையில் உங்களைத் தாக்குவதற்காகவோ விவாதத்தை திசை திருப்பவோ அல்ல. வேறு தளம் கிடைக்காததால் என்னிடமுள்ள கேள்விகளை இங்கே பதிந்தேன். பதில்தந்தால் மகிழ்ச்சியடைவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்குள் வடக்குத் தமிழர்,கிழக்குத் தமிழர், கொழும்புத் தமிழர் என்ற பேச்சே எழத்தேவையில்லை. தமிழீழத் தமிழர் என்ற சொற்பதம் ஒன்றே போதும். அண்மைக் காலமாக பிரித்துக் கதைப்பது ஊடகங்களில் அதிகரித்துள்ளது கண்கூடு.

உங்கள் வோட்டு எங்களுக்கே.... அல்லது.... எங்கள் வேட்டு உங்களுக்கே!

:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னே நான் உங்களோட............ வோட்டு அல்லது வேட்டு............திரமான கொள்கை............ அப்ளை பண்ற மாரி அப்ளை பண்ணா எல்லாம் கெதில நடக்கும்.............. இங்குளுடிங் விடுதலை

ஆனால் கிழக்கு தமிழ்மக்களை பாராட்ட வேனும் துணிவோ துணிவு தான்

இதே யாழ்ப்பானம் என்றல் புலிகள் எங்கள் நிலையை புரிந்து கொள்ளுவார்கள் என்ரு 70 % மான மக்கள் வாக்கு போட்டு இருபார்கள் ஆனால் இங்கு ஆயுதம் கொலை மிரடல் காட்டியும் 30 கூட இல்லை( 30 குள் முக்காடும்) தான் பாராட்ட படவேண்டிய மக்கள் எங்கள் கிழக்கு மக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

''மட்டக்களப்பு தேர்தலில் முஸ்லீம் பகுதிகளில் முஸ்லீம் காங்கிரசும்.. ஏனைய இடங்களில் பிள்ளையான் குழுவும் செய்ய வேண்டிய அனைத்து திருகுதாளங்களையும் அடாவடித்தனங்களையும் செய்து அமோக வெற்றி ஈட்டியுள்ளன.''

தமிழ் பகுதிகளில் பிள்ளையான் குழுவினர் செய்த அடாவடித்தனங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் காங்கிரஸ் திருகுதாளங்கள் செய்து வெற்றியீட்டியதாக எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதோ தெரியவில்லை.

அமீர் அலி, அதாவுல்லா என்ற அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கிற அமைச்சர்களின் அடாவடித்தனங்களுக்கு மத்தியிலே தான் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

அது மட்டுமன்றி பிள்ளையான் குழுவை மேடைகளிலே துணிந்து எதிர்த்த முஸ்லிம் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தான். அது மட்டுமன்றி சிங்கள் அரசின் தேர்தல் கேலிக் கூத்தை மும் மொழிகளிலும் வெளிக் கொணர்ந்த முஸ்லிம் கட்சியென்றால் அது முஸ்லிம் காங்கிரஸ் தான்.

எந்த அடிப்படையில் எந்தத் தகவல்களை வைத்து முஸ்லிம் காங்கிரஸ் திருகுதாளம் செய்ததாக கூறப்பட்டது என்று புரியவில்லை

கருவுக்கும் காவியாவுக்கும் எனது நன்றிகள். உங்களைப்போல கிழக்கைத் தெரிந்துகொண்டு அடிமனதில்கூட யாழ் திமிர் இல்லாமல் கதைக்கிறவர்களால்தான் இன்றுள்ள சிக்கல் நிலமையை அரசியல் நரீதியாகக் கையாள முடியும். நம் முதன்மைப் போராளிகள் வாழ்கிற காலத்திலேயே சாதியின் வேர்களை அறுப்பதும் உயர்சாதி யாழ் ஆதிக்க வாதத்தை தோற்க்கடித்து சாதி பிரதேசவாத ஏற்றத்தாழ்வுகளை நிர்மூலமாக்குவதும் இந்திய ஐரோப்பிய உறவுகளைச் செம்மைப் படுத்தி விடுதலையை வென்றெடுப்பதும் அவசியம். MI7 தயவுசெய்து எங்கள் தற்போதைய விவாதம் முடிந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கடிதங்களில் உள்ள வரலாற்று விடயங்கள் யாழ்க் கள இளைய தலை முறைக்கு உதவியிருக்கும். அதற்க்காக நன்றிகள். தொடர்ந்து அவற்றை இளய தலைமுறைக்காக எழுதுங்கள். நீதியும் விடுதலையும்தான் என் நிலைபாடு ஜெ உட்பட யாரும் எங்களுக்கு நிரந்தர எதிரியில்லை. எல்லோரும் கூடினால் மட்டுமே இந்த விடுதலைத் தேரை இழுக்க முடியும். வன்னியில் எல்லோருக்கும் கதவுகள் திறந்தே உள்ளது என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன். புலம் பெயர்ந்த நாட்டு அமைப்புகளும் தாங்கள் மூடிவைத்திருக்கும் கதவுகளை இனியாவது திறக்கவேண்டும்.

என் கவிதை ஒன்றில் குறிப்பிட்டதுபோல எந்தப் பெரு வேட்டுவனையும் காடு ஒருநாள் தின்றுவிடும். அதற்க்குள் நாம் நிறைய தூரம் போகவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு வடக்கோடு இணையக் கூடாது என்பதில் சிங்களவர்களை விட முஸ்லீம் காங்கிரஸுக்கு அதிக வெறியுண்டு. அது பிள்ளையான் குழுவினதை விட அதிகம்.. என்பதை கிழக்கு மாகாணத்தை அறிஞ்சவை அறியாதது ரெம்ப வேடிக்கையாத் தெரியுது.

அதுமட்டுமன்றி அம்பாறையில் எப்படி முஸ்லீம் பெரும்பான்மை உருப்பெற்றதோ அதே நிலை மட்டக்களப்பிலும் தோன்ற வேண்டும் முஸ்லீம்கள் தமிழ் பிரதிநிதிகளைச் சார்ந்து வாக்குப் போடும் நிலை இருக்கக் கூடாது என்ற ரீதியில் முஸ்லீம் பெரும்பான்மை அலகுகளை மட்டக்களப்புக்குள் உருவாக்கிட முஸ்லீம் காங்கிரஸ் பாடுபடுவதும் எல்லோரும் அறிந்ததே.

இத்தேர்தலில் பிள்ளையான் குழு செய்த ஒரே நல்ல காரியம்.. முஸ்லீம் காங்கிரஸின் ஏறாவூர் முஸ்லீம்களின் தனி அலகு என்ற சிந்தனைக்கு வைத்த ஆப்பு என்றால் அது மிகையல்ல..! காரணம் அங்கு பிள்ளையான் குழு வேண்டும் என்றே கள்ள வாக்குப் போட்டு 10 உள்ளூராட்சி உறுப்பினர்களை தெரிவாக்கியுள்ளது.

அது இன்றைய நிலையில் தான் சாத்தியம். ஏனெனில் அரசை விட்டு விலகி அரசோடு முஸ்லீம் காங்கிரஸ் முரண்பட்டிருக்கும் நிலையில் அதனைப் பழிவாங்க அரசு மேற்கொண்ட ஒரு முயற்சிதான் அது..! நாளை இதே முஸ்லீம் காங்கிரஸ் சிங்கள அரசோடு இணையும் போது பிள்ளையான் குழுவை புகழ்ந்து பாடி சுத்த ஜனநாயகவாதிகள் என்றால் அதை யாழில் ஏற்றுக் கொள்ள கொஞ்சப் பேர் வருவினம் போல இருக்கே..!

முஸ்லீம் காங்கிரஸ் பிள்ளையான் குழு தலையெடுப்பதால் தமிழீழம் கிடைக்காமல் போய்விடப் போகிறது என்ற அக்கறையில் பிள்ளையான் குழுவை எதிர்க்கவோ.. அல்லது அதன் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டவோ முன்வரவில்லை. பிள்ளையான் குழுவின் செயற்பாடுகள் தங்களின் பிரதேச சபை இடங்களையும் சேர்த்து திருடிடப் போகுதே என்ற ஆதங்கமே இதற்குக் காரணம்.

முஸ்லீம் காங்கிரஸ் கடந்த தேர்தலில் செய்த பல தில்லுமுல்லுகளை தேர்தல் கண்காணிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. கிழக்கு மக்களும் (தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள்) அவற்றை அறிவர். விடுதலைப்புலிகளும் அறிவர். எனவே இங்கு பிள்ளையான் குழுவை தூற்ற முஸ்லீம் காங்கிரஸை தூக்கி பிடிக்கிறது ஒன்றும் அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

முஸ்லீம் காங்கிரஸும் பிள்ளையான் குழுவும் அடிப்படையில் கிழக்கு வடக்கோடு இணையக் கூடாது என்றதில் ஒன்றானவர்கள். அது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் குறிப்பிடத்தக்க தமிழ் பேசும் மக்களின் அபிலாசையான வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டுக்கு எதிரானது.. அல்லது அதைச் சிதைக்கக் கூடியது என்பதை கருத்தில் கொள்வது முக்கியம்.

யார் எவருக்கும் பரிந்து பேசவோ.. இல்லை கிழக்கை அக்குவேறு ஆணி வேரா அறிஞ்சவை என்ற போர்வையில்.. இவ்வுள்ளூராட்சித் தேர்தலில் சிலர் நடுநிலையோடு நின்றவை என்ற போலித் தோற்றப்பாட்டை தமிழ் மக்களுக்கு காட்ட வேண்டிய அவசியமோ இல்லை..! காரணம் 270,000 வாக்காளர்களில் கள்ள வாக்குகள் உட்பட 75000 வாக்குகள் மட்டுமே பிள்ளையானுக்கு கிடைத்தது. மக்கள் தேசப்படுத்திய வாக்குகள் 21000 ஆயிரம். தென் தமிழீழ மக்களிடம் உள்ள தெளிவு.. இங்கு யாழுக்கு விசிட் அடிக்கிற புலம்பெயர்ந்தவையிட்ட இல்லை என்பதுவே உண்மை..! அதுமட்டுமன்றி தமிழர் தரப்பு இத்தேர்தலை முற்றாக நிராகரித்து விட்டது. அதைப் பற்றி பேசியது கூட இல்லை..! :wub:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.