Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு தேர்தல் - பிள்ளையான் குழு அமோக வெற்றி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியே தேர்தலை புறக்கணித்தது. இதுவே பல செய்திகளை சொல்லியிருக்கும். எமக்கு தேவை நியாயமான தீர்வு அல்லது தனிநாடே தவிர அவர்களின் பிச்சை உள்ளுராட்ச்சி சபைகளல்ல.

உண்மைதான்

அத்துடன் இந்த அளவுக்கு கீழே இறங்கிவிட்டோமென உலகம்

தீர்மானிக்கும்

அதுசரி

இப.போ கருணாகுழு என்னாச்சு

அதேகதிதான்

அவர் பெயரென்ன

ஆ.....பிள்ளையானுக்கும்..........

  • Replies 71
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே நிலமைகளை அறிந்துதான் பேசுகிறீர்களா. கிழக்குப் பல்கலைக் களகத்திலலும் மட்டக்களப்பு நகரிலும் இருக்கிற எங்கள் பகுதியைச் சேர்ந்த சில ஆதிக்க மனப்பாண்மை கொண்டவர்கள்தானே சீரளிவுகளின் மூலகாரணம். அவர்கள் தங்கள் பிரதேச வாதத்தை எதிர்த்தவர்களையே கிழக்கின் முன்னுரிமைகளை வலியுறுத்தியவர்களையே பிரதேச வாதிகளாகச் சித்தரித்தார்கள். தங்கள் பதவி போட்டிகளில் எதிர்த் தரப்பை விடுதலைக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தினார்கள். கிழக்குமாகான அறிஞர்களை அச்சுறுத்தித் துரத்திவிட்டு பதவி ஆதிக்கங்களைக் கைப்பற்று முயற்ச்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தது உங்களுக்குத் தெரியாமல் போனதென்ன.

வரலாற்றில் திருமலை வடக்கைத் தவிர்ந்த கிழக்குமாகாணம் வடமாகான தமிழ் அரசுகளின் கீழ் இருந்ததில்லை. கண்டி அரசின்கீழ் பணியாத தமிழ் முஸ்லிம் வன்னியனார்களால் ஆளப்பட்ட சிறு சிறு சுயாட்ட்சிப் பிரிவுகளாகவே அவை இருந்தன. வன்னிமக்களும் கிழக்குமாகான மக்களும் பாரம்பரியமாக சுயாடட்சி உரிமையோடு வாழ்ந்தவர்கள் என்கிற வரலாற்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

யாழ் பல்கலைக்களகம் மண்ணின் மைந்தர்களின் கையில் இருக்கிறது. விடுதலை மேம்பட மட்டக் களப்புப் பல்கலைக்களகமும் மண்ணின் மைந்தர்களின் கைக்குவரவேண்டும்.

உங்கள் வாதம் தூய பிரதேசவாதமாக இருக்கிறது.

யாழ் பல்கலைக்கழகத்தில் யாழ் மாவட்ட மாணவர்கள் மட்டுமல்ல இருக்கிறார்கள். கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மட்டக்களப்பு திருமலை என்று பலரும் இருக்கின்றனர்.

யாழ் மருத்துவ பீடம் வடக்குக் கிழக்கு மாணவர்களுக்கான பிரதான மருத்துவ பீடமாக இருக்கிறது. அப்படி இருக்க நீங்கள் மோசமான பிரதேசவாதக் கருத்துக்களைக் கக்கி வருகிறீர்கள். ஏதோ உங்களை நீங்களே பேசுவது போல.. அதை மறைமுகமாகச் செய்கிறீர்கள்.

சமாதான காலத்தில் கருணாவின் பிளவுக்கு முன்னர் கிழக்குப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பொங்கு தமிழை நடத்திய போது இருந்த ஒற்றுமை இன்றில்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளூர் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் மத்தியில் செயற்பட்டுத்தான் மக்களை தமிழ் தேசியத்தின் பால் அக்கறையோடு இருக்கச் செய்துள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழகமும் பல முன் மாதிரிகளை எமது விடுதலைப் போராட்டத்துக்குச் செய்து காட்டியுள்ளது. இன்று அங்கொரு தேக்க நிலை இருக்கிறது.

அதற்கு உங்களைப் போன்றோர் பேசும் பிரதேச வாதமும் ஆயுத அச்சுறுத்தலும் முக்கியமாகும்.

மட்டக்களப்பில் தான் வறுமை என்றில்லை. திருமலையில் இருக்கிறது. வன்னியில் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இருக்கிறது அம்பாறையில் இருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் எம்மை ஆளும் சிங்களத் தரப்பே தவிர தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டமல்ல.

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும் போது மாவட்டங்கள் புறக்கணிக்கப்படின் அது தவறு. ஆனால் நிச்சயம் அது நடக்க எமது தேசிய தலைவர் அனுமதிக்கமாட்டார்..!

தமிழீழத்தின் தலைநகரே கிழக்கில் தான் அமைகிறது அல்லது எந்த நிர்வாக மையம் வடக்குக் கிழக்குக்கு என்று உருவானாலும் அது கிழக்கைத்தான் தலைமையகமாகக் கொண்டிருக்கப் போகிறது. அந்த வகையில் கூடிய வளர்ச்சிக்கான வாய்ப்பை கிழக்குத்தான் பெறும். தலைநகரை ஒட்டிய இடங்கள் எப்போதும் செழிப்புப் பெறுவது இயல்பானதும் இலகுவானதும்.. என்பது உலக மக்கள் மற்றும் பொருளியற் பரம்பலை அவதானிப்பின் விளங்கும்..!

அரைகுறையாக விளங்கிக் கொண்டு.. சுயநலவாதிகள் எமது போராட்டத்தை எதிரிக்கு விற்று அல்லது காட்டிக் கொடுத்து தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு வெளிநாட்டில் பதுங்கி விடுவதால் மட்டக்களப்பில் வறுமை ஓடிடப் போவதில்லை. உள்ளூராட்சி சபைகளில் மாகாண சபைகளில் அதிகாரத்தைக் கைப்பெற்றி கிழக்கை அபிவிருத்தி செய்திடலாம் என்றால் அதையேன் 1989இல் இருந்து அல்லது அதற்கு முன்பிருந்தே.. இன்னும் செய்யாமல் இருக்கிறார்கள்.. கிழக்கின் விடி வெள்ளிகள்..???! :lol:

1989இலேயே மாகாண சபைகளூடு கிழக்கை அபிவிருத்தி செய்ய புலிகளை விட்டுப் போயிருக்கலாமே..??! :wub::wub:

இன்று சிங்கள அரசின் நயவஞ்சகத்துக்கு கிழக்கு அப்பாவி ஏழை மக்களின் பசியை பிரதேச வாதத்தோடு சேர்த்துப் பாவிக்கும் இந்தக் குள்ள நரிகளுக்கு புலம்பெயர்ந்து இருந்து கொண்டு பெயர் சொல்லித் திரிவோரும் தயவு செய்து.. எரியும் நெருப்பில் நெய்யூற்றித் திரியாதீர்கள். இதற்காக அல்ல 21000 போராளிகளும் 80 ஆயிரம் மக்களும் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.

தென் தமிழீழ மக்கள் இத் தேர்தலை தம்மால் இயன்ற அளவுக்குப் புறக்கணித்துள்ளனர். அதற்காக அந்த மக்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அதற்காக அவர்கள் பட்ட துன்பங்களை உணருங்கள்.. மதியுங்கள்..! :lol:

Edited by nedukkalapoovan

ஏற்று கொள்ளதான் வேணும்.........................

செம கடியா இருக்கு.... :wub::lol::wub:

முன்னாள் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கும் தொடர்பு இப்போ வெட்ட வெளிச்சம்... இப்ப அவர்கள் ஆயுத தாரிகளா..? இல்லை அரசியல் வாதிகளா...?? இல்லை ஆயுதம் வைத்து இருக்கும் அரசியல் வாதிகளா..???

என்ன கோதாரியாகவும் இருந்துட்டு போகட்டும்... ஆனால் சர்வதேச கண்ணுக்கு கொடிய செயல்களை செய்ய கருணாகுழு அரச ஆதரவு பெற்றது என்பதை உறுதி படுத்தியதாகதான் சொல்கிறது..

நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு இனி அரசாங்கம் உரிமை கோருமாக்கும்...??

என்னமோ ஏதோ!

தேர்தல் என்று வந்தால்... மன்னிக்கவும் சனநாயகம் என்று வந்தா... முடிவுகள் தான் முக்கியம்...

என்னமோ ஏதொ,,

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள் அளித்த வாக்குகளில் 82% ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே

[12 - March - 2008]

* ஹக்கீம் மகிழ்ச்சி

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அங்குள்ள முஸ்லிம் வாக்காளர்களின் 82 சதவீதமான வாக்குகள் தமது கட்சிக்கு கிடைத்திருப்பதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தது.

இது தொடர்பாக கட்சி நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 4 உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிட்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றிபெற்று முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப 7 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இது இப்பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் பெரும் ஆதரவை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கயிருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இத்தேர்தலில் வாக்களித்த முஸ்லிம் வாக்காளர்களின் 81.9 சதவீதமான வாக்குகள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே கிடைத்துள்ளமை கட்சிக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்.

நடந்து முடிந்த 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 70 ஆயிரத்து 477 ஆகும். இதில் மொத்த முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 339 ஆகும். இது மொத்த வாக்காளர் தொகையில் 10.84 வீதமாகும். இந்நிலையில், மேற்படி மொத்த முஸ்லிம் வாக்காளர்களில் 56 சதவீதமான 16 ஆயிரத்து 240 முஸ்லிம் வாக்காளர்கள் இத்தேர்தலின் போது வாக்களித்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அளிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகளான 16,240 வாக்குகளில் 13 ஆயிரத்து 301 வாக்குகள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே கிடைத்துள்ளது. இது 81.9 வீதமாகும்.

இந்த வெற்றியானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளையும் அதன் தேர்தல் வேட்பாளர்களையும் ஏற்றுக் கொண்டு செயற்பட்டிருப்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தேர்தல் நடவடிக்கைகளில் பொய்பிரசாரங்களுக்கும் வன்முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தேர்தலுக்கு முகம் கொடுத்து மீண்டும் ஒரு முறை முஸ்லிம்களின் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பாரிய வெற்றியைத் தேடித் தந்த எமது வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் பல்வேறு வகையில் இவ்வெற்றியை அடையச் செய்யும் முகமாக இரவு பகலாக பாடுபட்டு எமது கட்சி அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களுக்கும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thinakural.com

"[உங்கள் வாதம் தூய பிரதேசவாதமாக இருக்கிறது.

யாழ் பல்கலைக்கழகத்தில் யாழ் மாவட்ட மாணவர்கள் மட்டுமல்ல இருக்கிறார்கள். கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மட்டக்களப்பு திருமலை என்று பலரும் இருக்கின்றனர்.

யாழ் மருத்துவ பீடம் வடக்குக் கிழக்கு மாணவர்களுக்கான பிரதான மருத்துவ பீடமாக இருக்கிறது. அப்படி இருக்க நீங்கள் மோசமான பிரதேசவாதக் கருத்துக்களைக் கக்கி வருகிறீர்கள். ஏதோ உங்களை நீங்களே பேசுவது போல.. அதை மறைமுகமாகச் செய்கிறீர்கள்.

Edited by லீ

  • கருத்துக்கள உறவுகள்

"[உங்கள் வாதம் தூய பிரதேசவாதமாக இருக்கிறது.

பிரதேச வாதத்தை வளர்ப்பதே யாழ் பல்கலைகழகம் தான் .. அது தெரியுமா உங்களுக்கு. அது மட்டும் அல்லாமல், கொழும்பு மற்றும் மொரட்டுவா பல்கலைகழகககளில் பிரதேச வாதத்தை ஊக்குவிப்பதுவும் யாழ் மாணவர்கள் தானே.

யாழ்ப்பான உயர்சாதி ஆதிக்கவாதத்தை புலம்பெயர்ந்த நாடுகளில் அமைப்புரீதியாகத் தோற்கடிப்பது முக்கியம். வன்னியின் அனுபவங்களும் இதற்க்கு உதவும். பிரதேசங்களின் சமத்துவமும் பங்குபற்றுதலலும் தொடர்பான வன்னியின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வரலாறு புலம் பெயர்ந்த அமைப்புகளை நிர்பந்திக்கிறது. இதன் ஊடாகத்தான் எங்கள் தாயகக் கனவுகள் மேம்படமுடியும். இதன் மூலம்தான் தமிழ் முஸ்லிம் உறவையும் ஈழத்தாய்நாட்டின் விடுதலையையும் கட்டி எழுப்ப முடியும். பிடிவாதமான நியாயப் படுத்தல்களைக் கைவிட்டு விட்டு புலம்பெயர்ந்த நாடுகளில் எங்கள் எங்கள் இருக்கைகளை, வளங்களை, மேடைகளை, வானொலி கலை அரங்கங்களை கிழக்குமாகாணத் தமிழர்களோடு பகிர்ந்துகொள்ள இனியாவது முன்வாருங்கள். இதுபற்றி என்ன சாதிதிருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள் தலை பணிந்து கேட்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம கடியா இருக்கு.... :unsure::):(

முன்னாள் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கும் தொடர்பு இப்போ வெட்ட வெளிச்சம்... இப்ப அவர்கள் ஆயுத தாரிகளா..? இல்லை அரசியல் வாதிகளா...?? இல்லை ஆயுதம் வைத்து இருக்கும் அரசியல் வாதிகளா..???

என்ன கோதாரியாகவும் இருந்துட்டு போகட்டும்... ஆனால் சர்வதேச கண்ணுக்கு கொடிய செயல்களை செய்ய கருணாகுழு அரச ஆதரவு பெற்றது என்பதை உறுதி படுத்தியதாகதான் சொல்கிறது..

நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு இனி அரசாங்கம் உரிமை கோருமாக்கும்...??

அண்னே இந்த தேர்தல் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஏனென்ரால் உள்ளூராட்சி தேர்தல்களில் வளமையான வாக்குப்பதிவு 45-55 வீதமே, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி ரெண்டும் போட்டியிடயில்ல, 21 சுயேட்சை குழுக்கள் பங்கு பற்றியிருக்கு, எல்லாத்துக்கும் வோட்டு விழுந்திருக்கு, முறைப்படி பாத்தால் 30வீத வாக்கு பதிவுகூட இருக்க படாது, ஆனால் இந்த தேர்தலில 57 சதவீத வாக்கு பதிவு நடந்திருக்கு, ஆயதத்தோட ஆயுதமில்லாம எல்லாம் இங்கு ரெண்டாம் பட்சம், ஏனெண்டா முந்தின தேர்தலுகள் போல இல்லாமல் வன்முறையற்ற தேர்தல் நடந்திருக்கு. இதில கன செய்தியள் அடங்கியிருக்கு, நான் தேசியத்துக்கு ஆதரவானவன் ஆனால் ரெண்டு பிரதான கட்சியள் பகிசுகரிச்சும் இப்பிடி தேர்தல் நடந்தது எங்களுக்கு படிப்பினை எண்டு தோனுது.

யாழ்பாணம் தீவகம் வலிகாமம் வட தென்மராட்சியில சென்சசு செய்திட்டதா செய்தி வந்திருக்கு. இது அடுத்தகட்ட நடவடிக்கை போல இருக்கி, அங்க உள்ளூராட்சி தேர்தல் நடந்தா ஐக்கிய தேசிய கட்சி ரிஎம்விபி போட்டியிடாது, கூட்டமைப்பு போட்டியிடவேனும், அல்லாட்டில் வாக்கு நிரப்ப போரது டக்கிலசுதான். இங்க யாரே அண்மையில எழுதி வாசிச்ச ஞாபகம் வடக்கு டக்கிலசுக்கு, கிழக்கு கருணாவுக்கு என்ரு. அந்த ஆரூடம் சரியாவர நிறைய வாய்ப்பிருக்கி.

அடுத்ததா மாகாணசபை தேர்தலுக்கும் நாள் குறிச்சிருக்கி, அதிலயாவது கூட்டமைப்பு பங்கெடுக்குமா? அல்லது அதிலயும் 60-65 வீத மக்கள் வாக்களிக்க அதையும் பகிச்கரிச்சிட்டு காகத்தமாரி கரைஞ்சிட்டு திரியுமா???????? பொறுத்திருந்து பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: லீ,

மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒற்றுமை எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

நீங்கள் சொன்னவாறு வடக்கு மாகாணத்தாரும் கிழக்கு மாகாணத்தாரும் ஒன்றாக இருப்பது இல்லை என்பதை ஏற்கமுடியாது. என்னுடன் இருந்த மூவரில் ஒருவர் மட்டக்களப்பு, மற்றயவர் திருகோணமலை. நானும் மற்றயவரும் யாழ்ப்பாணம். திருகோணமலை நண்பனின் திருமணத்திற்கு நாம் எல்லோரும்( 40 பேர்-எல்லோரும் யாழ்ப்பாணம்) அவரின் வீட்டுக்குச் சென்று 3 நாள் தங்கியிருந்து வந்தோம். எம்முள் பிரிவு இருந்ததில்லை( இது 1995 இலிருந்து 2000 வரையான காலப் பகுதியில்). சில வேளை நீங்கள் போனபின் அப்படி ஆகியிருக்கலாம்.

பல்கலைக் கழகத்தில் தமிழர்களில் பெரும்பாலானோர் வடக்கு மாகணத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கிலிருந்து வருவோர் குறைவு. இது அவர்களை சிறிது தனிமைப்பட வைத்திருக்கலாம். அதற்காக வடக்கு மாணவர்களின் நடவடிக்கைகளால்தான் அப்படி நடந்தது என்பது முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் வேலை.

நெடுக்காலபோவான் சொல்வது போல, கருணாவின் துரோகத்தனத்தின் ஆரம்ப கட்டத்தில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் வடக்கு மாகாண மக்களுக்கெதிராக பிரச்சாரம் செய்ததும், கருணா பலகலைக்கழகத்தில் உரையாற்றியதும் உண்மைதானே ? யாழ் மாணவர்கள் இருக்கும்வரை "பொங்கு தமிழ்" நடத்திய பலகலைக்கழகம் கருணா பிரிந்தவுடன் சடுதியாக நிலை மாறக் காரணம் என்ன ?

நீங்களும் இன்னொருவரும் இப்படிக் கதைப்பதைப் பார்த்தால் கருணா செய்தது சரிதான் என்று வாதாடுமாற்போல் உள்ளது. அவரும் இதைத்தானே சொல்லிக்கொண்டு போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டு " கிழக்கின் விடிவுக்காகப் போகிறேன்" என்று போனவர்.

தனிப்பட்ட ஒருவரின் சுயநலத்திற்காக நடந்த துரோகத்தனத்தை விமர்சிக்கும் போது அதை பிரதேச வாரியாக கருத்தெடுத்து, ஏதோ யாழ்ப்பாணத்தார் என்றாலே கிழக்கு மாகாணத்தவருக்கு எதிரானவர்கள் தான் என்று எழுதுவதைச் சகிக்க முடியவில்லை. இப்படி எழுதுவதால் நீங்கள் எதிர்பார்க்கும் கிழக்கு மீட்கப்பட்டு விடாது, மாறாக கருணா செய்தது சரிதான் என்று கிழக்கு மக்களே நினைக்கத் தூண்டப் பட்டு விடும்.

தயவு செய்து யாழ்ப்பாணத்தவரை தூற்றி எழுதுவதை நிறுத்துங்கள். பல காலங்களுக்கு முன்னரே அழிந்து அடங்கிப்போன பிரதேசவாதத்தை நீங்கள் இன்னுமொரு முறை தூசி தட்டி எடுத்துவர வேண்டாம்.

அண்னே இந்த தேர்தல் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஏனென்ரால் உள்ளூராட்சி தேர்தல்களில் வளமையான வாக்குப்பதிவு 45-55 வீதமே,

வாக்கு பதிவிலை ஆராட்ச்சி செய்தது யாருங்கண்ணோ.?? நீங்களா...??

ஏன் கூடுதலா கள்ள வேட்டு போட்டா சேர்க்க மாட்டீங்களோ...??

வாக்கு போட்டது எவ்வளவு எண்டாலும் அதை கொஞ்சம் கூடுதாலாய் வாறது மாதிரி, இருக்கிறவையை வெருட்டி டாப்பிலை குறிச்சு போட்டு, வாக்கு போட்ட பெட்டியள் கணக்கிலை ஒரு இரண்டை கூட்டி எழுது விச்சாலோ , இல்லை அதை எழுதின பேப்பறையே மாத்தினாலும் வாக்கு பதிவு எண்ணுக்கை வீதம் கூடும்...

பெட்டியின் கணக்கை ஏன் கூட்டுறது எண்ட கோதாரி தெரியுமோ...??

அது எனக்கு வேண்டிய கட்ச்சிக்கு வாக்குகளை போட்டு ஏற்கனவே நிரப்பி வைச்சு இருக்கிற பெட்டியை, எண்ணுறதுக்கு முன்னம் பாதுகாப்பாய் வைக்கிற இடத்திலை அதுகளோடை சேத்து வைக்கிறது( வேணும் எண்டா இருக்கிற பெட்டியள் ஒண்டு இரண்டை எடுத்து போட்டும் வைக்கலாம்....! ) அப்பிடி வைச்சா உங்கட ஆக்களுக்கு வாக்கு அதிகமாக கிடைக்கும்...

உந்த கோதாரியை தான் சந்திரிக்கா யாழ்ப்பாணம் பிடிச்ச உடனை நடத்தின தேர்தலிலை EPDP செய்தது.... அதைத்தான் இப்ப மட்டகளப்பிலை செய்து இருக்கினம்...

பழைய கள்ளுத்தான் புதிய மொந்தையிலை....

உங்கட மிச்ச பினாதலுக்கு பதில் எல்லாம் எழுத ஏலாது வேற உருப்படியான வேலை ஏதும் செய்யலம் எண்டு நினைக்கிறன்...

Edited by இணையவன்
உறுப்பினரைப் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி,

உங்கள் ஆதங்கம் கூட்டமைப்பு தேர்தலில் போடியிடவில்லை என்பதா? அதற்குக் காரணம் இருக்குது. சாதாரண பாராளுமன்ற வாக்கெடுப்புக்கே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை வாகளிக்க விடாது அவர்களின் உறவினர்களை கொலைக்குழு பிள்ளையானைக் கொண்டு கடத்திய மகிந்த, தனது செல்வாக்கைக் காட்ட கிழக்கில் நடத்திய தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பங்குபற்றியிருந்தால் அவர்களை என்ன செய்திருப்பான்?

ஒரு கதைக்கு தமிழ்க் கூட்டமைப்பும் பங்கு பற்றியிருந்தது என்று வைத்துக்கொள்வோம். ஆயுத அச்சுருத்தலாலும், வாக்கு மோசடிகளாலும் பிள்ளையானும் அவனது ஆட்களுமே கட்டாயம் வெற்றி பெற்றிருப்பர். அப்போது, புலிகளின் ஆசீர்வாதம் பெற்ற தமிழ்க்கூட்டமைப்பு தோற்று விட்டது, கிழக்கு மக்கள் புலிகளுக்கு எதிரானவர்கள், கருணா செய்தது சரிதான் என்ற அரசின் பிரச்சாரம் அல்லவா வெற்றி பெற்றிருக்கும் ?இப்போது அரசும் அதன் கூலிக்குழுவும் மட்டுமே போட்டியிட்டு யாரினதும் எதிர்ப்பில்லாததால் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றல்லவா செய்தி வருகிறது.

எமக்கு தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போய் தமிழ்த்தேசியத்தை இழிவு படுத்த வேண்டுமா அல்லது தமிழர்க்கு சிறுதும் சமபந்தில்லாத ஒரு ராணுவத் தேர்தலில் போட்டியிடாது தமிழ்த் தேசியத்தை தக்கவைத்துக்கொண்டது முக்கியமா ?

யாழ்ப்பான உயர்சாதி ஆதிக்கவாதத்தை புலம்பெயர்ந்த நாடுகளில் அமைப்புரீதியாகத் தோற்கடிப்பது முக்கியம். வன்னியின் அனுபவங்களும் இதற்க்கு உதவும்.

எப்பதான் 18ம் நூற்றாண்டு கனவுகளுக்கை இருந்து வெளியிலை வர போறியள்....???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: தயா,

உந்தாள் சரியான அறப்பழசா இருக்கும் போல கிடக்கு. தமிழீழம் என்பது வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழரின் தாயகம் எண்டு சண்டை தொடங்கி 30 வருஷமாச்சு. அதற்காக 20,000 மாவீரரும், 80,000 தமிழ் மக்களும் உயிர்த்தியாகம் செய்தாச்சு. உவர் புலத்தில வடக்குத் தமிழரின் கொட்டத்தை அடக்கப் போகிறாராம். சும்மா அரசியல் அறிவும் அநுபவமும் இருக்கிறதாக் காட்டிக் கொண்டு பழைய பிரதேச வாதம் பேசிக்கொண்டு வாரார்.பேசுறதையும் பேசிப்போட்டு கிழக்கை மீட்க வேணுமாம். எப்படியெண்டுதான் தெரியவில்லை ?

பிறகு poet அண்ணா சங்கீத பாடம் எல்லாம் ஒழுங்காப் போகுதா? :unsure: யாழின் மேலாதிக்கத்தை அழிப்பாதாக கூறிக்கொண்டு கிழக்கை நிதந்திரமாக பிரிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிகிறது. நீங்கள் மட்டுமல்ல வேறுபலரும் புலித்தோல் போர்திக்கொண்டு பெரும்முயற்சியில் இருப்பதாக கேள்வி. ஆனால் நாங்கள் பிரிய தயாராக இல்லை bye

Edited by வாசகன்

:unsure: லீ,

மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒற்றுமை எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

நீங்கள் சொன்னவாறு வடக்கு மாகாணத்தாரும் கிழக்கு மாகாணத்தாரும் ஒன்றாக இருப்பது இல்லை என்பதை ஏற்கமுடியாது. என்னுடன் இருந்த மூவரில் ஒருவர் மட்டக்களப்பு, மற்றயவர் திருகோணமலை. நானும் மற்றயவரும் யாழ்ப்பாணம். திருகோணமலை நண்பனின் திருமணத்திற்கு நாம் எல்லோரும்( 40 பேர்-எல்லோரும் யாழ்ப்பாணம்) அவரின் வீட்டுக்குச் சென்று 3 நாள் தங்கியிருந்து வந்தோம். எம்முள் பிரிவு இருந்ததில்லை( இது 1995 இலிருந்து 2000 வரையான காலப் பகுதியில்). சில வேளை நீங்கள் போனபின் அப்படி ஆகியிருக்கலாம்.

பல்கலைக் கழகத்தில் தமிழர்களில் பெரும்பாலானோர் வடக்கு மாகணத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கிலிருந்து வருவோர் குறைவு. இது அவர்களை சிறிது தனிமைப்பட வைத்திருக்கலாம். அதற்காக வடக்கு மாணவர்களின் நடவடிக்கைகளால்தான் அப்படி நடந்தது என்பது முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் வேலை.

நெடுக்காலபோவான் சொல்வது போல, கருணாவின் துரோகத்தனத்தின் ஆரம்ப கட்டத்தில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் வடக்கு மாகாண மக்களுக்கெதிராக பிரச்சாரம் செய்ததும், கருணா பலகலைக்கழகத்தில் உரையாற்றியதும் உண்மைதானே ? யாழ் மாணவர்கள் இருக்கும்வரை "பொங்கு தமிழ்" நடத்திய பலகலைக்கழகம் கருணா பிரிந்தவுடன் சடுதியாக நிலை மாறக் காரணம் என்ன ?

நீங்களும் இன்னொருவரும் இப்படிக் கதைப்பதைப் பார்த்தால் கருணா செய்தது சரிதான் என்று வாதாடுமாற்போல் உள்ளது. அவரும் இதைத்தானே சொல்லிக்கொண்டு போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டு " கிழக்கின் விடிவுக்காகப் போகிறேன்" என்று போனவர்.

தனிப்பட்ட ஒருவரின் சுயநலத்திற்காக நடந்த துரோகத்தனத்தை விமர்சிக்கும் போது அதை பிரதேச வாரியாக கருத்தெடுத்து, ஏதோ யாழ்ப்பாணத்தார் என்றாலே கிழக்கு மாகாணத்தவருக்கு எதிரானவர்கள் தான் என்று எழுதுவதைச் சகிக்க முடியவில்லை. இப்படி எழுதுவதால் நீங்கள் எதிர்பார்க்கும் கிழக்கு மீட்கப்பட்டு விடாது, மாறாக கருணா செய்தது சரிதான் என்று கிழக்கு மக்களே நினைக்கத் தூண்டப் பட்டு விடும்.

தயவு செய்து யாழ்ப்பாணத்தவரை தூற்றி எழுதுவதை நிறுத்துங்கள். பல காலங்களுக்கு முன்னரே அழிந்து அடங்கிப்போன பிரதேசவாதத்தை நீங்கள் இன்னுமொரு முறை தூசி தட்டி எடுத்துவர வேண்டாம்.

ரகுநாதன். நான் கூறுவது யாழ் மாணவர்களின் ஆதிக்க மனப்பான்மையை. நீங்கள் நண்பர்களாக இருந்திருக்கலாம் அது நன்று. அண்மைய கால பல்கலை கழக நடவடிக்கைகளை பார்த்தால் உங்களுக்கு புரியும். எம்மவரில் சிலருக்கு இருக்கும் இந்த புத்தி ஒட்டு மொத்த தமிழ் மக்களை அல்லவா பாதிகின்றது. ..

இங்கே யாரும் கருணாவை ஆதரிக்கவிலை. ..மாறாக நம் சமூகத்தில் நிலவும் ஆதிக்க மனப்பான்மையை விவாதிகிறோம்..! நீங்கள் இல்லை என்றல் மட்டும் பொய் உண்மை ஆகிவிடாது. ...!

சாதியம் இல்லை.

சாதிய அடக்குமுறை இல்லை.

பிரதேசவாதம் இல்லை.

யாழ் மேலாதிக்கம் இல்லை.

சமூக அடக்குமுறை இல்லை.

பெண்கள் மீதான வன்முறை இல்லை.

மதத்துவேசம் இல்லை.

பாலியல் தொழில் இல்லை.

தற்பாற் சேர்க்கை இல்லை.

சிறுவர் துஸ்பிரயோகம் இல்லை.

எதுவுமே எம்மிடம் இல்லை.

இருக்கிறது என்கிறீர்களா?

அப்படியென்றால்,

நீங்கள் கனவுலகில் வாழ்கிறீர்கள்!

"கால இயந்திரத்தின்" ஊடாக

பயணித்து பழங் காலத்தில் வாழ்கிறீர்கள்!

நாம் புனிதர்கள்.

நாம் அறிவாளிகள்.

நாம் பண்பானவர்கள்.

நாம் பரிசுத்தமானவர்கள்.

இல்லையென்று சொல்கிறீர்களா?

நீங்கள் மனப்பிறழ்வு அடைந்த மனிதர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

லீ,

நீங்கள் சொல்லும் அந்த ஒரு சிலரின் தனிப்பட்ட செயற்பாடுகளை வைத்துக்கொண்டு முழு யாழ்ப்பாணச் சமூகத்தையுமே குற்றவாளிக் கூண்டில் எற்றுவது எந்த விதத்தில் நியாயம் ? தனிப்பட்ட சிலரின் தாந்தோன்றித்தனமான நடவடிக்கைகளின் பின்னால் பிரதேசவாதம் இருப்பதாக நான் கருதவில்லை.

நாம் திரும்பத் திரும்ப யாழ்ப்பாணத்தாரின் நடவடிக்கைகளை குறை கூறுவது இறுதியில் கருணா பிரிந்தது சரிதான் என்ற நிலமைக்கு கிழக்கு மாகாணத்தவர்களை கொண்டு வராமல் இருந்தால் சரிதான். இப்போது இதுபற்றிக் கதைத்து என்னத்தைக் காணுவதாக உத்தேசம் ?

விடுங்கள், ஒரு துரோகத்தனத்துக்கு அந்தத் துரோகியே சொன்ன காரணங்களை நீங்களும் சொல்லி அதற்குத் துணை போக வேண்டாம்.

நீங்கள் குறிப்பிட்டது போல அந்த ஒரு சிலரின் செயற்பாடுகளுக்கு அவர்களின் பரந்த உலக அறிவு இல்லாததும், எப்பவுமே ஒரு குறுகிய வட்டமான யாழ்ப்பாணத்துக்குள் வாழ்ந்ததும் காரணமாக இருக்கலாம்.

இப்ப என்ன மட்டக்களப்பில் நடந்த தேர்தலில் பிள்ளையான் குழு அமோக வெற்றியா? இல்லையா?

இடத்தைத் தவறவிட்டு எங்கேயோ வந்துவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

:) வாங்க இறைவன், இவ்வளவு லேட்டா வாரீங்க ?

அது சரி, தொடங்கியது எங்கேயோ ஆனால் இங்கு வந்து நிக்குது. ஆனால் சில உண்மைகளைச் சொல்லாமல் விட முடியாதல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிட்டது போல அந்த ஒரு சிலரின் செயற்பாடுகளுக்கு அவர்களின் பரந்த உலக அறிவு இல்லாததும், எப்பவுமே ஒரு குறுகிய வட்டமான யாழ்ப்பாணத்துக்குள் வாழ்ந்ததும் காரணமாக இருக்கலாம்.

திரு ரகுநாதனுக்கு,

புகலம்பெயர்ந்ததில் இருந்து வருடா வருடம் சராசரியாக ஏழு எட்டு மாசங்கள் வன்னியிலும் கிழக்கிலும் தான் வாழ்கிறேன். கடந்த வருடம் மட்டும் விதிவிலக்கு. இதனால் என் மனசும் சிந்தனையும் எப்பவும் புதிதாகவே இருக்கு.

நானும் யாழ்ப்பாணம்தான். ஆனால் யாழ்ப்பாண ஆதிக்கவாதியல்ல. சாதி உட்பட யாழ்ப்பாணத்தின் எல்லா துயரங்களையும் துடைக்க நானும் போராடி சிறைப்பட்டும் இருக்கிறேன். நீதியான ஒரு யாழ்ப்பாணம்தான் என் கனவு.

நான் குறிப்பிடுவது தங்களை அறியாமலலே விடுதலைக்கு எதிராக செயல்ப்படும் யாழ்பாண ஆதிக்க சிந்தனை பற்றி மட்டுமே. இதனை எதிர்ப்பதல்ல இதனை ஆதரிப்பதுதான் பிரதேசவாதம். . நான் கேட்டது வன்னியைப் பார்த்து புலத்திலும் சாதி சமத்துவத்தையும் பிரதேச பன்முகத்தன்மையையும் அமைப்புரீதியாகப் பேணுங்கள் என்பதுதான்.

தனிப்பட்ட முறையில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் சாதராண யாழ்ப்பாண மக்களின் எதிரியென்றும் விடுதலைப் புலிகளின் எதிரியென்றும் துரோகி முத்திரை குத்துவது ஒரு நோய்.தயவு செய்து அந்த நோய்க்கு ஆளாகாதீர்கள். இதற்க்குமேல் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. விவாததில் இருந்து வெளியேறுமுன் ஒரு வார்த்தை. வன்னியைப் பார்த்து புலதிலும் கிழக்கின் சகோதரர்களுடன் சந்தர்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. சிங்கள ஆதிக்க வாதத்தை எதிர்த்தால் ஆதிக்கவாதிகள் நாட்டைப் பிளவு படுத்துவதாகச் சொல்கிறார்கள். யாழ்ப்பாண ஆதிக்கவாதத்தை எதிர்த்தால் வன்னியைப் பார்த்து கிழக்கை மதிக்கப் பளகுங்கள் என்றால் அவர்களுடன் பொது வழ்வின் சகல அம்சங்களையும் பகிர்ந்துகொள்ள முன்வாருங்கள் என்றால் யாழ்ப்பாண ஆதிக்க வாதிகள் இனத்தைப் பிளவு படுத்துவதாகச் சொல்கிறார்கள். இதை வாசிக்கிற போராளிகள் வாய்விட்டுச் சிரிப்பார்கள் என்பது மட்டும் உண்மை. இரண்டும் ஒருபார்வைதானே. தயாரில்லையென்றால் தயாரில்லை என்று சொல்லுங்களேன். இதுவரை விவாததில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி சொல்லி சொல்லி விடை பெறுகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

:) திரு பொயெற் அவர்களுக்கு,

நான் யாழ்ப்பாண ஆதிக்க வாதியல்ல. ஆனால் எமது தமிழ்ச் சமூகம் இன்னும் பிளவு படக்கூடாது என்று விரும்பும் ஒரு சாதாரண தமிழன். பிரதேச வாதமும், பிரதேச ஆதிக்க வாதமும் முன்பு இருந்ததை நான் மறுக்கவில்லை. ஏறத்தாள 3, 4 வருடங்கள் மட்டக்களப்பில் வாழ்ந்த அநுபவம் எனக்கு இருக்கிறது. அவர்கள் யாழ்ப்பாணத்தவர் பற்றி எவ்வாறான எண்ணம் கொண்டிருந்தனர் என்பதை நான் விளங்கிக் கொண்டவன். ஆரம்ப காலங்களில் வடக்கிலிருந்து கிழக்கிற்கு தொழில் நிமித்தம் புலம்பெயர்ந்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் தான் அவர்களை அவ்வாறு பேசத் தூண்டியது என்பது எனது எண்ணம்.

ஆனால் இன்னும் எமது நாடு , தமிழ் ஈழம் என்பது வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகம் தான் என்று மனதார விரும்பி வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனையோ யாழ்ப்பாணத்து உள்ளங்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்று புலம் பெயர்ந்து நான் வாழும் நாட்டில் கூட எனக்கு கிழக்கைச் சேர்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள். சிலவேளைகளில் கருணா பற்றிய பேச்சு வரும்போது பலர் தமிழ்த்தேசியத்தை ஆதரித்தே பேசி வருகின்றனர். சிலர் நீங்கள் கூறும் அதே யாழ்ப்பாண ஆதிக்கவாதம் பற்றியும் பேசுகின்றனர். ஒருவேளை அவர்கள் சரியாக இருக்கலாம்.

மனத்தாங்கல் ஆறுவதற்குக் காலம் தேவை, ஆனால் எல்லா யாழ்ப்பாணத்தவரும் ஆதிக்கவாதிகளல்ல.

நன்றி.

திரு ரகுநாதனுக்கு,

புகலம்பெயர்ந்ததில் இருந்து வருடா வருடம் சராசரியாக ஏழு எட்டு மாசங்கள் வன்னியிலும் கிழக்கிலும் தான் வாழ்கிறேன். கடந்த வருடம் மட்டும் விதிவிலக்கு. இதனால் என் மனசும் சிந்தனையும் எப்பவும் புதிதாகவே இருக்கு.

நானும் யாழ்ப்பாணம்தான். ஆனால் யாழ்ப்பாண ஆதிக்கவாதியல்ல. சாதி உட்பட யாழ்ப்பாணத்தின் எல்லா துயரங்களையும் துடைக்க நானும் போராடி சிறைப்பட்டும் இருக்கிறேன். நீதியான ஒரு யாழ்ப்பாணம்தான் என் கனவு.

நான் குறிப்பிடுவது தங்களை அறியாமலலே விடுதலைக்கு எதிராக செயல்ப்படும் யாழ்பாண ஆதிக்க சிந்தனை பற்றி மட்டுமே. இதனை எதிர்ப்பதல்ல இதனை ஆதரிப்பதுதான் பிரதேசவாதம். . நான் கேட்டது வன்னியைப் பார்த்து புலத்திலும் சாதி சமத்துவத்தையும் பிரதேச பன்முகத்தன்மையையும் அமைப்புரீதியாகப் பேணுங்கள் என்பதுதான்.

தனிப்பட்ட முறையில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் சாதராண யாழ்ப்பாண மக்களின் எதிரியென்றும் விடுதலைப் புலிகளின் எதிரியென்றும் துரோகி முத்திரை குத்துவது ஒரு நோய்.தயவு செய்து அந்த நோய்க்கு ஆளாகாதீர்கள். இதற்க்குமேல் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. விவாததில் இருந்து வெளியேறுமுன் ஒரு வார்த்தை. வன்னியைப் பார்த்து புலதிலும் கிழக்கின் சகோதரர்களுடன் சந்தர்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. சிங்கள ஆதிக்க வாதத்தை எதிர்த்தால் ஆதிக்கவாதிகள் நாட்டைப் பிளவு படுத்துவதாகச் சொல்கிறார்கள். யாழ்ப்பாண ஆதிக்கவாதத்தை எதிர்த்தால் வன்னியைப் பார்த்து கிழக்கை மதிக்கப் பளகுங்கள் என்றால் அவர்களுடன் பொது வழ்வின் சகல அம்சங்களையும் பகிர்ந்துகொள்ள முன்வாருங்கள் என்றால் யாழ்ப்பாண ஆதிக்க வாதிகள் இனத்தைப் பிளவு படுத்துவதாகச் சொல்கிறார்கள். இதை வாசிக்கிற போராளிகள் வாய்விட்டுச் சிரிப்பார்கள் என்பது மட்டும் உண்மை. இரண்டும் ஒருபார்வைதானே. தயாரில்லையென்றால் தயாரில்லை என்று சொல்லுங்களேன். இதுவரை விவாததில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி சொல்லி சொல்லி விடை பெறுகிறேன்.

ம்ம் நோக்கம் நிறைவேறியதா? :):D:D:lol:

மறந்தும் மறைந்து போகும் ஒரு விடயத்தை நீங்கள் மீண்டும் தினிப்பது போல் இருக்கு :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.