Jump to content

வல்லாரை சம்பல்


Recommended Posts

vallarai.jpg

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வல்லாரை கீரையை சாப்பாட்டில் வாரத்திற்கு ஒருமுறையாச்சும் சேர்க்காத நாள் இல்லை எனலாம். வல்லாரை நிறைய சாப்பிட்டா நிறைய ஞாபக சக்தி வரும் என அப்பப்பா சொன்னதை அப்படியே நம்பிட்டேன். [அது நிஜம் என்பது பின்னர் தானே தெரிய வந்தது]. அதிலும் வல்லாரை சாப்பிட்டா தேர்வில நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என என் அண்ணா சொன்னதில இருந்து, வல்லாரை எனக்கு ஆருயிர் தோழன் ஆகிவிட்டது. [மதிப்பெண் பற்றி கேட்கப்படாது]. என்னதான் ஒஸ்திரேலியாவில் வல்லாரை நன்றாக வளரும் என்றாலும், எங்களுக்கு தெரிந்த யாரிடமும் வல்லாரை செடி இருக்கவில்லை. அப்பாவின் நண்பரிடம் இருக்கு என அறிந்து, இதுக்காக நானும் அப்பாவும் 3 மணித்தியாலங்கள் காரில் போய் செடி வாங்கி வந்து வீட்டில் நட்டோம். இப்பொழுது வீட்டின் பின்னால் நிறைய வளர்து அழகாக இருக்கின்றது. அதை அப்படியே வைத்து அழகு பார்த்தால் போதுமா? அது தான் கொஞ்சமா பறிச்சிட்டு வந்திட்டேன். இனி என்ன பண்ணலாம்??

தேவையானவை:

வல்லாரை கீரை - 1 கட்டு

தக்காளி - 1

வெங்காயம் - 1

சிவப்பு மிளகாய் - 2

தேசிப்புளி - 1 தே.க

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

1. வல்லாரை இலையை காம்பில் இருந்து கிள்ளி, சுத்தம் செய்துகொள்ளுங்க.

2. சுத்தம் பண்ணிய வல்லாரையை சிறிதாக அரியுங்கள்.

3. வெங்காயம், மிளகாய், தக்காளியை சிறிதாக அரிந்து எடுத்துக்கொள்ளுங்க.

4. ஒரு பெரிய பாத்திரத்தில் அரிந்தவற்றையும், தேசிக்காய் புளியையும், உப்பையும் சேர்த்து நன்றாக கலக்குங்க.

5. நன்றாக கலக்கியதும் சுவையை பார்த்து ஒரு அழகான சிறிய பாத்திரத்தில் இட்டு பரிமாறலாம்.

கவனிக்க வேண்டியவை:

* அரியும் போது நகத்தையோ, விரலையோ அரியாதிங்க. எனக்கு அந்த அனுபவம் உண்டு. அனுபவசாலி சொன்னா கேட்கணும்.

* அவசரப்பட்டு நிறைய உப்பு சேர்த்து போட்டு, பின்னாடி அழாதிங்க.

நினைவாற்றலுக்கும், சளிக்கும் உதவும் வல்லாரை கீரையை சாப்பிட்டு வல்லமை உடாயவராக வாழ்வீர்.

http://www.yarl.com/weblog/suvaiaruvi/2008...st_41.html#more

http://thooyaskitchen.blogspot.com/2008/03/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லாரை உட்கொண்டால் ஞாபக சக்தி வளரும் என்பது உண்மை . வல்லாரையில் கஞ்சியும் செய்து காலை உணவாக உண்பார்கள் . மிக நன்றாக இருக்கும் . பதிவிற்கு நன்றி தூயா.

Link to comment
Share on other sites

ஒவ்வொரு சனிக்கிழமையும் அம்மா வல்லாரைச் சம்பல் செய்கிறவா.

சின்னப் பிள்ளையாய் இருக்கேக்க ஒடி ஒளிக்கிறனான்..

அப்பப்பா ஒரு தடி வைச்சுக்கொண்டு பக்கத்தில இருப்பார் :lol: (சாப்பிடாம கொட்டிப்போடுவன் என்று)

இப்ப எனக்கு பிடிச்ச கீரைகளில வல்லாரையும் ஒன்று :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ லைக் இற் வெரி மச்..! :lol:

வல்லாரை சம்பலில் வல்லாரையை சமைத்து உண்ணாத படியால்.. நங்கு சுத்தம் செய்தல் வேண்டும்..! வல்லாரை சட்னியும் நல்லா இருக்கும்..! நிறைந்த அளவு இரும்புச் சத்து உண்டு..! :lol:

கவனிக்க வேண்டியவை:

* அரியும் போது நகத்தையோ, விரலையோ அரியாதிங்க. எனக்கு அந்த அனுபவம் உண்டு. அனுபவசாலி சொன்னா கேட்கணும்.

கட்டிங் பிளேட்டில் வைத்து கட் பண்ணினா விரலை.. நகத்தை அரியத் தேவையில்லை. தூயாவின் சம்பலில் உள்ள கூறுகளைப் பார்க்கின்ற போது கையில் வைத்து அரிந்திருப்பது தெரிகிறது. கட்டிங் பிளேட்டில் வைத்து அரிந்தால்.. சீராகவும் சிறியதாகவும் அரியலாம். வெங்காயத்தை அழகிய வளையங்களாக அரிந்து போடலாம். தங்காளிப்பழத்தையும் சிறிய சீரான அளவுகளில் அரியலாம். அதெற்கென வசதியான கத்திகள் உண்டு..! காரம் தேவைப்படுபவர்கள் கிறீன் மற்றும் ரெட் பெப்பரையும் அரிந்து போடலாம். சிறிதளவு பச்சைமிளகாயுடன்..! :lol:

Link to comment
Share on other sites

நன்றி இணைப்புக்கு தூயா. கட்டாயம் உணவில் இணைக்கப்படவேண்டிய ஒன்று. என்ன, இங்கு வல்லாரையும் கோழி இறைச்சியும் ஒரே விலை என்றால் பாருங்களேன். ஒரு கட்டு $4.99.

Link to comment
Share on other sites

இங்க வல்லாரை கிடைப்பது கடினம்.. நாக்கை சப்பு கொட்ட வேண்டியது தான் :lol:

Link to comment
Share on other sites

ஒரு வாரத்தில் ஒரு முறையாவது எம் சாப்பாட்டில் கட்டாயம் இருக்கும் எம் வீட்டில்... கனடாவில் எல்லா தமிழ் கடைகளிலும் பொதுவாக வல்லாரை கிடைக்கும்

வல்லாரையும் 'மட்டனும்' சேர்த்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும்.............. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் வல்லாரை கிடைப்பது அரிது.வல்லாரைச்சம்பலை வெள்ளைப்பச்சை அரிசி சோத்துடன் சாப்பிட அந்த மததிரி இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

என்ன லீ லிட்டில் இந்தியாவிற்கு போனால் நல்ல வல்லாரை வாங்கலாமே. பிடி பிடியா போட்டு எல்லா மரக்கறிக்கடைகளிலும் விற்பாங்கள்.

Link to comment
Share on other sites

ம்ம்ம்...நேக்கு பிடிகல..பிடிகல...(தூயிஸ் இதை சாப்பிடுவியளா :wub: )...ஜக்கி மாதிரி இருக்கு..(சுண்டல் அண்ணா இங்க வந்து பாருங்கோ :) )...தூயிஸ் தங்கச்சி என்ன மாதிரி சாப்பிடுறா என்று :D ..அக்சுவலா மம்மி இதை எல்லாம் போட்டு தந்தாலும் நாம போய் கொட்டிடுவோம் அல்லோ... :lol: (என்னவோ இந்த டிஸ் நேக்கு பிடிக்கல்ல யாழ் கள மெம்பர்ஸ் எல்லாம் இந்த டிஸ் சாப்பிடட்டும் அண்ணாவிற்கு ஸ்பேசல் டிஸ் ஏதாச்சும் இருக்கோ :D )...

எனிவே நன்னா செய்திருக்கிறீங்க தூயிஸ்..(பட் நேக்கு வேண்டாம் பிறகு கோவிக்காதையுங்கோ என்ன எனக்கு வேற டிஸ் செய்து தாங்கோ சுண்டல் அண்ணாவும் இதை சாப்பிட மாட்டார் பாருங்கோ :D )..அக்சுவலா நேக்கும் சுண்டல் அண்ணாவிற்கும் அறிவு கூடவா இருக்கிற படியா இதை எல்லாம் சாப்பிட தேவையில்ல என்ன சுண்டல் அண்ணா.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அருமை,

ஏழைகளின் உணவுகளில் ஒன்று. வேளாண்மைச் செய்கையின் போது எனது தகப்பனுடன் வயலுக்குச் சென்றால் அங்கு இது ஒவ்வொரு நாளும் உணவில் இடம் பிடிக்கும். இப்போது புலத்தில் வீடுகளில் பூச்சாடிகளில் பயிரிடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

வல்லாரையை எல்லாரும் என் கண்முன்னே கொண்டுவந்திட்டியள்..... அம்மம்மா தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறா... நான் ஊருக்கு போகணும்... ம்....ஆ....ம் நான் போகணும்.... என்னை அழ வச்சிட்டியள் தூயா....

Link to comment
Share on other sites

ஐ லைக் இற் வெரி மச்..! :D

வல்லாரை சம்பலில் வல்லாரையை சமைத்து உண்ணாத படியால்.. நங்கு சுத்தம் செய்தல் வேண்டும்..! வல்லாரை சட்னியும் நல்லா இருக்கும்..! நிறைந்த அளவு இரும்புச் சத்து உண்டு..! :wub:

கட்டிங் பிளேட்டில் வைத்து கட் பண்ணினா விரலை.. நகத்தை அரியத் தேவையில்லை. தூயாவின் சம்பலில் உள்ள கூறுகளைப் பார்க்கின்ற போது கையில் வைத்து அரிந்திருப்பது தெரிகிறது. கட்டிங் பிளேட்டில் வைத்து அரிந்தால்.. சீராகவும் சிறியதாகவும் அரியலாம். வெங்காயத்தை அழகிய வளையங்களாக அரிந்து போடலாம். தங்காளிப்பழத்தையும் சிறிய சீரான அளவுகளில் அரியலாம். அதெற்கென வசதியான கத்திகள் உண்டு..! காரம் தேவைப்படுபவர்கள் கிறீன் மற்றும் ரெட் பெப்பரையும் அரிந்து போடலாம். சிறிதளவு பச்சைமிளகாயுடன்..! :)

எனக்கு கையில் வைத்து வெட்ட தெரியாது..பல தடவை விரலை வெட்டியிருக்கேன்... ;)

Link to comment
Share on other sites

வல்லாரை உட்கொண்டால் ஞாபக சக்தி வளரும் என்பது உண்மை . வல்லாரையில் கஞ்சியும் செய்து காலை உணவாக உண்பார்கள் . மிக நன்றாக இருக்கும் . பதிவிற்கு நன்றி தூயா.

கஞ்சி எப்படி செய்வாங்க...

Link to comment
Share on other sites

ஒவ்வொரு சனிக்கிழமையும் அம்மா வல்லாரைச் சம்பல் செய்கிறவா.

சின்னப் பிள்ளையாய் இருக்கேக்க ஒடி ஒளிக்கிறனான்..

அப்பப்பா ஒரு தடி வைச்சுக்கொண்டு பக்கத்தில இருப்பார் :D (சாப்பிடாம கொட்டிப்போடுவன் என்று)

இப்ப எனக்கு பிடிச்ச கீரைகளில வல்லாரையும் ஒன்று :(

கிகிகிகிகிகி எனக்கு சின்னனிலயே பிடிக்கும்.. :wub:

நன்றி இணைப்புக்கு தூயா. கட்டாயம் உணவில் இணைக்கப்படவேண்டிய ஒன்று. என்ன, இங்கு வல்லாரையும் கோழி இறைச்சியும் ஒரே விலை என்றால் பாருங்களேன். ஒரு கட்டு $4.99.

ரொம்ப விலை :):D:lol:

Link to comment
Share on other sites

இங்க வல்லாரை கிடைப்பது கடினம்.. நாக்கை சப்பு கொட்ட வேண்டியது தான் :lol:

அங்குமா?? :wub:

ஒரு வாரத்தில் ஒரு முறையாவது எம் சாப்பாட்டில் கட்டாயம் இருக்கும் எம் வீட்டில்... கனடாவில் எல்லா தமிழ் கடைகளிலும் பொதுவாக வல்லாரை கிடைக்கும்

வல்லாரையும் 'மட்டனும்' சேர்த்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும்.............. :(

புதுவித ஜோடியாக இருக்கே...

இங்கும் வல்லாரை கிடைப்பது அரிது.வல்லாரைச்சம்பலை வெள்ளைப்பச்சை அரிசி சோத்துடன் சாப்பிட அந்த மததிரி இருக்கும். :D

இப்படியும் சாப்பிட்டு பார்க்க வேண்டும்... :)

Link to comment
Share on other sites

ம்ம்ம்...நேக்கு பிடிகல..பிடிகல...(தூயிஸ் இதை சாப்பிடுவியளா :wub: )...ஜக்கி மாதிரி இருக்கு..(சுண்டல் அண்ணா இங்க வந்து பாருங்கோ :) )...தூயிஸ் தங்கச்சி என்ன மாதிரி சாப்பிடுறா என்று :D ..அக்சுவலா மம்மி இதை எல்லாம் போட்டு தந்தாலும் நாம போய் கொட்டிடுவோம் அல்லோ... :lol: (என்னவோ இந்த டிஸ் நேக்கு பிடிக்கல்ல யாழ் கள மெம்பர்ஸ் எல்லாம் இந்த டிஸ் சாப்பிடட்டும் அண்ணாவிற்கு ஸ்பேசல் டிஸ் ஏதாச்சும் இருக்கோ :D )...

எனிவே நன்னா செய்திருக்கிறீங்க தூயிஸ்..(பட் நேக்கு வேண்டாம் பிறகு கோவிக்காதையுங்கோ என்ன எனக்கு வேற டிஸ் செய்து தாங்கோ சுண்டல் அண்ணாவும் இதை சாப்பிட மாட்டார் பாருங்கோ :D )..அக்சுவலா நேக்கும் சுண்டல் அண்ணாவிற்கும் அறிவு கூடவா இருக்கிற படியா இதை எல்லாம் சாப்பிட தேவையில்ல என்ன சுண்டல் அண்ணா.. :(

அப்ப நான் வரட்டா!!

ம்ம் சரி சரி அறிவு கூடினவைக்கு தேவை இல்லை தான்.. :D

அருமை,

ஏழைகளின் உணவுகளில் ஒன்று. வேளாண்மைச் செய்கையின் போது எனது தகப்பனுடன் வயலுக்குச் சென்றால் அங்கு இது ஒவ்வொரு நாளும் உணவில் இடம் பிடிக்கும். இப்போது புலத்தில் வீடுகளில் பூச்சாடிகளில் பயிரிடுகின்றார்கள்.

ஓ..எங்க வீட்டில் நிலத்தில் தான் வைத்துள்ளோம்..

வல்லாரையை எல்லாரும் என் கண்முன்னே கொண்டுவந்திட்டியள்..... அம்மம்மா தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறா... நான் ஊருக்கு போகணும்... ம்....ஆ....ம் நான் போகணும்.... என்னை அழ வச்சிட்டியள் தூயா....

:D :D எனக்கும் அப்பாச்சிட நினைவு வந்திட்டுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.