Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று பூமிக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கும் நாள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

screenshot.jpg

29 மார்ச் 2008 ஆகிய இன்று பூமி மணித்தியால நாள். இந்த நாளில் இரவு 8:00 மணி தொடக்கம் இரவு 9:00 வரையான ஒரு மணித்தியால காலப்பகுதியில் நீங்கள் வாழுமிடமெங்கும் இரவு விளக்குகளை நிறுத்தி சக்தியை சேமிக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் தினமாகும்.

மின் சக்தி உட்பட்ட சக்திகளை உருவாக்க பெருமளவு சுவட்டு எரிபொருட்கள் (உயிரித்திணிவு காபன் சார் எரிபொருட்கள்) நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவு காபனீரொக்சைட் வாயு வளிமண்டலத்துள் சேர்க்கப்படுகிறது. இதனால் உலக வெப்பமுறுதல் விளைவுகள் உட்பட கடந்த தசாப்த காலம் பல புவிக் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

எனவே சக்திப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் வெளியிடப்படும் காபனீரொக்சைட்டின் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி மீள முடியா வளங்களுள் அடங்கும் சுவட்டு எரிபொருட்களின் பாவனை அளவையும் குறைத்துக் கொள்ள முடியும் என்பதை உலகெங்கும் வாழும் மக்களுக்கு உணர்த்த இந்த பூமிக்கு ஒரு மணித்தியாலம் என்பது இன்றைய நாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாகவே இன்றை கூகிள் முகப்பு கறுப்பு நிறப்பின்னணியில் வெளிப்படுகிறது. வழமையாக அது வெண்ணிறப் பின்னணியில் வெளிப்படுவதாகும்.

http://kuruvikal.blogspot.com/2008/03/eart...eness-post.html

படம்: கூகிள்.

இப்பதிவு அவசியம் கருதி கிறீன் பிரிகேட்டிலும் இடப்படும் என்பதை நிர்வாகத்துக்கு அறியத்தருகின்றோம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு சன்றி நெடுக்ஸ்!! இவ் வருடம்தான் முதன்முதல் இது ஆரம்பமாகின்றதா ? அல்லது முன்பிருந்தே இது இருக்கா? :rolleyes::D

நன்றி நெடுக்காலபோவன். எனக்கும் நேற்று ஈ மெயிலில் கீழ்க்கண்ட தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. யாழில் இணைக்க யோசிச்சேன். நேரம் கிடைக்கவில்லை.

March 29th is an international Earth hour

Hi,

On March 29 th 2008 between 8pm to 9pm is an Earth hour.

Earth hour is an international event that asks households and businesses to turn off their lights and non- essential electrical appliances for one hour on the evening of March29th at 8 pm local time to promate electricity conservation and thus lower carbon emissions.

Thanks

மீண்டும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி ஒரு மணித்தியாலம் லைற்ரை நிப்பாட்டிப் போட்டு இருட்டிலை என்ன கோதாரியை பண்ணுறது?

ஆராவது ஐடியா இருந்தால் சொல்லுங்கோப்பா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி பக்கத்து வீட்டு பக்கம் ஒருக்கா போய்ட்டு வாறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்து வீட்டு கடுவன்நாய்க்கு ஆரப்பா பதில் சொல்லுறது?

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டில லைற்ரை நிற்பாட்டி போட்டு சூரியநமஸ்காரமும் செய்யலாம் .

எல்லாம் சரி ஒரு மணித்தியாலம் லைற்ரை நிப்பாட்டிப் போட்டு இருட்டிலை என்ன கோதாரியை பண்ணுறது?

ஆராவது ஐடியா இருந்தால் சொல்லுங்கோப்பா :unsure:

மனுசி, பிள்ளைகளக் கூட்டிக்கொண்டு எல்லாருமே ஒரு நிமிசம் வெளியில வோக்கிங் போயிட்டு வரலாமே? இப்ப இரவாக நேரம் செல்லும்தானே? வெளிச்சம் இருக்கும் எண்டபடியால் வோக்கிங் போகலாம். உடம்புக்கு சின்ன ஒரு எக்ஷசைசாவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி ஒரு மணித்தியாலம் லைற்ரை நிப்பாட்டிப் போட்டு இருட்டிலை என்ன கோதாரியை பண்ணுறது?

ஆராவது ஐடியா இருந்தால் சொல்லுங்கோப்பா :unsure:

கடவுளை காணலாம்........... பேசலாம்..........இருட்டில் எமது விழியின் பார்வை எப்படி என்பது பற்றி ஒரு ஆய்வை செய்து பார்க்கலாம்............... இருட்டில செய்ய எவளவோ இருக்கு........... நாங்கள் வெறும் ஒரு மணி நேரம்தானா? இரண்டு மணியாக கூட்டமாட்டார்களா என்று யோசித்து கொண்டிருக்கிறோம் நீங்கள் வேறே இதுக்குள்ள என்ன செய்றதெண்டு....?????

"உன்னோடு நானிருந்தால்.......... இருள் கூட பேரளகு!"

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு சன்றி நெடுக்ஸ்!! இவ் வருடம்தான் முதன்முதல் இது ஆரம்பமாகின்றதா ? அல்லது முன்பிருந்தே இது இருக்கா? :unsure::)

போன வருடம் அவுஸ்திரேலியாவில் பங்குனி 31ல் ஆரம்பிக்கப்பட்டது.இவ்வருடம் 371 நகரங்களில் உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10 மாதத்தின் பின் சனத்தொகை கணக்கெடுக்க வேண்டி வரும் :unsure:

இது நல்ல ஒரு முயற்சியின் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

கும்ஸ் கையோட விளக்குமாடிறையும் கொண்டு தரிஞ்சா தப்பலாம் அதான் நாய்ட்ட இருந்து..........

ம்ம்..தாங்ஸ் நெடுக்ஸ் தாத்தா இன்வோமேசனிற்கு :o ..ம்ம் ஆனா நான் அப்படி எல்லாம் செய்யல்ல தாத்தா நீங்க செய்தனியளோ.. :o (இல்ல கேட்டனான் இல்லை யாழ்களம் மெம்பர்ஸ் யாராச்சும் செய்தனீங்களோ :rolleyes: )..இது நேக்கு முதலே தெரிந்திருந்தா என்ட வீட்டு மின் விளக்கை நிறுத்தாம கட்டாயம் பக்கத்து வீட்டு மின்விளக்கை நிறுத்தி இருப்பேன்.. :lol: (ஜஸ் மிஸ் ஆச்சு)...எனிவே பெட்டர் லக் நெஸ்ட் டைம் ஜம்மு பேபி.. :unsure:

எல்லாம் சரி தாத்தா லைட்டை ஓவ் பண்ணுறதால பல பின்விளைவுகள் ஏற்படுமே பிறகு அதற்காக இன்னொரு தினம் கொண்டாட வேண்டி வந்தாலும் வரும் என்னவோ நல்லதா நடந்தா சரி.. :o (ம்ம்..எல்லாரும் இருட்டை விட்டு வெளிச்சதிற்கு வர சொல்வீனம் நம்ம நெடுக்ஸ் தாத்தா இருட்டிற்கு போக சொல்லுறார்)...முடியல என்னால.. :o

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஒன்றை வாழ்க்கையில ஒதுக்கினா இன்னொன்றால பிரச்சினை" :lol:

அப்ப நான் வரட்டா!!

எல்லாம் சரி ஒரு மணித்தியாலம் லைற்ரை நிப்பாட்டிப் போட்டு இருட்டிலை என்ன கோதாரியை பண்ணுறது?

ஆராவது ஐடியா இருந்தால் சொல்லுங்கோப்பா :unsure:

ஒண்ணுமே பண்ணாதையுங்கோ கு.சா தாத்தா...(விளங்கிச்சே)... :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

நாங்கள் சுமார் ரெண்டு மணி நேரம் இந்த தினத்தை நேற்று வீட்டில கடைப்பிடிச்சம். நான் வெளியில வோக்கிங் போனனான். அம்மா சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தா இந்த நேரத்தில. அப்பா நித்தா செய்தார்.

நீங்களும் எல்லாரும் கடைப்பிடிச்சனீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

கடைபிடிச்சனாங்கள்....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..தாங்ஸ் நெடுக்ஸ் தாத்தா இன்வோமேசனிற்கு :) ..ம்ம் ஆனா நான் அப்படி எல்லாம் செய்யல்ல தாத்தா நீங்க செய்தனியளோ.. :wub: (இல்ல கேட்டனான் இல்லை யாழ்களம் மெம்பர்ஸ் யாராச்சும் செய்தனீங்களோ :lol: )..இது நேக்கு முதலே தெரிந்திருந்தா என்ட வீட்டு மின் விளக்கை நிறுத்தாம கட்டாயம் பக்கத்து வீட்டு மின்விளக்கை நிறுத்தி இருப்பேன்.. :D (ஜஸ் மிஸ் ஆச்சு)...எனிவே பெட்டர் லக் நெஸ்ட் டைம் ஜம்மு பேபி.. :wub:

எல்லாம் சரி தாத்தா லைட்டை ஓவ் பண்ணுறதால பல பின்விளைவுகள் ஏற்படுமே பிறகு அதற்காக இன்னொரு தினம் கொண்டாட வேண்டி வந்தாலும் வரும் என்னவோ நல்லதா நடந்தா சரி.. :lol: (ம்ம்..எல்லாரும் இருட்டை விட்டு வெளிச்சதிற்கு வர சொல்வீனம் நம்ம நெடுக்ஸ் தாத்தா இருட்டிற்கு போக சொல்லுறார்)...முடியல என்னால.. :(

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஒன்றை வாழ்க்கையில ஒதுக்கினா இன்னொன்றால பிரச்சினை" :wub:

அப்ப நான் வரட்டா!!

நான் சின்னனில் இருந்தே பூமித்தாயின் அழகை அதிகம் ரசிப்பவன். எங்கள் வீட்டில் ஒரு வாழை குலைப் போடப்போகிறது என்றாலே நாலு குட்டி நட்டு வைப்பேன். குலை போட்ட வாழையை வெட்டப் போறாங்களே என்று. புளியங்கொட்டைகள் சேர்த்து வைத்து பாத்தி போட்டு முளைக்க விட்டு நடுவேன். அது கோழி கிளறி மடிவது வேறு விடயம்.

நான் மின் சக்தியை குறைந்தளவு பாவிக்கும் மின் வளக்குகளையே பாவிக்கிறேன். இரவில் பொதுவாக (கணணி வேலை செய்யும் போது ) கணனித் திரையில் இருந்து வரும் ஒளியில் வேலை செய்வேன். படுக்கை விளக்குகளைப் பாவிப்பதை தவிர்க்கிறேன்.

உணவு தயாரிப்பின் போது பொருட்களை எல்லாம் தயார்படுத்தி விட்டுத்தான் சமைக்க ஆரம்பிப்பேன். தேவைக்கு அதிகமாக எரிவாயு எரிவதை தவிர்ப்பேன். சுத்தப் படுத்தும் போது குளிர் நீரை இயன்ற அளவு பாவிப்பேன்..!

எனது வாழிடத்தில் வெப்பமானி இருக்கும். வெப்பநிலை 21 தொடக்கம் 23 வரைக்குள் இருக்கத் தக்கதாக கீற்றரை பாவித்து ஓவ் செய்வேன்..! தானியங்கி வலுகுறைந்த கீற்றர்களை பாவிக்கிறேன்..!

நேற்றைய தினம் இரவு சுமார் 3 மணி நேரங்கள் இருட்டில் இருந்தேன்.

குறுகிய தூரங்களுக்கு நடந்து பிரயாணம் செய்வேன். ஓரளவு தூரங்களுக்கு மிதி வண்டியில் செல்வேன். அதிகம் பொதுப் போக்குவரத்து ஊடகங்களைப் பாவிப்பேன். நீண்ட தூரத்துக்கு அவசியமென்றால் மட்டும் காரில் பிறருடன் கூடிச் செல்வேன்..!

இப்படி என்னாலான வகையில் காபன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன். இன்னும் முயற்சிப்பேன்..!

நான் கிறீன் பீசில் (green peace) எனது பாடசாலைக் காலத்திலேயே இணைந்து கொண்டவன்..! ஊரில் இருந்த போது புலிகளின் குரல் நடத்திய சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஓவியப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். பாடசாலையில் பேச்சுப் போட்டிகளில் கட்டுரைப் போட்டிகளில் இவ்விடயத்தையே முதன்மைப் படுத்தி எழுதுவேன்..! இன்றும் அதையே செய்கின்றேன்..! இதில் எனக்கு பூரண திருப்தி இருக்கிறது..!

இதில் எதுவும் மிகைப்படுத்தலும் இல்லை.. பொய்யும் இல்லை..!

ம்ம்ம்..நெடுக்ஸ் தாத்தா சின்னனில எல்லாரும் வேற அழகை ரசிப்பீனம் ஆனா நம்ம நெடுக்ஸ் தாத்தா வந்து பூமி தாயின் அழகை ரசித்திருக்கிறார் :wub: ..(நிசமா என்னால முடியல)...பட் தாத்தா வந்து கிரேட் தான்..அட குலை விட்ட வாழைக்கே உயிர் கொடுத்த வள்ளள் எங்கள் தாத்தா என்றா பாருங்கோ..(இப்பவும் அப்படி தானோ இல்லையோ தாத்தா இல்ல கேட்டனான் பாருங்கோ).. :(

ம்ம்..கணணி திரையில் வரும் ஒளியை கொண்டு கணணியை யூஸ் பண்ணுவீங்களா..(அப்ப கண் வந்து பழுதா போகாதா)...நீங்க ஒன்றை இழப்பதன் மூலம் இன்னொன்றை பெற்று கொள்கிறீங்கள் இது நல்லதா என்று தான் விளங்கவில்லை எனக்கு.. :lol: (எப்பவுமே நாம் ஒன்றை இழந்து இன்னொன்றை பெற்று கொள்ள கூடாது அல்லோ தாத்தா).. :lol:

ம்ம்ம்..விளங்குது தாத்தா..(யூ ஆர் கிரேட்)..நிசமா என்னால முடியாது இப்படி எல்லாம் செய்ய பாருங்கோ..ஆனால் நீங்கள் சொன்னா பிறகு செய்யாம இருக்கவும் முடியல்ல..(ஏதாவது நான் செய்ய கூடிய மாதிரி ஒன்றை சொல்லுங்கோ கட்டாயம் செய்யிறேன் பாருங்கோ :wub: )..

ம்ம்...தாத்தாவிற்கு வாறவா ரொம்பவே கொடுத்து வைத்தவா..(அது தான் பாவம் என்று சொல்ல வந்தனான்)...சரி..சரி கோவித்து போடாதையுங்கோ என்ன :D ..ஒன்று கேட்டா கோவிக்க மாட்டியள் தான் இந்த லோகத்தில நீங்க மட்டும் இப்படி எல்லாம் செய்து மற்றவா செய்யாட்டி உந்த பிரச்சினை தீர்திடுமோ..(அதை ஒருக்கா கிளியர் பண்ணுங்கோ :wub: )..

தாத்தாவின் எந்த கருத்தும் மிகைபடுத்தல் இல்லை என்பது நேக்கு நன்னா தெரியுமே தாத்தா..(அதை சொல்ல தானா வேண்டும் பாருங்கோ :) )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்...தாத்தாவிற்கு வாறவா ரொம்பவே கொடுத்து வைத்தவா..(அது தான் பாவம் என்று சொல்ல வந்தனான்)...சரி..சரி கோவித்து போடாதையுங்கோ என்ன ..ஒன்று கேட்டா கோவிக்க மாட்டியள் தான் இந்த லோகத்தில நீங்க மட்டும் இப்படி எல்லாம் செய்து மற்றவா செய்யாட்டி உந்த பிரச்சினை தீர்திடுமோ..(அதை ஒருக்கா கிளியர் பண்ணுங்கோ )..

வாறவா போறவா எல்லாரையும் பார்த்திட்டு நாங்க வாழ முடியாது. அவை அவைக்கு என்று சுயமா இயங்க முடியக்க நாம ஏன் தேவையில்லாம அடுத்தவைட சுதந்திரத்தில தலைப்போடனும். முதலில நான் என் இலட்சியப் படி வாழுறனா என்றதைக் கவனிக்கிறதுதான் என்ர வேலை. அடுத்தவன் செய்யுறானா இல்லையா என்றதைப் பற்றியெல்லாம்.. நான் யோசிக்கிறதில்ல. நான் செய்யுறது உலகத்துக்கு உபயோகமா இருக்குமா என்று தான் பார்ப்பன். என்னை நான் தான் செயற்படுத்த, கட்டுப்படுத்த முடியும். அடுத்தவனை நான் செயற்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது. இந்த வகையில தான் நான் இப்படியான விடயங்களை அணுகிறன். :(:icon_mrgreen:

நச்சென்று என்று சொல்லி போட்டு போயிட்டியள்..(அந்த மாதிரி இருந்துச்சு :( )..நானும் தாத்தாவை போல தானா ஆனா என்ன நான் செய்யிறது உலகதிற்கு பிரயோசனம் இல்லை என்று தெரிந்தாலும்..(அதை தான் நானும் செய்வேன் :( )..பிகோஸ் என்னாலையே என்ன கொன்ரோல் பண்ண முடியல்ல தாத்தா.. :wub:

எனிவே தாத்தாவின்ட வழி தனி வழி ஆக்கும் நம்ம வழியை சொல்ல தான் வேண்டுமா என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஒரு மணித்தியாலக்துக்கு எண்டாலும் சுதந்திரமா இருக்கலாம் தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.