Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வினிகர் கத்தரிக்காய்

Featured Replies

Vinigar%20Katharikai.jpg

இது எங்கள் அண்டை நாடான இலங்கையில் மிகவும் பிரச்சித்தம் பெற்ற ஒரு உணவு பதார்த்தம். மஞ்சள் சாதமும், அசைவ கறி என்றால் நிச்சயம் இது இருக்கும் என்றே சொல்லலாம் என நினைக்கின்றேன். காரணம் இதன் சுவை தான். பல தடவை இதை சாப்பிட்ட அனுபவத்தில் தான் சொல்கின்றேன். சில மாற்றங்களுடன் இந்த செய்முறையை அமைத்துள்ளேன். விருந்தாளிகளுக்கு சமைக்கும் போது இது நிச்சயம் ஒரு சுவையான பதார்த்தமாக இருக்கும்.

தேவையானவை:

கத்தரிக்காய் 250 கிராம்

வினிகர் 2 மே.க

அரைத்த கடுகு 2 தே.க

அரைத்த மிளகு 1 தே.க

மஞ்சள் தூள் 1/2 தே.க

உப்பு தேவைக்கேற்ப

பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை:

1. கத்தரிக்காயை சுத்தம் செய்து இரண்டு இஞ்சிற்கு நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

2. சட்டியில் எண்ணையை சூடாக்கி கத்தரிக்காயை பொரித்து எடுங்க.

3. பொரித்த கத்தரிக்காயை எண்ணெய் நன்றாக வடியும் படி செய்யுங்கள்.

4. இன்னொரு சட்டியில் வினிகருடன் மற்றைய பொருட்களையும் சேர்த்து கொதிநிலைக்கு வரும் வரை சூட்டக்குங்க.

5. கொதித்து வந்த கலவையில் பொரித்த கத்தரிக்காயை கொட்டி நன்றாக கிளறிவிடுங்க.

சுவையான வினிகர் கத்தரிக்காய் ஆயத்தம். சூடான எண்ணெய்யை கவனமாக பாவிக்கவும்.

அனைவருக்கும் இனிய வாரவிடுமுறை அமைய வாழ்த்துக்கள்.

http://thooyaskitchen.blogspot.com/2008/03...-post_9191.html

என்ன ஒரே சாப்பாடா இருக்கிது தூயா.

அண்டை நாடான இலங்கையா? அது எங்க இருக்கிது? :rolleyes:

வினாகிரி வயித்துக்கு கூடாது எண்டு முன்பு எங்கையோ கேள்விப்பட்டமாதிரி இருக்கிது.

நான் ஒரே ஒரு மரக்கறி மாத்திரம் சாப்பிடுவதில்லை. அது கத்தரிக்காய். கத்தரிக்காய் எனக்கு அலேர்ஜி. சாப்பிட்டால் காலில எனக்கு தோல் உரியும். எதுக்கும் இதப்பற்றி என்ன நினைக்கிறா எண்டு அம்மாவிட்ட அபிப்பிராயம் கேட்டு சொல்லிறன்.

கடுகு, மிளகு, மஞ்சள் தூள், வினாகிரி எண்டு ஒரே அமர்க்களமா இருக்கிது. இதச் சாப்பிட்டாப்பிறகு வயித்துக்க அந்தமாதிரி தீர்த்த திருவிழா நடக்கும் எண்டு நினைக்கிறன். எதுக்கும் யாராவது செய்து சாப்பிட்டுப் போட்டு உங்கட அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தூயா உங்களது அடுத்த குறிப்பும் கத்தரிக்காயாக உள்ளது. அத்துடன் வின்ரர் நேரங்களில் கத்தரிக்காய் இங்கு பவுண் விலை விற்கிறது.என்றாலும் செய்து பார்க்கின்றேன்.

  • தொடங்கியவர்

என்ன ஒரே சாப்பாடா இருக்கிது தூயா.

அண்டை நாடான இலங்கையா? அது எங்க இருக்கிது? :unsure:

வினாகிரி வயித்துக்கு கூடாது எண்டு முன்பு எங்கையோ கேள்விப்பட்டமாதிரி இருக்கிது.

நான் ஒரே ஒரு மரக்கறி மாத்திரம் சாப்பிடுவதில்லை. அது கத்தரிக்காய். கத்தரிக்காய் எனக்கு அலேர்ஜி. சாப்பிட்டால் காலில எனக்கு தோல் உரியும். எதுக்கும் இதப்பற்றி என்ன நினைக்கிறா எண்டு அம்மாவிட்ட அபிப்பிராயம் கேட்டு சொல்லிறன்.

கடுகு, மிளகு, மஞ்சள் தூள், வினாகிரி எண்டு ஒரே அமர்க்களமா இருக்கிது. இதச் சாப்பிட்டாப்பிறகு வயித்துக்க அந்தமாதிரி தீர்த்த திருவிழா நடக்கும் எண்டு நினைக்கிறன். எதுக்கும் யாராவது செய்து சாப்பிட்டுப் போட்டு உங்கட அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோ.

அளவுக்கு அதிகமாக சேர்க்கும் பட்சத்தில் தான் தீமைகள்..

அது தவிர இது சலட் போல சாப்பிடுவது

கறி போல அதிகம் உண்பதல்ல

என்ன தூயா உங்களது அடுத்த குறிப்பும் கத்தரிக்காயாக உள்ளது. அத்துடன் வின்ரர் நேரங்களில் கத்தரிக்காய் இங்கு பவுண் விலை விற்கிறது.என்றாலும் செய்து பார்க்கின்றேன்.

அடுத்த செய்முறை வேறு ஏதும் போடுறேன் :rolleyes:

ம்ம்..தூயிஸ் அந்த படத்தை பார்க்க வாய் ஊறுகிறது.. :unsure: (அது நீங்களா செய்தனியள் :rolleyes: )...நன்னா தான் இருக்கு அட படத்தை பார்த்து சொன்னேனப்பா :lol: ..வீட்டை என்னும் இருக்கோ முடிந்தோ இல்லாட்டி எனக்கு அனுப்ப தான்..(அதற்காக மிச்சத்தை எல்லாம் அனுப்பபடாது சொல்லிட்டன் :o )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கலியாண வீடு, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இதை சாப்பிட்டு இருக்கிறேன். ருசியாக இருக்கும். குறிப்பு க்குநன்றிங்க

வினிகருக்கு பதிலாக பழப்புளி அல்லது தக்காளிப்பழம் பாவிச்சும்

செய்யலாம் தூயா.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வினிகருக்கு பதிலாக பழப்புளி அல்லது தக்காளிப்பழம் பாவிச்சும்

செய்யலாம் தூயா.. :wub:

வினிகர் அசெற்றிக் அசிட் எனப்படும் மிதமான மென் அமில வகையானது. உண்மையில் இவ்வகை உணவுகள் அசிட் பிரச்சனை அல்லது குடற் புண் உள்ளவர்களுக்கு பொருத்தமானதல்ல. காரணம் ஏலவே எமது உடலில் இரப்பையில் வன் அமில வகையான கைரோகிளோரிக் அசிட் சுரக்கிறது. இது அளவுக்கு அதிகமாக சுரப்பதால் தான் குடற் புண் (அல்சர்) போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

சிற்றஸ் வகை (தேசிக்காய் போன்றவற்றில்) புளி வகையில் உள்ளவை வினிகரை விட மென் அமிலங்கள். அந்த வகையில் அவற்றைப் பாவிப்பது வினிகரைப் பாவிப்பதை விட சிறந்தது..! அத்துடன் விற்றமின் சி க்குரிய அஸ்கோபிக் அசிட்டும் இவற்றில் உண்டு. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினிகரை விட பழப்புளி பாவித்து தான் நான் செய்கிறனான். நல்ல சுவையாக இருக்கும்

அம்மாவிட்ட காட்டி கேட்டன் தூயா. தானும் இதுகள் எங்களுக்கு செய்து தாறவவாம் எண்டு சொன்னா. எனக்கு ஏதோ இத வீட்டில சாப்பிட்டதா நினைவு இல்லை. நீங்கள் சொன்னமாதிரி கறிமாதிரி சாப்பிடாமல் சுவையுக்கு கொஞ்சம் தொட்டு சாப்பிடிறது எண்டு சொன்னா. பிரை ரைசுடன் ஆக்கள் வழமையாக சேர்த்து செய்து சாப்பிடிறதாம்..

பாவம் உங்க அம்மா. நீங்க யாழில கண்டுட்டு கேட்டு அவங்களைப் போட்டு புச்சுப் புடுங்கிறீங்க. நீங்க சாப்பிடுறது கூட என்னென்று தெரியாம.. சாப்பிடுறீங்க. அம்மா வந்து விளக்கம் சொல்ல வேண்டி இருக்குது.

சோ.. சாட். மொண்டசிறி.. பிள்ளையலாட்டம்.. வயசு போன நேரத்திலையாவது அம்மாவை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்களன். :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

இல்ல நெடுக்காலபோவான், நான் ஸ்கூலுக்கு போனா இரவிலதான் பெரும்பாலும் வந்து சோறு சாப்பிடிறது. எனக்கு இருட்டுக்க இருந்து / மங்களான வெளிச்சத்தில் இருந்து சாப்பிட விருப்பம் எண்டபடியால் போடப்பட்ட கறிகள் பற்றி ஆராய்ச்சி செய்வதில்லை.

அம்மா தனக்கு பொழுதுபோக இல்லை எண்டு ரெண்டு தமிழ் ரீவி சனலுகள் எடுத்து வச்சு இருக்கிறா. அதில போற சமையல் குறிப்புகள அடிக்கடி ஏதாவது செய்து தருவா. இதனாலையும் நான் சாப்பிடுறதுகளப் பற்றி பெருசா ஒண்டும் விசாரிப்பதில்லை. சாப்பிடும்போது ஏதாவது வாயில வைக்கமுடியாமல் தடக்குப்பட்டால் மாத்திரம் தான் விசாரணைகள் செய்யுறது.

ஹிஹி நான் வீட்டில அம்மாவிண்ட கடைசி செல்லப்பிள்ளை. எண்ட உபத்திரவங்களை அம்மா பெரிசா கண்டுகொள்ள மாட்டா. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வினிகருக்கு பதிலா பழப்புளி விட்டு செய்தால் சாதாரனமாக கத்தரிக்காய் பொரித்து குழம்பு வைப்பது போலத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சில கொண்டாட்டங்களின் போது இந்த வினிகர் கத்தரிக்காய் சாப்பிட்டிருக்கிறேன். ருசியா இருக்கும். சாப்பிட உட்கார்ந்தால் ஒரு பிடிதான். வயிறு நிறைய சாப்பிடுவேன்.

சாப்பிட்டு முடிஞ்சு வீட்டுக்கு வந்த அடுத்த நாள் ஒரே இலைகுழை யும் உடற்பயிற்சியும்தான்.

  • 1 month later...

இதை கொஞ்சமா தானே சாப்பிடனும் ;)

இதை கொஞ்சமா தானே சாப்பிடனும் ;)

அதையொல்லாம் நீங்கள் சொல்லப்படாது ஏன் என்றால் உங்களைப்பற்றி எனக்குத்தெரியம்

எனக்கு கனினி உதவி செய்யவில்லை தூயா அண்ணாக்களிடம் சொல்லி கேட்கவும்......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894 இதில் போய் பார்க்கவும்...

Edited by yarlpriya
ஒருமையில் எழுதப்பட்டது திருத்தப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

அதையொல்லாம் நீங்கள் சொல்லப்படாது ஏன் என்றால் உங்களைப்பற்றி எனக்குத்தெரியம்

எனக்கு கனினி உதவி செய்யவில்லை தூயா அண்ணாக்களிடம் சொல்லி கேட்கவும்......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894 இதில் போய் பார்க்கவும்...

கிகிகிகிகிகிகி

விரைவில் பதில்வரும் :D

Edited by yarlpriya

கிகிகிகிகிகிகி

விரைவில் பதில்வரும் :lol:

நன்றி நன்றி நிறைய உதவும் பக்குவம், நிறைய சாப்பாடு வைத்திருக்கியல் ஒரு புத்தகம் எழுதலாமே எக்கோ ..... :(:(

  • தொடங்கியவர்

நன்றி நன்றி நிறைய உதவும் பக்குவம், நிறைய சாப்பாடு வைத்திருக்கியல் ஒரு புத்தகம் எழுதலாமே எக்கோ ..... :lol::(

ஏன் இந்த கொலைவெறி..

முதலில் இங்கு சரியா எழுத கற்றுக்கொள்ளனுமே.

ஏன் இந்த கொலைவெறி..

முதலில் இங்கு சரியா எழுத கற்றுக்கொள்ளனுமே.

அப்ப என்ன பிழையாவா இதில் இருக்கு எல்லாம் பிரதி பண்ணி வைத்திருக்கேன் வருங்கால மனைவிக்கு என்று எல்லாம் பிழைத்து போய்விட்டது போல் இருக்கிறது.......தூயாஆஆஆஆஅ :lol:

  • தொடங்கியவர்

அப்ப என்ன பிழையாவா இதில் இருக்கு எல்லாம் பிரதி பண்ணி வைத்திருக்கேன் வருங்கால மனைவிக்கு என்று எல்லாம் பிழைத்து போய்விட்டது போல் இருக்கிறது.......தூயாஆஆஆஆஅ :(

இதுவரை எலிகள் தப்பியிருக்கும் நம்பிக்கை தான் :lol::( :(

இதுவரை எலிகள் தப்பியிருக்கும் நம்பிக்கை தான் :D :D :D

தப்ப விடாமாட்டோம்.... :(:(

வணக்கம் தூயாக்கா,என்னிடம்

4 பூசனிக்காயும்,

4 நல்ல பச்சமிளகாயும்,

4 சின்ன வெங்காயமும்,

1 பாதி தேங்காயும், இருக்கு,

இதவைத்து ஏதாவது செய்யலாமா என்று சொல்லுங்கோவன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் என்னிடம்

4 பூசனிக்காயும்,

4 நல்ல பச்சமிளகாயும்,

4 சின்ன வெங்காயமும்,

1 பாதி தேங்காயும், இருக்கு,

இதவைத்து ஏதாவது செய்யலாமா என்று சொல்லுங்கோவன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, :icon_mrgreen::icon_mrgreen:

விடிய வெள்ளென எழும்பி சந்தையிலை கொண்டுபோய் வித்தால் 4 காசு வரும் :icon_mrgreen:

விடிய வெள்ளென எழும்பி சந்தையிலை கொண்டுபோய் வித்தால் 4 காசு வரும் :D

குமாரசாமி அண்ண உங்களுக்கு இந்த வியாபார புத்தி இன்னும் விட்டுபோகல,,,,,,,,,,,,,,,,,,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.