Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பி. இரண்டாகப் பிளவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் குழு விவகாரத்தால்

ஜே.வி.பிக்குள் உட்கட்சிக் குரோதம்

31.03.2008

கிழக்கில் தனது துணைப்படையான பிள்ளையான் குழுவை வைத்துக்கொண்டு அரசு மேற்கொள்கின்ற அரசியல், இராணுவக் காய் நகர்த்தல்கள் தென்னிலங்கை அரசியலிலும் பலத்த சூட்டைக் கிளப்பியிருக்கின்றன.

பிள்ளையான் குழுவின் செயற்பாடுகளும் அதற்கு அரசுத் தரப்புக் கொடுக்கும் ஊக்கமும் ஆதரவும் ஜே.வி.பி. கட்சிக்குள்ளேயே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

பிள்ளையான் குழு விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி. கட்சியின் மூத்த தலைவர்களே தமக்குள் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கின்றது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி, கடந்த இருபதாம் திகதி ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கொழும்பில் கருத்து ஒன்றை வெளியிட்டார்.

கிழக்கில் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டுமானால் பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையானால் பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு வழங்கலாம் என்று ஜே.வி.பி. தலைவர் அறிவித்தார். இதுவே இவ்விவகாரத்தை ஒட்டி ஜே. வி. பியின் பொதுவான நிலைப்பாடாக இருக்கும் என்று அப்போது கருதப்பட்டது.

2006 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுடன் தான் நடத்திய "ஜெனிவா 1' பேச்சுகளின்போது கருணா குழு (தற்போதைய பிள்ளையான் குழு) உட்பட சகல சட்டவிரோதக்குழுக்கள் மற்றும் ஒட்டுப்படைகளின் ஆயுதங்களைக் களைவதற்கு இலங்கை அரசு இணங்கியபோது அதனை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து விமர்சித்திருந்தது.

அந்தக் கட்சிதான் இப்போது அதே பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைய வற்புறுத்துகின்றது என அண்மைக்காலத்தில் சில தரப்புகளினால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஜே.வி.பிக்குள் இது தொடர்பாக இருவேறு முரண்பாடான கருத்துகள் இருக்கின்றமை, கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் கருத்து வெளியாகி ஆறு நாட்களுக்குள் அம்பலமாயிற்று.

"தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின்' செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் அதன் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான விமல் வீரவன்ஸ, பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையைக் கடுமையாகச் சாடினார். அப்படிப் பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களையக்கோருவோரை "பைத்தியக் காரர்கள்' என்று சுட்டுவது போல அத்தகையோரின் மண்டையைச் சோதிக்கவேண்டும் என்றும் விமல் வீரவன்ஸ பகிரங்கமாகப் பிரஸ்தாபித்திருந்தார்.

ஆனால், ஜே.வி.பியின் முக்கிய பிரமுகரான விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு கட்சியின் மூத்த வட்டாரங்களில் இருந்து காரசாரமாகப் பதிலடி வந்திருக்கின்றது.

லால் காந்த, அனுர குமார திஸநாயக்கா போன்றோர் தமது கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறியபடி, பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதே கட்சியின் ஒருமித்த நிலைப்பாடு என வற்புறுத்தியிருக்கின்றனர்.

மாத்தளை, இரத்தோட்டையில் கடந்த வாரம் ஜே.வி.பி. ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கே.டி. லால் காந்த

""தங்களுடைய சொந்த எண்ணம் என்ற ஒன்று கருதி, கட்சியின் பெரும்பான்மையினரின் தீர்மானத்தை மதிக்க விரும்பாத நபர்களையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசியல் இலாபங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள இப்போது விரும்புகின்றார். ஜனாதிபதி ராஜபக்ஷ தமது அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தை நகர்த்துவதற்கு இத்தகைய பலவீனமான அரசியல்வாதிகளைத் தேடுகிறார். அவரது அரசியல் இத்தகையோரை வட்டமிடுவதில்தான் அமைந்துள்ளது.

""ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜே.வி.பியைப் பொறுத்தவரை அதை ஒரு முழுமையான கட்சியாக அங்கீகரித்து அதனுடன் அரசியலில் ஈடுபட வேண்டுமே தவிர, ஜே.வி.பியில் தனக்குப் பிடித்தமான தனியாட்களை வைத்து அவர்கள் மூலம் அல்ல. அதை விடுத்து தனியாட்கள் மூலம் ஜே.வி.பியைக் கையாள அவர் முயற்சிப்பாராயின் ஜே.வி.பியின் ஆதரவையுமே அவர் இழக்க வேண்டியவராவார்'' என எச்சரித்திருக்கிறார் லால் காந்த.

இதேபோன்ற கருத்தை அவர் சிங்களப் பத்திரிகையான "லங்காதீப'வுக்கும் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிள்ளையான் குழு விவகாரம், ஜே.வி.பியின் மூத்த தலைவர்கள் மத்தியில் வழமைக்கு மாறாக பகிரங்க அரங்குகளில் அவர்கள் மோதும் நெருக்கடி நிலைக்குச் சென்று விட்டதையே இக்கருத்துகள் காட்டுகின்றன.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் சூடு பிடித்து, அதன் விளைவாக கிழக்கில் சூடுகள் விழும்போது, பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைவதா, இல்லையா என்ற விவகாரம் ஜே.வி.பிக்குள் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

http://www.sudaroli.com/editorial.htm

ஜே வி பியின் பிரசாரசெயலர் விமல்வீரவன்சவின் கட்சி உறுப்புரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக கட்சி தரப்புகள் தெரிவி;த்துள்ளன. கட்சியின் அரசியல் பிடம் இன்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. அண்மையில் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் அணியின் ஆயுதங்கள்.................

தொடர்ந்து வாசிக்க..................

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7374.html

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளெல்லாம் ஒரு மனிதப்பிறப்புகளா ? ஆழிப்பேரலையால் எம் மக்கள் துன்பப்பட்டபோது , வெளிநாடுகள் கொடுத்த உதவியை கூட தடுத்தவர்கள் தானே . தவளையும் தன் வாயால் தான் கெடும் .

  • கருத்துக்கள உறவுகள்

Weerawansa suspended from JVP politburo

wimal.jpg

Wimal Weerawansa, the propaganda secretary of the extreme Sinhala nationalist Jantha Wimukthi Peramuna (JVP) was suspended from the politburo of the JVP. The decision was made at a JVP politburo meeting, chaired by party leader Somawansa Amarasinghe. It is widely suspected that stand related to India, the question of disarming a paramilitary group and how to work with the ruling UPFA government, were reasons for the rift between two factions within the JVP.

"Weerawansa failed to toe party's policy line," a close associate of Mr. Somawansa Amarasinghe, told media persons in Colombo Friday.

The dispute is mainly due to the differences of opinion, between two factions within the JVP, on how to cooperate with the Rajapaksa government. One faction is headed by Wimal Weerawansa, and the other by Anura Kumara Dissanayake and Tilvin Silva, the General Secretary of the JVP.

According to informed circles, the group headed by Dissanayake and Tilvin Silva, could be described, in a way, as more Marxist than the Weerawansa faction, which maintained a close link with the Rajapaksa government.

Weerawansa favoured a policy line, like Nandana Gunatillake, a rebel JVP parliamentarian who has been supporting the UPFA government after the party hierarchy removed him from the JVP politburo in early 2007, also due to 'policy differences.'

A few days ago, Nandana Gunatillake started writing in Sinhala Daily Divayina about the internal rift inside the JVP, where he displayed a soft-line towards Weerawansa, while criticizing the other faction for toeing an extreme nationalist agenda. The nationalist agenda should be a tactical one and not dominate the strategy of the party internally, he argued. The extreme faction that dominates the JVP argues against loosing the mass support base if JVP chooses to be a part of the UPFA government.

Weerawansa has been arguing that JVP should extend active support to UPFA government, being part of it as Rajapaksa government is actively waging the war, while the extreme faction wants to be independent and extend support to the UPFA from outside, on crucial matters.

The rift became public 9-days ago when Wimal Weerawansa, who is also the General Secretary of the extremist Patriotic National Movement (PNM), convened a press conference a week after JVP's press conference in which JVP leader Somawansa Amarasinghe opined that the government should disarm the Plllayan Group, as it claimed the East has been liberated. Weerawansa, while addressing the PNM gathering, accused that there were "forces seeking to disarm Pillayan Group," and one had to be "cautious of the motive of these forces," as the LTTE was still capable of carrying out attacks in the East. Somawansa also addressed the PNM gathering.

yarlnews.com

ஜே.வி.பி. கட்சியின் பிரசாரச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாக ஜே.வி.பியின் மத்திய குழு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜே.வி.பி. இரண்டாகப் பிளவுபடும் நிலை தோன்றியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத் துரோகியைக் காப்பதில் சிங்களப் பேரினவாதம் எவ்வளவு அக்கறை காட்டுகின்றது என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல ஒரு உதாரணம். அதாவது தமது கட்சி ரெண்டாக உடைந்தாலும் பரவாயில்லை இந்தக் கோடரிக் காம்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் பேரினவாதம் உறுதியாகத்தான் இருக்கிறது .

துரோகிகள் காட்டில் மழையோ மழை !!!!!!!!!!

ஜே.வி.பி. கட்சியின் பிரச்சாரச் செயலாளர் பதவியிலிருந்தும் மத்திய குழு உறுப்பினர் உரிமையில் இருந்தும் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் ஜே.வி.பியின் தியாகிகள் நாளை புறக்கணித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

தமிழினத் துரோகியைக் காப்பதில் சிங்களப் பேரினவாதம் எவ்வளவு அக்கறை காட்டுகின்றது என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல ஒரு உதாரணம். அதாவது தமது கட்சி ரெண்டாக உடைந்தாலும் பரவாயில்லை இந்தக் கோடரிக் காம்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் பேரினவாதம் உறுதியாகத்தான் இருக்கிறது .

துரோகிகள் காட்டில் மழையோ மழை !!!!!!!!!!

விமல் வீரவன்சவிற்கு பிள்ளையான் குழுவின்மீது உள்ள அக்கறையைவிட அரசாங்கத்துடன் இணந்து கொள்ளும் நோக்கம்தான் முக்கியம். ..அதற்கான ஒரு பாவ்லா காட்டுகின்றார். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்சவின் தலைமையில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிக்குழுவாக செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர். விமல் வீரவன்ச எம்.பி.யினை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கூடிய ஜே.வி.பி.யின் அரசியல் சபை தீர்மானம் எடுத்திருந்தது. இதனையடுத்தே ஜே.வி.பி. க்குள் இத்தகைய பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சிப் பதவியிலிருந்து தன்னை விலக்க அரசியல் சபை முடிவெடுத்துள்ளதாகவும் இதற்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றும் விமல் வீரவன்ச எம்.பி. நேற்று முற்பகல் விஷேட உரையாற்றியிருந்தார். இதன் மூலம் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை விமல் வீரவன்ச பகிரங்கப்படுத்தியிருந்தார்.

Edited by கறுப்பன்

  • கருத்துக்கள உறவுகள்

யாருடையவோ கச்சைய அவிழ்க்கிறதில உவங்களுக்குள்ள முரண்பாடு வந்து இப்ப தங்கட கோவணங்களக் கழட்டிப்போட்டு நிக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்

* பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச சூளுரை; சீசருடன் தன்னை ஒப்பிடுகிறார்

ஜே.வி.பி.யின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் மோசமான சூழ்ச்சியின் மூலம் தான் நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்த முடிவை கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் அறிவிக்க மத்திய குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்த அக்கட்சியின் பிரசார செயலரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான விமல் வீரவன்ச, வரலாறு தரும் தீர்ப்பைத் தவிர சூழ்ச்சிகள் மூலம் கொடுக்கப்படும் தீர்ப்புகளுக்கு தான் ஒரு போதும் அடிபணிய போவதில்லையென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடிய பின்னர் அவரின் அனுமதியுடன் விசேட அறிக்கையொன்றை விடுத்து விமல் வீரவன்ச உரையாற்றினார்.

சுமார் ஒரு மணி நேரம் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

ஜே.வி.பி.கட்சியில் இருபது வருடங்களுக்கு முன்னர் என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்.அதன் பின்னர் கட்சியின் வளர்ச்சிக்காக நான் சந்தித்த துயரங்கள், எண்ணிலடங்காதவை. ஆனால், கட்சி தனது வண்டிலுக்கு என்னை சக்கரமாக பயன்படுத்திவிட்டு இப்போது கழற்றி விட்டுள்ளது.

கட்சிக்கு தீங்கு ஏற்படக் கூடிய எந்தச் செயலிலும் நான் ஈடுபடாத நிலையில் என்னை ஏன் இந்த நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர் என்பதுதான் எனக்கு புரியவில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இந்தியப் படை எமது தாய் மண்ணில் காலடி வைத்தது. இதனை எதிர்த்து எமது தாய் மண்ணின் மீதிருந்த பற்றுக் காரணமாகவே நான் ஜே.வி.பி.யில் இணைந்தேன். நான் இக்கட்சியில் இணைந்தால் நஞ்சு குடிப்பேன் என்று தந்தை மிரட்டினார் நான் கேட்கவில்லை.

நான் ஜே.வி.பி.யில் இணைந்ததால் மனநோயால் பாதிக்கப்பட்ட எனது தாய் இன்று கூட என்னை நினைத்துப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

எனது தந்தையை களுத்துறைப் பொலிஸார் கைது செய்தனர். எனது இரு சகோதரர்கள் சிறை சென்றனர். எனது தாய் மன நோயால் பாதிக்கப்பட்டார். என்னை இராணுவம் பின் தொடர்ந்தது. சில இடங்களில் மயிரிழையில் கூட உயிர் தப்பினேன். இவை நான் இக்கட்சிக்காக பட்ட துயரங்களில் சிறிதளவானவை.

நான் லக்பிம, ஹிரு பத்திரிகையில் பணியாற்றிய போது பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஜே.வி.பி.யின் கொள்கைகளை முன்னெடுத்தேன். ஜே.வி.பி. முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட போது அதற்காக நான் செய்தவை ஏராளம்.

அன்று ஜே.வி.பியிலிருந்த பலர் பிரிந்து சென்ற போது நானும் சென்றிருக்க வேண்டும். ஆனால், கட்சிப் பிணைப்பால் நான் அவ்வாறு செய்யவில்லை.

எனக்கு அரசியல் ரீதியாகவே எதிரிகள் உள்ளனர். தனிப்பட்ட ரீதியில் எந்த எதிரியும் எனக்குக் கிடையாது. தாய்நாட்டிற்குள் வெளிநாட்டு சக்திகளை கொண்டு வர முயற்சிப்போரும் பயங்கரவாதத்திற்கு சார்பானோருமே என் மீது குற்றங்களை சுமத்துகின்றனர்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்பே என் மீதான பாரிய சதித் திட்டம் அரங்கேறத் தொடங்கியது. அரசியல் ரீதியாக என்னை அழிப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம்.

எனது தலைமுடி, எனது தொலைபேசி,நகம், முகம், எனது மனைவி, பிள்ளைகள் என அனைத்தையும் விமர்சித்தார்கள். அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க நான் முற்படும் போதெல்லாம் தடுக்கப்பட்டேன். கட்சி என்னுடன் இருக்குமென நினைத்தேன். அது நடக்கவில்லை.

எனக்கெதிராக வெளியிலிருக்கும் சதித் திட்டத்துடன் கட்சிக்குள்ளும் சூழ்ச்சித் திட்டம் இருந்தது. கட்சிக்குள் நான் பிரிவினையை ஏற்படுத்துவதாக சிலர் நினைத்தனர். குற்றங்களை சுமத்தினர். நான் மிகவும் பொறுமையுடன் இருந்தேன். எனது எண்ணங்கள் உணர்வுகளுக்கு தவறான பொருள் கோடல்களை உருவாக்கி எனக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர். நான் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்

வாயுள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும் ... உமக்கு உவ்வளவுந்தான்... முடிந்தால் பிளைத்துக்கொள்ளும்..

ஆக ஜெயராச் செத்தது உங்களல தான் எண்டு சொல்லுரியழ்.... ம்ம்ம்.. ? ஆனா அரசாங்கம் புலி எண்டு சொல்லுது? .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.