Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகப் போராடும் சங்கபரிவார்

Featured Replies

ம்! ஆனால் தமிழ் எழுத்துக்களின் அடிப்படையை உருவாக்கியவன் அகத்தியன் என்னும் முனிவன் அல்லவா! கத்தியன் எனும் தன் பெயரை போலவே 'அ' முதல் எழுத்தாகவும் 'ன்' கடை எழுத்தாகவும் வைத்து தமிழ் அகரவரிசை அதனால் அன்றோ படைத்தான்!

ஓடு மாற்றியவனுக்கே இத்தனை தம்பட்டம் என்றால் வீட்டையே கட்டியவனுக்கு எத்தனை பெருமை சேரவேண்டும்?

Edited by vettri-vel

  • Replies 130
  • Views 17.1k
  • Created
  • Last Reply

புராணங்கள் சொல்லும் புழுகுக் கதைகள் பற்றி இங்கே யாரும் பேசவில்லை.

வரலாற்றில் உண்மையாக வாழ்ந்த மனிதர்கள் பற்றி பேசுகிறோம்.

"தமிழ் மொழியை படைத்ததே சரஸ்வதி அல்லவா" என்று சொல்லாதவரை மகிழ்ச்சி

புழுகுவது, பூசி மெழுகுவது, திரிப்பது, பொய்யால் கடை விரிப்பது, காக்காய் பிடிப்பது இவை அனைத்தும் செய்வது, இதற்கு சிலர் வைத்த பெயரோ பகுத்தறிவு என்பது.

கருத்துக்கு கருத்து!!! கத்தரி நீட்டுபவர்கள் இங்கு மட்டும் நீட்டாமல் மதநிந்தனை செய்யும் சில துவேசிகளின் கருத்தையும் சேர்த்தே நீக்கட்டும்!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற நூற்றாண்டு வரை காணப்பட்ட அகத்தியம் என்ற நூல் இந்த நூற்றாண்டில் இல்லாமல் போனதற்குக் காரணம் இவர்கள் தானா? தொல்காப்பியத்தை முந்திய நூலாம் அகத்தியம், தமிழைப் பற்றி ஆழமாகச் சொல்வதைத் திருமூலரின் நூலில் இருந்து பெறப்பட்ட அகத்தியத்தின் சில பாடல்கள் சுட்டி நிற்கின்றன.

அகத்தியரின் பெயரை மறைக்க வேண்டும் என்பதற்காக, அதை நீக்க இவர்கள் தான் சதி செய்தார்களோ எனச் சிலரின் கருத்தில் இருந்து கருத வேண்டி இருக்கின்றது

வெற்றிவேல் முன்பு தன்னுடைய கருத்துக்களை வைத்து வாதாடுவார். கருத்துக்கள் சரியோ, தவறோ கருத்துக்களை சிறப்பான முறையில் வைப்பார்.

ஆனால்கொஞ்ச நாளாக வெற்றிவேல் ஏதோ உளம் சார்ந்த பிரச்சனையில் இருக்கிறார் என்று நினைக்கிறார். வந்து பொய், புரட்டு, திரிவு என்று "பஞ்ச் டயலாக்" மட்டும் பேசிவிட்டு போகிறார்.

எது பொய், எது புரட்டு, எது திரிவு, எப்படியான திரிவு, உண்மை என்ன என்பது பற்றி ஒன்றும் சொல்கிறார் இல்லை.

ஒரு கள உறவின் நிலை என்னை கவலை கொள்ளச் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவனை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

தவறைச் சுட்டிக்காட்டிய நெடுக்காலபோவனுக்கு நன்றி. என்னுடைய தவறை இப்பொழுது திருத்தி விடுகிறேன்.

எழுத்துச் சீர்திருத்தமானது இத்தாலியரான வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்டு, கன்னடர் என்று சிலரால் தவறாகக் கருதப்படும் தந்தை பெரியாரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, மலையாளி என்று சொல்லப்படும் எம்ஜிஆரால் சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது.

வீரமாமுனிவர் இத்தாலியர் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள். ஈ வெ ராமசாமி தன்னைத் தானே கன்னடன் என்று பிரகடனம் செய்த ஒருவர். எம் ஜி ஆர் இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழன்..!

சிறிதா திரிக்க வெளிக்கிட்டு இப்ப கயிறாவே திரிக்க முற்படுகிறீர்கள். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்ஸ்

ஆரம்பத்தில் ராமசாமி தான் ஏதோ தமிழ் சீர்திருத்ததிற்குப் முழுப் பொறுப்பு மாதிரியும், அவர்களிடம் மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆரம்பித்த தொனி, இப்போது சுருங்கிப் போய் நடைமுறைப்படுத்தல் என்று குறைந்து போன மாதிரித் தெரியவில்லையா?

ஆரம்பத்தில் ராமசாமி தான் ஏதோ தமிழ் சீர்திருத்ததிற்குப் முழுப் பொறுப்பு மாதிரியும், அவர்களிடம் மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆரம்பித்த தொனி, இப்போது சுருங்கிப் போய் நடைமுறைப்படுத்தல் என்று குறைந்து போன மாதிரித் தெரியவில்லையா?

சங்க பரிவாரத்துக்கு உங்கள் வெளிறின ஆதாரங்களை விடவா...?

வீரமாமுனிவர் இத்தாலியர் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் Joseph பெஸ்கி என்பதாகும். அவர் 8.11.1680 அன்று இத்தாலியில் காஸ்திகிலியோன் என்ற இடத்தில் பிறந்தவர். 1709ல் சேசுசபைப் பாதிரியாரானபின் -1710ல் தமிழகத்துக்கு வந்தார். இவர் காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். சதுரகராதி கொண்டு நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தவர். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.

கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிருத்துவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.

எனினும் இன்றைய கிருத்துவத் தமிழ் தனக்கென ஒரு வகை முறைமையை வகுத்துக் கொண்டு வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழும் அல்லாத எழுத்துத் தமிழும் அல்லாத ஒரு வகைத் தமிழைக் கொண்டிருப்பது குறித்துக் கிருத்துவ நிறுவனங்கள் மறுமதிப்பீடு செய்தல் கிருத்துவத்துக்கும் தமிழுக்கும் நலன் பயக்கும் என்பது எனது கருத்து.

திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை கிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் னது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.

பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்

வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்

முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்

நகரினை ஒக்கும் வீடே

இந்தப் பாடல் ஜெருசலேம் நகரை வர்ணிக்கிறது. காப்பியத் தலைவர் வருணணை வளவனாரை வர்ணிக்கும் இந்தப் பாடலின் பாங்கில் வெளிப்படுகிறது.

அன்பு வைத்த உயிர்நிலை அ·திலார்க்

கென்பு தோலுடல் போர்த்ததென றன்புடை

இன்பு தோய்த்த நிலையெனத் தானிவன்

துன்பு காய்ந்த உயிர்த்துணை யினான்

ஒலிக்குறிப்புகளைத் தம் பாடலில் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.

வளனார் தேவத்தாயார் திருமணம் குறித்தது இந்தப் பாடல்.

முடுகு முரசொலி முடுகு முழவொலி

முடுகு முருகொலி முடிவிலாக்

கடுகு பறையொலி கடுகு கலமொலி

கடுகு கடலொலிக னிவெழாத்

தொடுகு குழலொளி கொடுகு குரலொலி

தொடுகு துதியொலி தொடுதலாற்

படுகு முகிலொலி படுகு கடலொலி

படுத லிலமண மாயதே.

http://www.tamilnation.org/literature/veeramamunivar.htm

ஒன்றை முன்மொழிவதை விட அதை நடைமுறைப்படுத்திக் காட்டுவது கடினம். நெடுக்காலபோவான் தந்தை இணைப்பிலேயே தந்தை பெரியார் எத்தனை தீவிரமாக இந்தச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்திக் காட்டினார் என்று சொல்லப்பட்டுள்ளது.

பலர் தயங்கிய போது தந்தை பெரியார் தமிழின் முன்னேற்றம் கருதி தமிழ் எழுத்துச் சீர்திருத்தை நடைமுறைப்படுத்தி அதற்காக பாடுபட்டார்.

நெடுக்காலபோவன்! முனிவர் என்ற பெயரைக் பார்த்து விட்டு, ஏதோ விசுவாமித்தர முனிவர் போன்று ஒரு புராணப் பாத்திரம் என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. அத்துடன் அவர் ஒரு பார்ப்பனராகத்தான் இருப்பார் என்றும் நினைத்திருப்பீர்கள்.

சுகன்! உங்கள் இணைப்பிற்கு நன்றி.

எம் ஜி ஆர் இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழன்..!

சிறிதா திரிக்க வெளிக்கிட்டு இப்ப கயிறாவே திரிக்க முற்படுகிறீர்கள். :lol:

http://en.wikipedia.org/wiki/M._G._Ramachandran

Maruthur Gopala Ramachandran Menon (Tamil: மருதூர் கோபால இராமச்சந்திரன்) (January 17, 1917–December 24, 1987), popularly known as MGR எம்.ஜி.ஆர்., or Puratchi Thalaivar (Tamil: Revolutionary Leader), was a leading actor in Tamil films and Chief Minister of the Indian state of Tamil Nadu from 1977 until his death.

He was born at Hewaheta near Kandy, Sri Lanka, to Maruthur Gopala Menon and Satyabhama. He was originally from Palakkad, Kerala. But his grandfather had migrated with his family to Sri Lanka.[1][2]

:D

  • கருத்துக்கள உறவுகள்

http://en.wikipedia.org/wiki/M._G._Ramachandran

Maruthur Gopala Ramachandran Menon (Tamil: மருதூர் கோபால இராமச்சந்திரன்) (January 17, 1917–December 24, 1987), popularly known as MGR எம்.ஜி.ஆர்., or Puratchi Thalaivar (Tamil: Revolutionary Leader), was a leading actor in Tamil films and Chief Minister of the Indian state of Tamil Nadu from 1977 until his death.

He was born at Hewaheta near Kandy, Sri Lanka, to Maruthur Gopala Menon and Satyabhama. He was originally from Palakkad, Kerala. But his grandfather had migrated with his family to Sri Lanka.[1][2]

:D

He was born at Hewaheta near Kandy, Sri Lanka

ஒருவர் பிறந்த இடம் தான் அவருக்குச் சொந்த இடம் போன்றது.

பூட்டன் கொப்பாட்டன் எந்த இடம் என்று பார்த்தால்.. எம் ஜி ஆர்.. ஆபிரிக்காக் கண்டத்தில இருந்து வந்தவர் என்றும் காட்டலாம்..! கேரளா என்ன கேரளா..??! :wub::lol:

பாலக்காடு தமிழக கேரள எல்லை கிராமம் அது ஒரு தமிழர்கள் ,மலையாளிகளின் கலப்பு பிரதேசம்... ஆங்கே மலையாளம் தமிழ் கலந்த ஒரு மொழிதான் பேசுவார்கள்... அவர்கள் சுத்தமான மலையாளிகளே , தமிழரும் கிடையாது...! முன்னர் தமிழகத்தோடு இருந்து இண்று பொள்ளாச்சீயை போல கேரளத்தோடு இணைக்கப்பட்ட ஊர்...

நீலகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஊர்களில் ஒண்று...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியாரே.. நீங்கள் தகவல்களின் உண்மைத் தன்மையை தூயவனிடம் மட்டும் எதிர்பார்க்கப்படாது. தமிழ் மொழியின் சீர்திருத்த வரலாற்றையே.. தனக்குச் சாதகமான வடிவில் சபேசன் திரிப்பதையும்.. உண்மை மறைக்கப்பட்டுள்ளமையும்.. நீங்கள் இனங்காணாதது போல புறக்கணித்ததை வைத்துப் பாருக்கும் போது.. நீங்கள் உண்மையைத் தேடுபவரா இனங்காணப்பட முடியாதவரா எல்லோ இருக்கிறீர்கள். :)

நெடுக்காலபோவான் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் துயவனின் கருத்துக்களைத்தான் அதிகம் எதிர்த்து வந்திருக்கிறேன். அதை வாசிக்கும் ஒருவர் நான் சபேசனின் கருத்துக்களை அவ்வாறே ஏற்றுக்கொள்கிறேன் என்று முடிவுக்கு எளிதாகவே வந்துவிடலாம். நீங்கள் அவ்வாறே சிந்தித்தது என்பது உண்மையேதான். ஆனாலும் அதற்கு மிக மிக முக்கிய காரணம் துயவனின் கருத்துக்களில் எந்த ஒரு ஆதாரமுமிருக்காது வீணாண கோபம் மட்டுமே இருக்கம். சபேசன் அவர்கள் கத்தரிகாயை பற்றி ஏதாவது எழுதினாலும் இவர் உடனே வந்த கன்னடத்தான் திராவிடத்தான் என்று இந்த இரண்டையும் தான் திருப்பி திருப்பி எழுதுவார். அதனாலேயே நான் பல முறை எழுதி வந்துள்ளேன் தயவு செய்து ஆதாரங்களை முன்வைத்து கருத்தை எழுதினால் வாசிக்கும் எமக்கு ஏதாவது ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைக்குமே என்று. சபேசனின் கருத்துக்கள் கருத்துக்களை எவ்வாறு எழுத வேண்டும் எனும் அடிப்படைக்கமைவாகவே ஆதாரங்களையும் வைத்து எழுதுகிறார் அதனால் எதிர் கருத்தை வைக்க முடிவதில்லையே தவிர எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று பொருளில்லை.

நீங்கள் கூட பல இடங்களில் குதக்கம் பேசுகின்றீர்கள் அதையும் தவிர்த்தால் நன்று. என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் காரணம் நான் யாழ் களத்திலேதான் எனது அறிவை பெற்றுகொண்டிருக்கிறேன். உங்கள் கருத்தக்களை வாசித்து பல விடயங்களை அறிந்திருக்கிறேன். இதற்கு ஆதாரம் எங்கும் தேட வேண்டாம் மேலேயே உள்ளது. வீரமாமுனிவ் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் என்பது இலங்கையில் எட்டாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலேயே உள்ளது. அதை நீங்களும் படித்திருப்பீர்கள்............ இருந்தும் அவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரம்மிருக்கா என்று கேட்கின்றீர்கள்?? இது குதக்கமில்லை. ஆனால் அவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவரல்ல என்பதற்கு உங்களிடம் பலமான ஆதாரமிருக்கும் பட்சத்தில் அதையும் இணைத்து. அவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் என்ற கருத்தை எதிர்பதே நாகரீகமானது. ஆனால் நீங்கள் வெறுமனவே அதை எதிர்பதென்பது ஒரு நாகரீகமான கருத்தாடலாக அது அமையாது என்பதே எனது கருத்து.

நான் சமயங்கள் சம்மந்தமான கருத்தாடல்கள் நடக்கும் பட்சத்தில் கருத்துக்களை அதிகம் எழுதியிரு;கிறேன். காரணம் உலகத்தில் பெரிய ஒரு கூட்டமே அதை வைத்துதான் நாடகமாடி வாழ்கின்றது. அதில் எமது அடுத்த சந்ததி கவனமாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் எனக்குள் இருக்கிறது. தவிர எந்த சமயத்தையும் நான் ஏற்பதில்லை குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதை நான் ஆதார பூர்வமாக காண்கிறேன் ( ஆதாரத்தை ஏன் இணைக்க வில்லை என்று குதக்கம் பேசாதீர்கள்) எனது மூல கருத்து (...) அது பற்றியது அல்ல. மனிதனே கடவுளை படைத்தான் அதைதான் நான் 200வீதம் நம்புகிறேன். நான் தவறுவிடும் பட்சத்தில் சுட்டி காட்டுவதால் நான் திருந்தி கொள்கிறேன் தயவுசெய்து அதை செய்யுங்கள் உங்கள் மீதோ துயவன் மீதோ எனக்கு எந்த கோபமுமில்லை.

Edited by Maruthankerny

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் மருதங்கேணியார்.

உங்களின் ஆதாரமும் கருத்தியல் இலட்சணமும் புரிந்த ஒன்று தான். இந்து மதம் என்றால் வந்து தாக்குவீர்கள். பைபிள் என்றால் ஆதாமின் பிள்ளைகள்.... என்று சமாளிப்பீர்கள். என் கருத்தைப் பற்றிக் கூறுவதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால் நீங்கள் நடுநிலமையான, முகமூடி அணியாத நடுநிலமை விமர்சகர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாங்கள் முழுமையான பக்கச் சார்பு கொண்டவர்.

சபேசன் கத்தரிக்காயைப் பற்றி எழுதும்போது அதற்கு ஆதாரம் தேடிக் கொண்டு கருத்தெழுத முடியாது. அவர், ஆ, ஊ என்றால் பார்ப்பானி, இந்து மதம் என்று எழுதுவார். அல்லது எழுதிக் கொண்டு போய் முடிப்பார். தன்னுடைய இணையத்தில் இருந்து ஏதாவது கருத்து இணைத்தார் என்றால் கீழே இணைப்பு கட்டாயம் இருக்கும். பிற தளங்களில் இருந்து திருடிப் போட்டால், அது எங்கிருந்து எடுத்தது எனப் போடமாட்டார். தன்னுடையது போலக் காட்ட முனைவார்.

கன்னடன் ஒருவனைத் தலைவனாக எடுத்துத் தமிழினத்தைச் சிதைக்க முனைபவர்களும், அந்தக் கன்னடனை வைத்து மத வியாபாரம் செய்பவர்களுக்கும் அதைப் பற்றிக் கதைத்தால் சுடத்தானே செய்யும்.

அது சரி. ஆதாம், ஏவாள் தான் மனிதனின் ஆரம்பக் குடிகள் என்று போட்டிருந்தீர்கள். அதை எங்கிருந்து எடுத்தீர்கள். சிலர் சொன்னால் தலையை ஆட்டி எடுத்துக் கொள்வீர்களோ?? பிற தலைப்புக்களில் உள்ள கோபம் மதவெறி பிடித்த மாடான என்னை நோக்கி இத்தலைப்பில் பாய வைக்கின்றது போல..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூட பல இடங்களில் குதக்கம் பேசுகின்றீர்கள் அதையும் தவிர்த்தால் நன்று. என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் காரணம் நான் யாழ் களத்திலேதான் எனது அறிவை பெற்றுகொண்டிருக்கிறேன். உங்கள் கருத்தக்களை வாசித்து பல விடயங்களை அறிந்திருக்கிறேன். இதற்கு ஆதாரம் எங்கும் தேட வேண்டாம் மேலேயே உள்ளது. வீரமாமுனிவ் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் என்பது இலங்கையில் எட்டாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலேயே உள்ளது. அதை நீங்களும் படித்திருப்பீர்கள்............ இருந்தும் அவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரம்மிருக்கா என்று கேட்கின்றீர்கள்?? இது குதக்கமில்லை. ஆனால் அவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவரல்ல என்பதற்கு உங்களிடம் பலமான ஆதாரமிருக்கும் பட்சத்தில் அதையும் இணைத்து. அவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் என்ற கருத்தை எதிர்பதே நாகரீகமானது. ஆனால் நீங்கள் வெறுமனவே அதை எதிர்பதென்பது ஒரு நாகரீகமான கருத்தாடலாக அது அமையாது என்பதே எனது கருத்து.

நான் சமயங்கள் சம்மந்தமான கருத்தாடல்கள் நடக்கும் பட்சத்தில் கருத்துக்களை அதிகம் எழுதியிரு;கிறேன். காரணம் உலகத்தில் பெரிய ஒரு கூட்டமே அதை வைத்துதான் நாடகமாடி வாழ்கின்றது. அதில் எமது அடுத்த சந்ததி கவனமாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் எனக்குள் இருக்கிறது. தவிர எந்த சமயத்தையும் நான் ஏற்பதில்லை குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதை நான் ஆதார பூர்வமாக காண்கிறேன் ( ஆதாரத்தை ஏன் இணைக்க வில்லை என்று குதக்கம் பேசாதீர்கள்) எனது மூல கருத்து (...) அது பற்றியது அல்ல. மனிதனே கடவுளை படைத்தான் அதைதான் நான் 200வீதம் நம்புகிறேன். நான் தவறுவிடும் பட்சத்தில் சுட்டி காட்டுவதால் நான் திருந்தி கொள்கிறேன் தயவுசெய்து அதை செய்யுங்கள் உங்கள் மீதோ துயவன் மீதோ எனக்கு எந்த கோபமுமில்லை.

இப்ப கூட விழுந்தடிச்சு.. சபேசனுக்கு நற்சான்றிதழ் வழங்க முற்பட்டிருக்கிறீர்களே தவிர இத்தலைப்போடு உங்கள் கருத்தைப் பரகவில்லையே. இது தான் எனக்கு உங்களில் பிடிப்பதில்லை. அடுத்தவைக்கு காக்கா பிடிக்கிறது. வெறுமனவே விடயங்களை அறிவது மட்டும் போதாது. அறிந்த விடயங்களை பகிர்ந்து கொள்வதும் அவசியம். மற்றவர்களும் உங்களிடமிருந்து அறிய ஆர்வப்படுவார்கள் தானே..!

இக்களத்தின் பழைய உறுப்பினர்களில் நீங்களும் ஒருவர். விடயங்களை இப்பதான் கற்க ஆரம்பத்திருக்கும் ஆகக் குழந்தை இல்லை நீங்கள் என்றே நினைக்கிறேன்..!

சபேசன் இரண்டு உண்மைகளை வைத்து 12 பொய்களை திணிப்பவர். தமிழ் மொழி சீர்திருத்தம் பற்றிய சபேசனின் பதிவு ஒரு கருத்துப் பதிவாக எனக்குப்படவில்லை. அது வேண்டும் என்றே ஈ வெ ராமசாமியை முன்னிலைப்படுத்தும் ஒரு பதிவு. காரணம் எந்த வரலாற்றியல் உண்மையையும் கருத்தில் எடுக்காது.. ராமசாமி புராணம் பாட அது எழுதப்பட்டிருக்கிறது என்பது சாதாரணமாக வெளிப்படுகிறது..??!

ராமசாமியே தன்னைக் கன்னடன் என்று பிரகடனப்படுத்திய போதும் (அதற்கான ஆதாரங்கள் பல தடவை ராமசாமி பற்றிய விவாதங்களின் போது இங்கு இணைக்கப்பட்டுள்ளது) சபேசன் அவரைக் கன்னடன் என்று அழைப்பதை ஏதோ யாரோ செய்வது போலக் காட்டிக் கொள்ள முனைவதும்.. ராமசாமியை தமிழ் விசுவாசியாக மிகைப்படுத்தி சித்தரிக்க முனைவதையும்.. நீங்கள்.. ஆதாரமுள்ள கருத்து என்று அங்கீகரிக்க நிற்கின்றீர்களே தவிர.. அங்குள்ள தவறுகளை தூயவனை என்னை விமர்சிப்பது போல விமர்சிக்க முன்வரவில்லை.. இது தான் உங்கள் கருத்தை ஏற்பதா விடுவதா என்ற நிலைப்பாட்டை எமக்குள் தீர்மானிக்கிறது.

வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தார் என்பதற்காக இத்தாலியர் என்று வகுத்துக் கொண்ட சபேசன் இலங்கையில் பிறந்த எம் ஜி ஆரை மலையாளி என்று இனங்காட்ட அதை ஆதாரமுள்ள கருத்தாக நீங்கள் ஏற்றுக் கொண்ட போது.. குதர்க்கத்துக்கு குதர்க்கமா அங்கீகாரம் அளிப்பதை வேடிக்கை பார்க்க முடியாத காரணத்தால்.. நானும் கேட்டேன்.. வீரமாமுனிவர் எப்படி இத்தாலியர் ஆனார் என்று. வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்ததால் இத்தாலியர்.. ஆனால் இலங்கையில் பிறந்த எம் ஜி ஆர் இலங்கையர் அல்ல.. அப்படி என்றீங்களா.. நீங்களும்..! :wub::)

Edited by nedukkalapoovan

எம்ஜிஆர் இலங்கையில் பிறந்தாலும் அவரது தாய்மொழி என்ன..? மலையாளம்... அவரது பொது வாழ்வு தமிழ் நாட்டில்..

வீரமா முனிவர், இத்தாலியர் கிறிச்த்தவர்.. தமிழுக்கு சேவை செய்தவர்...

பெரியார் கன்னடர் என்பதை யாரும் மறுக்கவில்லை..

சபேசன் தன் பதிவில் பெரியார் எப்படி மொழிச்சீர்திருத்தத்தை வலியுறுத்தினார் என்று கூறினார்.. அதனை நீங்கள் பெரியாரை முன்னிறுத்துவதாக பார்த்தால்.. உங்கள் பார்வையில்.. உண்மையை ஏற்கும் பக்குவத்தில் தவறு உண்டு...!

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜிஆர் இலங்கையில் பிறந்தாலும் அவரது தாய்மொழி என்ன..? மலையாளம்... அவரது பொது வாழ்வு தமிழ் நாட்டில்..

வீரமா முனிவர், இத்தாலியர் கிறிச்த்தவர்.. தமிழுக்கு சேவை செய்தவர்...

பெரியார் கன்னடர் என்பதை யாரும் மறுக்கவில்லை..

சபேசன் தன் பதிவில் பெரியார் எப்படி மொழிச்சீர்திருத்தத்தை வலியுறுத்தினார் என்று கூறினார்.. அதனை நீங்கள் பெரியாரை முன்னிறுத்துவதாக பார்த்தால்.. உங்கள் பார்வையில்.. உண்மையை ஏற்கும் பக்குவத்தில் தவறு உண்டு...!

நெடுக்காலபோவனை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

தவறைச் சுட்டிக்காட்டிய நெடுக்காலபோவனுக்கு நன்றி. என்னுடைய தவறை இப்பொழுது திருத்தி விடுகிறேன்.

எழுத்துச் சீர்திருத்தமானது இத்தாலியரான வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்டு, கன்னடர் என்று சிலரால் தவறாகக் கருதப்படும் தந்தை பெரியாரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, மலையாளி என்று சொல்லப்படும் எம்ஜிஆரால் சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது.

சபேசனின் மேற் கண்ட கருத்தில் விஞ்சி நிற்பது எழுத்துச் சீர்திருத்தமா ராமசாமி பற்றிய பிரச்சாரமா..??! நீங்களே சபேசனின் கருத்தோடு முரண்படுறாப் போல எல்லோ தெரியுது. நீங்கள் ராமசாமியை கன்னடன் என்று சொன்னதை யாரும் மறுக்கவில்லை எங்கிறீர்கள்.. ஆனால் சபேசன் மறுக்கிறாரே..!

பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டது என்பது போல எம்மை நோக்கி நீங்கள் இதுதான் உண்மை என்று காட்டுவது பெரும் வியப்பாக இருக்கிறது.

தமிழன்பர்கள் கூடித் தீர்மானித்த ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் தனது "விடுதலை" பிரசுரம் பிரபல்யம் அடைய அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சில தமிழ் மொழிச் சீர்திருத்த விடயங்களை ராமசாமி பிரசுரித்தார். அது ராமசாமியே மொழிச் சீர்திருத்தத்தை தமிழிற்கு தந்தவர் என்ற சபேசன் கருத்தை உண்மையாக்காது. சபேசன் மறந்த வீரமாமுனிவரை இங்கு கொண்டு வந்தவன் நான்..! எனக்கு நீங்கள் உண்மை இதுதான் என்பது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையை உண்மைக்குரிய தளத்தில் இருந்து இனங்காட்டுங்கள்... நிச்சயம் நான் மட்டுமல்ல.. எந்த கருத்தாளனும் ஏற்றுக் கொள்வான்..!

உண்மை என்று அடுத்தவர்களின் பொய்கள் திரிபுகளுக்கு சான்றிதழ் அளிக்க முற்படாதீர்கள்..! :)

(எம் ஜி ஆரின் வாழ்க்கைக் குறிப்பைப் பற்றி இன்னொரு தலைப்பில் இன்னொரு நேரத்தில் பேசலாம். காரணம்.. பேரன் காலத்து இடம்பெயர்வினால் வந்த எம் ஜி ஆரின் பெற்றோரின் தாய் மொழி தமிழல்ல என்றும் சொல்கிறீர்கள்..தாய்மொழி தமிழல்ல என்பதற்காக எம் ஜி ஆர் மலையாளி எங்கிறீர்கள். ஆனால் தன்னைக் கன்னடன் என்றும் வீட்டில் கன்னட மொழி பேசிய.. கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட பெற்றோருக்குப் பிறந்த ராமசாமியை தமிழன் என்று சொல்லிக்கிறீர்கள்..??! இதுகளுக்குப் பின்னாடி மறைந்துள்ள முடிச்சுகளை அவிழ்ப்பது இங்கு இத்தலைப்பை அர்த்தமில்லாமல் ஆக்கிடும். அது கூட சிலரின் நோக்கம்..!)

Edited by nedukkalapoovan

நாம் இங்கே பல முறை சொல்லி விட்டோம். தந்தை பெரியார் பற்றி பேசுவது என்றால் அவரைப் பற்றி அடிப்படை விடயங்களையாவது அறிந்து கொண்டு பேசுங்கள்.

தந்தை பெரியாரின் குடும்பத்தினர் யாருமே கன்னடம் பேசவில்லை. அவர்களுக்கு கன்னட மொழியே தெரியாது.

நாயக்கர் என்கின்ற சாதிப் பெயரைப் பார்த்து விட்டு, அவரை தெலுங்கர் என்றுதான் பலர் நினைத்தார்கள்.

இன்றைக்கு சிலர் அவரை கன்னடர் என்று சொல்வது போல், அன்றைக்கு சிலர் அவரை தெலுங்கர் என்று சொன்னார்கள்.

தந்தை பெரியாரை அறிந்தவர்களுக்கு தெரியும். தந்தை பெரியாருக்கு எந்தப் பற்றுமே இருந்தது இல்லை. இந்தியப் பற்றோ, கன்னடப் பற்றோ, தெலுங்குப் பற்றோ, தமிழ் பற்றோ, சாதிப் பற்றோ, மொழிப் பற்றோ இருந்தது இல்லை.

ஒன்றில் பற்று வைத்து, அதற்கு கட்டுப்பட்டு இருப்பதை தந்தை பெரியார் எதிர்த்தார்.

தமிழுக்கு இந்தியால் ஆபத்து வந்த போது இந்தியை எதிர்த்தார். கன்னடர்கள், மலையாளிகளால் தமிழர்களுக்கு ஆபத்து வந்த போது அவர்களை எதிர்த்தார். தமிழின் பிற்போக்குத் தன்மையால் தமிழுக்கு ஆபத்து வந்த போது, அந்த தமிழையே எதிர்த்தார்.

அவருடைய சிந்தனை என்பது மனிதர்களின் முன்னேற்றம்தான். மனிதன் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு இடைஞ்சலாக இருந்த அனைத்தையுமே தந்தை பெரியார் எதிர்த்தார்.

அவரை கன்னடர் என்றோ, தெலுங்கர் என்றோ முத்திரை குத்துவது என்பது அறியாமையின் வெளிப்பாடு. இவர்கள் தந்தை பெரியாரை சரியாக அறிந்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

தமிழைப் பேசி, தமிழர்களோடு வாழந்து, தமிழர்களுக்காக கடைசி வரை உழைத்த ஒரு பெரு மனிதனை "தமிழன்" என்று சொல்வது தமிழர்களுக்குத்தான் பெருமை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈ வெ ராமசாமியே இப்படிச் சொல்லி இருக்கிறார்... ஆனால் சபேசனோ.. அதையே மறைத்து தனது பொய்களை அவிழ்க்கிறார்...

"ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்."

ராமசாமியே தன் தாய் மொழி கன்னடம் என்று வாக்குமூலம் அளித்ததையே பொய் என்று சொல்லும் சபேசனின் பொய்களை யாழ் எனியும் தாங்கத்தான் வேண்டுமா..??! இவற்றை உண்மை என்று காட்ட முயலத்தான் வேண்டுமா..??! ஏன் இந்த இழிநிலை இங்கு..!

ராமசாமி மனித இனத்தின் முன்னேற்றுத்துக்காகப் பாடுபட்டதாய் சொல்வது முழுப் பூசனிக்காயை சோற்றில் புதைக்கும் செயல். ராமசாமி.. தன்னை தனது அரசியலைப் பாதித்த விடயங்களால் ஏற்பட்ட சில நிகழ்வுகளை அடுத்து எழுந்த கோபத்தை தமிழ் சமூகத்தில் காட்டினாரே தவிர தமிழுக்கும் தமிழருக்கும் உய்வு வேண்டி உழைக்க வேண்டும் என்ற உணர்ச்சிப் பெருக்கால் உழைத்தவரல்ல. கன்னட ராமசாமியை தமிழர்கள் பெரியவர் என்று கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவரை விட சிறந்த தமிழ் உணர்வாளர்கள்.. தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த பல தலைவர்கள் இருக்கிறார்கள். இருந்து கொண்டும் உள்ளார்கள்..! :)

Edited by nedukkalapoovan

He was born at Hewaheta near Kandy, Sri Lanka

ஒருவர் பிறந்த இடம் தான் அவருக்குச் சொந்த இடம் போன்றது.

பூட்டன் கொப்பாட்டன் எந்த இடம் என்று பார்த்தால்.. எம் ஜி ஆர்.. ஆபிரிக்காக் கண்டத்தில இருந்து வந்தவர் என்றும் காட்டலாம்..! கேரளா என்ன கேரளா..??! :lol::)

Periyar was born as Erode Venkata Naicker Ramaswamy in Erode in Madras Presidency

http://en.wikipedia.org/wiki/E.V.Ramasami_Naicker

:wub:

நெடுக்காலபோவனின் வாதத்தின்படி எம்ஜிஆரின் முன்னோர்கள் தமிழர்கள் என்பதால் எம்ஜிஆர் தமிழர் என்றால், கன்னடர்களின் முன்னோர்கள் தமிழர்கள் என்பதால் தந்தை பெரியாரும் தமிழர் ஆகி விடுவார் அல்லவா?

அதை விடுவோம். தந்தை பெரியார் தன்னை கன்னடன் என்று சொன்ன விடயத்திற்கு வருவோம்.

எனக்குத் தெரிந்து தந்தை பெரியார் இரண்டு முறை தன்னை கன்னடர் என்று சொல்லியிருக்கிறார்.

"பார்ப்பனர்களை தமிழர்கள் இல்லை" என்று சொல்கிறார்களே என்று கேள்வி கேட்ட பொழுது ஒரு முறை இந்தப் பதிலை சொன்னார்.

"தமிழர்களுக்காக பாடுபட்டு, தமிழில் பேசி வாழ்கின்ற என்னையே தமிழர்கள் இல்லை என்று சொல்கிறார்களே, பார்ப்பனர்களைச் சொன்னால் என்ன?" என்பதாக அவருடைய பதில் அமைந்தது.

தன்னை தெலுங்கர் நாயுடு என்று சொல்லிக் கொண்டு சிலர் திரிவதற்கு பதில் சொல்லும் விதமாக தான் தெலுங்கர் இல்லை கன்னடன் என்று சொன்னார். ஆனால் தனக்கு கன்னடம் தெரியாது என்பதையும் அவர் அங்கே சொல்கிறார்.

பெரியாரை சரியாக அறிந்தவர்களுக்கு அவருடைய குணவியல்பு தெரியும். யாருக்கும் அஞ்சுபவர் அல்ல அவர். தான் தமிழன் என்று சொன்னால்தான், தன்னுடைய கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலையை விரும்பாதவர் அவர். வேறு யாராவதாக இருந்தால், "ஐயோ! நான் தமிழன்" என்று அலறியிருப்பார்.

ஆனால் பெரியார் "நான் கன்னடன், இப்ப என்ன பண்ணுவே" என்று கேட்பவர்.

இந்தக் குணம்தான் பெரியாரை தமது தலைவராக தமிழர்களை ஏற்க வைத்தது.

திராவிடம் என்பது ஒரு இனம் என்று சொல்வதற்கும் பெரியார் இந்த "கன்னடர்" என்று விடயத்தை ஒரு முறை பயன்படுத்தியிருக்கிறார்.

நீதிக் கட்சியில் தெலுங்கர், கன்னடர், தமிழர், மலையாளி என்று நான்கு திராவிட இனங்களும் இருப்பதை சுட்டிக்காட்டுவதற்கும் ஒரு முறை தன்னை கன்னடர் என்று சொன்னார். அப்பொழுது நீதிக் கட்சியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி கன்னடர் யாரும் இருக்கவில்லை என்பதுதான் காரணம். ஆகவே தன்னை கன்னடர் என்றார்.

இன்னும் ஒரு முறை தான் நாயக்கர் சாதியே இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். வேறாரு சாதியின் பெயரைச் சொல்லி அந்தச் சாதியை சேர்ந்தவன் என்றார்.

தமிழர்களுக்காக வாழ்கின்ற தான்னையே தமிழன் இல்லை என்று சிலர் சொல்கின்ற போது, தமிழினத்தை சிதைக்கின்ற பார்ப்பனர்கள் எப்படி தமிழர்கள் ஆக முடியும் என்று கேள்வியை எழுப்புவதற்கும்

கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், தமிழர் இணைந்து திராவிட தேசம் காண வேண்டும் என்ற அன்றைய நிலையை வலியுறுத்தவும்

தன்னை கன்னடர் என்று தந்தை பெரியார் சொன்னார்.

ஆனால் கன்னட மொழியை பேசத் தெரியாதவர் தந்தை பெரியார். கன்னடத்தைக் காட்டிலும் தெலுங்கை நன்றாகப் பேசுவார்.

எந்த மொழி அடையாளத்திலும் கட்டுப்பட விரும்பாதவர் தந்தை பெரியார். தமிழ் நாட்டில், தமிழனை நேசித்து, தமிழ் மொழியை சீர்திருத்தி, தமிழனுக்காக அல்லும்பகலும் பாடுபட்டு, தமிழனுக்கு இடைஞ்சல் கொடுத்த போது கன்னடர்களையும் மலையாளிகளையும் கண்டித்து, தமிழ்நாட்டு விடுதலைக்கு குரல் கொடுத்த வாழ்ந்த தந்தை பெரியார் ஒரு தமிழர் அல்லாமல் அவர் வேறு யார்?

Edited by சபேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராமசாமி தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லுங்கள். அவர் தமிழனு;குத் தலைவனாக தகுதியுள்ளவர் எனப் பார்க்கலாம்.

தனித் தமிழ்நாடு என்று பிரித்தார் எனப் பெருமை கொள்கின்றீர்கள். வரைபடத்தைப் பார்த்தால் தெரியும். தமிழகத்தில் இரு;ககின்ற சனத்தொகை அளவின்படி பார்த்தால், கர்னாடகமும், ஆந்திராவும் சன ஒப்பீட்டளவில் பெரியது. தமிழகம் மட்டும் தான் அதிகம் சனத்தை வைத்திருந்தும் சிறியது. அதிலும் பெங்களூர் ஓசூர் போன்ற இடங்களில் தமிழர்கள் அதிகம் வசித்தாலும், தமிழனுக்கு அது சொந்தமில்லை.

நல்லவேளை இராமேஸ்வரமும் மலையாளிகளிடம் போயிருக்கும். 1,2 வாக்குகளால் தப்பியது.

இன்றைக்கு கர்னாடக தண்ணீர் தராமைக்குக் கூடக் காரணமானது இந்த முட்டாள்தனமான பிரதேசப் பிரிப்புத் தான். ஆனால் அவர் வழி வந்தவர்கள் மானமுள்ள தமிழன், வீரமுள்ள தமிழன் எனக் கூச்சல் போடுகின்றார்கள். தமிழகத்தின் மானத்தைப் பறிகொடுக்க வைத்துவிட்டு..

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஜி ஆர்.. இலங்கையில் பிறந்து.. தமிழில் படித்து.. (ஆரம்பக்கல்வி வரை).. தன்னைத் தமிழன் என்று இனங்காட்டியவர். எப்போதும் தன்னை பாலைக்காடு என்று பிரகடனம் செய்யவில்லை. சப்போஸ் எம் ஜி ஆர் தன்னைக் கேரளன் அல்லது மலையாளி என்று இனங்காட்டி இருப்பின்.. அவரை தமிழன் என்பதாகக் கருதுவதை விட மலையாளி என்று கொள்வதே சரியானது. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை..! மாறாக தமிழகத்துக்காகவே உழைத்தார் இறுதிவரை..!

ஆனால் ஈ வெ ராமசாமி.. தமிழகத்தில் பிறந்த கன்னடன் என்பதை தன் பேச்சிலும் தன்னை அடையாளப்படுத்துவதிலும் செய்ததன் மூலம் அவர் கன்னடனாகவே அதிகம் தன்னை இனங்காட்ட விளைதிருப்பது தெளிவு..! கன்னடன் என்று இனங்காட்டிய பின் அவரை தமிழன் என்று சொந்தங் கொண்டாடுவதற்கு தமிழனுக்கு எந்தத் தேவையும் இல்லை..! :wub::)

Edited by nedukkalapoovan

ஒருவர் ஒரு இனத்தின் மீது பற்று வைப்பதுக்கு அவர் தன் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டியதில்லை... அவர்கள் அந்த சமுகத்துக்கு ஆற்றும் சேவைகளே சான்று பகரும்.

பெரியார் கன்னடன் என்று சொன்னாலும் அவர் செய்த சேவை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு...அதே போல் தான் எம்ஜிஆர்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.