Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

தமிழர் புத்தாண்டு தையா? சித்திரையா?

-நக்கீரன்-

தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டுத் தொடக்கம் என்று 1921 ஆம் ஆண்டிலேயே தமிழறிஞர்கள் கூடி முடிவெடுத்தார்கள். தமிழக அரசைப் பொறுத்தளவில 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வந்திருகிறது.

இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி அதற்குச் சட்ட வடிவம் கொடுத்திருக்கிறார். சட்டம் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ்கூறும் நல்லுகம் வாழ்த்தி வரவேற்றிருக்கிறது! தமிழக அரசின் இந்த அறிவிப்பை தமிழீழ நிழல் அரசு வரவேற்றிருக்கிறது.

தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்புக்கு சில இந்து அடிப்படைவாதிகளும், அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தமி;நாட்டில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பும் பாரதிய ஜனதாக் கட்சியும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இது குறித்து இந்து பரிசத் அமைப்பின் அனைத்துலக செயல் தலைவர் வேதாந்தம் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசின் முடிவு கண்டனத்துக்கு உரியதாகும் என்றார்.

முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. தை முதல் நாள் இந்தியா முழுவதும் மகரசங்கராந்தி ஆக அனுசரிக்கப்படுகிறது. எனவே இதை தமிழர்களின் தனிப்பெரும் நாளாகக் கருத முடியாது.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியல்பூர்வமானது, கோள்களின் போக்கை வைத்துக் கணிக்கப்பட்டதாகும். மக்களின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகக் கருணாநிதி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே உடனடியாக இந்த முடிவை அவர் திரும்பப்பெற வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

வேதாந்தத்தைப் போலவே பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த இல. கணேசன் \'நாட்டைத் திசை திருப்பவும், வரலாற்றில் இடம்பெறவும், நாட்டைத் துண்டாடும் முயற்சியாகவும் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியுள்ளார்கள். முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள், நாம்தான் புத்திசாலிகள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்பவர்கள்\" எனக்காட்டமாகக் கூறியுள்ளார்.

தமிழீழத்தைப் பொறுத்தளவில் நல்லை ஆதீனமும் கம்பவாரி போன்ற இராமாயணப் பக்தர்களும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை எதிர்க்கிறார்கள். சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று வாதிடுகிறார்கள்.

பொதுவாக மனித மனம் மாற்றத்தை விரும்புவதில்லை. செக்குமாடு போல் செக்கைச் சுற்றிவருவதே சுகம் எனச் சிலர் நினைக்கிறார்கள்.

\'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே\" என்;பது நன்னூலில் காணப்படும் சூத்திரம்.

தொல்காப்பிய காலத் தமிழர்களுக்கு ஆவணி மாதம் ஆண்டுத் தொடக்கமாக இருந்திருக்கிறது. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் தமிழர்கள் ஆவணி தொடங்கி ஆடி முடியும் வரை உள்ள காலத்தை ஒரு ஆண்டாகக் கணித்தார்கள் என்கிறார். இதனால் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் வந்ததாக இருக்க வேண்டும்.

மரபு மாறக்கூடியது. ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் மாட்டு வண்டியில் தான் பயணம் செய்தோம். இன்று வானூர்தியில் கண்டம் விட்டு கண்டம் பறக்கிறோம். பனை ஓலையில் எழுத்தாணி கொண்டா எழுதுகிறோம்? எழுத்தாணியே இல்லாமல் கணினியின் திரையில் எழுதுகிறோம்! அரிசிச் சோற்றைச் சாப்பிட்ட தமிழர்கள் இன்று கோதுமை மாவில் உணவு சமைத்துச் சாப்பிடுகிறார்கள்!.

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940).

60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக்குறுகிய காலத்தைக் (60 ஆண்டுகள்) கொண்டுள்ளதால் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமல் இருக்கிறது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறிய முடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல் - 1940).

இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள். இந்தியாவில் வௌ;வேறு நிலப்பரப்பை ஆண்ட மன்னர்கள் தங்கள் பெயரில் தொடர் ஆண்டுகளை அறிமுகப்படுத்தினார்கள். கலியுக ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, சக ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட் சிலவாகும்.

வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும் போது, ஆண்டின் பெயரைக் குறிப்பிட்டு மாதம், திகதி முதலியவற்றையும் குறிப்பிடுவது வழக்கம். இந்த முறையில் நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப்பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலாக இருக்கிறது.

இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள் தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.

இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆண்டுகள் பிறந்த கதையிலும் ஆபாசம் வழிந்தோடுகிறது! சில ஆண்டுகளுக்கு அருவருப்பான பெயர் கொடுத்திருக்கிறார்கள். பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம்பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ்மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே! எடுத்துக்காட்டாக சுக்கில (விந்து) குரோதி, குரோதன, துன்முகி, துன்மதி போன்றவற்றைக் குறிப்பிடலாம். அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழர்களைப் பொறுத்தளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடர் ஆண்டை அவர்கள் உருவாக்கவில்லை. கல்வௌட்டுக்களில் தாங்கள் முடி சூட்டிக்கொண்டு ஆட்சி தொடங்கிய ஆண்டில் இருந்து காலத்தைக் கணித்தார்கள். இந்தக் குறைபாட்டை வள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்தியதின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

\'தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதலாகத் தொடங்குவது மரபு. இதைத்தான் பல்லாண்டு காலமாக நாம் கடைப்பிடித்து வந்துள்ளோம். இந்த வரையறைக்கு ஆதாரமாக மொழியியல் மற்றும் இலக்கியச் சான்றுகளும் நிறைந்து கிடக்கின்றன\" என்று சொலபவர்கள் இலக்கியத்தில் நிறைந்து கிடக்கின்ற பல சான்றுகளில் ஒரு சான்றையேனும் மேற்கோள் காட்டுவதில்லை!

சனவரி முதல் நாள் வரும் புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!.

தமிழ்மொழி மீதும் தமிழினத்தின் மீதும் நடத்தப்பட்ட புறப்பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதற்குத் தமிழன் எதைச் செய்தாலும் இந்தக் கூட்டம் அதை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும்.

வௌ;வேறு பண்பாடுகள் வௌ;வேறு நாளைத் தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றன. எல்லோருக்கும் சித்திரை முதல் நாள் புத்தாண்டல்ல. மேலும் சித்திரைப் புத்தாண்டு அறிவியல் அடிப்படையில் ஆனது என்பது முழுதும் உண்மையல்ல.

சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருக்கிறது என்று கூறி அதற்கான ஏதுக்களை சிலர் அடுக்கிக் காட்டுகிறார்கள். \'சூரியனே நமது கணிதத்தின் அடிப்படை. இவைகளின் நகர்வுகள் மாறுதல்களுக்கு உட்படாதவை. உலகில் நிலம் மாறும், நீர் மாறும், மலைகள் கரையலாம், வெடிக்கலாம். ஆனால் சூரியனும் சந்திரனும் மாறா. நிரந்தரமாக நடக்கும் இந்த செயல்களின் அடிப்படையில்தான் நம்முடைய ஆண்டுக்கணக்கு இருத்தல் வேண்டும். இதில் எந்த மூடப்பழக்க வழக்கமும் இல்லை. இதை அறியாது மாற்ற முயற்சிக்க வேண்டாம்\" என்கிறார். சூரியனை வைத்தே ஆண்டுக்கணிப்பு செய்யப்படுகிறது என்பது முழு உண்மையல்ல. இந்திய காலக்கணிப்பு துலாம் இராசி 0 பாகையில் காணப்படும் ளிiஉய என்று அழைக்கப்படும் சித்திரை நட்சத்திரத்தை வைத்தே கணிக்கப்படுகிறது.

சூரியனை அப்படையாகக்கொண்டு சித்திரைப் புத்தாண்டு மட்டுமல்ல பொங்கல் - புத்தாண்டும் அதே சூரியனை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகிறது.

புவி ஞாயிறை ஒரு நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. இது எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவதுபோன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகரசங்கராந்தி) அறிவியல் அடிப்படையில் ஆனதுதான். இன்னும் சொல்லப்போனால் இராசி வட்டத்தில் (புவி ஞாயிறைச் சுற்றிவரும் மேலும் கீழும் ஆன 20 பாகை கொண்ட பாதை) நான்கு முக்கிய கோணங்கள் இருக்கின்றன. மார்ச் மாதம் 20 (மேடம் - 0 பாகை), யூன் 21 (கடகம் - 90 பாகை), செப்ரெம்பர் 23 (துலாம் -180 பாகை) டிசெம்பர் 22 (மகரம் - 270 பாகை) என்பவையே அந்தக் கோணங்களாகும்.

இந்து அடிப்படைவாதிகள் தங்கள் வாதத்துக்கு வலுச்சேர்க்க இந்தியாவைப் பிடித்தாண்ட வெள்ளையன் மீது வஞ்சகப் புகழ்ச்சி பாடுகிறார்கள். \'நம்மை அடிமைகளாகவும், தங்கச் சுரகங்களாகவும் கருதி நடத்திய ஆங்கிலேயர்கள்கூட, நம்முடைய மதம், மொழி, சாதி மரபுகளிலும், நம்பிக்கைகளிலும், பழக்க வழக்கங்களிலும் கை வைக்காது, அவைகளை மதித்து நடந்து கொண்டதால்தான், அவர்களால் இங்கு இருநூறு ஆண்டுகளுக்குமேல் ஆள முடிந்தது\" என்பது அவர்களது வாதம்.

இந்த வாதத்திலும் வலுவில்லை. இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரன் சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்தான். குழந்தைகள் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து 14 அகவையை குறைந்தபட்ச அகவையாக சட்டம் (1890) செய்தான். இந்து மத விதவைகள் மறுமணம் செய்வது சட்டமாக்கப்பட்டது. காளிக்கு நரபலி கொடுப்பது சட்டத்தால் தடை செய்யப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தீண்டாமை அரசியல் யாப்பு மூலம் ஒழிக்கப்பட்டது. வரதட்சணைக் கொடுமை ஒழிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.

தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள்.

திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கி அதனைப் பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது, திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையாய தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா.சுப்பிரமணியப்பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவர்.

இந்த முடிவை 1935 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவிற்கு தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் ஒரு அறிவித்தல் செய்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்தவ ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடக்கி வைத்தார். திருவள்ளுவர் காலம் கி.மு. 31. எனவே, ஆங்கில ஆண்டான 1935 டுடன் 31 ஜக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 1966 ஆகும். (கி.பி. 31, 1935 ஸ்ரீ தி.பி. 1966)

அடிகளாரின் அறிவித்தலை அறிஞர் அவை ஏற்றுக்கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு (பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935) வருகிறது.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமை நாட்களின் பெயர்களில் புதன், சனி நீங்கலாக எஞ்சியவை தமிழ்ச்சொற்களாகும். புதன் தமிழில் அறிவன்; என்றும் சனி தமிழில் காரி என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழ் அறிஞர்களின் முயற்சியால் தமிழர் திருநாளான பொங்கல், தமிழ் ஆண்டு, திருவள்ளுவர், தமிழ் மறை ஆகியன உலகத் தமிழரால் போற்றிக் கொண்டாடடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழர் நலவாழ்வு, வளவாழ்வு, பெருவாழ்வு, புகழ் வாழ்வு பெற முடிகிறது.

திராவிட இயக்கம் தை முதல் நாளை முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறது. தை முதல் நாள் பொங்கல் நாள், புத்தாண்டின் தொடக்க நாள், திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகிய நாட்களே அந்த முப்பெரும் விழாவுக்குரிய நாட்களாகும்.

இந்து அடிப்படைவாதிகள் பழைய காலத்தில் வாழாமல் மாறும் உலக நடைக்கு ஏற்ப சிந்திக்கவும் வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா!

You fools! All that\'s gone is gone and will not comeback

Don\'t brood always over what’s gone

And worry to death and fall in the pit of worry

Don\'t remember all that\'s past.

http://www.tamilnaatham.com/articles/2008/...ran20080410.htm

  • Replies 123
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

The Solar cum Stellar New Year is calculated astronomically to mark the entry of the Sun in the first degree of the fixed zodiac. It is a Dravidian legacy, especially observed in the extreme peninsular India and Sri Lanka, by the Tamils, Malayalis and Sinhalese, while most of the Indians observe another New Year called Yugadi (Lunar New Year).

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25285

The Tamil New Year day falls on Sunday, 13th April, since 2008 is a leap year. On other years, it is 14th April. It is not only the Tamil New year, but also the New Year of Sinhalese and Malayalis. It is not appropriate to call it a Hindu New Year since vast majority of Hindus in India don't celebrate it a New Year. Yet, it is an auspicious day called Mesha-samkraanti for them. In Orissa, it is observed as Paana-samkraanti. It is also equally inappropriate to call it a Buddhist New Year, as Buddhists other than the Sinhalese don’t celebrate it. The calculation for the commencement of this New Year and the calendar based on it are entirely astronomical.

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=25298

புது வருடம், தைப்பொங்கல் ஏதாவது வந்தவுடன் தொடங்கி விடுவீர்கள் இப்படி ஒரு வாதப்பிரதிவாதத்துக்கு.. விடுங்கள் ஐயா..போதும் உங்கள் உபத்திரவம்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் உருப்படமாட்டான் என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. மேலும் தமிழன் சுத்தமான இனத்தவனுமல்ல ஆயிரத்தெட்டுச் சம்பிரதாயங்களையும் கலாச்சாரப் பிறழ்வுகளையும் தன்னகத்தே கொண்டு ஒருவனை ஒருவன் தாழ்த்தித் தனது செயல்தான் சரியென்று நிரூபிக்க வழிதேடுபவன்.

ஆறு கோடித் தமிழர்களின் ஏகோபித்த கருத்தாய் தை முதலாம் திகதியே தமிழ்ப் புதுவருடப் பிறப்பு என்று முடிவு காணப்பட்டு அதற்குச் சட்ட வடிவமும் கொடுக்கப்பட்டுள்ளபோது எதற்காகத் தமிழ்நெற் இப்படியொரு செய்தியைப் போட்டுக் குடடையை மேலும் குழப்புகிறது என்று தெரியவில்லை.

இதன் இறுதி விளைவாக ஒற்றுமைப்படாத எதிலும் சீரற்ற ஒரு இனமாகத் தமிழினம் மாறி ஒவ்வொருவரும் தம் மனம்போன போக்கில் எல்லாவிடயங்களிலும் நடந்து இனத்தின் அடையாளங்கள் அனைத்தும் இல்லாதொழியும்.

அதுவே நம்மவர்கள் சிலரின் விருப்பானால் அப்படியே ஆகுக. இனித் தமிழரைக் கடவுளும் காப்பாற்றுவது கஸ்டம். இது இன்றைய சித்திரை நாளில் எனது வாழ்த்தாகும்.

Edited by karu

விடுங்கப்பா.. ஒவ்வொரு மாசமும் புத்தாண்டு கொண்டாடினால் போச்சு..!

புதினம், பதிவு, சங்கதி போன்ற ஊடகங்கள் சித்திரை புத்தாண்டு பற்றி ஒரு மூச்சும் காட்டவில்லை. ஒப்புக்கேனும் "தமிழ்" என்ற சொல்லை தவிர்த்து (தமிழ் நாட்டு ஊடகங்கள் செய்வது போன்று) "சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்", "சர்வாதாரி புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று போட்டிருக்கலாம். ஆனால் அதையும் தவிர்த்து தமது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளன.

ஆனால் தமிழ்நெற் இணையம் இந்த விடயத்தில் தடுமாறி உள்ளது. தமிழர் புத்தாண்டாகிய தைத் திருநாளில் வன்னியில் நல்லளிப்பு வழங்கி தமிழீழ மக்கள் புத்தாண்டு கொண்டாடிய செய்தியையும் இருட்டடிப்பு செய்தது.

தற்பொழுது சித்திரை புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று எழுதி வாழ்த்தும் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டாவது தமிழ்நெற் இணையம் உண்மையை உணர்ந்து கொள்ளும் என்று நம்புவோம்.

அடுத்த ஆண்டாவது தமிழ்நெற் இணையம் உண்மையை உணர்ந்து கொள்ளும் என்று நம்புவோம்.

:lol: :lol: :D

"நம்புவோம்" என்று வார்த்தையில் சொன்னாலும் வெறும் நம்பிக்கையோடு நாம் சும்மா இருந்து விடுவது இல்லை என்கின்ற விடயம் எல்லோருக்கும் தெரியாது என்பது உண்மைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்...........தமிழரின் பாரம்பரிய இந்து மதத்தை இழிவுபடுத்தும் திட்டம் நன்றாக அரங்கேற்றப்படுகின்றது. அறிவியல் என்ற போர்வையில். இந்த தளங்கள் நத்தார் காலத்தில் வாழ்த்துக்களை வெளியிடுமா என்று பொறுத்திருந்து தான் பார்ப்போம்......... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த ஆண்டு தமிழ் நெற் போடாவிட்டாலும் புதினம் பதிவு சங்கதி கட்டாயம் போடுவினம்.

வெகுவிரைவில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாரிய மாற்றத்தை காணலாம் :D

என்னப்பா இந்த வெள்ளைக்கார ஜக்குவாரையே வாங்கும் போது இது பெரிய வேலையா :lol:

அது சரி இந்து சமுத்திரம் என்ற பெயரையும் மாற்றலாமே :lol:

தையில் புத்தாண்டு என்பதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் பொய்யாய் பழங்கதையாய் போய் விடும்! பொறுத்திருந்து பாருங்கள்

தமிழ் கடவுள் முருகனுக்குரிய லக்கினமான மேடத்தில் சூரியன் உச்சமடையும் சித்திரை முதல் தினத்தன்று புத்தாண்டு கொண்டாடுவதால் தான் தமிழர்கள் சூரியவம்சத்தவர்கள் எனப்படுகிறார்கள். தமிழர்களின் கலாச்சார செல்வாக்கு பல நூறு ஆண்டுகள் சிங்களவர்கள் மேல் இருந்ததாலேயே சிங்களவர்களுக்கும் சித்திரையே புத்தாண்டு ஆயிற்று.

வெற்றி வேலின் (முருகனின்) புத்தாண்டை சில வெற்று வேட்டுகள் மாற்றிவிட முடியாது.

முதல் ஒளி சூரியன், முதல் லக்கினமான மேடத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாளை உலகின் முதல் குடிகளில்

ஒருவனான தமிழன் புத்தாண்டாக கொண்டாடினான். இதை அறியாத மூடர்கள் தான் தையில் புத்தாண்டு கொண்டாடுவார்கள்

தமிழகத்தையும் கேரளாவையும் தவிர (அவர்களும் சேரன் காலத்தில் தமிழர்களாக இருந்தவர்கள்) இந்தியாவில் வேறு மாநிலங்களில் சித்திரை புத்தாண்டாக கொண்டாடப்படுவதில்லை. இது ஒன்றே போதும் பண்டைய சேர சோழ பாண்டிய நாடுகளில் சித்திரை தினமே புத்தாண்டாக கொண்டாடப்பட்டது என்று உறுதி செய்ய

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

மூடர்கள் அவர்களல்ல வெற்றி. அவர்களின் செயலைப் பின்பற்றும் அப்பாவித் தோழர்கள் தான் பாவம். வரலாற்றில் தாங்களும் இடம் பிடிப்பதற்காக இப்படி ஒரு மாற்றத்தைச் செய்யச் சிலர் நாடகமாடுகின்றார்கள். அதற்குச் சில வால்பிடிகளும் உடந்தை.

சித்திரை வருடப்பிறப்புக் கொண்டாடுவதைத் தடுக்க முடியாத இவர்கள், அடக்குமுறையைப் பாவித்துப் பார்த்தார்கள். முடியவில்லை. இப்போது மக்கள் கொண்டாடுவது சித்திரை நன்நாள் எனக் கதை மாற்றுகின்றார்கள். பரிதாபமா நிலை.

ஏன் சித்திரை மாதத்தில் ஒரு நன்நாள் வரவேண்டும். மற்றய மாதங்களில் இல்லை என்ற விவாதத்தை ஆரம்பிக்க நாள் குறிக்க வேண்டும். :lol:

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த (வேறும் சில இதேமாதிரியான) கருத்தாடல்கள் மூலமாக என்ன தெரிகிறது? தங்கள் தங்கள் நிலைப்பாடுதான் சரி என்ற நினைப்பில் உள்ளீர்களே தவிர, மற்றவர்களின் கருத்துக்களை (மற்றவர்களின் இடத்தில் இருந்து/கண்பார்வையில்) ஒரு தடவையெனும் விளங்கி எழுதியுள்ளீர்களா? இல்லை! பெரும்பாலானா கருத்துக்கள் மற்றவர்களை (எதிர்க்கருத்தாளர்களை) கிண்டலடிப்பதும், நக்கல் நையாண்டி செய்வதும், குத்துவதுமாகவுமே உள்ளன (இவை ஒரு நல்ல ஆரோக்கியமானா கருத்தாடலிற்கு அழகில்லை). இதனால்த்தான் ஒரு சரியான முடிவுக்கு என்றுமே எங்களால் வரமுடிவதில்லை. அன்றுதொட்டு இன்றுவரை எமது ஒற்றுமையின்மைதான் எங்களின் அழிவுக்கு முதற்காரணம்! இதை முதலில் புரிந்துகொள்வீர்களாக.

எனினும், இச்சந்தர்ப்பத்தில் நானும் உங்கள் அனைவருக்கும் எனது சித்திரைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழால் ஒன்றுசேர்வோம், தமிழீழத்துக்காகவே உழைப்போம்.

ம்ம்ம்ம்...........தமிழரின் பாரம்பரிய இந்து மதத்தை இழிவுபடுத்தும் திட்டம் நன்றாக அரங்கேற்றப்படுகின்றது. அறிவியல் என்ற போர்வையில். இந்த தளங்கள் நத்தார் காலத்தில் வாழ்த்துக்களை வெளியிடுமா என்று பொறுத்திருந்து தான் பார்ப்போம்......... :lol:

இந்துமதப்பண்டிகை என்றால் ஏன் அதற்குள் தமிழை சேர்க்கிறீர்கள். இந்துமதப் புதுவருடம் என்றே கூறிவிட்டுப் போகலாமே. எப்போதுமே இந்து மதம் வளர தமிழ் மொழி தேவைப்படுகிறது....

அடுத்த ஆண்டு தமிழ் நெற் போடாவிட்டாலும் புதினம் பதிவு சங்கதி கட்டாயம் போடுவினம்.

வெகுவிரைவில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாரிய மாற்றத்தை காணலாம் :D

என்னப்பா இந்த வெள்ளைக்கார ஜக்குவாரையே வாங்கும் போது இது பெரிய வேலையா :lol:

அது சரி இந்து சமுத்திரம் என்ற பெயரையும் மாற்றலாமே :D

இந்து சமுத்திரம் சிந்துவெளிநாகரிகத்தில் வெளிப்பாடாகப் பெயர் கொண்டது. சிந்துவெளி நாகரிகத்தைக் குறிப்பத்த சிந்து என்ற சொல்லே இந்து எனத் திரிபு பெற்றுள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்தியா என்ற பெயரும் தோன்றியது. இது தொல்பொருள் மற்றும் மொழியியலாளர்களின் முடிபு. இந்துசமுத்திரத்தில் உள்ள இந்து என்ற சொல்லை ஒரு மதத்துடன் தொடர்புபடுத்தும் உங்கள் வாதம் மெச்சத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சுடர்

இந்தப் போராட்ட காலத்தில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி என்பது எல்லாப் பத்திரிகைகளுக்கும் வளங்கும் நிகழ்வு அல்ல. ஏன் தைப்பொங்கலில் நல்லளிப்புச் செய்தி புதினத்தில் மட்டும் தானே வந்தது. அப்போது எல்லாம் அதை மாற்றங்களாக எடுத்துக் கொண்டார்களே? பிற செய்தித் தளங்கள் பற்றிய கண்ணோட்டமாக ஏன் எடுக்கவில்லை

தமிழ்லினக்ஸ் கதைக்கின்ற சில வார்த்தைப் பிரயோகங்களில் எனக்கு மதிப்பில்லை. அவரின் அடிப்படை அமெரிக்கா சார்ந்த ஒரு போக்காகத் தான் வெளிப்படுவதாகவே உணர்க்கின்றேன்.

சித்திரை வருடப்பிறப்பை எல்லா இந்துக்களும் கொண்டாடுவதில்லை பாண்டிய, பல்லவ, சோழ நாடுகளின் இடங்களாக இருந்த தமிழ்நாடும், சேரநாடாகிய கேரளமும், தமிழ்மன்னர்களின் சிறிலங்கா மீதான தாக்கத்தால் பெற்றுக் கொண்ட சிங்களவர்கள் மட்டும் தான் கொண்டாடுகின்றார்கள். வட இந்திய இந்துக்கள் கொண்டாடுவதில்லை.

இந்து மதம் தமிழை மட்டும் வைத்து வளரவில்லை என்பதை உங்களுக்குப் படிப்பிக்கத் தேவையில்லை. அது இந்தியா முழுவதுமுள்ள 1000 மேற்பட்ட பிரதேசமொழிகளிலும், 27 மாநில மொழிகளிலும் வியாபித்து நிற்கின்றது.

ஆனால் அதன் அடிப்படை தமிழ், மற்றும் பிராமி என்ற மொழிகளில் எழுந்தது. தமிழை இந்து சமயமும், இந்து சமயத்தைத் தமிழும் வளப்படுத்தியிருக்கின்றது என்பது தான் வரலாறு

சுடர்

இந்தப் போராட்ட காலத்தில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி என்பது எல்லாப் பத்திரிகைகளுக்கும் வளங்கும் நிகழ்வு அல்ல. ஏன் தைப்பொங்கலில் நல்லளிப்புச் செய்தி புதினத்தில் மட்டும் தானே வந்தது. அப்போது எல்லாம் அதை மாற்றங்களாக எடுத்துக் கொண்டார்களே? பிற செய்தித் தளங்கள் பற்றிய கண்ணோட்டமாக ஏன் எடுக்கவில்லை

தமிழ்லினக்ஸ் கதைக்கின்ற சில வார்த்தைப் பிரயோகங்களில் எனக்கு மதிப்பில்லை. அவரின் அடிப்படை அமெரிக்கா சார்ந்த ஒரு போக்காகத் தான் வெளிப்படுவதாகவே உணர்க்கின்றேன்.

சித்திரை வருடப்பிறப்பை எல்லா இந்துக்களும் கொண்டாடுவதில்லை பாண்டிய, பல்லவ, சோழ நாடுகளின் இடங்களாக இருந்த தமிழ்நாடும், சேரநாடாகிய கேரளமும், தமிழ்மன்னர்களின் சிறிலங்கா மீதான தாக்கத்தால் பெற்றுக் கொண்ட சிங்களவர்கள் மட்டும் தான் கொண்டாடுகின்றார்கள். வட இந்திய இந்துக்கள் கொண்டாடுவதில்லை.

இந்து மதம் தமிழை மட்டும் வைத்து வளரவில்லை என்பதை உங்களுக்குப் படிப்பிக்கத் தேவையில்லை. அது இந்தியா முழுவதுமுள்ள 1000 மேற்பட்ட பிரதேசமொழிகளிலும், 27 மாநில மொழிகளிலும் வியாபித்து நிற்கின்றது.

ஆனால் அதன் அடிப்படை தமிழ், மற்றும் பிராமி என்ற மொழிகளில் எழுந்தது. தமிழை இந்து சமயமும், இந்து சமயத்தைத் தமிழும் வளப்படுத்தியிருக்கின்றது என்பது தான் வரலாறு

ஒரு பத்திரிகைக்கு அனுப்பும் அதே செயன்முறையைத் தான் மற்றைய பத்திரிகைகளும் கடைப்பிடிக்கின்றன. தன் நாட்டு மக்களிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவது என்றால் அதை ஒரு பத்திரிகைக்கு மட்டும் அனுப்பவேண்டிய அவசியம் அவர்களிற்கு இல்லை.

தமிழ் நாட்டில் தமிழால் தான் இந்து மதம் வளர்ந்தது. சமண சமயம் தமிழ் நாட்டில் கோலோச்சும் நிலை வந்திருக்காவிடின் தமிழில் தேவாரங்களே இருந்திருக்க வாய்ப்பில்லை. தான் வளர்வதற்காக பத்தோடு பதினொன்றாக தமிழிலையும் தேவரத்தபாடு என்றதுதான் இந்து மதம்.

நல்வழிகாட்ட உருவாக்கப்பட்டதே மதங்கள்... மதங்களின் பெயரில் மதங்கொள்ளாதீர்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

யுத்த நிலையில் செய்திகளை அனுப்புவதற்கு எல்லா ஊடகங்களும் அதே முறையைக் கடைப்பிடிக்கும் என்றில்லை. அதை விடவும் புலத்தில் நடத்தப்படுகின்ற சில ஊடகங்கள் ராமசாமி சார்புக் கொண்டவையே. யாழ்களமும் அதற்கு விதி விலக்கல்ல என்பதை நிர்வாகத்தினரே பல தடவை உறுதி செய்திருக்கின்றார். ஏதோ எங்களுடைய வற்புறுத்தலால் தான் பட்டும் படாமலும் அனுமதிக்கின்றனர் என்பதும் உண்மை.

எனவே எல்லோரும் செய்திகளைப் பிரதியிடுவார் என்ற நிலை கிடையாது. அதற்காகத் தான் வித்தி தொடர்பாக செய்தியை முதலில் சொன்னேன்.

மதங்களைச் சிதைப்போம், புடுங்குவோம் என்று சிலர் புறப்படும்போது நாங்கள் மதம் கொண்டு தான் ஆகவேண்டியுள்ளது. மூடநம்பிக்கைகளைத் தகர்க்க எத்தனையோ சமயப்பெரியார் முயற்சித்தபோதும் அதை எதிர்க்காத இந்துமதம் ஏன் இவர்களை எதிர்க்கின்றது என்றால், இவர்களின் நோக்கமு;ம, இவர்கள் விலை போன பாதையும் வேறு.

சமணத்தால் தான் சைவம் வளர்ந்தது என்பது உண்மையாக இருக்கலாம். இப்போது இப்படிப்பட்ட திராவிடக்கும்பலைப் பார்க்கின்றபோது தான் நமக்கு ஒரு ஒற்றுமையான அமைப்புத் தேவைப்படுவது பற்றிச் சிந்திக்கின்றோம்.

ஐயா

யுத்த நிலையில் செய்திகளை அனுப்புவதற்கு எல்லா ஊடகங்களும் அதே முறையைக் கடைப்பிடிக்கும் என்றில்லை. அதை விடவும் புலத்தில் நடத்தப்படுகின்ற சில ஊடகங்கள் ராமசாமி சார்புக் கொண்டவையே. யாழ்களமும் அதற்கு விதி விலக்கல்ல என்பதை நிர்வாகத்தினரே பல தடவை உறுதி செய்திருக்கின்றார். ஏதோ எங்களுடைய வற்புறுத்தலால் தான் பட்டும் படாமலும் அனுமதிக்கின்றனர் என்பதும் உண்மை.

எனவே எல்லோரும் செய்திகளைப் பிரதியிடுவார் என்ற நிலை கிடையாது. அதற்காகத் தான் வித்தி தொடர்பாக செய்தியை முதலில் சொன்னேன்.

மதங்களைச் சிதைப்போம், புடுங்குவோம் என்று சிலர் புறப்படும்போது நாங்கள் மதம் கொண்டு தான் ஆகவேண்டியுள்ளது. மூடநம்பிக்கைகளைத் தகர்க்க எத்தனையோ சமயப்பெரியார் முயற்சித்தபோதும் அதை எதிர்க்காத இந்துமதம் ஏன் இவர்களை எதிர்க்கின்றது என்றால், இவர்களின் நோக்கமு;ம, இவர்கள் விலை போன பாதையும் வேறு.

சமணத்தால் தான் சைவம் வளர்ந்தது என்பது உண்மையாக இருக்கலாம். இப்போது இப்படிப்பட்ட திராவிடக்கும்பலைப் பார்க்கின்றபோது தான் நமக்கு ஒரு ஒற்றுமையான அமைப்புத் தேவைப்படுவது பற்றிச் சிந்திக்கின்றோம்.

எதிர்வாதம் செய்யவேண்டும் என்பதற்காக என்ன கூறப்பட்டது என்பதை மறைக்கப்பார்க்கிறீர்கள். சுடரொளி பத்திரிகையில் தரப்பட்ட செய்தியில் பத்திரிகை தெளிவாக "சுடரொளிக்குத் தெரிவித்தார்" என்று கூறியுள்ளது. மற்றும் ஈழநாதம் மற்றும் உதயன் தவிர்ந்த தமிழர் ஊடகங்கள் யுத்தம் நடக்கும் இடங்களில் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

மற்றவர்கள் விலைபோனார்களோ இல்லையோ நீங்கள் இனத்தை அழிக்கநினைப்பவர்களிடம் விலைபோய்விட்டீர்கள் என்பதை மட்டும் அறிந்துகொள்ள மடிகின்றது.

தமிழன் தன்னைத் தமிழன் என்று சொல்வதில் பெருமைகொள்வதை விடுத்து இந்து என்று சொல்வதில் பெருமைகொள்வானெனில் தமிழினம் விரைவில் அழிந்து போகும்

  • கருத்துக்கள உறவுகள்

உதயனின் சகோதரப்பத்திரிகை தான் சுடடொளி என்று தெரியாத உங்கள் கூட எல்லாம் விவாதம் தேவையா?

ஒரு விவாதத்துக்கு வந்தர்ல, அங்கே விலை போனாய், இங்கே விலை போனாய், நீ துரோகி என்று பட்டம் சூட்டிப் பெருமிதம் அடைவது தான் முழுத்தொழிலாகப் போய் விட்டது.

தமிழ் அழிவது என்பது தமிழரோடு தமிழில் பேசாமல் பிறமொழிகளில் பந்தா அடிப்பது நண்பரே. அது தான் முக்கியப் பிரச்சனை. நான் தமிழ் இந்து என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதமடைகின்றேன்.

என்றைக்குமே உணர்வு தான் மொழியை வளர்க்கும் என்பதைப் புரிந்து வைத்திருக்கின்றேன். இன்றைக்குத் தேசியம், விடுதலைப் போராட்டம் என்ற உணர்வால் மட்டும் தான் என்ன பிரிவினை இருந்தாலும் ஒன்றிணைக்க முடிந்ததே தவிர, தமிழ்மொழி என்று எத்தனை பேரால் உங்களை ஒன்றிணைக்க முடியும்??

தமிழீழம் கிடைத்தபின்னரும் ஒன்றிணைக்க வைக்க வேண்டுமென்றால் பக்தி என்ற ஒரே ஒரு கருவூட்டலைத் தவிர வேறு எந்த மார்க்கமும் எமக்குக் கிடையாது. தென்னாபிரிக்கா, தொடங்கி மொறீசியஸ் வரைக்கும் குறைந்தபட்சம் தங்களைத் தமிழர் என்று அவர்களை நினைக்க வைத்தது அவர்கள் கொண்டிருந்த பக்தி மட்டுமே..

சுடரொளிக்குத் தெரிவித்தார் என்று மட்டுமல்லாமல், எல்லா ஊடகங்களும் அவ்வாறே எழுதும். தனிப்பட்ட விதத்தில் பகிரப்படும் செய்திகள் மட்டுமல்லாமல், யாராவது ஒரு முக்கியஸ்தரிடம் தங்களின் பத்திரிகையைக் கொடுத்துப் படம் எடுப்பது எல்லா ஊடகங்களின் வழமை. சுடர்ஒளி வந்த ஆரம்பகாலங்களில் தேசியத்தலைவர் படிப்பது போலப் படம் எடுத்துப் பிரசுரித்தார்கள். ஏன் மற்றய ஊடகங்களுக்குத் தேசியத்தலைவர் படம் எடுக்க அனுமதிக்கவில்லை எனக் கேட்கமாட்டீர்கள் என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயம்தான் தமிழை வளர்த்தது என்று கூறுவது நகைப்புக்கிடமானதாகும்.

சிரத்தில் சிந்தா மணி சூடிச் சிற்றிடைமணிமேகலை மின்னக் கரத்தில் வளையாபதியணிவித்துக் காலில் சிலம்பின் அதிகாரத்தை வைத்துக் காதிலே குண்டலமும் பூட்டித் தமிழன்னையை அழகு செய்தவர்கள் இந்து சமயக் கொம்பன்களல்ல. புறச்சமயங்களான சமண பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்களே. ஆராயாமல் சும்மா ஏன் எழுதுகிறர்களென்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் சங்கதி.. பதிவு.. **** இணையத்தளங்கள். தமிழ்நெட் சர்வதேச அளவில் ஊடகத்துறையால் நோக்கப்படும் ஒரு ஊடகம். அது தெளிவாக இன்று பிரதான தலைப்பிட்டு இவ்விடயத்தை தெளிவுபடுத்தியது தற்செயலான விடயமல்ல. நீண்ட ஒரு கட்டுரையுடன் அவர்களின் வாழ்த்து அமைந்திருந்தது. அது மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்லவதாகவே அமைந்திருந்தது. அதை சிலர் ஏற்றுக் கொள்ள முடியாமையால் புலம்பித்திரிகிறார்கள். லீவ் தெம்.. புலம்பிட்டுப் போகட்டும். சர்வதேச நிலைப்பாட்டுக்கு தமிழ்நெட் நல்ல ஆதார கட்டுரையை இணைத்துவிட்டிருக்கிறது. பாராட்டுக்கள்.

அதுமட்டுமன்றி... புலம்பெயர் தேசத்தில் அச்சிடப்படும் தமிழ்தாய் நாட்காட்டிகள் போன்றவற்றிலும் இன்று தமிழ் புத்தாண்டு என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது..! அதுமட்டுமன்றி புலம்பெயர் தேசங்களில் 100க்கு 99 % மக்கள் இன்று புத்தாண்டை ஓரளவு விமர்சையாகக் (தாயக சோக நினைவுகளோடு) கொண்டாடினர்...! நான் இன்று கைவிசேசம் கூட கொடுத்தேன் வாங்கினேன்..! இதர நாட்டு நண்பர்களுடன் இணைந்து எமது கலாசார உணவுப்பண்டங்கள் செய்து உண்டு மகிழ்ந்தோம்..! அவர்களிடம் எம்மக்கள் மத்தியிலும் சில புறநடைகள் இருக்கு அதை காவித்திரிய இப்படியும் ஒரு கூட்டம் இருக்கு என்ற போது அவர்கள் சொன்னார்கள்.. எல்லா சமூகத்திலும் சில புறநடைகள் இருக்கத்தான் செய்யுது.. அப்பதான் விளம்பரம் புகழ் கிடைக்கும் என்று..! :D

Edited by மோகன்
***** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் தான் செய்தது. இந்து மதம் செய்தது என்பதில் வேறுபாடு உண்டு. நான் இந்து மதத்தைப் பற்றிக் கதைப்பதால் அதைப் பற்றித் தான் சொல்ல இயலும். பைபிளைப் பற்றிக் கதைத்த பின் கல்லடிபட்ட நாய் மாதிரித் திரிவது அழகா?

உதயனின் சகோதரப்பத்திரிகை தான் சுடடொளி என்று தெரியாத உங்கள் கூட எல்லாம் விவாதம் தேவையா?

ஒரு விவாதத்துக்கு வந்தர்ல, அங்கே விலை போனாய், இங்கே விலை போனாய், நீ துரோகி என்று பட்டம் சூட்டிப் பெருமிதம் அடைவது தான் முழுத்தொழிலாகப் போய் விட்டது.

தமிழ் அழிவது என்பது தமிழரோடு தமிழில் பேசாமல் பிறமொழிகளில் பந்தா அடிப்பது நண்பரே. அது தான் முக்கியப் பிரச்சனை. நான் தமிழ் இந்து என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதமடைகின்றேன்.

என்றைக்குமே உணர்வு தான் மொழியை வளர்க்கும் என்பதைப் புரிந்து வைத்திருக்கின்றேன். இன்றைக்குத் தேசியம், விடுதலைப் போராட்டம் என்ற உணர்வால் மட்டும் தான் என்ன பிரிவினை இருந்தாலும் ஒன்றிணைக்க முடிந்ததே தவிர, தமிழ்மொழி என்று எத்தனை பேரால் உங்களை ஒன்றிணைக்க முடியும்??

தமிழீழம் கிடைத்தபின்னரும் ஒன்றிணைக்க வைக்க வேண்டுமென்றால் பக்தி என்ற ஒரே ஒரு கருவூட்டலைத் தவிர வேறு எந்த மார்க்கமும் எமக்குக் கிடையாது. தென்னாபிரிக்கா, தொடங்கி மொறீசியஸ் வரைக்கும் குறைந்தபட்சம் தங்களைத் தமிழர் என்று அவர்களை நினைக்க வைத்தது அவர்கள் கொண்டிருந்த பக்தி மட்டுமே..

சுடரொளிக்குத் தெரிவித்தார் என்று மட்டுமல்லாமல், எல்லா ஊடகங்களும் அவ்வாறே எழுதும். தனிப்பட்ட விதத்தில் பகிரப்படும் செய்திகள் மட்டுமல்லாமல், யாராவது ஒரு முக்கியஸ்தரிடம் தங்களின் பத்திரிகையைக் கொடுத்துப் படம் எடுப்பது எல்லா ஊடகங்களின் வழமை. சுடர்ஒளி வந்த ஆரம்பகாலங்களில் தேசியத்தலைவர் படிப்பது போலப் படம் எடுத்துப் பிரசுரித்தார்கள். ஏன் மற்றய ஊடகங்களுக்குத் தேசியத்தலைவர் படம் எடுக்க அனுமதிக்கவில்லை எனக் கேட்கமாட்டீர்கள் என நினைக்கின்றேன்

உதயனின் சகோதரப் பத்திரிகையாக சுடரொளி இருக்கின்றபோதும் சுடரொளியின் இயங்குதளம் வேறு. தன் தளத்திலுள்ள மக்களைக் கவர்வதற்காக அதற்்கேற்றவாறே அப்பத்திரிகை பிரசுரமாகும்.

விலைபோனதாக விவாதத்தில் முதலில் குறிப்்பிட்டது நீங்களன்றி நானல்ல. உங்களில் ஏற்பட்டிருக்கும் குற்றவுணர்ச்சியினால் நீங்கள் அவ்வாறு கூறியிருக்கலாம். அதனைச் சுட்டிக்காட்டுவதற்கே என்னால் அவ்வாறு கூறப்பட்டது.

தமிழ் அழிவது தமிழரோடு பிறமொழியில் கதைப்பதால் மட்டுமல்ல. தமிழனுக்குத் தனித்துவமானவற்றை மதச்சாயம் பூசி மற்றைய மதங்களைக் கைக்கொள்ளும் மக்்களைத் துரத்துவதன் மூலமும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பக்தி என்று எதைக் கூறுகின்றீர்கள் என்று தெளிவாகக் கூறுவது நன்று. மொழி மீதும் பக்தி கொள்ளலாம். இனம் மீதும் பக்திகொள்ளலாம். இறைபக்திதான் எதிர்காலத்தில் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் என்றால் அதை நான் திட்டவட்டமாக மறுக்கின்றேன்.

ஓர் இந்தியனைக் கேட்டால் தான் இந்தியன் என்றுதான் சொல்வான். அங்கே அவனை அடையாளப்படுத்துவது அவன் சார்ந்த நாடு. தன் மதத்தைக் காட்டி அடையாளப்படுத்தவில்லை. அவன் முஸ்லிமாகவோ அன்றி இந்துவாகவோ இருக்கலாம்.

ஓர் இனம் தன் சிறப்புக்களையும், பெருமையையும், கலாச்சாரப் பாரம்பரியங்களையும் அடையாளப்படுத்தி நின்றால் மட்டுமே நிலைத்து நிற்கும். அதைவிடுத்து மதத்தைக் காட்டி நிலைக்கமுடியாது. தமிழனுக்கு என்று ஒருநாடு அமையும் போது இதை நீங்கள் கண்ணால் காணலாம்.

தென்னாபிரிக்க மொரிசியஸ் தமிழர்கள் மொழிமீது கொண்ட பற்றினாலே தமிழர்களாக இருக்கிறார்கள். மதம் மீது பக்தி மட்டும் கொண்டிருந்தால் தாம் தமிழர் என்ற அடையாளம் இழந்திருப்பார்கள்.

சுடரொளி மட்டுமல்ல வேறும் சில பத்திரிகைகள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தங்கள் பத்திரிகையினை வாசிப்பது போன்ற படங்களைப் பிரசுரித்திருந்தன. பொதுவான சிறப்பு நாட்களில் வாழ்த்துக்கள் தெரித்தார்கள் என்றால் எந்தவொரு பத்திரிகையும் தமக்குத் தெரிவித்தார் என்று போடுவதில்லை.அவ்வாறு சிறப்பு தினங்களில் தனியொரு பத்திரிகையை அழைத்து வாழ்த்துச் சொல்வதற்கு முக்கியமானவர்கள் அவ்வளவு முட்டாள்களல்ல.

இந்து மதம் தான் செய்தது. இந்து மதம் செய்தது என்பதில் வேறுபாடு உண்டு. நான் இந்து மதத்தைப் பற்றிக் கதைப்பதால் அதைப் பற்றித் தான் சொல்ல இயலும். பைபிளைப் பற்றிக் கதைத்த பின் கல்லடிபட்ட நாய் மாதிரித் திரிவது அழகா?

அன்பை வளர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்துமதத்தைக் கடைப்பிடிப்பதில் பெருமைகொள்வதாகக் கூறும் நீங்கள் இப்படி மற்றய மதம் மீது கொலைவெறியுடன் இருப்பது புரியவில்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.