Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா அழைப்பிதழ்!- சீறுமா இந்துத்வா அமைப்புகள்?

Featured Replies

தயா,

உங்களுக்கு கடவுள் தோற்றத்தின் வரலாறு தெரியாததற்கு நான் பொறுப்பு அல்ல. சைவத்தில், வைணவத்தில் உள்ள கடவுள்கள் உலகம் முழுவதும் இருந்தன என்பது அறிவியல் உண்மை. பெயர்கள்தான் வேறு வேறு. ஆச்சரியப்படும்படி சில புராணக் கதைகள், கடவுள்களின் வடிவங்கள், வழிபாட்டு முறைகள் ஒத்துப் போவதும் உண்டு.

அன்றைக்கு மனிதனுக்கு இருந்த சிந்தனை அப்படி. அதற்கு எந்த தத்துவ விளக்கங்களும் கிடையாது.

கிரேக்க புராணத்தில் உள்ள ஒடிபஸ் இன்றைக்கு பாலியல் சார்ந்த ஒரு பிரச்சனைக்கு குறியீடாகக் காட்டப்படுகிறான். ஆனால் இந்த பாலியல் பிரச்சனையை அன்றைக்கே கண்டுபிடித்ததால்தான் கிரேக்கர்கள் இந்தக் கதையை உருவாக்கினார்கள் என்று யாரும் கதை அளப்பது இல்லை.

ஆனால் இந்துக்கள் இப்படித்தான் கதை சொல்கிறார்கள். முட்டாள்தனத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் இன்றைக்கு தத்துவம் சொல்லி மனிதனை தொடர்ந்து முட்டாள்களாகவே வைத்திருக்கின்றார்கள்.

தத்துவங்களுக்காக கடவுள் உருவாக்கப்படவில்லை. அறியாமையில் உருவான கடவுள் அறிவு வந்த பின்பும் தக்க வைக்கப்படுவதற்காக தத்துவங்கள் உருவாக்கப்பட்டன.

இது கருத்து அல்ல. வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

தயா உங்கள் கருத்துக்கள் உறுதியாக இருக்கின்றன.. சபேசனிதைக் காட்டினும். தொடருங்கள். :lol:

கிரேக்க புராணத்தில் உள்ள ஒடிபஸ் இன்றைக்கு பாலியல் சார்ந்த ஒரு பிரச்சனைக்கு குறியீடாகக் காட்டப்படுகிறான். ஆனால் இந்த பாலியல் பிரச்சனையை அன்றைக்கே கண்டுபிடித்ததால்தான் கிரேக்கர்கள் இந்தக் கதையை உருவாக்கினார்கள் என்று யாரும் கதை அளப்பது இல்லை.

கிரேக்கர் அதை எல்லாம் கடவுள் எண்று சொல்வதில்லை... தேவதை எண்றுதான் அழைப்பார்கள்... ஒலிம்பியா எடேனியா, அத்தீனா , மிர்ணாவா எண்டு 12 தேவதைகள் இருக்கின்றன...!! கிட்டத்தட்ட சக்திகளின் வெளிப்பாடுகளை வணங்கும் முறை...! ஆனால் அங்கே இருந்தது போல 12 கடவுள்கள் இங்கே இருக்க இல்லை... நீங்களும் கைகளால் அள்ளி சாப்பிடுகிறீர்கள் சீனர்கள் குச்சியால் அள்ளி சாப்பிடனர்... ஆனால் ஆச்சரிய படும் வகையில் கிரேக்கர்களும் கைகளால் அள்ளித்தான் சாப்பிடுகிறார்கள் எண்று சொல்வீர்கள் போல...!

கடவுள் எண்டது முக்கியமாக சக்தியின் வெளிப்பாட்டை போற்றி கொள்பவர்கள் உலகின் அசைவியக்கம் எங்கு இருந்தாலும் ஒண்றாகத்தான் உணருவார்கள்... அதை கடவுள் எண்று சொல்லும் போது அதன் மீது ஏற்படும் சிந்தனை ஓட்டங்கள் மட்டும் வேறு படுவதுக்கு இல்லையே...!!!

அல்லா எண்று ஒருவர் சக்தியின் வெளிப்பாட்டாக உருவாக வில்லை... நபி என்பவர்(கள்) வருகையாலும் அவரின் போதனையாலும் குர் ஆனில் எழுதப்பட்டவையாலூம் ஏற்பட்டது... அதேபோல ஆயர் பாடியில்( பிகார்) பிறந்த கிருஸ்ணன் கதையும் அதனை ஒட்டி தோண்றிய பகவத்கீதையும், மாட்டு தொழுவத்தில் பிறந்த கிறிஸ்துவும் பைபிளும் கதைகளில் ஒற்றுமையாவையாக இருக்கிறது...!

அந்த கிறிஸ்ணர் கதைகளை கொண்டுதான் வைணவம் தோண்றியது... கிறிஸ்ணன் எண்டால் கறுப்பன்.. அதோடு சைவர்கள் வணங்கிய திருமால் எனும் விண்ணு (விண் அல்லது ஆகாயம்) வின் நிறம் நீலத்தையும் கலந்து விஸ்ணு வாக்கினர்... அப்படியே வனவர்களும் பெருக்கப்பட்டனர்...

வைணவர்களும் சைவர்களும் அடித்து கொண்டது போல சமணர்கள்கூட ்ச்ச்சைவர்களோடு அடித்து கொண்டது இல்லை...

வைணவ ஆள்வார்களில் பன்னிருவர்கள் திருவாய்மொழியை படித்தீர்கள் எண்றால் சைவார்களை எப்படி தாக்குகிறார்கள் என்பது தெரியும் .... அதுக்காக பதிலை சைவர் திருமூலர் திருமந்திரத்தில் குடுத்தும் விடுகிறார்...!!

தயாவுக்கும் ஒருவர் கைதட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடவுள் பற்றிய சிந்தனை உலகம் முழுவதும் ஒரே மாதிரித்தான் இருந்தது. பல கடவுள்கள், தேவர்கள், தேவதைகள், புராணங்கள் என்று ஒரே மாதிரித்தான் இருந்தது.

கிருஸ்ணன் பற்றி இங்கே சொல்லப்பட்டது. கிரேக்கத்தில் கிராக்ளிஸ் என்று ஒரு காவிய நாயகன் உண்டு. சூரியனின் சாபத்தால் கறுப்பாக மாறியவன். ஹைதரா எனப்படும் பல தலைகளை உடைய நாகத்தை கொன்றவன். பல பெண்களை மணந்தவன்.

கிருஸ்ணனுக்கும் கிராக்ளிஸ{க்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அங்கே அறிவு வளர்ச்சி உற்றதால், கிராக்ளிஸ் கடவுள் ஆக்கப்படவில்லை. இங்கே அறிவு வளராததால் கிருஸ்ணன் கடவுள் ஆக்கப்பட்டான். இன்றைக்கு கடவுளை "மாமா" போன்று பார்க்க விரும்புபவர்கள் கிருஸ்ணனை வணங்கலாம் என்றும் போதிக்கப்படுகிறது.

கிருஸ்ணனுக்கும் கிராக்ளிஸ{க்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அங்கே அறிவு வளர்ச்சி உற்றதால், கிராக்ளிஸ் கடவுள் ஆக்கப்படவில்லை. இங்கே அறிவு வளராததால் கிருஸ்ணன் கடவுள் ஆக்கப்பட்டான்.

:lol::(

சூப்பர் சபேசன். தொடருங்கள்.

தயாவுக்கும் ஒருவர் கைதட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடவுள் பற்றிய சிந்தனை உலகம் முழுவதும் ஒரே மாதிரித்தான் இருந்தது. பல கடவுள்கள், தேவர்கள், தேவதைகள், புராணங்கள் என்று ஒரே மாதிரித்தான் இருந்தது.

கிருஸ்ணன் பற்றி இங்கே சொல்லப்பட்டது. கிரேக்கத்தில் கிராக்ளிஸ் என்று ஒரு காவிய நாயகன் உண்டு. சூரியனின் சாபத்தால் கறுப்பாக மாறியவன். ஹைதரா எனப்படும் பல தலைகளை உடைய நாகத்தை கொன்றவன். பல பெண்களை மணந்தவன்.

கிருஸ்ணனுக்கும் கிராக்ளிஸ{க்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அங்கே அறிவு வளர்ச்சி உற்றதால், கிராக்ளிஸ் கடவுள் ஆக்கப்படவில்லை. இங்கே அறிவு வளராததால் கிருஸ்ணன் கடவுள் ஆக்கப்பட்டான். இன்றைக்கு கடவுளை "மாமா" போன்று பார்க்க விரும்புபவர்கள் கிருஸ்ணனை வணங்கலாம் என்றும் போதிக்கப்படுகிறது.

வாதிக்க வந்துவிட்டு கைதட்டியதால் மகிழ்ச்சி கவலை எண்டு உங்கட உணர்ச்சிகளை எடுத்து விட்டு நேரத்தை மினக்கெடாதையுங்கோ...! விரும்பினா உங்கட கருத்தை ஆதாரத்தோட தாருங்கள்....!

கிறிஸ்ணன் பலரை மணத்ததால் கடவுளாகவில்லை... மக்களை இம்சித்த கம்சனை கொண்றதால் அவன் அந்த மக்களின் நாயகனானான் மக்களை நல்வளிப்படுத்தியதால் அவன் காலப்போக்கில் கடவுள்... ஏன் நீங்கள் எல்லாமே உங்களிடம் இல்லாத அறிவை பெரியார் போதித்தார், அவர் சொன்னதால்தான் நாங்கள் எல்லாம் அறிவுள்ளவர்கள் ஆனோம் என்பது போலத்தான் அதுவும்.... இண்று பெரியாரை போற்றும் உங்களில் சிலர் அவருக்கு சிலைவைத்து இருப்பது போல, நாளை பூத்தூவி வளி பாடும் நடத்துவீர்கள்... யார் கண்டார்...? அது போலத்தான் வைணவர்களும்... அவர்களின் செயலுக்கு நான் விளக்கம் கூற முடியாது....

உங்களுக்கு வைணவத்தில் சந்்தேகம், எரிச்சல் எண்டால் யாராவது ஆள்வார்கள் , பட்டர்கள், நம்பிகளை தேடிப்பிடியுங்கள்....

  • பிள்ளையார் சிலையை போட்டுடைத்த தந்தைபெரியாரின் சிலையில் சிறு கீறல் விழுந்தால் கூட தமிழ்நாடு கொந்தளிக்கிறது.
    அட, இத்தைனயும் ஏன்? வட இந்தியாவில் கூட தந்தை பெரியாரின் படத்தை தமது கட்சி மாநாடுகளில் வைக்கிறார்கள்.

    எதுவுமே செய்யாத தந்தை பெரியாருக்கா இவ்வளவு மரியாதை?

http://www.yarl.com/forum3/index.php?showt...36955&st=60

நீங்கள் சொன்னதுதான் சபேசன் ஞாபகபடுத்தி பாருங்கள்... பெரியாரின் சிலைக்கு சிறு கீறு விளுந்தாலும் தமிழ் நாடு கொந்தளிக்குமாம்... கொந்தளிக்கிறது எண்டால் என்ன வீட்டிலை இருந்து தேனீர் பருகுவதா...??

நாடு கொந்தளிப்பு என்பது பேரூந்துகளை எரிப்பது, இந்துக்கள் எண்டு அடையாளப்படுத்தியவர்களை அடிப்பதும், கடைகளை உடைப்பதும் தானே...?? பின்னர் காவல்த்துறை வந்து உங்களை அடக்க வேணும்...

இதைத்தான் பெரியாரின் மீது பக்தி ( அன்பு அல்ல) என்பது... அதுக்காக சிலையில் கீறலுக்கு நீங்கள் கேட்க்கும் விலை அது... இந்த கீழ்தரத்தை நீங்கள் பகுத்தறிவு என்கிறீர்கள்....

சமணர்கள் கொலை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்கிறதா..?? மதங்களுக்கிடையில் உணர்ச்சி வேகத்தில் செய்தால் மதவெறி ஆனால் நீங்கள் கொந்தளித்தால் பகுத்தறிவு.... அப்படியா...??

இருவருக்கும் வித்தியாசம் தெரியவில்லை...!

Edited by தயா

கிராக்ளிஸ் கூட கதைகளில் மக்களுக்கு நிறைய செய்துள்ளார். கிராக்ளிஸ் போன்று கிருஸ்ணனும் ஒரு கற்பனைப் பாத்திரம்.

கற்பனையான புராண பாத்திரங்களான கிராக்ளிஸ், கிருஸ்ணன் போன்றவர்கைளையும் உண்மையான வராலற்றுப் பாத்திரமான தந்தை பெரியார் போன்றவர்களையும் வழிபடுவது முட்டாள்தனமே.

கடந்த பெரியார் நினைவு தினத்தில் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு தீபாராதனை காட்டி வழிபட்டார் என்று கேள்விப்பட்டேன். இதன் மூலம் பெரியார் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாகத்தான் நான் உணர்ந்தேன். இப்படி செய்வதை விட விஜயகாந்த் தந்தை பெரியார் படத்திற்கு செருப்பால் அடித்திருக்கலாம்.

தயா சொல்வது போல் சில முட்டாள்கள் பெரியாரை சரியாக உணராது அவரை வழிபடும் அளவிற்கு போகிறார்கள் என்பது உண்மைதான். இவர்களுக்கும் கற்பனையாக புராண பாத்திரங்களுக்கு பூசை செய்பவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசம் இல்லை. பெரியார் பாசையில் இவர்கள் எல்லோரும் காட்டுமிரண்டிகள்தான்.

இப்பொழுது மீண்டும் தலைப்பிற்கு வருவோம.

எத்தனையோ ஆலயங்களில் கடவுள்களின் ஆபாசக் கோலம் சிலையாக வடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு புராணக் கதை. (ஏற்கனவே சொன்னேனா என்று தெரியவில்லை) ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் யுத்தம் நடந்தது. அசுரர்கள் வெட்ட வெட்ட வந்து கொண்டே இருந்தார்கள். தேவர்களுக்கு ஆச்சரியம். கடைசியில் அசுரர்கள் எங்கே இருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தார்கள். ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசுரர்கள் தொடர்ந்தும் வந்தபடி இருந்தார்கள். தேவர்கள் ஓடிப் போய் கணபதியிடம் முறையிட்டார்கள். கணபதி தன்னுடைய தும்பிக்கையை அந்தப் பெண்ணின் உறுப்பில் விட்டு அசுரர்கள் அனைவரையும் உறுஞ்சி எடுத்தார். தேவர்கள் வெற்றி பெற்றார்கள்.

இந்தப் புராணக் கதையை குறிப்பதற்காக தமிழ்நாட்டின் சில கோயில்களில் பிள்ளையார் தன்னுடைய துதிக்கையை பெண்ணின் உறுப்பில் விடுவது போன்ற சிலைகள் இருக்கின்றன.

மறுபுறம் ஒரு திரைப்படத்தில் இரண்டு மனிதர்கள் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க ராமன், அனுமன் வேடம் தரித்து ஓடுவது போன்ற ஒரு காட்சியை இந்து அமைப்புக்கள் எதிர்க்கின்றன. (இதே போன்று ரஜனிகாந்த் "உழைப்பாளி" படத்தில் சிவன் வேடத்தில் ஓடினார்)

அருவருப்பான சிலைகளை கோயில்களின் வைத்துள்ளவர்கள் இந்த சாதரண காட்சியை எதிர்ப்பதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள் என்பது என்னுடைய கருத்து.

காட்டு மிராண்டி தனம் எண்டது உங்களுக்குள்ளேய்யே இருக்கிறது சபேசன்... உங்களுக்குள் இருக்கும் சிலருக்குள் மட்டும் அல்ல.....!!

78 வயதிலை 25 வயது பெண்ணை தனது புகழைக் காட்டி மணக்கும் பகுத்தறிவாதிகளோடு ஒப்பிட்டு ம் போது அதே மாதிரி வக்கிரபுத்தி கொண்ட இன்னும் ஒருவர் பொண்ணில் ஊறுப்பு பற்றி சொன்ன கதை பெரிதாக தெரியவில்லை.... இருவரும் ஒண்றுதான்...!

பகுத்தறிவை போதிக்கும் ஊங்களுக்கே 25 வயதை கட்டி அதன் வாழ்க்கையை சீரளித்த 78 க்கு வக்காலத்து வாங்கும் போது, இது எவ்வளவே பறவாய் இல்லை. வெறும் புனை கதைதான்.....!

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு மிராண்டி தனம் எண்டது உங்களுக்குள்ளேய்யே இருக்கிறது சபேசன்... உங்களுக்குள் இருக்கும் சிலருக்குள் மட்டும் அல்ல.....!!

78 வயதிலை 25 வயது பெண்ணை தனது புகழைக் காட்டி மணக்கும் பகுத்தறிவாதிகளோடு ஒப்பிட்டு ம் போது அதே மாதிரி வக்கிரபுத்தி கொண்ட இன்னும் ஒருவர் பொண்ணில் ஊறுப்பு பற்றி சொன்ன கதை பெரிதாக தெரியவில்லை.... இருவரும் ஒண்றுதான்...!

பகுத்தறிவை போதிக்கும் ஊங்களுக்கே 25 வயதை கட்டி அதன் வாழ்க்கையை சீரளித்த 78 க்கு வக்காலத்து வாங்கும் போது, இது எவ்வளவே பறவாய் இல்லை. வெறும் புனை கதைதான்.....!

அப்படிப் போடுங்க அரிவாளை. சபேசன்.. பாவம். பலவீனப்பட்டு நிற்கிறார். :(

மணியம்மையார் தந்தை பெரியாரை திருமணம் செய்யும் பொழுது அவருடைய வயது 32. இங்கே அவருடைய திருமணத்தை விமர்சிக்கும் பலரை விட வயதிலும், அறிவிலும் மூத்தவர். திருமணத்திற்கு முன்பே தன்னை மக்கள் பணியில் முழுதாக ஈடுபடுத்தியவர். பெண்களின் உரிமை பற்றி அவர் நன்கு அறிந்தவர். ஒரு பெரும் இயக்கத்தை பின்பு வழி நடத்திய திறன் மிக்க பெண்மணி அவர்.

அவர் தன்னுடைய கணவராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது. அவர் 69 வயதான தந்தை பெரியாரை தன்னுடைய கணவராக தேர்ந்தெடுத்தார். அது அவருடைய சொந்த முடிவு.

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, அந்த வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவு பற்றியோ விமர்சனம் செய்வது ஒரு மலிவான செயற்பாடு. கையாலாகத்தனம்.

மக்கள் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விமர்சனங்களை கொள்கைகள் அற்றவர்கள் செய்வது உலகம் முழுவதும் நடக்கின்ற ஒன்றுதான். ஈழத்திலும் அதைக் கண்டிருக்கிறோம்.

தம்மை "சிவப்பு" என்று அறிமுகம் செய்பவர்கள் இப்படி மலிவான விமர்சனத்தில் இறங்குவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. சில வேளை சாயம் போன சிவப்பாக (காவி) இருக்கக் கூடும்.

சபேசா...

பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் மற்றவர்களுக்கு முன் உதரணமாக செயற்படுபவர்கள்... அப்படி ஒருவர் மற்றவர்களுக்கு, ஒழுக்கம் அவரின் பெயரால் போதிக்கும் முன்னர் அவர் ஒழுக்கமானவரா என்பதை எல்லாரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்....!!

மனிதனுக்கு சிலை வைப்பது பகுத்தறிவு, அந்த சிலைக்கு கீறல் விழுந்தால் தமிழ்நாடு கொந்தளிக்குமாம்(அடி உதை விழும்) அந்த சிலைக்கு மாலை போட்டு அதன் பிறந்த நாள். இறந்த நாள் கொண்டாடுவதும் பகுத்தறிவு... அந்த சிலைக்கு கற்பூரம் காட்டும் கோஸ்ரி வேற இருக்கு... இப்படி மனிதனை வளிபடுவார்களாம்... அந்த மனிதர் தள்ளாத வயதில் உதவிக்கு ஆண் ஒருவரை வைக்க மாட்டார். ஆனால் 25 வயது பெண்ணை உதவிக்கும் வைக்க மாட்டாராம் கல்யாணம் கட்டி கொள்வாராம்..! அவர் மற்றவர்களுக்கு போதனை வேற சொல்வாராம்... இதை பாலியல் வக்கிரம் எண்டு சொன்னால் ஏற்க்க மாட்டினமாம்...

இதைத்தானே மதங்களும் செய்கிறது அல்லது கதைகளாக சொல்கிறது எண்டு சொன்னால் நாங்கள் பிழையானவர்கள் அந்த மனிதன் செய்தவை சரியாவன் எண்ட சப்பு கட்டு.... அந்த பெண் புகழ் சேர்த்த மனிதனை விரும்பியது தவறு கிடையாது.. புகழை வைத்து திருமணம் செய்வது கேவலம்...

காமம் என்பது உணர்வு என்பது பிழையானது அல்ல... ஆனால் அதை பிழை எண்டு சோல்லி கொண்டே அதை பிழையாக செய்தவரை முன்னிறுத்துவதும், அதை செய்பவர்கள் பகுத்தறிவு வாதிகள் எண்று சொல்லி கொள்வதும் தவறுதான்...!!!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இங்கையுமா?? :D:D:o:o:o

  • கருத்துக்கள உறவுகள்

இங்கையுமா?? :D:D:o:o:o

எங்கும் எதிலும் அதே.....தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் கனனியிலும் இருப்பான் :D:D:D:D

பெரியார் மணியம்மையைக் காமத்திற்காகவோ அல்லது காதலுக்காகவோ திருமணம் செய்யவில்லை. மணியம்மை ஓர் புரட்சிகரமான பெண்மணி. பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்புக் கொண்டு, அவரது சீடராக இருந்தார். மணியம்மையின் திறமைகளை அறிந்த பெரியார் அவரைத் தனது அமைப்பில் சேர்த்துக் கொண்டார். பெரியார் தனது காலத்திற்குப் பின்னர், தனது கொள்கைகளைப் பரப்பவும், அவரது அமைப்பை வழிநடத்திச் செல்வதற்கும் மணியம்மையே சிறந்தவர் என நினைத்தார். பெரியார் தனது சொத்துக்கள் தனது கட்சிக்கே பயன்படவேண்டுமென விரும்பினார். எதிர்காலத்தில் மணியம்மைக்கு, பெரியாரின் உறவினர்களாலும் மற்றவர்களாலும் சொத்து விடயத்தில் எவ்விதப் பிரச்சனைகளும் வரக்கூடாது என்ற காரணத்தினாலேயே மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இது பெரியாரால் மட்டும் எடுக்கப்பட்ட முடிவல்ல. அவரது அமைப்பின் மூத்த தலைவர்களாலும், சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு.

பெரியாரின் அமைப்பில் சேருவதற்கு முன்பே மணியம்மை பல புரட்சிகளைச் செய்திருக்கிறார். அவர்களது குடும்பத்தில், சிறிய வயதிலேயே மணம் முடித்துக் கொடுப்பது பழக்கம். அதாவது, ஏழெட்டு வயதிற்குள்ளாகவே. ஆனால், மணியம்மை அந்த வயதிலேயே, துணிந்து தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை எதிர்த்துப் போராடி வெற்றியும் கண்டார். அது மட்டுமின்றி, அவருடைய காலத்தில் பெண்பிள்ளைகளின் படிப்பையும் நிறுத்தி விடுவார்கள். இவர், வீட்டிலிருந்தபடியே தனது படிப்பார்வத்தையும், திறமைகளையும் வளர்த்துக் கொண்டார். மேடைகளில், மிகவும் துணிச்சலாகப் பேசக்கூடியவர். அரசியல் ரீதியாகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர் தனித்து நின்றே பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். பெரியாரின் அமைப்பிற்கு வருவதற்கு முன்னரே அவர் பல சாதனைகளைச் செய்து விட்டார். இவரின் திறமைகளை அறிந்த பெரியார், இவரைத் தனது அமைப்பில் சேர்த்துக் கொண்டார். அமைப்பில் சேர்ந்து பல வருடங்களின் பின்தான், அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

கற்றது கை மண்ணளவு. கல்லாதது கடலளவு என்று சொல்வார்கள். எத்தனையோ அறிவாளிகள், விஞ்ஞானிகள், ஏன் சாமியார்கள்கூடத் தவறு செய்திருக்கலாம். ஆனால், பெரியாரைப் போன்ற ஒரு பகுத்தறிவாளர் தவறு செய்திருப்பாரா என நாம் ஒருமுறை சிந்திப்பது நல்லது. அவரது கொள்கைகளில் எமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். அதற்காக, இவ்வாறான ஒரு பகுத்தறிவாளரை கீழ்த்தரமாகப் பேசுவது நாகரீகமல்ல. அதோடு, அவரது காலங்களில் இருந்த பல பகுத்தறிவாளர்கள், ஒழுக்கமுள்ளவர்களாகத்தான் இருந்தார்கள். அறிஞர் அண்ணா, காமராஜர், பாரதிதாசனார் எனப் பலர் தங்களது கொள்கைகளில் பற்றுள்ளவர்களாகத்தான் இருந்தார்கள். அவர்களது அடுத்த சந்ததியினர்தான், சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள். தங்களது சுயலாபத்திற்காக, தாங்கள்தான் இவர்களின் வாரிசு எனப் பிதற்றுகிறார்கள். இவர்களை வைத்து அவர்களை எடை போடுவது சரியல்ல.

குமுதத்தில் பாமரன் பக்கத்தில் பெரியாரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:

வடலூரில் இருக்கும் வள்ளலாரின் வாழ்விடத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள் தந்தை பெரியாரை. நடக்கவே சிரமப்பட்டு, தட்டுத் தடுமாறி ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடி வருகிறார் பெரியார். அம்மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கியபடி ஊரன் அடிகளும் மற்றவர்களும் உடன் வருகிறார்கள். ஒரு பிரதான அறையைக் கண்டவுடன் உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று விடுகிறார் பெரியார். அழைத்துப் போனவர்கள் ஏன் ஐயா நின்று விட்டீர்கள்? உள்ளே வாருங்கள் என்று கூற.... அந்த அறையின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த அறிவிப்பினைக் காட்டுகிறார் பெரியார். அதில், "கொலை, புலை தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம்" என்றிருக்கிறது.

பெரியாரோ சுத்த அசைவம்.

"பரவாயில்லை ஐயா. உங்கள் மீது எமக்கு நிறைய மரியாதை உண்டு. நீங்கள் வாருங்கள்" என்கிறார்கள் அழைத்தவர்கள்.

"உண்மைதான். அதைப் போலவே நீங்கள் வைத்திருக்கும் அடிப்படைக் கொள்கைகளையும் நான் மதித்தால் அல்லவா நீங்கள் எனது கருத்துக்கள் மீதும் மரியாதை வைத்திருப்பீர்கள்? மற்றவர்கள் உங்களிடம் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ அப்படி நீங்களும் மற்றவர்களுடன் நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம். வாங்கய்யா. மற்றப் பகுதிகளைப் பார்ப்போம்" என்று திரும்பி நடக்கிறார் தந்தை பெரியார். இதுதான் பெரியார்.

வாதிடுவது தவறில்லை. ஆனால் அதற்கு முன்னர், வாதிடுவதைப் பற்றிய விபரங்களை அறிந்து விட்டு வாதாடுவதே வாதாடுபவனுக்கு அழகு.

வாதிடுவது தவறில்லை. ஆனால் அதற்கு முன்னர், வாதிடுவதைப் பற்றிய விபரங்களை அறிந்து விட்டு வாதாடுவதே வாதாடுபவனுக்கு அழகு.

இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சரியான காரணம்தான் இது... ஏன் பெரியாருக்கு ஆண்கள் துணையாக இருந்தா ஆகாதோ.? எண்றுகேள்வி எழுகிறது... துணை வேண்டும் எண்றால் அவருடன் பலர் காலம் பூராக்கவும் துணையாக இருக்க காத்து இருந்தனர்... அதை எல்லாம் தவிர்த்து, அவர்களை எதிர்த்து ஒரு இளம்பெண்ணுடன் திருமணம்... அதனால் அவருடன் இருந்தவர்கள் அவமதித்தார்... அவர்கள் அவருடன் இருந்து வெளியேறியதுக்கும் காரணமானார்... பெரியாரின் முதுவயது வக்கிரத்துக்கு நல்ல காரணம்...

இல்லை திருமணம் செய்தால்தான் அவரால் மற்றவரைநம்ப முடியும் எனும் நிலையா...?? மணியம்மை மட்டும்தான் பெரியாரின் நம்பிக்கை பாத்திரமா.....?? அப்போ அவருடன் இருந்தவர்கள் என்ன சோடைகள் என்கிறீர்களோ...???

பெரியார் திருமணம் செய்தார் இல்லை எக்கேடு கெட்டாலும் என்னக்கு ஒண்றும் இல்லை... ஆனால் இந்துத்துவம் பெண்களை போகப்பொருளாக்குகிறது ஆனால்பெரியாரின் திராவிடம் மட்டும் போற்றி பாதுகாக்கிறது எண்டது போல வெட்டி வீறாப்புக்கள்தான் ஏன் எண்டு கேட்கிறேன்....

இந்து கேவலமானதாக இருக்கலாம் ஆனால் அதைவிட கேவலமானது பெரியாரும் அவர் மீதான துதிபாடலும்....!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சொத்துப் பேணவென்பதற்காகத் தான் மணியம்மையைத் திருமணம் செய்தார் என்பது உச்சக்கட்ட வேடிக்கை. அப்படித் தேவையென்றால் சொத்து முழுவதையும் குறித்தவர் பெயருக்கு எழுதி வைக்க வேண்டியது தானே. குறித்தவர் தன்னுடைய சொத்தை எப்படி மக்களுக்காகச் செலவளித்தார் என்பதையும் அறிவித்தால் நன்றாக இருக்கும்.

மேலும் நாகம்மை மரணமடைந்தபோது, அவரின் மரணம் குறித்துச் சந்தோசப்படுவதாகத் தெரிவித்தது எல்லாம் என்ன பின்ணனி என்று தெரியாதாக்கும்.

காமத்துக்கு கலியாணம் செய்து விட்டு. அது காமமில்லை என்று பூசி மொழுகுவதற்கு மட்டும் குறைச்சலில்லை. மூத்த தலைவர்கள் யாரும் சேர்ந்து முடிவெடுக்கவில்லை. அண்ணாத்துரை பிரிந்து போனதற்குக் காரணங்களில் இந்தத் திருமணமும் ஒன்று. மூத்த தலைவர்கள் எவரிலும் நம்பிக்கையில்லாமலா, மணியம்மைக்குச் சொத்தை மாற்றினார்?

இவ்வாறான ஒரு பகுத்தறிவாளரை கீழ்த்தரமாகப் பேசுவது நாகரீகமல்ல. அதோடு, அவரது காலங்களில் இருந்த பல பகுத்தறிவாளர்கள், ஒழுக்கமுள்ளவர்களாகத்தான் இருந்தார்கள்

தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவனோ, அல்லது அல்லது தன்னை அடிக்கடி காட்டிக் கொள்பவனோ பகுத்தறிவாளன் ஆகமாட்டான். இவருக்குப் பகுத்தறிவு பற்றிக் கதைக்க என்ன யோக்கியம் இருக்கின்றது??

ஒரு உதாரணம் சொல்கின்றேன். மேலைத்தேசயர் இந்தியவைப் பற்றி ஆராய்ந்த எழுதிய கட்டுரைகளைப் பின்பற்றிச் செயற்படும் நபரே தவிர, சொந்தமாக யோசிக்கத் தெரியாத மனிதர் தான் ராமசாமி. வெள்ளையருக்கு இங்கு நடந்த சாதிக் கொடுமைகள் பற்றி எதுவுமே தெரியாது. எல்லா மேட்டுக்குடியினரும், முக்கியமாகப் பிராமணர்களை விட நாயக்கர், பண்ணையர், நாயுடுக்கள் போன்றவர்களே தாழ்த்தப்பட்டதாகச் சொல்லிக் குறித்த மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் வெள்ளையர் வந்தபோது இந்தியாவில் இது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. பார்த்தார்கள். உயர்சாதியில் முக்கிய இடத்தில் பிராமணர்கள் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் தான் இச்சாதிக்குக் காரணம் என அவர்கள் கட்டுரை எழுதினார்கள். அதைப் பின்பற்றி இந்தப் பகுத்தறிபவனும், பகுத்தறியாமல் பின்பற்றிக் கொண்டிந்தது. அவரது கும்பலும் அடிபிசகாமல் பின்பற்றுகின்றது.

அது போலத் தான் தயா முன்பு சொன்னது போல பாகிஸ்தான் கூட அப்போது கூட்டணி வைத்து, ஒரு மண்ணுமாகாமல் தமிழனை மற்றய மாநிலத்தவர் சந்தேகக் கண்ணோடு, வஞ்சினத்தோடு பார்க்க வைத்த பெருமையும் இந்தப் பகுத்தறிவாளனையே சாரும்.

இந்தக் கேவலம் கெட்டதற்குப் பெயர் பகுத்தறிவு என்றால் நாங்கள் முட்டாள்களாகவே இருக்க விரும்புகின்றோம்.

ம்ம்..நன்னா இருக்கே...(அட போஸ்டரை சொன்னான் பாருங்கோ)..சபேசன் மாமாவிற்கு நன்ன டவுட் ஒன்னு வந்திருக்கு.. :o (எப்படி மாமா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் டவுட் வருது)...ம்ம்ம் மாமா கோயிலில படைக்கிற பிரசாதத்தை எல்லாம் கடவுள் சாப்பிடுறார் என்றா கட்டாயம் அவருக்கு வர தான் வேண்டும்...அது மட்டுமா பால் வேற குடித்தவர் அல்லோ அப்படி பார்க்கும் போது எனக்கும் உந்த சந்தேகம் வலுபெறுகிறது பாருங்கோ.. :D

ம்ம்..நான் நினைக்கிறன் கடவுள் நம்பர் 1 இருக்கிறது தான் நமக்கு மழையா வருது பாருங்கோ...(மற்றது வந்து பனிகட்டியா விழுது அது வந்து கடவுள் நம்பர் 2 இருக்கிறது என்று நினைக்கிறன்)..இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறியள் சொல்லவே இல்ல பாருங்கோ.. :o

ம்ம்..கடவுளிற்கு இது எல்லாம் சாதாரணமா நடக்கும் தானே இதில என்ன டவுட் மாமோய்..(ஆனா எனக்கு என்ன டவுட் என்றா கடவுள் வந்து டொயிலட் டிசு பாவிப்பாரா இல்ல வந்து தண்ணி பாவிப்பாரா என்று தான்)..என்ன பார்க்கிறியள் எல்லாரும் என்ட டவுட்டையும் கேட்டனான் பாருங்கோ.. :D

ம்ம்...சோ இப்படியான போஸ்டர் அடித்தது பிழை இல்ல ஆனா..(பப்ளிக்கா அடித்தது பிழை தான் பாருங்கோ :o )..பட் எனக்கு என்னொரு விதத்தில டவுட் இருக்கு பெரியவை சொல்லி இருக்கீனம் மும்மலத்தையும் அடக்கினா தான் நீங்கள் தெய்வமாகலாம் என்று..அப்ப அந்த மலங்கள் எல்லாம் இவை தானோ..(நிசமா என்னால முடியல்ல :D )..

எனிவே யாருக்கு தெரியும் இராமனும்,அனுமானும் எங்களோட ஒருவராக தான் நிற்கீனமோ..(எங்களோட சேர்ந்து தான் எல்லாம் செய்யீனமோ :D )...இது எல்லாம் டவுட் தான் பாருங்கோ எனிவே சபேசன் மாமா கேட்ட டவுட் அந்த மாதிரி நேக்கு ரொம்ப பிடித்து போச்சு மாமோய்.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா யாராக இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கலாம் ஆனா மூ......" :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.