Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளாலி- முகமாலை முன்னரணில் சிறிலங்காவின் பாரிய முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 150 பேர் பலி- 375 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபோர் முனையில் மோதல்.

23.04.2008 / நிருபர் எல்லாளன்

வடபோர் முனை - சிறிலங்காப் படையினர் பல்வேறு முனைகளிலிருந்து பல்குழல் எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் நிலைகளை முயற்சியொன்றை மேற்கொண்டனர். இந்த முன்னேற்ற முயற்சி இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முன்னேற்றத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் தொடுத்துவருகின்றனர்.

இதேவேளை சிறிலங்காப் படையினர் வடபோர்முனை ஊடாக முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டுள்ளதாக படைத்தரப்பு தெரித்துள்ளது.

இம் முன்நகர்வுத் தாக்குதலில் சிறிலங்காப் படையினரின் கவசப்பிரிவு கொமாண்டோக்கள், 53 ஆம் டிவிசன் கொமாண்டோக்கள் மற்றும் 55 ஆம் டிவிசன் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

படையினருக்கு ஆதரவாக பின்தளங்களிலிருந்து செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்டிலெறி எறிகணை மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவுகள் படையினரால் வழங்கப்பட்டு வருகின்றன.

படையினரின் இப்பாரிய நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

மேலதிக விபரங்கள் விரைவில்

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடபோர்முனையில் படையினர் பலமுனையில் முன்னேற முயற்சி - மிகக்கடுமையான சமர் வெடிப்பு

[ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 23, 2008 - 06:57 AM - GMT ]

வடபோர் முனையில் இன்று அதிகாலை முதல் சிறிலங்கா படைகள் பலமுனைகளிலிருந்து பாரியளவில் மேற்கொண்டுள்ள முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் மிகக்கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்குழல் வெடிகணைகள் ஆட்டிலறிகள் மற்றும் மோட்டார்களின் செறிவான சூட்டாதரவுடன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கிளாலி முதல் கண்டல்காடுவரையான முன்னரங்க நிலைகளிலிருந்து டாங்கிகள் கவசஊர்திகளின் உதவியுடன் சிறிலங்கா படைகள் பாரிய நகர்வு முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

படையினரின் இந்த பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் தற்காப்புப் போரணிகள் மிகக்கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கேணல் கிட்டு பீரங்கிப் படையணி மற்றும் லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி என்பற்றின் எறிகணை சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் தற்காப்பு தாக்குதல் அணிகள் சிறிலங்கா படையினருக்கு எதிராக மிக்கடுமையான பதில்தாக்குதல்களை நடத்தி படையினர் தரப்பில் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பாரிய வல்வளைப்பு நடவடிக்கை தொடர்பில் சிறிலங்கா அரச தரப்பினால் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் யாழில் உள்ள படைத்தரப்பு படையினர் நகர்வு முயற்சி ஒன்றைத் தொடங்கியுள்ளமையை உறுதிப்படுத்தியதாக தமிழ்நெட் தெரிவித்துள்ளது.

http://www.eelatamil.net/index.php?option=...9&Itemid=67

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரளிகளின்கவனத்தை திசைதிருப்புவதற்காக இந்தபடைநடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்கல்? ஆனாள் இதைத்தான் போரளிகளும் தங்களிற்கு சதகமான இடமாக மாற்றியமைபார்கள்.

வழமையான நொட்டல் நடவடிக்கையல்ல இது. பெருமெடுப்பிலான நடவடிக்கை.

முகமாலையில் உள்ள விடுதலைப் புலிகளின் முதலாவது பாதுகாப்பு நிலைகளை தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் மோதல்கள் நடைபெறுவதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

இது பெருமெடுப்பிலான நடவடிக்கை

இராணுவத் தளபதி யாழ். வந்தார்

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார். இங்குள்ள படையிருக்கு அவர் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். :huh:

பண்டிகைக் காலத்திலும் தங்களது வீடுகளுக்குச் செல்லாது படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு நேரடியாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவே இராணுவத் தளபதி யாழ்ப்பாணம் வந்தார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதியை பலாலி விமான நிலையத்தில் பலாலி படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி வரவேற்றார்.

பின்னர் அங்கு நடைபெற்ற மாநாட்டில் வடபகுதியின் களமுனைத் தளபதிகளைச் சந்தித்த இராணுவத் தளபதி, பாதுகாப்பு நிலைமைகள் குறித்த பிந்திய நிலைப்பாடுகளைக் கேட்டறிந்தார்.

--Uthayan--

வடகளப் போர் முனைபற்றிய இராணுவத்தரப்பின் செய்தி தற்போது கொழும்பு ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி 52 விடுதலைப் புலிகளும் 15 ஆக்கிரமிப்பு இராணுவமும் இறந்துள்ளதாகவும் 74 ஆக்கிரமிப்புப் படையினர் காயமுற்றதாகவும் அச் செய்தி தெரிவிக்கின்றனது.

ஜானா

அவைக்கு வடிவாக தெரியுமாமோ 15 இராணுவத்துக்கு 52 புலிகள் பலி என்று?

கணக்கு பிழையாக இருக்கு......

கிளாலி- முகமாலை முன்னரணில் சிறிலங்காவின் பாரிய முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 15 பேர் பலி- 74 பேர் காயம்

ஜபுதன்கிழமைஇ 23 ஏப்ரல் 2008இ 10:11 மு.ப ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

யாழ். வடபோர் முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை 7 கிலோமீற்றர் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு 10:30 மணிநேர தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புச் சமரில் சிறிலங்காப் படையினர் 15 பேர் கொல்லப்பட்டனர். 74 பேர் காயமடைந்துள்ளனர். களத்தில் பெருமளவில் படையினரின் உடலங்களும்இ போர்க்கலங்களும் சிதறிக் கிடக்கின்றன.

வடபோர்முனையில் மேற்கே கிளாலி முதல் முகமாலை ஊடாக கிழக்கே கண்டல் வரையான 7 கிலோமீற்றர் நீளமான முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு பாரிய முன்நகர்வை தொடங்கினர்.

பல்குழல் வெடிகணைகள்- ஆட்டிலெறிப் பீரங்கிகள்- மோட்டார்கள் ஆகியவற்றின் மிகச் செறிவான சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வை மேற்கொண்டனர்.

மேலும் : http://puthinam.com

LTTE thwarts offensive in Northern Front

[TamilNet, Wednesday, 23 April 2008, 07:46 GMT]

Sri Lanka Army (SLA) units that attempted to break the Forward Defence Line of the Liberation Tigers of Tamileelam (LTTE) in Ki'laali, Mukamaalai and on several other positions were forced to retreat, leaving behind dead bodies of their troopers, according to LTTE's Northern Forces Operations Command. Heavy fighting lasted till 12:30 p.m. The SLA has suffered heavy casualties, the Tigers said.

Special Commando units of the Tigers were also engaged to confront the SLA units that attempted to advance using Main Battle Tanks amid heavy Multi Barrel Rocket Launcher (MBRL), artillery and mortar fire, the Tigers said.

Casualty details would be released after the ongoing clearing mission is completed, the Tigers said.

tamilnet.com

Edited by Janarthanan

யாழ். வடபோர் முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை 7 கிலோமீற்றர் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு 10:30 மணிநேர தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புச் சமரில் சிறிலங்காப் படையினர் 15 பேர் கொல்லப்பட்டனர். 74 பேர் காயமடைந்துள்ளனர். களத்தில் பெருமளவில் படையினரின் உடலங்களும், போர்க்கலங்களும் சிதறிக் கிடக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ தெரியும் புலிகளின் தந்திரம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலியாகினோரின் என்னிக்கை மாறி உள்ளது. 38 பேர் பலி- 84 பேர் காயம்.

புதினத்திலும் சங்கதியிலும் படங்கள் இணைக்கப் பட்டுள்ளன.

Edited by suriyan

படையினரின் பாரிய நகர்வுமுயற்சி முறியடிப்பு - 100ற்கும் அதிக படையினர் பலி - பல நூறுபேர் படுகாயம்

[ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 23, 2008 - 06:57 AM - GMT ]

வடபோர் முனையில் இன்று அதிகாலை சிறிலங்கா படைகள் பலமுனைகளிலிருந்து மேற்கொண்ட பாரிய படைநகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது நூற்றுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பல்குழல் வெடிகணைகள் ஆட்டிலறிகள் மற்றும் மோட்டார்களின் செறிவான சூட்டாதரவுடன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கிளாலி முதல் கண்டல்காடுவரையான முன்னரங்க நிலைகளிலிருந்து டாங்கிகள் கவசஊர்திகளின் உதவியுடன் சிறிலங்கா படைகள் பாரிய நகர்வு முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

படையினரின் இந்த பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் தற்காப்புப் போரணிகள் மிகக்கடுமையான பதில் தாக்குதல்களைத் தொடங்கினர். கேணல் கிட்டு பீரங்கிப் படையணி மற்றும் லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி என்பற்றின் எறிகணை சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் தற்காப்பு தாக்குதல் அணிகள் சிறிலங்கா படையினருக்கு எதிராக மிக்கடுமையான பதில்தாக்குதல்களை நடத்தி படையினர் தரப்பில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தின.

அதிகாலை 2.30 மணிமுதல் பகல் 1.00 மணிவரை தொடர்ந்த கடுமையான சமரைத்தொடர்ந்து சிறிலங்கா படைகள் பாரிய அழிவுகளுடன் தமது பழைய நிலைகளிற்குத் தப்பியோடினர். படையினர் முன்னகர்ந்த போது தமது முதலாவது பாதுகாப்பு முன்னரங்க நிலைகளைத் தாண்டும்வரை அனுமதித்த விடுதலைப் புலிகள் பின்னர் உள்நுழைந்த படையினர் மீது மிகக்கடுமையான தாக்குதல்களைத் நடாத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தி படையினரை அவர்களின் பழைய நிலைகளிற்கு விரட்டியடித்தனர்.

இந்த உக்கிரசமரின்போது படைத்தரப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் பல நூறுபேர் காயமடைந்துள்ளதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினரின் சடலங்களும் ஆயுதங்களும் சமர் நடைபெற்ற பகுதிகளில் பரவலாகச் சிதறிக் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதுவரை படையினரின் பல உடல்களை விடுதலைப் புலிகள் கைபற்றியுள்ளனர். தமது தேடுதல் நடவடிக்கைகள் நிறைவு பெற்ற பின்னர் இப்பாரிய படை நடவடிக்கையின் போது ஏற்பட்ட இழப்பு விபரங்களை அறிவிக்கவுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இத்தாக்குதல்களின் போது தமது தரப்பில் இதுவரை 38 படையினர் உயிரிழந்துள்ளதாகவும் 84பேர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelatamil.net/index.php?option=...9&Itemid=67

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பப்பா இனி முகமாலை சமர்கலம் இரணுவத்திற்கு வயிற்றைக்கலக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி, இந்த 38 அல்லது 100 எண்டு எந்தச் செய்தியில பார்த்தணீங்கள்? அரசாங்கம் இன்னும் தங்களில 15 பேர் பலி 74 காயம் எண்டும் புலிகளில 52 பலியெண்டும் அல்லவா சொல்லிக் கொண்டு திரியுது ? சும்மா அவங்கள் புளுகுகிறாங்கள் எண்டு நாங்களும் செய்யக்கூடாது கண்டியளோ! புலிகள் அறிக்கை விடமட்டும் பொறுமையாக இருக்கிறதே நல்லது.

ஒண்டு மட்டும் நிச்சயம், எங்கட தரப்பிலும் இழப்புகள் இருக்கும், அதிகமாகச் சந்தோஷப்படாதையுங்கோ !

ராணுவம் செத்தா இன்னும் 2 லட்ச்சம் பேர் இருக்கிறாங்கள். எங்களிட்ட வெறும் 10,000 கண்மணிகள் தான். ஒவ்வொரு வேங்கையின் உயிரும் விலை மதிப்பற்றது. அவர்களுக்கும் பெற்றோர் சகோதரங்கள் எண்டு இருக்கு கண்டியளோ ?

இந்த முறியடிப்பு தாக்குதலுக்கு தமது விசேட படையணி ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் முரசுக்கு தெரிவித்தனர்.

இந்த முறியடிப்பு தாக்குதலில் படையினருக்கு கடும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் அணிகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி சுவிஸ்முரசம்

யாழ். வடபோர் முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை 7 கிலோமீற்றர் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு 10:30 மணிநேர தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புச் சமரில் சிறிலங்காப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். 375 பேர் படுகாயமடைந்துள்ளனர். களத்தில் பெருமளவில் படையினரின் உடலங்களும், போர்க்கலங்களும் சிதறிக் கிடக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வட போர் முனையில் முகமாலை கிளாலி முன்னரங்கு நிலைகளை மையப்படுத்தி நடந்த சண்டையில் 150 வரையான சிறீலங்காப் படையினர் உயிரிழந்து உள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இராணுவ வட்டாரம் தெரிவித்ததாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்ட இராணுவ உடலங்களைக் கைப்பற்றியுள்ளனர். அதில் 14 பேரின் அடையாளங்களையும் புலிகள் தமிழ்நெட்டுக்கு வழங்கியுள்ளனர்.

இராணுவ இணையத்தளத்தின் கூற்றுப்படி.. இராணுவ தரப்பில் 38 பேர் இதுவரை உயிரிழந்து பலர் காயமடைந்திருப்பதாகச் செய்து வெளியிட்டுள்ளது..!

150 SLA killed, Tigers locate 30 SLA bodies in Northern Front

[TamilNet, Wednesday, 23 April 2008, 11:56 GMT]

Liberation Tigers of Tamil Eelam (LTTE) officials in Ki'linochchi said the Tigers have located more than 30 dead bodies of the SLA soldiers in the clearing mission so far in the Northern Front after a major operation by the SLA was thwarted by them. 19 dead bodies were brought to Ki'linochchi. Meanwhile, a Sri Lanka Army (SLA) source, which didn't wish to be named, verified that 104 dead bodies were initially recovered by the army and more than 400 were wounded. The source further said at least 150 soldiers were killed in action. In the meantime, a Colombo bound passenger said he had seen 12 bus loads of dead and wounded soldiers being rushed to the runway in Palaali military complex.

Most of the wounded were airlifted to Colombo general hospital.

According to the official figures released by the SLA, 38 soldiers were killed and 84 injured.

The SLA units were defeated at two of the three fronts, in Mukamaalai and Ki'laali, by 10:30 a.m. after stiff resistance. Heavy fighting raged till 12:40 p.m. in Ka'ndal.

The LTTE is yet to release casualty details.

LTTE officials in Ki'linochchi provided details of 14 identification tags/details belonging to dead SLA soldiers, handed over to them by Tiger commanders in Northern Front.

184849

PTE, Pushpakumara, ATVE

S1470985

B+ VE,

171189

V E

S1171175

B+ V E

S513506

B+ V

S171175

B+ V

S465138

Date of Birth: 1980.06.25, Mobile: 0776934041, IC 801776641 V

S184755

PTE, O+ VE

S515411

O+ VE

Vijayatunga M

S174217

O+ VE (Company A, Gemunu)

S462960

A+ VE (1st Gemnu)

S463398

O+ VE(1st Gemunu)

S164811

O- VE (Company A)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25403

:D 150 ஆமி பலி! ஆயிரக்கணக்கில் காயம்! முகமாலை முதல் கிளாலிவரை

சில இடங்களில் சண்டை இன்னமும் நடை பெறுகிறது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் பங்கர்களை அழித்து தாம் முன்னேறுவதாக அவர்கள் கதையளககிறார்கள். போதாக்குறைக்கு சில படங்களை இணைத்துள்ளார்கள்!

http://www.army.lk/morenews.php?id=12609 :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காப் படையினர் 100-க்கும் அதிகமானோர் பலி- 400-க்கும் அதிகமானோர் படுகாயம்- 16 போராளிகள் வீரச்சாவு: இளந்திரையன்

ஜபுதன்கிழமைஇ 23 ஏப்ரல் 2008இ 07:40 பி.ப ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ

யாழ். வடபோர் முனையான முகமாலைக் களமுனையில் இன்று சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர முறியடிப்புச் சமரில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ள போர்க்கலங்களை கைப்பற்றும் நடவடிக்கை களத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

19 படையினரின் உடலங்கள் இன்று புதன்கிழமை இரவு 7:00 மணிவரை கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொது விளையாட்டுத்திடலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினரின் உடலங்களை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அவற்றினைப் பார்வையிட திரள்கின்றனர்.

தமிழர் நிலங்களை சிங்களப் படைகள் வல்வளைப்புச் செய்யும் நோக்குடன் மேற்கொண்ட பாரிய நடவடிக்கை முறியடிக்கப்பட்ட வெற்றியில் மக்கள் திளைத்துள்ளனர். மக்கள் மகிழ்ச்சிப் பூரிப்பில் உரையாடுகின்றனர்.

சிறிலங்காப் படையினரின் உடலங்கள் நாளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறிலங்கா அரசிடம் விடுதலைப் புலிகளால் ஒப்படைக்கப்படவுள்ளன.

http://www.puthinam.com/full.php?2b1Voge0d...d424OO3a030Mt3e

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். மாவீரர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

56025959_05a9119ad7.jpg

யாழ். வடபோர் முனையான முகமாலைக் களமுனையில் இன்று சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர முறியடிப்புச் சமரில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

இதுல 100 எண்டு ஸ்கோர் சொல்லிறீங்கள். தமிழ்நெட்டில 150 ஓட்டங்கள் எடுக்கப்பட்டு உள்ளதாய் சொல்லிது. அங்கால கூகிலில போய் பார்த்தால் ஆமிக்காரர் தாங்கள் மட்டும் அரைச்செஞ்சுரி அடிச்சதாக சொல்லிறீனம்.

எல்லாம் செப்படி வித்தை தான் முரளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.

எல்லாம் அப்பொழுதோ முடிந்த காரியாம்.

கள்ளச்சாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.