Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவர்தான் பெரியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகில் கூட மத ரீதியான பாகுபாடுகள் உள்ளன.

அதுமட்டுமன்றி.. இது மிகவும் வேடிக்கையான விநோதம்..

எமக்குள் இருக்கும் சாதிய வேற்றுமைகளைக் களைந்து வரலாற்று ரீதியாக ஏற்படுத்தப்பட்ட சாதிய அடக்குமுறைகளை ஏற்றுக் கொண்டு சாதியமற்ற ஒரு தமிழ்ப் பண்பாட்டை மீள நிறுவுவதே சமதர்மாமான ஒரு தமிழ்ச் சமுதயத்தை உருவக்குவதற்கான் முன் நிபந்தனையாக இருக்க முடியும்.

சாதிய வேற்றுமைகளை களைந்து அப்புறம் வரலாற்று ரீதியான சாதிய அடக்குமுறைகளை ஏற்றுக் கொண்டு.. அப்புறம் சாதியமற்ற தமிழ் பண்பாட்டை மீள நிறுவுதல்... ரெம்ப அழகான போலித்தனமான அடக்கு மொழிகள்..!

சாதிய அடக்குமுறை என்பதை கதைக்கும் போதே சாதிய மீளப்படுகிறது. சாதியம் மத அடிப்படையில் எழுவது இன்றில்லை. தொழிலடிப்படையில் அமைந்த சாதியமே ஈழத்தில் இருந்தது. அண்மையில் கூட தமிழகத்தில் கிறீஸ்தவர்கள் சாதிய அடிப்படையில் நோக்கப்படுவதாகக் கூறி மதம் மாறினார்கள்.

அடிப்படையில் பொருளாதார வேற்றுமைகள் தான் மனித ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணம். மதம் அல்ல..! மேற்குலகில் கூட கிறிஸ்தவ மத ரீதியான மேன்மைத்தன்மைகள் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியில் மக்கள் சமநிலைப்படுத்தப்பட்டு சமூக உரிமைகள் சட்டங்கள் வழி பாதுகாக்கப்பட்ட போது ஏற்றத்தாழ்வுகள் பெரும்பாலு நிவர்த்திப்புப் பெற்றன.

ஈழமும் சரி தமிழகமும் சரி பொருளாதார ரீதியில் கல்வியில் முன்னேறும் போது இரு அம்சங்களிலும் சமத்துவமான பகிர்ந்தளிப்பு மக்களிடம் எழுகின்ற போது.. சாதி என்பதற்குரிய வரையறை இல்லாது போகும். இதற்குள் மதத்தை திணிப்பது சில மத எதிர்ப்புவாதிகளின் குள்ளத்தனமே அன்றி மதங்கள் இதற்கும் அப்பால் மக்களை ஓரிணைக்கக் கூடிய தன்மையிலானவை என்பதை பல தடவைகள் நிறுவியுள்ள. அவை ஒரு இனத்தின் பண்பாட்டின் கூறாக விளங்கி நிற்கின்றன..!

எப்போதும்.. சாதிய அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன என்பதை வரலாற்றில் அப்படி நடந்தன அதனால் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவு இருந்தது என்பன.. சாதியத்தை மீள நிறுவவும் அடக்குமுறை என்ற ஒன்றை நினைவுறுத்தவும் பழிவாங்கவும்.. அதன் மூலம்.. பிரிவினைகளைத் தூண்டவும் எப்பவும் இடமளிக்கலாம்.. என்பதால் அதை ஏற்பதை தவிர்க்க முற்றாகத் தவிர்க்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை அளிக்கப்படும் போது.. இந்த ஏற்றத்தாழ்வைக் கட்டிக்காட்ட வேண்டிய தேவையில்லை. தமிழகத்தில் இன்று சாதியம் கட்டிக்காக்கப்பட இந்து மதத்தை விட சாதிச் சான்றிதழ் வழங்கும அரச நடைமுறைகளும் சாதிய ரீதியான இட ஒதுக்கீடுகளுமே.. சாதி என்பதையும்.. சாதி அரசியலையும்.. சாதிக்கட்சிகளையும்.. சாதி நலன் காப்பு அமைப்புக்களையும்.. சாதி உரிமை என்றும் பேச வைக்கின்றன..!

அடிப்படை மனித உரிமைகள் மறக்கப்பட்டு சாதி முன்னிறுத்தப்பட சாதி என்ற வரலாற்றுப் பதிவைக் காவுவதும் உச்சரிப்பதும் அதன் கீழ் மனிதர்கள் பாகுபடுத்தப்பட்டு ஏற்றத்தாழ்வு சலுகைகள் அளிக்கப்படுவதும்.. நடக்கிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தியாவில் ஒரு பிராமண மாணவர் கல்லூரியில் படிக்க வேண்டின்.. அவன் கிட்டத்தட்ட எல்லாப் பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் சாதி அடிப்படையில் உட்புகுவோர் அவர்களை விட குறைவான மதிப்பெண்ணுடன் கல்லூரிக்குள் நுழையலாம். ஆனால் அரச பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பின் எல்லோருக்கும் கல்வி கற்க சமனான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தும் பிராமணன் என்பதற்காக அவன் தரப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் நிலையில் அவனுடைய மனநிலை.. எப்படி.. பிரிவினைகள் அற்ற சமத்துவ மனித இனத்தை அங்கீகரிக்க முடியும்.

ஈழத்தில் இந்த நிலை இல்லை. ஆனால் புலம்பெயர்ந்த சில புல்லுருவிகள் ஈழத்துள்ளும் இப்படியான ஒரு நிலையை உருவாக்கி பிரதேச வேறுபாடுகள் போல தமிழர்களுக்குள் நிரந்தர சாதி இருப்பை கட்டிக்காட்ட சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பட்டம் தரிப்புக்கு குரல் தருகின்றனர்.

ஈழத்தில் சாதி அடக்குமுறை என்பதை நிறுவுவது பொருளாதார ரீதியில் சரிப்படாது. காரணம் ஈழம் இலவசக் கல்விக்குரிய நாடு. எல்லோருக்கும் கல்வி என்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ள நாடு. கல்வி கற்கும் வாய்ப்பை திறப்பது சட்டவிரோதம். கல்வியில் திறமையைக் காண்பிக்க சாதி அடிப்படையில் மனிதருக்குள் இயற்கையான எந்த வேறுபாடும் இல்லை. எனவே திறமையை காட்டி முன்னேற இடமளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதை எல்லோரும் சமனாக பாவித்து முன்னேற வேண்டுமே தவிர ஒருவருக்கு சாதியின் அடையளாமிட்டு சலுகை வழங்குதல்.. சாதியப்பாகுபாட்டின் நீண்ட கால இருப்புக்கு தமிழகம் போன்று வழிகோலுமே தவிர அதை சமூகத்தில் இருந்து விரட்ட முடியாது.

தமிழர்கள் மனிதர்களாக நோக்கப்பட்டு எல்லோருக்கும் சமனான மனித உரிமைகளும்.. பொருளாதார உரித்துக்களும்.. கல்வியும் வழங்கப்படுதல் உத்தரவளிக்கப்பட வேண்டும். சலுகைகள்.. சான்றிதழ்கள்.. என்பன அளிக்கப்படக் கூடாது. அது இனப்பிரிவினைக்கே வழிவகுப்பதுடன் ஒரு பகுதியை சோம்பேறிகள் ஆக்கி வைத்திருக்கும். திறமைகள் சரிவர வளர இடமளிக்காது. அந்த நிலை ஈழத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

ஈழத்தின் உரிமைப் போர் கல்வியில் இப்படி தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் திறமை மழுங்கடிக்கப்பட்டதன் பின்னணியிலேயே எழுந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் சாதிய அடக்குமுறை என்ற உச்சரிப்பின் கீழ் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு சலுகைகள் வழங்குதல்.. அல்லது சலுகைக்கான உரிமைகள் என்று பேசுதல் இதர மக்கள் அவர்களை பிரித்து உணரவும்.. வெறுப்பை வளர்க்கவும்.. சாதிய அடையாளமிடவும் வழிவகுக்கும்.

அதை தவிர்ப்பதுடன்.. எல்லா மக்களுக்கும் சம மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் உறுதி செய்யப்படுவதே அவசியம்..! அவற்றை பெறப் பின்னிற்போருக்கு சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்க வேண்டும். ஈழத்தில் ஒரு பகுதி மக்கள் கல்வி ஆர்வமற்று இருந்துவிட்டு.. ஐயோ மேட்டுக்குடி மேல போகுது என்று கத்திக் கொண்டு இருந்தவை ஒருகாலத்தில். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இப்போ எல்லோருக்கும் கிட்டத்தட்ட சம கல்வி அளிக்கப்படுகிறது.

ஒரு சமூகத்தின் கல்வி அறிவே அதன் சமூக பொருளாதார ஸ்ரத்தன்மையைப் பேண உதவுமே அன்றி.. சலுகளை.. அடக்குமுறை அடையாளங்கள் பேணுதல் என்ற பெயரின் கீழ் ஒரு பகுதி மீது வெறுப்பையும் இன்னொரு பகுதி மீது சலுகைகளையும் கொட்டுவதல்ல தேவை. சாதி அழிப்புக்கு. அது சாதியை அழிக்காது. நிறுவவே செய்யும்..! :lol:

  • Replies 110
  • Views 15.7k
  • Created
  • Last Reply

வர்க்கம் வேற, வர்ணம் வேறையா...???? வேடிக்கையாக இல்லை இருக்கு. வர்ண சிரமமே தொழிலை அடிப்படையாக கொண்டது தான்...

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் தொலைநோக்கு:

போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.

கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.

உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியான உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக்கூடிய உணவு ஏற்பட்டுவிடும்.

மனிதனுடைய ஆயுள் நூறு வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.

பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப் பட்டுவிடும்.

அநுபோகப் பொருள்களும் வெகுதூரம் மாற்ற மடைந்துவிடும். அதற்காக ஏற்படும் செலவும் அதை அனுபவிக்கும் முறையும் வெகு சுருக்கமாக மாற்றமடைந்துவிடும்.

ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஒரு அந்தர் வெயிட்டுக்கு வரலாம். பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்.

மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக் கூடிய விதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும் - பெருகும், விஞ்ஞானம் வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கப் பயன்படும்படியான அதிசயப் பொருள்களும், கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவர்களின் இலாபத்துக்காக என்று முடங்கிக் கிடக்காமல் சகல மக்களும் சவுகரியம் தருகிற பொதுச் சாதனங்களாக அமையும்.

இவ்வளவு மாறுதல்களோடு இனி வருங்காலம் இருக்குமாகையால், இன்றைய உலக அமைப்பிலே உள்ள அரசு, உடைமை, நீதி, நிர்வாகம், கல்வி முதலிய பல துறைகளிலும் இப்போது எவையெவைப் பாதகாக்கப்பட என்னென்ன முறைகள் கையாளப்பட்டு வருகின்றனவோ, அம்முறைகளுக்கெல்லாம் அவசியமில்லாமல் போய்விடும் என்பதோடு அவை சம்பந்தமாக இன்று நிலவும் பல கருத்துக்கள் அர்த்தமற்றதாகவும் போய்விடும்.

மக்கள் பிறப்பு கட்டுப்பத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடும்.

- 'இனிவரும் உலகம்' நூலில் பெரியார்

சோர்ஸ்-உண்மைஆன்லைன் (பிப்ரவரி-2008 இதழ்)

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியாக வே பதில் இருக்கு... ஈழத்தமிழர் களில் சாதிக்கு யாழ்ப்பாணத்து உயர் குடி வேள்ளாளனே காரணம்.... அவனை உசுப்பி விட்டதாக நீங்கள் சொல்லும் பார்ப்பணன் கிடையாது...

ஏதாவது புரிந்ததா...??? இது உங்ட Oke Wood க்கு புரிந்தா சந்தோசம்...

மற்றவன் (( குறிப்பா பார்ப்பணன்)) மீது பழி போடுற்றதை விட்டு போட்டு உங்கடயளை கழுவுங்கோ... பிறகு மற்றவையின் அழுக்குகளை பார்க்கலாம்...!!

இல்லை மற்றவன் சொல்லிதான் சாதியதை உங்கட பரம்பரை தொடர்ந்தார்கள் எண்டு பெருமையா சொல்லுறதுக்கு பதிலா எங்கட சனத்துக்கு அறிவு இருக்க இல்லை எண்டு சொல்லுங்கோ நம்புற மாதிரி இருக்கும்...!!

தயா

உங்களை நான் நேரடியா பதில் தர முடிந்தால் தாருங்கள் அல்லாது தரவேண்டாம் என தாழ்மையா கேட்டிருந்தேன்.

உங்களின் யாழ்பாணமும் பார்பாணியமும் சாதியும். ஈராக்கிலும் அமெரிக்காவிலும் எவ்வாறு வந்துது அன்றி பொருந்துகின்றது என்பது எனக்கு புரியவில்லை............ ஆனாலும் நேரடியாக பதில் தராது சுற்றி வளைப்பதால் எதையோ சுட்சமமாக மறைக்கின்றீர்கள் என்பது புரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரமட்டைகள் என்பதில் உங்களை நான் அடக்கவில்லை......... உங்களை குறித்து அதை நான் எழுதவில்லை. உங்களின் விவாதம் நாகரீகமானதாகவே இருக்கின்றது. எல்லோராலும் எல்லா தத்துவங்களையும் எற்றுக்கொள்ள முடிவதில்லை.... அதற்காக அவர்களை சாட முடியுமா? என்மேல் உங்கள் கோபத்தை பாட்டாதீர்கள் காரணம் உங்கள் மேல் எனக்கு எந்த கோபமும் கிடையாது. ஒரு நாகரீகமான விவாதத்தை நாம் தொடர்ந்தால் அதில் எல்லோருக்குமே நன்மையுண்டு. உங்களிடம் இருந்து நாம் பல விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகில் கூட மத ரீதியான பாகுபாடுகள் உள்ளன.

அதுமட்டுமன்றி.. இது மிகவும் வேடிக்கையான விநோதம்..

சாதிய வேற்றுமைகளை களைந்து அப்புறம் வரலாற்று ரீதியான சாதிய அடக்குமுறைகளை ஏற்றுக் கொண்டு.. அப்புறம் சாதியமற்ற தமிழ் பண்பாட்டை மீள நிறுவுதல்... ரெம்ப அழகான போலித்தனமான அடக்கு மொழிகள்..!

சாதிய அடக்குமுறை என்பதை கதைக்கும் போதே சாதிய மீளப்படுகிறது. சாதியம் மத அடிப்படையில் எழுவது இன்றில்லை. தொழிலடிப்படையில் அமைந்த சாதியமே ஈழத்தில் இருந்தது. அண்மையில் கூட தமிழகத்தில் கிறீஸ்தவர்கள் சாதிய அடிப்படையில் நோக்கப்படுவதாகக் கூறி மதம் மாறினார்கள்.

அடிப்படையில் பொருளாதார வேற்றுமைகள் தான் மனித ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணம். மதம் அல்ல..! மேற்குலகில் கூட கிறிஸ்தவ மத ரீதியான மேன்மைத்தன்மைகள் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியில் மக்கள் சமநிலைப்படுத்தப்பட்டு சமூக உரிமைகள் சட்டங்கள் வழி பாதுகாக்கப்பட்ட போது ஏற்றத்தாழ்வுகள் பெரும்பாலு நிவர்த்திப்புப் பெற்றன.

ஈழமும் சரி தமிழகமும் சரி பொருளாதார ரீதியில் கல்வியில் முன்னேறும் போது இரு அம்சங்களிலும் சமத்துவமான பகிர்ந்தளிப்பு மக்களிடம் எழுகின்ற போது.. சாதி என்பதற்குரிய வரையறை இல்லாது போகும். இதற்குள் மதத்தை திணிப்பது சில மத எதிர்ப்புவாதிகளின் குள்ளத்தனமே அன்றி மதங்கள் இதற்கும் அப்பால் மக்களை ஓரிணைக்கக் கூடிய தன்மையிலானவை என்பதை பல தடவைகள் நிறுவியுள்ள. அவை ஒரு இனத்தின் பண்பாட்டின் கூறாக விளங்கி நிற்கின்றன..!

எப்போதும்.. சாதிய அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன என்பதை வரலாற்றில் அப்படி நடந்தன அதனால் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவு இருந்தது என்பன.. சாதியத்தை மீள நிறுவவும் அடக்குமுறை என்ற ஒன்றை நினைவுறுத்தவும் பழிவாங்கவும்.. அதன் மூலம்.. பிரிவினைகளைத் தூண்டவும் எப்பவும் இடமளிக்கலாம்.. என்பதால் அதை ஏற்பதை தவிர்க்க முற்றாகத் தவிர்க்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை அளிக்கப்படும் போது.. இந்த ஏற்றத்தாழ்வைக் கட்டிக்காட்ட வேண்டிய தேவையில்லை. தமிழகத்தில் இன்று சாதியம் கட்டிக்காக்கப்பட இந்து மதத்தை விட சாதிச் சான்றிதழ் வழங்கும அரச நடைமுறைகளும் சாதிய ரீதியான இட ஒதுக்கீடுகளுமே.. சாதி என்பதையும்.. சாதி அரசியலையும்.. சாதிக்கட்சிகளையும்.. சாதி நலன் காப்பு அமைப்புக்களையும்.. சாதி உரிமை என்றும் பேச வைக்கின்றன..!

அடிப்படை மனித உரிமைகள் மறக்கப்பட்டு சாதி முன்னிறுத்தப்பட சாதி என்ற வரலாற்றுப் பதிவைக் காவுவதும் உச்சரிப்பதும் அதன் கீழ் மனிதர்கள் பாகுபடுத்தப்பட்டு ஏற்றத்தாழ்வு சலுகைகள் அளிக்கப்படுவதும்.. நடக்கிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தியாவில் ஒரு பிராமண மாணவர் கல்லூரியில் படிக்க வேண்டின்.. அவன் கிட்டத்தட்ட எல்லாப் பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் சாதி அடிப்படையில் உட்புகுவோர் அவர்களை விட குறைவான மதிப்பெண்ணுடன் கல்லூரிக்குள் நுழையலாம். ஆனால் அரச பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பின் எல்லோருக்கும் கல்வி கற்க சமனான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தும் பிராமணன் என்பதற்காக அவன் தரப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் நிலையில் அவனுடைய மனநிலை.. எப்படி.. பிரிவினைகள் அற்ற சமத்துவ மனித இனத்தை அங்கீகரிக்க முடியும்.

ஈழத்தில் இந்த நிலை இல்லை. ஆனால் புலம்பெயர்ந்த சில புல்லுருவிகள் ஈழத்துள்ளும் இப்படியான ஒரு நிலையை உருவாக்கி பிரதேச வேறுபாடுகள் போல தமிழர்களுக்குள் நிரந்தர சாதி இருப்பை கட்டிக்காட்ட சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பட்டம் தரிப்புக்கு குரல் தருகின்றனர்.

ஈழத்தில் சாதி அடக்குமுறை என்பதை நிறுவுவது பொருளாதார ரீதியில் சரிப்படாது. காரணம் ஈழம் இலவசக் கல்விக்குரிய நாடு. எல்லோருக்கும் கல்வி என்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ள நாடு. கல்வி கற்கும் வாய்ப்பை திறப்பது சட்டவிரோதம். கல்வியில் திறமையைக் காண்பிக்க சாதி அடிப்படையில் மனிதருக்குள் இயற்கையான எந்த வேறுபாடும் இல்லை. எனவே திறமையை காட்டி முன்னேற இடமளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதை எல்லோரும் சமனாக பாவித்து முன்னேற வேண்டுமே தவிர ஒருவருக்கு சாதியின் அடையளாமிட்டு சலுகை வழங்குதல்.. சாதியப்பாகுபாட்டின் நீண்ட கால இருப்புக்கு தமிழகம் போன்று வழிகோலுமே தவிர அதை சமூகத்தில் இருந்து விரட்ட முடியாது.

தமிழர்கள் மனிதர்களாக நோக்கப்பட்டு எல்லோருக்கும் சமனான மனித உரிமைகளும்.. பொருளாதார உரித்துக்களும்.. கல்வியும் வழங்கப்படுதல் உத்தரவளிக்கப்பட வேண்டும். சலுகைகள்.. சான்றிதழ்கள்.. என்பன அளிக்கப்படக் கூடாது. அது இனப்பிரிவினைக்கே வழிவகுப்பதுடன் ஒரு பகுதியை சோம்பேறிகள் ஆக்கி வைத்திருக்கும். திறமைகள் சரிவர வளர இடமளிக்காது. அந்த நிலை ஈழத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

ஈழத்தின் உரிமைப் போர் கல்வியில் இப்படி தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் திறமை மழுங்கடிக்கப்பட்டதன் பின்னணியிலேயே எழுந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் சாதிய அடக்குமுறை என்ற உச்சரிப்பின் கீழ் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு சலுகைகள் வழங்குதல்.. அல்லது சலுகைக்கான உரிமைகள் என்று பேசுதல் இதர மக்கள் அவர்களை பிரித்து உணரவும்.. வெறுப்பை வளர்க்கவும்.. சாதிய அடையாளமிடவும் வழிவகுக்கும்.

அதை தவிர்ப்பதுடன்.. எல்லா மக்களுக்கும் சம மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் உறுதி செய்யப்படுவதே அவசியம்..! அவற்றை பெறப் பின்னிற்போருக்கு சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்க வேண்டும். ஈழத்தில் ஒரு பகுதி மக்கள் கல்வி ஆர்வமற்று இருந்துவிட்டு.. ஐயோ மேட்டுக்குடி மேல போகுது என்று கத்திக் கொண்டு இருந்தவை ஒருகாலத்தில். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இப்போ எல்லோருக்கும் கிட்டத்தட்ட சம கல்வி அளிக்கப்படுகிறது.

ஒரு சமூகத்தின் கல்வி அறிவே அதன் சமூக பொருளாதார ஸ்ரத்தன்மையைப் பேண உதவுமே அன்றி.. சலுகளை.. அடக்குமுறை அடையாளங்கள் பேணுதல் என்ற பெயரின் கீழ் ஒரு பகுதி மீது வெறுப்பையும் இன்னொரு பகுதி மீது சலுகைகளையும் கொட்டுவதல்ல தேவை. சாதி அழிப்புக்கு. அது சாதியை அழிக்காது. நிறுவவே செய்யும்..! :lol:

நெடுக்காலபோவான் மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்...............

கல்வி அதாவது அடிப்படை அறிவை எல்லோருக்கும் எந்த பாகுபாடுமின்றி வழங்குதல் ஒன்றே எல்லா பல பிரச்சனைகளுக்கும் ஓரே விடையாகும். ஈழத்தமிழர்கள் ஆயிரகணக்கில் முன்னேறிய நாடுகளில் வாழும் நிலைமை இன்றிருந்தாலும்..... ஈழதமிழருகோ அன்றி ஈழத்துக்கோ அவர்களால் கிடைக்கக் கூடிய குறைந்த பட்ச உதவிகளே கிடைக்கின்றன. காரணம் அடிப்படை அறிவின்றி இருக்கும் ஈழதமிழரே அதிகமாக இருக்கின்றார்கள்.

அடுத்த சந்ததியை அறிவுவார் உடமைகள் சென்நடைய வாய்புகள் இருப்பினும். முந்தைய அறிவற்ற கூட்டம் அதற்கு தடையாக இருப்பதை நான் பல இடங்களில் நேரடியாக பார்த்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதலில் சாதியம் இல்லை என்றோ சாதியத்தின் தோற்றுவாய் இந்து மதம் என்பதை மறுதலிப்பதோ அல்லது பெரியார் தான் சாதியை உருவக்கினார் என்றோ முழுப் பொய்களை அவிழ்த்து விடுவதனால் ஒரு பயனும் இல்லை.இவ்வாறன பொய்களை எவரும் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை.

நீங்கள் என்றைக்குமே எதிர்காலம் பற்றிய தெளிவான பதில் சொன்னதில்லை. சாதியமே இல்லாமல் செய்ய என்ன செய்யவேண்டும் என்பதற்கு உங்களிடம் இருந்து வருகின்ற பதில் இந்து மதம் தான் சாதியைத் தொடங்கினது என்று சம்பந்தமில்லாத பதிலாகவே இருக்கும்.

வர்ணாச்சிரமம் சாதிக் கொள்கை என்றால் சத்திரியன் என்ற சாதி இப்போது எங்கே போய்விட்டது. சண்டைக்குப் போய் வீரமரணம் அடைகின்ற எல்லோருமே சத்திரியர்கள் என்றால் அது எப்படிச் சாதியாகும்.

ராமசாமி சாதியைக் கொண்டுவரவில்லை. அது முன்பிருந்தே மக்கள் மனங்களில் இருந்தது என்பதை ஏற்கின்றேன். ஆனால் தனது முட்டாள்தனமான செயற்பாடு மூலம் அதைப் பலப்படுத்தி தமிழர்களைக் கூறுபோட வைத்த பொறுப்பு அவருடையதே.

மேற்குலகம் இந்தியாவை விடக் கறுப்பினத்தவர்களை அடக்கி அடிமைகளாக வைத்திருந்த நாடுகள். வேலை முடிய, கையில் சங்கிலி போட்டு வைத்துக் கொடுமை எல்லாம் செய்தன. ஆனால் அவர்கள் பெற்ற தெளிவு, அந்தச் வர்க்கப் போராட்டம் பற்றிய மாற்றங்களைச் செய்தது. அது தான் அதைப் பற்றிப் பேசாமல், எல்லோரையும் சமமாக மதித்து வாழவிட்டது தான்.

இன்று அவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை. தற்போதைய சமுதாயம் அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதுமில்லை. இனவுணர்வோடு அணுகின்ற போக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆனால் தமிழினத்தில் எல்லாத்துக்குமே சாதி அத்தாட்சிப் பத்திரம் வாங்கிக் கொடுமைப்படுத்துகின்ற சட்டத்தை வைத்தவர் இந்த ராசாமி. இதனால் எப்படிச் சனம் ஒற்றுமைப்படும். வேறு வழியில்லை அதனால் தான் இப்படிச் செய்தார் என்பது எல்லாம் சுத்த ஏமாற்றுத்தனம். பகுத்தறிவு கதைக்கின்றவருக்கு எதிர்காலச் சிந்தனை பற்றி எவ்வித கண்ணோட்டமும் கிடையாதோ?

தயா

உங்களை நான் நேரடியா பதில் தர முடிந்தால் தாருங்கள் அல்லாது தரவேண்டாம் என தாழ்மையா கேட்டிருந்தேன்.

உங்களின் யாழ்பாணமும் பார்பாணியமும் சாதியும். ஈராக்கிலும் அமெரிக்காவிலும் எவ்வாறு வந்துது அன்றி பொருந்துகின்றது என்பது எனக்கு புரியவில்லை............ ஆனாலும் நேரடியாக பதில் தராது சுற்றி வளைப்பதால் எதையோ சுட்சமமாக மறைக்கின்றீர்கள் என்பது புரிகின்றது.

அங்கு எந்த மறைப்பும் இல்லை...

யாழ்ப்பாணத்து வெள்ளாளனை விட பிராமணன் எந்த விதத்தில் உயர்ந்து நிண்று விட்டான் என்பதை நீங்கள்தான் சொல்ல வேன்டும்.....!

உயர் குடி என்பது எல்லாம் ஆதிக்கம் மூலம் வந்தவை... ஆதிக்கத்தை கொடுத்தது பணம் இருக்கும் மமதை..!

எந்த ஒரு வெள்ளாளனும் பிராமணன் வீட்டு வாசலில் நிண்டு அவனுக்கு சேவகம் செய்ததாக வரலாறு கிடையாது... அப்படி இருந்தால் சுட்டி காட்டுங்கள்...

ஆனால் ஒவ்வொரு வெள்ளாளன் வீட்டிற்கு முன்னும் வந்து நிண்ட நாவிதன்(வெள்ளாளன் வைத்த பெயர் அம்பட்டன்), வண்ணான் ( கட்டாடி) , கள்ளு இறக்குபவன் எண்டு நீண்ட பட்டியல் இருக்கிறது... இப்படி பணத்தால் மக்களை பிரித்தாண்டு கேவலப்படுத்திக் கொண்டவர்கள் தங்களை சுத்தமாக காட்டி கொள்ள பிராமணன் மீது பழி போடும் படலம்தான் பெரியார் பல்லவி... காரணம் தாங்கள் எல்லாம் குற்றம் இளைக்காதவர் எண்டு காட்டுவதில் ஒரு திருப்தி...

மேலே சொல்ல பட்ட எந்த தொழிலும் கேவலமானது கிடையாது... ஆனால் அவற்றை கேவலப்படுத்தியதும் அவர்களை தாள்த்தப்பட்டவர்களாக காட்டிக்கொண்டு இருப்பதும் பெரியாரின் பெயரால்தான் நடக்கிறது... ஏன் அவர்களை பொருளாதாரத்தில் வளர்த்து அதை ஒரு கௌரவமான தொழிலாக்க உங்களால் எல்லாம் முடியவில்லை... ??

காரணத்தை நானே சொல்கிறேன்.... இண்றைக்கும் பார்ப்பணனை காரணம் காட்டி அந்த மக்களை கீழானவர்களாக தொடர்ந்தும் வைத்து இருக்க விரும்புகிறீர்கள்..

புரியவில்லை.. சாதியம் என்பது ஈழத்தமிழரிடையே இல்லை என்று இங்கு பல தடவை வாதிடப்பட்டது.. இப்போது பெரியார் வழிவந்தவர்கள்தான் சாதியைக் கட்டிக்காப்பதாக வாதிக்கப்படுகின்றது.. ஏன் இந்த முரண்?

நிற்க நீங்கள் கூறிய தொழில்களை அக்குலத்தோன்றல்களைச் சாராத எவரும் தற்போது தாயகத்தில் செய்கிறார்களா? செய்யமுடியவில்லை எனின் என்ன காரணமாக இருக்கும்?

இண்றைக்கு சாதியம் வீரியமாக இருக்கிறது எண்று எங்காவது சொல்லப்பட்டு இருக்கிறதா... ?? அதை வீரியமாக்கும் உங்ட முயற்ச்சிதானே சொல்லப்பட்டது...

இண்டைக்கும் உங்கட பெற்ரோர் நீங்கள் எந்த சாதி பையனோடு ( நீங்கள் பையனாக இருந்தால்) நட்பு வைத்து இருக்கிறீர்கள், எந்த்ய சாதி பெண்ணை வளைக்கிறீர்கள் என்பதை கண்ணுக்குள் விளக்கெண்ணை விட்டு அவதானிக்கிறார்களா என்ன...??

இண்டைக்கு 40 வரையான வயதானவர்களிடம் சாதியம் இல்லை... 1970 களில் இளைஞராக இருந்ததுகளிடம் மட்டும்தான் கொஞ்சம் அளவு தேங்கி இருக்கிறது... பத்து வருடங்களில் அதுவும் காணாமல் போய்விடும்...!!

காரணம் இண்றய இளையோர் சாதியம் பற்றி அறிந்து வைத்து இருப்பதை கூட விரும்புவதில்லை .. அது அவர்களின் பெற்றோரும் ஊக்கப்படுத்துவது இல்லை... ஆனால் பெரியார் எண்டு கிழம்புவோர்தான் அதை தூசுதட்டி கூடத்துக்குள் மாட்டி விடுகிறார்கள்...!

''சாதியம்'' என்பது காலம் காலமாக எமது சமுதாய அமைப்பில் வேரூன்றிக் கிடக்கும் ஒரு சமூகப் பிரச்சினை. வேதகால ஆரிய நாகரிக்கத்தின் வர்ணகுல அமைப்பில் இருந்து சாதிப் பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்.பிராமணர் வேத நூல்களை எழுதினார்கள்.மனு நீதி சாஸ்திரங்களைப் படைத்தார்கள்.இவற்றில் எல்லாம் பிராமணரை அதி உயர் சாதியாக கற்பித்து சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப் படுதினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.சாதியத்தின் மூலத்தை ஆராய்ந்த படி செல்வது இங்கு அவசியம் இல்லை.எங்கிருந்தோ, எப்படியோ இந்த சமூக அனீதி முறை தமிழீழ சமுதாத்திலும் வேரூன்றி விருட்ச்சமாகி விட்டது.தம்ழீழ மக்களின் சமூக உறவுகளுடன் பொருளாதார வாழ்வுடன் சம்பிரதாயங்களுடனும் கருதுலகப்பார்வையுடனும் பின்னிப் பிணைந்ததாக சாதியம் உள்ளது என்பது யதார்த்த உண்மை

.சாதிய முறை, தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டதால் பொருளாதார உறவுகளிலிரிந்து எழுகிறது.மத நெறிகளும்,சித்தாந்தங்களும்,ச

ட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், அவர்கள் முன்னெடுத்த தேசியப் போராட்டமும்,தமிழீழ சமுதாயத்தில் ஒரு யுகப் புரட்ச்சியை உண்டு பண்ணியது எனலாம்.அரச பயங்கரவாத அட்டூழியங்களும் அதனை எதிர்த்து நின்ற ஆயுதம் தரித விடுதலைப் போராட்டமும் எமது சமூக அமைப்பில் என்றுமில்லாத தாக்கங்களை விழுத்தின.பழமையில் தூங்கிக் கொண்டிருந்த எமது சமுதாயம் விடுதலை வேண்டி விழித்தெழுந்தது.வர்க்க சாதியக் காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் தேசாபிமானப்பற்றுணர்வு தோன்றியது.தமிழ் மக்கள் ஒரே இன மக்கள் என்ற இன உணர்வும் பிறந்தது

.சாதிய வேர்களை அறுத்து எறிந்து எல்லா சமூகப் பிரிவுகளில் இருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரே தேசிய விடுதலை இரணுவத்தை புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது.ஒரே தேசிய விடுதலை இயக்கமாக புலிகள் கண்ட வளர்ச்சியும் அவர்களது புரட்ச்சிகர அரசியல் இலட்ச்சியங்களும் சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது.

தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி சாதியம் ஒழிக்கப்பட ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது

.புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்களது இலச்சியப் போராட்டமும் சாதி வேறு பட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித் தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்திருகின்றது.இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மார்றங்க்களை ஏற்படுத்தி உள்ளது.

இன்று சாதி குறித்துப் பேசுவதோ செயற்படுவதோ குற்றமானது என்பதை விட அது வெட்க்கக் கேடானது.அனாகரிகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்து வந்த சமூக உணர்வில் ஏற்பட்ட பிரமண்டமான மாற்றமாகும்

.இருந்தாலும் சாதியப் பேயை எமது சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஓட்டி விட முடியவில்லை சாதிய வழக்குகள் இருக்கத் தான் செய்கின்றன.சாதிய வெறியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

சாதியப் பிரச்சினைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடி விட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பில் குணமாக்கி விடுவதென்பது இலகுவான காரியம் இல்லை.அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ, நிர்ப்பந்தங்கள் வாயிலாகவோ சதியப்பேயய் விரட்ட முனைவதும் புத்திசாலித் தனமானது அல்ல.இன்றைய நிலையில் இந்த்தப்பிரச்சினைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அதியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல்,இதுகொடூரமானது, அனுமதிக்க முடியாதது.

மற்றயது, சாதியரீதியான ஏனைய முரண்பாடுகள்,இவற்றை அதனதன் தன்மை களுக்கு ஏற்ற விததிதில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலுழக்கச் செய்யலாம்.புலிகளின் விடுதைப் போராட்டமும்.அதனால் எழுந்த புரட்ச்சிகர புற நிலைகளும் சாதிய அமைப்பைத்தகர்க்கத் தொடங்கியிருக்கிறது.

எனினும் பொருளாதார உறவுகளிலும்,சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப் போவதில்லை.

எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாயப் புரட்ச்சியுடன் மனப் புரட்ச்சியும் அவசியமாகிறது

.பொருளாதார சமதுவத்தை நோக்கமாகக் கொண்ட சமுதாயப் புரட்சியை முன் நெடுப்பது விடுதலைப் விடுதலைப்புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும்.

தேசிய விடுதலை பெற்று,ஆட்ச்சியதிகாத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாக செயற்படுத்த முடியும்.ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்தில் இருந்தே கட்டுப் பாட்டுப் பிரதேச்னக்களில் புரட்ச்சிகரமான பொருளாதாரத்திட்டங்களிச் செயற்படுத்தை கூட்டுத் தொழில் முயர்ச்சிகளை அமுல்படுத்தி சாதிய உறவுகளை படிப்படியாக உடைத் தெறிவது சாத்தியமனதொன்று.

சமூகச் சிந்த்னையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது.ஏனெனில் சாதிய வழக்குகளும்,சம்பிரதயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கிறது, இந்த அறியாமையைப்போக்க மனப்புரட்சி அவசியம்.மன அரங்கில் புரட்ச்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம்.இங்கு தான் புரட்ச்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.எமது இளம் பரம்பரையினருக்கு புரட்ச்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும்.பழமையான பிற்போக்கான கருதுக்கள் கோட்பாடுகள் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.அறியாமை இருள் நீங்கி, புதிய விழிப்புணர்வும் புரட்ச்சிகர சிந்தனைகலும் இளம் மனங்களைப்பற்றிக் கொண்டால் சாதியம் என்ற மன நோய் புதிதாகத் தோன்றப்போகும் புரட்சிகர சமுதாயத்திலிரிந்து நீங்கி விடும்.

-விடுதலைப்புலிகள்,

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/20-09.pdf

இங்கே பலர் என்ன தீர்வு என்று கேட்டிருகிறார்கள்.மேற் காட்டிய கட்டுரையில் கூறியவற்றில் இருந்து சுருக்கினால்,

1)பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதன் மூலம் சாதிக்கும் வர்க்கதிற்க்ம் இடையேயான தொடர்பை அறுத்தல்.அதாவது சாதியத் தொழில் அடிப்படையிலானா ஏற்றத் தாழ்வுகளை நீக்குதல்.

2)சமூகப் பண்பாட்டுத் தளத்தில் மூட நம்பிக்கைகளைக் களைவதன் மூலம்,பிற்போக்கான சமூகப் பழக்க வளகங்களை சம்பிரதாயங்களைக் களைவதன் மூலம்.இதற்கு சமூக விழிப்புணர்வு என்பது ஏற்பட வேண்டும்.இது கல்வி முறைசார்ந்த முறைசாரா முற்மையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.புதிய சிந்தனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

3) அடுத்தது கட்டுப் பாட்டுப் பிரதேசங்களில் சாதிய நடைமுறைகளைக் குற்றவியல் சட்டங்கள் மூலம் ஒரு குற்றம் ஆக்குவது.

வேதகால ஆரிய நாகரிக்கத்தின் வர்ணகுல அமைப்பில் இருந்து சாதிப் பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்.பிராமணர் வேத நூல்களை எழுதினார்கள்.மனு நீதி சாஸ்திரங்களைப் படைத்தார்கள்.இவற்றில் எல்லாம் பிராமணரை அதி உயர் சாதியாக கற்பித்து சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப் படுதினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன

இது எவ்வளவு பெரிய பம்மாத்து... வரலாறு தெரியதமக்களை ஏமாற்றுவதும் இப்படித்தான்...

வேத நூலை எழுதியவர்களை விட்டு விடலாம்.. ஆனால் மனுநீதியை எழுதிய கௌடில்யரை( சாணக்கியரை அவரின் சீடப்பிள்ளையின் பெயரில் எழுதினார்) வெறும் பிராமணன் என்பதுக்குள் அடைக்கும் போதே தெரிகிறது கட்டுரையாளனின் வஞ்சக செயல்...

மௌரிய பேரரசின் வளர்ச்சியில் எழுச்சியில் சந்திரகுப்தருக்கு இருக்கும் பங்களவுக்கு சாணக்கியருக்கும் (கௌடில்யர்) உண்டு.. இந்தியாவில் இருக்கும் பல மொழி மக்களின் நாடுகள் வல்வளைப்பு செய்து அதை தொடர்ந்தும் கைகளில் வைக்க சாணக்கியரால் போடப்பட்ட திட்டங்கள் எழுத்துவடிவில் வந்ததுதான் "அர்த்த சாஸ்திரம்" அதன் தொடர்ச்சியை தனது பெயர் கெடாமல் சீடர் ஒருவரை வைத்து எழுதியதுதான் "மனுதர்மம்"

இதை பிராமணன் ஏதோ தனது நலனுக்காக செய்தது போல எப்படியெல்லாம் புரளியை கிளப்புகிறார்கள்...

Edited by தயா

யாழ்பாணத்து வரலாற்றை பின்நோக்காக பார்க்கும் சிலர் வெள்ளாளர் மேலாண்மைக்கோட்பாட்டினை (The Theory of Vellala Domination) எடுத்துரைப்பார். போத்துக்கேய ஒல்லாந்த ஆட்சி ஆவணங்களை ஆராயும் பொழுது இவ்வுண்மை நன்கு புலனாகின்றது. ஒல்லாந்தர் கால யாழ்பாண ஆட்சி முறையை நன்கு எடுத்துக்காட்டுவதாக அமையும் சுவார்டெக்குறுன் நினைவேட்டில் (memoir left by hendrick Zwaardracoon(1697) Colanbo,1911) இப்பிரச்சனைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் வெள்ளார் மற்றயை சாதியினரை அடக்கி வந்தவர் என்றும் தாழ்ந்த சாதியினர் தமக்கெதிராக முறைப்பாடுகள் சமர்பிக்க முடியாத வண்ணம் அடக்கி வைத்திருந்தனர் என்றும் அந்நிலையை தான் மாற்றி அமைக்க முனைந்ததாகவும் கூறியுள்ளார். பன்னெடுங்காலமாக இருந்துவரும் வெள்ளாள மேன்மைக்கு இவர்கள் இடம் கொடுத்து வந்தனர் என்பது 1661ல் எழுதப்பட்ட ஓர் அறிவுறுத்தல் குறிப்பில் இருந்து பெறப்படுகின்றது. ஒல்லாந்தர் காலத்தில் முக்கிய தமிழ் பிரதானிகள் புரட்டஸ்தாந்தை தழுவியிருந்தனரென்பது அவர்களது பெயர்களால் தெரியப்படுகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் இம் முறைமை தொடர்ந்து நிலவி வந்தது. ஒல்லாந்தர் காலத்தைப் போலவே , ஆங்கில ஆட்சியின் முற்கூற்றிலும் பெரும் பதவிகள் சாதியதிகார அடிப்படையிலேயே வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியமைப்பை மாற்றி ஆங்கிலக்கல்வியை பதவி நுழைவுச் சீட்டாக்கிய பொழுதும் இந் நன்மையை இவர்களே பெற்றனர். கிறிஸ்துவக் கல்லூரிகள் ஆங்கிலம் கற்பிப்பதால் தேசிய வாழ்வின் பண்பாட்டடிப்படை தகர்க்கப்படுகின்றதென்பதை உணர்ந்து செயற்பட்ட ஆறுமுக நாவலர் சாதியவாதியாக இருந்தார் என்பதை அவரது பல்வேறு கட்டுரைகள் நன்கு புலப்படுத்துகின்றது. நாவலரின் சாதிவாதத்தினால் உயர்சாதியல்லாத சைவத் தமிழறிஞ்ஞர் ஒருவர் நாவலரைக் கண்டிக்க நேர்ந்தமை இன்றைய இலக்கிய வரலாற்றேடுகளிற் காணப்படாத உண்மையாகும். தேசியவாதம் கூட யாழ்ப்பாணத்தில் சாதியடிப்படையை பேணுவதற்கான ஓர் அம்சமாக மாற்றப்பட்டது. யாழ்பாணத்துத் தாழ்த்தப்பட்ட சாதியினர் பலர் கிறிஸ்தவத்தை தழுவியமைக்கு காரணம் உயர்சாதி சைவர்கள் அவர்களை அடக்கி வைத்திருந்தமையே என்பது கிறிஸ்தவ ஏடுகளில் இருந்து புலனாகின்றது. சைவ ஆங்கிலப்பாடசாலைகளிலே தாழ்த்தப்பட்ட சாதிப்பிள்ளைகளுக்கு பலகாலமாக இடம் வழங்கப்படாமல் இருந்தது. ஆரம்ப பாடசாலைகள் கூட சாதியடிப்படையில் இயங்கி வந்ததென்பது பலர் அறிந்த உண்மை.

(யாழ்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை பக்கம் 11, 12)

இந்திய பள்ளிக்கல்வி நிலை (1881-82)

பார்பனர்கள் நடுநிலைப்பள்ளி 30.7 உயர்நிலைப்பள்ளி 40. 29

தாழ்த்தப்பட்டவர்கள் நடுநிலைப்பள்ளி 0.14 உயர்நிலைப்பள்ளி 0

(புதிய கட்சியின் எழுச்சியும் பின்னடைவும் ஓர் வரலாற்று ஆய்வு பக்கம் 83)

இன்றைய நிலையிலும் தொடரும் பிரச்சனை

அம்பலப்படுத்துகிறது, நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்

நாட்டின் உயர்பதவிகளுக்கு வேட்பாளர்களாக தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது மத்திய தேர்வாணையம். இந்தத் தேர்வாணையத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்டோரின் நியாயமான உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கான தேர்வுகளிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான உரிமைகளை இந்த ஆணையம் தொடர்ந்து பறித்து வருகிறது. திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை, இடஒதுக்கீடு கோட்டாவின் கீழ் தொடர்ந்து நிரப்பி வருகிறது இந்த ஆணையம். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் - இந்த முறைகேட்டைக் கண்டித்ததோடு, 2004 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய சர்வீசுகளுக்கான தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்து பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

முழுமையாக படிக்க

http://www.keetru.com/periyarmuzhakkam/apr08/frontline.php

குலத் தொழிலை செய்யாவிடில் அபராதம்!

பார்ப்பனர்கள் மிரட்டல்

http://www.keetru.com/periyarmuzhakkam/aug05/bramin.php

சட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்!

மீண்டும் நுழைகிறது, நுழைவுத் தேர்வு

http://www.keetru.com/periyarmuzhakkam/mar06/entrance.php

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டது, எத்தனை போராட்டங்கள் ஊடாக கல்வியை பெற்றனர், இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம் என்ன அதற்காக நடந்த போராட்டங்கள் என்ன என்பது பற்றி சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

தாள்ந்த சாதிகளுக்கு கல்வி அடியோடு மறுக்கப்பட்டது. கல்விகற்பதற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய வரலாறு நிறைய உண்டு.

உழவுத் தொழிலையே பாவத்தொழிலாக சித்தரிக்கும் மனுதர்மக் கோட்பாடுகள் மத்தியில் தாள்ந்த சாதிகள் கல்வி கற்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

தாள்ந்த சாதி பெண்கள் மார்பை மறைப்பதற்கே நூற்றாண்டாக தோழ்சீலைப்போராட்டம் செய்த சாதிய ஆழம் தீண்டாமை என்னும் சாதிய ஆழம் எதனையும் தொழில்சார் அடிப்படையில் அடக்கி விட முடியாது. இவ்வாறான ஆழத்தில் கல்வி கற்பது எவ்வாறு மறுக்கப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறன வக்கிரங்கள் நிலைபெற வழி வகுத்தது கடவுளோடும் மதத்தோடும் ஆன்மீகத்தோடும் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட்ட சாதிய ஒடுக்குமுறை. கடவுள் ஏற்றதாழ்வுகளுடனே மக்களை படைத்தான். பிரம்மனின் நெற்றி தோழ் இடுப்பு காலில் இருந்து மக்கள் பிறந்தனர். பஞ்சமர் அதிலிருந்தும் பிறக்கவில்லை என்று ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகள். இது கடவுளின் விதி என்று மக்களை அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள வைத்தனர். கடவுளோடு சம்மந்தப்படுத்தப்பட்டதால் மக்கள் பயத்துடன் அதை அனுசரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஒரு கடவுள் இவ்வாறான ஒரு கேவலத்தை செய்வாரா? அப்படிப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியுமா என்று சிந்திக்க வைத்த தந்தை பெரியாரின் புரட்சி என்பது சாதராணமானதொன்றல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்தப்பட்ட அடிமைத்தன வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. பெரியார் வாழ்ந்த காலத்திலும் சூழலிலும் அவர் செய்தது மகத்தான சாதனை. அதனாலேயோ அவரை தந்தை என்று அழைக்கின்றனர். இங்கு நாலுபேர் வெறிபிடித்து கத்தினால் போல் அவர் காட்டிய பாதை மாறிவிடாது. அன்றும் பெரியாருக்கு செருப்பால் எறிந்தவர்கள் இருந்தார்கள், அதற்கெல்லாம் அஞ்சியவர் இல்லை அவர்.

ராமசாமி ராமசாமி என்று இங்கு கத்துபவர்களை பார்க்க வரலாற்று நினைவுதான் வருகின்றது. இராமலிங்க வள்ளலார் காலத்தில் நாவலரும் இவ்வாறு தான் கத்தினார். வள்ளலார் தன்னுயிரைப்போல் பிற உயிரை நேசி என்று சொன்னார். சாதி வேற்றுமைகள் மூட நம்பிக்கைகள் களையப்பட்ட ஒரு நன்மைபயக்கும் ஆன்மீக வழியை மக்களுக்கு போதித்தார். இதற்கு யாழ்பாணத்தில் இருந்து நாவலர் கத்தோ கத்தென்று கத்தி தீர்த்தார். கருத்தை எதிர்க்க துப்பில்லாமல் வள்ளலாரின் மனைவியை தரக்குறைவாக பேசினார்.

நாவலருக்கு சைவ சமய -சாதிகட்கு எதிரி என்று யாரெல்லாம் பட்டார்களோ அவர்களை எல்லாம் வரம்பு மீறி வகைதொகையின்றி நா அடக்கமின்றி அவதூறாக பேசுவது ரொம்ப இயல்பாகவே இருந்திருக்கின்றது ! நாவலரின் இந்த ஆத்திரம் அடங்காத கோபம் வெறி நா அடக்கமின்மை பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதே சான்றாண்மை ! (பக்கம் 32)

என்று ராஜ்கொளத்தமன் தனது ஆய்வில் கூறுகின்றார்.

சாதியம் என்பது மனித குல விரோதச்செயல். காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விலகவேண்டுமே தவிர அதை நியாயப்படுத்தி பூசி மொழுகும் வேலையை செய்யக் கூடாது.

பொருளாதாரம் விருத்தியடையும் போதும் கல்வியில் மேன்மை வரும் போதும் மாற்றம் வரும் என்பது யாவரும் அறிந்ததே. பொருளாதார விருத்திக்கும் கல்வி மேன்மைக்கும் வித்திட்டவர்களை தான் இங்கு சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். இவை எவ்வாறு கடவுள் பெயராலும் சாதிய வெறியாலும் தடுக்கப்பட்டன என்பதையும் தடையை தாண்டி எவ்வாறு மக்கள் முன்னோக்கி தமது போராட்டங்கள் ஊடாக நகர்கின்றார்கள் என்பதையும் அவ்வாறு நடக்க தூண்டியவர் பெரியார் என்பதை யாவரும் அறிவார். அவரைத்தான் இங்கு எதிர்க்கின்றனர். பள்ளிக்கூடத்தில் அனுமதி இல்லை . கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று எத்தனை கோடங்கி காட்டுமிராண்டி கோட்பாடுகளை எத்தனை போராட்டங்கள் ஊடாக தகர்த்தெறிந்தனர் என்பதை யாவரும் அறிவார். அதை முன்னெடுத்து செய்த பெரியாரை என் இங்கு எதிர்க்கின்றனர் என்பதையும் யாவரும் அறிவார்.

எல்லாவற்றையும் விட ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்பது பெரியார் கொள்கை சார்பானவர்கள். எதிர்பது பார்பனர்கள். இது உலகறிந்த உண்மை. ஆனால் ஆதரிப்பவரை எதிர்போம் எதிர்பவரை ஆதரிப்போம். இதன் மூலம் தமிழ்தேசியத்தை பலப்படுத்துவோம். என்ன பிழைப்பைய்யா இது?

சுகன் தெளிவான ஆதரங்களுடன் நல்ல எதிர்னைவையை வழங்கி உள்ளீர்கள்,பாராட்டுக்கள்.

இங்கே பெரியாரை எதிர்ப்பவர்கள் இது வரை வெறும் கூச்சலையும், தரங்கெட்ட வார்த்தைப் பிரயோகங்களையும் மட்டுமே முன் வைத்திருகிறார்கள். நாவலர் கூச்சலிட்டதைப்போல இவை எல்லாம் ஓர் நாள் செத்து மடிந்துவிடும்.ஆதாரத்துடன் தர்க்கதுடன் யதார்ததுடன் உண்மைகளுடன் வாதிட்டவர்களின் கருதுக்களே மக்களிடம் போய்ச் சேரும்.

மத வெறியில் தீட்டித் தீர்ப்பதாலோ கூச்சலிடுவதாலோ ஒருவர் கருத்தியல் ரீதியான வெற்றியை பெற்று விட முடியாது.இதை யாழ்க் களத்தில் நன்கு அவதானிக்கலாம். நான் யாழ்க் களத்தில் எழுதத் தொடங்கிய காலத்துடன் ஒப்பு நோக்கும் போது இன்று அநேகப் பேர் பெரியார் பற்றி வாசித்து வருகிறார்கள் பெரியாரின் கொள்கைகளை உள் வாங்கி உள்ளார்கள் என்பது தெரிகிறது.அன்றில் இருந்து இன்று வரை வெறும் அவதூறுகளை இத்துப் போன ரீல் மாதிரி திரும்பத் திரும்பச்சொல்லிக் கொண்டிருப்பவர்கள் புதிதாக ஒன்றையும் சொல்லி விடவில்லை .இவர்களே இன்று யாழ்க் களத்தில் சிறுமான்மையினராகி வருகின்றனர் என்பதில் இருந்து இவர்களின் கூச்சல் எவ்வகையான தாக்கத்தை மற்றவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது என்பது தெளிவானது.

ஒரு வகையில் இவர்களீன் கூச்சலும் அவதூறுகளும் பெரியாரின் கொள்கைகளை பொதுத் தளதிற்குள் கொண்டு வருபவர்களுக்கு வாய்ப்பானதாக இருக்கிறது.இவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு தம்மை அம்பலப்படுத்தட்டும்.அதனை வரவேற்போமாக. நிதானமாக ஆதாரபூர்வமாக அறிவியல் ரீதியாக தொடர்ந்தும் கருத்துக்களை முன் வைப்போம்.

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை அவரை சீர்த்திருத்தவாதி என்று சொல்வதை காட்டிலும் சமூக விஞ்ஞானி என்று சொல்லுதலே பொருத்தமானது. சூழ்நிலைகளின் தாக்கத்தை கருத்தில் கொண்டே அவர் இயங்கிவந்தார் என்பதை அவரது வரலாற்றை படித்துப் பார்த்தால் தெரிகிறது. இனம், மொழிக்கு அப்பாற்பட்டு மனிதநேயம் காக்கப்படவேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார்.

தந்தை பெரியார் குறித்து ஈழத்தமிழர்கள் எங்களுக்கு தெரியாத விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பதையும், அவரது சிந்தனைகளின் தாக்கத்தை உள்வாங்கி சமூகத்துக்காக சிந்திப்பதையும் இங்கே காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெரியார் குறித்த தவறான தகவல்களையும், கண்ணோட்டத்தையும் தருபவர்களுக்கு நாங்கள் பதிலளிப்பதை விட மிகச்சிறப்பாக நாரதர், கிருபன்ஸ், சுகன் ஆகிய தோழர்கள் பதிலளிப்பதை ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறேன்.

நல்ல விவாதங்களை வாசிக்க செய்தமைக்கு நன்றி!

Edited by லக்கிலுக்

பார்ப்பணன் ஆட்டுவித்தான் நாங்கள் ஆடினோம் ( முன்னோர்கள்) எனும் ஓப்புதல் வாக்குமூலம்தான் இங்கை பெரியாரிச வாதிகளால் கொடுக்க படுகிறது...

பார்ப்பானை பார்த்து திட்டுவதுதான் ஒருவேளை திராவிடமோ எண்று நினைக்கும் வண்ணம் இருக்கும் திராவிடர் நடவடிக்கைகள்... அப்படி திட்டுவது கூட பழி தம்மீது வந்துவிடக்கூடாது எனும் எண்ணத்தில் மட்டும்தான்...

ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் சாதியம் இருக்கிறது அங்கை எல்லாம் போராட்டமும் விளிப்பூட்டலும் நடவடிக்கையும் இருக்கிறது... ஆனால் ஒண்டு போராட்டம் பார்ப்பானையும் கோயில்களையும் நோக்கியதாக இல்லை முதலாளித்துவத்தையும், அதிகாரத்தையும் எதிர்த்துதான்... அங்கை போராடுவதுக்கு மருந்துக்கு கூட திராவிட இயக்கம் கிடையாது... ஆனால் மாவோக்களும்( நக்சல் பரி) இடதுசாரி கட்சிகளும் செயல் படுகிறது...

தமிழகத்திலும் தமிழ்நாடு விடுதலை படை எனும் அமைப்பு இருக்கிறது இயங்குகிறது.... அவர்களுக்கு திராவிட அமைப்பினர் மறந்தும் ஆதரவு கொடுத்து விடுவதில்லை... காரணம் சிவப்பு சட்டைக்கும் கறுப்பு சட்டைக்கு வித்தியாசம் இருக்கு...

இங்கை ஒருத்தர் முழங்கினார் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒண்று எண்டு... வேணும் எண்டா தமிழகத்திலை போய் தமிழ்தேசியம் அமைய ஒரு நாடு அமைக்கலாம் வருங்கள் எண்டு கேட்டு பாக்கட்டும்.. எத்தினை திராவிட வீரர்கள் துண்டைக்காணம் துணியை காணம் எண்டு ஓடுகிறார்கள் என்பதை காணலாம்...!!

திராவிடம் என்பது வெறும் வாய்வீரம்.... சோசலீசம் தமிழ்தேசியம் என்பது செயல்

பார்ப்பானை பார்த்து திட்டுவதுதான் ஒருவேளை திராவிடமோ எண்று நினைக்கும் வண்ணம் இருக்கும் திராவிடர் நடவடிக்கைகள்...

நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் அறியாமையை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் சாதியம் இருக்கிறது அங்கை எல்லாம் போராட்டமும் விளிப்பூட்டலும் நடவடிக்கையும் இருக்கிறது... ஆனால் ஒண்டு போராட்டம் பார்ப்பானையும் கோயில்களையும் நோக்கியதாக இல்லை முதலாளித்துவத்தையும், அதிகாரத்தையும் எதிர்த்துதான்... அங்கை போராடுவதுக்கு மருந்துக்கு கூட திராவிட இயக்கம் கிடையாது... ஆனால் மாவோக்களும்( நக்சல் பரி) இடதுசாரி கட்சிகளும் செயல் படுகிறது...

நக்சல்பாரி இயக்கங்கள் பார்ப்பனரையும், பார்ப்பன அடிவருடி மேல்சாதியினரையும் எதிர்த்தும், அதிகார வர்க்கத்தினரை எதிர்த்தும் செயல்படுகின்றன. நக்சல்பாரிகளுக்கு ஆதரவாக விஜயசாந்தி நடித்த தெலுங்கு டப்பிங் படங்கள் சிலவற்றை பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கி லுள்ள படி. (மூதுரை)

இப்படிச் சொன்னவள் வேறு யாருமல்ல. நம்ம செந்தமிழ் கிழவி.. ஒளவை.

ராமசாமி நாயக்கர் என்ற கன்னடர் தனது அரசியல் வங்குரோத்தைக் கருத்தில் கொண்டு பிராமண சமூகத்தை இலக்கு வைத்து தாக்கியது.. சாதி அழிப்பல்ல. அது சமூகவிரோத பாசிச வாதம்.

கோவிலுக்குள் நுழைந்தவர்.. மசூதிக்குள் நுழையவில்லை. தேவாலயத்துக்குள் நுழையவில்லை... ஏன்..??!

கேரளாவை விட்டு ராமசாமி அடித்து விரட்டப்பட்டதும் ஏன் பெட்டிப்பாம்பாகி அடங்கிப் போனார்..??!

சமூக விஞ்ஞானி.. வெறும் பிராமண வெறுப்பூட்டலுக்குள் அடங்கிக் கிடத்தது ஏன்..??!

இஸ்லாத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள

நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் அறியாமையை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

நக்சல்பாரி இயக்கங்கள் பார்ப்பனரையும், பார்ப்பன அடிவருடி மேல்சாதியினரையும் எதிர்த்தும், அதிகார வர்க்கத்தினரை எதிர்த்தும் செயல்படுகின்றன. நக்சல்பாரிகளுக்கு ஆதரவாக விஜயசாந்தி நடித்த தெலுங்கு டப்பிங் படங்கள் சிலவற்றை பார்க்கவும்.

நக்சல் பரிக்களின்(மாவோ) நடவடிக்கைகள் முதலாளித்துவத்தை எதிர்ப்பதாகத்தான் இருக்கிறது, அடுத்து அரசு... அங்கே மத எதிர்பு என்பது மூண்றாம் கட்டமாக இருக்கிறது... பெரியார் தானே பெரிய முதலாளி தன்னை தானே எதிர்த்தார் எண்றால் ஏன் அவர் கோயில் தர்மகர்த்தாவாக இருந்த அந்த கோயில் உரிமையை கடைசிவரை கைவிடவில்லை...??

சரி ஏன் உங்களையே கேட்கலாமே... தமிழ் நாட்டு நக்சலட்கள் தமிழர் விடுதலை படையை ஆதரிக்க நீங்கள் தயாரா...??

ஆதரிக்க வில்லை எண்டால் காரணம் என்ன...??

இப்படிச் சொன்னவள் வேறு யாருமல்ல. நம்ம செந்தமிழ் கிழவி.. ஒளவை.

ராமசாமி நாயக்கர் என்ற கன்னடர் தனது அரசியல் வங்குரோத்தைக் கருத்தில் கொண்டு பிராமண சமூகத்தை இலக்கு வைத்து தாக்கியது.. சாதி அழிப்பல்ல. அது சமூகவிரோத பாசிச வாதம்.

கோவிலுக்குள் நுழைந்தவர்.. மசூதிக்குள் நுழையவில்லை. தேவாலயத்துக்குள் நுழையவில்லை... ஏன்..??!

உண்மையான பதில் என்ன எண்றால் இஸ்லாம் மத அடிப்படைவாதி முகமது ஜின்னாவை எதிர்க்க வேண்டிவரும் என்பதாலாக இருக்கலாம்....!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான பதில் என்ன எண்றால் இஸ்லாம் மத அடிப்படைவாதி முகமது ஜின்னாவை எதிர்க்க வேண்டிவரும் என்பதாலாக இருக்கலாம்....!

நான் நினைத்தேன். கஞ்சி குடிக்கப் போக இயலாமல் வரும் என்ற பயத்தில் தான் பேசாமல் இருந்தார் என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிச் சொன்னவள் வேறு யாருமல்ல. நம்ம செந்தமிழ் கிழவி.. ஒளவை.

ராமசாமி நாயக்கர் என்ற கன்னடர் தனது அரசியல் வங்குரோத்தைக் கருத்தில் கொண்டு பிராமண சமூகத்தை இலக்கு வைத்து தாக்கியது.. சாதி அழிப்பல்ல. அது சமூகவிரோத பாசிச வாதம்.

கோவிலுக்குள் நுழைந்தவர்.. மசூதிக்குள் நுழையவில்லை. தேவாலயத்துக்குள் நுழையவில்லை... ஏன்..??!

கேரளாவை விட்டு ராமசாமி அடித்து விரட்டப்பட்டதும் ஏன் பெட்டிப்பாம்பாகி அடங்கிப் போனார்..??!

சமூக விஞ்ஞானி.. வெறும் பிராமண வெறுப்பூட்டலுக்குள் அடங்கிக் கிடத்தது ஏன்..??!

இஸ்லாத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு எந்த மறைப்பும் இல்லை...

யாழ்ப்பாணத்து வெள்ளாளனை விட பிராமணன் எந்த விதத்தில் உயர்ந்து நிண்று விட்டான் என்பதை நீங்கள்தான் சொல்ல வேன்டும்.....!

உயர் குடி என்பது எல்லாம் ஆதிக்கம் மூலம் வந்தவை... ஆதிக்கத்தை கொடுத்தது பணம் இருக்கும் மமதை..!

எந்த ஒரு வெள்ளாளனும் பிராமணன் வீட்டு வாசலில் நிண்டு அவனுக்கு சேவகம் செய்ததாக வரலாறு கிடையாது... அப்படி இருந்தால் சுட்டி காட்டுங்கள்...

ஆனால் ஒவ்வொரு வெள்ளாளன் வீட்டிற்கு முன்னும் வந்து நிண்ட நாவிதன்(வெள்ளாளன் வைத்த பெயர் அம்பட்டன்), வண்ணான் ( கட்டாடி) , கள்ளு இறக்குபவன் எண்டு நீண்ட பட்டியல் இருக்கிறது... இப்படி பணத்தால் மக்களை பிரித்தாண்டு கேவலப்படுத்திக் கொண்டவர்கள் தங்களை சுத்தமாக காட்டி கொள்ள பிராமணன் மீது பழி போடும் படலம்தான் பெரியார் பல்லவி... காரணம் தாங்கள் எல்லாம் குற்றம் இளைக்காதவர் எண்டு காட்டுவதில் ஒரு திருப்தி...

மேலே சொல்ல பட்ட எந்த தொழிலும் கேவலமானது கிடையாது... ஆனால் அவற்றை கேவலப்படுத்தியதும் அவர்களை தாள்த்தப்பட்டவர்களாக காட்டிக்கொண்டு இருப்பதும் பெரியாரின் பெயரால்தான் நடக்கிறது... ஏன் அவர்களை பொருளாதாரத்தில் வளர்த்து அதை ஒரு கௌரவமான தொழிலாக்க உங்களால் எல்லாம் முடியவில்லை... ??

காரணத்தை நானே சொல்கிறேன்.... இண்றைக்கும் பார்ப்பணனை காரணம் காட்டி அந்த மக்களை கீழானவர்களாக தொடர்ந்தும் வைத்து இருக்க விரும்புகிறீர்கள்..

தயா உங்கள் பதிலுக்கு நன்றி! நீங்கள் மேலே கூறியிருப்பது முற்றிலும் உண்மை....... நீங்கள் பலவீனராக இருந்தது தமிழரின் பிழையே தவிர அவர்கள் மீது அடக்குமுறைகளை அடுக்கியது பார்பானின் பிழையல்ல என்ற தோனியில் கருத்துகளை கூறுவதுபோல் இருந்தது. அதனால்தான் எதற்கும் சம்ந்தமில்லாத அமெரிக்காவையும் ஈராக்கையும் வைத்து கேள்வி கேட்டிருந்தேன். என்னை பொறுத்தவரையில் அடக்குமுறை என்பது எங்கிருப்பினும் அது துடைதெறியப்படவேண்டும். கல்வி நிலை எங்கும் புகுத்தப்படவேண்டும் என்பதே ஆகும். இதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்குமென நினைக்கிறேன். ( பார்பான் இன்றும் கீழ்சாதி என்று சொல்லி சகமனிதனை புறந்தள்ளுவதை நேரில் பார்க்கிறேன் அதலால் பர்பானுக்கெதிரான கருத்துக்களை அடிக்கடி எழுத நேரிடுகின்றது)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொன்னவள் வேறு யாருமல்ல. நம்ம செந்தமிழ் கிழவி.. ஒளவை.

ராமசாமி நாயக்கர் என்ற கன்னடர் தனது அரசியல் வங்குரோத்தைக் கருத்தில் கொண்டு பிராமண சமூகத்தை இலக்கு வைத்து தாக்கியது.. சாதி அழிப்பல்ல. அது சமூகவிரோத பாசிச வாதம்.

கோவிலுக்குள் நுழைந்தவர்.. மசூதிக்குள் நுழையவில்லை. தேவாலயத்துக்குள் நுழையவில்லை... ஏன்..??!

கேரளாவை விட்டு ராமசாமி அடித்து விரட்டப்பட்டதும் ஏன் பெட்டிப்பாம்பாகி அடங்கிப் போனார்..??!

சமூக விஞ்ஞானி.. வெறும் பிராமண வெறுப்பூட்டலுக்குள் அடங்கிக் கிடத்தது ஏன்..??!

இஸ்லாத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயம் போல் நாம் தேவர்கள் நாம் தேவ துதர்கள் நீங்கள் சேவகர்கள் நீங்கள் எதையுமே தீண்டதகாதவர்கள் என்ற பிரிவினைகளை மற்றைய சமயங்கள் வைத்திருக்கவில்லையே.

மதத்தின் பெயரால் மறுமனிதனை துன்புறுத்தியதில் பெரும்பங்கு இந்துசமயத்திற்கே உரியது. என்ற பெருமை எப்போதும் இந்து சமயத்திற்கு உண்டு.

மத்தேயு:

அதிகாரம் 15

வசனம்: 21இல் இருந்து- 28வரை

21. பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

25. அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.

26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் எனும் ஒரு சக உறவின் கேள்வி

கோவிலுக்குள் நுழைந்தவர்.. மசூதிக்குள் நுழையவில்லை. தேவாலயத்துக்குள் நுழையவில்லை... ஏன்..??!கேள்விக்கான என்னுடைய பதில்.......

இந்து சமயம் போல் நாம் தேவர்கள் நாம் தேவ துதர்கள் நீங்கள் சேவகர்கள் நீங்கள் எதையுமே தீண்டதகாதவர்கள் என்ற பிரிவினைகளை மற்றைய சமயங்கள் வைத்திருக்கவில்லையே.

மதத்தின் பெயரால் மறுமனிதனை துன்புறுத்தியதில் பெரும்பங்கு இந்துசமயத்திற்கே உரியது. என்ற பெருமை எப்போதும் இந்து சமயத்திற்கு உண்டு.

இன்னொரு சக யாழ் உறவின் கருத்து........

மத்தேயு:

அதிகாரம் 15

வசனம்: 21இல் இருந்து- 28வரை

21. பின்புஇ இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுஇ தீருஇ சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

22. அப்பொழுதுஇ அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரேஇ தாவீதின் குமாரனேஇ எனக்கு இரங்கும்இ என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளேஇ இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றிஇ மற்றப்படியல்ல என்றார்.

25. அவள் வந்து: ஆண்டவரேஇ எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.

26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்துஇ நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரேஇ ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயேஇ உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்

சகமதத்தவனை நீ உள்ளே வராதே நீ தீண்டதகாதவன் என்று கோவிலுக்குள் அனுமதிமறுத்தது இந்துசமய வித்துவான்களே என்பதை தான் நான் மேலேயும் எழுதியுள்ளேன்.

ஆனால் இந்த சக உறவு எதையோ பைபிளில் இருந்து எடுத்து போடுகின்றது.

இதை மட்டுறுத்தினர் கவனத்திற்கே அறிய தருகிறேன். திட்டமிட்ட முறையில் கருத்தாடல் பலமுறை திசை திருப்பப்படுகின்றது. ஒரு நாகரீகமான ஒழுக்கமான கருத்தாடலுக்கு வழிவகுப்பது மடடுறுத்தினருடைய கடைமை என நான் எண்ணுகிறேன். இங்கு எல்லோருமே மற்றவரிடமிருந்து இன்னோருவிடயத்தை அறியவிரும்புவர்களாகவே இருக்கின்றார்கள் இதன் பொருள் எல்லோரும் எல்லாம் அறிந்தவரல்ல. பிழைகள் தவறுகள் எப்போதுமே ஏற்புடையவை. ஒன்றையே திரும்ப திரும்ப செய்வதென்பது ஏதோ ஓரு காரணத்தை வைத்தே என்பதை எளிதாக புரிய முடிகின்றது. ஆகாவே மட்டுறுத்தினர் விசம கருத்துகள் தொடர்பில் கவனமெடுக்க வேண்டும் என தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்.

Edited by Maruthankerny

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.