Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தில் தோன்றிய ஒரு நட்பு உறவுடனான நேரடிச் சந்திப்பு..!

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர, வளர இந்த உலகம் தொடர்பாடல் என்றவகையில் சிறிதாகிக்கொண்டு வருகிது (ஆக்களிண்ட உள்ளமும் சின்னனாகிக்கொண்டு வருகிது எண்டும் சிலர் சொல்லிறீனம்). முந்தி எண்டால் யாரையும் சந்திக்கிறது, தொடர்புகொள்ளிறது எண்டால் சரியான கஸ்டம். ஆனால், புதியவர்களைக் கண்டு அவர்களுடன் சினேகிதம் வளர்ப்பது என்பது இந்த நவீன உலகில மிகவும் இலகுவாகீட்டிது. இதுக்கு முக்கிய காரணங்களில ஒண்டு இணையம் - இண்டர்நெட் (ஒரு தகவல்: INTERNET, WEB இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் உடையவை.)

இப்ப நாங்களும் யாழ் மூலமாக கருத்தாடல் செய்து பல உறவுகளப்பெற்றுக் கொள்ளுறம். எனக்கு நண்பர்கள் ஒப்பீட்டளவில குறைவு எண்டு சொல்ல வேணும். எண்டாலும் யாழ் இணையத்தில எழுதத்துவங்கினாப் பிறகு நூற்றுக்கணக்கான அறிமுகங்கள். எல்லாரோடையும் நெருக்கமாக பழகாவிட்டாலும் ஒருவருடன் ஒருவர் கருத்தாடல் செய்பவர்கள் என்ற அளவில நிறையப் பேரத் தெரியும். இதுதவிர, யாழுக்கு வந்ததால ஏனைய தமிழ் ஊடகங்களுடனும் தொடர்பு ஏற்பட்டு இருக்கிது. இந்தவகையில..

நான் அண்மையில யாழ் கள உறவான ஈழப்பிரியன் அண்ணா அவர்களை நான் வேறு ஒரு இடத்துக்கு சென்று இருந்தபோது சந்திச்சு இருந்தன். இதுல பெரிசா எழுத என்ன இருக்கிது எண்டு நீங்கள் யோசிக்கலாம். முன்பின் தெரியாத இருவர் அதுவும் இந்தக் கலிகாலத்தில இணையத்தில உருவாகிய நட்பின் அடிப்படையில நேரடியாகச் சந்திக்கிறது எண்டால் அது ஒரு பெரிய விசயம்தான் என்னைப் பொறுத்த அளவில. ஏன் எண்டால் இணைய உறவுகள் என்பது நம்பிக்கை -TRUST இன் அடிப்படையில வளர்கின்றது. வழமையா எல்லாவிதமான உறவுகளுக்கும் நம்பிக்கை அவசியம்தான். ஆனா இணையத்துக்கால நட்புறவு வளர்வதற்கு இது கொஞ்சம் அதிகமாகத் தேவை.

இதுல சுவாரசியமான விசயம் என்ன எண்டால் நான் ஈழப்பிரியன் அண்ணா எழுதுறதுகள், மற்றும் அவருடன் தனிமடல்கள அனுப்பி தொடர்புகொள்ளும் போது பெற்ற அனுபவங்களின் அடிப்படையில ஒரு கற்பனையான ஒரு உருவத்தை எண்ட மனத்திரையில உருவாக்கி வச்சு இருந்தன். நான் நேரடியாக அவரை பார்த்தபோது நான் கற்பனை செய்து வச்சு இருந்த உருவத்துடன் ஏறக்குறைய 80% பொருந்தி இருந்தார். ஹாஹா.. அதாவது ஒரு ஆள அவர் எப்பிடி இருப்பார் எண்டு அவரது முகத்தை நேரடியாகப் பார்க்காமல் அவருடன் இணையத்தில பழகும்போது ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில ஊகிக்க முடியும் எண்டுறதுக்கு இது ஒரு உதாரணம். சரி அப்பிடி எண்டால் நீங்களும் நான் எப்பிடி இருப்பன் எண்டு கற்பனை செய்து பார்க்கக்கூடியதாய் இருக்கிதோ? எனது உருவத்தை நீங்களும் கற்பனையில் சரியாக ஊகிக்கக்கூடியதாக இருந்தால் நீங்களும் கெட்டிக்காரர் தான்.

முதலாவதா நாந்தான் ஈழப்பிரியன் அண்ணாவுக்கு கோல் எடுத்தன். முதலில கதைக்கும்போது எனக்கு கொஞ்சம் சிரமமாக இருந்திச்சிது. ஏன் எண்டால் என்ன இருந்தாலும் முதல்தரம் கதைக்கேக்க கொஞ்சம் கூச்சம் இருக்கும்தானே. மற்றது நான் இணையத்தில கண்டபடி எல்லாம், கண்டதையும் எழுதுறது. அப்ப அட அப்பிடி எல்லாம் எழுதுற கிறுக்கன் நீங்கள் தானா எண்டு நேரடியா கதைக்கேக்க அவருக்கும் ஒரு உள்ளுணர்வு ஏற்படும்தானே? இதுதவிர நான் போன் எடுத்தபோது அதை ரிசீவ் (Receive) பண்ணியது ஈழப்பிரியன் அண்ணா குடும்பத்தில இருக்கிற ஒரு உறுப்பினர். அப்ப அவேக்கு நான் யார் எண்டு சொல்லிறது கொஞ்சம் கஸ்டமாப் போச்சிது. ஏன் எண்டால் இப்ப பலர் யாழில - இணையத்தில கருத்தாடல் தளங்களில எழுதினாலும் சிலது அதுபற்றி அவர்கள் வீடுகளில தெரிஞ்சு இருக்காது (நான் எழுதுறவிசயம் எங்கட வீட்டில எல்லாருக்கும் தெரியும்...). அப்ப நான் யாழ் இணையத்தில எழுதுற இவன் கதைக்கிறன் எண்டு சொல்லி மற்றவரிண்ட யாழ் புனைபெயரையும் சொல்லி வீட்டுக்காரருக்கு சொன்னால் அவேக்கு ஒண்டும் விளங்காது தானே? முளுசிக்கொண்டு இருப்பீனம். சரி ஒரு மாதிரி ஈழப்பிரியன் அண்ணாவோட கதைச்சு எல்லா விபரங்களையும் பெற்றுக்கொண்டு அடுத்தநாள் காலம்பற வெளிக்கிட்டன் போறதுக்கு.

இதுக்கில அம்மா, அப்பா சொல்லிச்சீனம் தாங்களும் வரபோறம் எண்டு. நானும் இப்பிடித்தான் சின்னப்பிள்ளையில அம்மா, அப்பா எங்கையும் போனால் என்னையும் கூட்டிக்கொண்டு போகச்சொல்லி அடம்பிடிக்கிறது. இப்ப நான் வளர்ந்து பெரிய ஆள். ஆனால் அம்மா, அப்பாவுக்கு வயசுபோட்டிது. அப்ப முந்தி நடந்த அதேவிசயம் திரும்பவும் நடக்கிது. ஆனா இப்ப அம்மா, அப்பா பெரிய ஆட்கள் இல்ல - எண்ட குழந்தைகள் மாதிரி. ஹிஹி.

சரி எண்டு இந்த NAVIGATION ஐ காரில செட்பண்ணிப்போட்டு பயணத்த துவங்கினன். எல்லாம் ஹைவேயில (பெருந்தெரு) நல்லமாதிரிபோய் அந்தக் காசுபோடுற இடத்தில (TOLL BOOTH) ஒரு சின்னச் சிக்கல் வந்திட்டிது. EPASS எண்டால் இதுக்கால போ.. CASH எண்டால் அதுக்கால போ... EPASS இல்லாட்டிக்கு CASH எண்டால் இதுகளுக்கால போ எண்டு அறிவித்தலுகள் சொல்லிச்சிது. நான் அப்ப கடைசி லேனுக்க (ஒழுங்கை) கார விட்டிட்டன். அட பிறகுதான் பார்த்தால் அந்த கடைசி ஒழுங்கை நான் வந்தபாதையில இருந்து பிரிஞ்சு வேற எங்கையோ போகிது. ஓரிரு செக்கன்கள் யோசிச்சுப் பார்த்தன். இது எல்லாம் திடீர் திடீர் எண்டு தன்பாட்டில மூளையுக்க நடக்கவேண்டிய விசயங்கள். எடுக்கப்பட வேண்டிய திடீர் முடிவுகள். கனநேரம் யோசிக்க நேரம் இல்ல. ஏன் எண்டால் இது பெருந்தெரு..

பாதைய விட்டால் பிறகு அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் எண்டு தெருவில சுத்திக்கொண்டு நிக்கவேணும். எண்டபடியால் திரும்பிப்பார்த்தன் ஏதாவது வாகனம் வருதோ எண்டு. ஒண்டும் வர இல்ல. அப்ப நான் டக் எண்டு சின்ன தோசை ஒண்டு சுட்டு இஞ்சால மூளையுக்க இருந்து நாலு ஒழுங்கை கடந்து நல்லா அங்கால இருந்த ஒழுங்கையுக்க கார விட்டன். இஞ்ச நீங்கள் கவனிக்கவேணும் விதி என்ன எண்டால் காரை ரிவேர்ஸ் (Reverse) செய்ய ஏலாது, மற்றது U TURN எடுக்க ஏலாது. மற்றும்படி சின்னத் தோசை சுட ஏலாது எண்டு சட்டம் இல்லை (எண்டு நான் நினைக்கிறன், பிழை எண்டால் கோவிக்காதிங்கோ). அப்ப..

அங்காள போனனோ.. அதுக்க காசு வாங்க நிண்ட வெள்ளைக்கு என்னில சரியான கடுப்பாப் போச்சிது. அவர் என்னப்பாத்து கேட்டார் உனக்கு கார் ஓடத் தெரியுமோ எண்டு.. ஹிஹி.. நான் என்ன கார் ஓடத்தெரியாமலே இவ்வளவு தூரம் வந்து இருக்கிறன்? கனடாவில இப்பிடிக் கார் ஓட ஏலுமோ எண்டும் கேட்டு நக்கல் அடிச்சார். ஓ பேஷா ஓடலாமே! அவரோட கதை ஒண்டும் குடுக்காமல் நான் சிரிச்சுப்போட்டு காசமட்டும் குடுத்துப்போட்டு பயணத்த தொடர்ந்தன். பிறகு கொஞ்ச நேரத்தில ஈழப்பிரியன் அண்ணா வீடு வந்திட்டிது.

சரி உள்ளுக்க போறதுக்கு மணி அடிச்சால் ஈழப்பிரியன் அண்ணா வீட்டு குடும்ப உறுப்பினர் ஒருவர் வந்து யார் நீங்கள் எண்டு கொஞ்சம் பதற்றத்துடன் கேட்க நானும் முளுசிக்கொண்டு பதற்றத்துடன் என்னை அறிமுகம் செய்ய, பிறகு அவர் பதற்றத்துடன் கதவைத் திறக்க உள்ளுக்க போய் இருந்தம். நான் அப்பா, அம்மாவோட போனபடியால் நிறைய வசதியாப் போச்சிது. இல்லாட்டிக்கு சிலவேளைகளில என்னப்பாத்துபோட்டு கதவத்திறக்காமலும் இருந்து இருக்கலாம். ஹாஹா... (சும்மா பகிடிக்கு சொன்னனான். ஈழப்பிரியன் அண்ணா கோவிக்ககூடாது) உள்ளுக்க போயிட்டமோ.. நாங்கள் தமிழர் தானே... கிடுகிடுவெண்டு கதைக்கத் துவங்கீட்டம். நான் ஒருபக்கத்தால கதைக்க... பிறகு அம்மா ஒரு பக்கத்தால கதைக்க பிறகு அப்பா ஒரு பக்கத்தால கதைக்க... கொஞ்ச நேரத்துக்க எல்லாரும் நல்லா அறிமுகம் ஆகிவிட்டம்.

அட ஒண்டு சொல்ல மறந்துபோனன். நாங்கள் போனநேரம் ஈழப்பிரியன் அண்ணா வெளியில எங்கையோ அலுவலாப் போட்டார். அவர் வரும்வரையில அவருக்காக காத்து இருந்தம் சும்மா கதைச்சுக்கொண்டு தேத்தா குடிச்சுக்கொண்டு. தோசை சாப்பிடுறீங்களோ எண்டு கேட்டிச்சீனம். அட காலம்பற இப்பத்தான் வாறம். கோயிலுக்கு வேற போகவேணும் எண்டு அம்மா அடம்பிடிச்சுக்கொண்டு இருந்தா. பின்ன தோசை ஒண்டும் வேணாம் எண்டு சொன்னன். பிறகு கதைச்சுக்கொண்டு இருக்கேக்க ஒரு பதினைஞ்சு நிமிசம் கழிச்சு குடும்பத்தலைவர் வந்தார்.

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு நான் கைகுலுக்கிப்போட்டு இன்னும் கொஞ்ச நேரம் பலவிசயங்களையும் பற்றி எல்லாரும் சேர்ந்து பன்பலா கதைச்சுக்கொண்டு இருந்துபோட்டு பிறகு ஒரு அரை மணித்தியாலம் கழிச்சு வெளிக்கிட்டம். ஈழப்பிரியன் அண்ணா அவேண்ட வீட்டுக்கு கிட்ட இருந்த கோயில் ஒண்டிண்ட முகவரிய இணையத்தில சுட்டு எடுத்து தந்துபோட்டு காருக்கையும் வந்து NAVIGATION ஐ செட் பண்ணி விட்டார். நாங்கள் அப்பிடியே கோயிலுக்கு போட்டு பக்திப்பரவசத்தோட எங்கட இடத்துக்கு திரும்பி வந்தம்.

அட ஒரு விசயம், கோயிலுக்கு போன இடத்தில கார பார்க் பண்ணுறதுக்கு வசதி இல்லை. ஒரு மாதிரி ஒரு இடத்த தேடிக்கண்டுபிடிச்சு காரை நிப்பாட்டிபோட்டு சாமியபோய் கும்பிட்டுபோட்டு வந்தால் யாரோ குறுக்காலபோனதுகள் எண்ட காருக்கு முன்னாலையும் பின்னாலையும் ஒரு அடி சொச்சம் இடைவெளியோட ரெண்டு வாகனங்களை நிறுத்தி இருந்தாங்கள். இனி எண்ட கார உதுக்கால எப்பிடி வெளியில எடுக்கிறது? யோசிச்சன். அம்மாவ முன்பக்கமும், அப்பாவ பின்பக்கமும் முட்டுதோ எண்டு பார்க்கச்சொல்லிபோட்டு அந்தச்சின்ன இடத்துக்க முன்னுக்கும் பின்னுக்குமா சின்னச் சின்னத் தோசைகள சுட்டன். கடைசியில ஒரு மாதிரி அஞ்சு நிமிச போராட்டத்துக்கு பிறகு காரை வெளியில எடுத்துபோட்டன் (முட்டுப்படாமல்).

ஓம். ஈழப்பிரியன் அண்ணா குடும்பத்தப் பற்றி சொல்ல இல்ல. அது ஒரு சிறிய அழகிய குடும்பம். ஈழத்தமிழன் எங்க எங்கை எல்லாம் காலூன்றி இருக்கிறான் என்பதை நினைக்க பெருமையாக இருக்கின்றது. ஒரு பக்கத்தால நாங்கள் ஊரவிட்டு அகதிகளா கிளம்பிவிட்டாலும்... அது ஒரு துன்பகரமான நிகழ்வாக இருந்தாலும்.. போய்ச் சேர்ந்த இடங்களில நம்மவர்கள் ஊக்கத்துடன் உழைத்து வளமுடன் வாழ்வது மகிழ்ச்சிக்குரிய ஒரு விசயமே!

சரி இந்தளவும் காணும் எண்டு நினைக்கிறன். உங்களுக்கும் இப்பிடி பல அனுபவங்கள் என்னைவிட அதிகளவிலேயே இருக்கும். அவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கோ. பின்னூட்டல்களை msivagur@gmail.com க்கு அனுப்பி வையுங்கோ.

அனைவருக்கும் நல்லிரவு! நன்றி! வணக்கம்!

Edited by முரளி

  • 2 months later...

ஆகா அம்மா அப்பாவையும் கூட்டிக்கொண்டு குடும்பமாக போய் யாழ் உறவை சந்திச்சு இருக்கிறியள். சந்தோசம் எங்க இப்ப ஈழப்பிரியன் அண்ணாவை இந்தப்பக்கம் காணுறது குறைவாக் கிடக்கு

  • தொடங்கியவர்

நன்றி ரசிகை... எங்க கனடாவில இருந்துகொண்டு இன்னும் உங்கள சந்திக்க இல்ல. மணி உங்க வந்ததும் உங்களையும் அம்மா, அப்பாவோட வந்து சந்திக்கிறன். எனக்கு சாப்பிடுறதுக்கு பனங்காப்பனியாரம் சுட்டு வையுங்கோ. ஹிஹி.. :( மிச்சம் கனடா ஆக்கள் நிறையப்பேர் இருக்கிறீனம் சந்திக்க. எனக்கு உந்த குரூப்பா போய் சந்திக்கிறதில ஈடுபாடு இல்ல. ஒவ்வொருத்தரையும் தனித்தனியா மம்மி டாடியோட போய் சந்திக்கவேணும். பாப்பம் பிறகு நேரம் வசதி வரேக்க மிச்ச ஆக்கள சந்திக்கலாம் எண்டு நினைக்கிறன். :(

ஓ..இதை நான் இன்னைக்கு தான் பார்க்கிறன் :wub: ..சுவாரசியாமன சந்திப்பு குருவே..ஈழபிரியன் பெரியப்பாவிற்கு மகள்மார் யாரும் இருக்கீனமோ குருவே.. :wub: (இல்ல கேட்டனான்)..அப்படி இருந்தா நானும் போய் சந்திக்க தான் பாருங்கோ..அது எல்லாம் இருகட்டும்.. :D

அது என்ன சின்னபிள்ளைகள் "மொண்டசூரி" போற மாதிரி அப்பா,அம்மாவோட போயிருக்கிறியள்..இது என்ன கொடுமை குருவே :( ..இல்லாட்டி அதுக்கு ஏதாச்சும் இரகசிய காரணம் இருக்கோ...சொன்னியள் எண்டா நானும் அப்படியே செய்ய தான் பாருங்கோ :wub:

எல்லாம் சரி..நானும்,நீங்களும் எப்ப தான் சந்திக்கிறது..நாம இரண்டு பேரும் சந்திக்கும் போது உலக அரசியலிலே பல மாற்றங்கள் கூட ஏற்படலாம் எண்டு அரசியல் ஆய்வாளர் சுப்பு சித்தப்பா சொல்லி இருக்கிறார் எண்டா பாருங்கோவன்.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில ஒருத்தரை சந்திக்கிறது முக்கியமல்ல அந்த சந்திப்பு தொடர்வது தான் முக்கியம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

முரளி,

உங்கள் எழுத்துக்குப் பாராட்டுக்கள். எனினும் எழுதிய தலைப்பிற்கு விபரிப்பு போதாது.

தலைப்பை எழுதிவிட்டும் கதையை எழுதலாம் அல்லது கதையை எழுதிவிட்டும் பொருத்தமான தலைப்பை இடலாம். நான் நினைக்கிறேன் கதையை எழுதிவிட்டு தலைப்பை தேடுவதே எங்களுக்கு உகந்தது.

(உங்களுக்கு தனிமடல் மூலம் எனது விமர்சனத்தை எழுதலாம் என எண்ணினேன் ஆனால் நீங்கள் அதை நிப்பாட்டியுள்ளீர்கள் போலுள்ளது.)

இனிய நட்புகளுக்கு வாழ்த்துகள். பகிர்வு இனிமை!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..இதை நான் இன்னைக்கு தான் பார்க்கிறன் :wub: ..சுவாரசியாமன சந்திப்பு குருவே..ஈழபிரியன் பெரியப்பாவிற்கு மகள்மார் யாரும் இருக்கீனமோ குருவே.. :wub: (இல்ல கேட்டனான்)..அப்படி இருந்தா நானும் போய் சந்திக்க தான் பாருங்கோ..அது எல்லாம் இருகட்டும்.. :D

அது என்ன சின்னபிள்ளைகள் "மொண்டசூரி" போற மாதிரி அப்பா,அம்மாவோட போயிருக்கிறியள்..இது என்ன கொடுமை குருவே :( ..இல்லாட்டி அதுக்கு ஏதாச்சும் இரகசிய காரணம் இருக்கோ...சொன்னியள் எண்டா நானும் அப்படியே செய்ய தான் பாருங்கோ :wub:

எல்லாம் சரி..நானும்,நீங்களும் எப்ப தான் சந்திக்கிறது..நாம இரண்டு பேரும் சந்திக்கும் போது உலக அரசியலிலே பல மாற்றங்கள் கூட ஏற்படலாம் எண்டு அரசியல் ஆய்வாளர் சுப்பு சித்தப்பா சொல்லி இருக்கிறார் எண்டா பாருங்கோவன்.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில ஒருத்தரை சந்திக்கிறது முக்கியமல்ல அந்த சந்திப்பு தொடர்வது தான் முக்கியம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

:(:D

ஈழப்பிரியன் அண்ணாவுடனான முரளியின் சந்திப்பு நல்ல முயற்சி. கடைசி அமெரிக்கா, கனடாவில் உள்ள யாழ்கள உறவுகளை சந்திப்பதற்கு மிக்க அவா.

மகிழ்ச்சியான ஒரு சந்திப்பு தான்.

சொந்தவிடயங்கள் அதிகம் எழுதாமல். பயணத்தை எழுதியுள்ளீர்கள்.

அதுவும் நல்லது தான்...

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் எந்த மானிலத்தில் சந்தித்தீர்கள் என்று சொல்லவில்லை. நானும் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறேன்.

  • தொடங்கியவர்

எல்லாரிண்ட கருத்துக்களுக்கும் நன்றி. மம்மி டடியோட போனால் கொஞ்சம் பாதுகாப்பு மாதிரி தெரியுது. அதான் அப்பிடி ஒரு ஏற்பாடு. நீங்களும் என்னைச் சந்திக்க வரேக்க மம்மி டடியோட வாங்கோ. உங்களுக்கும் அது பாதுகாப்பா இருக்கும். :mellow:

முரளி,

உங்கள் எழுத்துக்குப் பாராட்டுக்கள். எனினும் எழுதிய தலைப்பிற்கு விபரிப்பு போதாது.

தலைப்பை எழுதிவிட்டும் கதையை எழுதலாம் அல்லது கதையை எழுதிவிட்டும் பொருத்தமான தலைப்பை இடலாம். நான் நினைக்கிறேன் கதையை எழுதிவிட்டு தலைப்பை தேடுவதே எங்களுக்கு உகந்தது.

நன்றி பிரபா. இனி நீங்கள் சொன்னமாதிரி முயற்சித்து பார்க்கிறேன்.

அமெரிக்காவில் எந்த மானிலத்தில் சந்தித்தீர்கள் என்று சொல்லவில்லை. நானும் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறேன்.

கந்தப்பு ஈழப்பிரியன் அண்ணா இருக்கிற இடம் உங்களுக்கு தெரியாதா? உங்களையும் விரைவில சந்திக்கவேணும். நீங்கள் சிட்னி மாநிலத்திலையோ இருக்கிறீங்கள்.. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி எண்டு இந்த NAVIGATION ஐ காரில செட்பண்ணிப்போட்டு பயணத்த துவங்கினன். எல்லாம் ஹைவேயில (பெருந்தெரு) நல்லமாதிரிபோய் அந்தக் காசுபோடுற இடத்தில (TOLL BOOTH) ஒரு சின்னச் சிக்கல் வந்திட்டிது. EPASS எண்டால் இதுக்கால போ.. CASH எண்டால் அதுக்கால போ... EPASS இல்லாட்டிக்கு CASH எண்டால் இதுகளுக்கால போ எண்டு அறிவித்தலுகள் சொல்லிச்சிது. நான் அப்ப கடைசி லேனுக்க (ஒழுங்கை) கார விட்டிட்டன். அட பிறகுதான் பார்த்தால் அந்த கடைசி ஒழுங்கை நான் வந்தபாதையில இருந்து பிரிஞ்சு வேற எங்கையோ போகிது. ஓரிரு செக்கன்கள் யோசிச்சுப் பார்த்தன். இது எல்லாம் திடீர் திடீர் எண்டு தன்பாட்டில மூளையுக்க நடக்கவேண்டிய விசயங்கள். எடுக்கப்பட வேண்டிய திடீர் முடிவுகள். கனநேரம் யோசிக்க நேரம் இல்ல. ஏன் எண்டால் இது பெருந்தெரு..

அனைவருக்கும் நல்லிரவு! நன்றி! வணக்கம்!

என்ன பாட்டா காலத்து NAVIGATION-ஆஆஆஆ :lol:

செல்லும் முகவரியை போட்டவுடனேயே கேட்குமே TOLL BOOTH பாதையால போக போறிங்களா அல்லது சாதாரண பாதையால் போக போறிங்களா என்று :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி வாழ்த்துக்கள். நல்லதொரு பதிவு

..நாம இரண்டு பேரும் சந்திக்கும் போது உலக அரசியலிலே பல மாற்றங்கள் கூட ஏற்படலாம் எண்டு அரசியல் ஆய்வாளர் சுப்பு சித்தப்பா சொல்லி இருக்கிறார் எண்டா பாருங்கோவன்.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில ஒருத்தரை சந்திக்கிறது முக்கியமல்ல அந்த சந்திப்பு தொடர்வது தான் முக்கியம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

. நிச்சயம் பல மாற்றங்கள் ஏற்பட வைப்பு உள்ளது .மாற்றங்கள் அரசியலிலையும் ஏற்படலாம் காலநிலையிலையும் ஏற்படலாம் சுனாமிகூட மீண்டும் வரவாய்ப்பு உள்ளது :lol::lol:

  • தொடங்கியவர்

நன்றி சுப்புபபா

என்ன பாட்டா காலத்து NAVIGATION-ஆஆஆஆ :D

செல்லும் முகவரியை போட்டவுடனேயே கேட்குமே TOLL BOOTH பாதையால போக போறிங்களா அல்லது சாதாரண பாதையால் போபபோறிங்களா என்று :lol:

ஐயோ பாருங்கோ தமிழ்லினக்ஸ் பபா நாங்கள் ஏழை மக்கள். :lol: நல்ல Navigation ஆ பாத்து வாங்க கையில காசு இல்ல. :lol: உங்கட Navigation ஐ இரவல் வாங்கலாமோ அவரசம் ஆபத்துக்கு.. பெரிய மனசு இருந்தால் தந்து உதவுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பாட்டா காலத்து NAVIGATION-ஆஆஆஆ :D

செல்லும் முகவரியை போட்டவுடனேயே கேட்குமே TOLL BOOTH பாதையால போக போறிங்களா அல்லது சாதாரண பாதையால் போக போறிங்களா என்று :lol:

2.jpg

மன்னிக்கவும் நீங்கள் சொன்ன உந்த சாமானுகள் இதிலை நிக்கிற கனரகவாகனத்துக்கும் பூட்டலாமோ? :lol:

. நிச்சயம் பல மாற்றங்கள் ஏற்பட வைப்பு உள்ளது .மாற்றங்கள் அரசியலிலையும் ஏற்படலாம் காலநிலையிலையும் ஏற்படலாம் சுனாமிகூட மீண்டும் வரவாய்ப்பு உள்ளது :D:lol:

ஓ..அப்படியா சித்தப்பு அப்ப இதில் இருந்து நீங்கள் சொல்ல வருவதென்னவெண்டால் :lol: ஒரு பட்டாம் பூச்சியின் சிறகின் அதிர்விற்கும்..நானும்,குருவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி எண்டு இந்த NAVIGATION ஐ காரில செட்பண்ணிப்போட்டு பயணத்த துவங்கினன். எல்லாம் ஹைவேயில (பெருந்தெரு) நல்லமாதிரிபோய் அந்தக் காசுபோடுற இடத்தில (TOLL BOOTH) ஒரு சின்னச் சிக்கல் வந்திட்டிது. EPASS எண்டால் இதுக்கால போ.. CASH எண்டால் அதுக்கால போ... EPASS இல்லாட்டிக்கு CASH எண்டால் இதுகளுக்கால போ எண்டு அறிவித்தலுகள் சொல்லிச்சிது. நான் அப்ப கடைசி லேனுக்க (ஒழுங்கை) கார விட்டிட்டன். அட பிறகுதான் பார்த்தால் அந்த கடைசி ஒழுங்கை நான் வந்தபாதையில இருந்து பிரிஞ்சு வேற எங்கையோ போகிது. ஓரிரு செக்கன்கள் யோசிச்சுப் பார்த்தன். இது எல்லாம் திடீர் திடீர் எண்டு தன்பாட்டில மூளையுக்க நடக்கவேண்டிய விசயங்கள். எடுக்கப்பட வேண்டிய திடீர் முடிவுகள். கனநேரம் யோசிக்க நேரம் இல்ல. ஏன் எண்டால் இது பெருந்தெரு..

ஏதோ பெரும்தாக்குதலில் போட்ட திட்டம் போலக் கிடக்கே. வாழ்த்துக்கள். இருந்தாலும் கொடுப்புக்குள் சிரிப்பு தானாகவே வருது.

Edited by பொன்னையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சுப்புபபா

ஐயோ பாருங்கோ தமிழ்லினக்ஸ் பபா நாங்கள் ஏழை மக்கள். :lol: நல்ல Navigation ஆ பாத்து வாங்க கையில காசு இல்ல. :( உங்கட Navigation ஐ இரவல் வாங்கலாமோ அவரசம் ஆபத்துக்கு.. பெரிய மனசு இருந்தால் தந்து உதவுங்கோ

:wub::D:unsure: அப்டேட் பண்ண வேண்டியது தானே(Map). என்ன Navigation உங்களுடையது?

2.jpg

மன்னிக்கவும் நீங்கள் சொன்ன உந்த சாமானுகள் இதிலை நிக்கிற கனரகவாகனத்துக்கும் பூட்டலாமோ? :)

கட்டாயம் பூட்டனும் :):lol: ஆனா என்ன 4-5 மணித்தியாலத்தின் பின் எப்படி பற்றியை சார்ச் பண்ணுறது என்று தான் தெரியலை :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு வணக்கம்.

இன்று தான் இந்த தலைப்பையே பார்க்க கிடைத்தது.இப்போதெல்லாம் பஞ்சாகப் பறந்தாத் தான் வாழ்க்கையைக் கொண்டு நடத்தலாம்.அதனால் மேலோட்டமாக பார்த்துவிட்டு விட்டுவிடுவேன்.

முரளியும் அவரது அம்மா அப்பாவும் வந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது.அவர்களை நன்றாக கவனித்து அனுப்ப முடியவில்லை.கொஞ்ச நேரம் தான் இருந்தார்கள்.சரி பொகப் போயினம் என்று பார்த்தால் உங்கள் தோட்டத்தை ஒருக்கா பார்க்லாமோ என்று கேட்டார்.(இவராவது கேட்டார் தூயவன் திறந்த வீட்டுக்குள் நா... போன மாதிரி தானே பின் கதவைத் திறந்து கொண்டு தானே போய் நின்று பார்த்தார்)நான் நினைக்கிறேன் இவர் எங்கேயோ சுட்டு போடுகிறார் என்று எண்ணுகிறார்களோ தெரியவில்லை.

முரளியை ஓரிரு தடவை தனிமடலில் தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை.

சரி பொகப் போயினம் என்று பார்த்தால் உங்கள் தோட்டத்தை ஒருக்கா பார்க்லாமோ என்று கேட்டார்.(இவராவது கேட்டார் தூயவன் திறந்த வீட்டுக்குள் நா... போன மாதிரி தானே பின் கதவைத் திறந்து கொண்டு தானே போய் நின்று பார்த்தார்)நான் நினைக்கிறேன் இவர் எங்கேயோ சுட்டு போடுகிறார் என்று எண்ணுகிறார்களோ தெரியவில்லை.

ஹா ஹா என்டாலும் நீங்கள் தூயவனை அப்படி சொல்லி இருக்கக் கூடாது.

அழகான தோட்டம் தானே அதுதான் எல்லாரும் பார்க்க ஆசைப்படுகினம் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

eelapirean,

நீங்கள் நியூயோர்க்கா? ஏன் என்றால் வருகின்ற மாதம் (ஆகஸ்ட்) 21-24 வரை அங்கே தான் இருப்பேன் என்று நினைக்கின்றேன்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.குயின்ஸ் பகுதியில் எமது வீடு.நீங்கள் எங்கே வருவீர்கள் என்றால் சந்திக்கலாம்.24ம் திகதி வாசிங்டனில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு போகிறோம்.நீங்களும் வருவதாக இருந்தால் போகலாம்.போகலாமா?

நல்லதொரு உறவு.இப்போ களத்தில் வேறு பெயரில் உலாவுவார்.ஆள் பெரிய கில்லாடி.

ஒரு முறை கடற்கரைக்கு போகலாம் வாங்க என்றால் ஆள் திருமண வீட்டுக்கு போவது போல படப் பொட்டிகளுடன் வந்து நின்றார்.என்னடா இந்த கோலத்தில் வந்து நிற்கிறார் என்று பார்த்தால் பொடி தண்ணீரில் இறங்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.சரி பார்த்தக் கொண்டிரும் என்று ஆளைத் தேடினால் சுற்றி சுற்றி எல்லோரையும் படப்பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தார்.சரி சரி வெளி நாட்டுக்கு புதிதில் எல்லோரும் அப்படித் தான் என்றதும் ஆளுக்கு நல்ல சந்தோசம்.(இதைப் பார்த்தால் நிச்சயம் ஏதாவது எழுதுவார் பார்ப்போம் அல்லது வீட்டுக்க எடுத்து திட்டுகிறாரோ தெரியாது)

  • தொடங்கியவர்

எல்லார் கருத்துக்களுக்கும் நன்றி!..

---------------

ஈழப்பிரியன் அண்ணா நான் யாழ் தனிமடல் சேவை பாவிக்கிறது இல்ல. ஏதுமென்றால் msivagur@gmail.com க்கு தகவலை அனுப்புங்கோ.

---------------

ஓம் அந்த குறிப்பிட்ட நபர் - அவர் ஒரு பெயரில இல்ல இப்ப பல பெயர்களில உலாவாறமாதிரி இருக்கிது..

நல்லதொரு உறவு.இப்போ களத்தில் வேறு பெயரில் உலாவுவார்.ஆள் பெரிய கில்லாடி.

ஒரு முறை கடற்கரைக்கு போகலாம் வாங்க என்றால் ஆள் திருமண வீட்டுக்கு போவது போல படப் பொட்டிகளுடன் வந்து நின்றார்.என்னடா இந்த கோலத்தில் வந்து நிற்கிறார் என்று பார்த்தால் பொடி தண்ணீரில் இறங்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.சரி பார்த்தக் கொண்டிரும் என்று ஆளைத் தேடினால் சுற்றி சுற்றி எல்லோரையும் படப்பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தார்.சரி சரி வெளி நாட்டுக்கு புதிதில் எல்லோரும் அப்படித் தான் என்றதும் ஆளுக்கு நல்ல சந்தோசம்.(இதைப் பார்த்தால் நிச்சயம் ஏதாவது எழுதுவார் பார்ப்போம் அல்லது வீட்டுக்க எடுத்து திட்டுகிறாரோ தெரியாது)

ஆமாம் நல்லதொரு உறவு அக்கா அக்கா என்டு நெடுக கதைப்பார். இப்ப யாழுக்கு வாறதில்லைப் போல

ஈழப்பிரியன் அண்ணா எண்டாலும் உங்களுக்கு துணிவுதான் போங்கோ ஏன் என்டு கேக்கிறியளா?

பின்ன என்ன துணிவா அடிச்சு சொல்லுறியள் வேற பேருல உலாவுகிறார் என்டு. :D:wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.