Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுளை நம்ப முட்டாளே போதும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"The God Theory" என்பதை படியுங்கள்.. பாருங்கள். எமக்குள்ள நேர அளவுக்கு நீங்கள் விளங்காதது போல நடிப்பதற்காகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதற்காகத்தான் நேரடி இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன.

அங்கு போய் வாசித்தறியுங்கள். personal god என்பது என்ன என்பதை அயஸ்டைன் பற்றிய விக்கிபீடியா குறிப்பில் இட்டுள்ளனர் படியுங்கள். மீள மீள ஒரே விசயத்தை ஒட்டிக் கொண்டிருப்பதால் தலைப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் வெளிப்படப் போவதில்லை. குழப்பமான நிலையே வாசகர்களிடம் விடப்படும்.

இப்போ தலைப்புடன் சம்பந்தப்பட்ட விடயத்தை கவனிப்பம்...

"நெடுக்கால போவான் மேற்கோள் காட்டிய ஆங்கில வாக்கியத்தில் அயின்ஸ்டையின் , இந்த உலகைப்பற்றி நாங்கள் அறிந்தவை கொஞ்சம்.ஆனால் அறிய வேண்டியவை அதிகம். இன்னும் அறிய வேண்டியவை பற்றி எனக்கு ஏற்படும் உணர்வையே நான் எனது ஆன்மீக உணர்வாகக் கொள்கிறேன், இதன் அடிப்படியிலையே இந்த அடிப்படை ஒன்றாலையே நான் என்னை ஒரு ஆன்மீகம் உள்ளவனாக வரையறை செய்கிறேன்.என்று கூறுகிறார்.இதே கூற்றை ரிச்சட் டார்க்வின் முதல் எல்லாக் கடவுள் ,சமய மறுப்பாளர்களும் கூறுகிறார்கள். உலகைப் பற்றி இயற்கை பற்றி அறிய வேண்டும் என்னும் உந்துதால் ஒரு ஆன்மிக உணர்வைத் தரும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.அது சமயங்கள் கூறும் ஆன்மீக உணர்வில் இருந்தும் முற்றிலும் வேறு பட்டது."

சமயங்கள் கூறும் ஆன்மீகமும் இயற்கையை ஒட்டியதுதான். சிவன் எனும் பரம்பொருளே ஆக்கல் அழித்தல் காத்தல் அருளல் என்ற இயற்கையின் நிகழ்வுகளோடு ஒட்டியதாகத்தான் உணரப்படுகிறது. இதையேதான் அயன்ஸ்ரைனும் உணர்கிறார். எம்மால் அறிய முடியாத உலகின் உணர்வை.. அவர் ஆன்மீகம் என்று ஏற்றுக் கொள்கிறார். அதேயேதான் இந்து மதமும் சரி பிற மதங்களும் சரி கடவுள் என்று ஆன்மீக அடிப்படையாக ஏற்றுக் கொள்கின்றன.

அயன்ஸ்ரைன் இவர் தான் கடவுள் இப்படித்தான் இருப்பார் என்பவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. personal god என்பதாக அவர் அதையே கருதினார். ஆனால் இந்து மதம் உட்பட மதங்கள் சமயங்கள் பேசும் ஆன்மீகம், மெய்யியல் என்ற இயற்கையின் தன்மை குறித்த உணர்வியல் நிலைகளை அவரும் ஏற்றுக் கொள்கிறார். எம்மக்கள் அதற்கு கடவுள் என்று பெயர் சூட்டிக் கொள்கின்றனர் அவ்வளவும் தான்..! ஆன்மீகம் பற்றிப் பேசுவதே மதங்களில் கடவுளின் இருப்பின் நோக்கம் என்பதை எல்லா மதங்களையும் நோக்குகின்ற போது தெளிவாகப் புலப்படுகிறது.

"Hinduism has always been an environmentally sensitive philosophy. No religion, perhaps, lays as much emphasis on environmental ethics as Hinduism. The Mahabharata, Ramayana, Vedas, Upanishads, Bhagavad Gita, Puranas and Smriti contain the earliest messages for preservation of environment and ecological balance. Nature, or Earth, has never been considered a hostile element to be conquered or dominated. In fact, man is forbidden from exploiting nature. He is taught to live in harmony with nature and recognize that divinity prevails in all elements, including plants and animals. The rishis of the past have always had a great respect for nature. Theirs was not a superstitious primitive theology. They perceived that all material manifestations are a shadow of the spiritual. The Bhagavad Gita advises us not to try to change the environment, improve it, or wrestle with it. If it seems hostile at times tolerate it. Ecology is an inherent part of a spiritual world view in Hinduism. "

http://www.hinduwisdom.info/Nature_Worship.htm

இத்தோட இதையும் வாசியுங்கள்.. இதுதான் நாரதரின் நிலைப்பாடு... இதேதான் இந்துக்களின் நிலைப்பாடும்..!

"கடவுள் என்பது இயற்கையே.இயற்கை இயற்கையின் விதிகளுக்கு அமைவாகவே நடக்கிறது.அது கடவுளால் படைக்கப்படவில்லை.அதில் எந்த தெய்வாம்சமும் இல்லை.கடவுள் என்னும் எல்லாம் வல்ல ஒன்று இல்லை.இது அடிப்படையில் கடவுளை மறுத்து இயற்கைய முன் நிறுத்தும் கடவுள் மறுப்பின் அடிப்படை."

இந்த இயற்கையை ஆக்கியுள்ள அந்த ஏதோ ஒன்றைத்தான் கடவுள் எங்கின்றனர். இந்த இயற்கையில் தான் அதுவும் அடங்குகிறது. இதைத்தான் அயன்ஸ்டைனும் ஏற்றுக் கொள்கிறார். இந்துக்களும் ஏற்றுக் கொள்கின்றனர். :lol::lol:

Edited by nedukkalapoovan

  • Replies 177
  • Views 24.3k
  • Created
  • Last Reply

அறிவுதான் இந்த அண்டங்களை இயக்கி ஆள்கின்றது, என்பதுதாhன் உண்மை. என்பது இப்போது புலநாகிக் கொண்டு வருகிறது. மனிதனின் கண்டுபிடிப்புகளால் அண்டங்கள் ஆளப்படவில்லை, என்பதும் இது வரையான கருத்தடல்களில் வெளிப்பட்டிருக்கிறது.

அறிவு தான் இந்த அண்டங்களை இயக்கி ஆளுகின்றது என்பது எங்கே வெளிப்படிருக்கிறது என்பதை அறியத் தரவும்.இயற்கை இயற்கையின் விதிகளுக்கு அமைவாக இயங்குகிறது.அதன் விதிகளை அறிவியல் கண்டுபிடிக்கிறது.

விதிகள் என்னும் போது அங்கே ' தனிச்சையாக' செயற்படும் அல்லது இயற்கையின் விதிகளில் தலையிடும் எல்லாம் வல்ல கடவுள் என்னும் கோட்பாடு இல்லாது போய் விடுகிறது.இயற்கையின் விதிகளில் ஒருவர் தலையிட்டால் அவை விதிகளாகாது.ஆகவே எல்லாம் வல்ல தலையிடுபவர் ஒருவர் இருக்கிறார் என்பதை இயற்கையின் விதிகளைக் கண்டு பிடிக்கும் அறிவியல் ஏற்றுக் கொள்வதில்லை.

கண்டுபிடிப்புகள் நிருபணங்கள் அறிவிலிருந்து தெரிந்து கொண்டதற்கான அடையாளங்கள் மட்டுமே. அதுவே அறிவாகிவிடாது. இன்றைய அறிவியல் நாளை மாற்றமடையும்.

நீங்கள் மீண்டும் அறிவு என்பதையும் இயற்கையின் விதிகள் என்பதையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.

இறைவனின் தன்மையும் அத்தகையதுதான். இதோ அடைந்துவிட்டேன் என உணரப்படும் போது அது மேலும் விசாலித்து நிற்கும்.

நெடுக்கால போவோனின் கூற்று இங்கு பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றே நினைக்கின்றேன். "கொள்கையளவில்" என்ற கருத்து தத்துவ நிலையில் என்ற பொருளாகலாம் என்றே நினைக்கின்றேன்.

நாரதரின் முடிபுகள் ஆதாரங்களைக் கண்டுகொள்ள முயற்சிப்பதுதான். இது அவருக்கே தெரியும். ஆதாரத்தை எவராலும் கொடுக்க முடியாது என்பது. காரணம் மனிதனின் எல்லைக்குட்பட்ட அறிவுதான். "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்றே இறைவன் பற்றிய ஆதாரப்படுத்துதலை நம் முன்னோர் கூறியுள்ளனர்.

நிச்சயமாக ஆதாராம் இருந்தால் இந்த விவாதமே அவசியம் அற்றது.கடவுள் பற்றிய மனிதனின் நம்பிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.மனிதன் தனது அறிவாற்றாலால் தேட வேண்டியவை இன்னும் பல இருக்கின்றது.அந்தத் தேடலை செய்ய வேண்டியது எமது கடமை.அதை விடுத்து பல் ஆயிரம் ஆண்டுகளின் முன் பண்டைய மனிதனால் புனையப்பட்ட சமய நம்பிக்கைகள் தான் உண்மையானவை அது தான் மனித அறிவின் எல்லை என்று சொல்வது அர்த்தம் அற்றது.மனித அறிவு என்பது வளர்ந்து வருவது.அதன் எல்லை இது தான் என்று எவராலும் கூற முடியாது.மனித அறிவு என்பதற்கு தற்போது ஒரு எல்லை இருக்கலாம் ஆனால் அந்த எல்லை என்பது நிலையானது அல்ல, மனித அறிவின் எல்லைகளை நகர்த்துவதே அறிவியற் தேடல்.அதை நகர்த்தாமால் பண்டைய நம்பிக்கைளில் தொங்கிக் கொண்டு இருப்பனவே சமயங்களும், சமயங்கள் போதிக்கும் கடவுள் நம்பிக்கையும்.

ஒரு தனிமனிதனை எது வழிப்படுத்துகிறது?

ஒரு தனி மனிதனை அவனது எண்ணங்களே வழிப்படுதுகின்றன,அதற்கு வேறு எதுவும் அவசியம் அற்றது.

என்பது தெளிவானது. அதன் பெயர் அறிவென்றுதான் நான் கருதுகிறேன். அந்த அறிவும் அதன் ஆற்றலும் ஒரு எல்லைக்குட்பட்டுத்தான் செயற்படும்போது, அறியப்பட்ப சிலவும் அறியப்படாத பலவும் அதன் ஒழுங்கில் இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதில் எல்லையற்ற அறிவொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை தத்துவ ரீதியாகக் கூட ஏற்கமுடியவில்லை என்பதை என்னவென்பது.

ததுவார்த்த ரீதியாக் கூற வேண்டு மெனில் இவ்வாறு கூறலாம்.

இயற்கை என்பது இருப்பது உண்மை.அது அதன் விதிகளுக்கு அமைவாக இயங்கிறது.அதன் விதிகளை அறிவியல் கண்டு பிடிக்கிறது.விதிகள் மாற்றியமைக்கப்பட்டால் அவை விதிகளாகா.ஆகவே விதிகளை மாற்றி அமைக்கவோ இயற்கையில் தலையிடவோ எல்லாம் வல்ல கடவுள் என்பவன் இல்லை என்றாகிறது.மனிதன் இது வரை பின் பற்றிய எல்லாம் வல்ல கடவுள் என்பதுவும் கடவுள் எனக்கு உதவி செய்வார் என்பதுவும் கடவுளை நான் வணங்க வேண்டும் என்பதும் கடவுளை நான் வணக்கினால் அவர் எனக்கு விதிகளை மாற்றி அமைத்து உதவுவார் என்பதுவும் இல்லாது போய் விடுகிறது.இன்றைய சமயங்களின் எல்லாத்ததுவார்த்த அடிப்படைகளும் இந்த தத்துவார்த்த நிலையில் இல்லாது போய் விடுகின்றன.

ஆகவே அங்கே என்சி நிற்கும் கேள்விகள் , இயற்கையின் விதிகளை யார் அல்லது எது எதற்காக உருவாக்கியது அல்லது விதிகள் உருவாக்கப்பட்டவையா , விதிகளை உருவாக்குவதற்கான விதிகள் எவை , பல விதிகளில் சாத்தியமானது அதுவாகவே உருவானதா என்னும் கேள்விகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றிய தத்துவார்த்த ரீதியிலான கேள்விகளுக்கு விடைகளைத் தேடியே அறிவியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.அதனையே தனது ஆன்மீகமாக அயின்ஸ்டைன் போன்றவர்கள் கூறினார்கள்.தத்துவார்த்த நிலைகளை நிரூபிப்பதற்கான தேடலே அறிவியல்.இதுவரை அறிவியலால் நிரூபிக்கப்பட்டவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் மனிதனால் இது வரை உருவாக்கப்ட்ட சமயங்களின் தத்துவார்த்த நிலைகள் எல்லாமுமே வெறும் கற்பனைகள் என்று ஆகிவிடுகிறது.

தத்துவார்த்த ரீதியான கேள்விகள் இருக்கின்ற அவறிற்கான விடைகள் இல்லை.அந்த விடைகளைத் தேடி அறியக்கூடிய மிகக் கூர்மையான் ஒரு முறமையே அறிவியல்.ஆகவே நாங்கள் முன் நோக்கி நகர வேண்டுமே ஒழிய மறுதலிக்கப்பட்ட தத்துவார்த்த நிலைகளில் நம்பிக்க்கைகளில் தொங்கிக் கொண்டு இருக்கமுடியாது.

:lol:

"The God Theory" என்பதை படியுங்கள்.. பாருங்கள். எமக்குள்ள நேர அளவுக்கு நீங்கள் விளங்காதது போல நடிப்பதற்காகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதற்காகத்தான் நேரடி இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன.

அங்கு போய் வாசித்தறியுங்கள். personal god என்பது என்ன என்பதை அயஸ்டைன் பற்றிய விக்கிபீடியா குறிப்பில் இட்டுள்ளனர் படியுங்கள். மீள மீள ஒரே விசயத்தை ஒட்டிக் கொண்டிருப்பதால் தலைப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் வெளிப்படப் போவதில்லை. குழப்பமான நிலையே வாசகர்களிடம் விடப்படும்.

இப்போ தலைப்புடன் சம்பந்தப்பட்ட விடயத்தை கவனிப்பம்...

சமயங்கள் கூறும் ஆன்மீகமும் இயற்கையை ஒட்டியதுதான். சிவன் எனும் பரம்பொருளே ஆக்கல் அழித்தல் காத்தல் அருளல் என்ற இயற்கையின் நிகழ்வுகளோடு ஒட்டியதாகத்தான் உணரப்படுகிறது. இதையேதான் அயன்ஸ்ரைனும் உணர்கிறார். எம்மால் அறிய முடியாத உலகின் உணர்வை.. அவர் ஆன்மீகம் என்று ஏற்றுக் கொள்கிறார். அதேயேதான் இந்து மதமும் சரி பிற மதங்களும் சரி கடவுள் என்று ஆன்மீக அடிப்படையாக ஏற்றுக் கொள்கின்றன.

அயன்ஸ்ரைன் இவர் தான் கடவுள் இப்படித்தான் இருப்பார் என்பவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. personal god என்பதாக அவர் அதையே கருதினார். ஆனால் இந்து மதம் உட்பட மதங்கள் சமயங்கள் பேசும் ஆன்மீகம், மெய்யியல் என்ற இயற்கையின் தன்மை குறித்த உணர்வியல் நிலைகளை அவரும் ஏற்றுக் கொள்கிறார். எம்மக்கள் அதற்கு கடவுள் என்று பெயர் சூட்டிக் கொள்கின்றனர் அவ்வளவும் தான்..! ஆன்மீகம் பற்றிப் பேசுவதே மதங்களில் கடவுளின் இருப்பின் நோக்கம் என்பதை எல்லா மதங்களையும் நோக்குகின்ற போது தெளிவாகப் புலப்படுகிறது.

"Hinduism has always been an environmentally sensitive philosophy. No religion, perhaps, lays as much emphasis on environmental ethics as Hinduism. The Mahabharata, Ramayana, Vedas, Upanishads, Bhagavad Gita, Puranas and Smriti contain the earliest messages for preservation of environment and ecological balance. Nature, or Earth, has never been considered a hostile element to be conquered or dominated. In fact, man is forbidden from exploiting nature. He is taught to live in harmony with nature and recognize that divinity prevails in all elements, including plants and animals. The rishis of the past have always had a great respect for nature. Theirs was not a superstitious primitive theology. They perceived that all material manifestations are a shadow of the spiritual. The Bhagavad Gita advises us not to try to change the environment, improve it, or wrestle with it. If it seems hostile at times tolerate it. Ecology is an inherent part of a spiritual world view in Hinduism. "

http://www.hinduwisdom.info/Nature_Worship.htm

இத்தோட இதையும் வாசியுங்கள்.. இதுதான் நாரதரின் நிலைப்பாடு... இதேதான் இந்துக்களின் நிலைப்பாடும்..!

இந்த இயற்கையை ஆக்கியுள்ள அந்த ஏதோ ஒன்றைத்தான் கடவுள் எங்கின்றனர். இந்த இயற்கையில் தான் அதுவும் அடங்குகிறது. இதைத்தான் அயன்ஸ்டைனும் ஏற்றுக் கொள்கிறார். இந்துக்களும் ஏற்றுக் கொள்கின்றனர். :lol::lol:

நெடுக்கல்போவான்,

இந்து சமயம் என்றால் என்ன என்பதை எவ்வாறும் திரிக்கலாம்.

நீங்கள் திருக்கும் நிலை தான் இந்து சமயம் என்பது உங்கள் விதண்டா வாதம் என்பதை எல்லோரும் அறிவோம்.

மேலும் அயின்ஸ்டயின் personal god என்று கூறியது நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்கள் கூறும் சிவன் பார்வதி யேசு அல்லா என்னும் கடவுளர்களைத் தான்.இந்தக் கடவுளர்களையும் சமயங்களையும் அவர் முற்றாக மறுதலித்தார்.இந்து சமயத்தில் சிவன் விசுணு என்னும் கடவுளர்கள் இல்லை என்றால் இந்து சமயமே இல்லை.இயற்கை தான் கடவுள் என்றால் அங்கே 'கடவுள்' என்னும் தனிப்பட்ட ஒருவர் அவசியம் அற்றது.தமிழரின் பாரம்பரியத்தில் இயற்கையைப் வியந்து வழி பட்டனர்.அத்தோடு தனிப்பட்ட கடவுள் ஒருவர் இருகிறார் என்பதையும் மறுதலித்த சித்தர்களின் தத்துவார்த்த பாரம்பரியமும் தமிழர்களிடம் உண்டு.இவை தமிழரின் பாரம்பரியங்களே தவிர தனிப்பட்ட கடவுளர்களை யாகங்கள் மூலம் வழிபட்ட வைதீக சமயமான இந்து சமயத்தில் அவ்வாறான பாரம்பரியங்கள் இல்லை.ஆகவே தான் நாம் சூரியனை இயற்கையை வழி படும் தமிழரின் பாரம்பரியமான பொங்கலைக்கொண்டாடுகிறோம்.

இயற்கை பற்றிய பிரமிப்பு நிச்சயமாக எனக்கு இருக்கிறது, அது அறிவியலாளன் என்னும் வகையில்.இயற்கை பற்றிய பிரமிப்புக்கும் அறிவியற் தேடல் என்னும் ஆன்மீக உணர்வுக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தச் சமயத்தையோ கடவுளையோ பின் பற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. :lol:

Edited by narathar

"The God Theory" என்பதை படியுங்கள்.. பாருங்கள். எமக்குள்ள நேர அளவுக்கு நீங்கள் விளங்காதது போல நடிப்பதற்காகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதற்காகத்தான் நேரடி இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன.

Personal god என்று அயின்ஸ்டையின் எதைச் சொன்னார் என்று உங்களுக்கு விளங்கி இருந்தால் அயிண்ஸ்டயின் கடவுள் உண்டென்று சொன்னாரென்று சொல்லிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.விளக்கம் இல்லாமால் இணைப்புக்களை இணைக்க வேண்டாம்.அவற்றைர்றைப் படித்து விட்டு இணையுங்கள்.உங்களுக்கு மேலும் புரிதல் ஏற்படும்.ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் நீங்கள் கருத்தாடவில்லை. நீங்கள் நினைதது யூகிப்பது தான் சரி என்னும் நோக்கிலையே கருத்தாடுகிறீர்கள்.முதலில் வாசியுங்கள், கருதுக்களை உள் வாங்குங்கள் அதன் பின் ஆதரங்களை இணையுங்கள். :lol:

நான் நினைக்கிறேன் தங்களுக்கு சில விடயங்களில் சரியான விளக்கம் இல்லை என்று. அயன்ஸ்ரைன் பெயரிட்டுள்ள நாம் விளங்க முடியாத ஒன்று என்றதை இந்துக்கள் சிவனாக, கடவுளாக.. பார்க்கின்றனர்.. இந்து மதம் அடிப்படையில் இயற்கையைத் தான் வழிபடுகிறது. நாம் இங்கு உருவ வழிபாடு பற்றியல்ல பேசுகின்றோம். உருவ வழிபாடு என்பது இயற்கையை மெய்யியல் ரீதியில் உணர உள்ள வழிமுறைகளில் ஒன்று. அதற்கு ஆன்மீக விளக்கங்கள் இந்து மதத்தில் போதிய அளவுக்கு உண்டு. நாம் இங்கு பேசுவது இந்து தத்துவத்தின் அடிப்படை எது என்றுதான். அதை அவர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளனர். அதே நிலைப்பாடுதான் அயஸ்ரைனினதும்.

இது இந்துக்களின் தத்துவகக் கோட்பாடு இயற்கையோடு ஒட்டியது..

They perceived that all material manifestations are a shadow of the spiritual.

இது அயன்ஸ்ரைனின் நிலைபாடு..

A knowledge of the existence of something we cannot penetrate, of the manifestations of the profoundest reason and the most radiant beauty, which are only accessible to our reason in their most elementary forms it is this knowledge and this emotion that constitute the truly religious attitude; in this sense, and in this alone, I am a deeply religious man.

உங்களால் முடிந்தால் இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடென்ன என்று சொல்லுங்கள்.

இதுவும் அயஸ்ரைனின் நிலைப்பாடுதான்..

I believe in Spinoza's God, who reveals Himself in the lawful harmony of the world, not in a God Who concerns Himself with the fate and the doings of mankind

அயஸ்டைன் கடவுள் பற்றி என்ன எண்ணினார் என்பதை அறியாத வாசகர்களுக்காக...

Einstein also stated: "I have repeatedly said that in my opinion the idea of a personal God is a childlike one. You may call me an agnostic, but I do not share the crusading spirit of the professional atheist whose fervor is mostly due to a painful act of liberation from the fetters of religious indoctrination received in youth." He is reported to have said in a conversation with Hubertus, Prince of Lwenstein-Wertheim-Freudenberg "In view of such harmony in the cosmos which I, with my limited human mind, am able to recognize, there are yet people who say there is no God. But what really makes me angry is that they quote me for the support of such views."[54] Einstein clarified his religious views in a letter he wrote in response to those who claimed that he worshipped a Judeo-Christian god:

Einstein published a paper in Nature in 1940 entitled "Science and Religion" which gave his views on the subject.[57] He says that: "a person who is religiously enlightened appears to me to be one who has, to the best of his ability, liberated himself from the fetters of his selfish desires and is preoccupied with thoughts, feelings and aspirations to which he clings because of their super-personal value regardless of whether any attempt is made to unite this content with a Divine Being, for otherwise it would not be possible to count Buddha and Spinoza as religious personalities. Accordingly a religious person is devout in the sense that he has no doubt of the significance of those super-personal objects and goals which neither require nor are capable of rational foundation In this sense religion is the age-old endeavour of mankind to become clearly and completely conscious of these values and goals, and constantly to strengthen their effects." He argued that conflicts between science and religion "have all sprung from fatal errors." "[E]ven though the realms of religion and science in themselves are clearly marked off from each other" there are "strong reciprocal relationships and dependencies science without religion is lame, religion without science is blind a legitimate conflict between science and religion cannot exist." In Einstein's view, "neither the rule of human nor Divine Will exists as an independent cause of natural events. To be sure, the doctrine of a personal God interfering with natural events could never be refuted by science, for [it] can always take refuge in those domains in which scientific knowledge has not yet been able to set foot." (Einstein 1940, pp. 605,607)

http://en.wikipedia.org/wiki/Albert_Einstein

கருத்தாடலை திசை திருப்பாமல் தலைப்போடு பேசுங்கள். உங்கள் விளக்கமின்மைகளை அடுத்தவர்கள் மீது சுமத்திவிட்டு பல கட்டுரைகளை ஒட்டி விவாதத்தைக் குழப்பாதீர்கள். இங்கு யூரியூப் அடிப்படையில் விவாதத்தைக் கொண்டு செல்ல முற்பட்டவர் தாங்கள். இப்போ அதையே கடிந்தும் கொள்கிறீர்கள். விவாதம் என்பது மொழிபெயர்ப்பல்ல. குறிப்பிட்ட விடயங்கள் சார்ந்து உங்களின் சுயநிலைப்பாடு என்ன என்பதுதான்..! :lol:

Edited by nedukkalapoovan

எனது முன்னைய கருத்தை காணவில்லை. எங்கை தேடுவது எண்று தெரியவில்லை.

விஞ்ஞானத்தை கொண்டு எதை எல்லாம் நிறுவ முடியும் என்பதில் யாழ்கள தலைவர் மேதகு நாரதருக்கு நிறைய விடயங்கள் தெரிந்து இருக்கிறது. அவரின் அறிவுக்கு அவர் நாசாவில் வேலை செய்யவேண்டியவர். அவரை மிஞ்சிய அறிவாளியை உலகம் கண்டதில்லை.

அணு என்பதை பிரித்து அதனால் உருவாக்க கூறுகள் என்ன, அதனால் விளைவிக்க கூடிய பலன்களையும் விஞ்ஞானம் கண்டுகொண்டது. அது உண்மைதான்

ஆனால் அணு எப்படி எதனால் (காரணம், நிகழ்தகவு)உருவானது என்பதை விஞ்ஞானிகள் சொல்லி விட்டார்களா.? அதுவும் ஒருமித்த குரலில் ஒரே கருத்தாய். அப்படி தராவுகளை நாரதர் நிறுவினால் நானும் கடவுளுக்கான மூலம் எங்கே என்பதை விஞ்ஞான நீதியில் காட்ட முயற்ச்சிக்கிறேன். உலகில் உருவான பொருட்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் எல்லாருக்கும் ( எல்லாவற்றுக்கும்) பயன் படும் வகையில் உருவாகி இருக்கிறது. அதன் உருவாக்க மாயை என்ன.? அது எதன் மூலப்பொருளால் உருவானது என்பதை பகுத்தறிவதை விஞ்ஞானம் எண்று சொல்ல முடியும், அது ஏன் உருவானது எனும் பதிலை விஞ்ஞானத்தால் சொல்ல முடியுமா.

அணுக்கள் உலகில் தானாய் தோண்றியது ( கடவுளால் அல்ல எண்றாலும் ) அதனால் இயற்கையிலே ஏற்பட்டு இருக்கும் பலன்கள் ஏராளம். ஆனால் விஞ்ஞான சமைத்த அணுவின் பயன்கள் எல்லாம் கதிரியக்க உயிர் அபாயத்தை சுட்டுகிறது. மனிதன் படைத்த அனைத்துமே மனிதனுக்கு ஆபத்தாகத்தான் இருக்கிறது, ஆனால் தானக தோண்றியவை அப்படி இல்லையே, மனிதனின் சக்திதான் எல்லாவற்றிலும் பெரியது அதை மீறிய சக்தி இல்லை எண்றால் கடவுள் இல்லை எனலாம். ஆனால் அப்படி இல்லையே ஏன் இந்த தடுமாற்றம்.?

(என்னால் நிறைய தட்டச்சு செய்ய முடியவில்லை, காலப்போக்கில் முயற்ச்சி செய்கிறேன்)

Edited by பொய்கை

நான் நினைக்கிறேன் தங்களுக்கு சில விடயங்களில் சரியான விளக்கம் இல்லை என்று.

எனக்கு எது விளங்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி விளக்கினால் அதனை விளங்கிக் கொள்ள முற்படுவேன்.

அயன்ஸ்ரைன் பெயரிட்டுள்ள நாம் விளங்க முடியாத ஒன்று என்றதை இந்துக்கள் சிவனாக, கடவுளாக.. பார்க்கின்றனர்..

விளக்க முடியாத ஒன்றுருக்கு பெயருட்டு அதற்கு ஒரு வடிவம் தன்மை என்பவற்றைக் கொடுப்பது தான் முட்டாள்த் தனமானது என்பதே எனது வாதமாக இருந்து வந்துள்ளது என்பதை நீங்கள் ஆர அமர இருந்து யோசித்தால் விளங்கிக் கொள்ளலாம்..

இந்து மதம் அடிப்படையில் இயற்கையைத் தான் வழிபடுகிறது.

இயற்கையை வழிபடுவது எதற்காக? அதன் நோக்கம் என்ன? இந்து மதம் இயற்கையை எவ்வாறு வழிபடுகிறது? இந்து மத்தில் இருக்கும் சிவன் பார்வதி எல்லாம் இயற்கை என்றால் ஏன் அவறிற்க்கு அர்ச்சனை செய்வான் ஏன் அவறிற்க்கு பல்வேறு புராண இதிகாசங்களைச் சொல்வான்.இவை எல்லாம் தேவயற்றவை.

நாம் இங்கு உருவ வழிபாடு பற்றியல்ல பேசுகின்றோம்.

இந்து சமயம் நடைமுறையில் உருவ வாழிபாட்டையே நாடாத்துகிறது. அங்கே நீங்கள் பேசினாலும் பேசா விட்டாலும் இந்து சமயம் என்பது நடைமுறையில் அவ்வாறு தான் இருக்கிறது.இந்து சமயதை நம்புகிறவர்கள் உருவ வழிபாட்டைச் செய்வது அந்த உருவத்தை கடவுள் என்று நம்பியே அந்தக் கடவுள் தமக்கு அருள் பாலிப்பார் என்பதை நம்பியே.இல்லை என்று நீங்கள் வாதிட்டால் அது உங்களின் விதண்டாவதமே ஒழிய உண்மை அல்ல.

உருவ வழிபாடு என்பது இயற்கையை மெய்யியல் ரீதியில் உணர உள்ள வழிமுறைகளில் ஒன்று. அதற்கு ஆன்மீக விளக்கங்கள் இந்து மதத்தில் போதிய அளவுக்கு உண்டு. நாம் இங்கு பேசுவது இந்து தத்துவத்தின் அடிப்படை எது என்றுதான். அதை அவர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளனர். அதே நிலைப்பாடுதான் அயஸ்ரைனினதும்..

ஏற்கனவே சுட்டிக் காட்டிய படி ஒரு மததின் தத்துவ நிலைப்பாடு என்பது பொதுப் பரப்பில் அது எவ்வாறு பின் பற்றப்படுகிறது என்பதில் இருந்து தான் வருகிறதே தவிர ,உங்களதோ இந்து சமய இணையத் தளங்களின் திரிப்புக்களில் இருந்தோ அல்ல. நான் முன்னரே சுட்டிக் காட்டிய படி இயற்கை தான் கடவுள் என்றால் அந்த இயற்கையை மாற்ற வல்ல ஒரு கடவுளை உருவமாக வழிபட வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் இயற்கையின் நியதிகளை மாற்ற முடியாது.அவ்வாறு மாற்றவல்ல எல்லாம் வல்ல சக்தி என்று ஒன்று கிடையாது.

They perceived that all material manifestations are a shadow of the spiritual.

இது இந்துக்களின் தத்துவகக் கோட்பாடு இயற்கையோடு ஒட்டியது....

இந்துக்களின் தத்துவக் கோட்பாடு என்று எல்லாவற்றையுமே சொல்லலாம் எனெனில் இந்து மதத்தை வரையறை செய்யும் ஒரு குறிபிட்ட கோட்பாடு கிடையாது.

// believe in Spinoza's God, who reveals Himself in the lawful harmony of the world, not in a God Who concerns Himself with the fate and the doings of mankind//

ஏற்கனவே விளக்கியது போல் அயிண்ஸ்டயின் பின் பற்றிய கடவுள் பற்றிய கோட்பாட்டில் மனிதனின் வாழ்க்கையில் தலையிடாதா தலையிட முடியாத ஸ்பினோசாவின் இயற்கை என்னும் கடவுளையே நம்பியதாகக் கூறி உள்ளார்.இந்து மதம் மனித வாழ்வில் தலையிடும் கடவுளர்கள் பற்றியும் அவற்றை வணக்குவதன் மூலம் மோட்சம் முக்தி என்பனவற்றை ஒரு தனி மனிதன் அடைய முடியும் என்றும் கூறுகிறது.ஆகவே மொட்டந் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சுப்போடும் விதண்டாவதத்தைத் தொடர்ந்து செய்யாமல் கூறப்பட்ட கருதுகக்ளை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.விதண்டாவாததின் மூலம் வீணாக எல்லோருடைய நேரத்தையும் வீணாக்க வேண்டாம்.

அயன்ஸ்டீன் கடவுள் பற்றி என்ன எண்ணினார் என்பதை அறியாத வாசகர்களுக்காக...

Einstein also stated: "I have repeatedly said that in my opinion the idea of a personal God is a childlike one. You may call me an agnostic, but I do not share the crusading spirit of the professional atheist whose fervor is mostly due to a painful act of liberation from the fetters of religious indoctrination received in youth." He is reported to have said in a conversation with Hubertus, Prince of Lwenstein-Wertheim-Freudenberg "In view of such harmony in the cosmos which I, with my limited human mind, am able to recognize, there are yet people who say there is no God. But what really makes me angry is that they quote me for the support of such views."[54] Einstein clarified his religious views in a letter he wrote in response to those who claimed that he worshipped a Judeo-Christian god:

கருத்தாடலை திசை திருப்பாமல் தலைப்போடு பேசுங்கள். உங்கள் விளக்கமின்மைகளை அடுத்தவர்கள் மீது சுமத்திவிட்டு பல கட்டுரைகளை ஒட்டு விவாதத்தைக் குழப்பாதீர்கள். :lol:

கருத்தாடலை நான் எங்கே திசை திருப்பி இருக்கிறேன் ,எங்கே எனக்கு விளக்க இன்மை இருக்கிறது என்பவற்றை குறிப்பிட்டு எழுதவும் எழுத்தமாற்றாக ஆதாரம் அற்று குற்றம் சாட்டுவதைத் தவிர்க்கவும்.மேலே அயின்ஸ்டயின் மிகத் தெளிவாகவே தான் சமயங்கள் சொல்லும் தனி நபர் வணக்கும் கடவுள்களை ஏன் நம்புவதில்லை என்று சொல்லி இருக்கிறார்.ஆங்கிலத்தில் இருப்பது உங்களுக்கு விளங்கவில்லையா ஆச்சரியமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே விளக்கியது போல் அயிண்ஸ்டயின் பின் பற்றிய கடவுள் பற்றிய கோட்பாட்டில் மனிதனின் வாழ்க்கையில் தலையிடாதா தலையிட முடியாத ஸ்பினோசாவின் இயற்கை என்னும் கடவுளையே நம்பியதாகக் கூறி உள்ளார்.இந்து மதம் மனித வாழ்வில் தலையிடும் கடவுளர்கள் பற்றியும் அவற்றை வணக்குவதன் மூலம் மோட்சம் முக்தி என்பனவற்றை ஒரு தனி மனிதன் அடைய முடியும் என்றும் கூறுகிறது.ஆகவே மொட்டந் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சுப்போடும் விதண்டாவதத்தைத் தொடர்ந்து செய்யாமல் கூறப்பட்ட கருதுகக்ளை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.விதண்டாவாததின் மூலம் வீணாக எல்லோருடைய நேரத்தையும் வீணாக்க வேண்டாம்.

தலைப்பு கடவுளை நம்ப முட்டாளே போதும் என்பது.

தற்போது தலைப்பு இயற்கையை கடவுளாக நம்பு என்றாகி இருக்கிறது. வரவேற்கத்தக்க மாற்றம்.

இந்த மாற்றத்தோடு இருந்து விவாதத்தைத் தொடர்வது நல்லது என்று நினைக்கிறேன்.

(உதாரணத்துக்கு நான் எங்கும்

Personal god என்று அயின்ஸ்டையின் எதைச் சொன்னார் என்று உங்களுக்கு விளங்கி இருந்தால் அயிண்ஸ்டயின் கடவுள் உண்டென்று சொன்னாரென்று சொல்லிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
நீங்கள் மேற்கண்டு எழுதியவாறு எழுதி இருக்கவில்லை. ஆனால் உங்கள் வசதிக்கு ஏற்ப எனது கருத்தை திரித்துவிட்டு.. கருத்தை விளங்கிக் கொள்ளவில்லை என்று என்மீதே குறை கண்டு கருத்தாடலின் திசை திருப்பியது நானல்ல..! மேலும் நான் அயன்ஸ்டைனின் கடவுள் சமயம் பற்றிய நிலைப்பாடுகளை தெளிவாகவே ஆதாரத்துடன் தந்திருக்கிறேன். எனவே என்னில் குறை பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அவரே சொல்கிறார் இப்படி "He argued that conflicts between science and religion "have all sprung from fatal errors." "[E]ven though the realms of religion and science in themselves are clearly marked off from each other" there are "strong reciprocal relationships and dependencies science without religion is lame, religion without science is blind a legitimate conflict between science and religion cannot exist."

மேற்கொண்டு இந்து மதம் இயற்கையை வழிபடும் மதமா சமயமா என்பதை தெளிவாக வேறொரு தலைப்பில் அல்லது இங்கேயே விரிவாக ஆராய்வோமே..! இப்போதைக்கு.. இயற்கையை கடவுளாக வரிக்கலாம் என்பதை மக்களுக்குச் சொல்லலாம். மனிதன் அறிவியலால் விளங்க முடியாத இயற்கை என்பது கடவுளாக இருக்கத்தக்கது.. என்பதை விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதை நாம் இங்கு சொல்லிக் கொள்ளலாம்.

எனி அந்தக் கடவுளுக்கு சிவன்.. பார்வதி.. முருகன் என்று பெயரிட்டது சரியா தவறா.. அதன் ஆன்மீக தத்துவவியல் என்ன..... என்பவற்றை அந்த மதங்களின் ஆன்மீக தத்துவத்துவ விளக்கங்களோடு அணுக வேண்டும். அது ஒன்றும் சாதாரணமாக எமது கற்பனையில் எழும் சிந்தனைக்களுக்கு அமைய குறிப்பிடும் கருத்துக்களாக அமைய முடியாது. அந்த வகையில் எனி எங்கள் ஆறுமுகநாவலரை இங்கு கருத்துப் பகர அழைக்கலாம் என்று நினைக்கிறேன்..! :lol:

இந்துக்கள் இயற்கையை கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றனர் என்பதைச் சொல்லும் கட்டுரை இங்கு..

Hinduism has always been an environmentally sensitive philosophy. No religion, perhaps, lays as much emphasis on environmental ethics as Hinduism. The Mahabharata, Ramayana, Vedas, Upanishads, Bhagavad Gita, Puranas and Smriti contain the earliest messages for preservation of environment and ecological balance. Nature, or Earth, has never been considered a hostile element to be conquered or dominated. In fact, man is forbidden from exploiting nature. He is taught to live in harmony with nature and recognize that divinity prevails in all elements, including plants and animals. The rishis of the past have always had a great respect for nature. Theirs was not a superstitious primitive theology. They perceived that all material manifestations are a shadow of the spiritual. The Bhagavad Gita advises us not to try to change the environment, improve it, or wrestle with it. If it seems hostile at times tolerate it. Ecology is an inherent part of a spiritual world view in Hinduism.

http://www.hinduwisdom.info/Nature_Worship.htm

Edited by nedukkalapoovan

தலைப்பு கடவுளை நம்ப முட்டாளே போதும் என்பது.

தற்போது தலைப்பு இயற்கையை கடவுளாக நம்பு என்றாகி இருக்கிறது. வரவேற்கத்தக்க மாற்றம்.

இந்த மாற்றத்தோடு இருந்து விவாதத்தைத் தொடர்வது நல்லது என்று நினைக்கிறேன்.

தலைப்பில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை.இயற்கை தான் கடவுள் என்றால் அதனை இயற்கை என்று அழைப்பதே சிறந்தது.ஏனெனில் நிறுவனப்படுத்தப்பட்ட இந்து கிரித்துவ இசுலாமிய மதங்கள் எல்லாம் கடவுள் என்பவர் எல்லாம் வல்லவர் அவரை நாங்கள் வணங்க வேண்டும் அதன் மூலம் நாங்கள் எமக்கான அனூகூலங்களைப் பெறாலாம் என்னும் நம்பிக்கையே முன் வைக்கின்றனர்.இயற்கை என்பது தான் கடவுள் என்பதை ஏற்றுக் கொண்டால் அதனை வணங்க வேண்டிய அதன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை அதற்கு ஒரு வடிவத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இயற்கை இயற்கையாக இருக்கட்டும் அதற்கு வேறு ஒரு வடிவத்தையோ பெயரையோ கொடுப்பது முட்டாள்த் தனமானது என்பதே தலைப்பு.

இயற்கையில் கொஸ்மிக் கூறுகளாலான பிரபஞ்சத்தில்.. உள்ள ஒரு இயற்கையின் கூறுக்கு பூமி என்று பெயரிடுகின்றோம்.. சூரியன் என்று பெயரிடுகின்றோம்..இயற்கையின் கூறாக மனிதன் அறிவியல் கொண்டு விளங்க முடியாத ஆனால் உணரக் கூடிய ஒன்றுக்கு கடவுள் என்று சொல்வதில் என்ன முட்டாள் தனமிருக்கிறது..?!

மனிதன் இயற்கையின் கூறாகினும் அவன் சடப்பொருள் அல்ல என்பதால்.. அறிவியலால் அறிய முடியாத.. உணர்வுகளால் உணரும் இயற்கையின் நிலைக்கு கடவுள் என்று பெயரிடுதல்.. மதிப்பிடுதல்.. ஒன்றும் தவறான செயல் அல்லவே. அறிவியலுக்கு விரோதமானதல்லவே..இதை இலகுவாகச் சொல்லி விட முடியும் போது.. இயற்கையில் மனிதன் அறிவியலால் அறிய முடியா ஆனால் உணர்வுகளால் உணரக் கூடியதற்கு கடவுள் என்ற பெயரிடலில் முட்டாள் தனம் இருக்கு என்றால் இயற்கையின் கூறை பூமி என்று பெயரிடுவதிலும் முட்டாள் தனம் இருக்கு எனலாமே.

எல்லாம் இயற்கை என்று அறிவியல் தேடல் இன்றி இருந்திடலாமே...! இயற்கைக்குள் என்ன இயற்கை இயற்கையைத் தேடுவது.. சூனியத்துக்குள் என்ன சூனியம் சூனியத்தை தேடுவது என்பது போலல்லவா இருக்கிறது விதண்டாவாதம்..! இயற்கையில் மனித அறிவியலால் அறிய முடியாததற்கு கடவுள் என்று பெயரிடுதல்.. தவறும் அல்ல.. முட்டாள் தனமும் அல்ல. அறிவியல் விரோதமும் அல்ல..! :lol::lol:

Edited by nedukkalapoovan

தற்போதைக்கு நீண்ட விவாதங்களில் ஈடுபட நேரம் இல்லாத போதிலும், கீழுள்ள வீடியோ விவாதத்தில் குறிப்பிடப்பட்ட

GOD THEORY பற்றிய சில தகவல்களை தரும் என்பதால் இணைக்கிறேன்

This is an introductory video of the book "The God Theory" written by Dr. Bernard Haisch

Bernard Haisch, Ph.D., is an astrophysicist and author of over 130 scientific publications. He served as a scientific editor of the Astrophysical Journal for ten years, and was Principal Investigator on several NASA research projects. After earning his Ph.D. from the University of Wisconsin in Madison, Haisch did postdoctoral research at the Joint Institute for Laboratory Astrophysics, University of Colorado at Boulder and the University of Utrecht, the Netherlands.

His professional positions include Staff Scientist at the Lockheed Martin Solar and Astrophysics Laboratory; Deputy Director of the Center for Extreme Ultraviolet Astrophysics at the University of California, Berkeley; and Visiting Scientist at the Max-Planck-Institut fuer Extraterrestrische Physik in Garching, Germany. He was also Editor-in-Chief of the Journal of Scientific Exploration. Prior to his career in astrophysics, Haisch attended the Latin School of Indianapolis and the St. Meinrad Seminary as a student for the Catholic Priesthood

The God Theory

Edited by vettri-vel

இயற்கையில் கொஸ்மிக் கூறுகளாலான பிரபஞ்சத்தில்.. உள்ள ஒரு இயற்கையின் கூறுக்கு பூமி என்று பெயரிடுகின்றோம்.. சூரியன் என்று பெயரிடுகின்றோம்..இயற்கையின் கூறாக மனிதன் அறிவியல் கொண்டு விளங்க முடியாத ஆனால் உணரக் கூடிய ஒன்றுக்கு கடவுள் என்று சொல்வதில் என்ன முட்டாள் தனமிருக்கிறது..?!

மனிதன் இயற்கையின் கூறாகினும் அவன் சடப்பொருள் அல்ல என்பதால்.. அறிவியலால் அறிய முடியாத.. உணர்வுகளால் உணரும் இயற்கையின் நிலைக்கு கடவுள் என்று பெயரிடுதல்.. மதிப்பிடுதல்.. ஒன்றும் தவறான செயல் அல்லவே. அறிவியலுக்கு விரோதமானதல்லவே..இதை இலகுவாகச் சொல்லி விட முடியும் போது.. இயற்கையில் மனிதன் அறிவியலால் அறிய முடியா ஆனால் உணர்வுகளால் உணரக் கூடியதற்கு கடவுள் என்ற பெயரிடலில் முட்டாள் தனம் இருக்கு என்றால் இயற்கையின் கூறை பூமி என்று பெயரிடுவதிலும் முட்டாள் தனம் இருக்கு எனலாமே.

எல்லாம் இயற்கை என்று அறிவியல் தேடல் இன்றி இருந்திடலாமே...! இயற்கைக்குள் என்ன இயற்கை இயற்கையைத் தேடுவது.. சூனியத்துக்குள் என்ன சூனியம் சூனியத்தை தேடுவது என்பது போலல்லவா இருக்கிறது விதண்டாவாதம்..! இயற்கையில் மனித அறிவியலால் அறிய முடியாததற்கு கடவுள் என்று பெயரிடுதல்.. தவறும் அல்ல.. முட்டாள் தனமும் அல்ல. அறிவியல் விரோதமும் அல்ல..! :lol::lol:

இந்த உலகம் பிரபன்ச்சம் எல்லாமுமே இயற்கை தான் இயற்கைக்கு அப்பால் எதுவும் இல்லை.கடவுள் தான் இயற்கை என்பதை ஏற்றுக் கொண்டால், இயற்கையை விட வேறு ஒன்றும் கிடையாது என்பதை ஏற்றுக் கொள்வதாகும்.அதனாலையே அயின்ஸ்டயின் மதங்கள் கூறும் கடவுள் என்பதை மறுதலித்தார்.ஸ்பினோசாவும் இயற்கையத் தான் கடவுள் என்றார்.இயற்கையியின் இரகசியங்களையே மனிதன் அறிவியல் மூலம் அறிந்து கொள்கிறான்.மனித அறிவால் அறிய முடியாவிட்டாலும் இயற்கைகையில் நடப்பவை இருப்பவை நடந்து கொண்டு தான் இருக்கும். மனிதன் இயற்கையில் என்ன இருக்கிறது என்பதை அறியாது அவற்றிற்கு கற்பனையான வடிவத்தைக் கொடுப்பதே கடவுள் என்னும் நம்பிக்கை.அவ்வாறான நம்பிக்கையால் இயற்கையை அறிந்து விட முடியாது.ஏனெனில் அது குருட்டுத் தனமான நம்பிக்கை அதற்கு எந்த ஆதாரமோ நிரூபணமோ கிடையாது.ஆகவே அறிவியல் என்பது இயற்கையின் உண்மைகளை மனிதன் அறிந்து கொள்வதில் இருந்தே பிறக்கிறது, மனிதன் அறியாதனவறிற்கு பொய்மையான விளக்கங்களைக் கொடுப்பதில் இருந்து அல்ல.மனிதன் உருவக்கிய சமய நம்பிக்கைகள் இவ்வகையான பொய்மையில் பிறந்தவை.

ஆகவே ஆரம்பம் முதல் முடிவு வரை எனது கருதுக்கள் , நிலைப்பாடுகள், அவறிற்கான ஆதாரங்கள் எல்லாவற்றையும் மிகத் தெளிவாகவே முன் வைத்திருக்கிறேன்.இந்து சமயத்தை விதண்டா வாதம் மூலம் மெயிப்பிப்பது அதற்கு அறிவியல் முலாம் பூசுவது என்பதெல்லாம் நிலையற்ற, நிரூபிக்க முடியாத விடயங்கள்.ஆதிகால மனிதர் உருவாக்கிய ஒரு சமயத்தைப் பற்றிக் கொண்டு எமக்கு இன்று தெரியும் அறிவியலின் துணை கொண்டு சுதந்திரமான சிந்தனைகளை நாங்கள் ஏற்படுத்த முடியாது.சமயங்கள் கடவுளர்கள் மனிதனாலையே படைக்கப்பட்டனர்.பண்டைய மனிதனின் அறிவாற்றலை விட இன்று நாம் பல் மடங்கான அறிவாற்றலைப் பெற்றிருக்கிறோம்.இவற்றை எல்லாம் சிந்திக்காமால் எனது மதம் எனது நம்பிக்கை என்பதற்கு அப்பால் என்னால் சிந்திக்க முடியாது என்று இருப்பது அறிவுடமை ஆகாது.

நீங்கள் முன்வைத்துள்ள ஆதாரங்களுக்கு எதிரானதும் தெளிவானதுமான ஆதாரங்கள் எம்மாலும் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விட்டுவிட்டு..??!

இயற்கை பிரபஞ்சம் எல்லாம் மனிதனால் அடையாளம் இடப்பட்டவை. அப்படி இருக்க.. இயற்கையில் கடவுளை அடையாளமிடுவது ஏன் அறிவுடமையாகாது..??! கடவுளையும் இயற்கையின் ஒரு நிலை.. என்பதால் அறிவியலுக்கு என்ன பாதகம்.. இயற்கைக்கு என்ன பாதகம்..???!

அறிவியல் கொண்டு அறியத்தக்க அளவுக்கு இயற்கை அறிவியல் மயமானதாக இருக்கிறது என்றால்.. இந்த இயற்கைக்குள் அறிவியலை புகுத்தக் கூடிய அறிவு எங்கிருந்தோ எழுந்திருக்கிறது என்பதும்.. நியாயமானதே..! அதையே கடவுள் எங்கிறார்கள்..! அது அறிவிலித்தனமல்லவே..! :lol::lol:

இயற்கை இயற்கையாக இருக்கிறது ,அதனை அறிவதையே அறிவியல் செய்கிறது.இங்கே இயற்கைக்குள் எவரும் அறிவியலைப் புகுத்த முடியாது.இயற்கையை அறியும் ஒரு முறமை தான் அறிவியல்.இயற்கையை அறியும் செயலை மனிதனே செய்கிறான்.அது மனித மூளையினாலையே சாத்தியம் ஆகிறது.ஆகவே இந்த அறிவு என்பது எங்கிருந்தோ வருவதல்ல மனித மூளையின் சிந்தனையின் செயற்பாடு தான்.இயற்கையை ஏற்கனவே கடவுள் என்று சொல்லியாகி விட்டது, இப்போது மனித அறிவையும் கடவுள் என்றால் உண்மையில்' உங்கள் கடவுள் ' என்றால் என்ன என்னும் கேள்வி எழுகிறது.ஏனெனில் அன்பே சிவம் என்று சொல்கிறீர்கள், பின்பு இந்து மதம் இயற்கையைத் தான் கடவுள் என்று சொல்கிறது என்று சொல்கிறீர்கள் இப்போது இயற்கையை அறியும் அறிவையும் அறிவியலையும் கடவுள் என்று சொல்கிறீர்கள்.ஆகவே இந்தக் கடவுள் என்பதைப் பற்றிப் பிடித்துக் கொண்டிராமால், நான் சொல்வது இயற்கையை இயற்கை என்று அழையுங்கள், அறிவை அறிவென்று அழையுங்கள், அன்பை அன்பென்று அழையுங்கள், இவற்றையெல்லாம் கடவுள் என்று சொல்லி உங்கள் சமய, கடவுள் சார் நம்பிக்கையையை மீண்டும் மீண்டும் நிரூபிக்க முயலாதீர்கள்.இதன் மூலம் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருகிறீர்கள்.

விட்டால் ஸ்ற்றிங் தியறி, குவான்ரம் இயற்பியல் எல்லாவற்றையும் கடவுள் என்று சொல்லி இவை எல்லாம் இந்து சமயத்தில் சொல்லப்படுள்ளது என்றும் சொல்வீர்கள். இந்து சமயத்தையும் கடவுள் நம்பிக்கையையும் விட்டு விட்டு வெளியால் வாருங்கள் சுதந்திரமாகச் சிந்தியுங்கள், தெளிவடைவீர்கள். :)

இப்போது மனித அறிவையும் கடவுள் என்றால் உண்மையில்' உங்கள் கடவுள் ' என்றால் என்ன என்னும் கேள்வி எழுகிறது.ஏனெனில் அன்பே சிவம் என்று சொல்கிறீர்கள், பின்பு இந்து மதம் இயற்கையைத் தான் கடவுள் என்று சொல்கிறது என்று சொல்கிறீர்கள் இப்போது இயற்கையை அறியும் அறிவையும் அறிவியலையும் கடவுள் என்று சொல்கிறீர்கள்.

இயற்கை இல்லாமல் அறிவுக்கு வேலை இல்லை, அறிவு இல்லாது இயற்கையை உணர முடியாது. இதுதானே அடிப்படை.

உங்கள் அறிவால் எதுவரை உங்களால் செய்ய முடியும்.? சாத்தியமானதை முயற்சித்து பார்க்கிறீர்கள்,ஆனால் உங்களால் சொல்ல முடியுமா எனது அறிவுக்கு எல்லாமே சாத்தியம் எண்று.?

இயற்கை என்பது உங்களின் மரணமும் கூடத்தான். அதை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா.? இல்லை உங்களுக்கு வரும் பிணியை, முதுமையை.? அல்லது உங்கட உடம்புக்குள் ஊடுருவிய வைரஸ்களையாவது உங்களுக்கு சேதமில்லாது கொல்ல முடியுமா.?

இயற்கை பற்றிய தகவல் சேகரிப்பும், சாத்தியமானவைகளின் பரிசோதனையும் தான் விஞ்ஞானம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மனித அறிவையும் கடவுள் என்றால் உண்மையில்' உங்கள் கடவுள் ' என்றால் என்ன என்னும் கேள்வி எழுகிறது.ஏனெனில் அன்பே சிவம் என்று சொல்கிறீர்கள், பின்பு இந்து மதம் இயற்கையைத் தான் கடவுள் என்று சொல்கிறது என்று சொல்கிறீர்கள் இப்போது இயற்கையை அறியும் அறிவையும் அறிவியலையும் கடவுள் என்று சொல்கிறீர்கள்.

இயற்கை என்பது மனிதனுக்குப் புலப்பட்டக் கூடியது மட்டுமல்ல.. அதற்கு அப்பாலுமானது என்பதை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. ஒரு இயந்திர மனிதனை உருவாக்கக் கூடிய அறிவியல்.. அந்த மனிதனுக்கு அன்பை.. ஊட்ட முடிவதில்லை. ஆனால் இயற்கையிலிருந்து எழுந்த மனிதன், இயற்கையின் உணர்வியலான அன்பை உணர்கிறான்.. ஆறுதல் பெறுகிறான். அந்த உருவமற்ற உணர்வை.. மனிதன் சிவம் எங்கிறான். அதில் என்ன தவறு...???! தவறான ஒரு உணர்வுக்கு அவர் கடவுள் என்று பெயரிடவில்லையே..??! உருவமற்ற ஒரு ஈர்ப்புக்கு நாம் கிரவிற்றி என்று பெயரிடுகிறோம்.. அவன் உருவமற்ற ஒரு உணர்வுக்கு சிவம் என்று பெயரிடுகிறான். அதில் என்ன தவறு. அன்பு உணர முடியாதது அல்ல. செயற்கையானதல்லவே.. இயற்கையில் இருந்துதான் அதுவும் எழுகிறது..! <_<

றிங் தியறி ஆகட்டும் குவாண்டம் ஆகட்டும் இயற்கைக்குள் உள்ளவற்றை விளக்கப் பிறந்தவை தான். இயற்கை இவ்வளவு நுட்பங்களைக் கொண்டிருக்கிறது என்றால்.. இவ்வளவு அறிவியலுக்குரிய தன்மைகளால் ஆனது என்றால்.. அந்த மேன்மை அறிவுக்கு மூலம் என்ன.. அதுவும் இயற்கை என்றால்.. அதற்கு மூலம் என்ன..???! அதை அதை கடவுள் என்று பெயரிடுகின்றனர். அதுவும் இயற்கையின் கூறுதான் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது..! :icon_idea:

அறிவு அறிவியல் பற்றிப் பேசப்படும் போது, அது மனிதனிடமுள்ளதா? அல்லது மனிதனுக்கு வெளியில் அமைந்திருக்கும் இயற்கையின் செயற்பாடா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எந்த ஒரு விடயமும் அனிதனால் உணர்ந்து கொள்ளப்படும் போதுதான் அதை அறிவியல் என்கிறீர்கள். அந்த அறிதலுக்கு அப்பால் நடக்கும் விடயங்களை உணராதவர்கள் போல் பகுத்தறிவாளர்கள் நடிக்கின்றார்களோ? என எண்ணத் தோன்றுகின்றது.

உருவ வழிபாடுகளையும் மதங்களில் நிலவும் குறைபாடுகளையும் கையிலெடுத்துக்கொண்டு இறைவன் இயக்கம் இயற்கை என்பவைகளை மறுப்பதும், அவை இல்லையெனக் கூறுவதுமே ஆதாரமற்ற செயல். இங்கு ஆதாரம் என்பது என்ன? அந்த ஆதாரத்தைக் கூட இயற்கையில் இருந்துதானே பெறவேண்டியிருக்கிறது.

இறைவன் என்ற விடயமும் அறிவு சார்ந்ததுதான். அது இயற்கையிலிருந்து இயக்கத்துள் சென்று இறைவனை உணர்தல். மதங்கள் இதைத்தான் கூறுகின்றன. மதப் பிரிவுகள் மனிதருள் பிரச்சனைகளை ஏற்படுத்தும் தன்மையைப் பார்த்து அதில் சலிப்புற்றதினால்தான் நாத்திக நிலை தோன்றியதோ தெரியவில்லை. அல்லது தமது எண்ணங்கள் ஈடேறாத நிலையிலேற்படும் சலிப்புகளும் காரணமாகவிருக்கலாம்.

நாத்தீகம் என்பதும் இல்லை, என மறுத்துக் கொண்டு இறைவனைத் தேடும் ஒன்றுதான். அடிப்படையில் நாத்திகம், சீர்திருத்தம் என்றாகிவிடாது. சீர்திருத்தமும் அறிவின்பாற்பட்டது. அது மாற்றமுடையதும் கூட. ஆனால் அறிவென்பது என்றும் மாறாதது.

இங்கே திருமூலர் மேலும் கூறுகிறார்,

அறிவு வடிவென்று அறியாத என்னை

அறிவு வடிவென்று அருள் செய்தான் நந்தி

அறிவு வடிவென்று அருளால் அறிந்தே

அறிவு வடிவென்று அறிந்து இருந்தேனே.

இங்கு சொல்லப்படுவது, திருமூலர் அறிவென்றே இறைவனை அறிந்திருக்கிறார். அது இயற்கை இயக்கம் இறைவன் என்பதனூடக அறியப்பட்டிருக்கிறது.

அறிவிற்கு ஆதாரத்தைத் தேடினால் அதுவும் இயற்கையிலிருந்து பெறப்பட வேண்டிய ஒன்றுதான்.

அறிவு அறிவியல் பற்றிப் பேசப்படும் போது, அது மனிதனிடமுள்ளதா? அல்லது மனிதனுக்கு வெளியில் அமைந்திருக்கும் இயற்கையின் செயற்பாடா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எந்த ஒரு விடயமும் அனிதனால் உணர்ந்து கொள்ளப்படும் போதுதான் அதை அறிவியல் என்கிறீர்கள். அந்த அறிதலுக்கு அப்பால் நடக்கும் விடயங்களை உணராதவர்கள் போல் பகுத்தறிவாளர்கள் நடிக்கின்றார்களோ? என எண்ணத் தோன்றுகின்றது.

இறைவன்,

உங்களின் இந்த கேள்விகுப் பலமுறை பதில் சொல்லியாகி விட்டது,மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை அறியப்படாதவை.பகுதறிவாளர்களா

Edited by narathar

இயற்கை என்பது மனிதனுக்குப் புலப்பட்டக் கூடியது மட்டுமல்ல.. அதற்கு அப்பாலுமானது என்பதை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. ஒரு இயந்திர மனிதனை உருவாக்கக் கூடிய அறிவியல்.. அந்த மனிதனுக்கு அன்பை.. ஊட்ட முடிவதில்லை. ஆனால் இயற்கையிலிருந்து எழுந்த மனிதன், இயற்கையின் உணர்வியலான அன்பை உணர்கிறான்.. ஆறுதல் பெறுகிறான். அந்த உருவமற்ற உணர்வை.. மனிதன் சிவம் எங்கிறான். அதில் என்ன தவறு...???! தவறான ஒரு உணர்வுக்கு அவர் கடவுள் என்று பெயரிடவில்லையே..??! உருவமற்ற ஒரு ஈர்ப்புக்கு நாம் கிரவிற்றி என்று பெயரிடுகிறோம்.. அவன் உருவமற்ற ஒரு உணர்வுக்கு சிவம் என்று பெயரிடுகிறான். அதில் என்ன தவறு. அன்பு உணர முடியாதது அல்ல. செயற்கையானதல்லவே.. இயற்கையில் இருந்துதான் அதுவும் எழுகிறது..! <_<

அன்பை அன்பு என்று அழைக்கமால் அதனைக் கடவுள் என்று அழைப்பதற்கான காரணம் என்ன?

றிங் தியறி ஆகட்டும் குவாண்டம் ஆகட்டும் இயற்கைக்குள் உள்ளவற்றை விளக்கப் பிறந்தவை தான். இயற்கை இவ்வளவு நுட்பங்களைக் கொண்டிருக்கிறது என்றால்.. இவ்வளவு அறிவியலுக்குரிய தன்மைகளால் ஆனது என்றால்.. அந்த மேன்மை அறிவுக்கு மூலம் என்ன.. அதுவும் இயற்கை என்றால்.. அதற்கு மூலம் என்ன..???! அதை அதை கடவுள் என்று பெயரிடுகின்றனர். அதுவும் இயற்கையின் கூறுதான் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது..! :icon_idea:

நிச்சயமாக இயற்கை என்பதற்கு வெளியால் எதுவும் இல்லை என்பதே எனது நிலைப்பாடாக இருந்து வருகிறது.இயற்கையைக் கடவுள் என்று பெயரிடுவதற்கான அவசியம் என்ன என்பதே எனது கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

அன்பை அன்பு என்று அழைக்கமால் அதனைக் கடவுள் என்று அழைப்பதற்கான காரணம் என்ன?

எல்லாம் துட்டு சம்பாதிக்கத்தான்..! <_<

  • கருத்துக்கள உறவுகள்

அன்பை அன்பு என்று அழைக்கமால் அதனைக் கடவுள் என்று அழைப்பதற்கான காரணம் என்ன?

நிச்சயமாக இயற்கை என்பதற்கு வெளியால் எதுவும் இல்லை என்பதே எனது நிலைப்பாடாக இருந்து வருகிறது.இயற்கையைக் கடவுள் என்று பெயரிடுவதற்கான அவசியம் என்ன என்பதே எனது கேள்வி?

இயற்கையில் மனிதன் விளங்க முடியாத ஆனால் உணரக் கூடிய அம்சத்துக்கு கடவுள் என்று பெயரிடுகிறானே தவிர விளங்கக் கூடியவற்றுக்கு அவன் அவ்வாறு பெயரிடவில்லை.

அன்பை உணர முடிகிறது... ஆனால் விளங்க முடிவதில்லை. அதனால் அதற்குக் கடவுள் என்று பெயரிடுகிறான்.

பெண்களுள் ஒரு பெண்ணை தாய் எங்கிறம். இன்னொரு பெண்ணை அக்கா எங்கிறம். இன்னொரு பெண்ணை தங்கை எங்கிறம். இன்னொரு பெண்ணை மனைவி எங்கினம். இப்படி பெண் என்றவளைத்தான் பலவாறு பகுத்து அழைக்கின்றனர். அப்படித்தான் அன்பை கடவுள் எங்கின்றனர். சிலர் மனிதனின் இயல்பு எங்கின்றனர்.. இப்படிப் பல.

அன்பைக் கடவுள் என்பதால் என்ன பிரச்சனை என்று நான் ஏலவே வினவியதற்கு பதில் இல்லை. மீண்டும் என்னை நோக்கி அன்புக்கு கடவுள் என்பது ஏன் எங்கிறீர்கள். இதே கேள்வியை நான் மாத்தியும் போடலாம். கடவுளை அன்பென்பது ஏனென்று..???! :icon_idea:<_<

நெடுக்காலபோவான்,

கடவுளை அன்பென்று நான் சொல்லவில்லை, இந்து மதம் சொல்வதாக நீங்கள் சொல்கிறீர்கள், அதனாலையே அதற்கான காரணம் என்ன என்று கேட்டேன்.காரண காரியம் இன்றி ஏன் அவ்வாறு ஒரு சொல்லுக்கு இன்னொரு சொல்லைப் பாவிப்பான் என்று கேட்கிறேன்.

அன்பை அன்பென்று சொல்லலாமே ஏன் கடவுள் என்று சொல்வான்.அன்பை கோவிலில் இருத்தி ஏன் வழி படுவான் ?அன்பென்பது எமக்கு அருள் பாலிக்கும் என்று ஏன் கூறுவான்? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.

அன்பு தான் கடவுள் என்றால். நான் உன் மீது அன்பாக இருகிறேன் என்று கூறிவதை இவ்வாறு கூறலாம நான் உன் மீது கடவுளாக இருக்கிறேன் என்று , இப்படி எவரும் கடவுள் என்பதைப் பாவிப்பதில்லையே? அது ஏன்?

எனக்குப் புரியவில்லை அதனால் தான் விளக்கும் படி கேட்கிறேன்.

அன்பு இயற்கையின் உணர்வியல் அம்சம். இந்துக்கள் இயற்கையை வழிபடுவதால் அன்பையும் கடவுளாக இனங்காட்டி அதன் மனித முக்கியத்துவம் கருதி அதனை முன்னிலைப்படுத்துகின்றனர். அது காரண காரியத்துடன் தான் அப்படி செய்யப்படுகிறது. அன்புக்கு மனிதர்களிடத்தில் முக்கியத்துவத்தை அதிகரிக்கவே கடவுள் என்ற அடையாள மிடல். இயற்கையை கடவுளாகக் காண்பவர்கள்.. அன்பைச் சிவ வடிவில் காண்கின்றனர். அதை உணர்வு ரீதியாக மனிதரிடையே பகிரச் சொல்கின்றனரே தவிர. கோவில் வைத்து அன்பை வழிபடுவதில்லை. உருவ வழிபாடு என்பது மனித சிந்தனையில் இயற்கையின் தன்மைகளை விளக்கும் ஒரு அறிவூட்டல் எனலாம்..! அதைத் தவறாக விளங்கிக் கொண்டு.. தவறாக விளக்கம் கொடுப்பது மோசமான செயல். <_<

Edited by nedukkalapoovan

அப்ப தமிழீழம் அமைய தடையாக இருக்கும் கடவுள் இல்லை எண்டு நிறுவியாச்சா இல்லையா.?

முரண்பாடே இங்குதான் தோன்றுகிறது. மனிதனிடம் அறிவு உருவாகுவதில்லை. அது வெளியிலிருந்து மனிதனால் உள்வாங்கப்படும் விடயம். பூமி சுற்றுகிறது, என்ற விடயம் மனிதனால் உள்வாங்கப்பட்ட ஒன்று. அதை மனிதன் அறிந்தாலும் அறியாவிட்டாலும் அந்த நிகழ்வு நடந்து கொண்டேயிருக்கும். அவ்வாறான ஏராளமான விடயங்கள் இந்த அண்டத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன். அந்த இயக்கத்தை, இயற்கை என்பதுள் அடக்கிவிடுகின்றீர்கள்.

அறியப்படாத விடயமும் இவ்வாறானதுதான். விளக்கங்கள் சொல்லமுடியாவிட்டால் தற்காலிக முடிவொன்றிற்கு வருவது வழக்கமாகிவிட்டது. பின்பு அதில் மாற்றங் காணும்போது, அதைப் பழைய அறிவென்கிறீர்கள். அறிவு என்ற உண்மையில் என்றைக்கும் மாற்றமிருக்காது. எங்களால் விடப்படும் பிழைகளில்தான் மாற்றங்களை ஏற்பதுத்தி வேறுபடுத்திப் பார்க்கமுடிகிறது.

இயற்கையைக் கடக்க முடியாவிட்டால் என்ன கூறினாலும் சரி என்றாகிவிடுமா? உதாரணமாக வாகனம் ஒன்று. அதற்கு இயங்கும் திறனுண்டு. அந்த இயக்கத்தை இயங்கச் செய்வதற்கு ஒரு அறிவு தேவையல்லவா? அதேபோன்றதுதான் இயற்கையும். இயற்கையின் இயக்கத்திற்கு ஆற்றலுடைய ஒரு அறிவு தேவையென்கிறேன். அந்த ஆற்றலுடைய அறிவைத்தான் இறைவன் என்கிறேன். வாகனம் இயக்குபவனை தெரிந்து கொள்ளாது. இயந்திரங்கள் எம்மைத் தெரிந்து கொள்ளக் கூடியனவாக இருப்பின் மனிதன் இயந்திரத்தால் ஆளப்படுபவனாக இருப்பான். அதேபோன்றுதான் இறைவனையும் முற்றும் அறியக் கூடிய விதத்தில் நான் / நாம் இல்லை. அவ்வாறு உணரக் கூடிய விதத்தில் நாமிருப்பின் அண்டங்களை இயக்குவது நாமாகவேயிருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.