Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்பார்

Featured Replies

குழம்பின குட்டையில மீன் பிடுக்கிறதுதான் புத்திசாலியின்ற வேல. அதை எல்லாரும் எதிர்பாத்திருங்கள். எந்த நிமிடத்திலாவது அது நடக்கக் கூடும். தலைவர் ஜெ

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்பு ஒத்திப்போடப்பட்டுள்ளது

சந்திரபால லியனகே

இலங்கையில்இ வெள்ளியன்று நடைபெறவிருந்தஇ கிழக்கு மாகாண சபைக்காக புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபற்றிஇ பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய ஜனாதிபதியின் அலுவலகத்தைச் சேர்ந்த சந்திரபால லியனகே அவர்கள்இ கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் யார் என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும்இ இது தொடர்பில் ஜனாதிபதிக்கும்இ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இன்று முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.

ஆகவே இந்த விடயம் குறித்து முடிவெடுப்பதற்காகஇ கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிகளின் உறுப்பினர்களுடன் நாளை சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாகவும்இ அந்தக் கூட்டத்திலேயே முதலமைச்சர் நியமனம் குறித்த இறுதி முடி எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பீபீசி தமிழோசை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் முதலமைச்சரா வாறதுக்கும், பிள்ளையான் முதலமைச்சரா வாறதுக்கும் இடையில என்ன வித்தியாசம் இருக்கு ? ஒரேயொரு வித்தியாசம் தான், முன்னயவன் எதிரி, பின்னையவன் துரோகி !

கிழக்கின் முதலமைச்சராக சிறிலங்கா துணைப் படைக்குழுவின் தலைவர் பிள்ளையான் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

ஹிஸ்புல்லாவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால் அமைச்சுப் பதவிகளைத் துறக்கப் போவதாக எச்சரித்து வந்த முஸ்லிம் அமைச்சர்கள் பதவி ஆசையில் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போகப் போகிறார்களா? அல்லது அமை;சசுப் பதவிகளைத் துறந்து மஹிந்த ஆட்சிக்கு ஆப்பு வைக்கப் போகிறார்களா என்பதே தற்போதுள்ள கேள்வி.

ஆனால் கடந்த கால அனுபவங்களைப் பார்க்கின்ற போது முதலாவது விடயத்திற்கே அதிக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: முஸ்லீம்களாவது, பதவிகளைத் துறப்பதாவது ? தங்களுக்கு வாக்களித்த மக்களையே தமது பதவி மோகங்களுக்காகத் துறந்தவர்கள் அவர்கள். ஆளாளுக்கு ஒரு சொகுசுக் காரும், கொழும்பு நட்சத்திர விடுதி ஒன்றில் உற்சாக தாராள சேவையும் கொடுத்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி மகிந்தவின் காலைச் சுற்றி வருவார்கள்.

Edited by ragunathan

அதுதானப்பா

நான் முன்னம் சொன்னமாதிரி.. மந்திரிபதவி வேண்டாமெண்டா போங்கடா வெண்டு சொல்லியிப்பாங்கள் இவங்களும் வளிஞ்சிருப்பாங்கள். இப்ப போய் என்ன செய்யபோஏறிங்கள் எண்டு கேட்டா அது பத்திரிகைள் செய்தியை திரிவுபடுத்தி பொட்டுதுகள் எண்டு ரீல்விடுவாங்கள்.

சிறுபாண்மை இனத்தவர் கேக்குறதுகளை செய்யகூடாதெண்றதும் மகிந்த சிந்தனையில் ஒண்டு... அந்த கேவலத்தில இவயல் வெருட்டியோ பாக்கினம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப்படை வடக்குக்கிழக்கை ஆக்கிரமித்து நின்ற போது அது நியமித்தது தனது துணைப்படை ஆளான வரதராஜப் பெருமாளை வடக்குகிழக்கு இணைந்த மாகாண சபையின் முதல்வராக.

இந்தியப்படை விரட்டியடிக்கப்பட்ட போது முதலமைச்சரும் ஓடினார். இன்னும் திரும்பவே இல்லை.

இப்போ சிறீலங்காப்படை கிழக்கை ஆக்கிரமித்து நின்று கொண்டு.. தனது துணைப்படை ஆளான பிள்ளையானை பிரித்த கிழக்கு மாகாணத்தின் முதல்வராக்கி விட்டுள்ளது.

சிறீலங்காப்படை விரட்டி அடிக்கப்படும் போது.. இவரும் ஓடுவார் அல்லது ஒழிவார்..!

தமிழ் மக்கள் செய்ய வேண்டியது சிறீலங்காப்படையினரை தமிழீழ தேசத்தில் இருந்து விரட்டியடிக்கும் நடவடிக்கையில் விடுதலைப்புலிகளுடன் கரங்கோர்ப்பது மட்டுமே..! :unsure:

Edited by nedukkalapoovan

:unsure: முஸ்லீம்களாவது, பதவிகளைத் துறப்பதாவது ? தங்களுக்கு வாக்களித்த மக்களையே தமது பதவி மோகங்களுக்காகத் துறந்தவர்கள் அவர்கள். ஆளாளுக்கு ஒரு சொகுசுக் காரும், கொழும்பு நட்சத்திர விடுதி ஒன்றில் உற்சாக பாணமும், தாராள சேவையும் கொடுத்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி மகிந்தவின் காலைச் சுற்றி வருவார்கள்.

பாணம் - அம்பு

பானம் - குடிதிரவம்

டக்கிளசையும் கருணாவையும் விட இவர்கள பறவாய் இல்லை தானே

ஏற்கனவே அதாவுல்லாவும் அதாவுல்லாவின் கூட்டாளிகளும் மஹிந்தவிடம் "ஐயா நீங்கள் எடுக்கின்ற தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று சொல்லி விட்டார்களாம். இந்த நிலையில் மற்றவர்கள் தங்கள் செல்லிடப் பேசியை இயங்காத நிலையில் வைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்களாம். இதை வைத்துக் கொண்டு அவர்கள் ஏதோ பெரிதாகச் செய்யப் போகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். மாறாக ஊடகக் காரர்கள் ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதுவரையில் செல்லிடப் பேசிகள் இயங்காது.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: நன்றி சுடர். தவறுதான்.

:unsure: நெடுக்கு, வரதர் இந்திய ஆக்கிரமிப்புப்படை வெளியேறியதால் தானும் அவர்களுடன் கப்பலேறியவர். ஆனால் இந்தப் பிள்ளையான் எனும் ஒட்டுண்ணி சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் கிழக்கில் இருக்கும் வரை இருக்கப்போகிறது. ஒன்றில் சிங்களப்படை அழித்து வெளியேற்றப்பட வேண்டும். அல்லது இவன் அழிக்கப்பட வேண்டும். இந்த ரெண்டில் எது விரைவில் சாத்தியமோ அது நடக்க வேண்டும்.

பிள்ளையான் அரசாங்கத்திற்கு(???) ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் தனிக் குழுவாக இயங்கப் போவதாகவும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

ஹிஸ்புல்லாவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால் அமைச்சுப் பதவிகளைத் துறக்கப் போவதாக எச்சரித்து வந்த முஸ்லிம் அமைச்சர்கள் பதவி ஆசையில் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போகப் போகிறார்களா? அல்லது அமை;சசுப் பதவிகளைத் துறந்து மஹிந்த ஆட்சிக்கு ஆப்பு வைக்கப் போகிறார்களா என்பதே தற்போதுள்ள கேள்வி.

ஆனால் கடந்த கால அனுபவங்களைப் பார்க்கின்ற போது முதலாவது விடயத்திற்கே அதிக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

ஆக மொத்தம் கிழக்கை குட்டை குழப்ப போகிறார்கள் எல்லாரும்.. .எப்ப தெளியவைக்க போகிறார்களோ!!!

இடியப்ப சிக்கலாக்கிபோட்டாங்கள்..

கிழக்கு மாகாண முதல்வராக பிள்ளையான் பதவிபிராமணம் : ஹிஸ்புல்லா கூட்டணியிலிருந்து விலகல்

Friday, 16 May 2008

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று பி.ப.4 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் எடுக்கவிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல் இரு பகுதியினரையும் ஜனாதிபதி சந்தித்த பின்னர் ஹிஸ்புல்லா பிள்ளையானை முதலமைச்சராக்குவதற்கு ஒப்புக் கொண்டதன் பின்னர் திடீரென கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதான வேட்பாளரான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா தலைமையில் வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்களும் தனித்து இயங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதேவேளை தமது ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மையை பெறமுடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிழக்கின் முதலமைச்சராகும் நோக்கோடு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா போட்டியிட்டார்.

ஹிஸ்புல்லாவின் தலைமையில் போட்டியிட்ட ஜவாஹிர் மொஹமட் அலி மற்றும் எம் எஸ் சுபைர் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்காக முன்னர் இவர்கள் இருந்த சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருந்து விலகியே போட்டியிட்டனர்.

இவர்கள் தனித்து இயங்க எடுத்த முடிவானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலத்தை இழக்க வைக்கும் நிலையை உருவாக்கும்.

http://www.ajeevan.ch/content/view/2753/1/

பிள்ளையான் முதலமைச்சராக பதிவிப் பிரமாணம்

ஒட்டுக் குழுவின் தலைவனும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட பிள்ளையான் சற்று முன்னர் பயங்கரவாத அரசுத் தலைவர் மஹிந்த முன்னிலையில் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிள்ளையான் கிழக்கின் முதலமைச்சர் என தற்போத உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pillyan-200.jpg

முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்பு

வீரகேசரி இணையம் 5/16/2008 6:29:35 PM -

கிழக்கு மாகாண சபைகான முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் பிள்ளையான் என அழைக்கபடும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச முன்னிலையில் இன்று பிற்பகல் வேளையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

என்னமா போஸ் குடுக்கிறாரு. நல்ல படம். பாதுகாக்க வேண்டும் படத்தை. மாலைபோட்டு அஞ்சலி செலுத்த படம் கிடைச்சுட்டுது. :o:huh:

சிங்கக்கொடியுடன் படம் அவருக்கு அருமையாக பொருந்துது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pillaiyancongradulatedlo2.jpg

0002st9.jpg

20080516ri4.jpg

pillaiyanwb9.jpg
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாயில பச்சை **** தான் வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்
:wub: இந்த அநியாயத்தை எங்கு போய்ச் சொல்ல ? பார்க்கச் சகிக்க முடியவில்லையே ??? இந்த ரெண்டு பிசாசுகளும் எப்போது அழியும் எண்டு தெரிந்த ஆக்கள் யாராவது சொல்லுங்கோவன் ?

கைகுலுக்கி தமிழிலா கதைத்துக் கொண்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.