Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்முபேபியின் அவலம்!!

Featured Replies

ஜம்முபேபியின் அவலம்!!

51003556nb8.png

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) :( ..என்ன பார்க்கிறியள் நாமளே தான்..அட தலைப்பை பார்த்து போட்டு யோசிக்கிறியளோ ஒமோம் வழமையா நம்ம சாத்திரி அங்கிள் தான் "ஜரோப்பிய அவலம்" எழுதுவார் உது என்ன "ஜம்மு பேபியின் அவலம்" என்று பார்க்கிறது விளங்குது...

ஆனா என்ன அவர் எழுதுற அவலம் வேற நான் எழுத போற அவலம் வேற அது தான் வித்தியாசம் பாருங்கோ..(வாசித்து போட்டு பிறகு என்னை ஏசுறதில்ல சொல்லிட்டன்)..சரி எனி நாங்கள் போவோமோ "ஜம்மு பேபியின் அவலதிற்கு"..

அவலத்தை வாசித்து பிறகு அழுறதில்ல சொல்லிட்டன்....போறதிற்கு முன்னால ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை" சொல்லனும் அல்லோ,இன்னைக்கு என்ன சொல்லுவோம் சரி கிடைத்திச்சு அதாவது நாம எதிர்கொள்ளுற அவலங்கள் தான் நம்மளிற்கு ஏணியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்...இந்த அவலதிற்கு இந்த சிந்தனை கொஞ்சம் "ஓவர்" தான்...சரி எனி விசயதிற்கு போவோம்.. :D

அன்னைக்கு சனிகிழமை இருக்கும் என்று நினைக்கிறன் வழமையா நாம சனிகிழமை என்டா பின்னேரம் 3 மணி போல தான் எழும்புவோம் அது வேற விசயம் பாருங்கோ..(இப்ப உங்க குளிர் வேற தொடங்கிட்டு அல்லோ)..அன்றைக்கு ஒரு மாதிரி எழும்பி எங்கையாச்சு ஊர் சுத்த போவோமா என்று யோசித்து கொண்டிருக்கையில :D மாமி வந்து சொன்னா ஒருக்கா வாடா என்னோட ஒரு இடத்தை போகனும் என்று..

அட நேக்கு சா என்று போயிட்டு..(பின்ன நம்மன்ட ஊர் சுத்துற "பிளான்" (திட்டம்) எல்லாம் என்னாகிறது என்று தான் ஆனாலும் ஒன்னும் செய்ய ஏலாது அல்லோ வாறன் என்று சொல்லி போட்டன்,ஒரு மாதிரி வெளிகிட்டு காரில ஏறி போக வேண்டிய இடதிற்கு போயிட்டோம் :( ..(காரை பார்க் பண்ணி போட்டு நடக்க வேண்டியதா போயிட்டு)..

அப்ப மாமி கூட நடந்து கொண்டு போகக்க..(வேறேன்ன மாமி கூட கதைக்க போறன் ஊர் வம்பளக்கிறது தானே)..ஏனென்டா நாம "கோம்புஸ்" என்ற இடதிற்கு தான் போனனாங்க சிட்னியில அநேகமான "டமிழ்ஸ்" இருக்கிற இடம் என்றா உந்த "கோம்புஸ்" தான் உந்த இடத்தை பற்றி சொல்லனும் என்டா சொல்லி கொண்டே போகலாம் குட்டி யாழ்பாணம் என்று நம்ம டமிழ்ஸ் அந்த இடதிற்கு பெயரும் வைத்திருக்கீனம்... :D

உந்த இடத்தில நம்மன்ட ஆச்சிமார்,அப்புமார் எல்லாம் இருந்து சமா எல்லாம் வைப்பீனம் பாருங்கோ அட அட அப்படி பட்ட ஒரு இடம்,இன்னொன்று முக்கியமான விசயம் தமிழ் பெட்டைகளை "சைட்" அடிக்கனும் என்டா உந்த பக்கம் வரணும் ஏனேன்டா உங்க தான் எல்லாரும் இருக்கீனம்..(ஒன்னு சொல்ல மறந்திட்டன் எங்கன்ட கந்தப்பு தாத்தா கூட உந்த அப்புமார் கூட்டதோட சேர்ந்து அரட்டை அடிக்க வாறவர் :( )..

இப்படிபட்ட ஒரு இடத்தில ஊர் வம்பளந்து கொண்டு நடக்கிறது தனிசுகம் பாருங்கோ..(உதில முக்கியமான விசயம் என்னவென்டா இந்த பக்கம் நாம அடிகொருக்கா வாறது தான் ஆனா இப்ப மாமி கூட வாற படியா அச்சா பிள்ளையாட்டம் வாறோம்)..சரி..சரி கண்டுகொள்ளாதையுங்கோ..

இப்ப என்ன விசயம் என்டா நாம "பிரண்ட்ஸ்" கூடப் போகக்க நம்ம வழியே தனி வழியா இருக்கும் இப்படி மாமி அல்லது சொந்தகாரங்க கூட போகக்க ஜம்மு பேபி எனி மேல் இல்லாத அச்சா பிள்ளை..(அட நம்ம பசங்க நான் இப்படி யார் கூடவும் போகக்க வந்தா அப்படி இப்படி கண்ணை காட்டிடுவோம் உடனே அவங்களும் அடக்கி வாசித்துடுவாங்க பாருங்கோ) :( ..உதுகான்டி நினைக்கிறதில்ல மாமிக்கு நம்மளை பற்றி தெரியாது என்டு நன்னா தெரியும் என்டாலும் ஒரு நடிப்பு தானே....

பிறகு என்னவென்டா நேக்கு உங்க இருக்கிறவன் எல்லாரும் பிரண்ட் ஏனேன்டா அந்த இரகசியத்தை சொல்லுறன் கேளுங்கோ..(நாம் வந்து நம்ம "யூனி" பக்கம் போறோமோ இல்லையோ சிட்னியில இருக்கிற எல்லா "யூனி" பக்கவும் போவோம்)..ஏனென்டு உங்களுக்கு தெரியும் தானே..(சரி..சரி கண்டு கொள்ளாதையுங்கோ)..

உப்படி போறதால எல்லாரையும் தெரியும்...(அட நான் மட்டும் இல்ல உங்க இருக்கிற எல்லாரும் உப்படி தான் பாருங்கோ)..அட உதுக்காக நினைக்கிறதில்ல நான் என்ட "யூனி" பக்கம் போறதே இல்லை என்டு அங்கையும் போறனான் அல்லோ..அப்பப்ப நாம போவோம் வருவோம் இருப்போம்.. :D

உப்படி போறதால அங்க இங்க என்டு நம்மளிற்கு "தோஸ்த்மார்கள்"...அட சிலர் வந்து என்ட பெயர சொல்லுவாங்க நான் யாரென்று வேற யோசிக்கிறது அத விடுவோம்...(உப்படி எல்லாம் நான் செய்யிறது வீட்ட தெரியாது அல்லோ)...

சரி எனி அன்னைக்கு நடந்ததை பார்போம் என்ன...

இப்படி,நானும் மாமியும் நடந்து கொண்டு போகக்க ஒருத்தன் என்ட பெயர சொல்லி கூப்பிட்டன்..(நானும் யாரடா இவன் என்று திரும்பி பார்த்தா)..எங்கையோ பார்த்த மாதிரி தான் இருக்கு ஆனா எங்க என்டு விளங்கள்ள அவன் ஓடி வந்து "எப்படிடா மச்சி" என்று கேட்க நாமளும் இருக்கிறோம்டா என்று சொல்லி போட்டு யாரேன்று யோசித்து கொண்டிருந்தேன்...

உடனே வந்தவன் அங்கால மாமி இருக்கிறாவே என்டு கூட யோசிக்காம ஏன்டா இப்ப நம்ம "யூனி" பக்கம் வாறதில்ல மச்சி என்ன ஆச்சு என்டு கேட்க.. :( (அப்ப தான் நேக்கு விளங்கிச்சு ஓ அவனா இவனென்டு)..என்ன செய்யிறது பக்கதில வேற மாமி உவன் கதைத்து கொண்டே போறான் அங்கால மாமிக்கு சிரிப்பா இருக்கு நமக்கு எப்படி இருக்கும்..(என்ட யோசனை எல்லாம் உவனை எப்படி கழற்றி விடுறது என்று)..

ஆனா அவனும் விடுற மாதிரி இல்ல கிளறி கொண்டே போறான்..(மனசில அட நேரம் காலம் பார்த்து கதைக்க தெரியாதா என்று கோபம் வருது ஆனா என்ன செய்ய)..உடனே உந்த கதையை மாத்த இது தான் என்ட மாமி என்று சொல்ல அப்ப தான் அவனுக்கு மாமி என்டே விளங்கிச்சு..அவரின்ட முகமும் ஒரு மாதிரி போச்சு..(அப்ப நமக்கு எப்படி இருக்கும் பாருங்கோ)..

உடனே அவர் சரிடா நான் போகணும் என்டு போட்டு போயிட்டான்..(கடசியா மாற்றுபட்டது யார் நாம தானே)..உடனே நன்ன பிள்ளையாட்டம் நடிக்கமாட்டோமா என்ன..(மாமி வேற ஒன்னுமே கேட்கிறா இல்ல கேட்டு போட்டா என்டா நம்மளிற்கு நிம்மதி அல்லோ)..அட அவாவிற்கு நம்மள பற்றி நன்னா தெரியும் தான் ஆனா இப்படி எல்லாம் தெரியாதே என்ன..

வரவேண்டிய இடதிற்கு வந்திட்டோம் அங்க பார்த்தா ஒரு பொண்ணு...(அது என்ன கொடுமை என்டா அதையும் எனக்கு தெரியும் ஏனென்டா இப்படி இன்னொரு "யூனி" பக்கம் போகக்க கண்டது தான்)..அவா உடனே "காய்" என்று சொல்ல நாமளும் சிரித்து கொண்டு சொன்னது தான்....(ஒரு மனிசனிற்கு இப்படி எல்லாம் சோதனை வரணுமா என்ன)...

அப்படியே வந்த அலுவலை முடித்து போட்டு வரக்க..(நாம அப்பவும் நன்ன பிள்ளையாட்டம் தான் வாறோம்)..உடனே மாமி அங்க ஒரு பெட்டை போறா அவளையும் தெரியுமோ என்று கேட்டு சிரிக்க...(அட நாம என்ன செய்ய முடியும் பாருங்கோ)..

கடசியா ஒரு மாதிரி வீட்ட வந்து சேர்ந்தாச்சு..(வீட்டையும் எல்லாரும் நக்கல் தான் என்ன செய்யிறது)...அன்னைக்கே நினைத்திட்டன்..(எனி மற்ற "யூனி" பக்கம் போறதில்லை என்று அது தான் இல்ல)..எனி சொந்தகாரங்க கூட எல்லாம் தமிழ் ஆட்கள் இருக்கிற பக்கம் போகவே கூடாது என்று..

அட என்ன பார்க்கிறியள் இது தான் என்ட அவலம்...(ஏன் உது அவலம் இல்லையோ அந்த இடத்தில நின்று பார்த்தா தான் விளங்கும்)..அப்பப்ப நேக்கு அவலங்கள் வரும் ஆனா இப்படியான அவலங்கள் தான் அப்பப்ப உங்களை சந்திக்கிறேன் என்ன...

உங்களுக்கு ஏதாச்சும் உப்படியான அவலங்கள் நடந்திருந்தா சொல்லுங்கோ பார்போம்..(அட வெட்கபடாம சொல்லுங்கோ நானே வெட்கபடல்ல)..அட நான் எப்ப தான் வெட்கபட்டிருக்கிறேன் என்ன..ஒன்னு சொல்லட்டோ பல அவலங்கள் வருவது "அவளாள்" தான்..

அடுத்த அவலத்துடன் அவலமாக வருகிறேன்..(நீங்கள் இதை வாசித்து பட போகும் அவலங்களுக்கு இப்பவே என்ட வாழ்த்துக்கள்).. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு இதெல்லாம் அவலமா?

இல்லவே இல்லை

பிகருகள தெரிஞ்சு வைச்சிருக்கிறது தப்பே இல்ல

ஆனா ஒன்றுக்கு மேலால காதல் பண்ணிறதுதான் தப்பு

ஜம்முவின்ர வயசில எனக்கு பலபிகருகள் பழக்கம்

ஆனால் சோகம் என்னெண்டா என்னைகாதலித்த பெண்ணை நான் விரும்பவில்லை

நான் காதலித்த பெண் என்னை விரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மாமி இருந்தால் என்ன விட்டால் என்ன.. கண்கள் இருந்தா ஜொள்ளு விடத்தானே செய்யும். அவையள் பெரியவா உதுகள எல்லாம் பெரிசா எடுக்காயினம். இப்ப பெரியவா நல்ல முன்னேற்றம். சிறியவாவ விட.. பெரியவா நல்லா புரிஞ்சுக்கிறாங்க..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே வந்த அலுவலை முடித்து போட்டு வரக்க..(நாம அப்பவும் நன்ன பிள்ளையாட்டம் தான் வாறோம்)..உடனே மாமி அங்க ஒரு பெட்டை போறா அவளையும் தெரியுமோ என்று கேட்டு சிரிக்க...(அட நாம என்ன செய்ய முடியும் பாருங்கோ)..

அட ஜம்மு பேபியை எல்லாருமே நன்னா புரிஞ்சு வச்சிருக்கிறாங்க. :D

யம்மு பேபியின் சம்பவம் அவலமோ, இல்லையோ.. சொல்லிட்டேன்.. தமிழ் அவலமோ அவலம்.. நான்தான் ஏதோ ஒன்று ரண்டு சொல்லை அவலமா சிதைக்கிறேன்னா.. இவரு ஆகவும்தான் மேல போறாரு.. :icon_idea:

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு,

இதுக்குப் பெயர் அவலமோ? ! அதுசரி உங்கட இடத்தில நின்று பார்த்தால் தானே எனக்கும் விளங்கும்!!

பெண்களாப் பார்த்து 'வணக்கம் சொன்னால் வரம்

அனுபவியுங்கோ :icon_idea:

சனிக்கிழமையென்றால் பின்னேரம் 3 மணிக்கு மேல தான் எழும்புவீங்களா? ஏன் பேசாமல் அடுத்த நாள் காலமை எழும்ப வேண்டியது தானே? புத்துணர்ச்சியாக இருக்கும்..!

இதையெல்லாம் அவலமாக எடுக்காமல் வீரத்தழும்புகளாக எடுங்கோ..! சரியோ..!

  • கருத்துக்கள உறவுகள்

பாவி யம்மு, உண்ட அவலத்தை எழுதும் போது ஏனப்பா நான் தோழர்களுடன் கோம்பூஸ்ஸில் அரட்டை அடிக்கிற விடயத்தை யாழில எழுதுகிற, குஞ்சாச்சிக்கு தெரிஞ்ச இனி உயிரோட சங்குதான்.

கோம்புஸ்ஸுக்கு போறவிசயத்த முன்னமே சொல்லி இருந்தால் அங்க இருக்கிற எண்ட நண்பர்களிட்ட சொல்லி ஒரு கிளைமோர் தாக்குதல் நடாத்தி இருப்பன். தப்பீட்டீங்கள். எண்ட மருமோளும் அதுக்கதான் இருக்கிறாள். அக்காவிட்ட சொல்லி வைக்கிறன் குழப்படிகார பொடியங்கள்.. கவனமா இருக்கச் சொல்லி...

(அப்ப தான் நேக்கு விளங்கிச்சு ஓ அவனா இவனென்டு)..

..(என்ட யோசனை எல்லாம் உவனை எப்படி கழற்றி விடுறது என்று)..

மாமி வேற ஒன்னுமே கேட்கிறா இல்ல கேட்டு போட்டா என்டா நம்மளிற்கு நிம்மதி அல்லோ

:icon_idea::( அட நம்ம ஜம்முக்கு என்ன அவலம் னு ஓடி வந்து பார்த்தால்................ ஹீஹீ இதுவா மேட்டர். தம்பி உங்களுக்கு மாமி முன்னால் ஏற்பட்ட கஸ்டத்தைக்கூட நகைச்சுவையாக சொல்லி முடிச்சிட்டியள்.

ஆமா இறுதிவரை மாமி கேட்கலையா? ஜம்மு நிம்மதியாக இல்லாமல் வீட்டை போய் சேர்ந்தியளா? :(:lol:

தம்பி உதெல்லாம் சகயம். வொறி பண்ணாதீங்க ஓகேயா.

சரி அடுத்த அவலத்தையும் இப்படி நகைச்சுவையாக எழுதுங்கோ என்ன

கோம்புஸ்ஸுக்கு போறவிசயத்த முன்னமே சொல்லி இருந்தால் அங்க இருக்கிற எண்ட நண்பர்களிட்ட சொல்லி ஒரு கிளைமோர் தாக்குதல் நடாத்தி இருப்பன். தப்பீட்டீங்கள். எண்ட மருமோளும் அதுக்கதான் இருக்கிறாள். அக்காவிட்ட சொல்லி வைக்கிறன் குழப்படிகார பொடியங்கள்.. கவனமா இருக்கச் சொல்லி...

ஜம்முவை பற்றி முரளி அண்ணை நல்லா தான் விளங்கி வைச்சிருக்கிறார்.

அதுசரி ஜம்மு இதுக்கு எல்லாம் கவலையா... இதை என்ன எண்டு சொல்லுறது..... பேபி எண்டதை திரும்ப திரும்ப நிரூபிக்கிறீர் பார்த்தீரோ....(தாங்கமுடியல..... :icon_idea:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் ஜம்மு. தன்ட வண்டவாளம் எல்லாம் மாமிக்கு முன்னால தண்டவாளம் ஏறினது பெரிய அவலமா போச்சு. :(:(

கவலைபடாதே சகோதரா எல்லாம் சரியா போகும் :icon_idea:

  • தொடங்கியவர்

ஜம்மு இதெல்லாம் அவலமா?

இல்லவே இல்லை

பிகருகள தெரிஞ்சு வைச்சிருக்கிறது தப்பே இல்ல

ஆனா ஒன்றுக்கு மேலால காதல் பண்ணிறதுதான் தப்பு

ஜம்முவின்ர வயசில எனக்கு பலபிகருகள் பழக்கம்

ஆனால் சோகம் என்னெண்டா என்னைகாதலித்த பெண்ணை நான் விரும்பவில்லை

நான் காதலித்த பெண் என்னை விரும்பவில்லை

ஒம்..சிவா அண்ணா அந்தந்த நேரத்தில இப்படியான சம்பவங்களும் "அவலம்" தான் பாருங்கோ.. :D (ஏனேட்டா அங்க நின்று பார்த்தா தான் நிலமை புரியும் பாருங்கோ :icon_idea: )..அட "பிகருகளை" தெரிந்து வைக்கிறதில தப்பில்லையா நீங்களே சொல்லிட்டியள் பிறகென்ன..(பேஷா தெரிந்து கொள்ளுறன் என்ன)... :(

அட என்ன இப்படி சொல்லிட்டியள்..நாம ஒன்னையும் காதல் பண்ண மாட்டோம்..(எங்கையோ பார்த்த மயக்கம் என்னு நாம போய் கொண்டே இருப்போம் பாருங்கோ :( )..ஏனேன்டா ஒன்னில மயங்கினா வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்ன அண்ணா.. :lol:

அட நீங்களுமா..ஆகா..ஆகா..அட என்ட அவலத்தை விட உங்க அவலம் மேல போல இருக்கு.. :D (அது சரி காதல் மட்டும் தான் பண்ணியளோ இல்லாட்டி காதலை வெளிபடுத்தினியளோ)..ஏனேன்டா காதலை வெளிபடுத்துறது தான் முக்கியம் பாருங்கோ :) ..நாம விரும்புற பொண்ணை விட நம்மள விரும்புற பொண்ணை கல்யாணம் கட்டினா வாழ்க்கை நன்னா இருக்கும் என்று யாரோ சொன்னவை அல்லோ... :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

மாமி இருந்தால் என்ன விட்டால் என்ன.. கண்கள் இருந்தா ஜொள்ளு விடத்தானே செய்யும். அவையள் பெரியவா உதுகள எல்லாம் பெரிசா எடுக்காயினம். இப்ப பெரியவா நல்ல முன்னேற்றம். சிறியவாவ விட.. பெரியவா நல்லா புரிஞ்சுக்கிறாங்க..!

அப்படி போடுங்கோ அரிவாள தாத்தா... :D (இயற்கையில இருக்கிற எல்லாத்தையும் ரசிக்க தான் வேண்டும் என்ன)..ஆனா பறிக்க முட்பட கூடாது.. :( (அது இயற்கைக்கும் ஆபத்து நம்மளிற்கும் ஆபத்து)..அட மாமி இருந்ததிற்கு கவலை எல்லாம் படல்ல ஆனா தெரியாதா தாத்தா.. :(

என்ன சொல்லுறியள் இப்ப "பெரியவா" நல்லா புரிந்து கொள்ளீனமோ..ஒமோம் நன்னா புரிந்து கொண்டாலும் நம்மள மாதிரி புரிந்து கொள்ள ஏலாது அல்லோ :icon_idea: ..(ஏனேன்டா எப்படியும் அவைக்கு சந்தேகம் இருக்கும் அல்லோ)..எத்தனை பெரியவாவ கண்டிட்டோம் :lol: ..ஆனா ஒன்னு மட்டும் இயற்கை தந்த வளங்களை நாம ரசித்து கொண்டு தான் இருப்போம் பாருங்கோ தாத்தா..(நீங்க எப்படி தாத்தா?).. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அட ஜம்மு பேபியை எல்லாருமே நன்னா புரிஞ்சு வச்சிருக்கிறாங்க.

அட..நீங்களும் என்ன நக்கல் அடிக்கிறியளா நன்னா இல்ல சொல்லிட்டன் அண்ணா.. :D (ஓமொம் என்ன சிட்னியில இருக்கிற எல்லாரும் நன்னா புரிந்து வைத்திருகீனம் பாருங்கோ :lol: )..அது சரி தாங்கள் எப்படி ஏதாச்சும் அநுபவம் இருக்கோ கொஞ்சம் சொல்லுறது.. :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

யம்மு பேபியின் சம்பவம் அவலமோ, இல்லையோ.. சொல்லிட்டேன்.. தமிழ் அவலமோ அவலம்.. நான்தான் ஏதோ ஒன்று ரண்டு சொல்லை அவலமா சிதைக்கிறேன்னா.. இவரு ஆகவும்தான் மேல போறாரு..

அட வாங்கோ சோழியன் தாத்தா..(உப்ப என்ன போட்டு கொடுக்க வந்தனியளோ :( )..அட இப்படி எத்தனை அவலத்தை நான் பார்த்திட்டன் உது எல்லாம் சரிபட்டு வராது பாருங்கோ.. :D

தாத்தா ஒன்னு சொல்லட்டோ எப்பவுமே நாம படுற அவலங்கள் தான் நம்மளிற்கு ஏணியா இருக்காம்..(ஆனபடியா தமிழிற்கு கூட ஏணியா இருக்குமோ)..இது எப்படி இருக்கு.. :)

தாத்தாவே ஏதோ ஒன்டு..இரண்டு சொல்லை சிதைக்கிறார் என்டா நாம அத விட ஒரு படி மேல போய் பேஷா பண்ணிடமாட்டோமா என்ன :( ...(அது சரி தங்களின்ட காலத்தில "சைட்" அடிக்கிறது எல்லாம் எப்படி பாருங்கோ :D )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு,

இதுக்குப் பெயர் அவலமோ? ! அதுசரி உங்கட இடத்தில நின்று பார்த்தால் தானே எனக்கும் விளங்கும்!!

பெண்களாப் பார்த்து 'வணக்கம் சொன்னால் வரம்

அனுபவியுங்கோ

ஓமக்கா...நம்மன்ட இடத்தில இருந்து பார்த்தா தான் அதின்ட "அவலம்" விளங்கும் பாருங்கோ :D ..ஏனக்கா பெண்களை பார்த்து "வணக்கம்" கூட சொல்ல கூடாதா என்ன..ஆனா என்னவென்டா நான் வணக்கதோட மட்டும் விட்டிடுவன் பாருங்கோ.. :D

அதுக்கு மிஞ்சி போனா அது "சாபம்" ஆகிடும் :( ...(அது சரி அக்கா ஒன்டு கேட்டா கோவிக்க மாட்டியளோ பெண்களும் "சைட்" அடிப்பினமோ?? :icon_idea: )..

அப்ப நான் வரட்டா!!

சனிக்கிழமையென்றால் பின்னேரம் 3 மணிக்கு மேல தான் எழும்புவீங்களா? ஏன் பேசாமல் அடுத்த நாள் காலமை எழும்ப வேண்டியது தானே? புத்துணர்ச்சியாக இருக்கும்..!

இதையெல்லாம் அவலமாக எடுக்காமல் வீரத்தழும்புகளாக எடுங்கோ..! சரியோ..!

ஓமண்ணா சனிகிழமை சில நேரம் 4 மணிக்கும் எழும்புவன் பாருங்கோ.. :) (அட வெள்ளி இரவு ஊர் சுத்தி போட்டு வரவே நேரமாகிடும் அல்லோ)..தாங்கள் எப்படியாக்கும்?? :D ..அட நீங்கள் சொல்லுற மாதிரி அடுத்த நாள் காலம எழும்பலாம் தான் ஆனா கொஞ்ச அலுவல் பார்கணுமே சனிகிழமை என்ன அலுவல் என்டு உங்களுக்கு தெரியாதா என்ன.. :(

ஓ..அப்ப இது ஒரு வீர தழும்பா..(அப்பாடா நீங்களாவது ஒரு நல் வார்த்தையை செப்பினியள் :lol: )..இப்படி பல வீர தழும்பல்களை காணபோறன் வரும் காலத்தில.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

பாவி யம்மு, உண்ட அவலத்தை எழுதும் போது ஏனப்பா நான் தோழர்களுடன் கோம்பூஸ்ஸில் அரட்டை அடிக்கிற விடயத்தை யாழில எழுதுகிற, குஞ்சாச்சிக்கு தெரிஞ்ச இனி உயிரோட சங்குதான்.

அட எப்பவுமே மற்றவையும் சேர்த்து தான் அவலபட வைக்கனும் :lol: அது தான் நம்ம "கந்தப்பு தாத்தாவையும்" இழுத்தனான் பாருங்கோ..அட குஞ்சாச்சியிட்ட இன்னைக்கு மட்டும் வாங்க போறியள் எப்பவுமே தானே பிறகென்ன பாருங்கோ.. :(

அது சரி தாத்தா நாம அந்த பக்கம் மேய வரக்க எப்ப பார்த்தாலும் நீங்களும் அங்க நிற்கிறியள் :icon_idea: ..என்ன நடக்குது அங்க கொஞ்ச கூட நன்னா இல்ல சொல்லிட்டன் :D ..(குஞ்சாச்சியிட்ட வாசக சாலைக்கு போறன் என்டு போட்டு நல்லா நடத்துறியள் நடத்துங்கோ நடத்துங்கோ :D )...

அப்ப நான் வரட்டா!!

கோம்புஸ்ஸுக்கு போறவிசயத்த முன்னமே சொல்லி இருந்தால் அங்க இருக்கிற எண்ட நண்பர்களிட்ட சொல்லி ஒரு கிளைமோர் தாக்குதல் நடாத்தி இருப்பன். தப்பீட்டீங்கள். எண்ட மருமோளும் அதுக்கதான் இருக்கிறாள். அக்காவிட்ட சொல்லி வைக்கிறன் குழப்படிகார பொடியங்கள்.. கவனமா இருக்கச் சொல்லி...

அட..நம்ம குருவிற்கு கோம்புச்சில கூட நண்பர்கள் இருக்கீனமோ சொல்லவே இல்ல :) ..(அட உங்களுக்கு நண்பர்கள் என்டா நேக்கும் அவை நண்பர்கள் மாதிரி)..அட எனக்காக ஒரு கிளைமோர வீணாக்க போறியளோ..(இது என்ன கொடுமை பாருங்கோ :D )..

என்னாது உங்கன்ட மருமகள் அங்கையோ இருக்கா சொல்லவே இல்ல..(இப்ப சொல்லிட்டியள் தானே எனி பாருங்கோ யாரென்டு கண்டு பிடிக்கிறன் )..சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா உங்க ஒருக்கா வாங்கோ.. :D

என்ன குருவே உங்க அக்காகிட்ட என்ன பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லி வையுங்கோ என்ன :( ..(உங்களுக்கு மருமகள் என்டா நேக்கும் அவா மருமகள் அல்லோ)..சரி சரி உங்க அக்காவை நான் கண்டு பிடித்து "பிரண்ட்" ஆகிறன் பாருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அட நம்ம ஜம்முக்கு என்ன அவலம் னு ஓடி வந்து பார்த்தால்................ ஹீஹீ இதுவா மேட்டர். தம்பி உங்களுக்கு மாமி முன்னால் ஏற்பட்ட கஸ்டத்தைக்கூட நகைச்சுவையாக சொல்லி முடிச்சிட்டியள்.

ஆமா இறுதிவரை மாமி கேட்கலையா? ஜம்மு நிம்மதியாக இல்லாமல் வீட்டை போய் சேர்ந்தியளா?

தம்பி உதெல்லாம் சகயம். வொறி பண்ணாதீங்க ஓகேயா.

சரி அடுத்த அவலத்தையும் இப்படி நகைச்சுவையாக எழுதுங்கோ என்ன

அட...நிலாக்கா..(அட தம்பியின் அவலத்தை பார்த்து ஓடோடி வந்தனியளோ :icon_idea: )...வாங்கோ வாங்கோ..என்ன இப்படி கேட்டு போட்டியள் இதுவும் "அவலம்" தான் பாருங்கோ :( ..சா..சா மாமி வீட்ட போக மட்டும் அத பற்றி பெரிசா கேட்கல அல்லோ..கேட்டிருந்தா மட்டும் நாம சமாளித்திருக்க மாட்டோமா என்னக்கா.. :lol:

அட நான் எங்க கவலைபட்டனான்..(அட அந்த பொண்ணு கூட கதைக்க ஏலாம போயிட்டு என்டு தான் கவலைபட்டனான் பாருங்கோ :( )..ஒமக்கா நீங்களே சொல்லிட்டியள் எனி எங்க இருந்து எப்படி வர போதோ "அவலம்" வரக்க எழுதுறன் என்ன..உங்களுக்கும் ஏதாச்சும் உப்படி நடந்ததோ?? :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்முவை பற்றி முரளி அண்ணை நல்லா தான் விளங்கி வைச்சிருக்கிறார்.

அதுசரி ஜம்மு இதுக்கு எல்லாம் கவலையா... இதை என்ன எண்டு சொல்லுறது..... பேபி எண்டதை திரும்ப திரும்ப நிரூபிக்கிறீர் பார்த்தீரோ....(தாங்கமுடியல..... :D)

அட என்ன பற்றி என்ட குருவிற்கு தெரியாம யாருக்கு தெரிய போது :D ..(ஆனாலும் அவரின்ட மருமகளை கண்டு பிடிக்காம நான் ஓய போவதில்ல :icon_idea: )..

தம்பி ராசா இதுவும் கவலை தான்..(அந்தந்த நேரத்தில அந்தந்த இடத்தில நின்று பார்த்தா தான் எல்லாம் விளங்கும் சரியோ தம்பி :D )..பிறகு அண்ணாவிற்கு உப்படி நடந்திட்டே என்டு அழகூடாது என்ன..அட நான் பேபி தானே பிறகென்ன நிருபீக்க வேண்டும்.. :)

அது சரி தம்பி தாங்கள் எப்படி யாருக்கு பின்னால போன அநுபவம்?? :(

அப்ப நான் வரட்டா!!

பாவம் ஜம்மு. தன்ட வண்டவாளம் எல்லாம் மாமிக்கு முன்னால தண்டவாளம் ஏறினது பெரிய அவலமா போச்சு.

கவலைபடாதே சகோதரா எல்லாம் சரியா போகும்

ஓமோம்..இன்னி தங்கச்சி அண்ணாவின்ட நிலை அவலமா போச்சு :( ..(ஆனா உதுகெல்லாம் நான் கவலைபடமாட்டன் அல்லோ :D )..ஏனேன்டா நம்மள பற்றி நம்ம மாமிக்கு தெரியாமால என்ன...(அது சரி தாங்கள் யாரையும் "சைட்" அடித்த அநுபவம் இருக்கோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

அட என்ன பற்றி என்ட குருவிற்கு தெரியாம யாருக்கு தெரிய போது :D ..(ஆனாலும் அவரின்ட மருமகளை கண்டு பிடிக்காம நான் ஓய போவதில்ல :( )..

தம்பி ராசா இதுவும் கவலை தான்..(அந்தந்த நேரத்தில அந்தந்த இடத்தில நின்று பார்த்தா தான் எல்லாம் விளங்கும் சரியோ தம்பி :D )..பிறகு அண்ணாவிற்கு உப்படி நடந்திட்டே என்டு அழகூடாது என்ன..அட நான் பேபி தானே பிறகென்ன நிருபீக்க வேண்டும்.. :)

அது சரி தம்பி தாங்கள் எப்படி யாருக்கு பின்னால போன அநுபவம்?? :(

அப்ப நான் வரட்டா!!

அண்ண.....அண்ணை.... இது எல்லாம் புதுசே உங்களுக்கு.... வழமையா நடக்குறது தானே.... அதுதான் கவலைப்பட வேண்டாம் எண்டு சொன்னனான்[/color].(பால் வழியுது முகத்தில.... துடையுங்கோ :D )

எங்களுக்கு உது பழகிப்போச்சு பாரும்[/color]( கழகத்தில இதைதான் முழுநேர தொழிலா செய்தனாங்கள் எண்டா பாருங்கோவன் :lol::icon_idea::D )

நல்ல வேளை ஜம்மு அண்ணா

மாமியோட போனபடியா தப்பிட்டியள்

அதையே உங்க ஆள் கூட போயிருந்தா

என்னாவது? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை ஜம்மு அண்ணா

மாமியோட போனபடியா தப்பிட்டியள்

அதையே உங்க ஆள் கூட போயிருந்தா

என்னாவது? :icon_idea:

உங்களுக்கு ஆள் இருக்கா யம்மு, சொல்லவேயில்லை. எப்ப எங்களுக்கு உணவகத்துக்கு கூட்டிக் கொண்டு போகப்போறியள் யம்மு

..சா..சா மாமி வீட்ட போக மட்டும் அத பற்றி பெரிசா கேட்கல அல்லோ..கேட்டிருந்தா மட்டும் நாம சமாளித்திருக்க மாட்டோமா என்னக்கா.. :)

அப்ப நான் வரட்டா!!

சமாளிக்க கற்றுக்கொடுக்கணுமா என்ன? :icon_idea::(

அட நான் எங்க கவலைபட்டனான்..(அட அந்த பொண்ணு கூட கதைக்க ஏலாம போயிட்டு என்டு தான் கவலைபட்டனான் பாருங்கோ :D )..ஒமக்கா நீங்களே சொல்லிட்டியள் எனி எங்க இருந்து எப்படி வர போதோ "அவலம்" வரக்க எழுதுறன் என்ன..உங்களுக்கும் ஏதாச்சும் உப்படி நடந்ததோ?? :D

அப்ப நான் வரட்டா!!

:( கதைக்க முடியாமல் போயிட்டுது என கவலைபப்ட்டியளா? அச்சோ உங்களை யார்கிட்ட சொல்லி திருத்துறது என்று நேக்கு புரியலை. அக்கா வரவோ......... :lol:

ரொம்ப முக்கியம் இப்ப அக்க்காவின் அவலம் கேட்க........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமக்கா...நம்மன்ட இடத்தில இருந்து பார்த்தா தான் அதின்ட "அவலம்" விளங்கும் பாருங்கோ :lol: ..ஏனக்கா பெண்களை பார்த்து "வணக்கம்" கூட சொல்ல கூடாதா என்ன..ஆனா என்னவென்டா நான் வணக்கதோட மட்டும் விட்டிடுவன் பாருங்கோ.. :D

அதுக்கு மிஞ்சி போனா அது "சாபம்" ஆகிடும் :D ...(அது சரி அக்கா ஒன்டு கேட்டா கோவிக்க மாட்டியளோ பெண்களும் "சைட்" அடிப்பினமோ?? :) )..

இதில கோவிக்கிறதுக்கு என்ன இருக்கு ஜம்மு? !! பெண்களுக்கும் கண்கள் உண்டு. ஆனால் ஆண்கள் மாதிரி அசடு வழிய மாட்டினம். :lol: *** சரி சரி உண்மையைச் சொல்லிட்டன் எண்டு போட்டு நீங்களும் கோவிக்கிறதில்லை :lol:

  • தொடங்கியவர்

அண்ண.....அண்ணை.... இது எல்லாம் புதுசே உங்களுக்கு.... வழமையா நடக்குறது தானே.... அதுதான் கவலைப்பட வேண்டாம் எண்டு சொன்னனான்[/color].(பால் வழியுது முகத்தில.... துடையுங்கோ )

எங்களுக்கு உது பழகிப்போச்சு பாரும்[/color]( கழகத்தில இதைதான் முழுநேர தொழிலா செய்தனாங்கள் எண்டா பாருங்கோவன் )

அது சரி தான் தம்பி..(அண்ணாவின்ட வாழ்க்கையில இது எல்லாம் சகஜம் தான் :) )..யாரும் செருப்பால அடிக்காத வரைக்கும் நம்மன்ட பயணம் தொடரும் என்ன..சா..சா நானாவது கவலைபடுறதாவது,(நாம புயலிற்கு பின்னால வாற புழுதியாக்கும் :lol: உது எப்படி இருக்கு எங்கையோ கேட்ட மாதிரி இருக்குமே கண்டுகொள்ளாதையுங்கோ என்ன :D )...

நிசமா பால் வடியுதோ..(ம்ம்..எல்லாரும் என்ட முகத்தை பால் வடியிறம் முகம் என்டு தான் சொல்லுறவை இப்ப தான் அதின்ட அர்த்தம் விளங்கினது பாருங்கோ :lol: )..சரி..சரி துடைத்து போட்டு வாறேன்..அட ..அட தம்பியும் அப்படியோ பேஷ்..பேஷ்.. :D

அப்ப நீங்களும் "கழகம்" பக்கம் ஒதுங்கினியளோ நாமளும் அந்த பக்கம் ஒதுங்கியிருக்கிறோமே..(அட தம்பியை கண்டனோ தெரியாது :D )..ஆனா என்ன நாம அங்க ஒதுங்கிட்டு வீட்ட போக முன்னம் அம்மாவிற்கு "நீயூஸ்" வந்திடும் பாருங்கோ அது தான் பெரிய சிக்கல் :D ..(ஏனேன்டா நம்ம றோட்டில இருந்த பெட்டைகள் எல்லாம் அங்க தான் படித்தவையள் பாருங்கோ)..அவை வந்து வீட்ட போட்டு கொடுத்திடுவீனம் அல்லோ... :lol:

அப்படி இருந்தும் அண்ணா வந்து பள்ளிக்கு போகக்க ஒருக்கா பள்ளி முடிந்தா பிறகு ஒருக்கா பிறகு "டியூசன்" போகக்க ஒருக்கா என்டு ஒதுங்கி போட்டு தான் போறவர் என்டா பாருங்கோவன் :lol: ..

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.