Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ என் உயிர் தானா?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்லிடபேசி கிணுகிணுக்க பதறி அடிச்சு எழுந்த வசன் நேரத்தைப் பார்த்தான். மணி நள்ளிரவு 12.30. வேலைக் களைப்பால் விழுந்து படுத்தவன் நித்திரைக் கலக்கத்தில், "எவண்டா இந்த நேரத்தில.." செல்லிட பேசியைக் காதில் வைத்தபடி மனதில் எண்ணத்தை ஓட விட்டான்.

"உங்கட அவாவுக்கு குழந்தை பிறந்திருக்கு. உடன வைத்தியசாலைக்கு வரட்டாம்" என்று சொன்னதோடு மறுமுனை இணைப்பைத் துண்டித்துக் கொள்கிறது.

வேலை முடிச்சிட்டு இவ்வளவு நேரம் அங்க தானே நின்றிட்டு வந்தன். இப்ப பிறக்காது 48 மணி நேரம் ஆகும் எண்டாங்கள். அதுக்குள்ள... என்று மனசுக்குள் நினைத்துவிட்டு.. தனது குழந்தையின் முகத்தை காணுற சந்தோசம் மனசில பொங்க.. மனுசி தனிய என்ன பாடுபடுகுதோ என்று எண்ணியபடி பதறியடித்துக் கொண்டு வைத்தியசாலை நோக்கி மகிழுந்தில் விரைந்து ஓடினான் வசன்.

நல்வரவு வசன். இங்க தான் தாயும் குழந்தையும் இருக்கினம். உங்களைத் தான் வசந்தா தேடிக் கொண்டிருக்கிறாள் என்று கூறியபடி வைத்தியசாலைப் பணியாள் வசனை தாயும் சேயும் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

எப்படி இருக்கிறாய் வசந்தா. பிரச்சனை ஒன்றும் இல்லையே. எங்க குழந்தையைப் பார்ப்பம் என்று வசன் தன் குழந்தையைப் பார்க்கும் தன் ஆர்வத்தை துணைவியின் அருகில் சென்று நின்றபடி அவளின் கரங்களைப் பற்றிப் பிடித்தபடி வெளிக்காட்டினான்.

இங்க தான் இருந்தவ உங்க மகள். தடுப்பூசி ஒன்று போடக் கொண்டு போயிருக்கினம். பொறுங்கோ இப்ப கொண்டு வந்திடுவினம் என்று வசந்தா சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

"கலோ" வசன். உங்கள் குழந்தைக்காகக் காத்திருக்கிறீங்கள் போல. இதோ உங்கள் குழந்தை. என்று கூறியபடி தான் தாங்கி இருந்த குழந்தையை வைத்தியர் வசனின் கையில் கொடுத்தார்.

குழந்தையைக் கண்டதும் வசனிடத்தில் மகிழ்சிக்குப் பதில் வியப்பே மிஞ்சியது.

டொக்டர் இது எங்கட குழந்தை தானா..?!

என்ன கேள்வி வசன். உங்கட மனைவி உங்களிடம் விசயத்தைச் சொல்லேல்லையா..?! இது அவாவுக்கும் இன்னொருத்தருக்கும் பிறந்திருந்தாலும் உங்கட குழந்தைதான்.

என்ன இன்னொருத்தருக்குப் பிறந்த குழந்தையா..??! என்று ஆச்சரியம் மேலிட ஆத்திரம் பொங்க கத்தினான் வசன்.

என்ன வசந்தா உங்கட அவரட்ட நீங்கள் விசயத்தை சொல்லாமல் மறைச்சுப் போட்டிங்கள் போல என்று டாக்டர் வசந்தாவைக் கேட்டார்.

ஓம் டொக்டர். நான் இவரட்டச் சொல்லேல்ல. சொன்னா இவரால தாங்க முடியாது. இப்ப நீங்களே சொல்லுங்கோ டொக்டர் அப்பதான் இவருக்கு ஒரு ஆறுதலா இருக்கும்.

என்ன நடக்குது இங்க. ஏன் எல்லாருமா சேர்ந்து என்னை ஏமாத்தினியள். இப்ப அது போதாது என்று இன்னும் ஏமாத்த நிற்கிறியள்.. இது என்ர குழந்தையே இல்லை.. இன்னொருத்தனுக்கு பிறந்த இதை என்ர குழந்தையா ஏற்க முடியாது.. என்று தலையில் கை வைத்தபடி கத்திய வசன், தனக்கு துரோகம் இழைத்து விட்டதாய் எண்ணி வசந்தாவை முறாய்த்துப் பார்த்தபடி விறைத்துப் போய் நின்றான்.

வசன்.. உண்மையில உங்களுக்கு செய்த சோதனையில உங்களிடம் குழந்தையை உருவாக்கக் கூடிய வளமான உயிரணுக்கள் இருக்கேல்ல. அதனால குழந்தைக்கு ஆசைப்பட்ட வசந்தாவுக்கு எங்களால முடிந்த உதவியைச் செய்ய முன் வந்தம்.

வைத்தியசாலையில உயிரணு வங்கியில இருந்து பெற்ற பெயர் குறிப்பிட முடியாதவரின் உயிரணுவை வசந்தாவின்ர முட்டையோட கருக்கட்ட வைச்சு IVF முறையில இந்தக் குழந்தையை உருவாக்கி உங்க மனைவிக்கு பிள்ளைப் பாக்கியத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறம். வசந்தாவின்ர முழு அனுமதியோட தான் இதைச் செய்தம். உங்களின் அனுமதியைப் பெற முனைந்த போது வசந்தா தான் இதை உங்களிடம் பக்குவமாச் சொல்லுறதா சொன்னா. அதால தான் நாங்கள் இது பற்றி உங்களட்ட எதுவும் சொல்ல முடியல்ல.

டொக்டர் சொல்லுறது உண்மை தாங்க. நீங்க மனசுடைஞ்சு போவீங்க என்றுதான் இதை நான் உங்களுக்குச் சொல்லேல்ல. குழந்தை பிறக்கவிட்டு விசயம் தெரிய வரேக்க சொல்லுவம் என்று விட்டுட்டேங்க. என்னை மன்னிச்சிடுங்க என்று வசனின் கையைப் பிடித்து முத்தமிட்டவளாய் கெஞ்சினாள் வசந்தா.

இன்னொருவரின் உயிரணுவில் பிறந்த அக்குழந்தையையும், உண்மையை மறைத்து தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்ட வசந்தாவையும் ஏற்பதா விடுவதா என்ற குழப்பத்தில் இருந்த வசன் துணைவியின் கெஞ்சலில் வழிந்த கண்ணீரில் அவளின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவனாய் குழந்தையும் தாயையும் ஒரு சேர அணைத்துக் கொண்டான். தன்னவளின் உயிரணுவில் உருவானதை தன் உறவாக்கும் மன உறுதியோடு.

-யாவும் கற்பனை.

Edited by nedukkalapoovan

மீண்டும் ஒரு சிறுகதையோடு நெடுக் தாத்தாவை சந்திப்பதில் சந்தோசம்.

தன்னவளின் உயிரணுவில் உருவானதை தன் உறவாக்கும் மன உறுதியோடு.

:unsure: இப்படி எல்லா கணவன்மாரும் ஏற்பினமோ?" :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு சிறுகதையோடு நெடுக் தாத்தாவை சந்திப்பதில் சந்தோசம்.

:unsure: இப்படி எல்லா கணவன்மாரும் ஏற்பினமோ?" :rolleyes:

நியாயமான கேள்விதான். வாசகர்கள் என்ன சொல்லினம் என்று கேட்பம். :lol:

இப்படி ஒரு சூழ்நிலை எனக்குத் தோன்றின் நான் வசன் போலவே இருப்பனா..??! விடை பின்னர். :)

நல்ல ஆக்கம் தாத்தா. ஆனால் வசந்தி இதைப்பற்றி முன்னமே வசனுடன் பேசி முடிவெடுத்தபின்பே குழந்தையைப் பெறவேண்டும். மேலும் வைத்தியர் இப்படிப்போட்டுடைக்கக்கூடாத

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பெற்றுக்கொள்ள தேவையான உயிரணு ஆணிடம் இல்லை எண்டால்

பெண் இப்படி குழந்தை பெத்துக்கலாம். தப்பே இல்லை.

பெண்ணிடம் இதே பிரச்சனை ஏற்பட்டால் என்ன நடக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம் தாத்தா. ஆனால் வசந்தி இதைப்பற்றி முன்னமே வசனுடன் பேசி முடிவெடுத்த பின்பே குழந்தையைப் பெறவேண்டும். மேலும் வைத்தியர் இப்படிப் போட்டுடைக்கக் கூடாதே?

வசனுக்கு இப்போதுள்ள நல்ல மனம் அவனை நல்ல முடுவுக்கு தான் முதலில் பேசியிருந்தாலும் கொண்டுசென்றிருக்கும். வசன் ஏற்க மறுத்திருந்தால் வசந்தியினதும் குழந்தையினதும் நிலைமை என்னவாகிருக்கும்?

வைத்தியரை நோக்கி கேள்வி எழேக்க அவர் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

ஒருவேளை ஆரம்பத்தில் கேட்டிருந்தால் வசன் உறுதியாக மறுத்திருக்கவும் முடியும் அல்லவா. இப்போ எப்படியோ ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை அவனுக்கு ஏற்படுத்தப்பட்டதாக கருதலாம் எல்லோ..!

நன்றி நியாயமான கேள்விகளுடன் முளைத்த உங்கள் கருத்துக்கு. :rolleyes:

குழந்தை பெற்றுக்கொள்ள தேவையான உயிரணு ஆணிடம் இல்லை எண்டால்

பெண் இப்படி குழந்தை பெத்துக்கலாம். தப்பே இல்லை.

பெண்ணிடம் இதே பிரச்சனை ஏற்பட்டால் என்ன நடக்கும்?

மனிதப் பெண்களின் முட்டையும் இப்போ முட்டை வங்கியில் கிடைக்கிறது. பெற்றெடுக்க வாடகைத் தாய்மாரும் இருக்கிறார்கள். இப்போ எல்லாம் திருமணம் செய்துதான் குழந்தை பெற்றுக்கனும் என்ற அவசியம் இல்லாமல் போயிட்டுது. விரும்பிய படிக்கு பெண் உயிரணு மற்றும் ஆண் உயிரணுக்களை அவற்றுக்குரிய வங்கிகளில் பெற்று குழந்தைகளை உருவாக்கிக் கொள்ளலாம்..!

நன்றி கறுப்பி தெளிவான உங்கள் அபிப்பிராயத்துக்கு. :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ..........நீ என் உயிர் தானா?...............

கதையில் சிறு சிக்கல் தெரிகிறது ? பார்த்த உடனே "இது என் குழ்ந்தை தானா?...

.சந்தேகபேர்வளியா?...ஏன் வசந்தி கணவனுடன் கலந்து முடிவு எடுக்கவில்லை ?...

.குழ்ந்தையின் ஆரம்பமே சிக்கல் ...கர்பத்தில் போது இல்லாத சந்தேகம் ஏன்

குழந்தை பிறந்த போது.... வந்தது ?............புரட்சிகரமான கதை

நன்றி வணக்கமுடன் நிலா மதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ..........நீ என் உயிர் தானா?...............

கதையில் சிறு சிக்கல் தெரிகிறது ? பார்த்த உடனே "இது என் குழ்ந்தை தானா?...

.சந்தேகபேர்வளியா?...ஏன் வசந்தி கணவனுடன் கலந்து முடிவு எடுக்கவில்லை ?...

.குழ்ந்தையின் ஆரம்பமே சிக்கல் ...கர்பத்தில் போது இல்லாத சந்தேகம் ஏன்

குழந்தை பிறந்த போது.... வந்தது ?............புரட்சிகரமான கதை

நன்றி வணக்கமுடன் நிலா மதி

அதை வாசகனின் ஊகிப்புக்கு விட்டிருகிறேன். உண்மையில் வாசகன் வசனின் ஸ்தானத்தில் இருக்கும் போது.. அந்தக் குழந்தை ஒரு வெள்ளையினக் குழந்தையாகவோ அல்லது கறுப்பினக் குழந்தையாகவோ அல்லது பெற்றோரின் சாயலை விட்டு அதிகம் வேறுபட்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை இலகுவாக ஊகிக்க முடியும் அல்லவா.

எந்த தாயோ தந்தையோ தன் சாயலைக் குழந்தையில் எதிர்பார்ப்பது வழமையல்லவா. அதனூடு தான் இதை நகர்த்தினேன்.

பொதுவாக தன் குழந்தை என்ற வகையில் தான் குழந்தைகள் மீது பெற்றோர் பாசம் உருவாவது. இன்னொருவரின் குழந்தை எனும் போது அங்கு இரண்டாம் நிலை தோன்றிவிடும்.

கணவனுக்கு அந்த நிலை உருவாகக் கூடாது என்று எண்ணி வசந்தா இதை ரகசியமாகவே வைத்திருக்க முனைந்திருக்கலாம் அல்லவா..! இவை வாசகன் கதையின் போக்கில் உணர்ந்து கொள்ள வேண்டியவை. வசன் சந்தேகப் பேர்வழி என்பதைக் காட்டாது கதை என்பதை நம்புகிறேன்.

ஆனால் நல்லதொரு சந்தேகத்தையே கிளப்பி இருக்கிறீர்கள். :rolleyes:

நன்றி நிலா மதி. (நிலா என்றாலும் நிலா தான். மதி என்றாலும் நிலா தான்.. நிலா மதி என்று சொல்வதில் என்ன அர்த்தம்..??! நிலாவின் அறிவு என்பதா..??! :unsure: )

அடிப்படையில் இச்செய்தியை வாசித்ததன் பின் அதனை அடிப்படையாக வைத்தே இதை எழுத முற்பட்டேன்.

http://kuruvikal.blogspot.com/2008/03/blog-post_7421.html

Edited by nedukkalapoovan

அட..எங்கன்ட நெடுக்ஸ் தாத்தாவின்ட கதை.."நீ என் உயிர் தானா" எண்ட கதை மூலம் சிந்திக்கவே வைத்திட்டியள் தாத்தா வாழ்த்துக்கள்.. :unsure:

மற்றவையை பத்தி நேக்கு தெரியாது தாத்தா ஆனா வசன் ஸ்தானத்தில நான் இருந்தால் கண்டிப்பா நான் இதனை ஏற்று கொள்ளவே மாட்டேன் :lol: ஏனேனில் இதுவும் ஒரு வித நம்பிக்கை துரோகம் தானே,முதலே கலந்தாலோசித்து விட்டு செய்வது வேற இப்படி செய்வது வேற என்பது என் பார்வையில்.. :rolleyes:

ஏன் இதை சொல்கிறேன் எண்டா இன்றைக்கு இதையே மறைத்தவள் நாளைக்கு எதை எல்லாம் மறைப்பா தாத்தா என்ன நான் சொல்லுறது சரி தானே.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட..எங்கன்ட நெடுக்ஸ் தாத்தாவின்ட கதை.."நீ என் உயிர் தானா" எண்ட கதை மூலம் சிந்திக்கவே வைத்திட்டியள் தாத்தா வாழ்த்துக்கள்.. :unsure:

மற்றவையை பத்தி நேக்கு தெரியாது தாத்தா ஆனா வசன் ஸ்தானத்தில நான் இருந்தால் கண்டிப்பா நான் இதனை ஏற்று கொள்ளவே மாட்டேன் :) ஏனேனில் இதுவும் ஒரு வித நம்பிக்கை துரோகம் தானே,முதலே கலந்தாலோசித்து விட்டு செய்வது வேற இப்படி செய்வது வேற என்பது என் பார்வையில்.. :rolleyes:

ஏன் இதை சொல்கிறேன் எண்டா இன்றைக்கு இதையே மறைத்தவள் நாளைக்கு எதை எல்லாம் மறைப்பா தாத்தா என்ன நான் சொல்லுறது சரி தானே.. :D

அப்ப நான் வரட்டா!!

நன்றி பேராண்டி.

தான் குழந்தை பெற்றுக்கத் தகுதியற்றவன் என்பதை ஏற்றுக் கொள்ள ஒரு ஆண் முன்வரினும்.. தனது துணைவி இன்னொருவரின் உயிரணுவில் தனக்காக குழந்தை பெற்றுக்கிறதை இயல்பாக ஏற்பானா..??! இந்தச் சிக்கல் வசந்திக்கும் வந்திருக்கும் அல்லவா. அதனால் அவள் குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு உண்மையைச் சொல்வோம்.. என்றிருந்திருக்கலாம் இல்லையா. அவள் அதை ஒரு தீர்வாகத் தேடி இருக்கலாம் இல்லையா..?!

இருந்தாலும்.. இதை தர்க்கத்துக்கு அப்பால் நியாயப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். :lol:

Edited by nedukkalapoovan

குழந்தை பெற்றுக்கொள்ள தேவையான உயிரணு ஆணிடம் இல்லை எண்டால்

பெண் இப்படி குழந்தை பெத்துக்கலாம். தப்பே இல்லை.

இதை நான் தப்பு என்று சொல்லவில்லை. ஆனால் எதையும் முதலில் கலந்தாலோசித்துவிட்டுத்தான் செய்யவேண்டும். கணவன் மனைவிக்குள் அப்போதில்லாத அன்னியோன்யம் குழந்தை பிறந்ததும் வந்துவிடாது.

வைத்தியரை நோக்கி கேள்வி எழேக்க அவர் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

தாத்தா, இது இலங்கைக்கு வேண்டுமானால் சரிப்படலாம், வெளி நாடுகளில் சரிவராது. மனைவியின் ஒப்புதல் இல்லாமல் வைத்தியர் எதையும் கணவருக்குக்கூட சொல்லமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா, இது இலங்கைக்கு வேண்டுமானால் சரிப்படலாம், வெளி நாடுகளில் சரிவராது. மனைவியின் ஒப்புதல் இல்லாமல் வைத்தியர் எதையும் கணவருக்குக்கூட சொல்லமுடியாது.

கதையில் ஏலவே சொல்லப்பட்ட படி இந்த விவகாரம் மனைவியின் முழுச்சம்மதத்துடன் நடந்த ஒன்று. கணவருக்கு அறிவிக்க கேட்கப்பட்ட ஒன்று. அந்த வகையில் சட்ட ரீதியாக மனைவி வைத்தியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மனைவிக்கு வைத்தியரால் அறிவுறுத்தப்பட்டும்.. நடைமுறைப்படுத்தப்படாததையே வைத்தியர் கணவருக்கு சொல்லியுள்ளார்.அதற்கு வைத்தியர் பொறுப்பல்ல.. அது அவரின் கடமை. அது மேற்குலகிலும் உள்ள நடைமுறையே.

இக் குட்டிக்கதையை உலகில் எமது சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எங்கு வாழினும் அதற்கு பொருந்தத்தக்கதாகவே தேர்வுசெய்து எழுத முற்பட்டேன். அது எல்லா இடத்துக்கும் 100% பொருந்தி வரும் என்று சொல்ல முடியாது. அந்தளவு திருத்தமாக ஒரு குட்டிக்கதையில் எழுதுவது இலகுவான விடயமல்ல என்னைப் பொறுத்தவரை. :rolleyes:

Edited by nedukkalapoovan

இக் குட்டிக்கதையை உலகில் எமது சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எங்கு வாழினும் அதற்கு பொருந்தத்தக்கதாகவே தேர்வுசெய்து எழுத முற்பட்டேன். அது எல்லா இடத்துக்கும் 100% பொருந்தி வரும் என்று சொல்ல முடியாது. அந்தளவு திருத்தமாக ஒரு குட்டிக்கதையில் எழுதுவது இலகுவான விடயமல்ல என்னைப் பொறுத்தவரை. :rolleyes:

ஒப்புக்கொள்கிறேன்.

உங்கள் ஆக்கம் நன்றாக இருந்தது என்று முதலிலேயே சொல்லிவிட்டேன்.

எனக்கு இந்த திறமையில்லாம் கிடையாது. உங்கள் திறமை பாராட்டப்படவேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் நோக்கம் நல்லது ஆனால் சட்டப்படி ஒரு கணவன் மனைவி என்றிருக்கும்போது கணவனை கலந்தாலோசிக்காமல்அப்படி ஒரு முடிவை எப்படி எடுத்திருப்பார் அல்லது ஒருவரின்தனிப்பட்ட முடிவுக்கு வைத்தியர்கள் எப்படி சம்மதித்திருப்பார்கள் என்று பல கேள்வி எழுகிறது.இது நடைமுறைக்கு சாத்தியம் தானா என்கிற சந்தேகங்கள் இருந்தாலும் நல்லதொரு விடயத்தைக் கொண்ட கதை. நான் படிக்கிற காலத்தில் இது போன்றதொரு கதை விஞ்ஞான வளர்ச்சியின் தொழில் நுட்பஉதவியால் கருவை சோதனைக்குளாயிலேயே வளர்க்கின்றனர் இறுதியில் தாய்க்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவருமே குழந்தையை கைவிட்டு பிரிந்து போகின்ற மாதிரி .நவீன அனாதை என்ற தலைப்பில் எழுதி பாடசாலை மலரில் பிரசுரிக்க சொல்லி அதன் ஆசிரியர் குழுவிடம் கேட்டேன் .ஆனால் அந்தக் காலகட்டத்தில் அந்தக் கதையை ஏற்க அவர்கள் தயாராய் இருக்கவில்லை ஆத்திரத்தில் அவர்களிற்கு முன்னாலேயே அதை கிழித்து எறிந்து போட்டு போய்விட்டேன். :rolleyes::unsure:

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையின் நோக்கம் நல்லது ஆனால் சட்டப்படி ஒரு கணவன் மனைவி என்றிருக்கும்போது கணவனை கலந்தாலோசிக்காமல்அப்படி ஒரு முடிவை எப்படி எடுத்திருப்பார் அல்லது ஒருவரின்தனிப்பட்ட முடிவுக்கு வைத்தியர்கள் எப்படி சம்மதித்திருப்பார்கள் என்று பல கேள்வி எழுகிறது.இது நடைமுறைக்கு சாத்தியம் தானா என்கிற சந்தேகங்கள் இருந்தாலும் நல்லதொரு விடயத்தைக் கொண்ட கதை. நான் படிக்கிற காலத்தில் இது போன்றதொரு கதை விஞ்ஞான வளர்ச்சியின் தொழில் நுட்பஉதவியால் கருவை சோதனைக்குளாயிலேயே வளர்க்கின்றனர் இறுதியில் தாய்க்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவருமே குழந்தையை கைவிட்டு பிரிந்து போகின்ற மாதிரி .நவீன அனாதை என்ற தலைப்பில் எழுதி பாடசாலை மலரில் பிரசுரிக்க சொல்லி அதன் ஆசிரியர் குழுவிடம் கேட்டேன் .ஆனால் அந்தக் காலகட்டத்தில் அந்தக் கதையை ஏற்க அவர்கள் தயாராய் இருக்கவில்லை ஆத்திரத்தில் அவர்களிற்கு முன்னாலேயே அதை கிழித்து எறிந்து போட்டு போய்விட்டேன். :rolleyes::unsure:

நன்றி சாத்திரி. :lol:

அன்று அந்தக் கதையைக் கிழிச்சு எறியச் செய்திருக்காட்டா இன்று சாத்திரி ஒரு விஞ்ஞானி ஆகி இருந்திருப்பார். யார் அந்தத் தவறைச் செய்தது..??! :)

இன்னும் பக்குவப்படாத சமுதாயத்திலிருந்து பார்க்கும்போது இக் கதை மிக அருமையானது.

சோதனைக் குழாய்க் குழந்தை, மறுமணம் போன்றவை எமது சமுதாயத்தில் இன்னும் அருவருப்பானவையாகவே தென்படுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பக்குவப்படாத சமுதாயத்திலிருந்து பார்க்கும்போது இக் கதை மிக அருமையானது.

சோதனைக் குழாய்க் குழந்தை, மறுமணம் போன்றவை எமது சமுதாயத்தில் இன்னும் அருவருப்பானவையாகவே தென்படுகின்றன.

சோதனைக் குழாய் குழந்தை அருவருப்பென்றால்.. கலியாணம் கட்டி குழந்தை பெற்றுக்கிறது அதைவிட அருவருப்பா எல்லோ இருக்க வேணும்.

மறுமணம் என்பது ஒரு தனிநபரின் மன ஆளுமை சார்ந்த விடயம். அதை நாம் பொதுவில் வைத்துப் பேச முடியாது. சிலருக்கு பலரைக் காதலிக்கிற மனசிருக்கும்.. சிலருக்கு அடுத்தவன் காதலிச்சதை.. தட்டிப்பறிச்சுக் காதலிக்கிற மனசிருக்கும்.. சிலருக்கு ஒன்றே ஒன்று கண்ணே கண் என்று காதலிக்க மனசிருக்கும்.. இது அவரவரின் மன ஆளுமையைப் பொறுத்தது. இது எமது சமூகத்தில மட்டுமல்ல.. மனிதரிடத்தில் பொதுவாகக் காணலாம்.

இங்கு பேசப்படும் விடயம் சோதனைக்குழாய் குழந்தை மட்டுமல்ல.. இது கொஞ்சம் மாறுபட்ட விடயம். சோதனைக் குழாய் குழந்தை.. கருப்பைக் குழாயில் அடைப்பு உள்ள பெண்களுக்கு கருக்கட்டலுக்கான வாய்ப்புக் குறைவு என்பதால் அப்பெண்ணின் முட்டையையும் கணவனின் உயிரணுவையும் சோதனைக் குழாய் முறையில் கருக்கட்ட அனுமதித்து பின் தாயின் வயிற்றில் குழந்தையை வளர்த்தல். அது பெரிய ethical issue ஆவதில்லை.

ஆனால் ஒரு பெண்ணின் முட்டையை கணவன் அல்லாத இன்னொரு ஆணின் உயிரணுவுடன் ஆய்வுசாலை முறையில் கருக்கட்ட வைத்து குழந்தை பெற்றுக்கிறது அல்லது ஒரு ஆண் மனைவியல்லாத இன்னொரு பெண்ணின் முட்டையைப் பாவித்து ஆய்வுசாலை முறையில் கருக்கட்ட வைத்து குழந்தை பெற்றுக்கிறது ethical issue ஆக எடுக்கப்பட வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. அது எமது சமூகத்தில் மட்டுமல்ல.. அறிவியல் அறிவு மிகுந்த சமூகங்களிலும் இருக்கக் கூடிய ஒன்றுதான்..!

நன்றி உங்களின் தெளிவைத் தேடும் கருத்துப் பகிர்வுக்கு. :)

Edited by nedukkalapoovan

இரண்டு முறை வாசிக்கத்தூண்டியது கதை... நான் நினைக்கிறேன் எமது சமுதாயம் இன்னும் இது போன்ற விசயங்களில் முன்னேறவில்லை...

எனக்கென்னவோ சில விசயங்களைப் பொறுத்தவரையில் அதுவும் நல்லதுக்குத்தான் என்று தோன்றுகிறது... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு முறை வாசிக்கத்தூண்டியது கதை... நான் நினைக்கிறேன் எமது சமுதாயம் இன்னும் இது போன்ற விசயங்களில் முன்னேறவில்லை...

எனக்கென்னவோ சில விசயங்களைப் பொறுத்தவரையில் அதுவும் நல்லதுக்குத்தான் என்று தோன்றுகிறது... :)

நன்றி உதயம் தங்கள் கருத்துப் பகர்வுக்கு. :(

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை. ஆனால் கணவரிடம் கேட்டு ஆலோசனை செய்தபின்பு மனைவி முடிவெடுத்திருக்கலாம். கணவர் விரும்பாவிட்டில் ஆனாதைக் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கலாம்.

நல்லதொரு கதை. ஆனால் கணவரிடம் கேட்டு ஆலோசனை செய்தபின்பு மனைவி முடிவெடுத்திருக்கலாம். கணவர் விரும்பாவிட்டில் ஆனாதைக் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கலாம்.

கந்தப்பு ஜயாவின் கருத்துதான் எனது கருத்தும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு உங்கள் கருத்துப்பகிர்வுக்கு. :)

பொதுவாகவே ஒரு ஆணோ பெண்ணோ தனது சொந்தக் குழந்தைக்குத்தானே ஆசைப்படுவார்கள்.

இந்தக் கதையில் அந்த மனைவிக்கு இரண்டு சூழ்நிலை..

ஒன்று தனது கணவனால் குழந்தையை உருவாக்க முடியாத சூழல்..

இரண்டு சொந்தக் குழந்தை வேண்டும் என்ற நிலை...

இது இரண்டையும் சமாளிக்க அவளிற்கு இருந்த வளி இதுவாக அமைந்திருக்கலாம் அல்லவா.

எல்லா ஆண்களும் பெண்கள் விளங்கப்படுத்திறதை விளங்கிக் கொள்ளத் தயாரா..??! இல்ல எல்லாப் பெண்களும் ஆண்கள் விளங்கப்படுத்திறதை விளங்கிக் கொள்ளத் தயாராகவா இருக்கினம். அப்படி தயாராக இருந்திட்டால்.. ஆண் பெண்ணிடையே பிரிவினைகள் தோன்றாதே..!

தனது கணவனைச் சமாளிக்க.. இப்படி நடந்து கொண்டிருக்கலாம்.

இந்தக் கதையை நான் உருவாக்கக் காரணம்.. சோதனைக் குழாய்க் குழந்தை என்பது இன்று சாதாரணமா குழந்தை வேண்டிய ஒரு சிகிச்சைக்குரிய வழிமுறை என்ற வகைக்கு வந்துவிட்டது. ஆனால் மனித மனங்கள் இன்னும் புதிய சூழலுக்குப் பக்குவப்பட தம்மை நிறையவே தயார்ப்படுத்த வேண்டியும் இருக்கிறது என்பதை சொல்வதற்காகவே என்றால்.. அதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்கள் கருத்துக்கு சரியானதே

இருந்தாலும்.......அந்த தாய் தன் கணவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று அறிந்தும் தன் கணவருடன்

கலந்தாலோசித்து முடிவு எடுத்திருப்பார் ஆயின் அந்த குழந்தை ஆரோக்கியமாகவும் இரண்டாம் நிலை

உருவாகமலும் செய்திருக்கலாம் ஆனால் கணவரிடம் மறைத்து செய்திருப்பதால் கணவருக்கு சந்தேகம்

ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன இதையே என்னிடம் மறைத்த நீ எனக்கு தெரியாத எத்தனையோ

விசயங்களை மறைத்திருக்க கூடும் என்ற நிலை தோன்றும் அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைத்தலில் இரண்டு வகை இருக்கிறது..

1. மறைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு விடயத்தை நிரந்தரமாகவே மூடிமறைப்பது. பெண்கள் அதில் கில்லாடிகள்.

2. குறித்த சூழ்நிலையில் மறைத்து பின்னர் வெளிப்படுத்துவது. வேண்டாத சர்ச்சைகளைத் தவிர்க்க என்று.

இந்தப் பெண்ணை வகை இரண்டுக்குள் வைக்கலாம் இல்லையா. எப்படியோ கணவனுக்கு தெரியவரத்தான் போகுது.. ஒருவேளை ஆரம்பத்திலேயே சொல்லி.. கணவன் முற்றாக நிராகரிக்கும் பட்சத்தில்... நடக்கவே முடியாத காரியமாகிவிடக் கூடியதை.. யாருக்குமே தீமை பயக்காத வகையில் காரியமானதும் வெளிப்படுத்துவதில் தவறில்லை தானே.

வள்ளுவனே சொல்லி இருக்கிறான்.. நன்மை பயக்குமிடத்தில் பொய்யும் சொல்லலாம் என்று..! இங்கு பொய் கூடச் சொல்லேல்ல. தெரியப் போவது கொஞ்சம் தாமதமாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது அவ்வளவுதான். அவள்... தன்னை இன்னொருவனுக்கு இழக்கவில்லை. அதுமட்டுமன்றி.. தன் கணவனையும் தன்னிடத்தில் இருந்தும் இழக்கவிரும்பவில்லை..! அது அவனிடத்தில் அவளின் அன்பைத்தானே குறிக்கிறது.!

நன்மையே பயக்கும் என்றால் பொய் சொல்லலாம் என்று வள்ளுவனே சொல்லி இருக்கிற இடத்தில் நன்மையே பயக்கும் என்றால் உண்மையை கொஞ்ச காலம் மறைத்து தாமதித்து வெளிப்படுத்துதல் தவறாகுமா..??!

தவறென்றால்.. வள்ளுவன் சொன்னதும் தவறுதானே..! :)

Edited by nedukkalapoovan

ஒரு குடும்பத்தினருக்கு திருமணம் செய்து பலவருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.யாழ்ப்பாணத்தைச

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.