Jump to content

வெந்தயக் குழம்பு


Recommended Posts

வெந்தயக் குழம்பு

- ச‌சிகலா

வியாழன், 26 ஜூன் 2008( 11:49 IST )

உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும்.

இரண்டு பேருக்கு தேவையான வெந்தயக் குழம்பு செய்வதற்கான வழி முறை

எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை

வெங்காயம் - 2

தக்காளி - 2

புளி - எலு‌மி‌ச்சை அளவு

வெந்தயம் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூ‌ள்- 1 தேக்கரண்டி

த‌னியா தூ‌ள் - 2 தே‌க்கர‌ண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தே‌ங்கா‌ய் - 2 ப‌த்தைக‌ள்

உப்பு - தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

கொத்துமல்லி, கறிவேப்பிலை

கடுகு, எண்ணெய் - தாளிக்க

969410092_90c811263b.jpg

செய்யும் முறை

வெந்தயத்தை பொன்னிறமாக (தீய்த்து விடக் கூடாது) வறுத்து அதனை மிக்சியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை தேவையான அளவிற்கு நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். தே‌ங்கா‌யை‌ ந‌ன்கு மை போ‌ல் அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

குழம்பு வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும்.

கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி வதங்கி நன்கு மசிந்து விட வேண்டும். அதற்காக தக்காளியுடன் உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்.

இ‌ப்போது அரை‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் தே‌‌ங்காயையு‌ம் அ‌தி‌‌ல் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.

பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், தக்காளி எல்லாம் மசாலாவுடன் சேர்ந்து நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை கொட்டி கொதிக்கவிடவும்.

குழம்பு நன்கு கொதித்து சுண்டிய நிலையில் அரை தேக்கரண்டி வெந்தயத் தூளை சேர்த்து கொதிக்க விடவும். வெந்தயத் தூளை அதிகமாக சேர்த்து விடவும் கூடாது, குழம்பு அதிகமாக கொதித்து விடவும் கூடாது. ஏனெனில் குழம்பு கசந்து விடும்.

எனவே குழம்பை இறக்குவதற்கு 5 நிமிட நேரத்திற்கு முன்பு வெந்தயத் தூளை போட்டு கொதிக்க விட்டு கறிவேப்பிலை, கொத்துமல்லியைத் தூவி இறக்கவும்.

சுவையான வெந்தயக் குழம்பு தயார்.

webulagam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே வெந்தயக்கறி உடம்புக்கு நல்லதென கேள்விப்பட்டுருக்கின்றேன் . நன்றி நுணாவில் :lol:

அதுசரி யார் அந்த சசிகலா? ஜேயின்ரை அவ இல்லைத்தானே :lol:

Link to comment
Share on other sites

உண்மையிலேயே வெந்தயக்கறி உடம்புக்கு நல்லதென கேள்விப்பட்டுருக்கின்றேன் . நன்றி நுணாவில் :lol:

அதுசரி யார் அந்த சசிகலா? ஜேயின்ரை அவ இல்லைத்தானே :lol:

இவ, அவ இல்லை. :)

Link to comment
Share on other sites

இது வெந்தயக்குழம்பா இல்லை தக்காளிக்குழம்பா ?

ம் வாசிக்க வாசிக்கவே இடியப்பம் செய்து அதனுடன் சாப்பிட வேண்டும் போல இருக்கின்றுது

Link to comment
Share on other sites

பரணி, வெந்தயம் தனிய ஒரு கறியாக வைக்க முடியாது. அனேகமாக தக்காளிபழமும் போடுவார்கள்.அதற்குள் இறாலும் போட்டு வைத்தால் சொல்லி வேலையில்லை.

Link to comment
Share on other sites

கூடவே அவித்த முட்டையையும் போட்டால் இன்னும் நல்லா இருக்கும்.வெந்தயமும் முட்டையும் நல்ல சுவை. குறிப்பாக இடியப்பம், புட்டு போன்ற உணவுகளுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்த இந்த வெந்தய குழம்பை செய்து பார்க்கப்போகின்றேன் நுணாவிலான் ,

ஆனால் முதலில் எனக்கு , தே‌ங்கா‌ய் - 2 ப‌த்தைக‌ள் என்றால் என்ன என்று சொல்லவும் .

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் இப்படி தமிழை பாவிக்கிறார்கள்.

இதற்கிடையே தேங்காயைத் துருவி வைக்கவும். (பத்தைகள் விழாது உதிரி உதிரியாய்ப் பூப்போலத் துருவுதல் நலம். எனவே இளம் தேங்காய் உதவாது. திடமான, முற்றிய தேங்காயே நல்லது. )

என்றால் தேங்காய் சொட்டுகள் என எடுக்கலாமா சிறி? :)

Link to comment
Share on other sites

நுணாவிலான் உது வெந்தயக்குழம்பு இல்லை தக்காளி குழம்பு

வெந்தயக் குழம்பு வைக்கத் தேவையான பொருட்கள்

வெந்தயம் - 4 தேக்கரண்டி

உள்ளி- 2 முழுதாக

வெங்காயம்- 3 பெரியது

புளி- தேசிக்காய் அளவு

மிளாகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு நெட்டு

கடுகு- 1/4 தேக்கரண்டி

உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:-

வெங்காயம் உள்ளியை தோலை நீக்கி நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக வெட்டுக. பின்னர் வெட்டிய வெங்காயம் உள்ளி கருவேப்பிலை போட்டு வதக்கி பொன்னிறமாக வந்த பின்னர் கடுகு, வெந்தயம் போட்டு வதக்கவும். பின்னர் மிளாக்ய்த்துளை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து புளியை கரைத்து விட்டு மூடி கொதிக்க விடவும். குழம்பு கொதித்த பின்னர் இறக்கி பரிமாறவும்.

Link to comment
Share on other sites

நன்றி ரசிகை இதுதான் வெந்தயக்குழும்பு. அம்மா இப்படித்தான் வைத்து தருவார். கூடுதலாக இடியப்பம் செய்தால் இந்த வெந்தயக் குழம்பு கட்டாயம இருக்கும். அதுதூன் யோசித்தேன் தக்காளிப்பழம் ஏன் போடுகின்றார்கள் என்று. .

ம் மணி கொடுத்து வைத்தவர்தான்.

Link to comment
Share on other sites

இவை இரண்டும் இரண்டு விதமான வெந்தய குழம்புகள். இரண்டு செய்முறையும் சுவை நன்றாகவே இருக்கும். எங்கள் வீடுகளில் இரண்டு முறையிலும் செய்வோம்.

ஆனால் முட்டை, இறால் எல்லாம் சேர்ப்பதில்லை. :)

Link to comment
Share on other sites

தனிய வெங்காயம் போட்டு குழம்பும் செய்யலாம். அதற்குப்பெயர் வெங்காயக்குழம்பு (வெந்தயத்தை குறைச்சு வெங்காயத்தை கூட்டினால் சரி )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறு கறியள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும் அதுக்காக அது அப்படியில்லை இப்பிடித்தான் எண்டு நான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்தான் எண்டு விதண்டாவாதம் பிடிக்கலாமோ :wub:

Link to comment
Share on other sites

நண்றி உங்கட குழ்ம்புக்கு... :wub:

சோறு கறியள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும் அதுக்காக அது அப்படியில்லை இப்பிடித்தான் எண்டு நான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்தான் எண்டு விதண்டாவாதம் பிடிக்கலாமோ :wub:

மூண்டு காலோ.... ம்ம்... குமாரசாமியண்ணை நான் நினைச்சன் முக்கால் கால் எண்டு சொல்லப்போறியளோ எண்டு .....

Link to comment
Share on other sites

ரசிகை சொன்னது சரிதான். இது இந்தியத் தமிழர்கள் முறைப்படி செய்யும் முறை. ரசிகை அவர்கள் குறிப்பிட்டதுபோல்தான் நம்மவர்கள் செய்வார்கள். இறால் போட்டுச் செய்வது மிகவும் பிரசித்தம். விரதநாட்களில் இறால் போடாமல் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

இந்தியர்கள் முறையென்டால் என்ன, நம்மவர் முறை என்டால் என்ன, கறி ருசியா இருந்தா சரி.. :D

Link to comment
Share on other sites

ஒவ்வொன்றும் ஒவ்வொருவித ருசி. ரசிகை சொன்ன விதம்தான் நம்மவர்களிடையே பிரசித்தம். அதைத்தான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை சொன்ன விதம்தான் எங்களது.ஆணால் உள்ளி கொஞ்சம் கூடப்போட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂
    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.