Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத் தமிழ்!

Featured Replies

யாழ்ப்பாணத் தமிழ்: சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாது

பூனை புலியினத்தைச் சேர்ந்ததே என்றாலும் பூனைக்கும் புலிக்கும் எத்துணை வேறுபாடுள்ளது! நெல் என்பது ஒரு வகையான புல் என்று கூறினால் அற்பமான புல்லுக்கும், உயிர்காக்கும் நெல்லுக்கும் எத்துணை வேறுபாடு! ''உருவுகண்டு எள்ளாமை வேண்டும்'' என்றார் வள்ளுவர்.

ஒரு மொழியின் வளர்ச்சியில் பண்டு வெவ்வேறு வடிவங்களைப் பெற்றிருந்த சொற்கள் காலப்போக்கில் ஒரே வடிவத்தை ஏற்றுக்கொள்ளுதல் உண்டு. எடுத்துக்காட்டாக ''அத்தம்'' என்ற சொல் சங்க காலத்தில் ''வழி'' என்ற பொருளைப் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வடசொற்கள் வடவெழுத்து ஒரீஇத் தமிழில் அளவின்றிப் புகுந்தபோது ஹஸ்தம் (கை), அர்த்த (பாதி), அருத்தம் (பொருள்) என்ற மூன்று வடசொற்கள் தமிழில் ''அத்தம்'' என்ற ஒரே வடிவத்தைப் பெற்றுவிட்டன. நான்கு வெவ்வேறு பொருட்களைப் பெற்றுள்ள ''அத்தம்'' என்பது ஒரு சொல்லா? பல பொருள் ஒரு சொல்லா? எனில் நான்கு சொற்களின் திருந்திய வடிவமாதலின் பலபொருள் ஒரு சொல் (Homonym) எனப்படும். அகராதியில் நான்கு வெவ்வேறு சொற்களாக எண்கள் தரப்பட்டு வேர்கள் கூறப்பட்டிருக்கும்.

பிறமொழிச் சொற்கள் கலவாத போதுகூடத் தமிழிலேயே வெவ்வேறு பொருள்களையுடைய சொற்கள் ஒரே வடிவத்தைப் பெற்று விடுதலுமுண்டு. நந்து என்ற சொல் தழைத்தல், அழிவுறல் என்ற முற்றிலும் முரண்பட்ட பொருளைத் தருவது போலவே ''படு'' என்ற சொல்லும் ''தோன்று, அழிவுறு'' என்ற இருவேறு பொருள்களைத் தந்து நிற்கின்றது. ஒரு சொல் எப்பொருளில் வழங்கப் பெற்றுள்ளது என்பதை அச்சொல்லைச் சூழ்ந்துள்ள பிறசொற்களின் துணையால் அறிந்து கொள்ளலாம். இதிலிருந்த ஒரு சொல்லின் பொருள் காலத்துக்கேற்பவும், இடத்திற்கேற்பவும் வேறுபடும் என்பது பெறப்படும். சிலபோது உணர்த்துவான் (பேசுவான்) குறிப்பிற்கேற்பவும், உணர்வான் (கேட்போன்) குறப்பிற்கேற்பவும் கூடப்பொருள் மாற்றம் நிகழ்வதுண்டு. எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் எந்தச் சமயத்தில் ஏற்படும் என்று எவரும் எதிர்பார்த்துக் கூற முடியாது. இதனால்தான் மொழியியலில் எழுத்தியல், ஒலியியல் போலப் பொருளியல் ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்றிருக்கவில்லை என்று கூறுவர். ஒரு சொல்லுக்கு எக்காலத்திலும் ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியும் என்று கூற முடியாதாகலின் ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு இருப்பதாகக் கருதமுடியாது. எனினும் காளிதாசர் தம் ரகுவம்சத்தில் கடவுள்வாழ்த்துப் பாடும்போது ''சொல்லும் பொருளும் போல இணைபிரியாத மாதொரு பாகனை (அர்த்தநாரீசுவரனை) வணங்குகின்றேன்'' என்று கூறியுள்ளார்.

இலங்கையின் ஒரு பகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்று கூறுகின்றனர். யாழ்ப்பாணத் தமிழையும், தமிழகத் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போபது பல உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. கடலால் பிரிக்கப்பட்ட பகுதியாதலின் தமிழின் பல தொன்மைக் கூறுகளை யாழ்ப்பாணத் தமிழ் இன்னும் காப்பாற்றி வருகிறது. சங்ககாலச் சொற்களில் பல சொற்கள் இன்றும் யாழ்ப்பாணத் தமிழில் உலா வருகின்றன. அவன் இவன் என்ற இரு சொற்களுக்கும் இடைப்பட்ட உவன் என்பது தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் காணப்படுகிறது. அதைப் போலவே சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்ட பொருளைக் குறிக்கும் உது, உவர், உப்பால், உங்கை (உங்கே), உம்பர், உவண், உவள், உதை (அதை), உதுக்கு முதலிய பல சொற்கள் யாழ்பாணத் தமிழில் வழக்கில் உள்ளன. தமிழகத் தமிழில் அவை வழக்கு வீழ்ந்துவிட்டன மேலும் யாழ்த் தமிழில் வழங்கும் பல சொற்கள் அதே வடிவத்தில் தமிழகத் தமிழில் வேறு பொருள்களைப் பெற்று வழங்குகின்றன. இவ்வாறு பல்லாயிரம் சொற்கள் என்னால் தொகுக்கப்பெற்றுள்ளன. ஒரு சிலவற்றை மட்டும் ஈண்டுக்காண்போம்.

சம்பல் என்பது கொங்குப் பகுதியில் விலை குறைந்தது. விலை மலிவானது என்ற பொருளைத் தரும். துணியின் விலை சம்பலாகி விட்டுது என்றால் விலை குறைந்துவிட்டது என்பது பொருள்.

யாழ்ப்பாணத்தில் சம்பல் என்பது வற மிளகாய்ச் சட்டினியைக் குறிக்கும்.

''நீ அவனோடு கதைக்காதே'' என்றால் அவனோடு பேசாதே என்பது யாழ்ப்பாண வழக்கு. தமிழகத்தில் கதைக்காதே என்றால் கதைவிடாதே, பொய்யாகப் புனைந்து கூறாதே என்ற பொருள்தான் உண்டு.

வடிவு என்பது அழகு, நன்கு என்ற பொருளில் யாழில் (யாழ்ப்பாணத்தில் என்பதன் சுருக்கம்) வழங்குகிறது. அவள் வடிவாயிருக்கிறாள் என்றால் அழகாயிருக்கிறாள் என்றும் அதை வடிவாய்ச் செய்கிறான் என்றால் நன்றாகச் செய்கிறான் என்றும் பொருள் தமிழகத்தில் வடிவு என்பது உருவம் என்ற பொருளில் வழங்குகிறது. இலக்கியத்தில் மட்டும் வடிவு என்பது அழகு என்ற பொருளைப் பெற்றிருக்கும்.

யாழில் தாமசிக்கிறான் என்றால் ஓரிடத்தில் குடியிருக்கிறான் என்று பொருள். மலையாளத்திலும் இச்சொல் இப்பொருளில் வழங்குகிறது. தமிழகத்தில் காலந்தாழ்த்துகிறான் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒற்றை மாட்டு வண்டியைத் திருக்கல் வண்டில் என்று கூறுவர். வண்டில் என்பது பழஞ்சொல், தமிழில் வண்டி என்றும் தெலுங்கில் பண்டி என்றும் வழங்கும். தமிழ்நாட்டில் திருக்கல் என்பது குதர்க்கம், பிரச்சனை என்ற பொருளைத்தரும்.

யாழ் நாட்டில் திறப்பு என்பது சாவியைக் குறிக்கும். கொங்கு நாட்டில் சாவியைத் தொறப்புக் குச்சி என்பர். தமிழகத்தில் திறப்பு என்றால் சாவி என்ற பொருள் இல்லை. திறத்தல் என்ற பொருளே உள்ளது. திறப்புவிழா, படத்திறப்பு முதலிய தொடர்களைக் காண்க.

யாழ்ப் பேச்சு வழக்கில் ''தீத்து'' என்பது ஊட்டு என்று பொருள்படும். ''நான் உனக்குச் சாப்பாடு தீத்தப் போறன். சோற்றைக் குழந்தைக்கு தீத்திவிடு'' என்று கூறுவர். தமிழகத்தில் தீத்துதல் என்றால் ஒரு பொருளைக் கூர்மையாக்குதல் (தீட்டுதல்) என்று பொருள்படும்.

சாட்டு என்பது சாக்குப் போக்கு என்ற பொருளில் யாழில் வழங்கப்படுகிறது. ''எல்லாவற்றிற்கும் விதியைச் சாட்டுச் சொல்லாதீர்கள்'' என்பர். தமிழகத்தில் சாட்டு என்பது குற்றஞ்சாட்டு, பூச்சாட்டு (பூச்சாற்று) என்ற பொருளில் வழங்குகிறது.

யாழில் ஆறுதல் என்பது ஓய்வைக் குறிக்கும். ''ஆறுதலாய்க் கதைக்கலாம்'' என்றால் சாவகாசமாப் பேசிக் கொள்ளலாம் என்று பொருள். தமிழ்நாட்டில் ஆறுதல் என்பது தணிதல் (சினம் ஆறுதல்); தேறுதல் (ஆறுதல் கூறு), சூடு ஆறுதல் முதலிய பொருள்களில் வரும்.

அண்டாது என்ற சொல் யாழில் போதாது, பத்தாது என்ற பொருளில் வழங்குகிறது. ''இதுகளுக்கு எப்படிக் குடுத்தாலும் அண்டாது'' என்பர். தமிழகத்தில் அண்டாது என்றால் போய் ஒட்டாது என்று பொருள்படும்.

யாழில் அப்பு என்றால் அப்பாவைக் குறிக்கும். தமிழகத்தில் அறை, குழியை நிறை என்ற பொருளில் வரும். அவதானம் என்பது யாழில் கவனித்தல் என்ற பொருளில் வழங்குகிறது. அவதானமாகக் கேள் என்றால் கவனமாகக் கேள். அவதானிக்கத் தொடங்கு - கவனிக்கத் தொடங்கு. அவதானமாக - கவனமாக. அவதானமாக இரு, எச்சரிக்கையாக இரு. தமிழ்நாட்டில் அவதானம் என்பதை நினைவாற்றல் என்ற பொருளில் வழங்குகின்றனர். அட்டாவதானம், சதாவதானம் என்று கூறுவர். இப்போது எண்கவனகம், நூற்றுக் கவனகம் என்று கூறுகின்றனர். கரந்தை என்பது யாழில் மாட்டுவண்டியைக் குறிக்கும். தமிழகத்தில் கரந்தை பேச்சு வழக்கில் இல்லை. இலக்கிய வழக்கில் அது ஒரு திணையைக் குறிக்கும்.

மாராப்பு என்பது தமிழகத்தில் பெண்கள் மார்பின் மேல் அணியும் துணியைக் குறிக்கும். மார் + யாப்பு = மாராப்பு என்று வரும். யாழில் வண்ணாள் துவைப்பதற்காகக் கட்டி வைக்கும் அழுக்குத் துணிகளைக் குறிக்கும்.

குடிமை என்பது யாழில் அடிமையைக் குறிக்கும். தமிழகத்தில் குடிமக்களைப் பற்றிய அறிவு என்று பொருள்படும். பள்ளிகளில் ஒரு காலத்தில் குடிமைப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

அணியம் என்பது யாழில் கப்பலின் முன்பகுதியைக் குறிக்கும். இக்காலத் தமிழகத்தில் ''தயார்'' என்ற இந்திச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக உள்ளது.

கெதி என்றால் அவசரம் என்பது யாழ்ப்பாணப் பொருள் கெதியா வா - விரைவாக வா.

தமிழகத்தில் கெதி என்ற பேச்சு வழக்குச் சொல் ஆதரவு, நற்பேறு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அவனுக்கு வேறு கெதியில்லை; அவன் ஒரு கெதி கெட்டவன் என்பவை பேச்சு வழக்கு.

எடுப்பு என்றால் யாழில் ஊதாரிச் செலவு என்று —‘பருள். ''நானும் உந்த எடுப்பு வேண்டாமெண்டு எத்தினை அவனுக்குச் சொல்லியிருக்கிறன்''.

தமிழகத்தில் எடுப்பு என்றால் எடுத்தல், கவர்ச்சி முதலிய பொருள்களைத் தரும். எடுப்புச் சாப்பாடு என்றால் சாப்பாட்டு விடுதியிலிருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் உணவு. இது எடுப்பாக இருக்குது என்றால் அழகாக, கவர்ச்சியாக இருக்கிறது என்று பொருள்.

எத்து என்றால் யாழில் பாத்திரத்திலிருந்து நீரைக் கொட்டு என்று பொருள். தமிழகத்தில் அச்சொல் ஏமாற்று என்ற பொருளைத் தருகிறது.

ஏத்தம் என்பது யாழில் பெருமை என்ற நல்ல பொருளைத் தருகிறது. தமிழகத்தில் ஏத்தம் என்பது ஏற்றம் (இறைத்தலைக்) குறிக்கும். திமிர் என்ற பொருளையும் தரும். ''அவனுக்கு ரொம்ப ஏத்தம் இருக்குது'' என்பது பேச்சு வழக்கு.

கறுப்பு என்பது யாழில் சாராயத்தைக் குறிக்கும். இங்கே கறுப்பு நிறத்தையும், பேயையும் குறிக்கும். இவ்வாறு ஒரே வடிவத்தைப் பெற்ற சொற்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு பொருளையும், தமிழகத்தில் வேறு பொருளையும் தருவதை அவதானிக்கலாம்.

நன்றி: ஆய்வுக்கோவை.

அருமையான கட்டுரை..இணைப்பிற்கு நன்றி ரசிகை

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை

தங்கள் கட்டுரையில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. ஆனால் சம்பல் என்னும் சொல் நாமுண்ணும் சம்பலுக்குரிய கருத்தில் வரும்போது அது ஒல்லாந்துச் சொல் என்றே எண்ணுகிறேன். இது பற்றி முடிந்தால் அறியத்தாருங்கள்.

  • தொடங்கியவர்

ரசிகை

தங்கள் கட்டுரையில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. ஆனால் சம்பல் என்னும் சொல் நாமுண்ணும் சம்பலுக்குரிய கருத்தில் வரும்போது அது ஒல்லாந்துச் சொல் என்றே எண்ணுகிறேன். இது பற்றி முடிந்தால் அறியத்தாருங்கள்.

நான் படித்ததை இங்கு இணைத்தேன். இது எனது கட்டுரை அல்ல.

சம்பல் ஒல்லாந்துச் சொல்லா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை.

தேடிப்பார்க்கிறேன் பதில் கிடைத்தால் சொல்கிறேன்.

களத்துல நிறைய

தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரவது வந்து சொன்னால்

நல்லா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கண காலத்துக்குப்பிறகு திருமதி மணிவாசகனை யாழிலை வந்ததற்கு மகிழ்ச்சி. கனடா குடியுரிமை இன்னும் கிடைக்காததினால் மணிவாசகன் அடிவாங்காமல் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.

அருமையான இணைப்பை இணைத்தமைக்கு நன்றிகள் இரசிகை. சென்னையில் எனக்குத் தெரிந்த ஈழத்தமிழர் ஒருவர் கடை ஒன்றில் அரிசி என்னை விலை என்று கேட்க, கடைக்காரரும் முழிக்க, கடையில் இருந்த அரிசியினைக் காட்டி என்ன விலை என்று கேட்க, தமிழீழ ரைஸ் என்று கேளுங்கள் என்று கடைக்காரர் சொன்னார். தமிழ் நாட்டில் சென்னையில் தமிங்கிலத்தை தமிழ் என்று நினைக்கிறார்கள். அவுசுத்திரெலியாயில் தரிசனம் தொலைக்காட்சியினூடாக மருத்துவர் தமிழ்குடிதாங்கியின் மக்கள் தொலைக்காட்சியினைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அத்தொலைக்காட்சியில் 'சொல் விளையாட்டு', 'தமிழ் பேசு தங்கக்காசு' 'செய்திகள்' போன்றவை தூய தமிழிலே ஒளிபரப்புச் செய்கிறார்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எம்மவர்களில் சிலர் தங்களது பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டுவதற்காக தமிழைக் கொலை செய்யும், புலி எதிர்ப்புச் செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகளான 'ஜெயா','சன்' தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சிக்கோ, எம்மவர்களின் தொலைக்காட்சிகளுக்கோ ஆதரவு வழங்குவதில்லை.

  • தொடங்கியவர்

கண காலத்துக்குப்பிறகு திருமதி மணிவாசகனை யாழிலை வந்ததற்கு மகிழ்ச்சி. கனடா குடியுரிமை இன்னும் கிடைக்காததினால் மணிவாசகன் அடிவாங்காமல் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.

கந்தப்பு குஞ்சாச்சி எங்க? ஒருக்கா எனக்கு போன் எடுக்க சொல்லுங்கோ

ஆமாம் கந்தப்பு இந்தியாவில் தற்போது ஆங்கில வார்த்தைகள்தான் கூடப் பாவிக்கிறார்கள்.

எனது நண்பி இந்தியா போய் இருக்கும் போது தமிழ்க் கடை ஒன்றில் போய் 1 இறாத்தல்

பாண் தாங்கோ என்டு கேட்டு இருக்கிறா. பாணோ அது என்னது எங்களிட்டை இல்லை

என்டு கடைக்காரர் சொல்லி இருக்கிறார். அப்ப அவ பாணை காட்டி இதுதான் நான் கேட்டது தாங்கோ

என்டு சொல்ல. கடைக்காரார் சொன்னாராம். ஓ இதுவா. பிரட் என்டு தமிழ்ல கேட்டு

இருந்தால் தெரிந்திருக்கும் என்டு. நண்பிக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை,.

Edited by Rasikai

ரசிகை

தங்கள் கட்டுரையில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. ஆனால் சம்பல் என்னும் சொல் நாமுண்ணும் சம்பலுக்குரிய கருத்தில் வரும்போது அது ஒல்லாந்துச் சொல் என்றே எண்ணுகிறேன். இது பற்றி முடிந்தால் அறியத்தாருங்கள்.

சம்பல் ஒல்லாந்து சொல்லா என எனக்கும் சரியாக தெரியாது. எமது/ தெங்கிழக்காசிய பாரம்பரிய உணவுக்கு ஒல்லாந்தர் அந்த பெயரை சூட்டியிருக்கலாம். அல்லது எம்மிடம் இருந்து அந்த பெயர் ஒல்லாந்து மொழிக்கு போய் இருக்கலாம். கறி ஆங்கிலத்திலும் கறி என்று சொல்வது போல. ஒல்லாந்தில் செய்யப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட மிளகாய், வெங்காயம், உப்பு, புளி சேர்த்து அரைத்த கலவைக்கு சம்பல் என்று தான் பெயரிட்டிருப்பார்கள். நானும் ஐரோப்பாவில் முன்னர் இருந்த போது பார்த்து ஆச்சரியப்பட்டேன். பின்னர் இந்தோனெசிய, மலேசிய மாணவர்களுடன் உரையாடும் போது தான் தெரிந்தது அவர்களும் சம்பல் எனும் உணவை உண்கிறார்கள். மலேசியாவில் மேலே ஒல்லாந்தில் சொல்லப்பட்டதை பொன்றதை சம்பல் என்பார்களாம், இந்தோனேசியாவில் மேலே சொல்லியது போன்றும், எங்களை போல தேங்காய் சேர்த்தும் செய்வார்கள் என்று அறிந்து கொண்டேன்.

இதை விட மேலே சொல்லிய சில சொற்களுக்கான பொருள் பற்றி சிலவற்றை சொல்ல வேண்டும். பின்னர் மீண்டும் வாசித்து விட்டு ஆறுதலாக எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுமரம் எனும் தூய தமிழ் சொல் அனைத்து மொழிகளிலும் பாவிக்கப்படுகின்றது.

எனது நண்பர் தென்இந்தியப் பயணத்தின்போது முச்சக்கரவண்டியில் ஏறி வலது பக்கம் பின்பு இடது பக்கம் பின்பு நேராகப் போ தம்பி என்று தனது இன்பத் தமிழில் கதைத்துள்ளார். சாரதி வண்டியை நிறுத்திவிட்டு என்ன மொழி ஐயா கதைக்கறாய். எனக்கு விளங்குதில்லை. லெப்டு றைற்று ஸ்ரெய்ற்று என்று தமிழில சொல்லய்யா என்றாராம்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுமரம் எனும் தூய தமிழ் சொல் அனைத்து மொழிகளிலும் பாவிக்கப்படுகின்றது.

அதேபோல காசு என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே Cash என்ற ஆங்கிலச் சொல் வந்தது. முன்பு தமிழர்களே காசு கொடுத்து பண்டங்கள் வாங்கினார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியர்களை நக்கலடிக்கிற அவசரத்தில பிழைவிடுறியள்.

(இ)ரசிகை,

பாண் என்பதோ (இ)றாத்தல் என்பதோ தமிழ்ச்சொல்லேயன்று.

அவங்கள் ஒல்லாந்தரிட்டயும் போர்த்துக்கேயரிட்டயும் மாட்டுப்படாததால எங்களுக்குத் தெரிஞ்ச பல "தமிழ்"ச் சொற்கள் அவங்களுக்குத் தெரியாதுதான். :)

'சம்பல்' தமிழ்ச்சொல்லா என்பதில் எனக்கும் குழப்பமே. இந்தோனேசிய - மலாய் மொழிகள் இதன் மூலமாக இருக்கலாம். (அல்லது தமிழிலிருந்து அங்குப் போயிருக்கலாம்.) கச்சான் என்பது அவர்களிடமிருந்து கிடைத்ததென்பதுதான் பொதுவான கருத்து. ஆனாலும் நான்குவகைக் கடற்காற்றுகளிலொன்றை 'கச்சான்' என்ற பெயரால் ஈழத்தில் அழைப்பது உறுத்துகிறது. தமிழகத்தில் இப்பயன்பாடு இல்லை. மிகப் பண்டைய காலத்திலேயே மலாயா - இந்தோனேசியக் கப்பல் வணிகங்களில் யாழ்ப்பாணத்தார் கொடி கட்டிப் பறந்தார்களோ என்னவோ?

'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து'க் குரங்குகளாக அன்றி அறிவுபூர்வமான ஆராய்ச்சிகள் இவ்விடயத்தில் தேவை.

========================

கட்டுரையாளர் தவறவிட்ட ஒரு முக்கியமான புள்ளி.

கட்டுரையாளர் 'உ'கரச் சுட்டைப்பற்றிச் சொல்கிறார். ஆம்! தொல்காப்பியம் சொல்லும் சுட்டெழுத்துக்களில் 'உ'கரம் ஈழத்தில்தான் இன்னமும் உயிர்ப்போடு உள்ளது.

அதேபோல் தொல்காப்பியம் சொல்லும் வினாவெழுத்துக்களில் 'ஏ'காரம் எஞ்சியிருப்பது இன்னும் ஈழத்தில்தான்; தமிழகத்தில் இல்லை. இதைக் கட்டுரையாளர் குறிப்பிடவில்லை.

"ஏ, ஆ முதலிலும், ஆ,ஓ ஈற்றிலும், ஏ இருவழியிலும் வினாவாகுமே"

(ஒன்பதாம் ஆண்டிலயோ என்னவோ பாடமாக்கினது ஆருக்காவது ஞாபகம் வருதோ?)

இதில 'ஏ இருவழியும் வினாவாகுமே' எண்டு சொல்லப்படுது, அதாவது தொடக்கத்திலும் முடிவிலும் இது வினாவாக வரும்.

ஏன், ஏது போன்றவற்றில் 'ஏ'காரம் மொழித்தொடக்கமாக வருகிறது. இவை தமிழகத்திலும் பயன்பாட்டிலுண்டு. ஆனால் 'ஏ'காரம் இறுதியில் வினாவெழுத்தாக வரும்படி தமிழகத்தில் எச்சொல்லும் இல்லை. எங்களிடம் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டிலிருந்த இந்த வினாவும்முறை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்னும் சிலவருடங்களில் முற்றாக இல்லாமற் போய்விடும்.

வருவியே?

போவியே?

செய்வியே?

போன்று இறுதியில் ஏகாரத்தை வினாவெழுத்தாகச்சொல்லும் வழக்கம் எம்மிடம் மட்டுமே உண்டு.

அதேபோல் 'ஓ'காரம் இறுதியில் வினாவெழுத்தாக வருமென்று தொல்காப்பியர் சொல்கிறார். இது தமிழகத்தில் பயன்பாட்டிலிருந்தாலும் மிகமிகக் குறைவு. ஆனால் ஈழத்துப் பேச்சுவழக்கில் இந்த ஓகார வினா முறை தனித்துவமானது.

வருவியோ?

செய்வீங்களோ?

போவீங்களோ?

ஆக, தொல்காப்பியம் சொல்லும் சுட்டெழுத்துக்கள், வினாவெழுத்துக்கள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டிருப்பவ

Edited by nallavan

இந்தியர்களை நக்கலடிக்கிற அவசரத்தில பிழைவிடுறியள்.

(இ)ரசிகை,

பாண் என்பதோ (இ)றாத்தல் என்பதோ தமிழ்ச்சொல்லேயன்று.

அவங்கள் ஒல்லாந்தரிட்டயும் போர்த்துக்கேயரிட்டயும் மாட்டுப்படாததால எங்களுக்குத் தெரிஞ்ச பல "தமிழ்"ச் சொற்கள் அவங்களுக்குத் தெரியாதுதான். :)

அவங்களும் மாட்டுப்பட்டாங்கள் தானே?

  • தொடங்கியவர்

இந்தியர்களை நக்கலடிக்கிற அவசரத்தில பிழைவிடுறியள்.

(இ)ரசிகை,

பாண் என்பதோ (இ)றாத்தல் என்பதோ தமிழ்ச்சொல்லேயன்று.

அவங்கள் ஒல்லாந்தரிட்டயும் போர்த்துக்கேயரிட்டயும் மாட்டுப்படாததால எங்களுக்குத் தெரிஞ்ச பல "தமிழ்"ச் சொற்கள் அவங்களுக்குத் தெரியாதுதான். :rolleyes:

கட்டுரையாளர் தவறவிட்ட ஒரு முக்கியமான புள்ளி.

அதேபோல் தொல்காப்பியம் சொல்லும் வினாவெழுத்துக்களில் 'ஏ'காரம் எஞ்சியிருப்பது இன்னும் ஈழத்தில்தான்; தமிழகத்தில் இல்லை. இதைக் கட்டுரையாளர் குறிப்பிடவில்லை.

நுணாவிலான் நான் இந்தியர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தக் கருத்தைக் கூறவில்லை. அவர்கள் ஆங்கில வார்த்தைகளையே தமிழ் வார்த்தைகள் என்ற எண்ணத்தில் உபயோகிக்கிறார்களே என்ற ஒரு ஆதங்கத்தில் அக்கருத்தை இங்கே குறிப்பிட்டேன். ஆமா இந்தியாவிலயும் போர்த்துக்கீச ஒல்லாந்தர் ஆட்சி நடைபெற்றதுதானே?????

மற்றது கட்டுரையாளர் தவறவிட்ட கருத்தொன்றை நன்றாக விளக்கத்தோடு சுட்டிக் காட்டியிருந்தீர்கள். நன்றி

Edited by Rasikai

பயனுள்ள கட்டுரை ரசி அக்கா.

(ஆமா நலமா இருக்கீங்களா? :icon_mrgreen: )

நான் அடிக்கடி " போகேக்க, வரேக்க" எண்டுவது. கொழும்பில் இருக்கும் பொழுது நக்கல் அடிப்பார்கள்.

...........

"சம்பல்" ஒல்லாந்து சொல் என்று சந்தேகம் என்கிறீர்கள். நானும் யோசித்திருக்கிறேன். எனக்கு தெரிந்த டச் ஆக்கள் சம்பல் சம்பல் என்று சொல்லுவார்கள். சொல்லும்போது ஏதோ வேறு மொழி சொல்லை உச்சரிப்பது போலிருக்காது. அவங்க சொல்லு போலிருக்கும். ஆனா நான் அப்போ யோசிக்கல. இப்போ இங்கு வாசித்ததும் தான் யோசிக்கிறேன். அவர்களிடம் கேட்டு பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சம்பல்" என்பது பூர்வீகமாக தென் மற்றும் தென்கிழக்காசியாவில் (இலங்கை, இந்தொனேசியா, மலேசியா, சிங்கப்பூர்) இருந்து வந்தது என்று இவ்விணைப்பில் கூறப்பட்டுள்ளது. ஒல்லாந்து காலநித்துவக் காலத்தில் இச்சொல் அவ்மொழியில் உள்நுழைந்துள்ளது என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

பயனுள்ள கட்டுரை ரசி அக்கா.

(ஆமா நலமா இருக்கீங்களா? :lol: )

"சம்பல்" ஒல்லாந்து சொல் என்று சந்தேகம் என்கிறீர்கள். நானும் யோசித்திருக்கிறேன். எனக்கு தெரிந்த டச் ஆக்கள் சம்பல் சம்பல் என்று சொல்லுவார்கள். சொல்லும்போது ஏதோ வேறு மொழி சொல்லை உச்சரிப்பது போலிருக்காது. அவங்க சொல்லு போலிருக்கும். ஆனா நான் அப்போ யோசிக்கல. இப்போ இங்கு வாசித்ததும் தான் யோசிக்கிறேன். அவர்களிடம் கேட்டு பார்க்கலாம்.

கனநாளைக்கு பிறகு சகி. நான் நலம் நீங்கள் எப்படி இருக்கிறியள். எங்க விஷ்ணுவையும் இந்தப்பக்கம் காணலை.

வேற வேற ஆக்களும் இந்த சம்பல் என்டு சொல்வதை நானும் அறிந்திருக்கிறேன். ம்ம் கேட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்

"சம்பல்" என்பது பூர்வீகமாக தென் மற்றும் தென்கிழக்காசியாவில் (இலங்கை, இந்தொனேசியா, மலேசியா, சிங்கப்பூர்) இருந்து வந்தது என்று இவ்விணைப்பில் கூறப்பட்டுள்ளது. ஒல்லாந்து காலநித்துவக் காலத்தில் இச்சொல் அவ்மொழியில் உள்நுழைந்துள்ளது என்று நினைக்கிறேன்.

அவர்களிடம் இருந்து எங்களுக்கு வந்திச்சா இல்லை எங்களிடம் இருந்து அவர்களுக்கு போச்சா என்பது சரியாகத் தெரியவில்லை. இந்த ஆதாரத்தை முழுமையாக நம்ப ஏலாது.

Edited by Rasikai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களிடம் இருந்து எங்களுக்கு வந்திச்சா இல்லை எங்களிடம் இருந்து அவர்களுக்கு போச்சா என்பது சரியாகத் தெரியவில்லை. இந்த ஆதாரத்தை முழுமையாக நம்ப ஏலாது.

சம்பலின் மூலப்பொருட்களை வைத்து ஓரளவிற்கு ஊகிக்க முடியுமல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்துல நிறைய தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரவது வந்து சொன்னால் நல்லா இருக்கும்.

அப்பு... ராசா.... நெடுக்கு, எங்கப்பா நிக்கிறாய்? :(

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் நான் இந்தியர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தக் கருத்தைக் கூறவில்லை. அவர்கள் ஆங்கில வார்த்தைகளையே தமிழ் வார்த்தைகள் என்ற எண்ணத்தில் உபயோகிக்கிறார்களே என்ற ஒரு ஆதங்கத்தில் அக்கருத்தை இங்கே குறிப்பிட்டேன். ஆமா இந்தியாவிலயும் போர்த்துக்கீச ஒல்லாந்தர் ஆட்சி நடைபெற்றதுதானே?????

மற்றது கட்டுரையாளர் தவறவிட்ட கருத்தொன்றை நன்றாக விளக்கத்தோடு சுட்டிக் காட்டியிருந்தீர்கள். நன்றி

பிள்ளை இரசிகைக்கு வயது போகப் போக பார்வையும் குறைந்து போயிட்டுது போலக் கிடக்குது. நல்லவன் எழுதிய பதிலுக்கு, நுணாவிலான் என்று நினைச்சு பதில் அளித்துவிட்டா போலக் கிடக்குது.

சம்பல் என்று மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சொல்வார்களே..

  • தொடங்கியவர்

பிள்ளை இரசிகைக்கு வயது போகப் போக பார்வையும் குறைந்து போயிட்டுது போலக் கிடக்குது. நல்லவன் எழுதிய பதிலுக்கு, நுணாவிலான் என்று நினைச்சு பதில் அளித்துவிட்டா போலக் கிடக்குது.

ஓ கந்தப்பு அதுதான் சொல்லீட்டியளே வயசு போட்டுது என்டு :wub:

மன்னிக்கவும் நல்லவன் நுணாவிலான் என்டு பெயரை மாற்றிக் கூறியமைக்கு

எள்ளுச்சம்பலுக்கு செய்முறை சொன்ன ரசிகைக்கே சம்பலின் அர்த்தம் புரியவில்லையா?

ஆமாம் கந்தப்பு இந்தியாவில் தற்போது ஆங்கில வார்த்தைகள்தான் கூடப் பாவிக்கிறார்கள்.

எனது நண்பி இந்தியா போய் இருக்கும் போது தமிழ்க் கடை ஒன்றில் போய் 1 இறாத்தல்

பாண் தாங்கோ என்டு கேட்டு இருக்கிறா. பாணோ அது என்னது எங்களிட்டை இல்லை

என்டு கடைக்காரர் சொல்லி இருக்கிறார். அப்ப அவ பாணை காட்டி இதுதான் நான் கேட்டது தாங்கோ

என்டு சொல்ல. கடைக்காரார் சொன்னாராம். ஓ இதுவா. பிரட் என்டு தமிழ்ல கேட்டு

இருந்தால் தெரிந்திருக்கும் என்டு. நண்பிக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை,.

பாண் என்பது தமிழ் சொல்லா?! அடக்கடவுளே :)

Panino (Bread Roll), Pane (பானே) போன்ற இலத்தீன் சொற்களின் திரிபு தான் நாம் சொல்லும் பாண்.

அத்தோடு Bread என்ற சொல்லின் மூலம் என்ன தெரியுமா? பரோட்டா தான்!

Barrota -> Brauda (Proto Germanic) -> Brot (German) -> Brod (old Saxon) -> Bread (English)

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

பாண் என்பது போத்துகீச சொல்.

பாண் என்பது போத்துகீச சொல்.

ஆமாம்! இலத்தீனில் இருந்து போத்துகீசத்திற்கு சென்ற சொல்.

அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய் இலத்தீன் ஆகும்! இத்தாலிய மொழியில் இன்னும் பாணை பாணே என்று தான் அழைக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாண தமிழில் பல போர்த்துக்கேய சொற்கள் பாவிக்கப்படுகின்றன...

அல்லது போர்த்துகேயர் தமிழ் சொற்களை பாவிக்கின்றார்கள்... யாழில் உள்ள தமிழ் சொற்கள்??

உதாரணமாக..

தமிழ்------------Portugese ----------English

கதிரை------------Cadeira ----------Chair

பாண் ----------- -Pao ---------------Bread

அலுமாரி---------armario -----------cupboard

சப்பாத்து---------sapato---------- Shoe

ஜன்னல்---------Janela----------Window - being used in India as well.

இப்படி யாழில் நாம் பாவிக்கும் பல சொற்கள் போர்த்துக்கீஸ் சொற்களை மருவியே காணப்படுகின்றன... அதை மறுத்து நாங்கள் தான் சுத்த தமிழ் பேசுகின்றோம் என்பது எல்லாம் வீண் பேச்சு.

Edited by chumma....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.