Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....!

Featured Replies

......::::::: கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....! இங்கே உள்ள சித்திரம் உங்கள் மனங்களில் தோற்றுவிக்கும் கவிதைகளை தாருங்கள்.

K-M01.gif

என்றும் அன்புடன்

- இதயநிலா

Edited by ithayanila

சித்திரத்தைக் காணவே இல்லையே :)

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை காண வில்லையே

  • தொடங்கியவர்

சித்திரத்தைக் காணவே இல்லையே :)

மன்னிக்க வேண்டும் வெண்ணிலா, கறுப்பி அவர்களே எங்கட இடத்து இணைய சேவை கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் அதுதான் படம் தவற விடப்பட்டுவிட்டது. இப்பொழுது சரி உங்கள் கவிதைகள் தயாரா...?

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளுக்கு ஒரு கவிதை கனை........

நீ வருவாய் என நான் இருந்தேன் ......

பார்த்த கண்கள் பார்த்து கொண்டே

நீ வரும் வழி மீது விழி வைத்து

பார்த்திருந்தேன் ,காத்து இருந்தேன்

எங்கு சென்றாயோ ? என்ன ஆனாயோ ?

தாயகத்தில் , தாய் மடியில் ,தலைவனின்

ஆணையில் , ஈழம் மீட்க சென்றாயோ ?

கலங்காதே நான் காத்திருப்பேன் என்

ஆயுள் உள்ளவரை ,ஒரு வேளை நான் கூட

உன்னுடன் இனைய கூடும் பக்கத்து கலறையாய்.........

ம்...

அம்மா சொன்னாள்..

இந்த ஆறு..கடல்..மலைகள்

தாண்டித்தான் என்

மாமன் மகன்

இருக்கிறானென்று...

என் கனாநாயகன்..காலப்புரவியில்

எப்போது வருவான் என்று

பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

.

வழியில் காத்துக்கொண்டிருக்கிறேன்..

எனக்குத்தெரியும்..அவன்..

என்னைத் தேடி வருவான்..

தேசதூரங்கள்..வெறும் கால்தூசு..

எங்கள் உறவின்ஆழத்திற்கு முன்னால்

  • தொடங்கியவர்

கள உறவுகளுக்கு ஒரு கவிதை கனை........

"நீ வருவாய் என நான் இருந்தேன் ......

பார்த்த கண்கள் பார்த்து கொண்டே

நீ வரும் வழி மீது விழி வைத்து

பார்த்திருந்தேன் ,காத்து இருந்தேன்

எங்கு சென்றாயோ ? என்ன ஆனாயோ ?

கலங்காதே நான் காத்திருப்பேன் என்

ஆயுள் உள்ளவரை "

"காத்திருக்கும் காதல் உள்ளம் கனியும் கவிவரிகள் அழகிலும் அழகு நிலாமதி....!"

Edited by ithayanila

  • தொடங்கியவர்

ம்...

அம்மா சொன்னாள்..

இந்த ஆறு..கடல்..மலைகள்

தாண்டித்தான் என்

மாமன் மகன்

இருக்கிறானென்று...

என் கனாநாயகன்..காலப்புரவியில்

எப்போது வருவான் என்று

பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

.

வழியில் காத்துக்கொண்டிருக்கிறேன்..

எனக்குத்தெரியும்..அவன்..

என்னைத் தேடி வருவான்.

விகடகவி கவிவரிகள் அழகு "காதலில் உருகும் உள்ளம் ஒன்று கண்ணீரில் நனையும் கவிதைக்கு எனது வாழ்துக்கள்."

  • கருத்துக்கள உறவுகள்

நிறப்பிரிகை

கண்ணே!

நான் உறங்கும் போதும்

உன் பிம்பம் என்னுள்

நிறப்பிரிகையாய்...

என்னுடைய முயற்சி... கவிதயா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை... :)

கல்வி கசக்கவில்லை

காதல் தோல்வி இல்லை

கடன் தொல்லையில்லை - எனினும்

வாழ பிடிக்கவில்லை...

இந்த வாழுவும் பிடிக்கவில்லை.....

மண்ணும் பிடிக்கவில்லை....

அதில் வாழும் மனிதரும் பிடிக்கவில்லை...

இந்த வானின் எல்லைகளை தொட்டு விட பிடிக்கிறது....

ஆனால் முடியவில்லை... :(

Edited by Kavarimaan

ஏய்...

கடல் அலையே

கரையை முத்தமிடும்

உன் தாகம்

எப்போதும் அடங்காதது

போலவே

என் காதலனுக்கான

காத்திருப்பும்...!

அந்திமாலை நேரம்

அசைபோடும் அலைகளோடு

விலைபோகா காதலிற்காய்

விரதத்ததுடன் நான் !

விடியலும் வந்துவிடும்

விடைபகராமல் சென்றவன்

விருந்துவைக்க வருவானா ?

மெல்ல வருடும் காற்றும்

செல்ல கதைகள் பேசுகிறது

கூடலோடு வந்தவன்தான்

ஊடல் செய்து மறைந்துவிட்டான்

கரைதொடும் நிலவினை கைப்பற்ற

அலைமோதி ஏங்குவதுபோல்

உன் வருகைக்காய் காத்திருப்பேன் நான்

  • தொடங்கியவர்

நிறப்பிரிகை

கண்ணே!

நான் உறங்கும் போதும்

உன் பிம்பம் என்னுள்

நிறப்பிரிகையாய்...

"இடியோடு முத்தமிடும் என் இரவுகளை சத்தமிடும் அவள் விளிப்பார்வைகள்" இரவுகள் காதல் நிறப்பிரிகையாக கலந்த nunavilan க்கு எனது நன்றிகள்....!

என்னுடைய முயற்சி... கவிதயா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை... :(

கல்வி கசக்கவில்லை

காதல் தோல்வி இல்லை

கடன் தொல்லையில்லை - எனினும்

வாழ பிடிக்கவில்லை...

இந்த வாழுவும் பிடிக்கவில்லை.....

மண்ணும் பிடிக்கவில்லை....

அதில் வாழும் மனிதரும் பிடிக்கவில்லை...

இந்த வானின் எல்லைகளை தொட்டு விட பிடிக்கிறது....

ஆனால் முடியவில்லை... :(

காதலில் மயிலும் மறுக்கெடலாம்,காகமும் அழகு பெறலாம்...! காதல் பிரிவு கண்ட நெஞ்சங்கள் தான் உலகை வெறுக்கலாம்....! சித்திரத்துக்கு கவி உரக்குறது கவரிமான்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாம் ஏவாளுக்காக காய்த்த மரம்

ஆதாரம் வழி வழியாய் வந்திட்ட சொந்தங்கள்

ஆகாரம் சேர்ந்துண்ண வழி விழி தேடும்

ஆவாரம்பூ அசைந்தாடும் மர நிழலில்

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நடுவே

அவன்

மீனுக்குத் தூண்டிலிட...

கரையினிலே

நான்

அவனுக்கு தூண்டிலிடுகிறேன்.

பெண்மை எனும்

இரை தொடுத்து

ஆண்மையை

எனக்கே

ஆயுளுக்கும் அடிமையாக்கும்

ஆணவம் கொண்டவள்

நானே...

பெண்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவ்வானச் சிவப்பினிலே அழகாய்த்தான் இருக்கிறது வானம் அதை

பிரதிபலிக்கின்ற கடல் நீரும் கொண்டது வானின் கோலம்

எதையும் இரசிக்கும் நிலையில் நான் இல்லை இந்தக் கடல்

தான் என் அண்ணன் தங்கை அம்மா அப்பா அனைவரையும்

உள்ளிழுத்திக் கொண்டது!! தம்பியையும் என்னையும்

விட்டுச் சென்றது!! கடலம்மா சொல் என்று மீண்டு

வரும் என் உறவு?????????????????

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் பூவும் மலரும்

பொழுதும் புலரும்

வானும் விடியும்

வையம் விழிக்கும்

ஆனாலும் கடலலையே

உன்னைப் போல் நானும்

என்னவனைத் தேடி

எனக்குள்ளே

குமுறும் நினைவுகளை

மனதுக்குள் நெருடியபடி

கரையோரம் காத்திருக்கிறேன்

அவனோ வர முடியாத தூரத்தில்

நானோ விழியோர ஈரத்தில்

பகலில்தான் அவனுக்கு

எனமேல் பரிவில்லை

இரவிலாவது...............

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் எனக்கு மாடி வீடு

வேண்டும் எனக்கு காணி நிலம்

வேண்டும் எனக்கு சொகுசு படகு,கார்

வேண்டும் எனக்கு அழகிய பூந்தோட்டம்

வேண்டும் யாவும் இந்த அழகிய கடற்கரையினிலே

வேண்டும் பணம் அதற்கு,என்னிடம் பணம் இல்லை

அதை அடைய நான் எப்படியும் நடிக்க தாயார்.......

தயாரிப்பாளர்கள் நீங்கள் தயாரா?

  • தொடங்கியவர்

ஏய்...

கடல் அலையே

கரையை முத்தமிடும்

உன் தாகம்

எப்போதும் அடங்காதது

போலவே

என் காதலனுக்கான

காத்திருப்பும்...!

"

அலையோ அலவயாவும் அவள் இதயம் அசையும் ஓசைகளை கவியென யார்த்த கவிரூபன் கவிதை அருமை...!"

  • தொடங்கியவர்

அந்திமாலை நேரம்

அசைபோடும் அலைகளோடு

விலைபோகா காதலிற்காய்

விரதத்ததுடன் நான் !

விடியலும் வந்துவிடும்

மெல்ல வருடும் காற்று செல்லக் கதைகள் பேசுகிறது-என்

கண்ணன் அவன் முகம் கான ஏங்குகிறது.

கவிதையில் புலமை மிழிர்கிறது பரணி அடியேனின் வாழ்த்துக்களும் கூடவே...

ஆதாம் ஏவாளுக்காக காய்த்த மரம்

ஆதாரம் வழி வழியாய் வந்திட்ட சொந்தங்கள்

ஆகாரம் சேர்ந்துண்ண வழி விழி தேடும்

ஆவாரம்பூ அசைந்தாடும் மர நிழலில்

அகர வரிசையில் அன்னமிவள் காதல் அலைமோதுகிறது நித்திக்கும் உங்கள் புகழ் நித்திலம் எங்கும் பரவ இதயநிலாவின் வாழ்த்துக்களையம் இணைத்துக்கொள்ளுங்கள் கறுப்பி...!

  • தொடங்கியவர்

கடல் நடுவே

அவன்

மீனுக்குத் தூண்டிலிட...

கரையினிலே

நான்

அவனுக்கு தூண்டிலிடுகிறேன்.

பெண்மை எனும்

இரை தொடுத்து

ஆண்மையை

எனக்கே

ஆயுளுக்கும் அடிமையாக்கும்

ஆணவம் கொண்டவள்

நானே...

பெண்..!

பெண்மை அவள் பேதமை பேரண்டம் முழுதும் அறிந்தது தானே...! அதிலும் உங்கள் கவிவரிகள் ஓர் படி மேலே...! வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான்...!

யார் வீழ்ந்தார் யார்

போனார் .?

குண்டு சத்தங்களுள் பதை பதைக்கும்

எம் உள்ளம்.

அந்த சிதறல்களால் சிதைந்து போன

என் தேசம்.

காலை விடியலை- என்

மண்பார்க்கும் முன் பார்க்கும்

எம் கடலம்மா.!

நீயே சொல். !!

எண்று விடியும் என் தேசம்.?

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டும் எனக்கு மாடி வீடு

வேண்டும் எனக்கு காணி நிலம்

வேண்டும் எனக்கு சொகுசு படகு,கார்

வேண்டும் எனக்கு அழகிய பூந்தோட்டம்

வேண்டும் யாவும் இந்த அழகிய கடற்கரையினிலே

வேண்டும் பணம் அதற்கு,என்னிடம் பணம் இல்லை

அதை அடைய நான் எப்படியும் நடிக்க தாயார்.......

தயாரிப்பாளர்கள் நீங்கள் தயாரா?

சுனாமி வந்தால் யார் மீட்பார் இந்த அரியாசனங்களை? :)

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி வந்தால் யார் மீட்பார் இந்த அரியாசனங்களை? :)

:) சுனாமி வந்தால் ஆளோட செர்த்து ஆசையும் கடல் கொண்டுபோய்விடும் தானே :):D

  • தொடங்கியவர்

:) சுனாமி வந்தால் ஆளோட செர்த்து ஆசையும் கடல் கொண்டுபோய்விடும் தானே :):)

புத்தன் உங்களுக்கு அந்தப்பயமே வேண்டாம் இது உள் நாட்டுக்கடல் இங்க சுனாமி எல்லாம் வரவே வராது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.