Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளையானை பிரிட்டன் வெளி விவகார அமைச்சர் சந்திப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், ஆயுததாரியும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரும்,கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானை சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சந்திப்பு திருமலையில் நிகழ உள்ளது.

இதற்கிடையே இதே பிள்ளையானை பிரிட்டன் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று முன்னர் ஒரு சிறிலங்கா விஜயத்தின் போது சந்திக்க மறுத்துவிட்டிருந்தது. அதற்கு பிள்ளையானும் அவரின் குழுவினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவினர் காரணமாகக் காட்டி இருந்தனர்.

ஆனால் பிரிட்டன் கருணா விடயத்திலும் சரி பிள்ளையான் விடயத்திலும் சரி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களைக் கூட உதாசீனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதே குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பை பிரிட்டன் பயங்கரவாதப் பட்டியலில் இட்டு வைத்திருப்பது.. பிரிட்டனின் இரட்டை நோக்க அணுகுமுறையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக உள்ளது.

கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வுகள் பற்றிய செய்திகளை கூட பிரிட்டன் இருட்டடிப்புச் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆதாரம்:

British Foreign Minister to meet Pillayan - reports

[TamilNet, Monday, 14 July 2008, 19:40 GMT]

Britain’s Foreign Minister, Lord Malloch-Brown, is to meet Pillayan (Sivanesathurai Chandrakanthan), Chief Minister of the Eastern Province and leader of the Army-backed paramilitary group, the TMVP, Sri Lankan press reports said. Lord Malloch-Brown is on a four day visit to Sri Lanka this week, The Island newspaper said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26354

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உபதேசமெல்லாம் ஊருக்குதானய்யா.............

உண்மையும் நேர்மையும் ஜனநாயகமும் மட்டுமிருந்திருப்பின். இன்றைய பிரிட்டனின் பொருளாதாரம் ஆபிரிக்க நாடுகளுக்கே சொந்தமானது!

என்ன மொழியிலை கதைப்பாங்கள்

பிள்ளையான் ஏதோ காட்டுப்பன்னி கத்துறமாதிரி கத்துவான் பாவம் வாறவர் . . .

என்ன மொழியிலை கதைப்பாங்கள்

பிள்ளையான் ஏதோ காட்டுப்பன்னி கத்துறமாதிரி கத்துவான் பாவம் வாறவர் . . .

பன்னிக்கு பன்னியின்ர மொழி விளங்கும்தானே........ :(

பிள்ளையானை சந்திச்சு என்ன கொள்ளையடிச்ச காசில பங்கு கேக்கவாக்கும்...

அது சரி பிறகேன் கருனாவை பிடிச்சு திருப்பி அனுப்பினவயல்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதில்லை,கருணா லண்டன்ல இருந்து கார்ட்ல காசு அடிச்சுக்கொண்டுவர இவர்தானாம் உதவி செய்தவர் அதுதான் தன்ட பங்கை வாங்க வந்தவர் :( .

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பாய் அண்ண ஒரு வேளை பிச்சைதான் கேட்க வர்ரார் என்றும் தெரியல்ல

வந்தவர் தமிழர் பிரதிந்திகளை சந்திக்க விரும்பி இருப்பார். அதுக்கு பிள்ளையானை சந்திக்க சொல்லி அரசாங்கம் சொல்லி ஏற்பாடு செய்து இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

களவெடுக்க, மதம் பறப்ப வந்த பிரித்தானியர்களினால தானே எங்கட நாட்டில பிரச்சனைக்கு முக்கிய காரணம். போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் களவெடுத்தாலும், மதம் பறப்பினாலும் சிங்களப்பகுதியை தமிழரின் பகுதியோடு இணைக்கவில்லை. குள்ள நரி பிரித்தானியா தான் குள்ள வேலை செய்து விட்டு போனது. மற்றவர்களுக்கு ஒரு கொள்கை, தங்களுக்கு ஒரு கொள்கை அது தான் பிரித்தானியா, அமெரிக்கா நாடுகளின் கொள்கை.

அப்பிடி போடுங்கொ கந்தப்பு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.