Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய தமிழ் தொலைக்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தென்றல் TV" எனும் புதிய தமிழ் தொலைக்காட்சி நேற்று முதல் பரீட்சார்த்தமாக ஒளிபரப்பப்படுகிறது. அதன் அலைவரிசை

Hotbird (13 degree East): 11.727

Vertical

SR 27.500

fec 3/4

உங்களிடம் ஏற்கனவே நேபாளி டிவி சனல் (Nepali TV channel) இருக்குமாக இருந்தால் நீங்கள் புதிதாக ரிஸீவரில் தேடவேண்டிய அவசியமில்லை. அந்த நேபாளி டிவி சனலில்தான் இப்ப இந்த தென்றல் வேலைசெய்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழ் தொலைக்காட்சி ஒன்று புதிதாக பிறந்துள்ளதாக கேள்விப்பட்டேன். யாருக்காவது இதுபற்றிய மேலதிக விபரங்கள் தெரியுமா? அண்ணே நெடுக்ஸ்... உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்குமே?

Edited by snegi

இந்திய நிகழ்ச்சிகள் இல்லாமல் இருந்தால் இந்த ஈழத் தொலைக்காட்சி என்ற பொருள் பொருத்தம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ தென்றலாம் :D

ஓ தரிசனம்காரர்கள் இதை முணுமுனுக்கிறது கேட்டது. வரட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இன்னும் வரலயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hot Bird 6/7A/8 at 13.0°E Freq.11727 V SR 27500-3/4

இத்தொலைக்காட்சியில் வேறு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளனவோ?? ஏனெனில் அறிவித்தல்கள் ஹிந்தி மொழியிலும் வருகின்றன. எனவே குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் மட்டும் தமிழ் மொழி நிகழ்ச்சிகள் இடம்பெறலாம். !!!!!!

அத்துடன் தொலைக்காட்சியின் பெயரும் Sat இல் Nepali என்றே வருகின்றது.

தமிழன் மேல் இருந்த நம்பிக்கை போய் நேபாளியோடு இணைந்திட்டாங்கள் போல. இல்ல இது நோபாளி தொலைக்காட்சி என்று மொழி புரியாதவனிடம் அனுமதி பெறவோ? நம்மடவன் நம்மிடவனிடம் இப்போது மிக அவதானமாக இருக்கிறான்? :D

ம்...........ம்......... தரிசனம் தான் மறுபிறவி எடுத்திருக்கின்றது. Nepali முகமூடி போட்டு. :):)

  • கருத்துக்கள உறவுகள்

Hot Bird 6/7A/8 at 13.0°E Freq.11727 V SR 27500-3/4

நீங்கள் தந்த அலைவரிசையில் தேடினேன் எதுவுமே கிடைக்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Satellite - Eutelsat Hotbirds -13° East

Frequency - 11727 MHz.

Symbol rate - 27500

Polarity - V

FEC - 3/4

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ம்...........ம்......... தரிசனம் தான் மறுபிறவி எடுத்திருக்கின்றது. Nepali முகமூடி போட்டு. :wub::lol:

அவுஸ்திரெலியாத் தரிசனம் தொலைக்காட்சி செய்தியில் 'தரிசனம் தொலைக்காட்சி ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டதினால் ஏற்பட்ட இடைவெளிக்காக தமிழர்களுக்காக தென்றல் தொலைக்காட்சி வந்துள்ளதாக' சொன்னார்கள்.

அவுஸ்திரெலியாத் தரிசனம் தொலைக்காட்சி செய்தியில் 'தரிசனம் தொலைக்காட்சி ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டதினால் ஏற்பட்ட இடைவெளிக்காக தமிழர்களுக்காக தென்றல் தொலைக்காட்சி வந்துள்ளதாக' சொன்னார்கள்.

தரிசனத்தில் வந்தவர்களே தென்றல் தொலைக்காட்சியில் வருகின்றார்கள். பின்பு யாரை ஏமாற்ற புதிய தொலைக்காட்சி, பரீட்சார்த்த ஒளிபரப்பென்ற இணைப்புக்கள்.

:wub: .......ம்.....ம்.... ம்......ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். :lol:

ரண்டு நாளைக்கு முந்தி ஒரு வித்துவான் தொலைபேசி எடுத்து.. 'யூரேக்கா' எண்டு ஆக்கிமீடிஸ் மாதிரி (அப்புடி வைச்சு கொள்ளுங்கோ..) பெரிய கண்டுபிடிப்பு செய்தமாதிரி கத்தினார்.. புதுத் தொலைக்காட்சி.. பிடிச்சுட்டன் எண்டார்.. யாழ் எண்டொரு இணையத்திலயும் போட்டிருந்தவங்கள் எண்டன்.. அதில ரீரீஎன்காரங்கள் எல்லாம் வாறாங்கள் எண்டவுடனை எனக்கு சரியாக அதிர்ச்சி.. வளரி செய்மதீக்காலையும் வரூதோ எண்டு நினைச்சு.. ஓடிப்போய் பெட்டிய தட்டி துளாவிக் கொட்டி, குலுக்கிப் பாத்தன்..

அட தரிசனம் காரங்கள்..

மறுபடியும் தொலைபேசி.. பிடிச்சுட்டியோ..

பிடிச்சுட்டன்.. ஆனா ரீரீஎன் காரங்களை பிடிக்க முடியேல.. தரிசனம்காரங்கதான் அகப்பட்டாங்க..

நல்லாருக்கோ?

இது ஈழத் தொலைக்காட்சி எண்டா ஐங்கரனும் (கலைஞர்) ஈழத்தொலைக்காட்சிதான்.. அதில படம்.. சத்தம் எல்லாம் நல்லாருக்கு.. நிகழ்ச்சியளும் புது புது சினிமாக்களா இருக்கு.. அதால.. தென்றல் இப்பிடியே வந்தா.. நான் கலைஞரைத்தான் பாப்பன்..

உனக்கு கொஞ்சங்கூட நாட்டுப்பற்றில்லை..

அவன் தொலைபேசிய அடிச்சு வைச்சுட்டான்..

எந்தத் தொலைக்காட்சியைப் பாத்தால் நாட்டுப்பற்றாளன் எண்டு பேரெடுக்கலாம் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் எத்தனையோ தொலைகாட்சிகள் இருந்தபோதும் ஸ்ரீலங்கா அரசு தரிசனத்தை நிறுத்த வேண்டும் என்றுதான் படதபாடபட்டது.............. இறுதியில் நிறுத்தம் கண்டது.

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியின் கருத்தினை நான் ஆமோதிக்கிறேன். சிங்கள அரசின் முயற்சியினாலே தரிசனம் தொலைக்காட்சி ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டது. மீண்டும் தரிசனம் வருவது மகிழ்ச்சியான விடயம். எங்களின் தொலைக்காட்சிகளுக்கு நாங்கள் தான் ஆதரவு வழங்க வேண்டும். அதை விட்டு விட்டு தூற்றுவது அவ்வளவு நல்லதாகப் படவில்லை.

தரிசனம் துரோகத் தொலைக்காட்சி, அதற்கு ஆதரவு வழங்க வேண்டாமென்று யார் அறிவித்தது?? இஸ்ரேலிய நிறுவனம் தரிசனம் தொலைக்காட்சியின் அலைவரிசையை நிறுத்தியிருந்தால் தற்போது தென்றல் வரும் அலைவரிசை மூலம் தரிசனத்தை மீண்டும் ஐரோப்பாவில் ஒளிபரப்பி இருக்கலாம் தானே. பிறகு ஏன் புதுத் தொலைக்காட்சி, பரீட்சார்த்த ஒளிபரப்பு என்ற நாடகம். இது ஏமாற்று வேலை இல்லையா??

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

ரண்டு நாளைக்கு முந்தி ஒரு வித்துவான் தொலைபேசி எடுத்து.. 'யூரேக்கா' எண்டு ஆக்கிமீடிஸ் மாதிரி (அப்புடி வைச்சு கொள்ளுங்கோ..) பெரிய கண்டுபிடிப்பு செய்தமாதிரி கத்தினார்.. புதுத் தொலைக்காட்சி.. பிடிச்சுட்டன் எண்டார்.. யாழ் எண்டொரு இணையத்திலயும் போட்டிருந்தவங்கள் எண்டன்.. அதில ரீரீஎன்காரங்கள் எல்லாம் வாறாங்கள் எண்டவுடனை எனக்கு சரியாக அதிர்ச்சி.. வளரி செய்மதீக்காலையும் வரூதோ எண்டு நினைச்சு.. ஓடிப்போய் பெட்டிய தட்டி துளாவிக் கொட்டி, குலுக்கிப் பாத்தன்..

அட தரிசனம் காரங்கள்..

மறுபடியும் தொலைபேசி.. பிடிச்சுட்டியோ..

பிடிச்சுட்டன்.. ஆனா ரீரீஎன் காரங்களை பிடிக்க முடியேல.. தரிசனம்காரங்கதான் அகப்பட்டாங்க..

நல்லாருக்கோ?

இது ஈழத் தொலைக்காட்சி எண்டா ஐங்கரனும் (கலைஞர்) ஈழத்தொலைக்காட்சிதான்.. அதில படம்.. சத்தம் எல்லாம் நல்லாருக்கு.. நிகழ்ச்சியளும் புது புது சினிமாக்களா இருக்கு.. அதால.. தென்றல் இப்பிடியே வந்தா.. நான் கலைஞரைத்தான் பாப்பன்..

உனக்கு கொஞ்சங்கூட நாட்டுப்பற்றில்லை..

அவன் தொலைபேசிய அடிச்சு வைச்சுட்டான்..

எந்தத் தொலைக்காட்சியைப் பாத்தால் நாட்டுப்பற்றாளன் எண்டு பேரெடுக்கலாம் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.

:wub:பேசாமல் கலைஞர் தொலைக் காட்சியையும், சண் தொலைக் காட்சியையும் பாருங்கள். நீங்கள் இரண்டு மடங்கு நாட்டுப் பற்றாளர் ஆகிவிடுவீர்கள். :lol: காரணம் இந்த இரு தொலைக்காட்சியிலும் வருபவை தான் நமது தேசியம் பேசும் தொலைக் காட்சிகளிலும் வருகின்றன. :lol: நிழலைத் தரிசிக்கிறதை விட நிஜத்தை தரிசிக்கிறது பெட்டர் அல்லோ!!! :lol:

எங்கடை தொலைக்காட்சி என்ற பெயரில்.. வெறும் சினிமா வீடியோ கசற்றுகளாலேயே காலத்தைப் போக்குபவைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.. வேணுமானால் எங்கடை ஆக்களின்ரை என்ற போர்வைல சகிச்சுக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொலைகாட்சி ஒன்றை நடத்தினால் தான் அதன் கஸ்டங்கள் தெரியும்......

நாட்டு விடயங்களை மட்டும் 24 மணிநேரமும் காட்டுவதென்றால்..... அனைத்து நிகழ்சிகளையும் அந்த தொலைகாட்சியே தொகுக்க வேண்டும். ஒரு நிகழ்சியை தொகுப்பதற்கு எவ்வளவு செலவாகுமென்பதை அப்படி ஒன்றை தொகுத்தால்தான் புரியும். எத்தனையோ கோடி வருமானம் வரும் சன் தொலைகாட்சியிலேயே ஒரு கிழமையில் 5-6 நிகழ்சிகளே தொகுத்து வழங்குகிறார்கள். மிகுதி நேரமெல்லாம் சித்தியும் சித்தப்பாவும் என்று சின்னதிரைதான் இதை வேறு நிறுவனங்களே தயாரிக்கின்றன..... விளம்பர வியாபார ஒப்ந்தத்தின் அடிப்படையில் அதை சன் ரீவி ஒளிபரப்புகின்றது.

சன் ரீவி பார்த்து மூளை பிசிந்துபோன கூட்டங்களுக்கு இதை விழக்குவதென்றால் முடியாத ஒன்று என்பது நான் ஏற்கனவே அறிந்ததுதான்.

எத்தனையோ தொலைகாட்சியிருக்க தரிசனத்தை இலங்கை அரசு நிறுத்த வேண்டுமென்று படாத பாடு பட்டது ஏன்??? கொடுக்க வேண்டியதை புலம்பெயர் தமிழருக்கு கொடுக்கும் விதத்தில் கொடுக்கிறார்கள் என்பதனாலேயே.

தமது எஜமானிகள் நிறுத்தியதை மீண்டும் ..... தொடங்கிவிட்டார்களே என்ற மன புழுக்கத்தில் சில வரிகள் மேலே இருப்பது......... இது எமக்கு புதியதல்ல!

தடைகளை தருபவர்கள் தயவுசெய்து நிறுத்திவிடாதீர்கள்.......

தடைகளை உடைத்து உடைத்து பழகிவிட்டது எமது தமிழ் இனம்....... இப்போது எமக்கு அதுதான் விளையாட்டு.

ஒரு விடுதலைப்போராட்டத்தை நடத்திறதவிட தொலைக்காட்சி நடத்திறது ஒண்டும் பெரிய கஷ்டமான விடயமில்லை அண்ணா.எங்கட தலைவர் பேராட்டம் நடத்திறது கஸ்டம் எண்டு சொல்லிக் கொண்டு மற்றவைய மாதிரி யாரையும் கொப்பி அடிக்கவும் இல்லை.ஷோ காட்டவும் இல்லை.எங்களுடைய இன விடுதலைக்கு எந்த வழி சிறந்த வழி.எந்தக் கொள்கை சிறந்த கொள்கை என்பதை தானாகத் தெரிவு செய்து இன்று வரைக்கும் அதில உறுதியோடு இருந்து செயற்படுகிறார்கள்.தலைவர் சொன்னவரா தரிசனம் தொலைக்காட்சி தமிழ் தேசியத்தை வலுப்படுத்த அவசியமான தொலைக்காட்சி.அதைக் கொண்டுபோய் இஸ்ரேலிலே பதியுங்கோ எண்டு.ரிரிஎன் மூடப்பட்டவுடன தமிழ் தேசிய கட்டமைப்புக்கு கீழ இன்னொரு தொலைக்காட்சியை கொண்டுவர ரிரின் நிர்வாகம் முயன்று கொண்டிருந்த போது அந்தக் கட்டமைப்புக்கு கீழ நிற்க விருப்பாதவை தானேமே தன்னிச்சையாக அவுஸ்ரேலியா தரிசனத்தை இங்கை இறக்குமதி செய்தவை.

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சி எண்டு எதற்கும் காசு கட்ட இனி நம்மால முடியாது.

நீங்கள் சொல்ல வருகின்ற விடயம் புரியும் படியாக இல்லை.....

தெளிவற்ற கருத்தாக உள்ளது..... தொலைகாட்சியையும் ஒரு விடுதலை போராட்டத்தையும் ஒன்றுணைக்கும் உங்கள் கண்ணோட்டம் புரியும்படியாக இல்லை. இரண்டுமே வேறு வேறானவை. தவிர ஒன்று வியாபர நோக்கு உடையது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.