Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதைய இராணுவ தலைமைத்துவம் தொடர்ந்தால் உலகையே வெற்றி கொள்ள முடியும் - எல்லாவல மேத்தானந்த

Featured Replies

இலங்கை இராணுவத்துக்கு தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்ந்திருந்தால் புலிகளை மட்டுமல்ல உலக நாடுகளையே வெற்றி கொள்ள முடியுமென ஹெல உறுமைய பா.உ எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்துள்ளார்.

மேலும் : இதுவரை காலமும் புலிகளின் தலைவர் பிரபாகரனை வெல்லப்பட முடியாத ஒரு ஒரு அசுரனாக உருவகப்படுத்தியிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தகைமையற்ற தலைமைகளே பிரபாகரனை வெல்ல முடியாதெனக் கூறினர்.

ஆனால் தற்போது இந்த நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சரியான தலைமைத்துவம் கிடைத்துள்ளதனால் பிரபாகரனை வெற்றி கொண்டு வருகிறோம். வடக்கை விரைவில் மீட்டு விடுவோம்.

அதே வேளை, தற்போது பிரபாகரன் கடைப்பிடித்து வரும் மௌனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஏனேனில், இது தொடர்பில் எமக்கு ஏற்கனவே அனுபவங்கள் உண்டு. எனவே, இவ்விடயத்தில் தீவிர ஆலோசனைகளை நடத்த வேண்டும்.

நன்றி தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய தினக்குரலில் வந்திருக்கும் இந்த செய்தியைப் பாருங்கள் இன்றைக்கு முழுவதும் நீங்கள் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள்.

தேரருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.

07_08_2008_008_003.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குமாற்றை நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் .

இதை கேட்டு கேட்டு அலுத்துப்போயிட்டுது............

இவர் வடகிழக்கு மாகாணங்கள் சிங்களவர்களுக்கு தான் சொந்தம் எண்டு சொல்லிக்கொண்டு திரியிற ஆளு. காவி உடை தரித்துக்கொண்டு புத்தரினுடைய கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டவர். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது சின்னப்புள்ளத்தனமா கதைக்கிறியல் தேரர் அவர்களே :o . உங்களை போன்ற கடும் இனவாதிகள் வரலாற்றை அடிக்கடி மறந்து தொலைத்து விடுகிறீர்களே. இன்னுமொரு முறை அடிபட்டாலும் திருந்த மாட்டீர்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தொடர்பில் எமக்கு எற்கனவே அனுபவங்கள் உண்டு.
:rolleyes:

அட பரவாயில்லையே! மேதானந்த தேரர் ஓயாத அலை-3 இல அடிவயிறு கலங்க ஓடினத மறக்கேல்லை போல. சிலவேளையில இவரும் அந்த ஓடின ஆக்கள்ள ஒருத்தரோ?

உலகையே வெற்றி கொள்ள முடியும்

கனவு காணலாம் , அதுக்காக இப்படியா????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஆசையை பாரு :rolleyes: . முதல் இவங்களை நாடு என்றே யாருமே மதிக்கிறாங்கள் இல்லை இதுக்குள்ள வல்லரசு கனவு வேற.தேரர் வாயில கல்லை தூக்கி போட :o . நாசமாப்போனவங்கள் என்ன கதைக்கிறது என்று விவஸ்தையே இல்லாமல் கதைக்கிறாங்கள்.

பிரபாகரன் கடைப்பிடித்து வரும் மௌனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்: எல்லாவல மேதானந்த தேரர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைப்படித்து வரும் மெளனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த தேரர் மேலும் கூறியதாவது:

பிரபாகரனின் மெளனம் தொடர்பில் எமக்கு ஏற்கனவே நிறைய அனுபவங்கள் உண்டு. ஆகையால் இவ்விடயத்தில் தீவிர ஆலோசனைகளை நடத்த வேண்டும்.

இதுவரை காலமும் புலிகளின் தலைவர் பிரபாகரனை வெல்லப்பட முடியாத ஒரு அசுரனாக உருவகப்படுத்தியிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தகைமையற்ற தலைமைகளே பிரபாகரனை வெல்ல முடியாதெனக் கூறின.

ஆனால் தற்போது இந்த நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சரியான தலைமைத்துவம் கிடைத்துள்ளதனால் பிரபாகரனை வெற்றி கொண்டு வருகின்றோம். வடக்கை விரைவில் மீட்டு விடுவோம்.

இலங்கை இராணுவத்துக்குத் தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்ந்திருந்தால் புலிகளை மட்டுமல்ல உலக நாடுகளையே வெற்றி கொள்ள முடியுமெனவும் தேரர் மேலும் கூறினார்.

http://www.tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

சிறுசிறு வெற்றிகள் கண்ணை மறைக்குது????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனின் மெளனம் தொடர்பில் எமக்கு ஏற்கனவே நிறைய அனுபவங்கள் உண்டு. ஆகையால் இவ்விடயத்தில் தீவிர ஆலோசனைகளை நடத்த வேண்டும்.

ஆனால் தற்போது இந்த நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சரியான தலைமைத்துவம் கிடைத்துள்ளதனால் பிரபாகரனை வெற்றி கொண்டு வருகின்றோம். வடக்கை விரைவில் மீட்டு விடுவோம்.

http://www.tamilwin.com/

தலைவர் அவர்கள் யாராலும் அறியப்படமுடியாத புரியாத புதிர் அவரது எண்ணங்களையும் திட்டங்களையும் நீங்கள் ஆலோசனை நடாத்தி அறியப்போகிறீர்கள் என்றால் அது உங்களின் அறியாமையையே காட்டுகிறது. உங்கள் ராணுவத்தின் தலைமைபீடத்தின் திறத்தை அறிவதற்கு இன்னும் கொஞ்சக்காலம் தேவை தேரரே, அவசரப்படாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் எல்லாரும் இந்த நகைச்சுவை பாத்து சிரிக்கேக்க நான் சிரிக்க கூடாதா கீகீ hehe :mellow: hihi :mellow::unsure:

Edited by kuddipaiyan26

இலங்கை இராணுவத்துக்கு தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்ந்திருந்தால் புலிகளை மட்டுமல்ல உலக நாடுகளையே வெற்றி கொள்ள முடியுமென ஹெல உறுமைய பா.உ எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்துள்ளார்.

இதென்ன இது?

வெறும் சுத்த கேனத்தனமா இல்ல இருக்கு?...

இங்க வந்து புத்தி சொல்லுற, மற்றும் மென்மை பேசுற பெண்மையை விஞ்சிய ஆய்வாளர்களே... இந்த பிக்கு சொல்வதை கேட்டேலா?..

இதை நான் சொல்லவது... சிந்திப்பதற்கில்லை... சும்மா சிப்பதற்கு..

நீங்கள் மோட்டுச்சிங்களவன்

நீங்கள் மோட்டுச்சிங்களவன் என்று சொல்லிச்சொல்லி

உண்மையை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையென்றே நான் நினைக்கின்றேன்

அவர் சொல்வதில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன..........

அதனால்தான் புலிகளுக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டன என்பது நிஐம்

உதாரணமாக ஒரே முடிவு எடுக்கப்படுகிறது

அது செயற்படுத்தப்படுகிறது

அதற்கு எல்லோரும் உடன்படுகின்றனர்

அவர்களுக்குள் குத்துவெட்டுக்கள் குறைவு

என்ன நடந்தாலும் பின்வாங்காதே என்று முன்பு இருந்ததில்லை

எவ்வளவு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் கேள் தருகின்றோம் என்று முன்பு இருந்ததில்லை

இப்படி அவர்களுக்கு சாதகமான நிலை இருக்கிறது என்பது உண்மையே..............

ஆனால் உலகத்தையே ஆளுவோம் என்பது .........???????????

கொஞ்சம் அதிக பிரசங்கித்தனம்..................

இப்ப நான் என்ன சொல்லிப்போட்டனெண்டு இப்பிடி சொல்லுறிங்கள்?

அவங்கள் பக்கம் காற்று... இது இண்றைய சூழ்நிலை

இது மாறும்...

மாற்றமெண்ர சொல்லே மாறாதிருக்கும்... எமக்கு வேண்டியதெல்லாம் நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள் பக்கம் காற்று... இது இண்றைய சூழ்நிலை

இது மாறும்...

அது மட்டுமல்ல

ஒரே குடையின் அவர்கள் தமிழருக்கு எதிராக வந்துவிட்டார்கள்

அதனால்தான் இப்படி நிற்கின்றார்கள் என்பது என்வாதம்

ஒரே குடையின்கீழ் அவர்கள் தமிழருக்கு எதிராக வந்துவிட்டார்கள்

என்ன திடீரெண்டு இப்பிடிச்சொல்லுறியல்?

எப்போது சிங்களவங்கள் எங்கட விசயத்தில வேற வேற திசையிலை இருந்தவங்கள்?

எப்போதும் இப்பிடித்தான் இருந்தவங்கள்... நீங்கள் எந்த காலத்தில எந்த கண்ணோட்டத்தில பாக்கிறிங்கள்

அதிலதான் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய தினக்குரலில் வந்திருக்கும் இந்த செய்தியைப் பாருங்கள் இன்றைக்கு முழுவதும் நீங்கள் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள்.

நாங்கள் எடுத்ததுக்கெல்லாம் சிரிக்கவெளிக்கிட்டா, இராணுவம் கிளிநொச்சியை பிடிக்கும்போது சிரிச்சுக்கொண்டுதானிருப்பம

Edited by snegi

நடந்து முடிந்த பொங்கு தமிழ் நிகழ்வுகளில் ஐரோப்பா வந்திருந்த 2 வேறு ததேகூ பாராளமன்ற உறுப்பினர்கள் பொங்கு தமிழ் நிகழ்வில் பேசியவற்றையும் குறிப்பிடலாம்.

-1- ஐரோப்பியர்கள் வந்து இலங்கைத் தீவை கைப்பற்ற முதல் தமிழ மன்னர் ஆட்சி செய்தார். இன்று நாம் அதை திரும்பிப் பெற பேராடுகிறோம்.... என்று வரலாற்றை சொல்ல வெளிக்கிட்டு மேடை பேச்சில் உணர்ச்சி வசப்பட்டே என்னவோ.... தேசிய தலைவர் பிரபாகரன் மன்னராக தமிழீழத்தை ஆட்சி செய்வதற்காக போராடுகிறோம் சொல்லி போட்டார்.

-2- இன்னொரு நாட்டில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வில் புலிகள் தற்போதைய தடைகள் அவலங்களை எல்லாம் தாண்டி இறுதியில் வெற்றி பெறும் போதோ (அல்லது புலிகள் வலிந்த தாக்குதலை தொடங்க ஆரம்பிக்கும் போதோ... என்று வடிவாக ஞாபகம் இல்லை) சர்வதேசம் மேற்குலகம் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கால்களில் வந்து விழும் என்று சொல்லி முடிச்சார்.

மேல தேரர் சொன்னது எவ்வளவு நகச்சுவையாக இருக்கிறதோ அதே அளவு நகச்சுவையானது தான் மேற் கூறிய 2 உதாரணங்களும்.

ஆனால் சர்வதேசத்தை நோக்கி நடத்தப்பட்ட பொங்குதமிழில் பேசப்பட்டவை எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கும

புலிகள் போராடுகிறார்கள்! போராட்டத்திற்கு இடைநடுவில் சிக்கி அவலப்பட்டுக் கொண்டிருக்கும், தங்களை தெரிவு செய்த மக்களுக்கு உந்த த.தே.கூ.வினர் ஏதாவது செய்யவேணும் என்ற உணர்ச்சி இருக்கிறதா?

இவர்கள் சும்மா பாரளுமன்றத்தில் ஆஸ்தான நகைச்சுவையாளர்களாகவும், பத்திரிகைகளில் அறிக்கை புலிகளாகவும் இருப்பதை தவிர ஒரு பயனும் இல்லை!

நாங்கள் ஒரு பிரச்சனை என்று உதவி கேட்டு போனால் வெளியில்வரப் பயம்! ஒண்டும் செய்யாட்டிலும் பறவாயில்லை, உப்படி கதைச்சு வயித்தெரிச்சலை கிளப்பாமலாவது இருக்கலாம்!

Edited by சாணக்கியன்

உங்களுக்கு என்ன பிரச்சனை :mellow: ஏன் ஆனந்த சங்கரி ஜயாவிடம் போய் கேக்கலாம் தானே? :mellow:

பின்குறிப்பு: போகும் போது உடும்பு கறியுடன் யாரவது துனைக்கு கூட்டி செல்லுங்கள்.

Edited by I.V.Sasi

சாணக்கின்

ததேகூ பாராளமன்ற உறுப்பினர்கள் எத்தனையோ முக்கியமான விடையங்களை உயிராபத்து நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் மத்தியில் செய்கிறார்கள். சிறீலங்கா அரசின் பிரச்சாரத்தை முறையடிக்க உதவுகிறார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இன்றுவரை இந்த 2 உதாரணத்தை கூறாது தவிர்த்து வந்ததும் அந்த பாராளமன்ற உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடாது தவிர்த்துள்ளதும் அவர்கள் மீதுள்ள மரியாதையில் தான்.

தமிழர்களிற்குள் மாத்திரம் என்று தாயகத்தில் நடக்கும் கூட்டத்தில் இப்படி பேசியிருந்தால் ஏதோ மேடைப்பேச்சு என்று விடலாம். பொங்குதமிழ் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் பேசுபவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

அரசியல்வாதிகள் என்ன பொதுவாக மேடைப் பேச்சு என்று வந்துவிட்டால் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் எல்லை மீறி மிகைப்படுத்திப் பேசுவது வழமையான ஒன்று. தேரர் சொல்லிப் போட்டார் ரம்புக்வெல சொல்லிப்போட்டார் கருணாநிதி சொல்லிப் போட்டார் மகிந்த சொல்லிப்போட்டார் பொன்சேக்கா சொல்லிப் போட்டார் கோத்தபய சொல்லிப்போட்டார் என்று தூக்கி வைத்து மட்டம் தட்டி பக்கம் பக்கமாக பொழுது போக்காட்டுவது யாழில் வழமையாக நடப்பது. தற்பொழுது அப்பிடியான அவல்களிற்கு நம்மவர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை உணர்ந்து ஊடகங்களும் பெரிது படுத்தி செய்தியாக்கும் நிலையை காணக் கூடியதாக இருக்கிறது. அதனால் தான் குறிப்பிட வேண்டி வந்தது.

இதே போல் புலிகளின் அரசியல் துறையினர் மேடைப் பேச்சுகளில் ஊடக நேர்காணல்களில் பேசியவற்றையும் குறிப்பிட முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் போராடுகிறார்கள்! போராட்டத்திற்கு இடைநடுவில் சிக்கி அவலப்பட்டுக் கொண்டிருக்கும், தங்களை தெரிவு செய்த மக்களுக்கு உந்த த.தே.கூ.வினர் ஏதாவது செய்யவேணும் என்ற உணர்ச்சி இருக்கிறதா?

இவர்கள் சும்மா பாரளுமன்றத்தில் ஆஸ்தான நகைச்சுவையாளர்களாகவும், பத்திரிகைகளில் அறிக்கை புலிகளாகவும் இருப்பதை தவிர ஒரு பயனும் இல்லை!

நாங்கள் ஒரு பிரச்சனை என்று உதவி கேட்டு போனால் வெளியில்வரப் பயம்! ஒண்டும் செய்யாட்டிலும் பறவாயில்லை, உப்படி கதைச்சு வயித்தெரிச்சலை கிளப்பாமலாவது இருக்கலாம்!

அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க நீங்கள் தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க நீங்கள் தயாரா?

தயவு செய்து அவர்களை தூற்றுவதை நிறுத்துங்கள்

அவர்களது நிலை உங்களுக்கு புரிவதில்லை

ஒன்றொன்றாக விழுந்துகொண்டிருந்தாலும்

அவர்களது பணி மெய்ச்சத்தக்கது...........

-2- இன்னொரு நாட்டில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வில் புலிகள் தற்போதைய தடைகள் அவலங்களை எல்லாம் தாண்டி இறுதியில் வெற்றி பெறும் போதோ (அல்லது புலிகள் வலிந்த தாக்குதலை தொடங்க ஆரம்பிக்கும் போதோ... என்று வடிவாக ஞாபகம் இல்லை) சர்வதேசம் மேற்குலகம் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கால்களில் வந்து விழும் என்று சொல்லி முடிச்சார்.

:(

வேற யார் நம்மட niயானந்தமுர்த்தி தான் விட்டது இந்த றீலை !

சும்மா இருக்கிற வெள்ளைக்hரனை கொண்டு வந்து எங்களோட செருகிற வேலை தான் பாருங்கோ இதுகள் பிறகு ஏன் அவன் முட்டாள் இவன் அரை முட்டாள் அங்கால போறவன் முழுக்க அவிச்ச முட்டாள் என்று புலம்பிறியளோ தெரியாது முதல்ல எங்களிட்ட இருக்கிற அல்லது எங்களால செய்ய வேண்டியதை செய்யுங்கொ பிறகு போசிக்கலாம் மற்றதுகளைப் பற்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.