Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

83 நாயகிகள் , 150 பெண்களுக்கு தாலி! - நடிகர் சிவகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சினிமாவில் 83 ஹீரோயின்களுடன் ஆடிப் பாடி, 150 பெண்களுக்கு தாலி கட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு நடிகர்!

யாரந்த கில்லாடி என்கிறீர்களா... என்றும் மார்க்கண்டேயனான சிவக்குமார்தான்.

இப்போதும் ஹீரோ போலவே இளமைத் தோற்றத்துடன் காட்சிதரும் சிவக்குமார், தன் வீட்டிலேயே இரு சூப்பர் ஹீரோக்கள் உருவாகிவிட்டதால், தன் சினிமா பயணத்துக்கு செல்ப் பிரேக் போட்டுக் கொண்டுள்ளார்.

ஒருகாலத்தில் காதல் மன்னனாக திரையில் வெளுத்துக் கட்டிய சிவக்குமார் மீது இதுவரை எந்த கிசுகிசுவோ தவறான செய்திகளோ வந்தது கிடையாது. மது, சிகரெட் என எந்தப் பழக்கத்துக்கும் அவர் அடிமையானதும் இல்லை. அவரது தொழில் எதிரிகளும் போற்றும் அளவு ஒழுக்க சீலராகவே வாழ்ந்து வந்திருக்கிறார்.

கோவையில் தான் படித்த சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவியல் கண்காட்சியை நேற்று துவக்கி வைத்த அவரிடம் இதுகுறித்து மாணவர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர் அளித்த பதில்:

மாணவர்களின் சாதனைக்கு, அடிப்படை ஒழுக்கம் அவசியம். நான் இதுவரை திரைப்படங்களில் 150 பெண்களுக்கு தாலி கட்டி உள்ளேன். 83 கதாநாயகிகளுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் ஒழுக்கம் தவறியதில்லை.

மது, மாது, சூது போன்ற கெட்ட பழக்கங்கள் என்னிடம் என்றுமே கிடையாது. நான் சுத்தமாக இருந்ததால்தான் என் வீட்டிலும் இரண்டு ஹீரோக்களை உருவாக்க முடிந்தது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் எனக்கு கல்வி அறிவு போதித்த ஆசிரியர்கள்தான். எனவே மாணவர்கள் முதலில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள் ஒழுக்கத்துக்கு ஆசிரியர்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றார்.

முன்னதாக சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு கூடத்துக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை கோவை மத்திய ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர். இதனை அப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் என்ற முறையில் சிவகுமார் பெற்று கொண்டார்.

சந்தேகமில்லை, மாணவர்களுக்கு சிவக்குமார் ஒரு நல்ல பாடம்தான்!

நன்றி தற்ஸ் தமிழ்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் குடும்பம் பல ஏழைப்பிள்ளைகளுக்கு படிப்பு வசதிகளையும் செய்து கொடுக்கின்றார்கள்.வலது கை கொடுப்பதை இடது அறியாமல் உதவி செய்பவர்கள் சினிமாவில் எத்தனை உள்ளனர்?

  • கருத்துக்கள உறவுகள்

கோவையில் தான் படித்த சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவியல் கண்காட்சியை நேற்று துவக்கி வைத்த அவரிடம் இது குறித்து மாணவர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் எனக்கு கல்வி அறிவு போதித்த ஆசிரியர்கள்தான். எனவே மாணவர்கள் முதலில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள் ஒழுக்கத்துக்கு ஆசிரியர்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றார்.

இதுதான் அவரின் ஒழுக்கத்துக்குக் காரணம். நானும் நிஜ வாழ்வில் பார்த்திருக்கிறேன்.. ஆண்கள் பாடசாலையில் சிறுவயது முதலே கல்வி கற்றவர்கள் அதிகம் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்திலாவது முனைந்திருப்பதை..! அதேபோல் பெண்கள் பாடசாலையில் படித்த பெண்களிலும் இதை அவதானிக்கலாம்...! கலவன் பாடசாலை...????! :wub:

Edited by nedukkalapoovan

நானும் கவனிச்சிருக்கிறன்................. ஆண்கள் பாடசாலையில் சின்ன வயசில இருந்து கல்வி கற்றவை அதிகமா ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்ததை............. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கவனிச்சிருக்கிறன்................. ஆண்கள் பாடசாலையில் சின்ன வயசில இருந்து கல்வி கற்றவை அதிகமா ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்ததை............. :wub:

ஏன் ஒரு சிலர்.. பூனையள் பொதுவா கடுவனும் கடுவனும்.. செய்யுறதுதானே..! அனுபவமுள்ள ஆக்களுக்குத்தானே உதுகள் பற்றி விபரமா தெரியும். இன்னும் சொல்லுங்கோ உங்கள் அனுபவங்களைக் கேட்பம்..! :o:wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகையான பழக்கத்துக்கு பழக்க தோசம்தான் காரணமா அல்லது சில ஜீன்கள் அதாவது மரபு நிறமூர்த்தங்கள் காரணமா என்பதில் ஆய்வுகள் சில முடிவுகளைக் கண்டுள்ளன. அதாவது ஜீன்களிருந்தால் சந்தர்ப்பம் அதைத் தூண்டிவிடும்.

இலங்கை போன்ற நாடுகளில் பௌத்தப் பள்ளிகளில் இத்தகைய பழக்கங்கள் அதிகமுள்ளன.

மேற்குலகம் இந்தப் பழக்கமுள்ளவர்களைச் சமூகத்திலிருந்து புறக்கணித்து ஒதுக்காமல் மனிதாபிமானத்துடன் நோக்குகின்றது. சிலர் வெளிப்படையாகவே தமது இயல்பைச் சொல்கிறார்கள். சிலர் அரசியல் தலைவர்களாகவுமுள்ளார்கள்

ஆனால் நமது நாட்டில் ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகளின்போது இப்படியான சிலர் கொலை செய்யப்பட்டுமுள்ளார்கள். பாவங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கவனிச்சிருக்கிறன்................. ஆண்கள் பாடசாலையில் சின்ன வயசில இருந்து கல்வி கற்றவை அதிகமா ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்ததை............. :wub:

என்னது இண்டைக்கு எங்கடை மியாவ் இஞ்சை உலாவுது?

ஏன் வெளியிலை மூஞ்சூறு,எலி ஒண்டும் கிடைக்கேல்லையோ?

Edited by குமாரசாமி

இதுதான் அவரின் ஒழுக்கத்துக்குக் காரணம். நானும் நிஜ வாழ்வில் பார்த்திருக்கிறேன்.. ஆண்கள் பாடசாலையில் சிறுவயது முதலே கல்வி கற்றவர்கள் அதிகம் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்திலாவது முனைந்திருப்பதை..! அதேபோல் பெண்கள் பாடசாலையில் படித்த பெண்களிலும் இதை அவதானிக்கலாம்...! கலவன் பாடசாலை...????! :wub:

யோவ்... நான் எட்டாம் வகுப்புவரை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் நன்னாத்தான் படிச்சேன்.. அது கலவன் பாடசாலை.. அதில படிச்ச பயனாக.. நல்ல பாடசாலை தாறோம்னு றோயல் கல்லூரி என்று ஒண்டைக் காட்ட.. சில பெரிசுகளின்ரை ஆக்கினையால அந்த ஆண்கள் பாடசாலைக்கு வந்து... ஹோலி பமிலி கொன்வெண்டுக்கு முன்னாலையும், லேடிஸ் கொலிஜுக்கு முன்னாலையும், சைவ மங்கையர் கழகத்துக்கு முன்னாலையும் கொட்டாவி விட்டு... ???? நெடுக்ஸ்.. எரிச்சலைக் கிளப்பாதேயும் காணும்..!! :o:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா எங்கடை சோழியன் அண்ணை பொறுத்த இடத்திலைதான் ஏரியா (படிச்சு) செய்திருக்கிறார் :wub:

அது சரி சோழியண்ணை நீங்கள் சுவர் ஏறி பாயேல்லைத்தானே :wub:

யோவ்... நான் எட்டாம் வகுப்புவரை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் நன்னாத்தான் படிச்சேன்.. அது கலவன் பாடசாலை.. அதில படிச்ச பயனாக.. நல்ல பாடசாலை தாறோம்னு றோயல் கல்லூரி என்று ஒண்டைக் காட்ட.. சில பெரிசுகளின்ரை ஆக்கினையால அந்த ஆண்கள் பாடசாலைக்கு வந்து... ஹோலி பமிலி கொன்வெண்டுக்கு முன்னாலையும், லேடிஸ் கொலிஜுக்கு முன்னாலையும், சைவ மங்கையர் கழகத்துக்கு முன்னாலையும் கொட்டாவி விட்டு... ???? நெடுக்ஸ்.. எரிச்சலைக் கிளப்பாதேயும் காணும்..!! :o:wub:

இத்தனை இடமா? :wub:

இதுதான் அவரின் ஒழுக்கத்துக்குக் காரணம். நானும் நிஜ வாழ்வில் பார்த்திருக்கிறேன்.. ஆண்கள் பாடசாலையில் சிறுவயது முதலே கல்வி கற்றவர்கள் அதிகம் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்திலாவது முனைந்திருப்பதை..! அதேபோல் பெண்கள் பாடசாலையில் படித்த பெண்களிலும் இதை அவதானிக்கலாம்...! கலவன் பாடசாலை...????! :wub:

நெடுக்கின் கருத்தை ஏற்பது கடினம். நான் ஆரம்பத்தில் கலவன் பாடசாலையில் படித்து, பின் ஆண்கள் கல்லூரியிலும் படித்த அனுபவத்தில் கண்ட விடயம், கலவன் பாடசாலையில் பெண்களுடன் சகஜமாக பழகுவதால் அங்கே ஆர்வக் கோளாறுகள் குறைவு. ஆனால் ஆண்கள் பாடசாலையில் படிக்கும் போது, அருகிலுள்ள பெண்கள் கல்லூரியின் மாணவிகளை சந்திக்க வேண்டும், கதைக்க வேண்டும் என்ற தாபமும், ஆர்வமும் தானாகவே உண்டாகும். இது பெண்கள் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்குமுண்டு. நான் இறுதியாகப் படித்த அந்தப் பிரபலமான கல்லூரிக்கு அருகில் பிரபலமான பெண்கள் கல்லூரியுமிருந்தது. ஆண்கள் கல்லூரி முடிவடைவதற்கு 10 நிமடங்கள் முன்னதாகவே பெண்கள் கல்லூரியை விட்டு விடுவார்கள். ஆனால் மாணவிகள் மிகவும் மெதுவாகவே வகுப்பறைகளிலிருந்து வெளியேறி ஆண்கள் பாடசாலை முடிவடையும் நேரம் அருகே வந்து சேருவார்கள். ஆனால் ஆண்கள் பாடசாலை முடிந்தவுடன் பெண்கள் போய் விடுவார்களோ என்ற அச்சத்தில் வகுப்பறைகளை விட்டு விரைவாக வெளியேறுவார்கள். இது தான் பல ஆண் ,பெண் கல்லூரிகளில் நான் கண்ட நடைமுறை. அதனால் ஒழுக்கம் என்பது படிக்கும் கல்லூரிகளை மட்டும் வைத்து ஏற்படுவதில்லை. உதாரணமாக முன்பு தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் (இரு பாலாருக்குமானது) திரு ஜெயரட்ணம் அவர்கள் அதிபராக இருந்த போது அவரது கண்டிப்பான நடவடிக்கைகளினால் மாணவ மாணவிகள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டார்கள். அதனால் பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் ஒழுக்கம் பேண உதவுகின்றது என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர; ஆண், பெண் கல்லூரிகள் தனியாக நடப்பதனால் தான் ஒழுக்கமாக இருக்க முடியுமென்பது வெறும் நொண்டிச்சாட்டு. :wub::o

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்... நான் எட்டாம் வகுப்புவரை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் நன்னாத்தான் படிச்சேன்.. அது கலவன் பாடசாலை.. அதில படிச்ச பயனாக.. நல்ல பாடசாலை தாறோம்னு றோயல் கல்லூரி என்று ஒண்டைக் காட்ட.. சில பெரிசுகளின்ரை ஆக்கினையால அந்த ஆண்கள் பாடசாலைக்கு வந்து... ஹோலி பமிலி கொன்வெண்டுக்கு முன்னாலையும், லேடிஸ் கொலிஜுக்கு முன்னாலையும், சைவ மங்கையர் கழகத்துக்கு முன்னாலையும் கொட்டாவி விட்டு... ???? நெடுக்ஸ்.. எரிச்சலைக் கிளப்பாதேயும் காணும்..!! :lol: :lol:

ஆனா நான் கண்ட வகையில.. ஆண்கள் பாடசாலை பொடியள்.. தூர நின்று ஜொள்ளு விட்டதோட சரி. ஆனால் கலவன் பாடசாலை ஆக்கள்... குழந்தை குட்டியோட... தான் வெளிக்கிடுறது...! :lol:

ஆண், பெண் கல்லூரிகள் தனியாக நடப்பதனால் தான் ஒழுக்கமாக இருக்க முடியுமென்பது வெறும் நொண்டிச்சாட்டு.

வசம்பண்ணன்.. நொண்டிக்கு அது சாட்டாக இருக்கலாம். ஆனால் நொண்டி அல்லாதோருக்கு..( நான் உடல் ஊனத்தைக் குறிப்பிடவில்லை.. மனதில் உள்ள நொண்டித்தனத்தை குறிப்பிடுறன்..! :D

Edited by nedukkalapoovan

யோவ் நெடுக்காலபோவான் நானும் கொக்குவிலில் கலவன் பாடசாலையில் தான் படிச்சனான். இது ரொம்ப ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் நெடுக்காலபோவான் நானும் கொக்குவிலில் கலவன் பாடசாலையில் தான் படிச்சனான். இது ரொம்ப ஓவர்.

எனக்கு கொக்குவில் இந்துக்கல்லூரி பற்றி தெரியாது.. யாழ் நகர் வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரா மகா வித்தியாலத்தை.. வைத்தீஸ்வராக் கம்பஸ் என்பார்கள். ஏனென்றால்.. யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் - மாணவிகள் நடத்தும் கூத்துக்களுக்கு ஒப்ப.. வைத்தீஸ்வராவில் நடப்பது என்று சொல்வார்கள்..! நானும் கண்டிருக்கிறேன் சில தடவைகள்.. வண்ணைச் சிவன் கோவில் பக்கமாய்..???! :lol::lol:

ஆனா நான் கண்ட வகையில.. ஆண்கள் பாடசாலை பொடியள்.. தூர நின்று ஜொள்ளு விட்டதோட சரி. ஆனால் கலவன் பாடசாலை ஆக்கள்... குழந்தை குட்டியோட... தான் வெளிக்கிடுறது...! :D

வசம்பண்ணன்.. நொண்டிக்கு அது சாட்டாக இருக்கலாம். ஆனால் நொண்டி அல்லாதோருக்கு..( நான் உடல் ஊனத்தைக் குறிப்பிடவில்லை.. மனதில் உள்ள நொண்டித்தனத்தை குறிப்பிடுறன்..! :D

பிறகென்க விடயத்தை கப்பெண்டு பிடிச்சிட்டீங்க. நானும் அதைத் தானே சொன்னேன். ஒழுக்கமென்பது மனதிலுள்ள நொண்டித் தனத்தால் தான் பாதிக்கப்படுமேயொழிய, கலவன் பாடசாலையாலோ அல்லது ஆண், பெண் என தனித்தனி கல்லூரிகளாலோ அல்ல. :D:lol:

மற்றும்படி நீங்கள் சொன்ன மாதிரி கலவன் பாடசாலையாலை வெளிக்கிடேக்க குழந்தை குட்டியளோடை தான் வருவினமெண்டால்; அங்கே அம்மா, அப்பா யாரென்று பார்க்கிறவைக்குத் தெரியும். ஆனால் பெண்கள் கல்லூரியிலிருந்து பெடிச்சி குழந்தையோடு வந்தால் அப்பா யாரெண்டு வலை போட்டுத் தான் தேட வேண்டும். :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் நெடுக்காலபோவான் நானும் கொக்குவிலில் கலவன் பாடசாலையில் தான் படிச்சனான். இது ரொம்ப ஓவர்.

அதுதான் இஞ்சை அடிக்கடி வர நேரமில்லையாக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்... நான் எட்டாம் வகுப்புவரை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் நன்னாத்தான் படிச்சேன்.. அது கலவன் பாடசாலை.. அதில படிச்ச பயனாக.. நல்ல பாடசாலை தாறோம்னு றோயல் கல்லூரி என்று ஒண்டைக் காட்ட.. சில பெரிசுகளின்ரை ஆக்கினையால அந்த ஆண்கள் பாடசாலைக்கு வந்து... ஹோலி பமிலி கொன்வெண்டுக்கு முன்னாலையும், லேடிஸ் கொலிஜுக்கு முன்னாலையும், சைவ மங்கையர் கழகத்துக்கு முன்னாலையும் கொட்டாவி விட்டு... ???? நெடுக்ஸ்.. எரிச்சலைக் கிளப்பாதேயும் காணும்..!! :lol: :lol:

ம்.........பல பாடசாலைகளுக்கு முன்னால தவம் பண்ணியிருக்கிறீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிவகுமார் ஒரு பேட்டியில் கூறிய ஞாபகம், தனது இளமையின் இரகசியம் பல வருடங்களாக தினமும் யோகா செய்வது என குறிப்பிட்டிருந்தார். யோக அவரை இவ்வளவு மனக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.அவர் நடித்த சிந்து பைரவி என்னை கவர்ந்த படங்களில் ஒன்று.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

யோவ்... நான் எட்டாம் வகுப்புவரை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் நன்னாத்தான் படிச்சேன்.. அது கலவன் பாடசாலை.. அதில படிச்ச பயனாக.. நல்ல பாடசாலை தாறோம்னு றோயல் கல்லூரி என்று ஒண்டைக் காட்ட.. சில பெரிசுகளின்ரை ஆக்கினையால அந்த ஆண்கள் பாடசாலைக்கு வந்து... ஹோலி பமிலி கொன்வெண்டுக்கு முன்னாலையும், லேடிஸ் கொலிஜுக்கு முன்னாலையும், சைவ மங்கையர் கழகத்துக்கு முன்னாலையும் கொட்டாவி விட்டு... ???? நெடுக்ஸ்.. எரிச்சலைக் கிளப்பாதேயும் காணும்..!! :lol: :lol:

சோழியன்..தாத்தா..தா ஹோலி பமிலி கொன்வெண்ட்,சைவ மங்கையர் கழகதிற்கு முன்னால நீங்களும் கொட்டாவி விட்டனியளோ..?? :lol:

நானும் அந்த பக்கம் தான் அடிகடி கொட்டாவி விட வாறனான்..சிலவேளை அங்க உங்கள கண்டிருக்கலாம் என்ன..அது சரி தாத்தா அங்க பேர்த்தியை கூப்பிட போறனியளே.. :)

அப்ப நான் வரட்டா!!

நெடுக்கின் கருத்தை ஏற்பது கடினம். நான் ஆரம்பத்தில் கலவன் பாடசாலையில் படித்து, பின் ஆண்கள் கல்லூரியிலும் படித்த அனுபவத்தில் கண்ட விடயம், கலவன் பாடசாலையில் பெண்களுடன் சகஜமாக பழகுவதால் அங்கே ஆர்வக் கோளாறுகள் குறைவு.

ஓ..வசபண்ணா கலவன் பாடசாலையிலும் படித்தனியளோ..!!..பாவம் பொண்ணுங்க எல்லாம்..அங்க என்ன வம்பு பண்ணிணாரோ..யாருக்கு தெரியும்.. :lol:

ஆனாலும்..பொண்ணுங்க கூட சேர்ந்து படிக்கிறது நன்னது தான்..ஆனா..னா..பள்ளியிள நல்ல பிள்ளையா இருகனும் அல்லோ பொண்ணுகளுக்கு "பிலிம்" காட்ட உது எல்லாம் சரி பட்டு வராது அல்லோ நமக்கு :lol: ...பிறகு ஆசிரியர் கிட்ட பசங்களுக்கு முன்னால திட்டு வாங்கிறது..வேற..பொண்ணுகளுக்கு முன்னால.. :)

வாங்கிறது..எல்லாம் நம்மால முடியாது..எங்கள மாதிரி தான் பொண்ணுகளும் யோசிப்பாங்களோ :lol: வசபண்ணா இல்ல நீங்க தானே கலவன் பாடசாலையில்..படித்திரு இருக்கிறியள் அது தான் விசாரித்தனான்..ன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும்படி நீங்கள் சொன்ன மாதிரி கலவன் பாடசாலையாலை வெளிக்கிடேக்க குழந்தை குட்டியளோடை தான் வருவினமெண்டால்; அங்கே அம்மா, அப்பா யாரென்று பார்க்கிறவைக்குத் தெரியும். ஆனால் பெண்கள் கல்லூரியிலிருந்து பெடிச்சி குழந்தையோடு வந்தால் அப்பா யாரெண்டு வலை போட்டுத் தான் தேட வேண்டும். :unsure::rolleyes:

சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள பிரபல தமிழ்ப் பெண்கள் பாடசாலையில் இந்த அவலம் நடந்தேறியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜயகாந்த பாணியில் ஒரு சின்ன புள்ளிவிபரம்.

நான் படித்தது ஆண்கள் பாடசாலை. என்னுடைய வகுப்பில் 40 பேர் அதில் காதல் திருமணம் 5 பேர் மட்டுமே. படிக்கும்போது காதலித்தவர்கள் ஒருவரும் இல்லை.(வெளியே சொல்லாமல் சிலர் இருக்கலாம்) நிச்சயம் செய்த திருமணம் 12 பேர். ஏனையோர் இன்னமும் பிரமச்சாரிகள்.

அருகில் உள்ள பெண்கள் பாடசாலை மாணவிகளை மட்டும் இடையிடையே நோக்கியுள்ளோம்.

அருகில் உள்ள பெண்கள் பாடசாலை மாணவிகளை மட்டும் இடை இடையே நோக்கியுள்ளோம்.

:rolleyes:அட நீங்க கூட ரொம்ப அவசரப்படுபவர் போல் தெரிகின்றது. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:அட நீங்க கூட ரொம்ப அவசரப்படுபவர் போல் தெரிகின்றது. :unsure:

வசம்பண்ணை நீங்க வேற நான் இடையிடையே என சொன்னது சில நேரங்களில் மட்டும் என அர்த்தம். நீங்கள் சொன்னதுபோல் இடை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அட! நானும் ஐந்தாம் வகுப்புவரை கலவன் பாடசாலைதான். அங்க ஒரு மாணவ,மாணவிகூட கல்தடுக்கி விழுந்ததுண்டு. ஆனால் காதலில் விழுந்ததில்லை.(நான் உட்பட). ஆனால் ஆசிரிய, ஆசிரியைகள் பக்கத்து பக்கத்து வகுப்புகளில் பாடமெடுக்கும் போது சும்மா கடலை போடுவார்கள்.நாங்களும் படிக்கிற மாதிரி..... .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.