Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளாலியில் ஊடுருவித் தாக்குதல் - 21 படையினர் பலி.

Featured Replies

அப்போ இராணுவம் குளுக்கோஸ் ஏத்தாமல்.. 10000 புலி பலி என்று "குடுவா" கொடுக்கிறது. அப்போ இராணுவம் "குடுக்" கொடுக்கிறது என்றதை ஒப்புக் கொள்கிறீர்கள்.

என்ன அண்ணை எழுதுறீங்க?

அப்ப லங்காபுவத் செய்தது போல இப்ப நாங்கள் செய்தா என்ன பிழை எண்டா சொல்லவாறீங்க?

நீங்க பெருமாள் கோவிலடியாக்கள் எல்லாம் துரோகிகள் என்றதுக்கும், இப்ப குடுத்த விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன் நீங்கள் அங்கை பாதுகாப்பாயிருந்து உங்கடை தமிழ்தேசிய (?) சேவையை தளராம செய்யுங்கோ,

நான் இப்ப அதில தலையிடுறதில்லையே! நீங்க கேட்டதால தான் சென்னன்! இனி நாளைக்கு முடிஞ்சா சந்திப்பம்!

Edited by சாணக்கியன்

  • Replies 72
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணை எழுதுறீங்க?

அப்ப லங்காபுவத் செய்தது போல இப்ப நாங்கள் செய்தா என்ன பிழை எண்டா சொல்லவாறீங்க?

நீங்க பெருமாள் கோவிலடியாக்கள் எல்லாம் துரோகிகள் என்றதுக்கும், இப்ப குடுத்த விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன் நீங்கள் அங்கை பாதுகாப்பாயிருந்து உங்கடை தமிழ்தேசிய (?) சேவையை தளராம செய்யுங்கோ,

நான் இப்ப அதில தலையிடுறதில்லையே! நீங்க கேட்டதால தான் சென்னன்! இனி நாளைக்கு முடிஞ்சா சந்திப்பம்!

நீங்க என்ன சொல்லவாறீங்க பெரியண்ண.. புலிகளின் குரல் லங்காபுவத் ஆகியும்.. சிறீலங்கா பாதுகாப்பமைச்சு.. புலிகளின் குரலாகியும் போட்டுது என்றோ..!

நான் நினைக்கிறன்.. கோத்தபாய.. ரம்புக்வல ரேஞ்சில.. நீங்களும்.. பாதுகாப்பு அமைச்சு தினமும் வழங்கும் குடு மயக்கத்தில தான் இருக்கிறீங்க. கொஞ்சம் பொறுங்கோ.. நேர காலம் வர.. வெறி தெளிய எல்லாம் விளங்கும்..! :lol::wub:

பெருமாள் கோவிலடி.. ஈபிக்கு பெயர் போன இடம் என்றது பொதுவா யாழ் நகர வாசிகள் எல்லோருக்கும் தெரியும். அதற்காக அங்கு வாழிற மக்கள் எல்லாரும் ஈபி என்றால் அது சரியாகாது. உங்கட கதை நீங்கள் அப்படி இருக்கலாம் என்று சொல்ல வைக்குது. இப்ப அதே ஈபில இருந்து 3 வந்திட்டுது. பிரேம் அணி.. வரதர் அணி... டக்கிளஸ் அணி.. பிரேம் மட்டும் தமிழ் தேசிய தளத்தில் ஒட்டி இருக்கிறார். மற்றவை.. உங்களைப் போலத்தான்.. தமிழ் தேசியம் என்றது அடுத்தவனுக்குச் சொந்தம் என்ற கணக்கில...! :o

Edited by nedukkalapoovan

என்ன இருந்தாலும் வேற்றிவேல் அண்ணன், நான் போகும் இடம் எல்லாம் எனக்கு பின்னால் வந்து பதிலெழுதுவதை ஒரு கௌரவமாக கருதுகிறேன்! நன்றி அண்ணன்!

பறப்பது பருந்தின் குணம், பாம்பை கண்டால் பின்னாலே துரத்தி சென்று பதம் பார்ப்பதும் பருந்தின் குணம்.

இது பாம்பிற்கு பருந்து தரும் கௌரவமா?!!! :wub:

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு சொன்னது!

பறக்காது பருந்து என்று பாம்பு சொன்னது!!

நான் பறக்கும் போது பாரு என்று பருந்து சொன்னது!

அதில் அர்த்தம் உள்ளது!! அதில் அர்த்தம் உள்ளது!!!

Edited by vettri-vel

கிழக்கில் நடந்த தாக்குதல் பற்றி புலிகளின் குரல் செய்தி சொன்னதா? அப்படியிருந்துமா புதினம், பதிவு, சங்கதி போன்றவைகள் அந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்தன?

மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

கிழக்கில் நடந்த தாக்குதல் பற்றி புலிகளின் குரல் செய்தி சொன்னதா? அப்படியிருந்துமா புதினம், பதிவு, சங்கதி போன்றவைகள் அந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்தன?

மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

நான் கிழக்கில் நடந்த கிளைமோர் தாக்குதல் பற்றிக் கேட்டேன். (அது பற்றி புலிகளின் குரலில் செய்தி சொன்னதாக நெடுக்காலபோவான் குறிப்பிட்டுள்ளார்)

வவுனிக்குளம், மல்லாவி, வெள்ளாங்குளம,; பாலமோட்டை போன்ற இடங்களில் நடக்கின்ற சண்டையில் பத்துப் படையினர் இறந்தாலே அது பற்றி ஊடகங்களுக்கு புலிகளின் அறிக்கை போகின்றது. ஊடகங்களும் "விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்" என்று செய்தி வெளியிடுகின்றன.

ஆனால் இந்த இரண்டு சம்பவங்கள் பற்றியும் அப்படியான செய்தியை ஊடகங்களால் வெளியிட முடியவில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி சிறிலங்காப் பாதுகாப்பு தரப்பின் ஊடகங்கள் செய்திகளை தருவது போன்று, தமிழ்நெற்றும் சிங்களவர்களை நோக்கிய செய்திகளை வெளியிட ஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது.

இவைகளைப் படித்து தமிழர்களாகிய நாம் புளுகாங்கிதம் அடைவது சரியல்ல என்று எனக்குப் படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனை நம்ப வைத்துத் தான் இந்தச் செய்தி வெளியிட வேண்டும் என்று தேவை யாருக்கும் இல்லை. இவர் நம்பாவிட்டால் ஒன்றும் பொய்யாகிப் போவதுமில்லை.

சிறிலங்கா இராணுவத்தின் 20 பேர் இறந்து அவர்களுக்கு தாக்கம் வரப்போவதில்லை. அதனால் இந்தச் செய்தி குறித்துப் பெரிதாக அலட்டவும் தேவையில்லை.

தமிழ்நெற்றும் சிறிலங்கா அரசு போல ஏற்கனவே எழுதி வைத்த செய்தியாகச் சொல்லவில்லை. சம்பவம் நடந்து, 2, 3 நாளுக்குப் பிறகு தான் சொன்னது. அது ஒரு வகையில் பிற்பாடு கசிந்த செய்தியாக இருக்கலாம்.

சபேசன், நீங்கள் நம்பாவிட்டால் ஒன்றும் குறையப் போவதில்லை. நினைத்த மாதிரி செய்தி வெளியிட, இது ஒன்று வெப்ஈழம் அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி சிறிலங்காப் பாதுகாப்பு தரப்பின் ஊடகங்கள் செய்திகளை தருவது போன்று, தமிழ்நெற்றும் சிங்களவர்களை நோக்கிய செய்திகளை வெளியிட ஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது.

இவைகளைப் படித்து தமிழர்களாகிய நாம் புளுகாங்கிதம் அடைவது சரியல்ல என்று எனக்குப் படுகிறது.

சரி.. அப்ப நாங்கள் எல்லாரும் வெப் ஈழத்துக்குப் போவம்..! :lol:

(நான் சும்மா பகிடிக்கு.. கோவிக்கிறதில்லை..! :o:wub: )

சபேசனை நம்ப வைத்துத் தான் இந்தச் செய்தி வெளியிட வேண்டும் என்று தேவை யாருக்கும் இல்லை. இவர் நம்பாவிட்டால் ஒன்றும் பொய்யாகிப் போவதுமில்லை.

அவர் சொல்வது போல தான் எல்லா ஊடகங்களும் நடக்கவேணும், நடக்கின்றன எண்று எதிர்பாக்கிறார் போல கிடக்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் நடந்த தாக்குதல் பற்றி புலிகளின் குரல் செய்தி சொன்னதா? அப்படியிருந்துமா புதினம், பதிவு, சங்கதி போன்றவைகள் அந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்தன?

மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

சபேசன் நீங்கள் செய்தி இணையத்தளங்களில் வரும் செய்திகளை கிரமமாக வாசிக்கிறீங்களா.. புலிகளின் குரலை கிரமமாக கேட்டு வருகிறீங்களா..??! உண்மையில் நீங்கள் அப்படிச் செய்யாமல்.. சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டுக்களை அடுக்கி உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை செய்தித்தளங்கள் மீது காட்ட முனைகிறீர்கள் என்பதை இச்செய்தி அப்பட்டமாக உணர்த்தி நிற்கிறது.

கிழக்கில் 23 படையினர் கிளைமோரில் இறந்த தாக்குதல் செய்தியை முதலில் வெளியிட்டது தமிழ்நெட்.

அதே செய்தி.. பதிவில் 06-08-2008 இல் வந்திருக்கிறது..அதே சங்கதியிலும் வந்தது.

பதிவில் வந்ததற்கான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. சங்கதியில் 11 ம் திகதியில் இருந்து வந்த செய்திகள் தான் வெளிக்காட்டப்படுகின்றன. ஆனால் நான் இச்செய்தியை அதற்கு முன்னைய ஒரு திகதியில் சங்கதியில் வாசித்திருக்கிறேன். புலிகளின் குரலிலும் கேட்டிருக்கிறேன்.

http://www.pathivu.com/?p=2697

கிளாலித் தாக்குதல் செய்தி சங்கதியில் வந்திருக்கிறது..!

http://www.sankathi.net/content/full_leadn...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

:wub: சபேசன் ,

நீங்கள் இப்படி நடப்பது(கிளாலியில் ஊடுருவித் தாக்கியது) சாத்தியமா இல்லையா என்று ஆராய்ந்து பார்க்கிறீர்கள் போல் இருக்கிறது. அதனால்த்தான் உண்மையாகவே சம்பவம் நடந்திருந்தாலும் கூட அது நடக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. கிலாலியில் இரு பெண் போராளிகளின் வித்துடல்கள் கைப்பற்றப்பட்ட செய்தியைத்தான் முதலில் ராணுவம் வெளியிட்டது. இது புலிகளின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்தவர்கள் என்றுதான் ராணுவம் முதலில் சொன்னது. பின்னர்தான் அது ஒரு தாக்குதல் சம்பவம் என்றும், இன்னும் 15 புலிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று ராணுவம் கூறுகிறது.ஆகவே அங்கு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் புலிகள் இதுவரை அவ்வாறு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டதையோ அல்லது தமது தரப்பில் போராளிகள் கொல்லப்பட்டதையோ அறிவிக்கவில்லை. ஆனால் இன்னும் சில நாட்களில் இந்த விபரங்களை அவர்கள் வெளியிடக் கூடும்.

பெரும்பாலான தாக்குதல் சம்பவங்களை வெளியிடும் புலிகள் சில சமயங்களில் அவர்களுக்கே மட்டும் புரிந்த காரணங்களுக்காக அவற்றை வெளியிடுவதில்லை.அல்லது பின்னர் ஒரு சமயத்தில் வெளியிடுகிறார்கள்.

இதுபோலத்தான் மட்டக்களப்பிலும் நடந்த கிளேமோர்த் தாக்குதல். புலிகள் வாயே திறக்கவில்லை. ஆனால் ராணுவம் இந்தத் தாக்குதல் நடந்ததை ஒத்துக்கொண்டுள்ளதோடு தமது தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்ததாகக் கூறியிருக்கிறது.புலிகள் இதை வெளியிடவில்லை என்பதற்காக இந்தத் தாக்குதல் நடைபெறவில்லை என்று உங்களால் கூறமுடியுமா?!இல்லையல்லவா?!

சரி, உங்கள் பாதைக்கே வருகிறேன். தமிழ்நெட் சிங்கள அரசின் பிரச்சாரத் தந்திரத்தைப் போல் சிங்களவரை நோக்கி இப்படியான பரப்புறையை ஆரம்பித்திருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அதிலே என்ன தவறு இருக்கிறது?உளவியல் யுத்தம் என்பது எதிரியால் எம்மைத் திசை திருப்ப பாவிக்கப்படும்போது நாமும் அதைச் செய்வதில் என்ன தவறு இருக்கமுடியும். அரச பிரcக்க்சாரத்தை நம்பி புலிகள் தமிழ்நாட்டுக்குள் தப்பி ஓடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் சிங்களவருக்கு யதார்த்தத்தை இது உணரச் செய்யும் அல்லவா?!

புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி சிறிலங்காப் பாதுகாப்பு தரப்பின் ஊடகங்கள் செய்திகளை தருவது போன்று, தமிழ்நெற்றும் சிங்களவர்களை நோக்கிய செய்திகளை வெளியிட ஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது.

இவைகளைப் படித்து தமிழர்களாகிய நாம் புளுகாங்கிதம் அடைவது சரியல்ல என்று எனக்குப் படுகிறது.

அண்ணை உங்கடை ஊகிப்பைக் கொண்டுபோய் குப்பையிலை கொட்டுங்கோ.

இன்று இலங்கை விவகாரத்துடன் தொடர்புடைய பன்னாட்டு இராஜதந்திரிகள் பார்க்கும் ஒரேயோரு தமிழ்ஊடகம் தமிழ்நெட். பன்னாட்டு இராஜதந்திரிகளிடம் ஒலிக்கும் தமிழ்குரல் தமிழ்நெட் மட்டும்தான். தமிழ்நெட்டின் செய்திகளில் இருந்த நம்பகத்தன்மை காரணமாக இராஜதந்திர மட்டத்தில் நன்மதிப்பைப் பெற்றது. எவ்வளவோ நெருக்கடிகளிற்கு மத்தியில் தமிழ்நெட் இந்த நிலைக்கு வந்துள்ளது. தமிழர் போராட்டத்தின் நியாயத்தை தமிழர் படும் அவலத்தை, சிங்களப் படையினர் மெற்கொள்ளும் மனிதவுரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பணியை தமிழ்நெட் சிறப்பாகவே செய்து வருகிறது. உலகளவில் இருக்கும் தனது நம்பகத்தன்மையை சிதைக்கும் விதமாக உண்மைக்குப் புறப்பான செய்திகளைத் தமிழ்நெட் வெளியிடவேண்டிய தேவையில்லை. சிங்கள மக்களை சலிப்படையைச் செய்ய வேண்டிய பணி தமிழ்நெட்டுக்குரியதல்ல. சிங்கள அரசின் பரப்புரைகளால் புலத்தமிழர்கள் சலிப்படைந்திருந்தால் புலத்தமிழர்களை சலிப்பிலிருந்து விடுவிக்கும் வகையில் உண்மை நிலையை அவர்களிற்கு எடுத்து விளக்கும் பணியைத் தமிழ்நெட் செய்யலாம். அதைவிடுத்து உண்மைக்குப் புறம்பான செய்தியை சிங்கள மக்களைக் குழப்புவதற்காக வெளியிட்டு தனது பெயரை கெடுத்துக் கொள்ளுமளவிற்கு தமிழ்நெட்டை நிர்வகிப்பவர்கள் முட்டாள்கல்ல.

-------------------------------> <-------------------------

-------------------------------> <-------------------------

தமிழ்நெட்டின் செய்திகளில் இருந்த நம்பகத்தன்மை காரணமாக இராஜதந்திர மட்டத்தில்

நன்மதிப்பைப் பெற்றது. எவ்வளவோ நெருக்கடிகளிற்கு மத்தியில் தமிழ்நெட் இந்த நிலைக்கு வந்துள்ளது.

தமிழர் போராட்டத்தின் நியாயத்தை தமிழர் படும் அவலத்தை, சிங்களப் படையினர் மெற்கொள்ளும் மனிதவுரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பணியை தமிழ்நெட் சிறப்பாகவே செய்து வருகிறது. உலகளவில் இருக்கும் தனது நம்பகத்தன்மையை சிதைக்கும் விதமாக உண்மைக்குப் புறப்பான செய்திகளைத் தமிழ்நெட் வெளியிடவேண்டிய தேவையில்லை.

சிங்கள மக்களை சலிப்படையைச் செய்ய வேண்டிய பணி தமிழ்நெட்டுக்குரியதல்ல.

சிங்கள அரசின் பரப்புரைகளால் புலத்தமிழர்கள் சலிப்படைந்திருந்தால் புலத்தமிழர்களை சலிப்பிலிருந்து விடுவிக்கும் வகையில் உண்மை நிலையை அவர்களிற்கு எடுத்து விளக்கும் பணியைத் தமிழ்நெட் செய்யலாம். அதைவிடுத்து

உண்மைக்குப் புறம்பான செய்தியை சிங்கள மக்களைக் குழப்புவதற்காக வெளியிட்டு தனது பெயரை கெடுத்துக் கொள்ளுமளவிற்கு தமிழ்நெட்டை நிர்வகிப்பவர்கள் முட்டாள்கல்ல. :wub:

மறுக்க முடியாத கருத்துக்கள். பாராட்டுக்கள்! மின்னல்!!

குருடன் கூட தன் முகத்துக்கு தானே கரி பூசுவதில்லை! ஆனால் திருடன் பூசுவதுண்டு! :lol:

ஆமாம்! மாறுவேடத்தில் வந்து பிறர் பொருட்களை அபகரிக்கவும் அல்லது ஏதோ நடந்து போன சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டு மறைந்து நின்று தாக்கவும் திருடர்கள் தன் முகத்துக்கு தானே கரி பூசுவதுண்டு

Edited by vettri-vel

உண்மைக்குப் புறம்பான செய்தியை சிங்கள மக்களைக் குழப்புவதற்காக வெளியிட்டு தனது பெயரை கெடுத்துக் கொள்ளுமளவிற்கு தமிழ்நெட்டை நிர்வகிப்பவர்கள் முட்டாள்கல்ல. :)

இன்றைய உதயன் பத்திரிகையின் யாழ்பதிப்பில் (14/08/2008) வெளியாகிய கிளாலித்தாக்குத்ல் தொடர்பு பட்ட செய்தி ---- எதிரியின் கோட்டைக்குள் இருந்த போதும் துணிவாகவும் நடுநிலையாகவும் செய்திகளை வெளிக்கொணருவதில் உதயன் பத்திரிகையினை நாம் பாராட்ட வேண்டும்.

நண்பர் மின்னல் கூறுவது போல இன்று ஈழத்தமிழர் சார்பான சர்வதேச ஊடகம் என்றால் அது தமிழ்நெட் இணையத்தளம்தான்.

14082008001006ts5.jpg

நன்றி உதயன் இணையம்

தமிழ்நெற் தனது செய்தியாளர் நேரடியாக சண்டையை பார்த்தாகவோ இரு தரப்பு இழப்புகளைப் பார்த்தாகவோ எழுதவில்லை. வழமையாக ஊடகங்களில் தமது செய்தியாளர் நேரடியாக கண்டதை உறுதிப்படுத்தினதைத்தான் மேற்கோள்கள் இன்றி நேரடியான வசன நடையில் சொல்வார்கள். ஒரு தரப்பின் பேச்சாளர் போன்றோரோ அல்லது சாதாரண சாட்சிகள், வேறு ஊடகங்கள் என்பவற்றினூடக வரும் தகவல்களை வைத்து செய்தியாக்கும் பொழுது வசன நடையில் மேற்கோள் காட்டும் முறையை பயன்படுத்துகிறார்கள். தலையங்கங்கள் தீட்டும் போது கூட எந்த தரப்பு சொன்ன தகவலின் அடிப்படையில் அந்த தலையங்கம் தீட்டப்பட்டது என்பதையும் குறிப்பிடுவார்கள் அல்லது மேற்கோள் குறிக்குள் போட்டுவிடுவார்கள். இந்த நுணுக்கமான அணுகுமுறைகள் ஒழுக்கங்கள் வெட்டி ஒட்டும் தமிழ் ஊடக உலகில் இல்லை (தமிழ் நெற்றைத் தவிர).

இங்கு தமிழ்நெற்றின் செய்தியில் எவ்வளவு நம்பிக்கை வைத்து மேற்குலகம் பார்க்கிறது இராசதந்திரிகள் பார்க்கிறார்கள் என்று வாதாடுகிறோமோ அந்தளவிற்கு சிறீலங்காவிற்கு தமிழ்நெற்றின் நம்பகத்தன்மையை சிதைக்க வேண்டிய தேவையிருக்கிறது என்பதை உணரவேண்டும். இது மேற்குலகம் புலிகள் பற்றி அறிந்து விடாது இருப்பதற்கு அல்ல மாறாக தமிழர்கள் தமிழ்நெற் மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதைப்பதற்கு. தமிழ்நெற்றுக்கு சிறீலங்கா படையினர் தரப்பில் இருக்கும் நம்பிக்கைக்குரிய மூலம் எந்தளவிற்கு விசுவாசமாக எப்பொழுதும் இருக்கும் என்பதன் அடிப்படையில் சபேசனின் கேள்வியை பார்த்தால் அதில் சிறு நியாயம் உண்டு. தமிழ்நெற் தெரிந்து கொண்டு தவறு விடும் என்று சொல்லவில்லை. அவர்கள் படைத்தரப்பில் "விடையமறிந்த வட்டாரம்" (என தமக்கு தெரிந்த நம்பிக்கைக்குரிய மூலம்) சொல்வதாகத்தான் செய்தியை தொளிவாக எழுதியுள்ளார்கள்.

இவ்வாறு முன்பும் தமிழர்-புலிகள் தரப்பில், இந்தியத் தரப்பில், நோர்வே தரப்பில், ஐரோப்பிய ஒன்றியத் தரப்பில், அமெரிக்க தரப்பில் விடையமறிந்த வட்டாரம் என்று தமிழ்நெற் செய்திகள் எழுதியுள்ளார்கள். அவற்றில் அறுதிப் பெரும்பான்மையானவை பின்னர் ஏனைய தரப்புகளால் உறுதிப்படுத்தபட்டு செய்தியாக மற்றவர்களால் காலம் தாழ்த்தி வெளியிடப்பட்டிருக்கிறது. சில சந்தர்ப்பங்களின் வராமல் போயிருக்கிறது. அவ்வாறு தான் இதுவும். இது ஊடகத்துறையில் நடப்பது தான். ஆனால் இந்த முறை தொடர்ச்சியாக 2...3 சம்பவங்கள் பற்றி ஒரு குறித்த காலப்பகுதியில் வந்ததால் சில கேள்விகள் எழும்புவதை தவிர்க்க முடியாது.

தமிழ்நெற்றை ஒரு நடு நிலை ஊடகமாக பார்த்தால் ஒருவருக்கும் (சபேசன் உட்பட) ஒரு சந்தேகமும் வராது.

இப்ப எலி ஏன் அம்மணமாய் ஓடுது எண்டதுதான் எனக்கு விளங்க இல்லை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கிழக்கில் நடந்த கிளைமோர் தாக்குதல் பற்றிக் கேட்டேன். (அது பற்றி புலிகளின் குரலில் செய்தி சொன்னதாக நெடுக்காலபோவான் குறிப்பிட்டுள்ளார்)

வவுனிக்குளம், மல்லாவி, வெள்ளாங்குளம,; பாலமோட்டை போன்ற இடங்களில் நடக்கின்ற சண்டையில் பத்துப் படையினர் இறந்தாலே அது பற்றி ஊடகங்களுக்கு புலிகளின் அறிக்கை போகின்றது. ஊடகங்களும் "விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்" என்று செய்தி வெளியிடுகின்றன.

ஆனால் இந்த இரண்டு சம்பவங்கள் பற்றியும் அப்படியான செய்தியை ஊடகங்களால் வெளியிட முடியவில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி சிறிலங்காப் பாதுகாப்பு தரப்பின் ஊடகங்கள் செய்திகளை தருவது போன்று, தமிழ்நெற்றும் சிங்களவர்களை நோக்கிய செய்திகளை வெளியிட ஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது.இவைகளைப் படித்து தமிழர்களாகிய நாம் புளுகாங்கிதம் அடைவது சரியல்ல என்று எனக்குப் படுகிறது.

சபேசன் இங்கு நீங்கள் பூடகமாக ஒப்புநோக்குவது இரு ஊடகங்களினதும் நம்பகத்தன்மையின் தரத்தை அல்லவா?

காலநேரம் கண்டு போராட்டத்துக்கு செய்யும் பணிகளுள் இதுவும் ஒன்று என்று சொல்லவருகிறீர்களா?

இராணுவத்துடன் தொடர்புடைய பெண் சுடப்பட்டால் கூடலுக்கு ஆமி கூடாது என்று சொல்வதற்க்கு யார் இவர்கள்?

இது மனிததர்மமா என்று வாதிட்டீர்கள், இப்படி இடம் தெரியாமல் உங்கள் மனிததர்மத்தை இறக்கிவைத்துவிட்டு நீங்களே அவஸ்தைப்படுகிறீர்கள்!

இது நக்கலுக்காக சொல்லவில்லை இப்படி நீங்கள் பார்க்கப்படாத பல நூறுகோணங்களில் மக்களின் பார்வை உங்கள் கருத்துக்களின் மீது இருக்கும் இதை உணரவேண்டும் என்பதற்க்காக சொல்கிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் உங்கள் ஒவ்வொரு பதிவிலும் புலிக்கு பாடம்தான் தருகிறீர்கள்!

சொல்லிக் கொடுப்பதில் சங்கரியாரை மிஞ்சிவிடுவீர்கள் போல் இருக்கின்றது.

நண்பர்களே!

ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு "வழு" இருக்கிறது என்பதுதான் என்னுடைய அச்சம். இன்றைக்கு பரப்புரைப் போர் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. இதில் சிங்களவர்களின் கை ஓங்கியும் தமிழர்களின் கை தாழ்ந்தும் இருக்கின்றது.

இந்த நிலையில்

சிங்கள அரசின் பரப்புரைகள் சிலவற்றை உடைக்கக் கூடிய இரண்டு செய்திகள்வருகின்றன. ஆனால் அவற்றை எமது ஊடகங்கள் வெளியிடவில்லை. பிந்தி வெளியிட்ட ஊடகங்களின் வசனநடைகளிலும் ஏதோ ஒரு தயக்கம்தெரிகிறது.

குறிப்பிட்ட ஊடகங்கள் வெளியிடும் மற்றைய தாக்குதல் செய்திகளோடு இந்த செய்திகளை ஒப்பிட்டு இதைச் சொல்கிறேன்.

விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் தகர்க்கப்பட்ட வானூர்த்திகளின் எண்ணிக்கைய குறைத்துத்தான் சொன்னார்கள். உண்மையான எண்ணிக்கை சிங்களவர் தரப்பில் இருந்துதான் வெளிவந்தது. இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

ஆகவே கிளாலியில் நடந்த தாக்குதல் நீங்கள் சொல்வது போன்று உண்மையாக இருக்கக் கூடும். அதே போன்று விடுதலைப் புலிகள் அதை அறிவிக்காததற்கும் அல்லது காலம் பிந்தி அறிவித்ததற்கும் நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும்.

இந்தத் தாக்குதல்களின் உண்மைத் தன்மை பற்றிய கேள்வியை நான் எழுப்பியதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நான் எழுப்பிய கேள்வியோடு அது சம்பந்தப்பட்டது.

சிங்களத் தரப்பின் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை உடனுக்குடன் சரியாகவோ, தவறாகவோ மொழிபெயர்த்து வெளியிடும்தமிழர்களின் இணைய ஊடகம் இன்னும் இந்தச் செய்திகளை ஏன் வெளியிடவில்லை?

பரப்புரையில் சிங்களத் தரப்பின் கை ஓங்கியுள்ள இந்த நிலையில் எமது ஊடகங்கள் இப்படி பனிப்போரில் ஈடுபடுவது நல்லது அல்ல. பொய்யான செய்தியை வெளியிடுவதை விட இது ஆபத்தானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடசாலைமீது குண்டைப் போட்ட படுகொலை உலகத்துக்கு தெரியவராது, அதே நேரம் தெற்கில் நிகழும் சிறிய வன்செயல் உலகத்துக்கு தெரியவருகிறது, இது அவர்கள் அரசு என்ற நிலை அவர்கள் பொய்களுக்கு நல்ல சாதகமாய் இருக்கின்றது.

இந்த இரண்டுதரப்பின் நிலைகளும் இயற்கையானது. அவர்கள் பொய் Jet இல் போகிறதே என்று நாம் மனம்கலங்கத் தேவை இல்லை எம் இயலுமைக்கு உட்பட்டதை நாம் செய்து கொண்டிருப்போம்!

இப்ப எலி ஏன் அம்மணமாய் ஓடுது எண்டதுதான் எனக்கு விளங்க இல்லை....

ஏதோ ஒரு இடத்தில் ஏதோ இருக்கிறதாம்! :)

அதனால் சும்மா காற்றோட்டமாக இருக்கட்டுமே என்று தான் அம்மணமாக ஓடியதாக இப்போது எலி ஒரு விளக்கம் சொல்கிறது!!! :wub:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் குறுக்காலபோவன் எழுதிய பதிலைப் படித்தீர்களா? ஏன் முயலுக்கு மூன்று கால் என்றே நிற்கின்றீர்கள்.

இது பொய்யான செய்தி தானா என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்நெற் சிலகாலம் கழித்துத் தெரிவித்தது, அதற்குக் கிடைத்த நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில் இருந்தாக இருக்கலாம். அவை சிலவேளைகளில் இதர தமிழ் ஊடகங்களுக்குக் கிடைக்காமலும் இருக்கலாம்.

தமிழ்நெற்றின் செய்தி எல்லாம் தமிழ் ஊடகங்களில் வருவதற்கு, அவை ஒன்றும் தமிழ்நெற்றின் மொழிபெயர்ப்பு அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரப்புரையில் சிங்களத் தரப்பின் கை ஓங்கியுள்ள இந்த நிலையில் எமது ஊடகங்கள் இப்படி பனிப்போரில் ஈடுபடுவது நல்லது அல்ல. பொய்யான செய்தியை வெளியிடுவதை விட இது ஆபத்தானது.

புதினத்தைத் தவிர பிற ஊடகங்கள் எல்லாம் தமிழ்நெட்டில் வந்த செய்தியைப் பிரசுரித்திருக்கின்றன.

அப்படி இருக்க.. ஊடகங்களுக்கிடையே பனிப்போர்.. புயற்போர் என்று மக்கள் மத்தியில் சந்தேகங்களைக் கிளப்பி.. சிங்கள அரசின் பிரச்சாரத்துக்கு இன்னும் அதிகமாக ஒத்துழைப்பதும்.. அதில் அதிக நம்பிக்கையை ஊட்ட விளைவதும் ஏன்..??! :lol::wub::)

புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி சிறிலங்காப் பாதுகாப்பு தரப்பின் ஊடகங்கள் செய்திகளை தருவது போன்று, தமிழ்நெற்றும் சிங்களவர்களை நோக்கிய செய்திகளை வெளியிட ஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது.

இவைகளைப் படித்து தமிழர்களாகிய நாம் புளுகாங்கிதம் அடைவது சரியல்ல என்று எனக்குப் படுகிறது.

சிங்கள அரசின் பரப்புரைகள் சிலவற்றை உடைக்கக் கூடிய இரண்டு செய்திகள்வருகின்றன. ஆனால் அவற்றை எமது ஊடகங்கள் வெளியிடவில்லை. பிந்தி வெளியிட்ட ஊடகங்களின் வசனநடைகளிலும் ஏதோ ஒரு தயக்கம்தெரிகிறது.

ஒரே தலைப்பு! கருத்தாளரும் ஒருவர் தான்! ஆனால் இரண்டு கருத்துக்களின் இடையிலும் எத்தனை முரண்பாடுகள்?!!!

அவசரக் கோலத்தில் வார்த்தைகளை அள்ளித்தெளித்து விட்டால் பிறகு பூசி மெழுகுவதை தவிர வேறு வழியில்லை என்பதற்கு இவை உதாரணம்!

Edited by vettri-vel

நண்பர்களே!

வெளிப்படையாக பேச முடியாத சில முரண்பாடுகளை ஏதோ முடிந்தவரை திக்கி திக்கி பேசுகின்ற பொழுது, பேசுபவரிடம் முரண்பாடு இருப்பது போன்று தோன்றுவது இயல்புதான்.

புதினம் என்பதை பல ஊடகங்களில் ஒன்று என்ற மட்டில் அடக்க முடியாது. செய்திகளைப் படிக்கின்ற புலம்பெயர் வாசகர்கள் மத்தியில் முன்னணியில் உள்ள இணையத் தளம் அது. யாழ் களம் அதற்கு தானியங்கி இணைப்பை வழங்கியுள்ளது இங்கு நினைவுகொள்ளத் தக்கது.

தேசியத்தோடு தொடர்புபடுத்தி பலரால் புதினம் இணையத் தளம் கணிக்கப்படுகிறது.

ஆகவே புதினத்தில் மட்டும்தான் வரவில்லை என்று அலட்சியமாகக் கூறி விட முடியாது.

தமிழ்நெற்றில் வந்த புலிகளின் தாக்குதல் சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகள் மற்றைய இணையத் தளங்களில் உடனடியாக வெளியிடப்படவில்லை.

புதினம் இன்று வரை வெளியிடவில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க முடியும்.

1. தமிழ்நெற் சொல்வது பொய்

(இதை மறுத்து நீங்கள் வைக்கின்ற வாதங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை)

அப்படி உங்கள் வாதத்தினை ஏற்றுக் கொண்டால் அடுத்த கேள்வி வருகின்றது.

தேசியத்தோடு தொடர்புபடுத்தப்படும் முன்னணி ஊடகமான புதினம் ஏன் இந்தச் செய்தியை வெளியிடவில்லை?

இதற்கு பனிப் போர் என்ற இரண்டாவது காரணத்தைத்தான் என்னால் சொல்ல முடியும். உங்களுக்கு வேறு காரணங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்: ஏற்றுக் கொள்வதில் எனக்கு தயக்கம் ஒன்றும் இல்லை.

வவுனிக்குளம சண்டை பற்றி படங்களை தமிழ்நெற் வெளியிடுகிறது. சங்கதியிலும் படம் வருகின்றது. வழக்கமாக படங்களை இணைக்கும் புதினம் செய்தியோடு நின்று விடுகிறது.

வெள்ளாங்குளச சண்டை பற்றிய படங்கள் மற்றைய தமிழ்நெற் உட்பட மற்றைய இணையத் தளங்களில் வருகின்றது. புதினம் வெளியிடவில்லை.

கிழக்கு கிளைமோர் தாக்குதல் தமிழ்நெற்றில் வருகின்றது. புதினத்தில் வரவில்லை.

கிளாலி தாக்குதல்தமிழ்நெற்றில் வருகிறது. புதினத்தில் வரவில்லை.

செய்திகளையோ படங்களையோ தங்களுக்கு முதலில் தந்தால்தான் வெளியிடுவோம் என்ற போக்கில் புதினம் செயற்படுவதாக நான் சந்தேகிக்கின்றேன்.

ஏற்கனவே பரப்புரைப் போரில் நாம் தாழ்ந்து போயுள்ள நிலையில் இப்படியான நிலைப்பாடுகள் எமக்கு மேலும் பாதிப்பை உருவாக்கும் என்று அஞ்சுகின்றேன்.

இந்தக் கருத்தை நீக்குவதை விடுத்து, என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.