Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளாலியில் ஊடுருவித் தாக்குதல் - 21 படையினர் பலி.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குள் ஒரு சந்தேகம்.. ஏன் புதினம் குறித்த செய்திகளை வெளியிடவில்லை என்று.

வவுனிக்குளம் சண்டைக்குரிய பதிவிலும்.. திடீர் என்று முளைத்த நீங்கள்.. புதினத்தில் படம் வரவில்லை என்ற செய்தியைப் பதிந்துவிட்டு.. ஒரு சந்தேகத்தை வாசகர் மத்தியில் கிளப்பிவிட்டு போய்விட்டீர்கள்.

அதை எவரும் பெரிசாக அலட்டிக் கொள்ளவில்லை என்று கண்டதும்.. அதை எப்படியாவது முன்னிலைப்படுத்தி.. உங்கள் சந்தேகத்துக்கு ஒரு பரப்புரை அல்லது உங்களளவில் கண்ட ஒரு விளக்கத்தைச் சொல்லி நீங்கள் உங்களை ஒரு ஊடகவியலாளன் என்று நிறுவ முற்பட்டிருக்கிறீர்கள்.

அதற்குக் கிடைத்தது.. தமிழ்நெட்டும்.. கிழக்கு.. கிளாலித் தாக்குதல்களும்.. பதிவு.. சங்கதி.. புதினம் போன்ற செய்தி இணையத்தளங்களும்.

அண்மையில் விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்டம் அரசியல் பிரிவு தமிழில் விடுத்த அறிக்கையில் 140 வரையான படையினர் கிழக்கின் விடிவுக்குப் பின்னர் அம்பாறையில் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டது. அதை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டன. தமிழ்நெட் வெளியிடவில்லை. அதற்காக தமிழ்நெட் அவ்வறிக்கையை பொய் எங்கிறது என்ற அர்த்தமா..??! :wub:

எந்த முகாந்திரமும் இன்றி.. தமிழ்நெட் வெளியிட்ட செய்தியில் குறைபிடித்தீர்கள்.

பின்னர் அந்த நிலையை மாற்றி சிங்கள அரசுக்கு நிகராக தமிழ்நெட்டும் பொய்பிரச்சாரம் செய்கிறது என்ற உங்கள் சொந்த பார்வையை இலாவகமாக உருவி விட்டீர்கள்.

அது காற்றில் பறந்து வாசகர்களைச் சேர விடாமல் கள உறவுகள் சிலர் செயற்பட்டதும்.. உடனடியாக பல்டி அடித்து.. தமிழ்நெட் செய்தியை பதிவு.. சங்கதி.. புதினம் வெளியிடவில்லை என்று சொல்லி உங்கள் கருத்துக்கு நியாயம் தேட முனைந்தீர்கள்.

அதையும் கள உறவுகள் முறியடிக்கவே..

வேறு வழியின்றி..இறுதியில் புதினம் பற்றிய உங்களின் சந்தேகத்தை செய்தியாக்கி.. தமிழ் தேசியத்தோடு பிசைந்து.. பனிப்போர் என்ற பாத்திரத்தில் இட்டு.. பொங்கல் செய்து வாசகர்களுக்கு படைத்து.. உங்களை சிறந்த ஊடகவியல் படையல் அவியலாளர் என்று இனங்காட்ட முனைந்திருக்கிறீர்கள்.

புதினத்தின் நிலைப்பாட்டுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும். அதைப் பற்றிய உங்கள் கற்பனைக் கருத்துக்கள் அவசியமில்லை.

தமிழ் மக்களின் அவல வாழ்வை தமிழ் நெட் படங்களுடன் வெளிக்கொணர்ந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்தின் பின் தான் புதினம் வெளிக்கொணர்ந்தது.

செய்தி இணையங்கள் ஒன்றை ஒன்று பிரதிபண்ணித்தான் செயற்பட வேண்டும் என்றில்லை. அவை தங்கள் தனித்துவத்துடன்.. தமிழ் தேசியத் தளத்திலின்றும் விலகாமல்.. தமிழ் மக்களை காலத்துக்கு ஏற்ப தயார்ப்படுத்தும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு.. எதிரியின் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய வகையில் அவனின் பிரச்சாரங்களுக்குள் ஒழிந்திருக்கும் நச்சுக்களை இனங்காட்டுவதும் அவசியம்.

கட்டாயம் தமிழ்நெட் போட்டதை எல்லா தமிழ் ஊடகங்களும் போட வேண்டும் என்றால் எதற்கு தனித்தனித் தளங்கள். தமிழ்நெட்டும்.. அதைப் பிரதிபண்ணி செய்தி வெளியிட என்று இன்னொரு இணையம் தமிழிலும் என்றிருந்தால் போதும் தானே.

புதினம்.. தனித்துவமாகச் செயற்படட்டும் அது வரவேற்கத்தக்கதே. ஒரே செய்தியை பல இடத்திலும் பதிவு செய்வதிலும்... அந்த இடத்தில் இன்னொரு புதிய செய்தியைப் பிரசுரித்தல் உபயோகமாக இருக்கும்..!

புதினம்.. தனது செய்தியாளர்கள் மூலம் திரட்டும் படங்களை வெளியிடட்டும். அங்க இங்க பிரதிபண்ணி எவ்வளவு காலத்துக்குத்தான் போட்டுக் கொண்டிருப்பது. ஏன் புதினம்.. தனித்துவமாக இயங்க முனைவதாக இதைக் கொள்ளாமல்.. தமிழ் தேசியக் கட்சிக்குள் பிளவு என்று சிங்கள அரசு கதைகட்டுவது போல.. தமிழ் ஊடகங்கள் மத்தியில் புலிகளின் செய்திகளை வெளியிடுவதில் பிளவு.. ஊடகங்கள் புலிகளின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டன போன்ற தவறான தோற்றப்பாடுகளை அரச பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ள வேளையில் ஏற்படுத்துவது.. சபேசனின் ஊடகவியல் செயற்பாடுகள் குறித்து சந்தேகத்தையே உண்டு பண்ணுகிறது..!

அண்மையில் ஒரு பேப்பரிலும் இவரது பந்திகளை வாசித்ததில்... அடிக்கடி.. வீட்டுக்கொருவரைக் கொடுத்துவிட்டு வன்னி மக்கள் வெற்றிக்காகக் காத்திருக்கின்றனர் என்ற பதம் மீள மீள பாவிக்கப்பட்டு வருவதைக் காணலாம். இது மிகவும் ஆபத்தான ஒரு பிரச்சாரமாகும்.

வன்னி மக்கள் வீட்டுக்கு ஒருவரைக் கொடுத்தது உண்மையாக இருந்தாலும் கூட அதை எதிரிக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் ஊட்டி ஊட்டி சொல்லிக் கொண்டிருப்பதால்.. அந்த மக்களின் எதிர்காலம்.. செம்மணி போன்று குழிகளிலேயே முடிவடையக் கூடிய ஆபத்தை அதிகரிக்கவே செய்கிறீர்கள். அதுமட்டுமன்றி அந்த மக்களை ஒட்டுமொத்தமாகப் புலிகள் என்று தாக்கி அழிக்கவும் அது காரணம் கற்பிக்கலாம்.!

இவருக்கு ஏன் இந்தத் தேவையில்லாத உத்தியோகம்..! தமிழ் தேசிய ஆதரவு என்ற போர்வையில்.. இவர்கள் செய்வது... தமிழ் தேசிய ஆதரவு செயற்பாடா என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்று வருகிறது. :)

Edited by nedukkalapoovan

  • Replies 72
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதில் நெடுக்ஸ். இந்தப் பிரச்சனைக்களுக்குள்ளும், இப்படி சும்மா சந்தேகங்களைக் கிளப்பி மக்களைக் குழப்புவர்களைத் தான் நடுரோட்டில் வைத்து அடிக்க வேண்டும். ஆரம்பத்தில் தமிழ்நெற்றைச் சந்தேகப்பட்டார். இப்போது தான் சொன்னதை நியாயப்படுத்தப் புதினத்தைச் சந்தேகப்படுகின்றார். ஆக, தன்னில் எப்போதுமே நியாயம், மற்றவர்கள் தான் பிழை என்ற மனநோய் இது.

இந்த மனநோய்க்குப் பதில் எழுதுவதை விடுத்து, அக்கருத்துக்களை நீக்குவதே நம் ஊடகங்கள் பற்றிய குழப்பவாதிகளை அகற்ற உதவும். இவருக்குச் சந்தேகம் என்பதற்காக, எல்லோரும் வேலையை விட்டுப் பதிலளிக்கவும் முடியாது.

சபேசன் உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை ஒரு ஊடகத்தின் மீது காட்டும் அதி சிறந்த ஊடகவியலாளர் என உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது படுகிறது. உங்கள் தமிழ் நெட் மீதான கடுப்பு தமிழ் புதுவருடம் தொடர்பான சர்ச்சையில் தொடங்கிவிட்டதென நினைக்கிறேன். :) இங்கு நான் எந்த ஊடகத்துக்கும் / செய்தி இணைய தளத்துக்கும் வக்காளத்து வாங்கவில்லை. ஆனால் ஒரு ஊடகத்தை தகுந்த ஆதாரமின்றி அதன் நம்பகத்தன்மை மீது கேள்வியெழுப்பும் தகுதி / தார்மிக்க உரிமை / நேர்மையான பார்வை உங்களுக்கு இருக்கும் என நான் கருதவில்லை. :wub:

சில காலங்களுக்கு முன்னர் புலிகள் கிளாலி முன்னரங்க பகுதி மற்றும் தீவு பகுதிகளில் தாக்குதல்கள் நடாத்தினர். அந்த சண்டை 2- 3 நாட்கள் நடந்தது. அப்போது கொடிகாமம் பிடிபட்டது, வரணி பிடிபட்டது, நுணாவில் வரை போய் விடுவார்கள் என்ற பாணியில் வதந்திகளாக செய்திகள் பல வந்தான. உங்கள் செய்தி தளத்திலும் அப்படி ஒரு செய்தியை இட்டு யாழ் களத்திலும் இணைத்திருந்தீர்கள். அந்த செய்தியை நீங்கள் இணைத்த நேரம் நான் யாழ் குடாநாட்டில் அதுகும் சாவகச்சேரி பகுதியில் இருக்கும் எனது குடும்பத்துடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கதைத்திருந்தேன். அதை ஆதாரமாக வைத்து உங்கள் செய்தியை நான் மறுத்து எழுதியபோது நீங்கள் சொன்ன மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்ற ஒரு நிறுவலை பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என தெரியாமல் விட்டுவிட்டேன்.

நீங்கள் எழுதியதின் சாரம் 2- 3 நாட்களாக கடும் சண்டை நடைபெறுகிறது அப்படியான சண்டையில் மிருசுவில்/ கொடிகாமம்/ வரணி ( மூன்றில் ஏதோ ஒரு இடம்) வரை புலிகள் முன்னேறியிருக்கமாட்டார்களா, என்று சாரப்பட நிறுவலை செய்திருந்தீர்கள்.

மீண்டும் நான் உங்கள் கருத்தை மறுத்து எழுதியிருந்தாலும் நீங்கள் இன்னும் இன்னும் உங்கள் தவறை மறைக்க சுற்றி வளைத்து பூசி மெழுகியிருப்பீர்கள் என்று தெரிந்ததாலும், எனக்கு உங்களோடு வீண் வாதம் செய்ய போதுமான நேரம் இல்லாததாலும் விட்டுவிட்டேன்.

இப்போது நீங்கள் தமிழ் நெட் மக்களை மகிழ்ச்சியில் வைத்திருக்க எழுதுவதாக சொல்வது வேடிக்கை.

ஊரில் சொல்லுவர்கள் வெலியில் இருந்த ஓணானின் கூனை பார்த்து தெருவில் போன ஒட்டகம் சொல்லிச்சாம் உன்னுடைய முதுகிலை ஒரு கூன் இருக்கெண்டு. ஒட்டகத்துக்கு தன்னுடைய முதுக்கில் இருக்கும் பெரும் கூன் அப்போது நினைவிலேயே வரவில்லை. :lol:

அதற்காக தமிழ் நெட் செய்தியை பிழையாக வெளியிட்டது என்று நான் ஒத்து கொன்டு தான் இந்த கூன் கதையை சொல்கிறேன் என்று மறு வழமாக வராதீர்கள். நான் புதினம், பதிவு சங்கதி போன்றவற்றின் செய்திகளை ஒரு போதும் வாசிப்பதும் இல்லை. அவற்றில் எனக்கு நம்பகத்தன்மை போய் பல காலம் ஆகிவிட்டது. ஆன படியால் தமிழ் நெட்டில் வந்த செய்தி ஏன் மேலே சொன்ன தமிழ் செய்தி இணையதளங்களில் வரவில்லை எனும் ஆராய்ச்சிக்கு நான் போகவில்லை. இனியும் போய் ஆராய்ச்சி செய்ய மாட்டேன்.

நீங்கள் சில காலம் முன் புலம் பெயர்ந்த மக்களை குதுகலத்தில் வைத்திருக்க எழுதிய அந்த தலைப்பை தேடி எடுத்து ஆதாரமாக தரமுடியும் ஆனால் இப்போது எனக்கு நேரமில்லை. மீண்டும் உங்களுடன் வீண் விவாதம் செய்யவும் எனக்கு விருப்பமில்லை.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளக்காட்டான். நீங்கள் எந்தத் தலைப்பில் சபேசன் அப்படிக் கட்டுரை எழுதினவர் என்று சொல்ல முடியுமா? இப்படியான மனநோய்களு;ககு மருந்து, உங்களைப் போன்ற பழையவர்கள் பதிலளிப்பது தான்.

அனேகமாக இத்தனையாவது பக்கத்தில் கிடக்கக்கூடும்.

http://www.yarl.com/forum3/index.php?showf...ll&st=14700

குளக்காட்டான்,

உங்களுடைய ஞாபக சக்திக்கு பாராட்டுகள். அன்றைக்கு எனக்கு வந்த செய்தியைப் போட்டிருந்தேன். சண்டைகள் நடக்கின்ற போது, நிறைய முரண்பாடான செய்திகள் வந்தன என்பது உண்மை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுத்தம் ஆரம்பித்த பொழுது அது பற்றிய பல செய்திகளும், கணிப்புகளும் பலரைப் போன்று எனக்கும் தவறாகிப் போனது பற்றிய வருத்தம் எனக்கு நிறையவே உண்டு.

அனுபவப்பட்ட அளவில் ஒரு செய்தித் தளம் செயற்படுவதில் உள்ள பிரச்சனை எனக்கு நன்கு தெரியும். யாரையும் குறை சொல்வது என்னுடைய நோக்கம் அல்ல.

எமது ஊடகங்களில் நிலவும் குழப்பம் பற்றி சில செய்திகளை வெளிப்படையாக இங்கு பேச முடியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற கோபம்தான் எனக்கு உண்டு. வேறு ஒன்றும் இல்லை.

கிளாலித் தாக்குதலும், கிழக்குத் தாக்குதலும் மிக மிக முக்கியமான செய்திகள். குஞ்சுக்குளத்தில் பத்துப் படையினர் இறந்தார்கள் என்பதை விட இவைகள் முக்கியமான செய்திகள்.

ஒரு செய்தித் தளம் முக்கியமான இரண்டு செய்திகளை வெளியிடாது இருப்பதன் காரணத்திற்கு எந்தச் சப்பைக் கட்டும் யாரும் கட்டத் தேவையில்லை.

ஒரு காலத்தில் வீரகேசரிக்கு ஒரு மதிப்பு இருந்தது. அதில் ஒரு செய்தி வெளிவராவிட்டால், அந்தச் செய்தி பொய் என்று நம்புகின்ற பலர் இருந்தார்கள். தலைப்புச் செய்தி போட்டால்அது உண்மையாக இருக்கும் என்று நம்பினார்கள்.

புதினத்திற்கும் அப்படியான ஒரு மதிப்பு புலம்பெயர்ந்து வாழும் பலரிடம் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். தாக்குதல் செய்தி வந்தவுடன் புதினத்தில் வந்து விட்டதா என்று கேட்கின்ற பலரை நான் கண்டிருக்கிறேன்.

தமிழ் மட்டும் வாசிக்கத் தெரிந்து, புதினத்தை முக்கியமாக வாசிக்கும் அந்த அப்பாவிகள் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கும் என்று நம்பவில்லை.

ஆள் ஆளுக்குப் பழைய கறள்களை வைத்துக் கொண்டு துரோகிப் பட்டங்களைக் கட்டுவது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.இவ்வாறான கருத்தாடல்கள் தேசிய விடுதலைப் போராட்டதிற்காக எல்லோரையும் ஒன்றாக அணிதிரட்டாமால் பிரிவினைகளையே உண்டு பண்ணும்.கடவுள் ,பகுத்தறிவு,புது வருசம் என வேறு விடயங்களை இந்தக் கருத்தாடலுடன் கொண்டு வந்து இணைப்பதைத் தவிர்க்கவும்.

சபேசனுக்கு யாழ்க் களத்தில தேசிய ஊடகம் என்று சொல்லப்படுகின்ற ,புலத் தமிழர்கள் கருதுகின்ற ஒரு ஊடகத்தில் முக்கியமான செய்தி ஒன்று ஏன் வரவில்லை என்று கேட்கும் அடிப்படை உரிமை இருக்கிறது.புதினத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் அதற்கான தகுந்த காரணத்தை முன் வைக்கலாம்.

அப்படி முன் வைக்காவிட்டால் பல் வேறு வகையானா யூகங்கள் வதந்திகள் தான் முளை விடும்.

தமிழ்த் தேசிய நலன்களை விட முக்கியமானது வேறு எதுவும் கிடையாது.மக்களுக்கான ஊடகங்கள் மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தான் வேண்டும்.அது தான் ஜன நாயகமானது.விமர்சனக்களை எதிர் கொள்ளத் தான் வேண்டும்.

இன்றிருக்கும் கள யதார்ததின் படி களத்தில் இருந்து செய்திகள் வருவதில் இடையூறுகள் இருக்கலாம்.என்றும் இல்லாதவாறு ஊடகங்கள் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக செயற்பட வேண்டிய காலகட்டம்.குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பல பேர் தருணம் பார்த்துக் கொண்டிருகிறார்கள்.

களத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை அங்கு இருப்பவர்கள் தான் தீர்மானிக்க முடியும்.அதுவரை பொறுமையாக் இருக்கவும்.இவர் அன்று அப்படிச் சொன்னார் இப்படி எழுதினார் என்பெதெல்லாம் தேவையற்ற விடயங்கள்.புலத்தில் இருந்து எழுதுபவர்களுக்கோ அல்லது ஏன் களத்தில் நிற்பவர்களுக்கோ அடுத்த என்ன எங்கு நடைபெறப்போகிறது என்பது தெரியாது என்பதே யதார்த்தம்.

எமக்குத் தெரிந்தால் அது எதிரிக்குத் தெரியும் எதிரிக்குத் தெரிந்தால் அதனால் எழும் விழைவுகள் எங்களது போராட்டகுக்கே ஆபத்தானதாக முடியும்.இதனைக் கருத்தில் கொண்டு எமக்கான கடமை என்ன புலத்தில் நாங்கள் என்ன செய்ய வேடும் என்பதைக் கருத்தில் எடுத்து,அதற்கு அமைவாக எங்கள் நேரத்தையும் செய்கைகளையும் வடிவமைத்துக் கொள்வதே இப்போது நாங்கள் செய்ய வேண்டியது.

குறுகிய சிந்தனைகள் கருத்தாடல்களில் இருந்து விலகி பரந்து பட்டுச் சிந்திப்போம் ஒன்று பட்டுச் செயற்படுவோம்.

ஆள் ஆளுக்குப் பழைய கறள்களை வைத்துக் கொண்டு துரோகிப் பட்டங்களைக் கட்டுவது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.இவ்வாறான கருத்தாடல்கள் தேசிய விடுதலைப் போராட்டதிற்காக எல்லோரையும் ஒன்றாக அணிதிரட்டாமால் பிரிவினைகளையே உண்டு பண்ணும்.கடவுள் ,பகுத்தறிவு,புது வருசம் என வேறு விடயங்களை இந்தக் கருத்தாடலுடன் கொண்டு வந்து இணைப்பதைத் தவிர்க்கவும்.

சபேசனுக்கு யாழ்க் களத்தில தேசிய ஊடகம் என்று சொல்லப்படுகின்ற ,புலத் தமிழர்கள் கருதுகின்ற ஒரு ஊடகத்தில் முக்கியமான செய்தி ஒன்று ஏன் வரவில்லை என்று கேட்கும் அடிப்படை உரிமை இருக்கிறது.புதினத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் அதற்கான தகுந்த காரணத்தை முன் வைக்கலாம்.

அப்படி முன் வைக்காவிட்டால் பல் வேறு வகையானா யூகங்கள் வதந்திகள் தான் முளை விடும்.

தமிழ்த் தேசிய நலன்களை விட முக்கியமானது வேறு எதுவும் கிடையாது.மக்களுக்கான ஊடகங்கள் மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தான் வேண்டும்.அது தான் ஜன நாயகமானது.விமர்சனக்களை எதிர் கொள்ளத் தான் வேண்டும்.

இன்றிருக்கும் கள யதார்ததின் படி களத்தில் இருந்து செய்திகள் வருவதில் இடையூறுகள் இருக்கலாம்.என்றும் இல்லாதவாறு ஊடகங்கள் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக செயற்பட வேண்டிய காலகட்டம்.குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பல பேர் தருணம் பார்த்துக் கொண்டிருகிறார்கள்.

களத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை அங்கு இருப்பவர்கள் தான் தீர்மானிக்க முடியும்.அதுவரை பொறுமையாக் இருக்கவும்.இவர் அன்று அப்படிச் சொன்னார் இப்படி எழுதினார் என்பெதெல்லாம் தேவையற்ற விடயங்கள்.புலத்தில் இருந்து எழுதுபவர்களுக்கோ அல்லது ஏன் களத்தில் நிற்பவர்களுக்கோ அடுத்த என்ன எங்கு நடைபெறப்போகிறது என்பது தெரியாது என்பதே யதார்த்தம்.

எமக்குத் தெரிந்தால் அது எதிரிக்குத் தெரியும் எதிரிக்குத் தெரிந்தால் அதனால் எழும் விழைவுகள் எங்களது போராட்டகுக்கே ஆபத்தானதாக முடியும்.இதனைக் கருத்தில் கொண்டு எமக்கான கடமை என்ன புலத்தில் நாங்கள் என்ன செய்ய வேடும் என்பதைக் கருத்தில் எடுத்து,அதற்கு அமைவாக எங்கள் நேரத்தையும் செய்கைகளையும் வடிவமைத்துக் கொள்வதே இப்போது நாங்கள் செய்ய வேண்டியது.

குறுகிய சிந்தனைகள் கருத்தாடல்களில் இருந்து விலகி பரந்து பட்டுச் சிந்திப்போம் ஒன்று பட்டுச் செயற்படுவோம்.

இங்கு யாரும் சந்தர்ப்ப வாதத்தில் கருத்து எழுதவில்லை. சந்தர்ப்பம் பார்த்து அனைவராலும் மதிக்கப்படும், பெரும்பாலும் சர்வதேச ஊடகங்களாலும் மேற்கோள் காட்டப்படும் தமிழ்நெட்டெஇன் மீது குட்டையை குழப்ப வெளிக்கிட்ட/ சேறு பூச வெளிக்கிட்ட ஒருவரின் பின் புலத்தை சொல்லவே மேலே சொன்ன கருத்து சொல்லப்பட்டது. மற்றும்படி யாரும் நீங்கள் சொன்ன விடயங்களில் இந்த பகுதியில் தொங்கி கொண்டிருக்கப்போவதில்லை. சாதாரணமாக ஒரு கருத்தாளனுக்கு நிலமையின் தாற்பரியம் எந்த நேரத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிந்தே இருக்கும்.

குறுகிய நோக்கம் பரந்த நோக்கம் என இந்த தலைப்பில் இப்போது கதையளக்கும் நீங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42995

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43024

குறிப்பிட்ட இந்த தலைப்பில் இருக்கும் சில கருத்துக்கள் எப்படி எல்லோரையும் இந்த தருணத்தில் ஒன்றிணைக்க உதவும் என்று உங்கள் பரந்த தொலை நோக்கு பார்வை கொண்டு விளக்கம் தரலாமே.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் அருமையாகச் சொன்னீர்கள். இதே கேள்வியை உங்களிடம் கேட்கின்றோம். புதினத்தில் செய்தி வரவில்லை என்றால் புதினத்திடம் கேட்கலாம். அல்லது தமிழ்நெற்றிடம் நேரடியாகக் கேட்கலாம். அதைத் தவிர்த்து விட்டு, இங்கே அவ்வூடங்களைச் சந்தேகப்படும்படி வைக்கின்ற விதத்தில் இங்கே அறிவீனமாக ஏழுதுகின்ற சபேசனை ஏன் தட்டிக் கேட்க முடியவில்லை.

சபேசனுக்கு யாரும் துரோகிப்பட்டம் சூட்டவில்லை. அவர் செய்கின்ற இப்பிழையான வேலைக்காகத் தான் எல்லோரும் குற்றம் சாட்டுகின்றார்கள். பழைய கறளுக்காகத் தான் இவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் என்றால், நீங்கள் ஆதரிப்பது எதற்காக? அவர் என்ன உங்களு;ககுச் சோப்புப் போட்டாரா?

கிளாலியிலும், கிழக்கிலும் சாகின்ற இராணுவம் தான் உண்மையானவர்களா? அது மட்டும் எப்படி முக்கியத்துவமாகும்?அவரைப் பொறுத்தவரைக்கும், முதலில் தமிழ்நெற்றை வசைபாடினார். ஆனால் அதே காலத்தில் பதிவிலும், சங்கதியிலும் வந்த செய்திகளை அவர் பார்க்கவில்லை. இப்போது தன்னில் பிழை இல்லாதமாதிரி புதினத்தை வசைபாட ஆரம்பித்துவிட்டார். இதுவரைக்கும் தன் பிழையை ஒப்புக்கொள்ளுகின்ற மனப்பக்குவம் அவர் வரவில்லை.

கிழக்குத் தொடர்பாக, தமிழ்நெற் வெளியிட்ட தகவல் பொய்யானது எனக் குற்றம் சாட்டினார். அதைச் சந்தேகத்துக்குரியதாக்கினார

நாடு பற்றிய எவ்வளவோ பிரச்சனைகள் உண்டு. அது எல்லர்ம தவிர்த்து விட்டு இது தேவையா?

அதை இப்படி சொல்ல வேணும்...

"நாடு இருக்கிற இருப்பிலை நரி உழுந்து வடை கேட்டிச்சாம்"...

நண்பர்களே!

ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். தமிழ்நெற் 20 படையினர் பலி என்று செய்தி போட்டால், அந்த இழப்பை இன்னும் அதிகப்படுத்தி எழுத முடியாதா என்று அங்கலாய்க்கும் சாதரண பத்தி எழுத்தாளர் நான்.

கிழக்கை படையினர் கைப்பற்றிய போது, அங்கிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்ற முடியாது என்று நான் எழுதிய கட்டுரைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் முக்கிய செய்தி ஒன்றை தமிழ்நெற் தருகின்ற பொழுது, அதை பொய் என்று சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏன் வருகிறது?

சில விடயங்களை நீங்கள் கவனமாகப் பார்க்க வேண்டும்.

ஊடகங்களில் பல விதமான ஊடகங்கள் இருக்கின்றன. சில ஊடகங்கள் நேர்மையானவை. ஆள்பவர்கள் செய்திகளை தந்தாலும், அதில் உண்மைத்தன்மை இல்லை என்று அந்த ஊடகத்திற்குப் பட்டால், அந்தச் செய்தியை புறக்கணித்து விடுவார்கள்.

அரசுகள் தமது செல்வாக்குக்கு உட்பட்ட ஊடகங்களில் தமக்கு சாதகமான செய்திகளை இடம்பெறச் செய்வார்கள். விடுதலை இயக்கங்களும் அப்படிச் செய்யும். அப்படியே இரு தரப்பும் தமக்குப் பாதகமான செய்திகள் வெளிவராமலும் பார்த்துக் கொள்வார்கள்.

சில ஊடகங்கள் உண்மை என்பது எதுவாக இருந்தாலும்அதை வெளியிடும்.

சில ஊடகங்கள் உண்மையை எழுதுகின்ற அதே நேரம் பாதகமான சில உண்மைகளை மறைத்து விடுவார்கள்

சில ஊடகங்கள் உண்மையை மறைத்தாலும், பொய்யான செய்தியை வெளியிட மாட்டார்கள்.

சில ஊடகங்கள் உண்மையையும் மறைப்பார்கள், பொய்யையும் எழுதுவார்கள் (உம்: ஒட்டுக்குழுக்களின் ஊடகங்கள்)

இரண்டு தாக்குதல் பற்றிய செய்தியும் எமக்கு பாதகம் அல்ல. முக்கியத்துவம் வாய்ந்தவை. கிழக்கை படையினர் வல்வளைப்பு செய்த பின்னர் நடந்த முதலாவது பெரும் தாக்குதல் ஒன்று. யாழ் குடாவின் முன்னரங்குகளில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் மற்றது. இவைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு.

இது பற்றி எமது முக்கிய ஊடகங்களில் ஒன்றான புதினம்" செய்தி எதையும் வெளியிடவில்லை என்பது அலட்சியப்படுத்தக் கூடிய விடயம் அன்று.

புதினம் செய்தியை வெளியிடாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

1. செய்தி பொய். படைத் தரப்பின் ஊடகங்களை போன்று சிங்களவர்களை இலக்கு வைத்து வெளியிடப்படும் உளவியில் சார்ந்த செய்திகள் அவைகள்.

அந்த வகையில் இந்தச் செய்தி தமிழர்களுக்கு தேவையில்லாதது. ஆகவே இந்தச் செய்தியை வெளியிடுவதற்கு புதினம் ஆர்வம் காட்டவில்லை. புலிகளின் குரலிலும், ததேதொவிலும் வந்த செய்தியை நான் கவனிக்கத் தவறியிருந்ததால், இது போன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது உண்மை. ஆனால் நீங்கள் எல்லோரும் பல வாதங்களை வைத்தும், மற்றை ஊடகங்களின் இணைப்பையும் தந்து என்டைய எண்ணம் தவறானது என்று ஆணித்தரமாக வாதிட்டுள்ளீர்கள். என்னுடைய கருத்து தவறாக இருக்கக் கூடும் என்ற சிந்தனை எனக்கும் ஏற்படுகின்றது. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள்.

ஆனால் இரண்டாவதாக ஒரு காரணம் இருக்கிறது.

அதுதான் ஊடகங்களுக்கிடையிலான ஈகோ பிரச்சனை. பொய்யான செய்தியை வெளியிடுவதை விட இது ஆபத்தானது.

தாக்குதல் செய்தி உண்மை என்றால், அப்படி ஒரு முக்கியமான செய்திகளை வெளியிடாது விட்டதற்கு, இந்த ஈகோ பிரச்சனையை தவிர வேறு காரணம் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை தருவார்கள் என்பதால்தான் யாழ் களத்திலும் புதினத்திற்கு தானியங்கி இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் இங்கே அந்த ஊடகம் பற்றி விவாதிப்பது பொருத்தமானதே.

"தேசியத்தை விமர்சிப்பது இல்லை" என்பதை, "தேசியத்திற்கு ஆதரவான எதையுமே விமர்சனத்திற்கு உட்படுத்த முடியாது" என்று நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈகோப் பிரச்சனை எ;னபதை விட, தான் நினைத்தது மட்மே, தனக்குக் கேட்டது மட்டுமே உண்மை என்று நினைப்பது மிகவும் ஆபத்தானது.

எல்லாம் தெரிந்து கொண்டு, தேசியத்துக்கு ஆதரவான விடயங்களை விமர்சிக்கின்றதை விட, எதுவுமே தெரியாமல்தேசியத்தை விமர்சிக்கின்றவர்கள் தான் எம் உறவுகளால் இங்கு பதிலளிக்கப்டுகின்றார்கள்.

புதினம் தவறவிட்டமைக்கு ஈகோ என்று கடைசியாகத் தன் தாக்குதலைச் செய்கின்றார். எல்லா ஊடகங்களும் எல்லாவற்றையும் தாங்க வேண்டிய தேவையில்லை. புதினம் வியாபாரரீதியற்ற ஒரு ஊடகம். அதற்கு அங்கே ஈகோ, போட்டி எதுவுமே வரவேண்டிய தேவையில்லை.

தன்னை நியாயப்படுத்துவதற்காக பொதுவானவற்றைக் குறைகூறாதீர்கள் சபேசன். இன்று வரைக்கும்நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டதைப் பிழையாகத் தாங்கள் ஏற்கவே இல்லை. நான் பார்க்கவில்லை. அதனால் என்னில் தவறில்லை என்றவாறு நியாயப்படுத்திக் கொள்கின்றீர்கள்.

சில வருடங்களுக்கு முன் துரோக ஊடகத்தில் கிணற்றில் புலி விழுந்தாலும் வீரச்சாவு என்று அதைத் தாக்கி எழுதியிருந்தார்கள். ஆனால் எந்தவொரு நிலையிலும் யுத்தகளம் சம்பந்தப்படாத மரணங்களை வீரச்சாவு என்று போட்டதே இல்லை. அது எந்தப் பெரிய தளபதிகளாகட்டும்.

இப்படிப்பட்ட அறியாமைகளுக்குப் பதிலளிக்கின்ற நிலையில் எவருமே இல்லை.

தமிழ்நெற் 1997 ஆரம்பித்த பொழுதோ அல்லது 3ஆம் ஈழப்போரின் உச்சத்தில் இருந்த நிலமை வேறு தற்போதைய நிலமை வேறு. மனித அவலம் போரின் உக்கிரம் என்பவை ஒப்பிடக் கூடிய நிலையில் இருந்தாலும் ஊடகத்தளத்தில் நிலமை வேறு.

அதேபோல் சமாதான காலத்து நிலமை கூட தற்பொழுது இல்லை. கடந்த 2...3 வருடங்களில் பல விடையங்கள் வேகமாக மாறிவிட்டது. புதினம் சங்கதி பதிவு என எல்லாருமே அவர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்த நிலமைகளிற்கு ஏற்ப வரவேற்புகளிற்கு ஏற்ப இயங்க முயற்சித்தார்கள். இன்று அதில் மாற்றம் கொண்டு வரவேண்டிய தேவை இருக்கு என்பதை உணரும் நிலைக்கு வந்திருக்கிறார்கள் அல்லது விரைவில் வருவார்கள்.

தமிழ்நெற் உட்பட அனைத்து ஊடகங்களும் மாற்றமைடைந்துள்ள சூழலில் தேவையை பணியை அறிந்து ஊடக தளத்தில் தமது இடத்தை இனங்காண்பது அவசியமாகிறது. இன்றைய தாயகத்து போர் சூழல் அதை விரைவு படுத்துகிறது. மேலும் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

வடக்கில் படையினர் நில ஆக்கிரமிப்பை செய்தபடி முன்னேறி வருகின்றனர். இது பற்றி பல தமிழர்களிடம் அச்சம் நிலவுவது உண்மை. விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்களோ என்ற இந்தத் தமிழர்கள் உண்மையாகவே சந்தேகப்படுகிறார்கள்.

சிறிலங்காப் படையினர் கிழக்கை கைப்பற்றியது இதற்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் கிழக்கில் நடத்துகின்ற தாக்குதல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வடக்கில் சிறிலங்காப் படையினர் அனைத்து இடங்களிற்கு வந்தாலும் கூட எங்கள் போராட்டம் தொய்வின்றி தொடரும் என்பதற்கு கிழக்கு மண்ணே சாட்சி. வடக்கில் நடக்கின்ற ஒரு தாக்குதலை விட, கிழக்கில் நடக்கின்ற ஒரு மோதலுக்கு முக்கியத்துவம் உண்டு.

அம்பாறையின் காஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் மறைந்திருக்கும் சில விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதாக சிறிலங்கா அரசு சொல்லிக் கொண்டிருக்க, விடுதலைப் புலிகள் மட்டக்களப்பிலும் தமது தாக்குதல்களை விரிவுபடுத்தி வருகிறார்கள்.

இதன் உச்சக்கட்டமாக மட்டக்களப்பில் ஒரு பாரிய கிளைமோர் தாக்குதல் நடக்கின்றது. 23 படையினர் பலியாகின்றனர். அதுவும் மட்டக்களிப்பில் விடுதலைப் புலிகளின் கோட்டையாக இருந்த குடும்பிமலைக்கு அருகில் நடக்கின்றது.

எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகள் மக்களுக்கு "நாம் வந்து விட்டோம்" என்று அறிக்கை கொடுத்து விட்டு அடிக்கிறார்கள்.

இப்படி ஒரு செய்தியை ஒரு செய்தி ஊடகம் வெளியிட வேண்டிய தேவையில்லை என்று நீங்கள் உண்மையிலேயே கருதுகிறீர்களா?

ஆம் "நாம் வந்துவிட்டோம்" எண்டு எந்த மக்களை நோக்கி அறிக்கை விட்டார்களோ அவர்களுக்கு தெரிந்தால் போதும் தானே?

அது என்ன புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்களோ எண்டு டமில் மக்கல் உண்மையாகவே சந்தேகப்படுகிறார்கள் என்றியள்? புலிகள் என்ன புராண இதிகாசங்களில வாறை அவதாரம் பெற்ற குழுவே?

புலிகள் பலவீனம் அடைய முடியாதே? பலமாக இருக்கினம் இந்தா... இந்தா... எண்டு கொண்டு எப்பவும் தாளம் போட்டால் தான் புலம்பெயர்ந்த டமில் மக்கலுக்கு டமிலீலம் வேணும் இல்லாட்டி ஏதோ ஒரு தீர்வு வந்தா காணும் எண்டு சிங்களவனுக்கு பின்னாலை ஓடிவிடுவினமே?

உந்த வட்டத்துக்கை இருந்து கொண்டால் எப்படி தேவை அறிந்து மக்கள் இயங்க முடியும்? மக்களுக்கே தேவை தெரியாட்டி வேறையாரையோ நம்பியே போராட்டம் நடக்குது? இல்லாட்டி டமிலீலத்தை யாகம் செய்து மாயஜாலத்தில வெண்டா பிறகு எங்கடை டமில் மக்கலை உந்த வட்டத்துக்காலை கொண்டு வரலாம் அதுவரை டேசியத்துக்கு ஆதரவாக எண்டு பூசி மெழுகி எழுதிக் கொண்டு இருப்பமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயயாலம், ம்நதிரீக்ம, யாகம் செய்து எதிரியைக் கலைக்கலாம் என நம்புகின்றவைக்கு ஒன்று புரிய வேண்டும். அக்காலத்திலும் பக்தி முத்திப் போனாலும் எல்லா அரசர்மாரும் சண்டைக்குப் போய்த் தான் வென்றவை. இராசஇராச சோழன் கூடக் கோவில்கட்டினாலும் சண்டைக்குப் போய்த் தான் வென்றான்.

எனவே கடவுளைக் கும்பிட்டால் நாடு கிடைக்காது என்பதை உணரவேண்டும்

அதிகமான இணையத்தளங்களில் "தொடர்புகளுக்கு" என்று போட்டு இருக்கின்றார்கள் தானே ஏதும் சந்தேகம் என்றால் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.அதிகமான தமிழ் மக்கள் பார்க்கும் யாழ்களத்தில் இந்த ஊடகங்களை பற்றி விமர்சிப்பது நல்லதல்ல நாகரிகமும் அல்ல...

Edited by THEEPAN0007

இதோட இனிக்கானும் நிப்பாட்டுங்கோ. எங்களுக்கு தமிழ் நெற்றும் வேணும், புதினமும் வேணும், வெப்பீளமும் வேணும்.

சபேசன்

கிளாலி மற்றும் மட்டக்களப்புத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களைத் தனது தொடர்பு மூலம் தமிழ்நெட் பெற்றுக் கொண்டு வெளியிட்டது. தமிழ்நெட்டின் செய்தியே மூலமாகக் கொண்டு பின்னர் மற்ற ஊடகங்களில் வெளிவந்தன.

புலிகள் குறித்த சம்பவங்கள் தொடர்பில் அமைதி காப்பதனாலும் தமிழ்நெட் மேற்கோள் காட்டிய வட்டாரங்களைத் தொடர்பு கொண்டு தன்னால் குறித்த செய்தியை உறுதிப்படுத்த முடியததனாலும் புதினம் அதனைத் தவிர்த்திருக்கலாம் என்றே நாம் நினைக்கிறோம். (உறுதிப்படுத்தப்பட்ட செய்தியைத்தான் வெளியிடவேண்டுமென்ற நோக்கத்திற்காக புதினம் அவ்வாறு செய்திருந்தால் அது வரவேற்கப்படவேண்டியதே).

குறித்த செய்தியை புதினம் வெளியிடவில்லை என்பதற்காக தமிழநெட் சிங்கள மக்களை நோக்கிப் பரப்புரை செய்யுது. தமிழ் இணையத் தளங்களிற்கு ஈகோ பிரச்சினையென்று எதிர்மறையாக ஊகிக்க முடிந்த உங்களால் ஏன் நான் மேலே சொன்ன வகையில் ஊகிக்க முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் குறித்த சம்பவங்கள் தொடர்பில் அமைதி காப்பதனாலும் தமிழ்நெட் மேற்கோள் காட்டிய வட்டாரங்களைத் தொடர்பு கொண்டு தன்னால் குறித்த செய்தியை உறுதிப்படுத்த முடியததனாலும் புதினம் அதனைத் தவிர்த்திருக்கலாம் என்றே நாம் நினைக்கிறோம். (உறுதிப்படுத்தப்பட்ட செய்தியைத்தான் வெளியிடவேண்டுமென்ற நோக்கத்திற்காக புதினம் அவ்வாறு செய்திருந்தால் அது வரவேற்கப்படவேண்டியதே).

ஆம் புதினம் எப்பொழுதும் செய்தி உறுதிப்படுத்தியபின்பே வெளியிடுகிறது. இதனால் சில செய்திகள் மற்றைய ஊடகங்களில் வந்தாலும் உடனே புதினத்தில் வருவதில்லை.

கந்தப்பு, மின்னல்,

நான் காட்டமாகச் சொன்னதை நீங்கள் மென்மையாகச் சொல்லியிருக்கிறீர்கள். கொழும்பின் ஆங்கில ஊடகங்கள் பரப்புகின்ற உண்மையற்ற பல செய்திகளை தலையங்கமாக்கத் தெரிந்த ஒரு ஊடகம், புலிகளின் குரல், ததேதொ போன்றவையும் கூறிய ஒரு செய்தியை உறுதிப்படுத்திய பின்புதான் வெளியிடுமா?

"லக்பிம" தெரிவித்துள்ளது என்ற எழுத முடிபவர்களால், "தமிழ்நெற்" தெரிவித்துள்ளது என்று எழுத முடியாதா?

தமிழ் தேசியத்திற்கு ஆதரவான அனைத்து ஊடகங்களும் எம்முடையவை என்ற உங்களுடைய நல்ல எண்ணத்தை நான் புரிந்து கொள்கிறேன். அந்த உணர்வை மதிக்கின்றேன்.

"எம்முடையவை" என்ற உணர்வுடன் நானும் பல விடயங்களை இங்கே சுயதணிக்கையுடனேயே கூறுகின்றேன். இத்துடன் நானும் இதுபற்றி எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன்.

ஆனால் எனக்கு ஒரு கேள்வி உண்டு.

இந்த ஊர்ப்புதினம் பகுதியில் எவ்வகையான கருத்துக்களை நாம் எழுதலாம்

"போராளிகளுக்கு வீரவணக்கம்"

"போராளிகளுக்கு வாழ்த்துகள்"

அப்படியே கோத்தபாயவிற்கு இரண்டு அடி, மகிந்தவிற்கு மூன்று சாத்து, கருணாவிற்கு நாலு உதை...

இதை விட இங்கே வேறு என்ன எழுதலாம்?

சிலர் கேட்ட கேள்விகள் ஏன் புதினத்தில் செய்தி மாத்திரம் வருகின்றது களமுனை படங்கள் வருவதில்லையே ???

புதினம் அதன் பழைய ஆசிரியர்கள் மற்றும் மொழிபெயர்த்து வழங்கியவர்களை புறக்கணித்துச் செயற்படுவதாகவும் அதன் அடிப்படையிலான சில முரண்பாடுகளே இதற்கு காரணம் என ஒருவர் தெரிவித்தார்

ஊர்புதினம் பகுதியில் மகிந்த கோதபய பொன்சேக்கா போன்றவர்களுக்கு சவால் விடலாம். சினிமா பாணியில் பஞ்டயலக் விடலாம்.

எப்பிடியான களமுனைப்படங்களை புலம்பெயர்ந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"லக்பிம" தெரிவித்துள்ளது என்ற எழுத முடிபவர்களால், "தமிழ்நெற்" தெரிவித்துள்ளது என்று எழுத முடியாதா?

இது ஒரு சாதாரண கேள்விதானே... எல்லோர் மனதிலும் எழக்கூடியதொன்று... இப்படியான கேள்விகள் மக்கள் மனதில் இருந்து வெளிவரும் போது நாங்கள் நீங்கள் சண்டை பிடித்து எதுகும் ஆகாது. சம்மந்தப்பட்ட ஊடகமே இப்படிப்பட்ட ஊகங்களுக்கு - கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும்.

ஊர்புதினம் பகுதியில் மகிந்த கோதபய பொன்சேக்கா போன்றவர்களுக்கு சவால் விடலாம். சினிமா பாணியில் பஞ்டயலக் விடலாம்.

எப்பிடியான களமுனைப்படங்களை புலம்பெயர்ந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?

அவர் களமுனைப்படங்களை எதிர்பார்ப்பதாக சொல்லவில்லை. மற்றைய ஊடகங்களில் வெளிவரும் படங்கள் ஏன் புதினத்தில் வருவதில்லை என்பதுதான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.